Sunday, October 13, 2024

ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ சரபேஸ்வரர் மந்திரம்....

_ஸ்ரீ சரபேஸ்வரர் மந்திர ஜெபம்!!!_


உலகம் உயிர்கள் பிரபஞ்சம் அனைத்தையும் இயக்கி வருபவர் சர்வேஸ்வரன் என்ற சிவபெருமான்!

தேவைப்படும் போது அவர் அவதாரம் எடுப்பது வழக்கம். அவருடைய அவதாரம் இதுவரை 64 முறை நடைபெற்றதால் 64 சிவ வடிவங்கள் என்று மக்கள் போற்றுகிறார்கள். அதில் மிகவும் முக்கியமான அவதாரம் சரபேஸ்வரர் அவதாரம் ஆகும்.

சரபேஸ்வரரின் ஒரு இறக்கையாக பிரித்திங்கரா தேவியும் இன்னொரு இறக்கயாக சூலினி துர்க்கை இருந்துள்ளார்கள். 

இரணியன் என்ற அசுரனை அடக்குவதற்காக மகாவிஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்தார். இரணியனை சம்ஹாரம் செய்த  பிறகும்கூட நரசிம்ம அவதாரத்தின் கோபம் தீரவில்லை.எனவே அந்தக் கோபம் தீர்வதற்காக ஈசன் சரபேஸ்வர அவதாரமெடுத்து நரசிம்ம அவதாரத்தை சாந்தப்படுத்தினார்.

இதுவரை நீங்கள் எத்தனை பிறவி எடுத்திருந்தாலும் அத்தனை பிறவி கர்மாக்களும் மொத்தமாக தீர்ந்து இந்த பிறவியோடு உங்கள் ஆத்மா திருக்கைலாயம் நோக்கி செல்ல வேண்டுமா?

பின்வரும் சரபேஸ்வரர் காயத்திரி மந்திரத்தை காலையில் தூங்கி  எழுந்ததும் 27 முறையும் இரவில் தூங்கும் முன்பாக 27 முறை ஜெபித்து வர வேண்டும்.

ஓம் ஸ்ரீ சாலுவேசாய வித்மஹே
 பக்ஷிராஜாய தீமஹி 
தந்நோ சரப ப்ரசோதயாத்

அவ்வாறு தினமும் ஜெபித்து வரும்போது துக்க வீடுகளுக்கும் , குழந்தை பிறந்த வீடுகளுக்கும், ருதுவான வீடுகளுக்கும் செல்லும் சூழ்நிலை உண்டாகும்.அப்படி சென்று வந்தாலும் கூட இந்த மந்திரத்தை தினமும் காலையில் 27 முறையும் இரவில் 27 முறையும் எடுத்து வர வேண்டும். எந்தவித தீட்டும் கிடையாது.

தமிழ்நாட்டில் எல்லா சிவாலயங்களிலும் ஸ்ரீ சரபேஸ்வரர் சன்னதி இல்லை. 

வெகு அரிதாகவே ஒரு சில ஆலயங்களில் மட்டுமே ஸ்ரீ சரபேஸ்வரர் சன்னதி அமைக்கப்பட்டிருக்கிறது. 

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர்  கோயிலுக்கு அருகிலுள்ள வாலீஸ்வரர் திருக்கோயிலிலும்

வாலாஜாபேட்டை ஸ்ரீ அகத்தீஸ்வரர் கோயிலிலும்,

சைவத்தின் தலைநகரம்  திருவண்ணா மலையிலும்,

 கும்பகோணம் அருகிலுள்ள திருபுவனம் ஆலயத்திலும்,

அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள சிவாலயத்திலும் ஸ்ரீ சரபேஸ்வரர் சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீ சரபேஸ்வரர் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30  மணிக்கு மேல் 6 மணிக்குள் க்குள் அவதாரம் எடுத்தார்.

எனவே அந்த நேரத்தில்  உங்கள் வீட்டில் அல்லது உங்கள் ஊரில் உள்ள சிவன் கோவிலில் மூலவர் சிவன் சன்னதிக்கு அருகில் அமர்ந்துகொண்டு ஸ்ரீ சரபேஸ்வரர் காயத்திரி மந்திரத்தை ஜெபிக்கலாம்.

ராகு காலத்தில் கடைசி 30 நிமிடங்கள் அதிக சக்தி வாய்ந்த நேரம் என்பதை சித்தர்கள் உபதேசம் செய்து உள்ளார்கள்.

 மேலே கூறி உள்ள ஊரில் வசிப்பவர்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மாலை 5.30 முதல் 6 மணி வரை சரபேஸ்வரர் சன்னதியில் வடக்கு நோக்கி அமர்ந்து கொண்டு ஸ்ரீ சரபேஸ்வரர் காயத்ரி மந்திரம் ஜெபித்து வரலாம்.

கும்பகோணம் அருகில் உள்ள திருபுவனம் என்ற ஊரில் உலகத்திலேயே மிகப் பிரம்மாண்டமான  ஸ்ரீ சரபேஸ்வரர் சன்னதி அமைக்கப்பட்டிருக்கிறது. 

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மாலை 4.30 முதல் 6 மணிக்குள் சரபேஸ்வரர் சன்னதியை அடி பிரதட்சிணமாக வலம் வரலாம். அப்படி வளம் வரும் போது ஸ்ரீ சரபேஸ்வரர் காயத்ரீ மந்திரம் ஜெபிக்கலாம்.

யார் ஒருவர் அசைவம் சாப்பிடுவதையும், மது அருந்துவதையும், போதைப்பொருட்கள் பயன்படுத்துவதையும் நிரந்தரமாக கைவிட்டார்களோ அவர்கள் மட்டுமே ஸ்ரீ சரபேஸ்வரர் காயத்திரி மந்திரத்தை தினமும் ஜெபிக்கும் தகுதியைப் பெறுகிறார்கள் என்று சித்தர் பெருமக்கள் உபதேசம் செய்துள்ளார்கள்.

தினசரி நரசிம்ம மந்திரம் ஜபம்  செய்பவர்கள் ஸ்ரீ சரபேஸ்வரர் மந்திர ஜெபம் செய்யக்கூடாது. (சத்ரு மித்ரு ஆன்மிகத்திலும் உண்டு)

இதில் விளையாட்டுத்தனமாக இருந்தால் எதிர் விளைவுகள் உண்டாகும் என்பதை இக் கணத்தில் தெரிவித்துக் கொள்கிறோம்

 ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம்.. 

No comments:

Post a Comment

Followers

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உண்டான அதிதேவதைகள்.

நட்சத்திர தெய்வங்கள் பற்றி அறிவோம் நமது நட்சத்திரத்திற்கான அதிதேவதைகள் யாரென்று அறிந்து அவர்களை வழிபடுவதால் வாழ்க்கையில் இன்னல்க...