Tuesday, November 5, 2024

கந்த சஷ்டி கவசத்தை அருளியவர் ஸ்ரீ பாலதேவராய சுவாமிகள்.

ஸ்ரீ பால தேவராய சுவாமிகள் கந்த சஷ்டி கவசத்தை அருளிய வரலாறு பற்றிய பதிவுகள் 
கந்த சஷ்டி கவசத்தை அருளியவர் ஸ்ரீ பாலதேவராய சுவாமிகள். இவர் எதற்காக இந்தக் கவசத்தை பாடினார் தெரியுமா? தேவராய சுவாமிகள் ஒரு சமயம் கடும் வயிற்றுவலியால் மிகவும் அவதிப்பட்டு வந்தார். எவ்வளவோ சிகிச்சைகள் மேற்கொண்டும் அவருடைய வயிற்றுவலி தீர்ந்தபாடில்லை.

வாழ்க்கையே வெறுத்துப்போய் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளும் முடிவோடு திருச்செந்தூர் சென்றார். அவர் சென்ற நாளில் திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா ஆரம்பித்திருந்தது. தீவிர முருக பக்தரான தேவராய சுவாமிகள், சஷ்டி நாட்களில் விரதமிருந்து முருகனை மனம் குளிர வழிபட்டு சூரசம்ஹாரம் கண்ட பின்பு உயிர் விடலாம் என்று முடிவெடுத்தார். நல்ல அருட்கவியும், மந்திரநூல் வல்லுனருமான தேவராய சுவாமிகள், சஷ்டி விரத நாட்களான ஆறு தினங்களில், தினத்துக்கு ஒன்றாக, ஆறுபடை வீடுகளுக்கும் தனித்தனியாக ஆறு கவசங்களை பாடி முடிப்பது என்று முடிவு செய்தார்.

அவ்வண்ணமே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு படை வீட்டிற்குரிய கவசங்களை பாட ஆரம்பித்தார். அவர் பாட ஆரம்பித்ததும் வயிற்றுவலி படிப்படியாக குறைய ஆரம்பித்தது. சஷ்டியின் ஆறாவது நாளன்று வயிற்றுவலி அறவே நீங்கிவிட்டது. இப்படி பிறந்தவை தான் கந்த சஷ்டி கவசங்கள் ஆறும். தேவராய சுவாமிகள் ஒவ்வொரு படைவீட்டிற்கும் ஒவ்வொரு கவசமாக ஆறு கவசங்களை இயற்றியுள்ளார். இவை அனைத்துமே 'கந்த சஷ்டி கவசம்' என்ற ஒரே பெயரைத்தான் கொண்டு அழைக்கப்படுகின்றன.

அவர் முதன் முதலில் இயற்றிய 'திருச்செந்தூர் கவசம்' தான் பொதுவாக எல்லோரும் அறிந்த, 'சஷ்டியை நோக்க சரவண பவனார் சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்' என்று தொடங்கும் கவசம்.

இதுபோல் ஒவ்வொரு படைவீட்டிற்கும் ஒவ்வொரு கவசம் உள்ளது. இருப்பினும் திருச்செந்தூர் கந்த சஷ்டி கவச நூலே பிரபலமாகி எல்லோராலும் அறியப்பட்டு பாடப்பட்டு வருகிறது. என்றாலும் ஆறு கவசத்தையும் ஒருங்கே பாடுவதே சிறப்புத்தரும். இந்த தோஷங்கள் அனைத்தையும் போக்கும் வல்லமை கொண்டவன் முருகப்பெருமான் மட்டுமே. கந்தன் என்று சொன்னாலே, வந்த வினையும், வருகின்ற வல்வினையும் நீங்குமே. இந்த கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்தால் கிடைக்கும் பயனை சொல்லவும் வேண்டுமா?

இத்தனை சிறப்பு வாய்ந்தது இந்த கந்த சஷ்டி கவசம். இதனை பாராயணம் செய்வோர்களின் தேவையை உணர்ந்து, அறிவு, செல்வம், சந்தானம், வெற்றி ஆகியவற்றை அவர்கள் விரும்பிக் கேட்டாலும், கேட்காவிட்டாலும் தானே அருளும் சக்தி வாய்ந்த கவசமாகும். பாம்பன் சுவாமிகள் அடிக்கடி மனம் உருகி இந்த கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்து கொண்டிருப்பார். அப்படி ஒருமுறை பாராயணம் செய்தபோது தானும் இதேபோல் ஒரு கவச நூலை முருகன்மீது பாடவேண்டும் என்று நினைத்தார். அப்படி அவர் பாடியதுதான் 'சண்முக கவசம்'. இந்த சண்முக கவசமும் ஆறு கவசங்களை உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது. 

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்.. 

Monday, November 4, 2024

சஷ்டி விரதம் விஞ்ஞான விளக்கம்..

ஆறு நாட்களில் பூரண ஆரோக்கியத்தை வளர்க்கும் அபூர்வ கந்தர் சஷ்டி இரகசியம். 
வருடத்தில் 365 நாளும் நமது இரைப்பை இயங்கிக் கொண்டே இருக்கிறது. இதற்கு சற்று ஓய்வு கொடுத்தால் உடலின் இயக்கங்கள் சீர் ஆகும்.

நமது உடலை இயக்கும் "உயிர்சக்தி" மூன்று சக்திகளாக பிரிந்து வேலை செய்து வருகிறது.

உடல் ஒரு நேரத்தில் ஒரு வேலை தான் செய்யும், அதை துல்லியமாக செய்து முடிக்கும்.

இது தான் அந்த மூன்று சக்தி

(1) - செரிமான சக்தி
(2) - இயக்க சக்தி
(3) - நோய் எதிர்ப்பு சக்தி

இதில் ஒவ்வொன்றாக எப்படி வேலை செய்கிறது?.. என்று சிறிய உதாரணத்துடன் பார்க்கலாம்.

காய்ச்சலின் போது உங்களுக்கு பசிக்குமா?. பசிக்காது, உடலின் செரிமான சக்தி வேலை செய்யாது. காய்ச்சலின் போது உங்களால் வேலை செய்ய முடியுமா? முடியாது, உடல் இயக்க சக்தியை குறைத்துக் கொள்ளும். எனவே இந்த இரண்டு சக்தியும், நோய் எதிர்ப்பு சக்திகளாக மாறி உங்கள் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி விடும்.

மதியம் அதிக உணவு எடுத்துக் கொண்டீர்கள், உடனடியாக வேலை செய்ய முடியுமா? முடியாது அல்லவா, உடல் இயக்கம் தன் சக்தியை குறைத்துக் கொள்ளும். நோய் எதிர்ப்பு சக்தி வேலை செய்யாது. இப்பொழுது செரிமானம் மட்டுமே வேலை செய்யும்.

உண்ணா நோன்பு இருக்கிறீர்கள். செரிமான சக்திக்கு வேலை இருக்கிறதா? இல்லை.
இயக்க சக்தியையும் குறைத்துக் கொள்வோம். இப்பொழுது செரிமானம் மற்றும் இயக்க சக்திகளுக்கு வேலை இல்லாததால், இதன் சக்திகள், நோய் எதிர்ப்பு சக்திகளாக மாறி நமது உடலில் உச்சி முதல் பாதம் வரை, எங்கு? என்ன? பிரச்சனை இருந்தாலும் குணப்படுத்தி விடும்.

இப்படி மூன்று சக்திகளும் அந்தந்த நேரத்தில், மற்ற இரண்டு சக்திகளிடம் இருந்து சக்தி பெற்று, மாறி மாறி வேலை செய்து கொண்டே இருக்கும்.

உடல் முதல் முக்கியத்துவம் செரிமானத்திற்கு கொடுப்பதால் ஒவ்வொறு முறை நாம் உணவு எடுக்கும் போது, உடல் என்ன வேலை செய்து கொண்டு இருந்தாலும் அதை விட்டுவிட்டு, சக்தி செரிமானத்திற்கு வந்து விடும். ஏன் என்றால் வெளியில் இருந்து ஒரு பொருள் வருகிறது, அது என்ன ?ஏது ?.என உடல் பார்த்து சீரமைக்க வேண்டும்.

உண்ணா நோன்பு இருக்கும் போது செரிமான சக்திக்கு அதிக வேலை இருக்காது, எனவே இதன் சக்தியும், ஓய்வில் இருத்தால் இயக்க சக்தியும் நோய் எதிர்ப்பு சக்திகளாக உருமாறும். இதனால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து பிரச்சனைகள் அனைத்தும் அபாரமாக சரி செய்யப்படுகிறது.

உண்ணா நோன்பு இருப்பதால், உடல் ஆரோக்கியம் பெறும் என்பது அறிவியல் உண்மை.

இதற்காக நமது முன்னோர்கள் வருடத்தில் ஆறு நாள் தேர்வு செய்து வைத்துள்ளார்கள். அந்த ஆறு நாளும் ஆறுமுகனை மையப்படுத்தி அழகான ஒரு திருவிழாவாக வடிவமைத்து உள்ளார்கள்.

ஆம், அது தான் தீபாவளி முடிந்து வரும் மறைமதியை அடுத்த ஆறு நாட்கள் கொண்டாடப்படும் "கந்த சஷ்டி விழா". 

கந்த சஷ்டி விழா என்றாலே நமது நினைவிற்கு வருவது "சஷ்டி விரதம்" தான்.

உண்ணா நோன்பு மற்றும் கந்தர் விழாவின் ஆறுநாள் மகிமை❗

"செரிமான சக்தி" தான் முருகனின் தாய். "நோய் எதிர்ப்பு சக்தி" தான் 'முருகன். "நோய்" தான் அரக்கன். வெளியில் நடக்கும் அதே சூர சம்ஹாரம் போர்தான் உங்கள் உடலிலும் நடக்கிறது.

இந்த விழாவில் எப்படி ?முருகப்பெருமான் தனது தாயிடம் இருக்கும் சக்தியை பெற்று அசூரனை வதம் செய்கிறாறோ, அதேப்போல் நமது உடலில் உள்ள "நோய் எதிர்ப்பு சக்தி" தனது தாயான செரிமான சக்தியிடம் இருந்து சக்தி பெற்று நோய்களை வதம் செய்கிறது.

உடலில் நடக்கும் இந்த அறிவியல் உண்மையை நமக்கு சூட்சமமாக சொல்லவோ என்னவோ, ஆறு நாட்களையும் "உண்ணா நோன்புடன்" அழகான விழாவாக வடிவமைத்து உள்ளார்கள்.

சரிங்க, எப்படி உண்ணா நோன்பு இருப்பது❓

(1) - உங்கள் ஊர் வழக்கப்படி இருக்கலாம்
(2) - சமய முறைப்படி இருக்கலாம்.
(3) - ஆறு நாளும் தண்ணீர் மட்டும் குடித்து இருக்கலாம்.
(4) - ஆறு நாளும் பாலும், பழமும் மட்டும் உண்டு இருக்கலாம்.
(5) - ஆறு நாளும் பழங்களை மட்டும் உண்டு இருக்கலாம்.

இதில் உங்களுக்கு பழக்கம் இருக்கும் முறை எதுவோ, அந்த முறைப்படி இருக்கலாம்.

ஆனால் கண்டிப்பாக எலுச்சம்பழ சாறு நீர் குடித்துக் கொண்டே இருப்பது மிகவும் நல்லது.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பசித்தால் தண்ணீர் மட்டும் குடித்து வாருங்கள், பசி அடங்கிவிடும். 

வேலைக்கு செல்வோருக்கு, வேறு உணவு தேவைப்பட்டால், பனை சார்ந்த பொருட்கள்,இளம் தேங்காய், இளநீர் போன்றவை சாப்பிடலாம். 

உடலில் பல்வேறு பிரச்சனை உள்ளவர்கள், ஆங்கில மருந்து எடுப்பவர்கள், நோயாளிகள், ஆறு நாள் பழங்களை மட்டும் எடுக்க முடியாதவர்கள் எல்லாம் தேவைப்பட்டால் இதனுடன் பட்டை தீட்டப்படாத அரிசி கஞ்சி, நீராகாரம், அவல், நாட்டு பசும் பால் போன்ற உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.

நோன்பின் போது என்ன நடக்கலாம்❓

ஆண்டுக்கணக்கில் தேங்கிய நச்சுக்கழிவுகள் வெளியேறலாம்.

(1) - சிறுநீர் அடர்த்தி நிறமாக வெளியேறலாம்.
(2) - மலம் கருப்பாக வெளியேறலாம்.
(3) - சளி படலங்கள் கரைந்து  வெளியேறலாம்.
(4) - உடல் ஓய்வு கேட்கலாம்.
(5) - காய்ச்சல் வரலாம்.
காய்ச்சல் ஒரு கொடை என்பதை மறந்து விடாதீர்கள்.
(6) - வலிகளை உணரலாம்.

என்ன மாற்றங்களை எதிர்பார்க்கலாம்❓

(1) - அதிக உடல் எடை சீர் ஆகும்
(2) - முகம் பொலிவு பெறும்
(3) - கண்ணில் வசீகர ஒளி வீசும்
(4) - சுறுசுறுப்பு அதிகரிக்கும்
(5) - இரத்தம் தூய்மை பெறும்
(6)  - தோலின் நிறம் சீராகும்
(7) - மன உளைச்சல் குறையும்
(8) - கவலை, பயம், கோபம் குறையும்
(9) - புத்துணர்வு கிடைக்கும்
(10) - உடல் பலம் பெறும்
(11) - மன அமைதி பெறும்
(12) - ஆழ்ந்த தூக்கம் வரும்

ஆக மொத்தத்தில்,
உடலில் ஆரோக்கியமும் !
எண்ணத்தில் அழகும் !
மனதில் நிம்மதியும் !

கிடைக்கும். நீங்கள் எதிர்பார்க்காத இன்னும் பல எண்ணிலடங்கா முருக  அதிசயங்கள் நிகழலாம்.

கந்தன், அரக்கனை அழிப்பது போல்
உடல், உங்கள் அனைத்து பிரச்சனைகளை அழித்து விடும்.

நமது பண்பாட்டையும், உடல், மன ஆரோக்கியத்தையும் பிரித்தே பார்க்க முடியாது. 

இவை இரண்டும் ஒன்றிற்கொண்டு பின்னி பிணைந்தவை. பிணைக்கப்பட்டவை.

உடலின் பேராற்றலை புரிந்து, அதன் அற்புத புதையல் கொண்ட அறிவியல் உண்மைகளை, அழகான திருவிழாவாக நமக்கு வடிவமைத்து தந்த நமது முன்னோர்களுக்கு கோடி நன்றிகளை சொல்ல நாம் அனைவரும் கடமைப்பட்டு உள்ளோம்.

உலகில் மிகச்சிறந்த மருந்துவர் - உங்கள் உடல்.

உலகில் மிகச்சிறந்த மருத்துவம் - உண்ணாநோன்பு மட்டுமே

உண்ணாநோன்பு இருப்போம்.
ஆரோக்கியமாக வாழ்வோம்.

அனுபவித்து வாழ்வியலை நீங்களும் உணருங்கள்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்.. 

சூரசம்ஹாரம் ஏன் கொண்டாடுகிறோம்

*சூரசம்ஹாரம் ஏன் கொண்டாடுகிறோம்?*
காசியப்ப முனிவர், மாயா என்ற தம்பதியருக்கு பிறந்தவன் சூரபத்மன். இவன் வளர்ந்த பிறகு சிவபெருமானை நோக்கி தவமிருந்து இந்திர ஞாலம் என்னும் தேரையும், பெண்ணால் பிறக்காத குழந்தையால் மட்டுமே தனக்கு மரணம் நிகழ வேண்டும் என்ற வரத்தையும் பெற்றான்.

இந்த வரத்தால் தேவர்களையும், நல்லுயிர்களையும் துன்புறுத்தினான். இதை தடுக்க சிவபெருமானால் அவதரித்தவர் தான் முருகப்பெருமான்.

முருகப்பெருமான் பார்வதிதேவியிடம் வேலை பெற்று, சூரபத்மனை வெற்றி கொண்டு தேவர்களை காத்தது ஐப்பசி சஷ்டி திதியில் தான்.

அதனால்தான் முருகப்பெருமானுடைய கோயில்களில், கந்தசஷ்டி விழாவின் 6ஆம் நாள் சூரசம்ஹாரம் நடத்துகின்றனர்.

_சூரசம்ஹாரம் நடக்காத ஒரே ஒரு முருகப்பெருமானின் படைவீடு எது தெரியுமா?_

கந்தசஷ்டி விரதமும், சூரசம்ஹார நிகழ்வும் முருகப்பெருமானின் படைவீடுகளில் மிக கோலாகலமாக கடைபிடிப்பது வழக்கம். ஆனால் முருகப்பெருமானின் ஒரு படைவீட்டில் மட்டும் இந்த கந்தசஷ்டி விழா நடக்காமல் மிக அமைதியாக இருக்கும்.

அப்படிப்பட்ட முருகப்பெருமானின் படைவீடு தான் திருத்தணி. இக்கோயில் முருகப்பெருமானின் 5ஆம் படைவீடு ஆகும்.

முருகப்பெருமான் சினம் தணிந்து, வள்ளியை மணம் புரிந்து மிக அமைதியாக அமர்ந்து காட்சி தரக்கூடிய தலம் தான் திருத்தணி கோயில்.

