Saturday, January 11, 2025

திருவாரூர் தேருக்கு 10 சக்கரங்கள் இருந்தன என்பது உங்களுக்கு தெரியுமா ?



 

திருவாரூரில் தங்க கோவில் பற்றி உங்களுக்கு தெரியுமா ? திருவாரூர் தேருக்கு 10 சக்கரங்கள் இருந்தன என்பது உங்களுக்கு தெரியுமா ?
திருவாரூர் நீங்கள் அறியாத தகவல்கள் :

திருவாரூர் தங்க கோவில் :

திருப்பதி கோவில் தங்கத்தால் செய்யப்பட்ட கோபுரத்திற்கு பெயர் போனது. திருப்பதியை போன்று திருவாரூர் தியாகராஜர் கோவில் கருவறை கோபுரமும் தங்கத்தால் செய்யப்பட்டது. 
ஆச்சர்யமாக உள்ளதா ?

தஞ்சை பெரிய கோவிலை கட்டிய ராஜராஜனின் மகன் ராஜேந்திர சோழனுக்கு திருவாரூரில் பிறந்த பரவை என்ற நாட்டிய பெண்ணின் மேல் காதல். அவளுக்கு திருவாரூர் கோவில் என்றால் அத்தனை பிரியம். அவள் வேண்டுகோளுக்காக ராஜேந்திரன் திருவாரூர் கோவில் விமானம் மற்றும் கருவறை சுவர்களை தங்கத்தால் வேய்ந்தான்.

தங்கமா ? திருவாரூர் கோவில்லையா ? யார்கிட்ட விட்ரிங்க ரீல் என்று கூறுவோருக்கு ராஜேந்திரன் செய்த கல்வெட்டு வரிகள் 

" உடையார் வீதிவிடங்கதேவர் குடத்திலும் வாய் 
மாடையிலும் நாலு நாசியிலும் உள் குடத்திலும் பொன்வேய்தான்"

தங்கம் காலபோக்கில் பலரால் அழிக்கப்பட்டுள்ளது. இன்று மிஞ்சம் இருப்பது கற்கோவில் மட்டுமே.

இந்தியாவில் இருந்து அயல் நாட்டுக்கு படையெடுத்து சென்ற ஒரே அரசன் என்ற பெருமை உடையவனும் தற்போதைய சுமத்ரா, மலேசியா, கம்போடியா போன்ற நாடுகளையும் வெற்றி பெற்ற  கங்கை கொண்ட சோழன் (ராஜேந்திர சோழன் ) பற்றி மேலும் படிக்க....

பெரிய தேரின் பெரிய கதை :

தேர் என்றாலே திருவாரூர் என்று சொல்லும் அளவுக்கு திருவாரூர் தேர் உலக பிரசித்தம். ஆனால் தற்போது இருப்பதை விட பெரிய தேர் திருவாரூர் கோவிலில் இருந்ததும் அது தீயில் எறிந்த கதையும் உங்களுக்கு தெரியுமா ?
ஆண்டு 1926, கீழவீதியில் இருந்து வழக்கமான உற்சாகத்துடன் திருவாரூர் தேர் புறப்பட்டது. அந்த தேருக்கு 10 சக்கரங்கள் இருந்தன. (தற்பொழுது உள்ள தேருக்கு 4 சக்கரங்கள் மட்டுமே உள்ளது)

தேர் கமலாலயம் கரையில் மாற்றுரைத்த விநாயகர் கோவில் கடந்து சென்ற பொழுது தீ பற்றி எரிய துடங்கியது. ஆசியாவின் மிக பெரிய தேர் அக்னி தேவனுக்கு இரையானது. 

தேர் தொடர்ந்து இரண்டு நாட்கள் எரிந்ததாம். அன்றைக்கு பெரிய கட்டிடங்கள் இல்லாத காரணத்தால் பக்கத்து கிராமத்திலும் தேர் எறிவதை பார்க்கமுடிந்ததாம்.
திருவாரூர் பழைய தேர் . 

