Saturday, November 9, 2024

வற்றாத செல்வம் தரும் வலம்புரிச் சங்கு பூஜை...

வற்றாத செல்வம் தரும் வலம்புரிச் சங்கு பூஜை மற்றும் மந்திரம்


பாற்கடல் கடையும் பொழுது  அதில் இருந்து தோன்றிய உயர்ந்த பொருட்களில் ஒன்று சங்கு அதிலும் வலம்புரிச் சங்கு மிக உயர்ந்தது .மகாலட்சுமிக்கு ஈடானது ஏன் என்றால் மகாலக்ஷ்மியும் அதில் இருந்து தோன்றியவளே. எனவே வலம்புரிச் சங்கு "லக்ஷ்மி சகோதராய" என்று அழைக்கப் படுகிறது.ஸ்ரீ மஹாவிஷ்ணு  வலம்புரிச் சங்கை தனது கரத்திலும் ஸ்ரீ மஹாலக்ஷ்மித் தாயை ஹ்ருதய கமலத்திலும் தாங்கியபடி காட்சி யளிக்கிறார்.

*வலம்புரிச் சங்கு வாங்கும் பொழுது கவனிக்க வேண்டியவை :-*

1. கரும்புள்ளிகள், கருப்பு நிறத்தில் குழிகள் இருக்கக் கூடாது.

2. செயற்கை நிறங்கள் பூசப் பட்டதாக இருக்கக் கூடாது.

3. வெடிப்பு, கீறல் இல்லாததாக இருக்க வேண்டும்.

4. வாய் பகுதி மற்றும் பிற பகுதிகள் சேதமடையாததாக இருக்க வேண்டும்.

5. தாமச குணம் என்று சொல்லப்படும் மந்தபுத்தி உடையவர்கள், மாந்திரீகம் செய்பவர்கள் மட்டும் கருநிற வலம்புரிச் சங்கு பயன்படுத்தலாம்.

மற்றவர்கள் கருப்பு தவிர வெண்ணிற அல்லது  மாநிறம் உள்ள சங்கைப் பயன்படுத்த வேண்டும். வெள்ளையே சிறந்தது.

1. சங்கை எப்பொழுதும் வெறும் தரையில் வைக்கக் கூடாது.

2. வடக்கு முகமாக அல்லது கிழக்கு முகமாக அமர்ந்து ஒரு வாழை இலையில் கொஞ்சம் பச்சரிசி பரப்பி அதன் மேல் சங்கை வைத்து இந்த மந்திரத்தை சொல்லவும். அல்லது ஒரு மஞ்சள் பட்டு அல்லது மஞ்சள் காட்டன் துணியில் கொஞ்சம் பன்னீர் தெளித்து அதன் மேல் சங்கை வைத்து அதற்குச் சந்தனம், குங்குமம் வைத்து மல்லிகை, பிச்சி, ரோஜா அல்லது செந்தாமரை மலர்கள் கொண்டு கீழே உள்ள மந்திரங்களில் ஏதாவது ஒன்றை ஜெபித்து அர்ச்சிக்கவும். பின்னர் சாம்பிராணி அல்லது ஊதுவத்தியால் தூபம் காட்டிக் கற்பூர தீபம் காட்டிக்  கற்கண்டு, பால் நைவேத்யம் செய்து பூஜையை நிறைவு செய்யவும்.

3. பூஜை செய்யும் நேரம் தவிர மற்ற நேரங்களில் சங்கை மஞ்சள் பட்டு அல்லது காட்டன் துணியில் சுற்றி வைக்கலாம். அல்லது ஒரு சிறிய பித்தளை, வெள்ளி, செம்பு தட்டு அல்லது கிண்ணத்தில் சுத்தமான நீர் ஊற்றி அதில் சிறிது பச்சைக்கற்பூரம் போட்டு அதில் வைக்க நல்ல பலன்களைத் தரும். அந்த நீரைத் தினமும் மாற்ற வேண்டும். முந்தைய நாளில் பயன்படுத்திய நீரைக் குளிக்கும் நீரில் கலந்து குளிக்க வறுமை நீங்கும். குளிக்க முடியாதவர்கள் அந்த நீரை காலில் மிதிபடாதபடி மரம் அல்லது செடிகளுக்கு  ஊற்றி விடவும்.

தொழில் செய்யும் இடங்களில் தெளித்து வரத் தொழில் விருத்தி உண்டாகும்.
வியாபாரிகள், தொழில் அதிபர்கள் அந்த நீரால் முகம் கழுவி வெளியில் செல்ல சகல காரியங்களில் வெற்றியும் வசீகர சக்தியும் உண்டாகும்.

யாவரும் தினமும் அந்த நீரால் முகம் கழுவி வர அவர்களை ஒருபோதும் வறுமை வாட்டாது.

கீழே தரப்பட்டுள்ள மந்திரங்களில் உங்கள் மனம் விரும்பும் மந்திரம் எதுவோ அதைத் தேர்ந்தெடுத்து ஜெபிக்கலாம். பூஜை ஆரம்பித்து முடியும் வரை மந்திரத்தை மாற்றக்கூடாது.

1.ஓம் ஸ்ரீம் லக்ஷ்மி சகோதராய நமஹ 

2.ஓம் ஸ்ரீம் க்லீம் ஸ்ரீதரகரஸ்தாய | பயோனிதி ஜாதாய |லக்ஷ்மி சகோதராய | தக்ஷிணாவர்த்த சங்காய நமஹ ||

3.ஓம் ஹ்ரீம் ஸ்ரீதர கரஸ்தாய |  லக்ஷ்மி ப்ரியாய | தக்ஷிணாவர்த்த சங்காய |மம சிந்தித  பல ப்ராப்தார்த்தாய  நமஹ ||

No comments:

Post a Comment

Followers

ஐப்பசி சிவன் அன்னாபிஷேகம் அறிவியல் ரீதியான விளக்கம்..

அன்னாபிஷேகம்...! ஐப்பசிமாத முழுநிலவு நாளில்      உலகெங்கும் உள்ள சிவ ஆலயங்களில் இறைவனுக்கு அன்னாபிஷேகம் செய்வது மரபு. ஒவ்வொரு மா...