தணிகை என்பதன் பொருள் சினம் தணிதல் ஆகும். திருத்தணி முருகப்பெருமான் கோயிலில் முருகப்பெருமான் சினம் தணிந்து பக்தர்களுக்கு அருளுகின்றார்.

இதன் காரணமாக தான் இந்த கோயிலில் மட்டும் சூரசம்ஹாரம் நடைபெறுவது இல்லை. இருப்பினும் முருகப்பெருமானின் அருளை பெறக்கூடிய கந்தசஷ்டி விழா மட்டும் கொண்டாடப்படுகிறது.

*முருகப்பெருமான் திருக்கல்யாண விழா*

சூரசம்ஹாரம் முடிந்த மறுநாள் (ஏழாவது நாள்) அனைத்து முருகப்பெருமான் ஆலயங்களிலும் முருகப்பெருமான்தெய்வானை திருமண வைபவம் நடைபெறும்.

கந்தசஷ்டி விழா சூரசம்ஹாரத்தோடு முடிந்து விடுவதில்லை. அசுரனை எதிர்த்து வெற்றி பெற்றதற்காக இந்திரன் தனது மகளான தெய்வானையை முருகனுக்கு திருமணம் செய்து தந்ததோடு தேவ மயிலாகவும் மாறி சேவை செய்தார். இவர்களது திருமணம் முதல் படைவீடான திருப்பரங்குன்றத்தில் நடைபெற்றது.

சூரனை ஆட்கொண்ட தலம் என்பதால் இன்றளவும் திருச்செந்தூரில் கந்தசஷ்டிக்கு மறுநாள் முருகப்பெருமான்-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

அன்று காலையில் தெய்வானை தபசு மண்டபம் சென்று, முருகப்பெருமானை மணந்து கொள்ள வேண்டி தவமிருப்பாள். மாலையில் குமரவிடங்கர் (முருகப்பெருமானின் ஒரு உற்சவர் வடிவம்), முருகப்பெருமானின் பிரதிநிதியாக மயில் வாகனத்தில் தபசு மண்டபம் சென்று தெய்வானைக்கு மாலை சூட்டி நிச்சயதார்த்தம் செய்து கொள்வார்.

நள்ளிரவில் இருவரும் திருக்கல்யாண மண்டபத்திற்கு எழுந்தருள, அங்கு திருக்கல்யாண மண்டபத்தில் குமரவிடங்க பெருமான், தெய்வானை திருக்கல்யாணம் ஐதீக முறைப்படி நடைபெறும்.

மறுநாள் சுவாமி, தெய்வானையுடன் வீதியுலா செல்வார். அடுத்த மூன்று நாட்களும் சுவாமி திருக்கல்யாண மண்டபத்தில் உள்ள ஊஞ்சலில் காட்சி தருவார்.

*மஞ்சள் நீராட்டும் வைபவம்*

கிராமங்களில் திருவிழாவின் போது கன்னி பெண்கள் தங்களது முறைப்பையனுக்கு மஞ்சள் நீர் ஊற்றி மகிழ்வர். அதுபோல தான் திருச்செந்தூர் தலத்தில் முருகப்பெருமானுக்கு மஞ்சள் நீராட்டும் வைபவம் நடைபெறும்.

கந்தசஷ்டி விழாவின் கடைசி நாள் முருகப்பெருமான், தெய்வானையுடன் வீதியுலா செல்வார். அப்பொழுது, பக்தர்கள் தங்கள் ஊரில் திருமணம் செய்து கொண்ட முருகப்பெருமானை வரவேற்கும் விதமாகவும், போரில் வென்றதன் உக்கிரத்தை குறைக்கும் விதமாகவும் அவர் மீது மஞ்சள் நீர் ஊற்றி மகிழ்வர்.

*தெய்வீக திருமணங்கள்*

திருமணம் ஆகாதவர்கள், தெய்வ திருமணங்களை கண்டு வழிபட்டால் அவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

குறிப்பாக தெய்வ திருமணங்களை பார்த்தால் நமது திருமண வாழ்க்கையில் உள்ள தடைகள் விலகும் என்பது ஐதீகமாக கருதப்படுகிறது. இதன் காரணமாகவே கோயில்களில் நடைபெறும் தெய்வீக திருமணங்களை பக்தர்கள் கண் குளிர தரிசனம் செய்கின்றனர்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்.. 

கோமாதாவை துன்புறுத்தாமல் பாதுகாத்து பூஜை செய்தால் எல்லா நன்மைகளும் உண்டாகும்...

கோமாதா வழிபாடு பற்றிய பதிவுகள்
கோமாதாவை நாம் தெய்வமாக போற்றும் வழக்கம் இன்றும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. பால் தருவதால் மட்டும் கோமாதாவை நாம் வணங்குவதில்லை. கோமாதாவின் தேகத்தில் சகல தேவர்களும் வாசம் செய்கின்றனர். எனவே, கோமாதாவை பூஜிப்பவர்கள் சகல பாவங்களிலிருந்தும் விடுபட்டு புண்ணியலோகத்தை அடைவார்கள்.

நமது முன்னோர்கள் காலத்தில் இருந்தே இந்த கோமாதா பூஜை நடைபெற்று வருகிறது. இந்த கோமாதா பூஜை செய்வதால் உண்டாகும் பலன்களை பற்றிப் பார்ப்போம்.
குழந்தை பாக்கியம் பெற விரும்புபவர்கள் கோமாதா பூஜை, கோதானம் செய்தால் சிறந்த அறிவுள்ள நல்ல குழந்தைகள் பிறப்பர் என்பது ஐதீகம்.

கோமாதா பூஜை செய்தால் துன்பங்கள் விலகி இன்பமான வாழ்க்கை அமையும்.
வியாபாரம் விருத்தியடையும். நிலையான இலாபம் கிடைக்கும்.

திருமணம் நடைபெறாதிருந்தாலும், காலதாமதமாகிக் கொண்டே சென்றாலும், நல்ல வரன் அமையவில்லை என்றாலும் இந்த கோமாதா பூஜை அவற்றிற்கு ஒரு நல்ல தீர்வினைத்தரும்.

அதுமட்டுமின்றி நவகிரக பீடை, நவகிரக தோஷம் உள்ளவர்கள் கோபூஜையைச் செய்வது சிறந்த பலனைத்தரும். 

ஆணுக்கு சிறந்த நற்குணமுள்ள பெண் மனைவியாகவும், பெண்ணுக்கு நல்ல ஆண் கணவனாகவும் கிடைக்க இந்த கோமாதா பூஜையை செய்யலாம்.

பிரிந்த கணவன் - மனைவி ஒன்றுசேரவும், கணவன்- மனைவி ஒற்றுமையுடன் வாழவும் இந்த கோபூஜை செய்வது அவசியமாகும்.

கோமாதா பூஜை செய்தால் நோய் நொடிகள் நீங்கி உடல் ஆரோக்கியம் பெறும். அதுமட்டுமின்றி செல்வச் செழிப்பும், வழக்குகளில் வெற்றியும் உண்டாகும். மேலும், நீங்கள் செய்த பாவங்களும் நீங்கும்.

இளைத்த கோமாதாவை வாங்கி வளர்த்தாலும் பெரும் புண்ணியம் நம்மைச் சேரும். கோமாதாவைக்கொன்றவர்களுக்கும், கொலைக்காகக் கொடுத்தவர்களுக்கும், அதன் இறைச்சியை உண்டவர்களுக்கும் துன்பம் உண்டாகும்.

இரக்கமின்றி கோமாதாவை துன்புறுத்துபவர்கள் நரகத்தைச் சேர்வார்கள்.
மேலும், கோமாதாவின் குருதியானது ஒருதுளி இப்புவியில் விழுந்தாலும் அதிலிருந்து பல கோடி அசுரர்கள் வந்துதித்து உலகை நாசம்செய்வார்கள் என்று வேதம் கூறுகிறது. எனவே கோமாதாவை துன்புறுத்தாமல்  பாதுகாத்து பூஜை செய்தால் எல்லா நன்மைகளும் உண்டாகும். 

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்.. 

தென்னாங்கூர் ஸ்ரீ பாண்டுரங்க ஸ்வாமி கோவில் வந்தவாசி

அருள்மிகு தென்னாங்கூர் ஸ்ரீ பாண்டுரங்க ஸ்வாமி கோவில் வந்தவாசி
தென்னாங்கூர் ஸ்ரீ பாண்டுரங்க ஸ்வாமி கோயில் (ஞானானந்த கிரி பீடம்).
மஹாராஷ்டிராவிலுள்ள பண்டரீபுரம் கோயிலைப் போன்றே வந்தவாசி அருகே தென்னாங்கூர் ஸ்ரீ பாண்டுரங்கன் கோயிலுள்ளது.
இங்கு ஸ்ரீ ரகுமாயி ஸமேத ஸ்ரீ பாண்டுரங்க ஸ்வாமியை தரிசிக்கலாம்.
ஞானானந்த ஸ்வாமிகளின் சீடர் ஹரிதாஸ்  கிரி ஸ்வாமிகளால்  அமைக்கப்பட்ட இந்தக் கோவில்,  நாமானந்தகிரி ஸ்வாமிகளால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
ஸ்ரீஹரிதாஸ்கிரி ஸ்வாமிகள்  தென்னாங்கூரில் ஸ்ரீ ரகுமாயி ஸமேதராக ஸ்ரீபாண்டுரங்கனுக்கு சந்நிதி ஏற்படுத்தினார்.
பண்டரிபுரத்தில் தனக்குக் கிடைத்த விக்ரஹத்தையும் வைத்து வழிபாடுகளும் நாமசங்கீர்த்தனமும் நடைபெற வழிவகை செய்தார்.
யந்திர வழிபாட்டின் அடிப்படையான ஸ்ரீசக்ர அதிதேவதைகள்  அனைவரும் இங்கு  குடிகொண்டிருப்பது விசேஷம்.
ஸ்ரீ பாண்டுரங்கன் சுமார் 12 அடி உயரத்தில் சாளக்ராமத்தினால்  ஆன விக்ரஹம். மிக அழகாக நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
தென்னாங்கூர் பாண்டுரங்கன் கோயிலில் யந்திர வழிபாடு முக்கியத்துவம் பெறுகிறது.
ஸ்ரீசக்ரத்தின் அதிதேவதைகள் மஹா ஷோடஸி என்ற திருநாமத்தில் ஒரே வடிவில் அருள்பாலிக்கின்றனர்.
யந்திர வழிபாடான ஸ்ரீ சக்ரத்திற்கு மஹா மேரு அமைப்பை ஏற்படுத்தி பூஜை செய்து வருவது மாபெரும் பலனை தரக்கூடியது.
இந்த மஹாமேரு தான் மஹா ஷோடஸியாக  இந்த ஸ்தலத்தில் விளங்குகிறது.
ஸ்ரீ சக்ரத்தில் எத்தனை பிரிவுகள்  உள்ளனவோ  அத்தனை பிரிவிற்கும்  உள்ள தெய்வங்களான மஹா ஷோடஸி,  ஸ்ரீ ராஜராஜேஸ்வரி,  ஸ்ரீ சரஸ்வதி,  ஸ்ரீ லக்ஷ்மி,  பிரம்மா,  ஸ்ரீ விஷ்ணு,  ஸ்ரீ  ருத்ரன்,  ஸ்ரீ ஈஸ்வரன்,  ஸ்ரீ விநாயகர்.  பாலா,  ஸ்ரீ அன்னபூரணி,  அஸ்வாரூடா,  ராஜமாதங்கி,  வராஹி,  பிரத்யங்கரா,  சரபேஸ்வரர்,  சக்ரத்தாழ்வார்,  யோக நரசிம்ஹர், ,  அகோரமூர்த்தி வனதுர்க்கை,  தக்ஷிணாமூர்த்தி,  சுப்ரமணியர்,  பிராஹ்மி,  மகேஸ்வரி,  கௌமாரி,  வைஷ்ணவி,  மாகேந்திரி,  ஆகியோர் இந்த ஸ்தலத்தில்  விக்ரஹ வடிவில் இருப்பது மிகவும் விசேஷம்.
ஸ்தல விருக்ஷம்  தமால மரம்
மதுராவிலேயே  அதிகம் காணக் கிடைக்கும் விசேஷமான மரம்.  வடமாநிலங்களில் காணப்படும் இந்த விருக்ஷம் அதிசயமாக தென்னாட்டில்  இந்த ஸ்தலத்தில் அமைந்துள்ளது சிறப்பு.
ஹிந்து புராணங்களின்படி,  கிருஷ்ணர் இந்த மரத்தின் கீழ் இன்று புல்லாங்குழல் வாசிப்பதாகவும் கோபியர் மட்டுமின்றி ராதையும் அதைக்கேட்டு அதில் லயிப்பதாகவும் கூறுகின்றன.தென்னாங்கூர் ஷடாரண்யம் என்று வழங்கப்பட்ட ஆற்காடு க்ஷேத்திரங்களில் முக்கியமான ஒன்று.
இந்தப் பீடத்தில் பூரி ஜகந்நாதர் ஆலயத்தில் உள்ளது போன்றே கோபுரம் அமைந்திருக்கிறது.
இந்த கோபுர தரிசனம் நமக்குப் பூரிக்குச் சென்ற புண்ணியத்தையும், இந்தப் பீடத்தில் ஸ்ரீ ரகுமாயி ஸமேதராகக் காட்சி தரும் ஸ்ரீ பாண்டுரங்கன் தரிசனம் நமக்குப் பண்டரிபுரம் சென்ற புண்ணியத்தையும் ஒருசேரத் தருகின்றன... 

Sunday, November 3, 2024

கந்த சஷ்டி விழா திருச்செந்தூரில்சூரசம்ஹாரம்...

கந்த சஷ்டி விழா  திருச்செந்தூரில்சூரசம்ஹாரம் 
தமிழ் கடவுளாகிய முருகப்பெருமானை விரதம் இருந்து வழிபட உகந்த நாட்களில், கந்தசஷ்டி விரதம் மிக முக்கியமான விரதமாகும். மாதந்தோறும் சஷ்டி திதி வந்தாலும், ஐப்பசி மாத வளர்பிறையில் வரும் சஷ்டி திதிதான் ‘கந்தசஷ்டி’ விழாவாக கொண்டாடப்படுகிறது.

 ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாத வளர்பிறை பிரதமை திதியில் தொடங்கி, சஷ்டி திதி வரையான 6 நாட்கள், கந்தசஷ்டி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு கந்தசஷ்டி திருநாள், 07.11.2024 வியாழக்கிழமை (ஐப்பசி மாதம் 21ஆம் தேதி)  அன்று வருகிறது.
சஷ்டி விரதம் 2024 தேதிகள் நேரங்கள்:

சஷ்டி விரதம் நவம்பர் 02, 2024 முதல் நவம்பர் 07, 2024 வரை கொண்டாடப்படுகிறது.

1.நவம்பர் 02, 2024 (சனிக்கிழமை) - நாள் 2 - கந்த சஷ்டி திருவிழா ஆரம்பம்

3, நவம்பர் 07, 2023 (திங்கட்கிழமை)  சூரசம்ஹாரம் நவம்பர் 08 (செவ்வாய் கிழமை) திருகல்யாணம்

திருசெந்தூர்: கந்த சஷ்டி விரதத்தின் முக்கிய நாளான சூர சம்ஹாரம் 07.11.2024 அன்று திருச்செந்தூர் கடற்கரையில் நடைபெற உள்ளது.

 விரதம் இருக்கும் பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்து வருகின்றனர். கந்த சஷ்டி விரதம் இருக்கும் பக்தர்களால் திருச்செந்தூரில் கோவில் வளாகமும் கடற்கரை பகுதியும் மனித தலைகளாக காட்சி அளிக்கும். கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள் தலையா கடல் அலையா என்று சொல்லும் அளவிற்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. 

துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம்
 செல்வம் பலித்துக் கதித்தோங்கும் 
நிஷ்டையும் கைகூடும் நிமலரருள் 
கந்த சஷ்டி கவசந்தனை... 

ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக நடைபெறும் சூரசம்ஹார திருவிழா இந்த ஆண்டு 07.11.2024 அனறு நடைபெறும்

 திருச்சீரலைவாய் என்று சொல்லப்படும் 
திருச்செந்தூரில் நடைபெறவிருக்கிறது.
 இதற்காக பக்தர்கள் அனைவரும் ஐப்பசி மாதத்தில் அமாவாசை திதிக்கு மறுநாளான பிரதமை திதியில் தொடங்கி 6ஆம் நாளான சஷ்டி திதி வரையில் விரதம் இருந்து 6ஆம் நாளில் சூரபத்மனை சம்ஹாரம் செய்த பின்னர், தங்களின் விரதத்தை முடிப்பது என்பது ஐதீகம்
 சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும் கந்தனாகிய முருகப்பெருமான சஷ்டி திருநாளில் விரதமிருந்து வழிபடுவது தான் கந்த சஷ்டி விரதம் என்று சுலபமாக சொல்லிவிடலாம். கிராமத்து பழமொழியில் சொல்வதானால், சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும், என்று. ஆனால் அதற்கு உண்மையான பொருள் என்னவென்றால், திருமணமான பெண்கள், குழந்தை பாக்கியம் கிடைப்பதற்காக, முருகப்பெருமானை நினைத்து ஒவ்வொரு மாதமும் வளர்பிறை சஷ்டி திதியில் ஆரம்பித்து ஐப்பசி மாத வளர்பிறை சஷ்டி திதி வரை விரதமிருந்து, சூரசம்ஹாரம் முடிந்த உடன் விரதத்தை முடித்தால், நிச்சயம் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது நிச்சயம். மனதை அடக்கும் கந்தன் கந்த சஷ்டி விரதம் எல்லாம் சரி, ஆனால் கந்தன் என்றால் என்ன தெரியுமா. கந்து+அன்= கந்தன், அதாவது, கந்து என்றால் யானையை கட்டிப்போடும் தூண். விளக்கமாக சொல்வதென்றால், எதற்கும் அடங்காமல் நான் தான் பெரியவன் என்ற மமதையில் தரிகெட்டுத் திரியும் மனதை அடக்கி இறைவன் என்ற தூணோடு சேர்த்து கட்டுதல் என்பதாகும். இதன் காரணமாகவே முருகப் பெருமானுக்கு கந்தன் என்ற பெயர் வந்தது. 