திருச்சி BHEL நிறுவனத்தின் உதவியுடன் புதிய தேர் :

எறிந்த தேருக்கு பதிலாக புதிய தேர் 1928 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 1930 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. அதுவும் 10 சக்கரங்கள் உடைய தேரே ஆகும்.  1930 முதல் 1948 ஆண்டு வரை ஓடிய தேர் பின்னர் நின்றுபோனது. 

பின்னர் 1970 ஆம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி மற்றும் திருவாரூர் வ. சோ. ஆண்கள் மேல்நிலை பள்ளி நிறுவனர் தியாகராஜா முதலியார் முயற்சியால் பழுது பார்க்கப்பட்டு பின்னர் ஓட துடங்கியது. 

பழுது பார்த்தலின் பொழுது திருச்சி BHEL நிறுவனத்தின் உதவியால் 10 சக்கர அமைப்புக்கு பதிலாக 4 இரும்பு சக்கரமும் ஹைட்ராலிக் (hydralic) பிரேக் அமைப்பும் பொருத்தப்பட்டது. அதுவே தற்போதைய தேராகும். 
திருவாரூர் புதிய தேர் 

வரலாறு முக்கியம் அமைச்சரே !

தஞ்சை பெரிய கோவிலை கட்டிய ராஜராஜனின் 1000 ஆண்டு சதயவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம். ஆனால் ராஜராஜன் சதய நட்சத்திரத்தில் தான் பிறந்தான் என்பதற்கு சான்று திருவாரூரில் மட்டும் தான் உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா ?
திருவாரூர் தியாகராஜர் கோவில் கருவறையின் மேற்குபுறச சுவரில் உள்ள கல்வெட்டுகளில் ராஜேந்திர சோழன் தனது பிறந்த நாள் மற்றும் தனது தந்தையின் பிறந்தநாள் அன்று கோவிலில் விழா கொண்டாடப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். 

மாமன்னர் ராஜராஜன் ஐப்பசி மாதத்து சதய நாளிலும், அவருடைய மகன் ராஜேந்திரன் ஆடி மாதத்துத் திருவாதிரையிலும் பிறந்தவர் என்ற குறிப்பு அந்த மன்னராலேயே பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

ராஜராஜனின் பிறந்த வருடம் சொல்லும் கல்வெட்டு இருக்கும் இடம் திருவாரூர் என்பது பெருமையான செய்தியாகும். 

முத்து கொத்தனார் : 

வரலாற்றில்இடம்பிடித்த பலர் வீர செயல்கள் செய்தவர்கள்  சிலர் தியாகங்களை செய்தவர்கள்.

இதில் முத்து கொத்தனார் இரண்டாவது வகை.

1920 முதல் திருவாரூர் தேர் கட்டுமானத்தை செய்து வந்த தலைமை கொத்தனார் திரு. முத்து ஆவார். 

திருவாரூர் தேர் 1926 ஆம் ஆண்டு தீ பற்றி எறிந்த பொழுது தேரில் இருந்த தியாகராஜர் சிலையை தன் முளுபலத்தை கொண்டு தேரின் விளிம்பிற்கு கொண்டுவந்த அவர்,  காலால் தியாகராஜர் சிலையை எட்டி உதைத்து கீழே தள்ளினார். 

தொப்பென்று கீழே விழுந்த தியாகராஜர் சிலையை மக்கள் கமலாலய குளக்கரையில் உள்ள மேற்கு கோபுர வாயில் வழியாக கோவிலுக்குள் கொண்டு சென்றனர். தியாகராஜர் சிலை மேற்கு கோபுரம் வழியாக கோவிலுக்குள் நுழைந்தது அந்த ஒருமுறை மட்டுமே. 

இன்றும் முத்து கொத்தனார் வழி குடும்பத்தாரே தேர் கட்டுமானத்தை செய்து வருகின்றனர்.
ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

திருவாரூர் தேருக்கு 10 சக்கரங்கள் இருந்தன என்பது உங்களுக்கு தெரியுமா ?

  திருவாரூரில் தங்க கோவில் பற்றி உங்களுக்கு தெரியுமா ? திருவாரூர் தேருக்கு 10 சக்கரங்கள் இருந்தன என்பது உங்களுக்கு தெரியுமா ? தி...