Saturday, October 12, 2024

வெந்நீரில் சிவனுக்கு அபிஷேகம் நடைபெறும் கோயில்....


உமையம்மை ஈசனின் இடப்பாகம் பெற சிவலிங்கம் அமைத்து சிவபூசை செய்த இடமான, அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடல் பெற்ற நடு நாட்டுத் தலங்களில் ஒன்றான, தமிழகத்தில் உள்ள முக்கிய சக்தி பீடங்களில் ஒன்றான, கம்சனின் சகோதரி தேவகி சிவபூசை செய்த இடமான, வருடம் முழுவதும் வெந்நீரில் சிவனுக்கு அபிஷேகம் நடைபெறும் தலமான
#திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 
#தேவிகாபுரம் (தேவக்காபுரம் )(கனகமலை) (கனககிரி)
#கனககிரீஸ்வர் என்ற பொன்மலைநாதர் 
#பெரியநாயகி_அம்மன் திருக்கோயில் வரலாறு:

 கனககிரீஸ்வரர் கோயில் கனகாசலம் அல்லது பொன்னமலை என்று அழைக்கப்படும் சிறிய மலையின் உச்சியில் அமைந்துள்ளது மற்றும் பெரியநாயகி அம்மன் கோயில், நகரின் மையத்தில் உள்ள மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. பொன்மலை நாதர் கோயில் சராசரி கடல் மட்டத்தில் இருந்து சுமார் 500 அடி உயரத்தில் உள்ளது. இது சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னன் காலத்தில் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது  . பின்னர்  15 ஆம் நூற்றாண்டில் விஜயநகர காலத்தில் கோயில் விரிவுபடுத்தப்பட்டது .

கனககிரி என்றழைக்கப்படும் மலை அம்மன் கோயிலின் தென்மேற்குப் பக்கத்தில் 500 அடி உயரத்தில் 365 படிகளுடன் 5 கிலோமீட்டர் சுற்றளவைக் கொண்டுள்ளது. மலை உச்சியில் உள்ள சிவபெருமான், தமிழில் கனககிரீஸ்வரர்-பொன் மலை நாதர் என்று போற்றப்படும் சுயம்புமூர்த்தி.

கனககிரீஸ்வரர் மலையின் உச்சியில் சுயம்பு மூர்த்தியாக காட்சியளிக்கின்றார். அம்பாள் ஆலயத்தின் பின்புறமாக தென்மேற்கு பகுதியில் 500 அடி உயரத்தில் கனக கிரி என்ற பெயரைக் கொண்ட மலையில் உச்சியில் ஈசன் அமர்ந்திருக்கின்றார். அம்பிகை பெரிய நாயகிக்கு இங்கு தனி ஆலயம் அமைக்கப்பட்டிருக்கிறது. மலை அடிவாரத்தில் உள்ள பெரியநாயகி கோவில் சக்தி பீடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அம்பாள் ஈசனை சரிபாதியாக அடைவதற்கு இந்த இடத்தில் தவம் இருந்ததால் திருமண தடை உள்ளவர்கள் இந்த கோவிலுக்கு வந்தால் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. அம்பாளின் தவத்தில் மயங்கிய சிவன் பங்குனி உத்திரத்தன்று, மலையில் இருந்து கீழே இறங்கி வந்து அம்பாளை திருமணம் செய்தார் என்பது ஐதீகம்.

மூலவர் :கனககிரீசுவரர் ,பொன்மலைநாதர் 

அம்மன்    :பெரியநாயகி

தல விருட்சம்  :  வில்வம்

தீர்த்தம்      : சிவதீர்த்தம்

புராண 
பெயர்  :தேவக்காபுரம்,கனகமலை 

ஊர்       :    தேவிகாபுரம்

மாவட்டம்:திருவண்ணாமலை

பாடியவர்கள்:
திருப்புகழ் (அருணகிரிநாதர்)

#அருணகிரிநாதர் அருளிய கனகமலை (தேவிகாபுரம்) திருப்புகழ்:

"அரிவையர்கள் தொடரு மின்பத்
     துலகுநெறி மிகம ருண்டிட்
          டசடனென மனது நொந்திட் …… டயராமல்
அநுதினமு முவகை மிஞ்சிச்
     சுகநெறியை விழைவு கொண்டிட்
          டவநெறியின் விழையு மொன்றைத் …… தவிர்வேனோ
பரிதிமதி நிறைய நின்ற·
     தெனவொளிரு முனது துங்கப்
          படிவமுக மவைகள் கண்டுற் …… றகமேவும்
படர்கள்முழு வதும கன்றுட்
     பரிவினொடு துதிபு கன்றெற்
          பதயுகள மிசைவ ணங்கற் …… கருள்வாயே
செருவிலகு மசுரர் மங்கக்
     குலகிரிகள் நடுந டுங்கச்
          சிலுசிலென வலைகு லுங்கத் …… திடமான
செயமுதவு மலர்பொ ருங்கைத்
     தலமிலகு மயில்கொ ளுஞ்சத்
          தியைவிடுதல் புரியு முன்பிற் …… குழகோனே
கருணைபொழி கிருபை முந்தப்
     பரிவினொடு கவுரி கொஞ்சக்
          கலகலென வருக டம்பத் …… திருமார்பா
கரிமுகவர் தமைய னென்றுற்
     றிடுமிளைய குமர பண்பிற்
          கநககிரி யிலகு கந்தப் …… பெருமாளே.