அழகன் முருகன் அமாவாசைக்கு பின், வளரும் சந்திரன் பொதுவாகவே மந்தமாகவே இருக்கும். ஆனால், ஆறாம் நாளான சஷ்டி திதியில் மட்டும் அரை நிலவாகி வசீகரிக்கும் தோற்றத்துடன் இருக்கும். அது சரி முருகன் என்றைக்கும் அழியாத அழகன் என்பது தானே அர்த்தம். இதில் இன்னொரு அறிவியல் உண்மையும் மறைந்துள்ளது. அரைநிலவு நாளில், நிலவில் இருந்து வெளிப்படும் ஈர்ப்பு விசையானது சரிவிகித அளவோடு இருக்கும். இதன் காரணமாக இயற்கையும் எந்தவித சீற்றமும் இல்லாமல், கடல் கொந்தளிப்பு இல்லாமல், ஏகாந்தமாக அமைதியாக காணப்படும். ஆட்கொண்ட இறைவன் பொதுவாக தேவர்களுக்கும், முனிவர்கள் மற்றும் ரிஷிகளுக்கும் துன்பம் விளைவித்து அட்டூழியம் செய்யும் அசுரர்களை, முழுமுதல் கடவுளான விநாயகர் முதல் சிவன், விஷ்ணு, பராசக்தி என அனைத்து தெய்வங்களும் வதம் செய்து அவர்களை அழிப்பது தான் வழக்கம். அதற்கு மாறாக, முருகப்பெருமான் அசுரர்களுடன் போரிட்டு அவர்களை அழித்தொழிக்காமல், அவர்களை மன்னித்து தடுத்து தன்னுடனேயே ஆட்கொண்டதால் தான், அதனை சம்ஹாரம் என்று சொல்கிறோம். இதற்கு அர்த்தம் பகைவர்களையும் மன்னித்து அருள்பாலிப்பதே ஆகும். 
அகந்தை அழித்த முருகன் சம்+ஹாரம்=சம்ஹாரம். சம் என்றால் அழகு, அன்பு, சுத்தம், வெற்றி, நன்மை என பல அர்த்தம் உண்டு. சுருக்கமாக சொல்வதென்றால், இத்தனையையும் நமக்கு கொடுப்பது சம்ஹாரம் ஆகும். நம்மிடம் உள்ள தீய குணங்களையும், நான் என்ற அகந்தையையும் விட்டொழித்தால் தான் நமக்கு இத்தனை நன்மைகளும் கிடைக்கும். 

முருகன் அருள் கிடைக்கும் ஆகவே, சஷ்டி திருநாளில் விரதம் இருந்து, சூரசம்ஹாரம் நடைபெறும் நாளன்று, நான் என்ற அகந்தையை விட்டொழித்து, அழகன் முருகப்பெருமானிடம் இருந்து, அழகு, அன்பு, பிறப்பு, சுத்தம், நன்மை, வெற்றி என்ற சகலத்தையும் வேண்டிப்பெறுவோம். அதுமட்டுமில்லாமல், சிவனின் அம்சமான ஆறு முகத்தையும், அதாவது தத்புருஷம், அகோரம், வாமம், சத்யோஜாதம், ஈசானம். அதோமுகம் என ஆறு முகங்களையும் ஒரு சேர முருகப் பெருமான் வடிவில் வணங்கி அவன் அருள் பெறுவோம். 

ஜோதிடத்தில் சஷ்டி விரதம்

இந்து மதத்தின் பிரிவுகளில் உள்ள ஆறு பெரும் பிரிவு மதங்களில், மிகப் பழைமையானது கௌமாரம். கார்த்திகேயனை வணங்குபவர்கள் கௌமாரம் மதத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களே முருக பக்தர்கள்! ஒவ்வொரு மாதத்தின் ஆறாம் திதி சஷ்டி. இந்த சஷ்டியும் இந்தக் குமரனுக்கு உரிய நாள். எனவே கௌமாரர்கள் அனைவரும் சஷ்டி விரதம் இருப்பார்கள்.
ஜோதிடத்தில் அழகைக் குறிக்கும் கிரஹம் சுக்கிரன். குழந்தைப் பிறப்பிற்கு தேவையான காமத்திற்கும் சுக்கிலத்திற்கும் அதிபதி சுக்கிரன். சுக்கிரனைக் குறிக்கும் என் ஆறு. தெய்வங்களில் அழகன் எனப் போற்றப்படுபவர் முருகன். முருகனுக்கு ஆறு முகங்கள். முருகனை வளர்த்தவர்கள் ஆறு கார்த்திகை பெண்டீர். முருகனுக்குகந்த திதி ஆறாவது திதியான சஷ்டி. ஆண்மையைக் குறிக்கும் கடவுள் 
முருகப்பெருமான் ஆகும். "சுக்கிற்கு மிஞ்சின மருந்தும் இல்லை! சுப்ரமணியருக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை" எனும் சொலவடை உண்டு. மேலும் எண்ணியல் ஜோதிடத்தில் ஆறாம் எண்ணிற்கு அதிபதியாக சுக்கிரனை கூறுவர்.

ஜாதகத்தில் செவ்வாய் என்பது ஆண்மையையும் வீரியத்தையும் குறிக்கும். சூரியன் ஆன்மா உற்பத்தியாவதை அதாவது கருவளர்ச்சிக்கு தேவையான சீதோஷ்ணத்தை தருவது சூரியன். சஷ்டி திதியில் பிறந்தவர்களுக்கு மேஷமும் சிம்மமும் மற்றும் அதன் அதிபதிகளான செவ்வாயும் சூரியனும் பலமிழந்துவிடுவார்கள் என்கிறது பாரம்பரிய ஜோதிடம்.

மேஷம் கால புருஷனுக்கு லக்ன பாவம். செவ்வாயின் மூல த்ரிகோண வீடு. சூரியன் உச்சமாகுமிடம். ஆண்மையைக் குதிரையோடு ஒப்பிடுவது வழக்கம். குதிரையைக் குறிக்கும் அஸ்வினி நக்ஷத்திரம் முதல் நக்ஷத்திரமாக அமைந்திருப்பதும் மேஷத்தில்தான். ஆக ஆண்மைக்கும் செவ்வாய்க்கும் உள்ள தொடர்பு இப்போது புரிந்திருக்கும். அடுத்தது சிம்ம ராசி. சிம்ம ராசி கால புருஷனுக்கு ஐந்தாமிடம் எனப்படும் புத்திரஸ்தானம் ஆகும். அதற்குரிய கிரகம் சூரியன் ஆகும். இந்த இரண்டு ராசிகளும் கிரஹங்களும் நன்றாக இருந்தால் தான் ஒருவர் தகப்பன் ஆகும் பாக்கியம் ஏற்படும்.

விசாகம் குழந்தை வேலப்பராகிய முருகனுக்கும் உகந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கந்த சஷ்டியின் ஆறாம் நாள் முருகனுக்கு உகந்த செவ்வாய் கிழமையுடன் கூடிய சஷ்டி திதியில் அமைந்திருப்பதும் ஆத்மகாரகனாகிய சூரியனின் நக்ஷத்திரமான உத்திராடத்தில் அமைந்திருப்பதும் கோசாரக குருபகவான் செவ்வாயின் வீட்டில் நின்று காலபுருஷ குடும்ப ஸ்தானம் மற்றும் சுக்கிரனின் வீடாகிய ரிஷபத்தை பார்ப்பதும் இந்த ஆண்டு கந்த சஷ்டி விரதம் இருப்பவர்களுக்குக் குழந்தை பாக்கியம் நிச்சயம் என்பதை உணரமுடிகிறது.

ஒருவரது ஜாதகத்தில் லக்னத்திற்கு ஆறாமிடம் ருண ரோஹ சத்ரு ஸ்தானம் எனப்படும். இந்த ஆறாமிடம் மூலம் குறிப்பிட்ட ஜாதகரின் எதிரி எப்படிப்பட்டவர், எத்தகைய நோய்களுக்கு ஆட்படுவார், ஜாதகர் என்ன காரணங்களுக்காக கடன் வாங்குவார் என்பதை அறியலாம். நோய் தீர்ப்பதில் செவ்வாயும் அதன் அதிபதியான முருக பெருமானும் முக்கியமானவர்கள் ஆகும். முருகனுக்கு செவ்வாய் கிழமைகளில் விரதம் இருப்பது, சஷ்டியில் விரதமிருப்பது மற்றும் கிருத்திகை நக்ஷத்திர நாளில் விரதமிருப்பது ஆகியவை குறிப்பிடத்தக்கவை ஆகும்.

கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் பாம்பன் குமர குருதாஸ ஸ்வாமிகள் அருளிய “ஓம் ஷண்முக பதயே நமோ நம” எனத் தொடங்கும் குமாரஸ்தவ பாடலைப் படித்தால் நாள் பட்ட தீராத வியாதியும் தீரும். நோய் என்பது தீர்க்கக்கூடியது. ஆனால் பிணி என்பது. தீர்க்க முடியாதது. நோயை மருத்துவர்கள் குணப்படுத்திவிடுவார்கள். பிணியைக் குணப்படுத்துவது சிரமம். பிணி இறையருளால் தான் குணப்படும். வினையும் அப்படித்தான் இறையருளால்தான் தீரும் இங்கே வினை என்பது இந்தப் பிறவியில் நாம் அனுபவிக்கும் துன்பங்களுக்குக் காரணமாக நம்பப்படும் முற்பிறவியில் நாம் செய்த செயல் ஆறாமிடத்தில் அமர்ந்துள்ள கிரகங்கள் மூலமும், ஆறாமிடத்தைப் பார்வை செய்யும் கிரகங்கள் மூலமும், அந்த ஜாதகர் எத்தகைய நோய்களுக்கு ஆட்படுவார் என்பதையும் அறிய இயலும். இந்த நோய்களின் தாக்குதல் எப்போது பலமாக தன் இயல்பைக் காட்டும், எந்த கால கட்டங்களில் கட்டுப்பாட்டில் இருக்கும் என்பதையும் அறியலாம்.
ஜெனன ஜாதகத்திற்கு ஆறாம்வீட்டிற்கு பன்னிரண்டாம் பாவத்தையும் அதன் கிரஹங்களையும் கொண்டு நோய் தீர்க்கும் அமைப்பை அறியலாம். அதேபோல காலபுருஷனுக்கு ஆறாம் வீடான கன்னி ராசிக்கு பன்னிரண்டாம் பாவமான சிம்மம் மற்றும் அதன் திரிகோண ராசிகளான மேஷம், தனுசு ஆகிய ராசிகளும் அதன் அதிபதிளும் நோய் தீர்க்கும் அமைப்பைக் கூறுவார்கள்.

இந்த கந்த ஷஷ்டி விரத முதல் நாளில் வேலைப் பெற விரும்புவோர்கள் மற்றும் சத்ரு, கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள் கந்த ஷஷ்டி கவசமும், குழந்தை பாக்கியம் பெறவிரும்புபவர்கள் திருப்புகழும், கடும் நோயினால் அவதியுறுபவர்கள் ஷண்முக கவசம் மற்றும் திருமுருகாற்றுப்படையும், திருமண பாக்கியம் வேண்டுபவர்கள் திருப்புகழில் குறிப்பிட்ட பாடல்களும் சுப்ரமணிய புஜங்கமும் பாடி முருகனை வணங்கி வர அவரவர் பிரார்த்தனைகளை அந்த முருகப்பெருமான் தட்டாமல் நிறைவேற்றுவார்.

மருத்துவர்களால் குணப்படுத்த முடியாத வியாதிகள் நீண்ட நாட்களாக இழுவையில் இருக்கும் வழக்குகள், தொடர்ந்து தொல்லை தரும் சத்ருகள் ஆகியவற்றால் ஏற்படும் தொல்லைகள் இந்த ஆறு நாட்களில் சத்ரு சம்ஹார அர்ச்சனை செய்து வணங்கி வரத் தொல்லைகள் முற்றும் நீங்கி நிம்மதியைத் தரும் என்பது நிதர்சனம்.

திருமணம் இல்லாமல் ஒருவருக்கு வாழ்க்கை முழுமையடையாது என்பது போல, குழந்தை இல்லாமல் திருமண வாழ்க்கை நிறைவு பெறாது. வாழ்க்கையில் நாம் எதற்கு ஓடிக்கொண்டு இருக்கிறோம் / எதற்கு சம்பாதிக்கிறோம் என்பதற்கு அர்த்தம் கொடுப்பது குழந்தை தான். முன்ஜென்ம வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ஆன்றோர் வாக்கு. அந்த ஆறுமுகனுக்கு உரிய விரதங்களுள் மிக முக்கியமானதாகச் சொல்லப்படுவது, "கந்தசஷ்டி விரதம்". குறிப்பாக குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் கந்தசஷ்டி விரதம் இருந்தால் முருகனே குழந்தையாக அவதாரம் செய்வார் என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை.இதைத் தான் சஷ்டியில் இருந்தால் அகப்பை(கருப்பை)யில் வரும் என்ற பழமொழியாக கூறுவார்கள்.

முசுகுந்தச் சக்கரவர்த்தி, வசிஷ்ட முனிவரிடம் இவ்விரதம் பற்றிக் கேட்டறிந்து கடைப்பிடித்து பெரும்பயன் அடைந்தாராம். முனிவர்கள், தேவர்கள் உள்ளிட்ட பலரும் கடைப்பிடித்த விரதம் இது. வேண்டுவன யாவும் தரும் இந்த விரதத்தை எப்படிக் கடைபிடிப்பது? கந்தசஷ்டி தினம் முதல் சூரசம்ஹாரம் வரை மிக எளிமையான சைவ உணவினை, குறைந்த அளவில் உட்கொண்டு எப்போதும் முருகனின் சிந்தனையிலேயே விரதம் இருங்கள். அதிகாலையில் எழுந்து நீராடி பூஜை அறையில் திருவிளக்கேற்றி கந்தசஷ்டி கவசம், ஸ்கந்தகுராகவசம், கந்தர் அலங்காரம் படிக்கலாம்.தெரியாதவர்கள் முருகன் பெயர் சொல்லி கும்பிடலாம். 

சஷ்டி என்பது வளர்பிறை அல்லது தேய்பிறையின் ஆறாம் நாள். சஷடி தேவி என்பவள் பச்சிளங்குழந்தைகளைப் பாதுகாத்து வளர்க்கும் கருணை நாயகி இவள். இந்தத் தேவியைக் குறித்த வரலாறு தேவி பாகவதம் ஒன்பதாம் ஸ்காந்தத்தில் வருகிறது. இவளுக்கு ஸம்பத் ஸ்வரூபிணி என்றும் பெயர். சுவாயம்ப மனு என்பவனின் மகன் பிரியவிரதன். இவனுக்கு இல்லற வாழ்க்கையில் விருப்பம் இல்லாமலே இருந்தது. எனினும், பிரம்மாவின் வற்புறுத்தலின்படி மாலினி என்பவளை மணந்துகொண்டான்.

திருமணமாகி பல ஆண்டு ஆகியும் பிள்ளைப்பேறு இல்லாத காரணத்தால், காச்யபரைக் கொண்டு புத்திர காமேஷ்டி யாகத்தைச் செய்தான் பிரியவிரதன், இதனால் மாலினி, பன்னிரண்டாம் ஆண்டு பிள்ளையைப் பெற்றாள். ஆனால் குறைப் பிரசவமாக இருந்ததால், குழந்தை உருத்தெரியாமலும் உயிரற்றும் இருந்தது. மனம் உடைந்த பிரியவிரதன் குழந்தையை அடக்கம் செய்துவிட்டு, தானும் இறக்கத் துணிந்தான். அப்போது தெய்வாதீனமாக ஒரு பெண் தோன்றினாள். உயிரற்ற - உருவமற்ற அந்தக் குழந்தையை அவள் தொடவும், குழந்தை அழகிய உருவத்துடன் உயிர்பெற்று அழத் தொடங்கியது.

