Tuesday, October 15, 2024

தென்திருவாலவாய் கோயில் தெற்கு மாசி வீதி, மதுரை.....



*அருள்மிகு தென்திருவாலவாய் திருக்கோயில், தெற்கு மாசி வீதி, மதுரை, மதுரை மாவட்டம்…*
*மூலவர் : திருவாலவாயர்…*

*அம்மன் : மீனாட்சி…*

*தல விருட்சம் : அரசமரம்…*

*தீர்த்தம் : சிவதீர்த்தம்…*

*பழமை : 1000 வருடங்களுக்கு முன்…*

*தல வரலாறு:*

*மதுரை மாநகரில் சைவசமயமும் சமண சமயமும் தீவிரமாக இருந்த சமயம்.*

*அப்போது மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் கூன்பாண்டியன்.*

*அவர் சைவசமயத்தை சேர்ந்தவன்.*

*ஆனால் தீடீரென்று சமண சமயத்திற்கு மாறி விடுகிறான்.*

*அவன் மனைவி மங்கையர்க்கரசி சைவ சமயத்தை சார்ந்தவள்.*

*மிகவும் தீவிர பற்றுள்ளவள்.*

*கணவனின் திடீர் மாற்றம் அவளுக்கு மிகுந்த வருத்தத்தை தந்தது.*

*அதனால் சிவபெருமானிடம் சென்று மனமுருக அழுது வேண்டுகிறாள்.*

*அப்போது சிவபெருமான் கூன்பாண்டியனுக்கு வெப்பு நோய் தருகிறார்.*

*உடம்பு பூராவும் வெப்பத்தால் பாதிக்கப்படும் மிகவும் கொடிய நோய் அது.*

*கூன்பாண்டியனால் அந்த நோயைத் தாங்க முடியவில்லை.*

அப்போது சமணர்கள் எவ்வளவோ வைத்தியம் செய்து பார்க்கின்றனர்.நோய் குணமாகவில்லை.அப்போது மங்கையர்க்கரசியின் கனவில் சிவபெருமான் தோன்றி,*

*”தென்திருவாலவாய் கோயிலுக்கு சென்று ஞானசம்பந்தரால் இயற்றப்பட்ட திருநீற்றுப்பதிகம் பாடி அந்த சுவாமிக்கு அனைத்து அபிசேக அர்ச்சனைகளும் ‌செய்து அந்த திருநீற்ற‌ை எடுத்து உன் கணவனான பாண்டிய மன்னன் மீது பூசி விட்டால் அந்த வெப்பு நோய் தீர்ந்து விடும்”*

*என்று கூறுகிறார்.*

*உடனே அதுபடியே செய்ய அந்த வெப்பு நோய் தீர்ந்து விடுகிறது.*

*கூன்பாண்டியன் சிவபெருமானின் இறையருளை முழுமையாக உணர்ந்து,*

*தன் அங்கமெல்லாம் ஒரு கணம் ஆடிப்போய் அவரின் கருணைக்கு தலைவணங்கி சமணத்திலிருந்து மீண்டும் சைவ சமயத்திற்கு வந்து சிவத்தொண்டு புரியலானார் என வரலாறு கூறுகிறது…*

*பண்டைய காலத்தில் திருவிளையாடல் புராணத்தில் மதுரைக்கு வழிகாட்டிய படலம் உண்டு.*

*ஒரு காலத்தில் கடல் பொங்கி மதுரை மாநகரமே எல்லைகள் எல்லாம் தெரியாமல் குறுகிப்போய் மதுரை சுருங்கிவிட்டது.*

*அப்படி கடல் பொங்கி குறுகிய மதுரையை முந்தைய அளவிற்கே மீண்டும் அமைக்க,*

*வங்கிய சேகர பாண்டிய மன்னன் சிவபெருமானிடம் வேண்டுகிறான்.*

*அப்போது சிவபெருமான் ஆலவாய் என்றழைக்கப்படும் ஒரு பெரிய பாம்பை வீசிப் போடுகிறார்.*

