Friday, August 23, 2024

அருள்மிகு வீர ஆஞ்சநேயர் கோயில், மலைவையாவூர்...



*அருள்மிகு வீர ஆஞ்சநேயர் கோயில், மலைவையாவூர்*
*அமைவிடம்:* மலைவையாவூர், காஞ்சிபுரம் மாவட்டம்.

*கோயிலின் சிறப்புகள்:*
இத்தலத்தில் ஆஞ்சநேயர் வீர ஆஞ்சநேயர் என்ற திருநாமத்துடன் வீற்றிருந்து அருள்புரிகிறார். சஞ்சீவி பர்வதத்தை தனது கைகளில் சுமந்து வரும் ஆஞ்சநேயர் இந்த இடத்தில் சற்று இளைப்பாற எண்ணி, மலையை கீழே வைக்காமல் தனது ஒரு கையிலிருந்து மறுகைக்கு மலையை மாற்றிக் கொண்டார். எனவே மலையை கீழே வைக்காத ஊர் என்பதே மருவி மலை வையாவூரானது என்று கூறப்படுகிறது. கிழக்குப் பார்த்த கருவறையில் ஆஞ்சநேயர் தனது இடது பாதத்தை முன் வைத்தும், வலது பாதத்தை பின் வைத்தும் காட்சி கொடுக்கிறார். தாமரைத் தண்டு போன்ற தனது இடது கை இடுப்பில் தாங்க, வலது கை அபயம் அளிக்கும் முத்திரையுடன் அமைந்துள்ளது. தனது காலை சிரசில் வைத்து ஆனந்தமாக நர்த்தனமாடும் கோலத்தில் காட்சி தருகிறார். சஞ்சீவி மலையை சுமந்து சென்று லக்ஷ்மணனை காப்பாற்றியவுடன் ராமர் அனுமனை கட்டித் தழுவுகிறார். அப்போது மலையை தூக்கி வந்ததால் அனுமனின் கைகளில் புண் இருப்பதைக் கண்ட ராமன், அனுமனின் கைகளை தாமரை மலர்கள் கொண்டு வருடுகிறார். தான் வணங்கும் கடவுளே தனக்கு சேவை செய்ததை எண்ணிய அனுமன் ஆனந்தத்தில் துள்ளி குதித்து நடனமாடினார். அதுவே இத்தலத்தில் உள்ள நர்த்தன கோலமாகும். இத்தகைய கோலத்தில் ஆஞ்சநேயரை காண்பதே சிறப்பாகும்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்... 

No comments:

Post a Comment

Followers

ஐயப்பனுக்கு திருமணம் நடைபெறும் ஒரே கோவில் இது தான்.

கடவுளின் தேசமான இயற்கை எழில் கொஞ்சும்  கேரள மாநிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஐயப்பனின் அறுபடை வீடுகளில் ஒன்றான , ஐயப்பன் திருமண...