ஸ்கந்த சஷ்டி ஆரம்பம் முதல் இறுதி வரை விடியற்காலையில் பிரம்ம முகூர்த்த வேளையில் 4.30 மணியில் இருந்து 6.00 மணிக்குள் நீராட வேண்டும். பகலில் பழம் பால் மட்டுமே உண்ணவேண்டும். உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் எளிய உணவாக காலையில் சிற்றுண்டி அருந்தலாம். முருகருக்குரிய மந்திரங்களை பாடல்களை நாள் முழுவதும் பாராயணம் செய்து வருதல் நலம். ஓம் சரவணபவாய நம என்று ஜபித்து வரலாம். திருப்புகழ்,ஸ்கந்த சஷ்டி கவசம், போன்ற கவசங்களை பாராயணம் செய்யலாம். அருகில் உள்ள முருகர் ஆலயங்களுக்கு சென்று விளக்கேற்றி அர்ச்சனை வழிபாடு செய்து வருதல் வேண்டும். மாலையில் மீண்டும் குளித்து விட்டு வீட்டில் பூஜையறையில் முருகரை வழிபட வேண்டும். முடிந்தால் கோயிலில் வழிபாடு செய்யலாம். 
இதன் பின்னர் 8 மணிக்கு மேல் பச்சரிசி சாதம் சாப்பிட்டு விரதம் முடிக்க வேண்டும். இவ்வாறு ஆறுநாட்கள்செய்து ஆறாவது நாளில் சூரசம்ஹாரம் எனும் நிகழ்ச்சி முருகர் கோயிலில் தரிசனம் செய்து விரதம் முடிக்க வேண்டும். இந்த விரதத்தை தொடர்ந்து அனுஷ்டித்து வர புத்திர தோஷம் விலகி புத்திர பாக்கியம் கிடைக்கும் குழந்தை முருகர் அருளால் பிறக்கும். ஒவ்வொரு மாதமும் வளர்பிறை சஷ்டி ஒருநாள் மட்டும் அனுஷ்டிப்பது சஷ்டி விரதம். இதையும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் அனுஷ்டிக்க குழந்தை பிறக்கும்.

வேலவன் அருளால் மணப்பேறு, மகப்பேறு, நல்வாழ்வு, ஆரோக்யம், ஆயுள், புகழ், செல்வம் என்று நீங்கள் வேண்டிய யாவும் நிச்சயம் கைகூடும். நிம்மதி, சந்தோஷம், உற்சாகம் வாழ்வில் நிறையும். நம் பிறவிப்பிணி நீங்கி முருகனருள் எப்போதும் துணை நிற்கும்.

எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ஆன்றோர் வாக்கு. அந்த ஆறுமுகனுக்கு உரிய விரதங்களுள் மிக முக்கியமானதாகச் சொல்லப்படுவது, கந்தசஷ்டி விரதம்.

சரவணபவ - என்பது ஷடாக்ஷர மஹாமந்திரம் (6 எழுத்துகள்). 

இதன் மகிமை என்ன என்று பார்ப்போமா?
ச - லக்ஷ்மிகடாக்ஷம்
ர - ஸரஸ்வதி கடாக்ஷம்
வ - போகம் - மோக்ஷம்
ண - சத்ருஜயம்
ப - ம்ருத்யுஜயம்
வ - நோயற்ற வாழ்வு ஆக,
பிரணவ ஷடாக்ஷரம் கூறி இவ்வாறு பயன்களும் பெறலாம். ஆறுபடை வீடுகளும் ஆறு குண்டலினிகளாக விளங்குகின்றன.

திருப்பரங்குன்றம் - மூலாதாரம்
திருச்செந்தூர் - ஸ்வாதிஷ்டானம்
பழனி - மணிபூரகம்
ஸ்வாமிமலை - அனாஹதம்
திருத்தணிகை - விசுத்தி
பழமுதிர்சோலை - ஆக்ஞை.
ஆக ஆறுமுகனான திருமுருகனை, விசாக, கார்த்திகை, பௌர்ணமி நாட்களில் ஸ்கந்த ஷஷ்டியில் துதித்து வழிபட்டு குஹானந்த அனுபூதி வாரிதியில் மூழ்குவோம்.

பன்னீர் இலை விபூதி பிரசாதம்

இலை விபூதி பிரசாதம் தீராத பல நோய்களை தீர்க்கும் அருமருந்தாக விளங்கி வருகிறது. ஆதி சங்கரர் இந்த இலை விபூதியை உண்டு காச நோயை நீக்கிக்கொண்டதாகவும், அதனாலேயே அவர் ஸ்ரீசுப்பிரமணிய புஜங்கம் பாடியதாகவும் கூறப்படுகிறது.

முருகன் ஒருபக்கத்திற்கு ஆறு கரங்கள் என 12 கரங்கள் கொண்டவர். அது போலவே பன்னீர் மரத்தின் இலைகளிலும் ஒரு பக்கத்திற்கு ஆறு நரம்புகள் என ஈராறு பனிரெண்டு நரம்புகள் இருக்கும். பன்னீருக்கரத்தான் முருகனை சென்று வணங்கும் பக்தர்களுக்கு அவன் தனது பன்னீரு திருக்கரங்களாலேயே இங்கு விபூதி, சந்தன பிரசாதத்தை வழங்குவதாக ஐதீகமாகும். அதனால் இது பன்னீர் செல்வம் என்று பக்தர்களால் சொல்லப்படுகிறது.

அபிநபகுப்தர் என்ற சித்தர் ஒருவர் கெடுதல் செய்யும் நோக்கத்தில் ஆதிசங்கரருக்கு செய்வினை, ஏவல், பில்லி, சூனியம் செய்தார். இதனால் சூலைநோய் உள்பட பல்வேறு நோய்களுக்கு ஆதிசங்கரர் உட்பட்டார். உடல் நலம் பாதிக்கப்பட்ட ஆதிசங்கரர் இறைவனை நாடி மனமுருக வேண்டினார். இருந்தும் அவருக்கு நோய் குணமாகவில்லை. அவர் ஒவ்வொரு கோவிலாக சென்று இறுதியாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிக்கு வந்து மனமுருக வேண்டினார்.

அப்போது ஆதிசங்கரர் கையில் பன்னீரு இலை விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது. பிரசாதத்தை உடலில் பூசிக்கொண்டதோடு, அதை உட்கொள்ளவும் செய்தார். சில நாட்களில் அவரை தொற்றி இருந்த நோய்கள் அனைத்தும் முற்றிலும் குணமடைந்தது.
அதன் பின்னர் ஆதிசங்கரர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி மீது அதிக பற்று கொண்டு மனமுருகி 32 பாடல்கள் கொண்ட சுப்பிரமணிய புஜங்க ஸ்லோகம் பாடினார். அந்த 32 பாடல்களும் கோவிலின் சிறப்பு, சுவாமியின் மேன்மை போன்றவைக் குறித்து இருந்தது. அதில் 25வது பாடலில் இலை விபூதியின் மகிமை பற்றி பெருமை படப் பாடியுள்ளார்.
சுப்பிரமண்யா! நின் இலை விபூதிகளை கண்டால் கால் கை வலிப்பு, காசம், கயம், குட்டம் முதலிய நோய்கள் நீங்கும். பூதம், பிசாசு, தீவினை யாவும் விட்டு விடும் என்று சுப்பிரம்மண்ய புஜங்கத்தில் ஆதிசங்கரர் சொல்லி இருக்கிறார்.

திருசெந்தூர் செல்பவர்கள் பன்னீர் இலை விபூதி பிரசாதத்தை பெற்றுச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். திருச்செந்தூரில் முருகன் சன்னதியில் விபூதி, சந்தனப் பிரசாதத்தை பக்தர்களுக்குத் தரும்போது, பன்னீர் இலையில் தான் தருவார்கள். பன்னீர் இலை என்பதற்கு அர்த்தம். இலையில் மொத்தம் 12 நரம்புகள் இருக்கும். முருக பெருமான் தனது 12 கரங்களால் இந்த பிரசாதத்தை வழங்கியதால் இந்த பன்னீர் இலையில் முருக பெருமானின் பன்னிரு கைகள் போன்று இருக்கும். பன்னிரு இலை என்ற பெயர் காலப்போக்கில் மருவி பன்னீர் இலை என்று கூறப்படுகிறது.

முருக பெருமானை பூஜித்த தேவர்கள் அனைவரும் இந்த பன்னீர் மரங்களாக இருப்பதாகவும், அதில் இருந்து பெறப்படும் பன்னீர் இலைகள் பிரசாதமாக வழங்கப்படுவதால் அதற்கு தனி மகத்துவம் இருப்பதாகவும் கருதப்படுகிறது.இந்த பன்னீர் இலை விபூதி பிரசாதம் தினமும் காலை விஸ்வரூப தரிசனத்தின் போது சுவாமி பாதத்தில் வைத்து பூஜித்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. வேறு எந்த கோவிலிலும் இல்லாத சிறப்பாக திருச்செந்தூர் கோவிலில் இந்த இலை விபூதி பிரசாதம் வழங்கப்படுகிறது.இந்த இலையை நேராக வைத்து பார்த்தால் முருக பெருமானின் வேல் போன்று காட்சி அளிக்கும்.

பன்னீர் இலையில் உள்ள பூவில் உள்ள சாந்த குண சக்தி நிறைவாக உள்ளது. அது நமது உடலுக்குச் சில நன்மைகளைத் தருகிறது இறைவனுடைய பூஜைக்குறியது துளசி வில்வ இலை, வன்னி இலை. அதே போல் இறைவனுடைய பூஜைக்குரியதாகப் பன்னீர் இலை உள்ளது.

திருநீற்றை பன்னீர் இலையில் பத்திரமாக வைத்துக் கொள்வது செல்வத்தைச் சேமிப்பது போலாகும். பன்னீர் இலை விபூதியைப் பக்தர்கள் இல்லங்களுக்கு எடுத்துச் சென்று பூஜை அறைகளில் பத்திரப்படுத்தி வியாதிகள் வந்தால் செந்தில் முருகனை வேண்டி அணிந்து கொள்கிறார்கள். ஆடு, மாடுகள் நோய் கண்டால் நோய் நீங்க வழிபட்டுப் பன்னீர் இலை விபூதியினை மருந்தாகக் கொடுத்து நோய் நீங்கியதும் திருச்செந்தூர் முருகனுக்குக் காணிக்கையாக ஆடு மாடுகளைச் செலுத்துகிறார்கள். பன்னீர் இலையும் நற்சந்தனமும் பக்தர்களுக்கு வழங்கபபடுகிறது.
வேறு எந்த கோவிலிலும் இல்லாத தனி சிறப்பாக பன்னீர் இலையில் விபூதியை வைத்து வழங்கப்படுகிறது. இந்த பன்னீர் இலை விபூதி பிரசாதம், தினமும் காலை விஸ்வரூப தரிசனத்தின் போது சுவாமி பாதத்தில் வைத்து பூஜித்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 

வேறு எந்த கோவிலிலும் இல்லாத சிறப்பாக திருச்செந்தூர் கோவிலில் இந்த இலை விபூதி பிரசாதம் வழங்கப்படுகிறது. அப்படி என்ன சிறப்பு பன்னீர் இலை விபூதிக்கு?

திருச்செந்தூரில் சூரபத்மாதியர்களை வதம் செய்து விட்டு,வெற்றி வீரனாக, தேவ சேனாதிபதியாக  நின்ற முருகப் பெருமானின் பெருமைகளை துதித்த வேதங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து செந்திலாண்டவரின் மகிமையை விளக்கும் பன்னீர் மரங்களாக தோன்றின.

எனவே இவற்றின் இலைகளும் வேத மந்திர சக்தியை உடையவை என்கிறது புராணம். பன்னீர் இலையில் பத்திரப்படுத்தப்படும் விபூதியிலும் இந்த வேத மந்திர சக்திகள் நிறைந்து இருக்கிறது என்பது நம்பிக்கை. பன்னீர் இலையில் காணப்படும் 12 நரம்புகள் முருகனது பன்னிரு கரங்களை நினைவூட்டுவனவாக அமைந்துள்ளன. பன்னிரெண்டு கரத்தான் முருகனை சென்று வணங்கும் பக்தர்களுக்கு அவன் தனது பன்னிரு திருக்கரங்களாலேயே இங்கு விபூதி, சந்தன பிரசாதத்தை வழங்குவதாக ஐதீகம்.

பன்னீர் இலை விபூதி மகிமை

ஆதி சங்கரருடன் ஏற்பட்ட வாதங்களில் தோற்ற அபிநவகுப்தர் என்பவர், அபிசார வேள்வி செய்து சங்கரருக்கு உடலை வருத்தும் நோய் உண்டாகச் செய்து விட்டார். வட கர்நாடகாவிலுள்ள கோகர்ணத் திருத்தலத்தில் தங்கி வழிபாடு செய்து வந்த சங்கரரின் கனவில் இறைவன் தோன்றி, “என் குமாரன் ஷண்முகன் குடியிருக்கும் புண்ணியத் தலமான ஜெயந்திபுரம் எனும் திருச்செந்தூர் சென்று அவனைத் தரிசித்தால் உன் நோய் முற்றிலுமாக நீங்கப் பெறுவாய்" என்று கூறினார். கோகர்ணேஸ்வரர் ஆணைப்படி, திருசெந்தூர் வந்தடைந்த, ஆதிசங்கரர், இறைவன் சன்னதியில் மனமுருகி நின்றபோது, அவருக்கு இறை தரிசனம் கிட்டியது.

இலை விபூதியைப் அணிந்து கொண்ட சங்கரருக்கு வெகு விரைவில் நோய் குணமாயிற்று.
தெய்வ அவதாரமாகக் கருதப்படும் ஆதிசங்கரர் நினைத்திருந்தால், தானே நோயை விரட்டி இருக்க முடியாதா?என்ற கேள்வி நம் மனதில் எழக் கூடும். மக்களுக்கு இலை விபூதியின் பெருமையை வெளிப்படுத்த இறைவன் நிகழ்த்திய திருவிளையாடல் தான் இந்த சம்பவம்.

அதன் பின்னர் ஆதிசங்கரர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி மீது மனமுருகி 32 பாடல்கள் கொண்ட சுப்பிரமணிய புஜங்க ஸ்லோகம் பாடினார்.அதில் 25வது பாடலில் இலை விபூதியின் மகிமை பற்றி நெக்குருகி பாடியுள்ளார்.
 சுப்பிரமண்யா! நின் இலை விபூதிகளை கண்டால் கால் கை வலிப்பு, காசம், கயம், குட்டம் முதலிய நோய்கள் நீங்கும். பூதம், பிசாசு, தீவினை யாவும் விட்டு விடும் என்று சுப்பிரம்மண்ய புஜங்கத்தில் ஆதிசங்கரர்  இலை விபூதியின் பெருமையை சொல்லி இருக்கிறார்.
இன்றளவும் விபூதி இலை தீராத பல நோய்களை தீர்க்கும் அருமருந்தாக விளங்கி வருகிறது. திருசெந்தூர் செல்பவர்கள் இதை தவறாது பெற்றுச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

பன்னீர் இலை விபூதியை பக்தர்கள் தங்கள் இல்லங்களுக்கு எடுத்துச் சென்று அதை பொக்கிஷமாக  பூஜை அறைகளில் பத்திரப்படுத்தி,வியாதிகள் வந்தால் செந்தில் முருகனை வேண்டி அணிந்துகொண்டு பயனடைகிறார்கள்.

நாமும் சரவண பவாய நமஹ என்று ஓதி இலை விபூதியைத் தரித்து கொள்ளவேன்டும்.
தேதியூர் சாஸ்த்ரிகள், புராணத்திலிருந்து எடுத்து இன்னொரு கதையும் சொல்லியிருக்கார். விஷ்வாமித்ர மஹரிஷி ராமச்சந்திர மூர்த்தியைக் கூட்டிண்டுகாட்டுக்குப் போகும் போது தாடகா வதம் பண்ணுன்னு சொல்லி காரயிதாவா இருந்தாராம். அதாவது ஒரு கார்யம் பண்ணுன்னு தூண்டி விடறது. ஒரு ஸ்தீரி வதம் பண்றதுக்கு தூண்டி விட்டதனால அவருக்கு உடம்புக்கு வந்துடுத்து. அவர் எத்தனையோ முயற்சி பண்ணினார். அஸ்வினி தேவர்களாலக் கூட அவரை குணப் படுத்த முடியல. அப்போ அவரோட கனவுல ராமரே வந்து ‘நீங்க ஸ்ரீஜயந்திபுரம் என்கிற திருச்செந்தூருக்குப் போய், முருகப் பெருமானுடைய விபூதியை வாங்கி இட்டுக்கோங்கோ’ அப்படின்னு சொன்னார். அதே மாதிரி விஷ்வாமித்ர மஹரிஷி வந்து அந்த பன்னீர் இலையில் விபூதியை வாங்கி இட்டுண்ட உடனே அவருக்கு எல்லா வியாதிகளும் போய்டுத்து அப்படின்னு ஒரு புராணக் கதை சொல்லியிருக்கார்.
நமக்கு சென்னைக்குப் பக்கத்தில திருத்தணி இருக்கு. திருத்தணி முருகரையும் பவரோக வைத்யநாத பெருமாள் ன்னு சொல்லுவா. (‘நிலையாத சமுத்திரமான’ எனத் தொடங்கும் திருப்புகழ்). வியாதிகள் போகணும்ன்னு திருத்தணி முருகன் மேல அருணகிரி நாதருடைய ஒரு திருப்புகழ் பாடல் இருக்கு. அதைப் படிச்சா எல்லா வியாதிகளும் நிவர்த்தி ஆகும் அப்படின்னு நம்பிக்கை. அந்தத் திருப்புகழைப் படிக்கிறேன்.