*தேவிகாபுரம்:

தேவிகாபுரம் என்றால் "தெய்வத்தின் நகரம்" என்று பொருள். இங்குள்ள பெண் தெய்வங்கள் பிரம்மாவால் விலைக்கு வாங்கப்பட்டதாக கூறப்படுகிறது. தேவகிபுரம், தேவக்காபுரம், கனககிரி, கனகத்திரி, கனகாசலம், நாராயணவனம் போன்ற ஸ்தல புராணங்களில் தேவிகாபுரம் பல பெயர்களால் அழைக்கப்படுகிறது.

#புராண வரலாறு:

ஒரு முறை பிருங்கி முனிவர் சக்தியை விட்டுவிட்டு சிவனை மட்டும் வண்டு ரூபத்தில் வந்து தரிசித்ததன் காரணமாக சக்தி கோபமடைந்து சிவனின் ஒரு பாதியில் தான் கலக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து, சக்தியானவள் சிவனை விட்டு பிரிந்து சென்றாள். இதற்காக சிவன் சக்தியிடம், ‘சக்தியான நீ பூலோகத்தில் காஞ்சிபுரம் என்னுமிடத்தில் காஞ்சி காமாட்சியாக தவமிருந்து காத்திரு. காலம் கனிந்து வரும் சமயத்தில் உன்னை மணந்து கொள்கிறேன் என்று வாக்களித்தார். பின்னர் திருவண்ணாமலைக்கு வந்து வழிபாடு செய்யும்போது என் உருவில் இடப்பக்கத்தில் உனக்கு இடம் தருகின்றேன் என்றும் வாக்களித்தார்.’ சிவபெருமான் கூறியபடி சக்தி தேவியும் காஞ்சிபுரத்தில் தவம் இருந்தபோது ஏகாம்பரநாதரை மணந்தார். அடுத்ததாக தேவி திருவண்ணாமலைக்கு செல்லும் வழியில் தேவிகாபுரத்தில் ஒரு மண்டபத்தில் கனககிரீஸ்வரை வணங்கி தவமிருந்தார். இதனால்தான் இந்த தளம் தேவிகாபுரம் என்ற பெயரை பெற்றுள்ளது. இங்கிருந்து திருவண்ணாமலைக்குச் சென்று சிவனின் இடது பக்கத்தைப் பெற்றதாக புராணங்கள் கூறுகின்றது.

புராணத்தின் படி, கம்சனின் சகோதரி தேவகி இங்கு கிருஷ்ணரைப் பெற்றெடுத்ததாகக் கூறப்படுகிறது. அதனால் தேவகிபுரம் என்று பெயர். இங்கு ஸ்ரீ ஸ்ரீநிவாச மூர்த்திக்கு கோயில் உள்ளதால் நாராயணவனம் என்று பெயர்.

இக்கோயிலில் வீற்றிருக்கும் அன்னையின் திருநாமம் பெரியநாச்சியார் என்னும் பெரியநாயகி என்று கல்வெட்டுகளால் அறியப்படுகிறது. தற்போது வடமொழி சொல்லால் ப்ருகதாம்பாள் என்று வழங்குகின்றனர்.

#கனககிரீஸ்வர் என்ற பொன்மலைநாதர்:

தேவிகாபுரத்தில் அமைந்துள்ள தேவிகாபுரம் பெரியநாயகி அம்மன் கோயில் பின்புறம் தென்மேற்கில் சிறிது தொலைவில் 500 அடி உயரம் 5 கி.மி. சுற்றளவும் 302 படிகளையும் கொண்ட கனகாசலம் அல்லது கனக்கரி என்னும் பெயருடைய மலை அமைந்துள்ளது. இதன் உச்சியில் சுவாமி சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். சுவாமியின் திருப்பெயர் கனககிரி ஈஸ்வரர் (அல்லது) பொன்மலைநாதர் என்பதாகும். கல்வெட்டுகள் இவரைத் திருமலை உடையார் அல்லது திருமலை உடைய நாயனார் என அழைக்கின்றன.

இத்தலத்தில் இன்றும் சிவராத்திரி காலங்களில் அம்பிகை பூசை செய்வதாக ஐதீகம். எனவே சிவராத்திரி இரவில் நான்கு காலங்களிலும் இங்கு வழிபடுவது நாமும் அம்பிகையோடு சேர்ந்து வழிபடுவதாகவே கருதப்படும். இங்குள்ள பிரதிக்ஷ்டாலிங்கம் தேவியால் அமைக்கப்பட்டதென்றும் அருகில் உள்ள சுயம்பு லிங்கம் இறைவன் தானாகத் தோன்றியதாக (சுயம்புவாக) எழுந்தருளிய நிலை என்றும் கூறுவர்.

