Wednesday, January 15, 2025

தை மாதத்தின் சிறப்புகள் என்னென்ன தெரியுமா?

*தை மாதத்தின்* *சிறப்புகள்*
*என்னென்ன தெரியுமா*? 
சித்திரை, ஆடி, ஐப்பசி, தை – இந்த நான்கு மாத பிறப்புகளும் பிரம்மாவுக்குரிய காலங்கள் ஆகும். 

இதனை விஷு 
புண்ணிய காலம் 
என்று கூறுவார்கள்.

தை மாதம் என்பது சக்தி வாய்ந்தது. 

இதனை மகர மாதம் என்றும் அழைப்பார்கள். 

மகரத்திற்குள் சூரியன் நுழைவதே மகர மாதம். 

தைமாதம் சூரியன் மகரராசியில் பிரவேசிக்கும் நேரத்திற்கு பின்னர் 8மணி நேரம் உத்திராயண புண்ய காலமாகும்

மகர ராசி சர ராசியாகும்

ஜோதிடத்தில் பார்க்கும் போது, பூமியை இரண்டாகப் பிரிப்பது போல் ஆகாயத்தை இரண்டாக பிரிப்பார்கள். 

அதை சூரியன் பகுதி, சந்திரன் பகுதி என்றும் கூறுவதுண்டு.

அதில் மகரத்தில் 
இருந்து கடகம் வரை சந்திரனுடைய பகுதிக்குள் வரும், 

அவைகள் சந்திராதிக்கத்திற்குரியன. 

இந்த மாதத்தில் இருந்து சூரியன் பகுதி துவங்குகிறது. 

இந்த மாதத்தில் சூரியப் பகுதி வலிமையடைகிறது.

அதாவது உத்திரயாணப் புண்ணிய காலம் துவங்குகிறது. 

அதாவது காலத்தை இரண்டு அயனமாகப் பிரிக்க வேண்டும். 

தக்‍ஷாயணம் (தெற்கு), உத்திராயணம் (வடக்கு) என்பவை.

அதனால்தான் இந்த காலம் எல்லா வகையிலும் சிறப்புடையது. 

உத்திராடம் சிறந்த நட்சத்திரம். உத்திராடத்தில் பிள்ளையும், ஊர் எல்லையில் கொல்லையும் (வயலும்) என்பது பழமொழி.

அதாவது உத்திராடத்தில் பிள்ளை பிறந்தால் உடனடியாக அவர்களுக்கு அருகிலேயே நிலம், வீடு அல்லது விளை நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். 

எனவே உத்திராடத்தின் ராசியான மகரத்தில் சூரியன் நுழைவது வெகுச் சிறப்பான ஒன்றாகும்.

அந்த நேரத்தில்தான் பல விண்மீன்கள் சூரியனையும், சந்திரனையும் சூழ்ந்திருக்கும். மலையாளத்தில், சேர நாட்டில் எடுத்துக் கொண்டால் இதனை மகர ஜோதி என்று அழைக்கின்றனர். 

விளக்கை ஏற்றி ஜோதி என்று காண்பிப்பது ஒரு அடையாளமே, ஆனால் இயற்கையாக இருப்பதை அறிவிப்பதற்காகவே அவ்வாறு செய்கின்றனர்.

தைப் பொங்கல்!

மகர மாதத்திற்குள் உத்திரப்புண்ணியக்
காலம் துவங்கக் கூடிய முதல் நாள்தான் தை பொங்கல். 

சூரியனுக்கும் இயக்கம் உண்டு, அது தன்னைத் தானே சுற்றிக் கொள்ளும். 

ஆன்மீகத்தில் சிவனுக்கு இணையாக சூரியனை ஒப்பிடுவர். 

சிவன் தனக்குத் தானே கட்டுப்பாடுகள் வைத்துக் கொள்வார். 

அவருக்கு மேலே யாரும் கிடையாது. 

அதுபோல்தான் சூரியனும் எதையும் சுற்ற வேண்டாம். 
மற்ற கோள்கள்தான் சூரியனை சுற்றுகின்றன.

தை பிறந்தால் வழி பிறக்கும் – என்ன காரணம் தெரியுமா ?

நேற்று (14-1-2025)தை மாதம் பிறந்துள்ளது, 

தை மாதத்தில் இருந்து உத்ராயண புண்ய காலம் தொடங்குகிறது. 

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள் அதற்கான காரணம் தெரியுமா?

'உத்தர்' என்றால் வடமொழியில் வடக்கு என்றும் 'அயனம்' என்றால் வழி என்றும் பொருளாகும். 

சூரியன் தென்திசையிலிருந்து வடதிசை நோக்கி பயணம் செய்யும் காலமே உத்தராயணம் எனப்படும். 

தை, மாசி,பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய ஆறு மாதங்களும் உத்தராயண காலமாகும். 

நம்முடைய ஆறு மாத காலம் தேவர்களுக்கு பகல் பொழுதாகும். 

உத்தராயணம், தட்சிணாயனம் ஆகிய இரு அயன காலங்களில் உத்தராயணம் மிகவும் புனிதமான காலமாக போற்றப்படுகிறது.

பீஷ்மர் தனது தந்தையாகிய சந்தனுவிடமிருந்து தான் விரும்பினால் மட்டுமே சாகக் கூடிய 'இச்சா மிருத்யு' என்னும் வரத்தை பெற்றிருந்தார். 

அவர் அனுமதி கொடுக்காவிட்டால் மரணம் கூட அவரை அணுக முடியாது. 