இருமலு ரோக முயலகன் வாத மெரிகுண நாசி …… விடமே
நீரிழிவு விடாத தலைவலி சோகை யெழுகள மாலை …… யிவையோடே
பெருவயிறீளை யெரிகுலை சூலை பெருவலி வேறு …… முளநோய்கள்
பிறவிகள் தோறு மெனை நலியாத படியுன தாள்கள் …… அருள்வாயே

மூலவர் தரிசனம் செய்த பின்னர் மறக்காமல் கோவில் யானைக்கு கரும்பு வாங்கி தாருங்கள்.
குருவுக்கு உண்டான அருமையான பரிகாரம் இது..!!
சுய ஜாதகத்தில் குரு பகவான் , நீசம் , பகை, மறைவு ஸ்தானங்களில் இருப்பவர்கள் இங்கு வந்து முருகனை வழிபட கண்டிப்பாக குருபகவான் அருள்கிட்டும்.

உருவாய் அருவாய் உளதாய் இலதாய் 
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் 
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்.. 

மார்க்கசகாயசுவாமி திருக்கோயில், மூவலூர் மயிலாடுதுறை...

அருள்மிகு மார்க்கசகாயசுவாமி திருக்கோயில், 
மூவலூர்- 609806, மயிலாடுதுறை மாவட்டம்.   
*இறைவன்: மார்க்கசகாயேசுவரர்.  

*அம்பாள்: செளந்தரநாயகி, மங்களாம்பிகை    

*தீர்த்தம்: சந்திர புஷ்கரணி, துர்கா புஷ்கரணி, உபமன்யு முனிவர் வழிபட்ட ‘உபமன்யு கூபம்’ எனும் கிணறு, காவிரி நதியில் அமைந்துள்ள பிப்பிலர் தீர்த்தகட்டம் என தீர்த்தங்கள் நிறைந்த தலமாக மூவலூர் திகழ்கின்றது.  

*தலமரம்: புன்னை             

*வழிபட்டோர்: அன்னை பார்வதி, திருமால், பிரம்மா, சந்திரன். மகா சிவராத்திரியின் நான்காம் காலத்தில் நவ நாகங்களும், ரத சப்தமியில் சப்தமாதர்களும் வழிபட்டுப் பேறுபெற்றனர். இது தவிர, கர்மசேனகியர் என்ற மன்னன், பிப்பிலர் என்ற உபமன்யு முனிவர் என பலரும் வழிபட்டு பேறு பெற்றுள்ளனர். 

*இது ஓர் வைப்புத்தலமாகும். 
அப்பர் அருளிய தேவாரப்பாடலில் இத்தலம் குறிப்பிடப்பட்டுள்ளது.                     

*தலபுராணம் : வித்யுன்மாலி, தாரகாட்சன், கமலாட்சனி என்ற மூன்று அசுரர்களும் முறையே பொன், வெள்ளி, இரும்புக் கோட்டைகளைக் கட்டி, தேவர்களையும் மக்களையும் வாட்டி வதைத்து வந்தனர். தன்னிடம் சரணாகதி அடைந்த தேவர்களையும் மக்களையும் காத்திட திருவுளம் கொண்ட ஈசன், பிரம்மா, திருமால், தேவர்கள் உள்ளிட் டோரைக் கொண்டு தேர் பூட்டி திருவதிகை நோக்கி புறப்பட்டார். அப்போது திருமால், பிரம்மா, ருத்திரன் மற்றும் தேவர்கள் உள்ளிட்டோர் ‘அசுரர்களை அழிக்கும் செயல் தங்கள் உதவியினாலேயே நடக்கிறது’ என்று எண்ணி கர்வம் கொண்டனர். இந்த கர்வத்தால் திருமால், பிரம்மா, தேவர்கள் அனைவருக்கும் சாபம் ஏற்பட்டது.
மனம் வருந்திய திருமால், பிரம்மா மற்றும் தேவர்கள் இறைவனிடம் சாப விமோசனம் வேண்டினர். அவரது ஆலோசனைப்படி காவிரி தென்கரையில் உள்ள புன்னாகவனேசுவரரைத் தேடி வந்தனர். இறைவனின் கருணையால் அங்கு சிவலிங்கம் வெளிப்பட்டது. அவரை வணங்கி வழிபட்டு தோஷம் நீங்கினர் என தலபுராணம் கூறுகிறது.    

*ருத்ரன், திருமால், பிரம்மா மூவருக்கும் இத்தலத்து இறைவன் வழிகாட்டி, தன்னை வெளிப்படுத்தியதால், இறைவனுக்கு ‘வழிகாட்டிய வள்ளல்’ என்றும், ‘மார்க்க சகாயேசுவரர்’ என்றும் பெயர் வழங்கலானது. 

*மூவரும் வழிபட்ட தலம் என்பதால் இது 'மூவரூர்' என அழைக்கப்பட்டு இதுவே மருவி 'மூவலூர்' என்றாகி இருக்கிறது. 

*இத்தலத்து இறைவன் மார்க்க சகாயேசுவரர் அழகிய  ஒளிவீசும் வடிவில் அருள் வழங்குகின்றார். 

*இந்த ஆலயம் இதய நோய்களுக்கு சிறந்த பரிகாரத் தலமாக திகழ்கின்றது. இதய நோய் உள்ளவர்கள் திங்கட்கிழமைகளில் 11 நெய் தீபம் ஏற்றி, சுவாமிக்கு அர்ச்சனை செய்தும், பாலாபிஷேகம் செய்தும், அபிஷேக பாலை அருந்தியும் வந்தால் நோய் குணமாவதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.                     

*இரண்டு அம்மன்கள் : இவ்வாலயத்தில் செளந்திர நாயகியுடன், மங்களாம்பிகை என்ற அம்மனுக்கும் தெற்கு முகமாய் தனி சன்னதி அமைந்துள்ளன.  அமாவாசை தோறும் செளந்திரநாயகிக்கு சிறப்பு அபிஷேகமும், லலிதா திரிசடையும், சிறப்பு ஆராதனையும் செய்யப்படுகிறது               

*இது மகிஷாசுரனை வதம் செய்த துர்க்கையின் தோஷம் நீக்கிய தலம்.        

மகிஷாசுரன் தன் தவ வலிமை யால்,  ‘ஆண்களால் தன் உயிருக்கு எந்த ஆபத்தும் வரக் கூடாது’ என்ற வரத்தை சிவ பெருமானிடம் கேட்டுப் பெற்றான்.   அவன் தேவர்களுக்கும், மக்களுக்கும் தீராத துயரத்தைத் தந்து வந்தான். பாதிக்கப்பட்ட அனைவரும் இறைவனிடம் முறையிட்டனர். அசுரனை வதம் செய்வது பெண் சக்தியால் மட்டுமே இயலும் என்பதால், அன்னை பார்வதியை நாடுமாறு சிவபெருமான் அறிவுறுத்தினார். அதன்படி தேவர்கள் அனைவரும், அன்னையிடம் சென்று முறையிட்டனர். அதற்கு செவி மடுத்த அன்னை துர்க்கையாக வடிவம் பூண்டு, அசுரனை வதம் செய்து அழித்தாள். பிறகு தனது கோர முகம் அழகிய முகமாக மாற, மூவலூரில் தீர்த்தம் உண்டாக்கி, இறைவனை வழிபட்டு வந்தாள். அதன் பயனால், அன்னை அழகிய திருவுருவம் பெற்றாள். மீண்டும் இறைவனை மணம்புரிய தவம் இயற்றினாள். அதன்படியே இறைவனை மணந்தாள் என தலபுராணம் கூறுகிறது. 
*இச்சம்பவம் பங்குனி மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் நிகழ்ந்தது. இந்த ஐதீகம் இன்றும் இந்த ஆலயத்தில் விழாவாக நடைபெறுகிறது.    

*ஆதியில் இத்தலம் புன்னை மரங்கள் நிறைந்து காணப்பட்டதால், இது புன்னாகவன ஷேத்திரம் என வழங்கப்பட்டது. இறைவன் ‘புன்னாகவனேசுவரர்’ என்று அழைக்கப்பட்டார்.

*கல்வெட்டுகள் : இத்தலத்தில் எட்டு கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன. 

*மயிலாடுதுறை - கும்பகோணம் வழித்தடத்தில் மயிலாடுதுறைக்கு மேற்கே 5 கி.மீ தூரத்தில், மயிலாடுதுறை ஜங்சன் இருக்கிறது. அங்கிருந்து 1கி.மீ. தொலைவில், மூவலூர் அமைந்துள்ளது. 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்... 

Saturday, November 2, 2024

சித்தர் தன்வந்திரி ஜீவசமாதி வைத்தீஸ்வரன் கோவில்...

சித்தர் தன்வந்திரி ஜீவசமாதி


வைத்தீஸ்வரன் கோவிலில் பலகாலம் தவம் புரிந்து அங்கேயே ஜீவ சமாதி அடைந்தவர் தன்வந்திரி சித்தர் ஆவார்.

வைத்தீஸ்வரன் கோவிலில் பலகாலம் தவம் புரிந்து அங்கேயே ஜீவ சமாதி அடைந்தவர் தன்வந்திரி சித்தர் ஆவார்.

இன்றும் அக்கோவிலை சுற்றி சித்தரின் ஆன்மா உலாவிக் கொண்டிருப்பதாக அங்குள்ள மக்கள் நம்பிக் கொண்டிருக்கின்றனர்.

இவரின் அருளைப் பெறுவதற்கு இவருடைய இந்த மந்திரத்தை அமைதியான ஒரு இடத்தில் அமர்ந்து 108 முறை உச்சரிக்க வேண்டும்

ஒரு சிறு குண்டூசி சத்தம் கூட கேட்காத ஒரு இடத்தில் அமைதியாக தியான நிலையில் அமர வேண்டும். தியானத்திற்கு உரிய ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்து கொள்ள வேண்டும்.

தன்வந்திரி சித்தர் உடைய புகைப்படத்தை வைத்து, அவருக்கு முன்னால் அகல் தீபம் ஒன்றை வைத்து, அதனுள் எண்ணெய் ஊற்றி, பஞ்சு திரி இட்டு தீபம் ஏற்றிக்கொள்ள வேண்டும். பின்னர் தன்வந்திரி சித்தரை மனதில் நிறுத்திக் கொண்டு கீழ்வரும் இந்த மந்திரத்தை தொடர்ந்து 108 முறை உச்சரிக்க வேண்டும்.

தன்வந்திரி சித்தர் மந்திரம்: 

ஓம் தன்வந்திரி திருவடிகள் போற்றி!

நீங்கள் ஒவ்வொரு முறை இந்த மந்திரத்தை உச்சரிக்கும் பொழுதும் அதன் அதிர்வலைகள் சித்தருடைய அருளை உங்களுக்கு கிடைக்க செய்யும். தன்வந்திரி சித்தர் மட்டுமல்ல, எந்த ஒரு சித்தரின் அருள் பெறவும் இதுபோல நாம் அமைதியான முறையில் தியானம் செய்வது பலன் தரும்.

சித்தர்களை நினைத்து தியானம் செய்யும் பொழுது இயல்பாகவே மனம் ஒரு நிலை பட்டுவிடும். இது மிகப்பெரும் அதிசயங்களில் ஒன்றாக இருக்கிறது.

தன்வந்திரி சித்தர் புனர்பூசம் நட்சத்திரத்திற்கு உரியவர்.

சுமார் 800 ஆண்டுகள் 32 நாட்கள் வரை இவருடைய ஆயுட்காலம் உள்ளது. பலநூறு சீடர்களை பெற்ற இவர் நந்தியை குருவாகக் கொண்டவர்.

இந்திய விஞ்ஞானத்தின் தந்தையாக இருந்த தன்வந்திரி சித்தர் ஆயுர்வேத மருத்துவத்தை மக்களுக்கு அளித்தவர். கர்ம வினைகளின் படி ஒரு மனிதனுக்கு ஏற்படும் நோய் நொடிகள் தீர தன்வந்திரியை வழிபடலாம்.

இவர் எழுதிய பல்வேறு நூல்களில் தன்வந்திரி வைத்திய சிந்தாமணி 1200, தன்வந்திரி தண்டகம் 140, தன்வந்திரி நிகண்டு 300 ஆகிய நூல்கள் பிரசித்தி பெற்றவை. இவருடைய நூல்களில் இருக்கும் மருத்துவ குறிப்புகள் மனிதனுடைய ஆயுளை நீட்டிக்க வல்லது. இவருடைய அருளைப்பெருவோம்... 

சிதம்பரம் பால்வண்ண நாதர் திருக்கோவில் திருக்கழிப்பாலை..



 

சிவஸ்தலம் பெயர்

திருக்கழிப்பாலை (தற்போது சிவபுரி என்று வழங்குகிறது)
இறைவன் பெயர்

பால்வண்ண நாதர்

இறைவி பெயர்

வேதநாயகி

தேவாரப் பாடல்கள்

சம்பந்தர்

1. புனலாடியபுன்

2. வெந்தகுங்குலியப்

அப்பர்

1. வன பவள

2. நங்கையைப்பாகம்

3. நெய்தற் குருகுதன்

4. வண்ணமும்வடிவுஞ்

5. ஊனுடுத்தி

சுந்தரர்

1. செடியேன் தீவினை

எப்படிப் போவது

சிதம்பரத்தில் இருந்து 13 கி.மி. தென்கிழக்கே கொள்ளீடம் நதியின் வடகரையில் காரைமேடு என்ற இடத்தில் இருந்து வந்த இந்த சிவஸ்தலம் ஒரு சமயம் கொள்ளிடத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக சேதம் அடைந்த போது அருகில் உள்ள திருநெல்வாயல் என்ற மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலம் கோவிலின் அருகே ஒரு புதிய ஆலயத்தின் உள்ளே மூலவர் பால்வண்ண நாதர் பிரதிஷ்டை செய்யப்பட்டார். திருநெல்வாயல் சிவஸ்தலத்தில் இருந்து சுமார் 1 கி.மி. தொலைவில் திருக்கழிப்பாலை ஆலயம் உள்ளது.

ஆலய முகவரி
அருள்மிகு பால்வண்ண நாதர் திருக்கோவில்
திருக்கழிப்பாலை - சிவபுரி
சிவபுரி அஞ்சல்
வழி அண்ணாமலை நகர்
சிதம்பரம் வட்டம்
கடலூர் மாவட்டம்
PIN - 608002
தொடர்பு : 09842624580
ஆலய அர்ச்சகர் வீடு அருகில் உள்ளது. அவரை தொடர்பு கொண்டு எந்நேரமும் தரிசிக்கலாம்.

தல வரலாறு

 

இத்தலத்தில் சிவலிங்கப் பெருமான வெண்ணிறமுடையவராக விளங்கிறார். அதனாலேயே இறைவன் பால்வண்ண நாதேஸ்வரர் என்ற திருநாமத்துடன் இத்தலத்தில் அருட்காட்சி தருகிறார். வன்மீக முனிவர் இத்தலத்து இறைவனை வழிபட்டுள்ளார். கொள்ளிட நதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் தேவார காலத்து பழைய ஆலயம் அடித்துச் செல்லப்பட்டதால் அக்கோவிலில் இருந்த பால்வண்ணநாதேஸ்வரர் சிதம்பரத்திலிருந்து தென்கிழக்குத் திசையில் சுமார் 5 கி.மி. தொலைவிலுள்ள சிவபுரி என்றும் திருநெல்வாயல் என்றும் வழங்கும் மற்றொரு சிவஸ்தலத்தில் இருந்து தெற்கே தனி ஆலயத்தில் தனது மற்ற பரிவார தேவதைகளுடன் தற்போது எழுந்தருளியுள்ளார்.

சிறப்புகள்

 

இது இன்று சிவபுரி எனப்படுகிறது.

சோழர் காலக் கல்வெட்டுகள் நான்கு படி எடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாலயத்திலுள்ள காலபைரவர் இப்பகுதி மக்களால் மிகவும் பூஜிக்கப்பட்டு வருகிறார். 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்.. 

Friday, November 1, 2024

விரதங்களில் மிகச் சிறந்த விரதம் கந்த சஷ்டி விரதம் ஆகும்.