#பொன்மலை:

ஒரு சமயம் உலகம் ஒடுங்கிய ஊழி இரவில் உலகம் வெள்ளத்தால் அமிழ இம்மலைமட்டும் பொன்போல் பிரகாசித்து மிதந்தது. எனவே இம்மலை பொன்மலைநாதர் என்றும் வழங்குவதாயிற்று. இதுவே வடமொழியில் கனகாசலம் , கனககிரி என்றும் இறைவனின் திருப்பெயர் கனக கிரிஸ்வரர் என்று வழங்குவதாயிற்று.

இம்மலையின் மீது பார்வதி தேவியார் சிவலிங்கம் அமைத்து நான்கு கால பூசை செய்தாள். அவள் பூசை செய்யும் சிறப்பையும் நேர்த்தியையும் காணச் சிவபெருமான் அருகில் சுயம்புலிங்கமாக எழுந்தருளினார். அவளுடைய அன்பையும் பத்தியையும் கண்டு அவளுக்குத் தரிசனம் தந்து அவளைத் தன் இடப்பாகத்தில் சேர்த்துக்கொண்டார். அந்த நாளே மகாசிவராத்திரி ஆகும் என்றும் கூறுகின்றனர்.

#மலைமேல் உள்ள
கோயிலின் அமைப்பு:

இந்த மலைக்கோயில் கிழக்கு மேற்காக 185 அடி நீளமும் வடக்கு தெற்காக 75 அடி அகலமும் கொண்ட மதில்களுடன் விளங்குகிறது. இதன் முகப்பில் 36 கால்களை உடைய மண்டபத்துடன் கூடிய மூன்று நிலைகளைக் கொண்ட இராசகோபுரம் காட்சியளிக்கிறது. இம்மண்டபத்தின் முன் திருநந்திதேவர் கொடிமரம், பலிபீடம் முதலியன உள்ளன. இவற்றை வணங்கி உள்ளே சென்றால் பிரகாரத்தில் தென்முகக்கடவுள் விநாயகர், ஆறுமுகர், விசாலாட்சி அம்மாள், சண்டீஸ்வரர் முதலிய தெய்வத்திருவுருவங்களை (மூர்த்திகளை) வணங்கலாம்.

#இரண்டு சிவலிங்க மூர்த்திகள்:

ஒரு சமயம் இம்மலைப்பகுதி அடர்நத காடாக இருந்த போது வேடன் ஒருவன். கிழங்கு அகழந்து எடுப்பதற்காக மலையுச்சியில் இரும்புக் கருவியைக் கொண்டு தோண்டிய போது குபீர் என குருதி கொப்பளித்துக்கொட்டியது. அதைக் கண்ட வேடன் உடனே ஊர் மக்களிடம் வந்து செய்தியைக் கூறினான். மக்கள் சிலர் மலையின் மீது சென்று மேலும் அகழ்ந்த போது ஓர் அழகிய சிவலிங்கத் திருமேனி காணப்பட்டது. அன்று முதல் மக்கள் அச்சிவலிங்கத்திற்கு வழிபாடு செய்து வந்தனர். இவ்வாறு பூசை நடக்கும் நாளில் அவ்வழியாக வந்த அரசன் ஒருவன் இச்செய்தியைக் கேள்விப்பட்டு தான் கோவில் கட்டுவதாகக் கூறினான். பின்னர் அவ்வாறே கட்டி முடித்தான். அரசன் கட்டிமுடிக்கும் காலத்தில் சுவாமி மறைந்தருளினார். சுவாமி மறையவே அவ்வரசன் மிகவும் மனம் வருந்தி காசி விசுவநாதரை அமைத்துக் கும்பாபிசேகம் செய்த நாளன்று சுயம்பு மூர்த்தியும் தோன்றியருளினார். எனவே இங்கு இரண்டு சிவலிங்க மூர்த்திகள் அமைந்திருக்கின்றன.

இக்கோயிலின் அர்த்த மண்டபத்தில் அருமையான வேலைப்பாடுகளுடன் கூடிய சிற்பங்கள் காட்சியளிக்கின்றன. இவற்றைக் கடந்து உள்ளே சென்றால் கருவறையில் இரண்டு சிவலிங்க மூர்த்திகளைக் காணலாம். அம்மூர்த்திகளில் ஒருவர் அரசனால் பிரதிட்டை செய்யப்பட்டவர். அம்மூர்த்தியின் திருப்பெயர் காசி விசுவநாதர் என்பதாகும். மற்றொரு மூர்த்தி சுயம்புவாகத் தோன்றியவர். இவரின் திருப்பெயர் கனக கிரிஸ்வரர் (அல்லது) பொன்மலை நாதர் என்பதாகும். இவ்விருமூர்த்திகளும் தன்னை மெய்யன்புடன் துதிக்கும் பக்தர்களுக்கு அனைத்து நலன்களையும் அளிக்கின்றனர் என்பது திண்ணம்.

