🌹அனைவருக்கும் இனிய மாட்டுப்பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்!!
!! *கோமாதா எம் குலமாதா/*பசுமாடுகளைப் பற்றிய சில அரிய தகவல்கள்*!!
1. மாடுகள் ஒன்றுகூடி வாழும் விலங்குகள். மனிதர்களைப் போல் மாடுகள், தங்களுக்கு பிடித்திருக்கும் சக மாடுகளுடன் ஒன்றுசேரும்; பிடிக்காத மாடுகளைவிட்டு விலகும்.
2. சிவப்பு, பச்சை ஆகிய நிறங்களை மாடுகள் பிரித்துக் காண இயலாது.
3. மாடுகளின் இதயத் துடிப்பு விநாடிக்கு 60 முதல் 70 வரை இருக்கிறது.
4. மாடுகளின் சராசரி உடல் எடை சுமார் 545 கிலோகிராம்
5. மாடுகளின் கண்கள் 360 டிகிரிக்குச் சற்றுக் குறைவான அளவில் சுற்றிப் பார்க்க முடிகிறது.
6. மாடுகளைப் படிகளை ஏற வைப்பது சுலபம். அவற்றைப் படிகளில் இறங்க வைப்பது மிகக் கடினம்.
7. நாள்தோறும் மாடுகள் 150 லீட்டர்வரை தண்ணீர் குடிக்கும்
8. மனிதர்களைப் போல் பசுமாடுகள் கற்பமாகும்போது தங்களது குட்டிகளைச் சுமார் 9 மாதங்கள் சுமக்கின்றன.
9. மாடுகளின் வாயின் கீழ்ப்பகுதியில் மட்டும் பற்கள் உள்ளன.
10. மாடு என்ற சொல் தமிழில் மற்றொரு பொருள், செல்வம். "கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை" என்ற குறளில் "மாடு" எனும் சொல் செல்வத்தைக் குறிக்கிறது
பசுக்களுக்கு மேல் தாடையில் பற்கள் கிடையாது !
ஒரு ஆரோக்கியமான பசு மாடு தனது வாழ்நாளில் சுமார் 200,000 குவளைகள் பால் கொடுக்கிறது.!
பசு மாட்டுக்கு நான்கு வயிறுகள் உள்ளன. ருமென், ரெடிகுலம், ஒமசம்,அபோசம் ( rumen, reticulum, omasum and abomasum)என்பவாகும்.ருமென் எனப்படும் முதல் குடல் அளவில் பெரியதாகவும், அசைபோடும் உணவை நொதிக்கச் செய்யும் ’நொதித்தல்’ அறையாகவும் செயல்படுகிறது. கடைசி வயிறான அபோசம் அமைப்பிலும், செயல்பாட்டிலும் மனித குடல் போல் செயல்படுகிறது.
பசு மாட்டின் சராசரி ஆயுட்காலம் ஏழு ஆண்டுகள். ஆனால் கட்டி வளர்க்காமல் இயற்கையில் சுற்றித்திரிபவை பதினைந்து ஆண்டுகள் வரை வாழும்.
உலகில் அதிக வாழ்நாடகள் வாழ்ந்த பசுவாக Big Bertha பிக் பெர்த்தா என்ற மாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது இது தனது 48 வயதை 1993 ல் பூர்த்தி செய்தது.இது 39 கன்றுகளை ஈன்றிருந்தது.
பசுக்களின் சராசரி உயரம் சுமார் 55 அங்குலங்கள் ஆகும் ஆனால் Dexters (டெக்ஸ்டர்ஸ்) எனப்படும் வகை 36 ல் இருந்து 42 அங்குலங்கள் மட்டும் வளரக்கூடிய வகையாகும். அந்த இனத்தை சேர்ந்த Swallow (ஸ்வாலோ) என்றழைக்கப்பட்ட மாடுதான் கின்னஸ் ரிக்கார்டின்படி உலகின் உயரம் குறைந்த மாடாகும். அதண் உயரம் 33 அன்குலங்கள் ஆகும்.
உலகில் ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட கால்நடைகள் உள்ளன. இந்தியாவில் மட்டும் சுமார் 200 மில்லியன்கள் கால்நடைகள் உள்ளன.
1. இந்தியாவில் குஜராத் மாநிலத்தில்தான் பசுவதைத் தடை சட்டம் மிகத் தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது.
2. நேபாளம் நாட்டில் பசுவை கௌரவிக்கும் வகையில் அதை அந்த நாட்டின் தேசிய விலங்காக அறிவித்துள்ளனர்.
3. பகவான் கண்ணபிரானுக்கு மிக, மிக பிடித்தது பசுதான். எனவேதான் அவர் தன்னை கோபாலகிருஷ்ணன் என்று அழைக்கும்படி கூறினார் என்ற கதை உண்டு.
4. கோபூசை நடத்தும் போது கண்டிப்பாக பசுவுடன் அதன் கன்றும் இருக்க வேண்டும்.
5. பசுவின் வாயில் கலிதேவதை இருப்பதால்தான் பசு முன் பகுதியில் பூசை செய்யப்படுவது இல்லை.
6. சஷ்டியப்பூர்த்தி, சதாபிஷேகம் போன்ற நாள்களில் பசு தானம் செய்தால் கூடுதல் புண்ணியம் கிடைக்கும்.
7. ஒரு பசு முதல் கன்று பிரசவித்ததும், அதை தேனு என்பார்கள். இரண்டாவது கன்று பிரசவித்ததும் அதற்கு ``கோ'' என்றழைப்பார்கள். எனவே இரண்டாவது கன்று பிரசவித்த பசுவைத்தான் கோ பூசைக்குப் பயன்படுத்துவார்கள்.
8. காமதேனு பசு மூவுலகிற்கும் தாயாக கருதப்படுகிறது.
9. பசுவின் கால் தூசி நம் மீது படுவது கங்கையில் புனித நீராடலுக்கு சமம் என்று புராணக் கதைகளில் கூறப்பட்டுள்ளது.
10. பசுவுக்கு தினமும் பூசை செய்வது என்பது பராசக்திக்கு பூஜை செய்வதற்கு சமமாகும்.
.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment