Saturday, October 5, 2024

தோல் வியாதி நீக்கும் தென்கரை மாந்துறை ஸ்ரீ அட்சய நாதர் ஆலயம்.

_மனோ வியாதி, சித்தபிரமையை மற்றும் தோல்  வியாதி நீக்கும் தென்கரை மாந்துறை 
ஸ்ரீ அட்சய நாதர் ஆலயம்...!_

சூரியனார் கோயிலில் இருந்து அருகில் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஆலயம்.

ஆதலால் சூரியனார் கோயிலில் வழிபட்டவுடன் இந்த ஆலயத்தில் வந்து வழிபட்டால் ஜாதகத்தில் உள்ள அமாவாசை தோஷ  யோகமும் நீங்கும் 
திருமாந்துறை ஸ்ரீயோகாம்பிகை சமேத ஸ்ரீஅட்சயநாதர் ஆலயம்  (குறிப்பு:) திருச்சி அருகே உள்ள திருமாந்துறை வேறு. அது தேவாரத் தலம்.)  ஞானசம்பந்தரால் வழிபடப்பெற்றதாக பெரியபுராணத்தில் கூறப்படுகிறது.  இதனை தென்கரை மாந்துறை எனவும் குறிப்பிடுவர். 

சாபம் பெற்ற காலவ மகரிஷியும், நவகிரகங்களும் வந்து தொழுது அருள் பெற்ற தலம்.

அம்பாள் தவமிருந்து இறைவனை மணந்து கொண்ட திருத்தலம்.

கலியுகத்திலும் கார்த்திகை மாத அனுஷ நட்சத்திரம் அன்று தீர்த்தக் கிணறு பொங்கும் அதிசயம் இன்றும் நடக்கிறது.

விருச்சிக / கடக ராசியில் பிறந்தவர்கள் வணங்கி வர வேண்டிய தலம்.  ரோஹிணி / திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய தலம். 

பில்லி, சூனியம் தொல்லைகள் நீங்க "தான் தோப்புக்கரணம் போட்டு சிவபெருமானை வணங்கிய" உச்சிஷ்ட கணபதியை வணங்கினால் போதும்..

அக்ஷய திருதியை அன்று 64 விதமான அபிஷேக தரிசனம் அனைத்து விதமான சௌபாக்கியங்களையும் தரும்.

பௌர்ணமி அன்று மாலை தரப்படும் நெய் கலந்த அன்னாபிஷேக பிரசாதம் தோல் மற்றும் மனோ வியாதிகளை நீக்கக் கூடியது.

சந்திர பரிகாரத் தலம்

ஜாதகத்தில் சந்திரன் சம்பந்தமான தோஷங்களுக்கு, சந்திரன் இன்றும் வணங்கி வருவதால் இங்கு பௌர்ணமி வழிபாடு சிறப்பு.  

தோல் மற்றும் மனோ வியாதிகளுக்கு பரிகாரத் தலம். தோல் வியாதிகளை போக்கும் பரிகார தலம். சித்தபிரமை குணமாக வணங்க வேண்டிய ஆலயம். -குஷ்ட நோய் தீர்க்கும் திருத்தலம், 

சந்திரனின் க்ஷயரோகம் நீக்கிய தலம். சந்திரன் பரிகாரத் தலம் திங்களூருக்கு வழிபடும் முன்னர் அல்லது பின்னர் இந்த ஆலயத்திலும் வந்து வழிபட்டால்தான் சந்திரன் தோஷங்கள் யாவும் முழுமையாக நீங்கும். 

அமைவிடம்

தென்கரை திருமாந்துறை என்பது வழக்கு. ஆடுதுறை- சூரியனார்கோயில் அருகில் ஒரு கிமீ தூரத்தில் அமைதியான சூழலில் பெரிய குளத்தின் கரையில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது இக்கோயில்.

No comments:

Post a Comment

Followers

ஐயப்பனுக்கு திருமணம் நடைபெறும் ஒரே கோவில் இது தான்.

கடவுளின் தேசமான இயற்கை எழில் கொஞ்சும்  கேரள மாநிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஐயப்பனின் அறுபடை வீடுகளில் ஒன்றான , ஐயப்பன் திருமண...