*பார்வதி தேவி தவம்:

இம்மலையிலிருந்து இறங்கும் போது இடப்புறம் பார்வதி தேவி தவம் செய்ததாகக் கருதப்படும் இடம் ஒன்று உள்ளது. அங்குத் தேவியின் திருப்பாதங்கள் காட்சியளிக்கின்றன. வலப்புறத்தில் வீரபத்திர ஆலயம் விளங்குகிறது.

இவ்வாலயத்திற்கு அருணகிரிநாதர் எழுந்தருளி ஆறுமுகப்பெருமான்மீது அரிசையர்கள் எனத்தொடங்கும் பாடலை அருளிச்செய்துள்ளார்.

#அடிவாரத்தில் உள்ள பெரியநாயகி அம்மன் 
#கோயில் அமைப்பு:

தேவிக்குரிய இவ்வாலயம் ஊரின் நடுவே அமைந்துள்ளது. கிழக்கு மேற்காக 475 அடி நீளமும் வடக்கு தெற்காக 250 அடி அகலமும் 30 அடி உயரம் கொண்ட அழகிய சித்திர வேலைப்பாடுகளுடன் கூடிய மதில் சுவர்களுடன் விளங்குகிறது. இம்மதிலின் முகப்பில் இராஜகோபுரம் சுமார் 150 அடி உயரம் உடையதாகவும் ஏழு நிலைகளையும் ஒன்பது கலசங்களையும் கொண்டுள்ளது. இக்கோபுரத்திற்கு எதிரே நான்கு கால்களைக் கொண்ட உயர்ந்த மண்டபம் ஒன்றுள்ளது. இக்கோபுரத்திற்கு வடக்குப்பக்கம் சித்திர வேலைப்பாடுகளுடன் கூடிய தேர்மண்டபம் காணப்படுகிறது. இத்தேர் மண்டபம் கிழக்கு தெற்கு ஆகிய இரு திசைகளையும் நோக்கின வகையில் அமைந்துள்ளது.

ஆலயத்தின் நுழைவு வாயிலின் இருபுறமும் புடைப்புச் சிற்பங்களாக அமைந்த லிங்கோற்பவர், நரசிம்மர், காலபைரவர், அதிகாரநந்தி, நடன மாதர், துவாரக பாலகர் போன்ற அற்புதமான சிற்பங்களைக் காணலாம். முகம்மதியர் படையெடுப்பால் இவற்றில் சில சிற்பங்கள் சிதைந்து காணப்படுகின்றன.

இவ்வாறு அனைத்து தெய்வங்களையும் அடுத்து உள் மண்டபத்தில் மேற்கில் அமைந்த கருவறையில் அருளே வடிவான அன்னை பெரியநாயகி காட்சி தருகிறாள். அன்னை மேல் இருகரங்களில் அபயம், வரதம் ஆகிய முத்திரைகளைக் கொண்டு நின்ற கோலத்தில் அழகுறக் காட்சியளிக்கின்றாள்.

#கல்யாண மண்டபம்:

இவ்வாலயத்துள் 3 பிரகாரங்கள் (சுற்றுகள்) உள்ளன. நுழைவு வாயிலைக் கடந்து உள்ளே செல்லும் போது முதலாவதாக ஆலயத்தின் வலப்புறம் ஓர் அழகிய திருக்குளம் அமைந்துள்ளது. அதன் கரையில் நான்கு கால்களைக் கொண்ட குதிரைகள் இழுத்துச்செல்வது போன்ற கல்யாண மண்டபம் மிக அற்புதமான சிற்ப எழிலுடன் அமைந்துள்ளது. இதில் மனுநீதிச் சோழன் வரலாற்றைச் சித்தரிக்கும் சிற்பங்கள் பொற்புடன் விளங்குகின்றன. இது காணவேண்டிய அழகிய மண்டபம் ஆகும்.

இவை இரண்டிற்கும் இடையில் பலிபீடமும் கொடிமரமும் உள்ளன. இதை அடுத்து திருநந்தி தேவர் அன்னையை நோக்கிய வண்ணம் வீற்றிருக்கிறார். கோயிலின் வலப்புறம் விநாயகப் பெருமானும், இடப்புறம் ஆறுமுகப்பெருமானும் உள்ளனர். இம்மூன்றாம் பிரகாரத்தின் இருபுறங்களிலும் பண்டை நாளில் நறுமணங்கமழும் சோலைகள் இருந்தனவாக எண்ணுவதற்கு இடமளிக்கிறது.

#ஐந்து நிலைக்கோபுரம்:

அடுத்து மகாமண்டபத்துடன் கூடிய ஐந்து நிலைக்கோபுரம் உள்ளது. இம்மகாமண்டபம் 36 கால்களைக் கொண்டது. இம்மண்டபத்தில் நவக்கிரக சந்நிதி இருந்தது. அது தற்போது வடக்குப்பிரகாரத்தில் தனிக்கோயிலாக அமைக்கப்பட்டுள்ளது. இதைக்கடந்து உள்ளே சென்றால் இரண்டாம் பிரகாரத்தை அடையலாம். அங்கு வலப்புறம் விநாயகர் சந்நிதியும் மற்றும் நவராத்திரி கொலு மண்டபமும் உள்ளன. இந்தப்பிரகாரத்தில் தான் மிகுதியான கல்வெட்டுகள் காணப்படுகின்றன.

இதனைக்கடந்து அர்த்த மண்டபத்தின் உள்ளே தெற்கு நோக்கியவாறிருக்கும் நடராசமூர்த்தி உள்ளார். மேற்படி மண்டபத்தின் தென்பகுதியில் உற்சவமூர்த்திகளும் அடுத்து விநாயகர், நால்வர், சேக்கிழார் ஆகியோரின் திருவுருவங்களும் (மூலவர்கள்) முதல் பிரகாரத்தின் நுழைவு வாயிலின் இருபுறமும் துவாரபாலகிகளின் உருவங்களும் உள்ளன. இதையுங்கடந்து உள்ளே சென்றால் முதல் பிரகாரத்தை அடையலாம். இப்பிரகாரத்தில் விநாயகர், திருமால், வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமான், சண்டீஸ்வரர் ஆகிய உருவங்களைக் காணலாம்.

#கோயில் சிறப்புகள்:

திருவண்ணமலை மாவட்டத்தில், அண்ணாமலையார் ஆலயத்தை அடுத்து பெரிய ஆலயமாக ஆரணியை அடுத்த தேவிகாபுரம் அருள்மிகு பெரியநாயகி அம்மன் ஸ்ரீகனககிரீஸ்வரர் ஆலயம் இருக்கிறது.

கனககிரீஸ்வரர் மலையின் உச்சியில் சுயம்பு மூர்த்தியாக காட்சியளிக்கின்றார். அம்பாள் ஆலயத்தின் பின்புறமாக தென்மேற்கு பகுதியில் 500 அடி உயரத்தில் கனக கிரி என்ற பெயரைக் கொண்ட மலையில் உச்சியில் ஈசன் அமர்ந்திருக்கின்றார். அம்பிகை பெரிய நாயகிக்கு இங்கு தனி ஆலயம் அமைக்கப்பட்டிருக்கிறது. மலை அடிவாரத்தில் உள்ள பெரியநாயகி கோவில் சக்தி பீடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

பொன்மலை நாதர் கோவில் இதன் மற்றொரு பெயர் கனக கிரீஸ்வரர் கோவில். கடல் மட்டத்திலிருந்து 500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழ பேரரசால் கட்டப்பட்டது அதற்கு பின் 15 ஆம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசால் விரிவாக்கப்பட்டது.
 
‌அம்பாள் ஆலயத்தின் பின்புறம் தென்மேற்கில் சிறிது தொலைவில் 500 அடி உயரமும் 5 கி.மீ. சுற்றளவும் 302 படிகளையும் கொண்ட கனகாசலம் அல்லது கனககிரி என்னும் பெயருடைய மலை அமைந்துள்ளது. இதன் உச்சியில் சுவாமி சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். சுவாமியின் திருநாமம் கனககிரீசுவரர் அல்லது பொன்மலைநாதர் என்று அழைக்கப்படுகின்றது.

வேடன் ஒருவன் கிழங்கு அகழ்ந்து எடுப்பதற்காக மலையுச்சியில் இரும்புக் கருவியைக் கொண்டு தோண்டியபோது குபீர் என ரத்தம் கொப்பளித்தாம்.அதை மேலும் தோண்டிய போது அழகிய சிவலிங்கத் திருமேனி தெரிய வந்தது.அன்று முதல் மக்கள் அச்சிவலிங்கத்திற்கு அபிசேகம் செய்து வந்தனர். காயம் ஏற்பட்டதன் காரணமாக வெந்நீரில் அபிசேகம் செய்தனர்.அது இன்றும் மலை மேல் உள்ள இறைவனுக்கு வெந்நீர் அபிசேகம் நடைபெற்று வருகிறது.சுயம்புத் திருமேனி மிகவும் சிறிய அளவில் கண்ணுக்கு தெரியும் அளவில் இருப்பதால் அருகிலேயே காசிவிசுவநாதர் லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு காலங்காலமாக பூஜைகள் நடந்து வருகின்றன. இந்த வேடன் கதை, செவிவழிச் செய்தி ஆகும்.

கற்றவர் போற்றும் காஞ்சி மாநகரில் அன்னை காமாட்சி தனிப்பெரும் ஆலயத்துள் எழுந்தருளியிருப்பது போல, இங்கும் அன்னை ஆதிசக்தி தனி ஆலயத்துள் எழுந்தருளியிருந்து அருளாட்சி புரிந்து வருகின்றாள். இவ்வன்னையின் திருநாமம் பெரியநாச்சியார் என்றும் பெரியநாயகி என்றும் அழைக்கப்படுகிறது.தேவிக்குரிய இவ்வாலயம் ஊரின் நடுவே அமைந்துள்ளது.

7 நிலை ராஜகோபுரம் மற்றும் 3 பிரகாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேவி இங்கு தவமிருந்து பங்குனி உத்திரத்தின்போது சுவாமி மலையிலிருந்து கீழே இறங்கி வந்து திருமணம் செய்து கொண்டு போகிறார் என்பது இத்தலத்தின் சிறப்பு.

ஒரு முறை இத்தலத்தின் வழியே போருக்கு சென்ற பல்லவ மன்னன், இங்குள்ள சிவனின் பெருமை பற்றி கேள்விப்பட்டான். போரில் வென்றால், சிவனுக்கு கோயில் கட்டுவதாக வேண்டிக்கொண்டான். வெற்றியும் பெற்றான். சிலர் கஷ்ட காலத்தில் கடவுளுக்கு நேர்ந்து கொள்வார்கள். செயல் முடிந்ததும், கடவுளை மறந்து விடுவார்கள். மன்னனும் வெற்றிக்களிப்பில் இப்படியே மறந்தான். மீண்டும் ஒரு கஷ்டம் வரவே, சிவனுக்கு கோயில் கட்டினான். ஆனால், வேடன் கண்டெடுத்த சுயம்புலிங்கம் காணாமல் போய்விட்டது. வருத்தமடைந்த மன்னன் காசியிலிருந்து வேறு லிங்கம் கொண்டுவந்து பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் நடத்தினான். கும்பாபிஷேகம் நடந்து முடிந்ததும், மறைந்த சுயம்புலிங்கம் கிடைத்தது. கடவுள் தன்னை மறந்தவரை தானும் மறந்து விடுகிறார் என்பதற்கு உதாரணமே இந்த நிகழ்ச்சி. அவருக்கு மன்னன் கனககிரீஸ்வரர் என பெயரிட்டு, அதே கருவறையில் பிரதிஷ்டை செய்தான். இப்படியாக ஒரே கருவறையில் எங்கும் இல்லாதபடி இரண்டு லிங்கங்கள் அமைந்தது.

உள் மண்டபத்தின் தூணில் சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக 9 பெண்களின் சிலையை யானை நிற்பது போல் வடிவமைத்துள்ளனர்.

மலையை விட்டு கீழே இறங்கும் வழியில் தேவி தவம் செய்ததாக கருதப்படும் இடத்தில், அன்னையின் திருவடி உள்ளது. மலையடிவாரத்தில் கோகிலாம்பாள் சமேத காமேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் மொத்தமே 9 கல்லால் அமைக்கப்பட்டுள்ளது. மலையில் அம்மன் இல்லாததால், பிரதோஷம் இங்கு நடத்தப்படுகிறது. பவுர்ணமி நாட்களில் 3.5 கி.மீ தூரம் உள்ள இந்த மலையை கிரிவலம் வருகிறார்கள்.

இறைவன் எழுந்தருளிய இடங்கள் நறுமணம் கமழும் சோலைகளாக இருந்தன. எனவே சோலைகள் சூழ்ந்த கோயில்கள் சோலையின் பெயராலேயே வழங்கப்பட்டன. கா என்பதற்கு சோலை என்பது பொருள். திருக்கோலக்கா திருவானைக்கா திருக்கோடிக்கா திருநெல்லிக்கா எனும் திருத்தலங்களின் பெயர்கள் கா என்று முடிவதை கண்டு தெளியலாம். அதுபோல் இறைவன் உறையும் கோயில் தேவக்கா என வழங்கி அதனுடன் புரம் என்ற சொல் சேர்த்து தேவக்காபுரம் என்று வழங்கப்பெற்றது என்றும் கருத இடம் உண்டு. பின்னர் இது மறுவி தேவிகாபுரமானது.

ஆலயத்தின் நுழைவு வாயிலின் இருபுறமும் புடைப்புச் சிற்பங்களாக அமைந்த லிங்கோற்பவர், நரசிம்மர், காலபைரவர், அதிகாரநந்தி, நடன மாதர், துவாரக பாலகர் போன்ற அற்புதமான சிற்பங்களைக் காணலாம். முகம்மதியர் படையெடுப்பால் இவற்றில் சில சிற்பங்கள் சிதைந்து காணப்படுகின்றன.