பாரதப் போரில் பீஷ்மர் உடல் முழுவதும் அர்ஜுனன் எய்த அம்புகள் ஒரு அங்குலம் இடை வெளிகூட இல்லாமல் பாய்ந்திருக்க, கீழே சாய்ந்த பீஷ்மர் உடனே மரணம் அடையவில்லை. 

தான் பெற்றிருந்த வரத்தை உபயோகப் படுத்தி மரணத்தை உடனே தன்னை நெருங்க விடாது தடுத்திருந்தார். 

ஏனென்றால் பாரதப்போர் மார்கழி மாதம் தட்சிணாயன காலத்தில் நடைபெற்றது. 

இக்காலத்தில் மரணம் அடைந்தால் மறுபிறவி உண்டு என்பதால், அம்பு படுக்கையில் இரத்தம் சொட்டச் சொட்ட உத்தராயண காலம் ஆரம்பிக்கும் வரை தனது உயிரை விடாமல் நிறுத்தி வைத்து, உத்தராயண காலம் தை மாதம் 1 -ஆம் தேதி ஆரம்பமானவுடன் மரணமடைந்தார். 

இதிலிருந்தே இந்த உத்தராயண காலம் எவ்வளவு புனிதம் வாய்ந்தது என்பது தெளிவாகும். 

தை மாதம் 1 -ஆம் தேதியன்று உத்தராயணம் ஆரம்பிப்பதைதான் 'தை பிறந்தால் வழி பிறக்கும்' 
என்று முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

இந்த பழமொழிக்கு மற்றுமொரு காரணமும் கூறப்படுகிறது. 

வயல் வெளியில் தை மாதத்தில் கதிர்கள் அறுவடைக்குத் தயாராகி, 
தலை சாய்த்து, வரப்புகளின் மேல் படர்ந்து, நடந்து செல்ல வழி இல்லாமல், பாதைகளை மறைத்து இருக்கும்.

தை மாதத்தில் அறுவடை முடிந்த பிறகே மேற்கொண்டு தொடர்ந்து செல்ல வழி பிறக்கும். 

மேலும் அறுவடை முடிந்த பின்புதான் கடனில் மூழ்கி இருக்கும் விவசாயின் வாழ்க்கையிலும் நல்ல வழி பிறக்கும் என்பதையே இவ்வாறு கூறியுள்ளனர்

தை பிறந்ததால் வழி பிறக்கும் என்பது பழமொழி. 

எல்லாமே தையில் 
தான் துவங்கும். தை பிறக்கட்டும் ஜாதகத்தை எடுக்கலாம் என்பார்கள். 

தை மாதத்தில் திருமண நிச்சயம் செய்வார்கள். 

வேளாண் துறையிலும் தை தான் முதல் மாதம். 

நெல், சோளம் எல்லாமே மார்கழியில் அறுவடை முடிந்து தை முதல் நாள் புதிய நெல், 
புது பானை வைத்துக் கொணடாடுவதே தை பொங்கல்.

பங்குனி மாதத்தில் எந்த அறுவடையும் செய்வதில்லை. மாற்றுப் பயிர்கள் வேண்டுமானால் செய்யப்படலாம். 

ஆனால் தையில்தான் எல்லா அறுவடைகளும் முடிந்து அடுத்த காலத்தை துவங்குகிறோம்.

பரிகாரத்திற்கும் தையே சிறந்தது!

ராஜ ராஜ சோழன் காலத்தில் இந்த தை மாதத்தில்தான் பல பரிகாரங்களைச் செய்துள்ளனர். 

பல நல்ல திட்டங்கள் இந்த தை மாதத்தில் துவக்கியுள்ளார்கள். 

நெற்களஞ்சியத்தில் இருந்து பழைய நெல்களை கொடுத்துவிட்டு அல்லது விற்றுவிட்டு புதிய நெல்களை கொள்முதல் செய்து கொள்வர்.

நெற்களஞ்சியத்தில் இருக்கும் தானியங்களை மக்களுக்கு தானதர்மம் செய்துவிடுவர். 

தான தர்மங்கள் செய்வதற்கும் உகந்தது தை மாதம்தான். 

தட்பவெப்ப நிலையில் பார்த்தாலும் தை மாதம் சிறந்த மாதகும். குளிரும் இருக்கும், வெயிலும் இருக்கும், எதுவும் கடுமையாக இருக்காது. அதுவே வெகு சிறப்பானது.

எனவே சூரியனின் உத்திராயணப் பயணம் துவங்கும் இந்த தை முதல் 
நாள் தமிழர் திருநாளாகும். 

இந்த மாதத்தில் திருமணம் செய்தல், புதுமனை புகுதல், 
புது வேலையில் சேர்வது, 
புதிய நிறுவனம் தொடங்குதல் போன்ற அத்தனையும் துவங்கினால் அது வெற்றி பெறும். நீண்ட காலம் நிலைக்கும்.

சூரியனை வணங்கும் நாளாகவும் தை பொங்கல் விளங்குகிறது. 

புது அரிசி - கை குத்தல் - அரிசி களைந்து பானையில் வைத்து சூரியனுக்கு நேர வைத்து பொங்கல் பொங்குவர்.

தை மாதத்தில்தான் சூரியப் பொங்கல் கொண்டாடுகிறோம். 

மறுநாள் மாட்டுப் பொங்கல். அன்று குலதெய்வத்தை வழிபடுவேண்டும்.
ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

தை மாதத்தின் சிறப்புகள் என்னென்ன தெரியுமா?

*தை மாதத்தின்* *சிறப்புகள்* *என்னென்ன தெரியுமா*?  சித்திரை, ஆடி, ஐப்பசி, தை – இந்த நான்கு மாத பிறப்புகளும் பிரம்மாவுக்குரிய காலங...