Wednesday, October 16, 2024

புரட்டாசி சதுர்த்தசி நடராஜப் பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள்...

சிவாலயங்களில் ஆறு கால பூஜை  திருவனந்தல் என்னும் அதிகாலை பூஜை, காலசந்தி எனப்படும் காலை பூஜை,  உச்சிகாலம் எனப்படும் மதிய பூஜை, சாயரட்சை எனப்படும் சாயங்கால பூஜை, ராக்காலம் எனப்படும் இரவு பூஜை அர்த்தஜாமம் எனப்படும் பள்ளியறை பூஜை) நடப்பது போல நடராஜப்பெருமானுக்கு ஆண்டில் ஆறு தினங்கள் மட்டுமே அபிஷேகம் நடைபெறும். இந்த ஆறு பூஜைகளும் தேவர்களின் ஒரு நாளில் நடக்கும் ஆறு கால பூஜை என்பது ஐதீகம்.நடராஜர் அபிஷேகம் மாசி சதுர்த்தசி , சித்திரை திருவோணம், ஆனி உத்திரம், ஆவணி சதுர்த்தசி, புரட்டாசி சதுர்த்தசி, மார்கழி திருவாதிரை ஆகிய ஆறு தினங்களில் நடராஜப் பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அதில் இன்று ஆவணி சதுர்த்தசி நடக்கும் மஹாருத்ர மஹாபிஷேகம் ராக்கால பூஜையாகும்.

தமிழகத்தில் உள்ள நடராஜர் தாண்டவம் ஆடிய 
(பஞ்ச சபைகள்)
ஐம்பெரும் சபைகளில் முக்கிய சபையான,
ஈசன் "திரிபுர தாண்டவம்" புரிந்த தலமான,
சித்திர வடிவில் காட்சி தரும் ஒரே தலமான 
#தென்காசி மாவட்டத்தில் உள்ள 
#திருக்குற்றாலம் 
#குற்றாலநாதர் திருக்கோயிலில் உள்ள 
#சித்திரசபை_நடராஜருக்கு 
சித்திர சபையில் வருஷாபிஷேக விழாவையொட்டி 
அபிஷேக காட்சி 🙏🏻

#சித்திர வடிவில் இறைவனை வழிபடும் ஒரே தலம்:

குற்றாலம் சித்திர சபை, பாண்டிய நாட்டில் தேவாரப் பாடல் பெற்ற 14 தலங்களில் ஒன்றான குற்றால நாதர் கோவிலுக்குப் அருகில் தனிக்கோவிலாக உள்ளது. குற்றாலத்தின் மெயினருவி போவதற்கான வளைவைத் தாண்டி, ஐந்தருவி போகும் வழியில், தேர் நிலைக்கு பக்கத்தில் அமைந்துள்ளது குற்றால சித்திர சபை. சித்திரசபை பிரமிடுபோல் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேற்கூரை தாமிரத் தகடுகளால் உருவாக்கப்பட்டுள்ளது.

நடராசப் பெருமான் திருத்தாண்டவம் ஆடியுள்ள ஐந்து சபைகளில் ஒன்றுதான் குற்றாலம் சித்திரசபை.

மற்ற நான்கு சபைகள்:

சிதம்பரம் நடராசர் கோவில் - கனகசபை

திருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோவில் - இரத்தினசபை

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் - வெள்ளிசபை

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் - தாமிரசபை

பொதுவாக கோவில்களில் விக்கிரக வழிபாடுதான் பிரதானமாக இருக்கும். ஆனால் சித்திர வடிவில் இறைவனை வழிபடுவது உலகிலேயே குற்றாலம் சபையில் மட்டும்தான். சித்திரசபையில் நடராஜப் பெருமான் தேவியுடன் ஓவியமாக எழுந்தருளியிருக்கிறார். பலவகை தாண்டவங்களில் ஒன்றாகிய திரிபுரதாண்டவம் இந்த சபையில் நடைபெற்றதாக திருப்பத்தூர் புராணம் கூறுகிறது.

சித்திரசபையில் இறைவன் திருநடனம் புரியும் காட்சியைக் கண்டு பிரம்மதேவன் ஆதி சிவனின் சொரூபங்களைச் சுவரில் எழுதிவைத்தார். இதனால் வியாசர் முதலியோர் இதனைச் சித்திரசபை என்று அழைத்ததாக புராணங்கள் கூறுகிறது. தேவர்கள் தினமும் வந்து சித்திரசபையை தரிசித்து செல்கின்றனர் என்பது நம்பிக்கையாகும். நடராஜபெருமான், வடக்கே உள்ள திருவாலங்காட்டை விட்டு தெற்கே குற்றாலத்தை நோக்கி வந்தது இங்கு வீசும் தென்றல் காற்றில் இளைப்பாறவும், தீந்தமிழை அனுபவிக்கவும் என்று பரஞ்ஜோதி முனிவர் கூறுகியிருக்கிறார்.

சித்திரசபையின் உட்சுவற்றில் மதுரை மீனாட்சி கல்யாண வைபவம், முருகரின் அவதாரங்கள், விநாயகர், துர்க்கையின் பல்வேறு வடிவங்கள், வீரபத்திரர், கஜேந்திரமோட்சம், திருவிளையாடற்புராண வரலாறுகள், அறுபத்துமூவர் உருவங்கள், பத்மநாபரின் கிடந்த கோலம், இரணிய சம்ஹாரம், பைரவரின் பல்வேறு உருவங்கள், சனிபகவான், ரதி - மன்மதன் ஆகியவை வண்ணத்தில் எழுதப்பட்டுள்ளன.

நடராஜருக்கு வருடத்துக்கு 6 அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. இதில், மார்கழி திருவாதிரையும், ஆனி திருமஞ்சனமும் முக்கியமான திருவிழாக்கள். இதில் குறிப்பாக, ஆனி மாத உத்திர நட்சத்திர நாளில், தேவர்கள், நடராஜப் பெருமானுக்குப் பூஜைகள் செய்வதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஆனி மாதத்தில், எல்லா சிவாலயங்களிலும் நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் உத்திர நட்சத்திர நாளில் நடைபெறும். இதுவே ஆனித் திருமஞ்சனம் என்று போற்றப்படும்.

மார்கழி மாதம் திருவாதிரை விழா இங்கு விமர்சையாக நடைபெறும். மார்கழி திருவாதிரை திருவிழாவின்போது முதலில் சித்திரசபையில் பூஜைகள் நடைபெற்ற பின்னரே, குற்றாலநாதர் கோவிலில் பூஜைகள் நடத்தப்படும்.

 ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம்... 

No comments:

Post a Comment

Followers

திருமாகறலீஸ்வரர் திருமாகறல் காஞ்சிபுரம்

மூலவர் : #திருமாகறலீஸ்வரர்  உற்சவர் : #சோமாஸ்கந்தர், நடராஜர்  அம்மன்/தாயார் : #திரிபுவனநாயகி  தல விருட்சம் : எலுமிச்சை  தீர்த்தம் : அக்னி  ப...