#சுடுநீர் அபிஷேகம்:

மலையின் உச்சியில் வேடன் ஒருவன் கிழங்கினை வெட்டி எடுப்பதற்கு கோடாரியால் பூமியை தோன்றிய போது அந்த இடத்திலிருந்து இரத்தம் வெளியேறியது. அந்த இடத்தில் என்ன இருக்கின்றது என்பதை தோண்டி பார்த்த வேடனுக்கு லிங்கம் ஒன்று கிடைத்தது. ஆனால் அதிலிருந்து வெளிவந்த இரத்தமானது நிற்கவே இல்லை. அந்த இரத்தத்தை நிறுத்துவதற்கு எவ்வளவோ முயற்சிகள் செய்தாலும் இரத்தம் பாய்ந்து கொண்டே இருந்தது. கடைசியாக வெந்நீரை எடுத்து லிங்கத்தின் மீது வேடன் ஊற்றினான். அப்போதுதான் இந்த இரத்தமானது நின்றது. அன்று முதல் இன்று வரை சிவனுக்கு வெந்நீரில் தான் அபிஷேகம் நடைபெற்று வருகிறது. இந்த வேடன் கதைக்கு எந்தவித ஆதாரமும் இல்லை செவி வழியாக கேட்கப்பட்ட கதைதான் இது.

மலையின் உச்சியில் உள்ள கனககிரீஸ்வரர் திருக்கோவிலில் மூலஸ்தானத்தில் இரண்டு மூலவர்கள் உள்ளனர். இதற்கான ஒரு கதையும் உண்டு. ஒருமுறை இந்த கோவிலின் வழியாக போருக்குச் சென்ற பல்லவ மன்னன் இச்சிவன் கோவிலின் பெருமையை பற்றி கேள்விப்பட்டு இருக்கின்றான். பல்லவ மன்னன், தான் போரில் வெற்றி பெற்றால் மலையின் மேல் உள்ள சிவனுக்கு பெரிய கோயில் கட்டி தருவதாக வேண்டிக் கொண்டான். போரில் வெற்றி கண்ட பல்லவ மன்னன் தன் வேண்டுதலை மறந்து விட்டான். பிறகு மன்னனுக்கு பல கஷ்டங்கள் ஏற்பட்டது. அப்போதுதான் ஈசனுக்கு, கோவில் கட்டி தருவதாக சொன்னது நினைவுக்கு வந்தது. பல்லவ மன்னன் சிவனுக்காக கோயிலை கட்டிய போது வேடன் கண்டெடுத்த சுயம்புலிங்கம் திடீரென்று காணாமல் போய்விட்டது. வருத்தத்தில் இருந்த பல்லவ மன்னன் காசியிலிருந்து மற்றொரு லிங்கத்தைக் கொண்டு வந்து அந்த இடத்தில் பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகத்தை நடத்தி முடித்தான். கும்பாபிஷேகம் நடந்து முடிந்த மறுகணமே சுயம்புலிங்கம் திரும்பவும் காட்சி தந்தது. கடவுளை மறந்த பல்லவ மன்னனை, ஈசன் மறந்து இருக்கிறார் என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது. பல்லவ மன்னன் பிரதிஷ்டை செய்த லிங்கத்திற்கு கனககிரிஸ்வரர் என்ற பெயர் வைத்து அதே கருவறையில் இரண்டு மூலவர்கள் வைத்து இன்றளவும் வழிபட்டு வருகின்றனர்.

*தல வரலாறு:

ஒரு முறை பிருங்கி முனிவர் சக்தியை விட்டுவிட்டு சிவனை மட்டும் வண்டு ரூபத்தில் வந்து தரிசித்ததன் காரணமாக சக்தி கோபமடைந்து சிவனின் ஒரு பாதியில் தான் கலக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து, சக்தியானவள் சிவனை விட்டு பிரிந்து சென்றாள்.

இதற்காக சிவன் சக்தியிடம், ‘சக்தியான நீ பூலோகத்தில் காஞ்சிபுரம் என்னுமிடத்தில் காஞ்சி காமாட்சியாக தவமிருந்து காத்திரு. காலம் கனிந்து வரும் சமயத்தில் உன்னை மணந்து கொள்கிறேன் என்று வாக்களித்தார். பின்னர் திருவண்ணாமலைக்கு வந்து வழிபாடு செய்யும்போது என் உருவில் இடப்பக்கத்தில் உனக்கு இடம் தருகின்றேன் என்றும் வாக்களித்தார்.’ சிவபெருமான் கூறியபடி சக்தி தேவியும் காஞ்சிபுரத்தில் தவம் இருந்தபோது ஏகாம்பரநாதரை மணந்தார். அடுத்ததாக தேவி திருவண்ணாமலைக்கு செல்லும் வழியில் தேவிகாபுரத்தில் ஒரு மண்டபத்தில் கனககிரீஸ்வரை வணங்கி தவமிருந்தார். இதனால்தான் இந்த தளம் தேவிகாபுரம் என்ற பெயரை பெற்றுள்ளது. இங்கிருந்து திருவண்ணாமலைக்குச் சென்று சிவனின் இடது பக்கத்தைப் பெற்றதாக புராணங்கள் கூறுகின்றது.