கந்தசஷ்டி விரதம் இன்று முதல் ஆரம்பம்
முருக பக்தர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் கந்த சஷ்டி விரதம்விரதங்களில் மிகச் சிறந்த விரதம் கந்த சஷ்டி விரதம் ஆகும்.இன்று தொடங்குகிறது...
கலியுக_வரதனும் கண்கண்ட தெய்வமுமான கந்தனுக்குரிய விரதங்களில் மிகச் சிறந்த விரதம் கந்த சஷ்டி விரதம் ஆகும். மாதந்தோறும் வரும் வளர்பிறை, தேய்பிறை பட்சங்களில் இரண்டு சஷ்டி திதிகள் வந்தாலும் ஐப்பசி மாத வளர்பிறையில் வரும் சஷ்டியே கந்த சஷ்டி என போற்றப்படுகிறது. இதனை மகா சஷ்டி என்றும் குறிப்பிடுவதுண்டு.
#ஐப்பசி_மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை பிரதமை திதியில் துவங்கி, சப்தமி வரையிலான 7 நாட்கள் சஷ்டி விரதம் இருக்க வேண்டும். சஷ்டி அன்று சூரசம்ஹாரத்தை தரிசித்த பிறகு, சப்தமி திதியில் நடைபெறும் முருகப் பெருமானின் திருக்கல்யாணத்தை தரிசித்த பிறகே விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். அவ்வகையில் இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி விரதம் இன்று (2-11-2024) தொடங்குகிறது. 
🔥🦚 #கந்த_சஷ்டி விரதம் இருப்பவர்கள் அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு, விரதத்தை துவக்கி விட வேண்டும். காப்பு கட்டுபவர்களும் காலை சூரிய உதயத்திற்கு முன்பாக காப்பு கட்டிக் கொண்டு விரதத்தை துவக்கி விட வேண்டும். வரும் 8-ம் தேதி வரை (8-11-2024) விரதம் அனுஷ்டிக்கவேண்டும்.

🔥🦚🔱#விரதம்_இருப்பது எப்படி?

🦚🔥#விரதத்திற்கு முதல் நாளன்றே வீட்டினை கழுவி சுத்தப்படுத்தி மஞ்சள் நீர் தெளித்தல் அவசியம். விரத நாளன்று அதிகாலையில் துயிலெழுந்து நீராடி, தூய்மையான ஆடைகளை அணிந்து, காலையும் மாலையும் வீட்டில் முருகனுக்கு பூஜை செய்ய வேண்டும். விரதம் இருப்பவர்கள் பகலில் தூங்கக் கூடாது. விரதம் இருக்கும் நாட்களில் கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம், கந்தர் அலங்காரம், திருப்புகழ், கந்தர் கலிவெண்பா, பகை கடிதல், சண்முக கவசம் போன்ற பாடல்களை பாடலாம். அத்துடன் கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்தல் மிகவும் நன்று.🙏

🦚🔥#சஷ்டி_விரதம் இருப்பதில் பல முறைகள் உள்ளன. ஒரு வேளை மட்டும் உணவு எடுத்துக் கொண்டு விரதம் இருப்பது, ஒரு வேளை மட்டும் உணவை தவிர்த்து விரதம் இருப்பது, சுவாமிக்கு நைவேத்தியம் செய்த அல்லது அபிஷேகம் செய்த ஒரு டம்ளர் பாலை மட்டும் ஒரு நாளில் எடுத்துக் கொண்டு விரதம் இருப்பது, பால், பழம் சாப்பிட்டு விரதம் இருப்பது, வெறும் தண்ணீர் மட்டும் குடித்து விரதம் இருப்பது என பல வகைகள் உண்டு. இவற்றில் தங்களுக்கு ஏற்ற முறையை தேர்வு செய்து விரதம் இருக்கலாம். அவரவரின் உடல்நிலை மற்றும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு விரதம் இருக்கலாம்.

🦚🙏🔱#கந்தசஷ்டி_விரதத்தின் பலன்:

🙏#குடும்பத்தில் துன்பங்கள் நீங்கவும், வேலைவாய்ப்பு, கடன் தொல்லை நீங்கவும் இவ்விரதத்தை கடைப்பிடிப்பது நன்று. "சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்" என்பது பழமொழி. இதன் உண்மையான பொருள், சஷ்டியில் விரதமிருந்தால் கருப்பையில் குழந்தை உண்டாகும் என்பதாகும். எனவே குழந்தை வரம் வேண்டும் பெண்களுக்கு இது மிகவும் சிறந்த விரதமாகும். சுருக்கமாகச் சொன்னால் இவ்விரதத்தை கடைப்பிடித்து விரும்பிய பலனைப் பெறலாம் என்பது நம்பிக்கை..

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம்.. 

கந்தசஷ்டி விரதம் கந்தசஷ்டி விரதம் முதல் நாள்..

கந்தசஷ்டி விரதம் 
கந்தசஷ்டி விரதம் முதல் நாள்
இந்த ஆண்டு கந்த சஷ்டி விரதம் நவம்பர் 2 சனிக்கிழமை அன்று துவங்கி, நவம்பர் 7 வியாழன் அன்று நிறைவடைகிறது. முருக பக்தர்கள் பலர் ஆறு நாட்களும் விரதம் இருந்து சூரசம்காரம் முடிந்த பிறகு விரதத்தை முடிப்பார்கள். கந்த சஷ்டி விரதம் இருப்பவர்கள், சனிக்கிழமை அன்று அதிகாலை குறித்து விட்டு தங்களுடைய விரதத்தை துவங்கலாம்.

முருகப் பெருமானுக்குரிய மிக முக்கியமான விரதம் சஷ்டி விரதம். மாதந்தோறும் சஷ்டி திதி வந்தாலும் ஐப்பசி மாத வளர்பிறையில் வரும் சஷ்டியை மகாகந்தசஷ்டி என குறிப்பிடுகிறோம். 

முருகப் பெருமானின் அவதார நோக்கமான அசுரர்களை வதம் செய்து, தேவர்களை காத்தருளிய காலமே இந்த கந்தசஷ்டியின் ஏழு நாட்களும். தேவர்கள், முருகனை வேண்டி பலன் பெற்ற இந்த காலத்தில் நாமும் முருகனை வழிபட்டால் நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் கொடுமையான துன்பங்களையும் நீக்கி, நம்மையும் முருகப் பெருமான் காத்திடுவார் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. 

இந்த ஆண்டு கந்தசஷ்டி விரதம் நவம்பர் 02ம் தேதி துவங்கி, நவம்பர் 08ம் தேதி வரை கடைபிடிக்க வேண்டும்.

சஷ்டி விரதம் துவங்கும் முறை :

கந்தசஷ்டி விரதம் யார் வேண்டுமானாலும் இருக்கலாம் என்றாலும் குழந்தை வரம் வேண்டுபவர்களுக்கு மிக முக்கியமான விரதமாக இது கருதப்படுகிறது. சஷ்டி விரதத்தை பல வகைகளில் கடைபிடிக்கலாம். 

இவற்றில் எது முறை யாருக்கு ஏற்றதோ அந்த முறையை பின்பற்றி விரதம் இருக்கலாம். காப்பு கட்டி விரதம் இருக்க நினைப்பவர்கள் அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்றோ அல்லது வீட்டிலேயே காப்பு கட்டிக் கொண்டோ, வீட்டில் உள்ள பெரியவர்கள் கைகளால் காப்பு கட்டிக் கொண்டோ விரதத்தை துவக்கலாம். 

நவம்பர் 02ம் தேதி காலை 6 மணிக்கு முன்பாக காப்பு கட்டிக் கொண்டு விரதத்தை துவக்கி விட வேண்டும். விரதம் இருப்பவர்கள் காலை, மாலை இரு வேளையும் முருகனுக்கு கண்டிப்பாக பூஜை செய்ய வேண்டும்.

பூஜையை துவக்கும் முறை :

கலசம் வைத்து வழிபடுபவர்கள், படம் வைத்து வழிபடுபவர்கள் யாராக இருந்தாலும் ஒரு மனைப்பலகையில் சிவப்பு நிற துணி விரித்து, அதுன் மீது வீட்டில் முருகனை எழுந்தருளச் செய்ய வேண்டும். முருகனுக்கு சிவப்பு நிற மலர்கள் அணிவிக்க வேண்டும். முருகனை எழுந்தருளச் செய்வதற்கு "ஓம் சரவண பவ" என்ற மந்திரத்தை 108 முறை அல்லது 1008 முறை சொல்ல வேண்டும். கலசம் அல்லது முருகனின் படத்திற்கு முன்பாக சட்கோண கோலமிட்டு தினம் ஒரு விளக்கு என்ற எண்ணிக்கையில் அதிகரித்துக் கொண்டே செல்ல வேண்டும். அல்லது தினமும் 6 விளக்குகளை ஏற்றுவதாக இருந்தாலும் ஏற்றலாம். சஷ்டி விரதத்தின் முதல் நாளில் முருகப் பெருமானுக்கு கோதுமை பாயசம், கோதுமை புட்டு என கோதுமையால் செய்த ஏதாவது ஒரு இனிப்பை நைவேத்தியமாக படைக்க வேண்டும். முடியாதவர்கள் வெற்றிலை பாக்கு, பழம், காய்ச்சிய பால் மட்டும் நைவேத்தியமாக வைத்து வழிபடலாம்.

யார் ,எதை தானம் செய்ய வேண்டும்?

திருமண வரம் வேண்டி விரதம் இருப்பவர்கள் தங்களுடைய ஜாதகத்தின் நகலை முருகனின் படத்திற்கு முன் வைத்து, அதற்கு மஞ்சள், குங்குமம் தொட்டு வைத்து, இரண்டு பூக்கள் வைத்து தினமும் வழிபட்டு வரவேண்டும். குழந்தை வரம் வேண்டி சஷ்டி விரதம் இருப்பவர்கள் முதல் நாளில் ஒரு பால் சங்கு அதில் பால் நிரப்பி வைத்து வழிபட்ட பிறகு, குழந்தையுடன் இருக்கும் யாருக்காவது அந்த சங்கினை தானமாக கொடுத்து விட வேண்டும். மற்ற காரணங்களுக்காக விரதம் இருப்பவர்கள் முதல் நாளில் காவி உடை அணிந்த யாராவது இரண்டு சாதுக்களுக்கு உணவு வாங்கி தானமாக கொடுக்க வேண்டும்.

வழிபாடு, தானத்திற்கான நேரம் :

முதல் நாள் வழிபாட்டு நேரம் :
காலை 6 மணிக்குள்காலை 07.35 முதல் - 08.50 வரை
தானம் செய்வதற்கான நேரம் :
காலை 7 முதல் 8 வரைபகல் 2 முதல் 3 வரை

குழந்தைப்பேறு அருளும் திருப்புகழ் :

செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்ததிருமாது கெர்ப்ப முடலூறித்தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில்திரமாய ளித்த பொருளாகிமகவாவி னுச்சி விழியாந நத்தில்மலைநேர்பு யத்தி லுறவாடிமடிமீத டுத்து விளையாடி நித்தமணிவாயின் முத்தி தரவேணும்முகமாய மிட்ட குறமாதி னுக்குமுலைமேல ணைக்க வருநீதாமுதுமாம றைக்கு ளொருமாபொ ருட்குள்மொழியேயு ரைத்த குருநாதாதகையாதெ னக்கு னடிகாண வைத்ததனியேர கத்தின் முருகோனேதருகாவி ரிக்கு வடபாரி சத்தில்சமர்வேலெ டுத்த பெருமாளே.

தினமும் சொல்ல வேண்டிய
முருகன் பதிகம் :

"உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன்பின்னை ஒருவரையான் பின்செல்லேன் - பன்னிருகைக்கோலப்பா! வானோர் கொடியவினை தீர்த்தருளும்வேலப்பா! செந்தில் வாழ்வே!"

விளக்கம் - உன்னை தவிர நம்பி நான் உரிமையுடன் என்னுடைய மனக்குறைகளை சொல்லி முறையிடுவதற்கும், என்னுடைய வேண்டுதலை நிறைவேற்றி வை என கேட்பதற்கும் எனக்கு யாரும் இல்லை. இனி உன்னை தவிர வேறு யாரிடமும், எந்த தெய்வத்திடமும் சென்று அவர்களிடம் என்னுடைய நிலையை சொல்லி முறையிட போவதுமில்லை. பன்னிரண்டு கைகளை உடையவனே தேவர்களின் கொடுமையான துன்பத்தை போக்கிய, கையில் வேல் ஏந்திய நாயகனே...செந்தில் என்னும் திருச்செந்தூர் தலத்தில் குடி கொண்டிருக்கும் எங்களின் தெய்வமே எனக்கு உன்னுடைய அருளை தந்து காத்திட வேண்டும். 

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம்.. 

கற்பகவிநாயகர் திருவீசர் சந்தன காப்பு அலங்காரம்...

ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சந்தனக் காப்பு அலங்காரத்தில்
காட்சி தரும் தமிழகத்தில் உள்ள 
மிகப் பழமையான 
பாண்டியர் கால குடைவரைக் கோயிலான பிள்ளையார்பட்டி 
கற்பக_விநாயகர்_திருவீசர் (கையில் சிவலிங்கத்துடன்) காணக்கிடைக்காத தரிசனக் காட்சி 

விநாயகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான முற்கால பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட குடைவரைக் கோயிலான தமிழ்நாட்டில் உள்ள புகழ்பெற்ற சிவகங்கை மாவட்டத்தில் உள்ள
பிள்ளையார்பட்டி கற்பக_விநாயகர் திருக்கோயில் வரலாறு:

கற்பக விநாயகா் கோவில் தமிழ்நாட்டின் மிகப்பழமையான குகைக் கோவில்களுள் ஒன்றாகும். இது காரைக்குடிக்கும் புதுக்கோட்டைக்கும் நடுவே பிள்ளையார்பட்டி என்ற ஊரில் அமைந்துள்ளது. திருப்பத்தூா் – காரைக்குடி மாநில நெடுஞ்சாலையில், மதுரையிலிருந்து 71 கி.மீ தொலைவிலும், காரைக்குடியில் இருந்து 12 கி.மீ தொலைவிலும் உள்ளது. இந்த ஊா் பெயருக்கு (பிள்ளையார்பட்டி) காரணம் இங்கு அமைந்துள்ள கற்பகவிநாயகரே (பிள்ளையார்) ஆகும். இங்கு விநாயகப்பெருமான் பிற இடங்களில் காணப்படுவதைப்போல நான்கு கைகளுடன் இல்லாமல் இரு கைகளுடன் காணப்படுகிறார். இங்கு மூலவா் கற்பகவிநாயகா் 6 அடி உயரத்தில் வலம்புரி நிலையில் காணப்படுகிறார். இந்த கோவிலில் காணப்படும் 15-க்கும் மேற்பட்ட கல்வெட்டுக் குறிப்புகள் இக்கோவிலின் தொன்மையை பறை சாற்றுகிறது.

பிள்ளையார்பட்டி எனப் பெயர் கொண்டு விளங்கும் இவ்வூர் தமிழ்நாடு மாநிலத்தில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது. காரைக்குடியிலிருந்து திருப்பத்தூர் செல்லும் வழியில் குன்றக்குடிக்கு அடுத்து உள்ளது.

இக்கோவில் சுமார் 1600 ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாகக் கருதப்படுகிறது. இந்தக் கோயில் கி.பி.12-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் செட்டிநாட்டு நகரத்தார்கள் வசமானது என்பது வரலாறு.

மூலவர்: கற்பக விநாயகர்

தல விருட்சம்: மருத மரம்

தீர்த்தம்: திருக்குளம்

ஊர்: பிள்ளையார்பட்டி

மாவட்டம்: சிவகங்கை

மாநிலம்: தமிழ்நாடு 

வரலாறு:

இங்குள்ள சிறிய மலையின் அடிவாரத்தில் கோவில் குடையப்பெற்றுள்ளது. இக்கோவில் சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாகக் கருதப்படுகிறது. இக்கோயிலின் பிரதான தெய்வமாக கற்பக விநாயகர் இருக்கிறார். மலையைக் குடைந்து அமைக்கப்பெற்ற சுமார் 6 அடி உயரமுள்ள கற்பகப் பிள்ளையாரின் திருவுருவம் வடக்குத் திசை பார்த்துக் காணப்படுகிறது. குகைக்கோயிலில், சிவன் மற்றும் பிற கடவுளர்களின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. ஆகம கல்வெட்டுக்களில் எழுதியுள்ளபடி இக்கோயில், 1091 மற்றும் 1238ம் ஆண்டின் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தது எனக் கருதப்படுகிறது.

தல வரலாறு:

குன்றைக் குடைந்து அமைக்கப்பட்ட குடைவரைக் கோயிலான பிள்ளையார்பட்டி கோயில், சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்பே அமைக்கப்பட்டது என்பதைக் கல்வெட்டுகள் மூலம் அறியமுடிகிறது. பல்லவர்களுக்கு முன்பே குடைவரைக் கோயில்களை அமைத்த பெருமை முற்கால பாண்டியர்களுக்கு உண்டு. ஏக்காட்டூர் கோன் பெருபரணன் என்கிற சிற்பியால் பிள்ளையாரின் உருவமும், சிவலிங்கத்தின் உருவமும் செதுக்கப்பட்டுள்ள தகவல் கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆய்வின்படி மகேந்திரவர்ம பல்லவன் காலத்துக்கும் முன்பு இரண்டு அல்லது ஐந்து நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்தது இந்தக் குடைவரைக் கோயில் என்பதை அறியலாம். பொ.ஊ. 4ம் நூற்றாண்டில் பிள்ளையார் சிலையை செதுக்கி இருக்கலாம் என்று நம்மப்படுகிறது. இது போல் 14 சிலை உருவங்கள் இக் கோயிலில் உள்ளது. மேலும், கல்வெட்டுகள் மூலமாக, எருக்காட்டூர், மருதங்குடி, திருவீங்கைக்குடி, திருவீங்கைச்வரம், இராச நாராயணபுரம். மேலும், மருதங்கூர், தென்மருதூர், கணேசபுரம், கணேச மாநகரம், பிள்ளைநகர் போன்றவை இத் தலத்தின் முற்காலப் பெயர்கள் என அறிய முடிகிறது. 