*போட்டு விட்டு அந்த பாம்பு மதுரைய‌ையே ஊரின் முழுக்க வட்டமடித்து காட்டுகிறது.*

*அப்போது தென்திருவாலவாய் கோயில் இருக்கும் இடத்தில்தான் அந்த பாம்புடைய வாயும் - வாலும் ஒன்று சேர்ந்தது.*

*அதனால்தான் இந்த கோயிலும் தெற்கு திசையில் உள்ளது.*

*அதனால் தென்திருவாலவாய் என்று அழைக்கப்படுகிறது.*

*ஆலவாய் என்ற பாம்பு தெற்கு திசை எல்லாம் சேர்ந்து தென் திரு ஆலவாய் என்று பெயர் வந்தது.*

*இக்கோயிலில் உள்ள அரசமரத்தை 108 முறை வலம் வந்து திருவாலவாய சுவாமியை நினைத்து உள்ளம் உருகி வேண்டி நின்றால்,*

*மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோயாளிகள் கூட குணமடைந்து உடல்நலம் பெறுகிற அதிசயம் இத்தலத்தில் நடக்கிறது.*

*மேலும் நீண்ட ஆயுள் வேண்டுபவர்கள் இத்தலத்துக்கு வந்து இந்த அஸ்வத்தபிரதட்சணம் அதாவது 108 முறை வலம் வந்து வணங்குகின்றனர்.*

*இத்தலத்தில் 60ம் கல்யாணம் செய்வதும் ஏராளமாக நடக்கிறது.*

*அவர்களே சதாபிசேகமும் (80) செய்து நல்ல ஆயுளை அடைகின்றனர்.*

*மதுரையில் உள்ள பஞ்ச பூத தலங்களில் பழைய சொக்கநாதரை வழிபட்டால் செல்வம் செழிக்கும்.*

*இம்மையில் நன்மை தருவாரை வணங்கினால் பதவி கிடைக்கும்,*

*தென்திருவாலவாய சுவாமியை வணங்கினால் மரண துன்பம் நீங்கும் என்று புராணங்கள் கூறுகின்றன.*

*தவிர இந்த நான்கு ‌‌கோயில்களுக்கும் நடுவில் உள்ள மீனாட்சி சுந்தரேசுவரரை வழிபட்டால் இந்நான்கும் கிடைக்கும்.*

*இங்குள்ள மூர்த்தி மதுரையில் உள்ள தலங்களில் அளவில் பெரியவர்.*

*இது திருநீற்றுப்பதிகம் பாடப்பெற்ற தலம்.*

*மனிதனுக்கு மரணத்தை விடக் கொடிய பகைவனும் இல்லை.*

*அந்த மரணத் துயரை மாற்றும் வைத்தியனை விடச் சிறந்த நண்பனும் இல்லை.*

*இத்தகைய வைத்தியநாதப்பெருமான் எழுந்தருளிக் காலன் வருங்கால் காட்சி கொடுக்கக் காத்திருக்கும் திருத்த‌லமே தென்திருவாலவாய் ஆகும்.*

*தனக்கு நோய் நொடி வந்து உயிருக்கு பங்கம் வருமோ எனும் பயம் எல்லோர் உயிரையும் எடுக்கும் எமனுக்கே வந்து விடுகிறது.*

*சிவபெருமானை வணங்க அவரும் காட்சி தருகிறார்.*

*அப்போது சிவன்,*

*“தென்திருவாலவாய் க‌ோயிலுக்கு சென்று வழிபட்டு அந்த திருநீற்றை பூசு;*

*இனி உனக்கு மரணபயமே கிடையாது”*

*என்கிறார்.*

*எமனும் வந்து வழிபட்டு தன் மரணபயம் நீங்கப் பெற்றான்.*

*அத்தகையை சிறப்பு வாய்ந்த தலம் இது.*

*வெளியூர்,*

*வெளி மாவட்டங்கள்,*

*வெளி மாநிலங்கள் ஆகியவற்றில் இருந்தெல்லாம் இக்கோயிலுக்கு உடல்நலம் வேண்டி வருகிறார்கள்.*

