Sunday, October 13, 2024

சாப விமோச்சனம் தரும் தலம். கோகிலேஸ்வர சுவாமி திருக்கோழம்பியம்,

அருள்மிகு கோகிலேஸ்வர சுவாமி  திருக்கோயில்,
திருக்கோழம்பியம்,                எஸ்.புதூர் அஞ்சல்
-612 205
குத்தாலம் வட்டம்,  மயிலாடுதுறை மாவட்டம். 

*இறைவர் திருப்பெயர்:   கோகிலேஸ்வரர்,கோழம்ப நாதர்.  

*இறைவியார் திருப்பெயர்: சௌந்தர நாயகி.  

*தல மரம்: வில்வம் (முன்புவன மாதவி என்னும் காட்டு முல்லை -இப்போது இல்லை)   

*தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம்  

*வழிபட்டோர்: சம்பந்தர், அப்பர், சேக்கிழார், அம்பிகை, பிரமன், சந்தன் என்னும் வித்யாதரன், இந்திரன் முதலியோர். 

*மூலவர் பசுவின் கால் குளம்பு இடறியபோது வெளிப்பட்ட சுயம்பு மூர்த்தி, நீண்டபாணம். 

*அம்பிகையின் திருநாமம் செளந்தர நாயகி. மிகுந்த லாவண்யத்துடன், பத்ம பீடத்தில் நின்ற கோலத்தில், அபய வரத ஹஸ்தங்களுடன், அட்சர மாலை, கமண்டலத்தைத் தாங்கி தோற்றமளிக்கும் அதிஅற்புத தரிசனம் நல்குகிறாள்.  

*இது ஒரு சாப விமோச்சனம் தரும் தலம். 

*திருமாலுடன் சொக்கட்டான் விளையாடிய தருணத்தில் சிவனுக்கு ஏற்பட்ட சந்தேகத்தில்,  பார்வதி தனது சகோதரனுக்காகப் பரிந்து பேசியதால் சாபத்துக்கு ஆளாகி பூமியில் பசுவாகப் பிறந்தார். சாப நிவர்த்திக்காக,  திருக்கோழம்பியத்தில் சிவனை வழிபட்டது. அங்கு அதன் குளம்பு லிங்கத்தின் மீது தவறுதலாக இடறியது.  அதன் அடையாளம் இன்றும் ஆவுடையார்மேல் பதிந்துள்ளதைக் காணலாம்.   அதன்பொருட்டு இத்தலத்துக்கு "கோழம்பம்'  என்றும், இறைவனுக்கு "கோழம்பநாதர்'  என்றும் பெயர் ஆயிற்று.               

*சிவனின் அடிமுடியைக் காண திருமாலுடன் ஏற்பட்ட போட்டியில் பொய்யுரைத்ததால் தனக்கு ஏற்பட்ட பாவ, தோஷ நிவர்த்திக்காக பிரம்மன் பல்வேறு சிவ தலங்களில் சென்று வழிபட்டார். அவர் இத்தலத்திலும் தீர்த்தம் உண்டாக்கி, வழிபட்டதாக வரலாறும் உண்டு.       

*சந்தன் என்ற வித்யாதரன் இந்திரனால் சபிக்கப்பட்டு  குயிலாக  (கோகிலம்)  மாறினான்.  சாப விமோசனம் வேண்டி இத்தலத்து ஈசனை வழிபட்டு சுய உருவை பெற்றான்.  
அதனால், இத்தல இறைவனுக்கு "கோகிலேஸ்வரர்' என்ற பெயரும் ஏற்பட்டது.          

*கெளதம முனிவரின் சாபம் பெற்ற இந்திரன் அதனை போக்கிக் கொள்ள வழிபட்ட தலங்களுள் இதுவும் ஒன்று. 

*27 விதமான யோகங்களில் ஒன்றான வ்யதீபாதம் எனும் யோக தினத்தில் இத்தலத்தில் நடைபெறும் "வியதீபாதயோக'  ஆராதனை, பரிகார ஹோமம் இவற்றின் மூலம் பூர்வஜன்ம தோஷம், பித்ருதோஷம், விவாக தோஷம், புத்திர தோஷம் போன்ற தோஷங்கள் நீங்கும். ஹோமங்களில் பங்கேற்கவும்,  திருமணத் தடைகள் நீங்கவும்,  புத்திரப் பாக்கியம் வேண்டியும் பக்தர்கள் கோயிலுக்கு வருகிறார்கள்.           

*இத்தலம் ஆயுள் நீட்டிப்புத்தலமாகவும் விளங்குகிறது. 
அகத்தியர் இத்தலத்தில் வணங்கி ஆயுள் நீட்டிப்பு பெற்றார் என்கிறது தல புராணம்.

*இத்தலத்தில் கொடிமரத்தின் அருகில் நின்று ஈசனை நோக்கி வேண்டிக் கொண்டால் நினைத்தது நடைபெறுவதாகப் பலன் பெற்றோர் கூறுகிறார்கள்.   

*இது செம்பியன்மாதேவியால் கட்டப்பட் கோயில்.         *சுமார் 1,100 ஆண்டுகளுக்கு மேல் பழைமையான இந்தக் கோயிலில்  தொல்லியல் துறையினரால் 17 கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன.                   

*இது மயிலாடுதுறை  மாவட்டம்- குத்தாலம் வட்டத்தில் அமைந்துள்ளது.  

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உண்டான அதிதேவதைகள்.

நட்சத்திர தெய்வங்கள் பற்றி அறிவோம் நமது நட்சத்திரத்திற்கான அதிதேவதைகள் யாரென்று அறிந்து அவர்களை வழிபடுவதால் வாழ்க்கையில் இன்னல்க...