இந்தக் கோயில் பொ.ஊ. 12-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் செட்டிநாட்டு நகரத்தார்கள் வசமானது என்பது வரலாறு. நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் மேற்பார்வையில் மிகச் சிறப்பான முறையில், ஆகம முறை தவறாமல் வழிபாடு நடைபெறுகிறது. இத்தல கற்பக விநாயகருக்கு தேசி விநாயகர் என்ற பெயரும் உண்டு. தேசி விநாயகர் என்ற பெயருக்கு ஒளிமிக்க, அழகுள்ள விநாயகர் என்று பொருள்.

கல்வெட்டுக்கள்:

குன்றின் மீது கட்டப்பட்ட பிள்ளையார்பட்டி கோயில் சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது என்பதை கல்வெட்டுகள் மூலம்  அறியலாம். முற்காலப் பாண்டியர்கள் பல்லவர்களுக்கு முன்பே குடைவர் கோயில்களைக் கட்டிய பெருமையைப் பெற்றுள்ளனர். பிள்ளையார் உருவமும், சிவலிங்கமும் ஏகத்தூர் கோன் பெரும்பரணன் என்ற சிற்பியால் செதுக்கப்பட்டது என்ற தகவல் கல்வெட்டில் உள்ளது.

இந்த ஆய்வின்படி இந்தக் குடைவரைக் கோயில் மகேந்திரவர்ம பல்லவன் காலத்திற்கு இரண்டு அல்லது ஐந்து நூற்றாண்டுகளுக்கு முந்தையது என்பதை அறியலாம். பிள்ளையார் சிலை 4ஆம் நூற்றாண்டில் செதுக்கப்பட்டிருக்கலாமென நம்பப்படுகிறது. இக்கோயிலில் 14 சிலைகள் உள்ளன.

மேலும், கல்வெட்டுகள் மூலம், எருகாட்டூர், மருதங்குடி, திருவைங்கைக்குடி, திருவைங்கைச்சோவரம், ராச நாராயணபுரம். மேலும் மருதங்கூர், தென்மருதூர், கணேசபுரம், கணேச மகாநகரம், பிள்ளைநகர் முதலியவை இத்தலத்தின் முந்தைய பெயர்களாக அறியலாம்.

கி.பி.12ம் நூற்றாண்டின் முற்பகுதியில் செட்டிநாட்டு குடிமக்களால் இக்கோயில் கையகப்படுத்தப்பட்டதாக வரலாறு கூறுகிறது. நாட்டுக்கோட்டை மக்களின் மேற்பார்வையில் ஆகம முறை மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தல கற்பக விநாயகருக்கு தேசி விநாயகர் என்ற பெயரும் உண்டு. தேசி விநாயகர் என்ற பெயருக்குப் பிரகாசமான, அழகான விநாயகர் என்று பொருள்.

கோயில் அமைப்பு:

கோயிலின் அமைப்பு இருபகுதிகளாக அமைந்திருக்கிறது. கோயிலின் ஒரு பகுதி குடைவரைக் கோயிலாகவும், மற்றொரு பகுதி கற்றளி எனவும் அமைந்திருக்கிறது. பிள்ளையார்பட்டி கோயில், தமிழ்நாட்டுக் குடைவரைக் கோயில்களில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ஆறு அடி உயரமுள்ள கற்பக விநாயகரின் சன்னதி மலையைக் குடைந்து அமையப்பெற்றுள்ளதால், இங்கு சன்னதியை வலம் வர இயலாது. பிள்ளையாரின் திரு உருவம் வடக்கு நோக்கியும், அவரின் தும்பிக்கை வலது புறமாக சுழித்தும் (வலம்புரி விநாயகர்) இருப்பது இக் கோயிலின் தனிச் சிறப்பாக உள்ளது. இங்கு திருமணம் நடைபெற வைக்கும் "கார்த்தியாயினி" அம்மன் சன்னதியும், பிள்ளை வரமளிக்கும் "நாகலிங்கம்" சுவாமி சன்னதியும், அனைத்து செல்வ வளங்களை அளிக்கும் "பசுபதீசுவரர்" சன்னதியும் உள்ளது.

குடைவரைக் கோயிலினுள் நடுவே கிழக்கு முகமாக அமைக்கப்பட்டிருக்கும் மகாலிங்கம் மிகுந்த பொலிவுடன் காணப்படுகிறது. திருவீசர் எனப்படும் இப்பெருமானுக்கு திருவீங்கைக்குடி மகாதேவர் என்ற பெயரும் உண்டு. சற்று வடக்கில் வெளிப்புறச் சுவரில் லிங்கோத்பவர் காட்சியளிக்கிறார்.

இக் குகைக்கோயிலிலிருந்து சிறிது தூரத்தில் கிழக்கு நோக்கிய சந்நிதியாக அமைந்திருக்கிறது மருதீசர் சந்நிதி. சதுர வடிவ கருவறையின் நடுவே வட்ட வடிவமான ஆவுடையார் மீது லிங்க வடிவில் அமைந்துள்ள மருதீசர் அர்ஜுனவனேசர் என்ற பெயரிலும் வழங்கப்படுகிறார். இக் கருவறையைச் சுற்றியுள்ள புறச் சுவர்கள் சிற்பங்கள் எதுவுமின்றி நுட்பமான கட்டட வேலைப்பாடுகளுடன் மிக அழகாகவும் எளிமையாகவும் திகழ்கின்றன. மருதீசர் கோயில் 30 செப்புத் திருமேனிகளைக் கொண்டுள்ளது. காலத்தால் இவை பொ.ஊ. 10-ஆம் நூற்றாண்டு முதல் 19-ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி வரையிலானது.

மருதீசர் கோயிலின் மேல்சுற்றுப் பிரகாரத்தின் வடகிழக்குப் பகுதியில் வீற்றிருப்பவர் வாடாமலர் மங்கை. இவருடைய சந்நிதி தெற்கு முகமாகக் காட்சியளிக்கிறது. கருவறை நடுவே அம்மனின் திருஉருவம் பத்ம பீடத்தின் மீது இரண்டு கைகளுடன் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறது. இக் கோயிலின் தலவிருட்சமாக அர்ச்சுனா மரம் உள்ளது. வடக்கு கோபுர வாயிலின் உள்ளே கிழக்குப் பகுதியில் சிவகாமியம்மன் சந்நிதி உள்ளது. மகா மண்டபத்தின் வடக்குப் பகுதியில் நடராசர் சபையுள்ளது. அலங்கார மண்டபத்தில் வரையப்பட்டிருக்கும் ஓவியங்கள் ஓவியக்கலைக்குப் பெருமை சேர்க்கும் விதமாக அமைந்திருக்கிறது. இக் கோயில் சிவன் கோயிலாக இருந்தாலும் கற்பக விநாயகரால் மக்களிடையே பிரசித்தி பெற்று பிள்ளையார்பட்டி பிள்ளையார் கோயில் என்றே அழைக்கப்படுகிறது.

ராஜகோபும்:

கோயில் திருமதிலின் கிழக்கு வாயிலில் ராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. ஏழு நிலைகளுடன் அமைந்த இக்கோபுரம் அதிட்டானம் முதல் கல்லாரம் வரை வெள்ளைக் கல்லாலும் அதற்கு மேற்பட்ட பகுதிகள் செங்கல் மற்றும் சுதை கொண்டு எழுப்பப்பட்டுள்ளது. கற்பக விநாயகர் சந்நிதியின் முன்புறமாக இருக்கும் திருமதிலின் வடக்கு வாயிலில் விநாயகக் கோபுரம் எழுப்பப்பட்டுள்ளது. இது மூன்று நிலைகளுடன் காணப்படுகிறது. இக்கோபுரம் அதிட்டானம் முதல் கல்லாரம் வரை வெள்ளைக் கற்களைக் கொண்டும் அதன் மேல் எழுப்பப்பட்டுள்ள கோபுரத் தளங்கள் செங்கல்லைக் கொண்டும் எழுப்பப்பட்டிருக்கிறது.

பிள்ளையார்பட்டி என்னும் பெயரே இது விநாயகப்பெருமான் கோயில் கொண்டருளும் ஒரு சிற்றுர் என்பதை நன்கு விளங்க வைத்துக் கொண்டிருக்கிறது. இந்த ஊருக்கு பிள்ளையார்பட்டி என்பதே இன்று நாடறிந்த பெயராயினும், 1. எருகாட்டூர் அல்லது எக்காட்டுர், 2. மருதங்குடி, 3. திருவீங்கைகுடி, 4. திருவீங்கைச்வரம், 5. இராசநாராயணபுரம் என்று வேறு ஐந்து பெயர்கள் உண்டு. மருதங்கூர், தென்மருதூர், கணேசபுரம், கணேசமாநகரம், பிள்ளை நகர் போன்ற பெயர்கள் பிற்காலப் பெயர்கள் பிற்காலப் பாடல்களில் காணப்படுகின்றன.

இங்கு இரண்டு இராஜகோபுரங்களுடன் கூடிய பெரிய திருக்கோயில் மிக்க பொலிவுடன் விளங்குகிறது. ஆகம நெறிப்படி அருமையாக பூஜைகள் நடைபெறும் இக்கோயிலில் திருப்பணியை கூர்ந்து நோக்குவோமானால் நான்கு முறையாக திருப்பணி நடந்திருக்கின்றமை நன்கு புலனாகும்.

முதன்முதலாக நடந்த திருப்பணி இன்று காணப்பெறும் திருக்கோயிலின் தெற்கு புறத்தில் கீழ்மேலாக நீண்டு கிடக்கும் குன்றில் வடமுகமாக மலையைக் குடைந்து அமைக்கப் பெற்ற குடைவரைக் கோயிலாகும்.

இந்த குடைவரைக் கோயிலுக்குள் நாம் நுழைந்தால் முதலில் உள்ள கிழ்மேல் ஓடிய பத்தி காணப்படும். அதற்கு அடுத்து நான்கு தூண்கள் இடைநிற்க தென்வடல் ஓடிய இரட்டைப்பத்தி மண்டபம் காணப்படும். அம்மண்டபத்தின் கீழ்புறபத்தியில் தென்பால் மலை நெற்றியில் 6 அடி உயரம் உள்ள கம்பீர நிலையில் விளங்கும் கற்பக விநாயகர் திருக்கோலம் அர்த்த சித்திரம் ஆக வடக்கு நோக்கி விளங்கக் காண்போம். இந்த மூர்த்தி தான் பிள்ளையார்பட்டியின் பெருந்தெய்வமான கற்பக விநாயகரான தேசிவிநாயகப் பிள்ளையார்.

அதற்கு மேற்கே அதேமலை நெற்றியில் தெற்கு நோக்கிய சங்கர நராயணர் உருநாட்டு சண்டீசன், கருடன் இருவரும் இருபுறம் நின்ற கோலத்தில் விளங்குகிறார்.

அந்த மேல்புரத்தில் பத்தியின் நடுவே கிழக்கு பார்த்த திருவாயிலுடன் கூடிய திருவுண்ணாழி துங்கானை மாட அமைதியிற் குடையப் பெற்றுள்ளது. அதன் நடுவிலே கடைந்தமைத்த பெரியதொரு மஹாலிங்கம் பொழிந்தினிது துலங்கக் காண்போம்.  இந்த மூர்த்தி தன் திருவீசர் என்று விளங்கும் திருவீங்கைக்குடி மஹாதேவர் .

அங்கிருந்து சிறிது வடக்கே வந்து மேற்கே சென்று தெற்கு புறமாக பார்த்தோமானால் திருவுண்ணாழியின் வடபுற வெளிச்சுவரில் வடக்குப் பார்த்த லிங்கோத்பவர் மூர்த்தியை காணலாம். இந்த அளவில் உள்ள குடைவரைக் கோயில் தான் முதல்திருப்பணி ஆகும்.

இக்குடைவரைக் கோயிலுக்குள் சுவர்களிலும் தூண்களிலும் காணப்பெறுகின்ற கல்வெட்டுகள் நமக்கு ஓரளவு செய்திகளைத்தான் புலப்படுத்துகின்றன என்றாலும் அவற்றில் இருந்து மிக முக்கியமான செய்திகளும் சில கிடைக்கின்றன.

முதன் முதலில் மருதங்குடி வயல்களை மருதங்குடி ஊராரிடம் பிள்ளையார்பட்டி கோயில் நகரத்தார் விலைக்கு வாங்கியிருக்கிறார்கள் பின்னர் சம்மந்தப்பட்ட அதனையூர் நாட்டவரிடமும், கீழ்குண்டாற்று நாட்டவரிடமும், அவர்களுக்கு உள்ள உரிமையை வாங்கி பிடிபாடு செய்திருக்கிறார்கள். அதன் பிறகு அந்நாளில் பாண்டி மண்டலத்தை வென்று ஆட்சி செய்த (பரகேசி மூன்றாம் குலோத்துங்க சோழ தேவரான) கோனேரின்மை கொண்டானிடம் முழு உரிமையும் பெற்றுக் கொண்டிருக்கின்றார்கள். அவன் நகரத்தார்களுக்கு கொடுத்த திருமுகத்திலுருந்து மருதங்குடியில் இராசநாராயணபுரம் என்ற பெயருடன் ஒரு நகரம் அமைத்து அதில் குடியேறி வாழ்ந்துவர அனுமதித்திருக்கிற செய்தி நன்கு புலனாகிறது.

மருதங்குடியான இராசநாராயணபுரம் என்னும் பிள்ளையார்பட்டியும் கீழ்குண்டாற்று நாட்டில் அடங்கியதே. எனவே பிள்ளையார்பட்டியை "கேரள சிங்கவள நாட்டு கீழ்குண்டாற்று நாட்டில் மருதங்குடியான இராச நாராயணபுரத்து பிள்ளையார்பட்டி" என்றே குறிப்பிட வேண்டும்.

பிள்ளையாரின் பெருமை:

உலகம் யாவையும் காத்துத் துடைக்கும் முழுமுதல் இறைவன் ஒருவனே. அவனை இப்படியேன் இந்நிறத்தன், இவ்வண்ணத்தன் என்று நம் போன்றவர்கள் எளிதில் உணரமாட்டோம். ஆனாலும் உண்மை உணர்ந்த அருள்பழுத்த நெஞ்சினர்கள் அவனுக்கு அவனருளாலே ஆயிரமாயிரம் திருப்பெயர்களையும், திருவுருவத்தையும் தந்து நாமுய்ய வழிவகுத்தருளியிருக்கிறார்கள். அவையனைத்தும் அறவோர் தியானத்தில் முளைத்தவை. அவற்றிர்கெல்லாம் தத்துவப்படியும், ஆகமமுறையிலும், சிற்ப நெறியிலும் தியான ஸ்லோகங்கள் எண்ணற்றவை நமக்கு உண்டு.

பிள்ளையார், மூத்த திருப்பிள்ளையார், கணபதி, கணேசன், கணநாதன், விநாயகன், விக்கின விநாயகன், விக்கினராஜன், விக்கினேசுவரன், கஜமுகன், கரிமுகன், யானைமுகன், வேழமுகன், தும்பிக்கையன், அத்தி முகன், ஐங்கரன், அங்குசபாசன், முன்னவன், ஓங்காரன், பிரணவப்பொருள், கற்பக மூர்த்தி, கற்பக விநாயகன், கற்பக பிள்ளையார் முதலான பல பொதுப்பெயர்களை கொண்டருலும் பெருமான் இடத்திற்கு தக்கபடி பலப்பல காரணங்களால் சிறப்பு பெயர்கள் பலவற்றை தாங்கி அருள்வதை நாம் நன்கறிவோம்.

இந்த மூர்த்தீயின் உருவ தத்துவத்தைச் சிறிது சிந்தித்து பார்த்தாலும் அதன் அருமை நன்கு புலப்படும். பிள்ளையாரை ஞானத்தின் அதிதேவதை என்பர் நூலோர் யானைத்தலையே அதற்குச் சான்று. ஓங்கார ஒலிக்குறிய வரிவடிவமான ஓம் என்பதை காட்புலனாகும்படி காட்ட யானைத்தலையே பெரிதும் ஏற்றதாயிருக்கிரது.வலப்புற தந்தம் ஒடிந்ததான அமைதியில் காட்டப்பெருவதன் மூலம் 'ஓ' என்ற எழுத்தின் தொடக்கச்சுழி கிடைத்து விடுகிறது. அங்கிருந்து மேல் நோக்கி வலஞ்சுழித்து இடக்காது வரை சென்று வலைந்த இடத்தந்தத்தின் வழியாக கீழ் நோக்கி துதிக்கை நுனி வரைக் கோடிட்டால் 'ஓ' என்ற வரி வடிவம் தோன்றிவிடக்காண்போம். கையில் உள்ள மோதகம் 'ம்' என்ற வரி வடிவத்தை சுட்டுகிறது. பிள்ளையார்பட்டி பிள்ளையார் வலம்புரி பிள்ளையாராக இருப்பதால், பெரும்பாலான மற்ற இடங்கலில் உள்ள மூர்தங்களை விட விளக்கமாக இவ்வுண்மையை (ஓங்கார சொரூபத்தை) புலப்படுத்திக் கொண்டிருக்கிறது.