*பலன்கள்:

திருமணத்தடை உள்ளவர்கள் இந்த கோவிலில் உள்ள அம்பாளை வழிபட்டால் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. இங்குள்ள ஈசனை வழிபட்டால் மன அமைதி கிடைக்கும்.

திருவிழா: 

பங்குனி உத்திரப் பெருவிழா – பங்குனி மாதம் கிருத்திகையுடன் கூடிய பஞ்சமி திதியில் கொடியேற்றி, அன்று முதல் பத்து நாட்களுக்கு நடைபெறும். பத்தாவது நாள் உத்திரத்தன்று விழா முடிவடையும் அன்று கொடி இறக்கப்படும். இவ்விழாவில் நாள்தோறும் பஞ்சமூர்த்திகளும் மலைக்குச் சென்று வரும் காட்சி மிகவும் சிறப்புடையதாகும். சித்திரை – நடராஜர் அபிசேகம் புரட்டாசி – நவராத்திரி ஐப்பசி – மலையின் மீது சுவாமிக்கு அன்னாபிசேகம் கார்த்திகை – கார்த்திகை தீபத்திருவிழா மாசி- மகாசிவராத்திரி இவை தவிர பவுர்ணமி கிரிவலம் இத்தலத்தில் மிகவும் சிறப்புற நடைபெறுகிறது.
பிரதோசம் மிக சிறப்பாக நடைபெறுகிறது.

#தீர்த்தங்கள் :

கோயிலின் உள்ளேயும் வெளியேயும் பல புனித தீர்த்தங்கள் உள்ளன. 

கோயிலின் உள்ளே பிரம்ம தீர்த்தம் அமைந்துள்ளது.

தென்கிழக்கில் நீராழி மண்டபத்துடன் கூடிய அக்னி தீர்த்தம் உள்ளது. இந்த தீர்த்தம் காத்தான்குளம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த அக்னி தீர்த்தத்தின் குன்றின் மீது முருகன் கோவில் உள்ளது.

மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள பெரியப்பன் குளம் நவக்கிரக தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது.

மலையைச் சுற்றி தேவரடியார் தீர்த்தம், செய்யான் தீர்த்தம் மற்றும் பிற தீர்த்தங்கள் உள்ளன.

#கல்வெட்டுக்கள்:

இக்கோயிலில் 55 கல்வெட்டுகள் உள்ளன. கல்வெட்டுகள் விஜயநகர, தஞ்சாவூர் மராட்டியர், ஆரணி ஜாகிர்தார்கள் ஆகியோருக்கு சொந்தமானது. கல்வெட்டுகள் தமிழ், சமஸ்கிருதம், மராத்தி மொழிகளில் உள்ளன. கல்வெட்டுகளில் இருந்து இந்த இடம் தேவக்காபுரம் என்று அழைக்கப்பட்டது, பின்னர் தேவிகாபுரம் என்ற தற்போதைய பெயராக மாறியது. இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு-1961 அறிக்கையில், இக்கோயில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது, ஆனால், எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. கிடைக்கக்கூடிய பழமையான கல்வெட்டு 1477 CE விஜயநகர காலத்தைச் சேர்ந்தது. அதிகபட்ச கல்வெட்டுகள் கிருஷ்ண தேவராய (1509 - 1529 CE), அச்சுதராயா (1530-1542 CE) மற்றும் சதாசிவ ராயா (1542 - 1570 CE) ஆகியோருக்கு சொந்தமானது. 

தரிசன நேரம்:
மலையின் மேல் உள்ள கோயில்
காலை 8.00AM – 10.00AM

மலையின் கீழே உள்ள அம்மன் கோயில்
காலை 6.00AM – 12.00PM
மாலை 5.00PM – 8.00PM

முகவரி:
அருள்மிகு கனககிரீஸ்வரர் திருக்கோவில்,
தேவிகாபுரம்-606 902,
திருவண்ணாமலை மாவட்டம்.

அமைவிடம்:

திருவண்ணாமலையிலிருந்து, ஆரணி செல்லும் பஸ்களில் 50 கி.மீ., கடந்தால் தேவிகாபுரத்தை அடையலாம். பஸ் ஸ்டாப்பிலிருந்து சிறிது தூரத்தில் கோயில் உள்ளது. காஞ்சி – செய்யாறு – ஆரணி வழியாகவும், விழுப்புரம் -செஞ்சி – சேத்பட் வழியாகவும், வேலூர்- போளூர் வழியாக தேவிகா புரத்திற்கு பேருந்து வசதி உள்ளது. 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம்... 

No comments:

Post a Comment

Followers

சபரிமலை ஒரு வித்தியாசாமான வழிபாட்டு ஸ்தலம்...

🌹ஏன் சபரிமலை ஒரு வித்தியாசாமான வழிபாட்டு ஸ்தலம்?  🌹உலகின் புனிதப் பயணங்களில் வருடம் தோறும்  சுமார்  40-50 மில்லியன்  பக்தர்க ள...