*இக்கோயில் மதுரையில் உள்ள பஞ்ச பூத தலங்களில் அக்னி தலம் ஆகும்.*

*திருவிளையாடற் புராணக் கதைகளில் ஒன்றான மதுரைக்கு எல்லை கட்டிய படலம் நிகழப்பெற்ற கோயில் இது…*

*திருவிழா:*

*கந்த சஷ்டி - ஐப்பசி - 6 நாட்கள் திருவிழா - சுப்ரமணியருக்கு சிறப்பு அபிசேக ஆராதனைகள்.*

*அன்னாபிசேகம் - ஐப்பசி - பௌர்ணமி நாளில் சிறப்பாக நடைபெறும்.*

*ஆடிப்பூரம் - கார்த்திகை சோம வாரங்களில் சங்காபிசேகம் சிறப்பாக நடைபெறும்.*

*பௌர்ணமி தோறும் திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெறும்.*

*ஆடி வெள்ளி - தைவெள்ளி ஆகிய விசேச தினங்களில் 1008 திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது.*

*தவிர,*

*’தீபாவளி, பொங்கல், விநாயகர் சதுர்த்தி, தமிழ் ஆங்கில வருடப்பிறப்பு’*

*உள்ளிட்ட அனைத்து விசேச நாட்களின்போதும் கோயிலில் சிறப்பு அபிசேக அர்ச்சனைகள் நடைபெறும்.*

*மாதத்தின் பிரதோச நாட்களில் வெகுசிறப்பாக அபிசேக ஆராதனைகள் நடைபெறும்…*

*கோரிக்கைகள்:*

*இங்குள்ள தென் திருவாலவாய சுவாமியை வணங்கினால் நோய் நொடிகள் நீங்கப்பெறுவதால் ஏராளமான பக்தர்கள் இங்கு வரு‌கை தருகின்றனர்.*

*இறைவனை வணங்குவோர்க்கு மன நிம்மதி கிடைக்கும்.*

*இத்தலத்து அம்பாளை வழிபட்டால் திருமணவரம் - குழந்தை வரம் ஆகி‌யன கிடைக்கின்றன.*

*சுவாமிக்குப் புத்தாடை வழங்கினால் பெரிய அளவில் புண்ணியம் கிட்டும்.*

*கல்வி வரம் - எடுத்தகாரியம் நடைபெற இத்தலத்தில் வழிபடலாம்…*

*நேர்த்திக்கடன்:*

*சுவாமிக்கு இத்தலத்தில் பால் அபிசேகம் செய்தல் சிறப்பு.*

*’தேன், எண்ணெய், இளநீர், சந்தனம், பன்னீர், நல்லெண்‌ணெய்’* 

*ஆகியவற்றால் சுவாமிக்கு அபிசேகம் செய்து நேர்த்திகடனை செய்கின்றனர்.*
*அம்பாளுக்கு புடவை சாத்துகின்றனர்.*

*கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம்.*

*வசதி படைத்தோர் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யலாம்…*

*கோயில் திறப்பு:*

*காலை 6 .30 மணி முதல் 11 மணி வரை - மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்…*

*ஓம் ஶ்ரீ அருள்மிகு தென்திருவாலவாயர் திருவடிகளை போற்றி வணங்கிடுவோம்!!*

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்... 

No comments:

Post a Comment

Followers

எல்லோரும் இன்புற் றிருக்க நினைப்பதுவே தாயுமான சுவாமிகள் குருபூஜை..

திரு தாயுமான சுவாமிகள் குருபூஜை விழா திரு தாயுமான சுவாமிகள் குருபூஜை விழா தை மாதம் விசாகம் நட்சத்திரம் இன்று 23-01-2025 தாயுமானவ...