பிள்ளையாரின் சிறப்பு:

1. இங்கு பெருமானின் துதிக்கை வலம்சுழித்ததாக அமைந்திருப்பது.
2. சாதாரணமாக மற்ற இடங்களில் இருப்பதைப்போல நான்கு கைகள் இல்லாமல் இரண்டு கரங்களை கொண்டு விளங்குவது.
3. அங்குச பாசங்கள் இல்லாமல் விளங்குவது.
4. வயிறு, ஆசனத்தில் படியாமல் "அர்த்தபத்ம" ஆசனம், போன்று கால்கள் மடித்திருக்க அமர்ந்தருள்வது.
5. இடக்கரத்தை கடிஹஸ்தமாக இடையில் நாட்டிப் பெருமிதக் கோலம் தோன்றப் பொலிவது.
6. வலக்கரத்தில் மோதகம் தாங்கியருள்வது.
7.ஆண், பெண் இணைப்பை புலப்படுத்தும் முறையில் வலத்தந்தம் நீண்டும், இடத்தந்தம் குருகியும் காணப்படுவது.ஆகிய இவை பிள்ளையார்பட்டி பெருமானிடம் காணப்பெறும் சிறப்பாகும். இவற்றால் நாம் உணரக்கூடியது உணர வேண்டியது ஒன்று. பிள்ளையார் வணக்கம் தமிழ் நாட்டில் தோன்றிய ஆதி நாளிலேயே இந்த மூர்த்தம் அமைக்கப் பெற்றிருக்கிறது என்ற உண்மை தான் அது.

திருக்குளம்:

விநாயகர் கோபுரத்திற்கு எதிரே வெளிப் பிரகாரத்தின் வட திசையில் விசாலமாக அமைந்த திருக்குளம் உள்ளது. பிள்ளையார்பட்டியில் ஒவ்வொரு சதுர்த்தியின்போதும் இரவு நேரத்தில் விநாயகர் மூஷிக வாகனத்தில் எழுந்தருளி கோயில் உட்பிரகாரத்தில் வலம் வருவார்.

முக்கிய திருவிழாக்கள்:

இத் தலத்தில் விநாயகர் சதுர்த்தி விழா பத்து நாட்களுக்கு கொண்டாடப்படும் பெருவிழாவாக உள்ளது. முதல் நாள் விழா கோயில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து "காப்பு கட்டுதல்" மற்றும் விழா தொடர்பான நிகழ்வுகள் தினமும் நடைபெறுகிறது. இரண்டாம் நாளில் இருந்து எட்டாம் நாள் வரை பிள்ளையார் பல்வேறு வாகனங்களில் வலம் வருவார். ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா மிக விமரிசையாக நடைபெறும். அன்றைய தினம் பிள்ளையாருக்கு "சந்தன காப்பு" அலங்காரம் செய்யப்படுகிறது. இந் நிகழ்ச்சி பக்தர்களிடையே மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. பத்தாம் நாள் காலையில் தீர்த்தவாரி நிகழும். மேலும், கார்த்திகை மாதத்தில் "திருக்கார்த்திகை தீபத் திருவிழா", மார்கழி மாத திருவாதிரை நாளன்று சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமான் திருவீதி பவனி வருதல், தமிழ் மற்றும் ஆங்கில புத்தாண்டு தினங்களில் விசேட பூசை போன்றவை நடைபெறுகின்றன.

பிள்ளையார்பட்டி எனப் பெயர் கொண்டு விளங்கும் இவ்வூர் தமிழ்நாடு மாநிலத்தில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது. காரைக்குடியிலிருந்து திருப்பத்தூர் செல்லும் வழியில் குன்றக்குடிக்கு அடுத்து உள்ளது.

நேர்த்தி கடன்:

இக் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் வேண்டுகோள் நிறைவேறியதும், இத் தலத்தில் உள்ள பிள்ளையாருக்கு, முக்குறுணி மோதகம்(கொழுக்கட்டை) படைத்து வழிபடுகிறார்கள். தொழில் அபிவிருத்தி வேண்டுவோர் இத்தலத்தில் கணபதி ஹோமம் செய்து பயனடைகிறார்கள். மேலும் அருகம்புல் மாலை அணிவித்து வழிபாடு செய்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்துகிறார்கள்.

கோவில் நடை திறந்திருக்கும் நேரம் :

காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையும். மாலை 4 மணிமுதல் இரவு 8 மணி வரையும் நடை திறந்திருக்கும்

கோவிலுக்குள் செல்லும் முறை:

விநாயகர் சந்நிதிக்கு எதிர்ப்புறம் அமைந்த வடக்கு கோபுர வாயில் வழியாக சென்று வழிபட்டு முடித்துவிட்டு, கிழக்கு பக்கம் இருக்கும் ராஜகோபுர வாசல் வழியாக வெளியே வரவேண்டும்.

அமைவிடம்:

இந்த பழமையான குடைவரைக் கோயில் அமைந்துள்ள பிள்ளையார்பட்டி....
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்

ஹரிகேசநல்லூர் அரியநாதசுவாமி திருக்கோயில் வரலாறு...

"ஜடாவர்மன் அரிகேசரி பாண்டியன்" 
காலத்தில் கட்டப்பட்ட,
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள சைவத் தலமான, 
நெல்லையில் உள்ள பஞ்ச குரு தலங்களில் ஒன்றானதும், 
குபேரன் சிவனை வழிபட்ட தலமானதும் சுமார் 1600 ஆண்டுகள் பழமையான 
#ஹரிகேசநல்லூர் 
#அரியநாதசுவாமி 
#பெரியநாயகிஅம்மன் திருக்கோயில் வரலாறு:

சிவபெருமான் - பார்வதிதேவி திருமணத்தின்போது ஈசனின் ஆணைக்கேற்ப அகத்திய முனிவர் தென்னாட்டுக்கு வந்தார். வடக்கையும் தெற்கையும் சமமாக்கினார். நிறைவாகப் பொதிகை மலையில் அமர்ந்து தவத்தில் ஆழ்ந்தார். அகத்தியப் பெருமானுக்கு ஈசனின் தன் திருமணக் கோலத்தை எண்ணற்ற தலங்களில் அருளினார். பொதிகையில் உற்பவித்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பாய்ந்தோடும் வற்றாத ஜீவநதியான பொருநை எனப்படும் தாமிரபரணி நதியின் இரு கரைகளிலும் 200க்கும் மேற்பட்ட வரலாற்றுச் சிறப்பும், புராணப் பழமையும் கொண்ட சிவாலயங்கள் உள்ளன. இவற்றில் பல ஆலயங்கள் அகத்திய முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவை என்கிற பெருமைக்குரியவை.
காவிரி ஆற்றின் இரு கரைகளிலும் எண்ணற்ற ஆலயங்கள் இருப்பதைப் போன்றே தாமிரபரணியின் இரு கரைகளிலும் அருமையான ஆலயங்கள் அமைந்துள்ளன. இவற்றில் ஒன்றுதான் அம்பாசமுத்திரம் வட்டத்திலுள்ள அரிகேசவநல்லூர். தற்போது ஹரிகேசநல்லூர் என்று அழைக்கிறார்கள். இங்குள்ள பெரியநாயகி சமேத அரியநாதர் கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். ஏனெனில், அரிதாகக் காணப்படும் குபேரன் சந்நதியும், ஜேஷ்டா தேவியின் சந்நதியும் இங்குதான் அமைந்திருக்கின்றன. இந்த ஊருக்குள் நவநீத கிருஷ்ணசுவாமி ஆலயமும் உள்ளது. அரிகேசரி பாண்டியன், இந்த ஆலயத்தை அமைத்துள்ளான். இக்கோயிலில் பிரதோஷம் போன்ற விழாக்கள் சிறப்புற நடைபெற்று வருகின்றன. நூறு ஆண்டுகளுக்கு முன்பாக 1900ல் குடமுழுக்கு நடைபெற்றதை ஆலய அர்த்த மண்டபத்தில் உள்ள கல்வெட்டு தெரிவிக்கிறது.
நெல்லை மாவட்டம், தாமிரபரணி ஆற்றின் இரு கரைகளிலும் அருமையான ஆலயங்கள் அமைந்துள்ளன. இவற்றில் ஒன்றுதான் அம்பாசமுத்திரம் வட்டத்திலுள்ள ஹரிகேசநல்லூரில் அமைந்துள்ள ஸ்ரீ பெரியநாயகி சமேத அரியநாதர் திருக்கோயில். சுமார் 1,600 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்தக் கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். ஏனெனில், குபேரனே இத்தலம் வந்து சிவனை வழிபாடு செய்திருக்கிறார். இங்கே சனீஸ்வரனின் மனைவி ஜேஷ்டா தேவிக்கும் தனி சன்னிதி அமைந்துள்ளது. அரிகேசரி என்ற பாண்டிய மன்னன் இந்த ஆலயத்தைக் கட்டியதால் மன்னன் பெயரால் இவ்வூர் ஹரிகேசநல்லூர் என்றழைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

ஆலயத்தின் முகப்பில் கோபுரம் எதுவும் இல்லை. உள்ளே நுழைந்தவுடன் கொடிமரம், பலிபீடம், நந்தி. அடுத்து மண்டபம் கடந்து உள்ளே நுழைந்தால் ஆகமக் கோயிலுக்குரிய சூரியன், சந்திரன் ஜுரதேவர், சப்த மாதர்கள், தட்சிணாமூர்த்தி, பைரவர் போன்ற அனைத்து பரிவார தேவதைகளுக்கும் சன்னிதிகள் உள்ளன. இங்குள்ள தட்சிணாமூர்த்தி மிகச் சிறப்பு வாய்ந்தவர். இடக்காலை வலது காலின் மீது மடித்து வைத்தபடி தோற்றமளிக்கிறார். பின்னிரு கரங்களில் மானும் மழுவும் ஏந்தியிருக்கிறார். இந்த ஆலயத்தில் குரு பெயர்ச்சி விழா மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.

இந்த ஆலயத்தில் உள்ள கல்வெட்டுக்களில் மிகப் பழமையானது, ஜடாவர்மன் குலசேகரபாண்டியன் கல்வெட்டாகும். 12வது நூற்றாண்டைச் சேர்ந்த இக்கல்வெட்டில் இங்குள்ள இறைவன் ‘‘அரிகேசரிநல்லூரில் உள்ள அரிகேசரி ஈசுவரமுடைய நாயனார்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளார். அரிகேசரி என்ற பாண்டிய மன்னன் இந்தச் சிவாலயத்தைக் கட்டியதால் மன்னன் பெயரால் இவ்வூர் அரிகேசரி நல்லூர் என்றழைக்கப்பட்டதாகவும் கூறுவர்.

இவை அனைத்தையும் விட முக்கியமானது, ராவணன் தனது சகோதரன் குபேரனிடம் இருந்த செல்வங்களையெல்லாம் பிடுங்கிக் கொண்டு, அவனது புஷ்பக விமானத்தையும் அபகரித்துக் கொண்டு துரத்தியடித்தபோது அவர் ஹரிகேசநல்லூரில்தான் வந்து விழுந்தாராம். அவர் ஸ்தாபித்த லிங்கம்தான் ஹரிகேசநல்லூர் சிவனாவார். குபேரன் இந்த சிவனை பூஜித்து, தான் இழந்த செல்வங்களையெல்லாம் திரும்பப் பெற்ற தலம் என்பதால், இந்த ஹரிகேசநல்லூர் சிவன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகக் திகழ்கிறது. கடன் தொல்லை இருப்பவர்கள், செல்வ வளம் வேண்டுபவர்கள் இங்கு வந்து குபேரன் பூஜித்த சிவனை வழிபாடு செய்தால் செல்வச் செழிப்பு உண்டாகி, வாழ்வில் எல்லா வளங்களும் உண்டாகும் என்று நம்பப்படுகிறது.

இங்குள்ள தட்சிணாமூர்த்தி மிகச் சிறப்பு வாய்ந்தவர். இடக்காலை வலதுகாலின் மீது மடித்து வைத்தபடி திகழ்கிறார். பின்னிரு கரங்களில் மானும் மழுவும் ஏந்தியுள்ளார். பொதுவாக தட்சிணாமூர்த்தி சிலைகளில் பின் இரு கரங்களில் அட்சமாலை அல்லது அக்னி மற்றும் டமருகம் (உடுக்கை) காணப்படுகின்றன. நெல்லை மாவட்டத்திலுள்ள பஞ்ச குருத் தலங்களில் இந்தத் தலம் மூன்றாவதாகத் திகழ்கிறது. இந்த பஞ்ச குருத் தலங்களிலுள்ள தட்சிணாமூர்த்தியின் திருமேனிகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவையாகும். இந்த ஆலயங்களில் குருப் பெயர்ச்சி விழா மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. இத்தலத்தில் தட்சிணாமூர்த்தி சந்நதிக்கு எதிராக உள்ள சப்த கன்னியர் சந்நதியில் வீரபத்திரருக்குப் பதிலாக ‘ருரு’ பைரவர் அமர்ந்து அருட்பாலிக்கிறார். இந்த ருரு பைரவரை மனமாறத் தொழுதால் அஷ்டமா சித்திகளும் கிட்டும் என்ற நம்பிக்கை இந்தப் பகுதி மக்களிடையே நிலவுகிறது.

வெளிச் சுற்றுப்பிராகாரத்தில் சனீஸ்வரனின் மனைவி ஜேஷ்டா தேவி  தனது மைந்தன் மாந்தியை மடியில் வைத்துக்கொண்டு சன்னிதி கொண்டிருக்கிறாள்.  சாதாரணமாக ஜேஷ்டா தேவியின் சன்னிதியை சிவாலயங்களில் காண முடியாது.  ஆனால், இக்கோயிலில் பெரிய திருவுருவத்துடன் சன்னிதி கொண்டிருக்கிறாள். ஜேஷ்டா தேவி இங்கே சன்னிதி கொண்டு அருள்பாலிப்பதால்  இது சனீஸ்வர பரிகாரத் தலமாகவும் வழிபடப்படுகிறது.

அதேபோல, வடக்குச் சுற்றில் இறைவன் சன்னிதிக்கு வடகிழக்கே செல்வத்தின் அதிபதியான குபேரனின் மிகப்பெரிய கற்சிலை காணப்படுகிறது. வலக்கையில் கதையை ஏந்தி, இடக்கையை மடித்த காலின் மீது வைத்துக் கொண்டு சுமார் 4 அடி உயரத்தில் மிகப்பெரிய உருவமாக குபேரன் காட்சியளிக்கிறார். இங்கே குபேரன் எழுந்தருளியிருக்கும் காரணத்தால் ஒரு காலத்தில் இந்த ஊர் அழகாபுரி என்னும் பெயரால் கூட அழைக்கப்பட்டதாம். இந்த குபேரனுக்கு தீபாவளி மற்றும் அட்சய திருதியை நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. இந்த நாட்களில் வெளியூரிலிருந்தெல்லாம் ஏராளமான பக்தர்கள் வந்து இங்கே வழிபாடு செய்கின்றனர். 

அரியநாதர் ஆலயத்தில் இறைவனுக்குத் தனிக் கோயிலும், அந்த ஆலயத்தின் வடகிழக்கில் இறைவி பெரியநாயகி அம்மைக்கு விமானத்துடன் கூடிய தனிக்கோயிலும் அமைந்துள்ளன. தேவியின் ஆலயம் பிற்காலத்தில் தனியே கட்டப்பட்டதாகத் தெரிகிறது. பெரிய என்ற அடைமொழிக்கேற்ப பெரிய திருமேனியோடு இறைவி காட்சி தருகிறாள். சுமார் ஏழு அடி உயரமான இறைவியின் சிலை கலை நுணுக்கமும் வனப்பும் மிக்கது. இந்த ஆலயத்தில் கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம் உள்ளன.

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மாதேவி - அம்பாசமுத்திரம் சாலையில் வீரவநல்லூருக்கும் முக்கூடலுக்கும் இடையே ஹரிகேசநல்லூர் அமைந்துள்ளது.

மிகத்தொன்மையான இந்தக் கோயிலின் புனருத்தாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த ஜூலை 5ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மிகச் சிறப்பு வாய்ந்த, தொன்மையான குபேரன் வந்து வழிபட்டு இழந்த செல்வங்களை மீட்டெடுத்த இந்தக் கோயிலுக்கு ஒருமுறை சென்று குபேரன் வழிபட்ட சிவனையும், குபேரனையும் வழிபட்டு வாழ்வில் சகல சௌபாக்கியங்களையும் பெறுவோம்.

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மாதேவி - அம்பாசமுத்திரம் சாலையில் திருநெல்வேலியிலிருந்து 22 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள வீரவநல்லூரை அடையலாம்.. 

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

Followers

கந்த சஷ்டி கவசத்தை அருளியவர் ஸ்ரீ பாலதேவராய சுவாமிகள்.

ஸ்ரீ பால தேவராய சுவாமிகள் கந்த சஷ்டி கவசத்தை அருளிய வரலாறு பற்றிய பதிவுகள்  கந்த சஷ்டி கவசத்தை அருளியவர் ஸ்ரீ பாலதேவராய சுவாமிகள...