Thursday, January 23, 2025

திருமண வரம் அருளும் தாரமங்கலம் கைலாசநாதர் கோயில் சேலம்.



 திருமண வரம் அருளும் தாரமங்கலம் 
 கைலாசநாதர் கோயில் 

 சேலம் மாவட்டம் 

சந்திரனுக்கும், சூரியனுக்கும் தாரகாபதி, தாரகன் என்ற பெயர்கள் இருப்பதால் தாரமங்கலம் என்ற பெயர் உண்டாயிற்று என்று கூறுவார்கள்.

கோயில் என்பது இறைவனின் இருப்பிடம் என்பதை தாண்டி மக்களின் பாதுகாப்பு அறன் என்னும் கொள்கையில் இந்த கோயில் அமைந்துள்ளது.

 இக்கோயில் சிற்ப கலைக்கு மிகவும் புகழ்பெற்றது. இங்குள்ள சிங்கத்தின் வாயில் உருளும் கல், இராமன் வாலியை வதைக்கும் சிற்பம் ஆகியவை வியப்புக்குரியவை.
மேற்கு பார்த்து அமைந்த சிவன் கோவில் இது, இந்த பழமையான சிவன் கோவில் தமிழர்களின் சிற்பக்கலைகளுக்கு மேலும் ஒரு சான்று. இந்த கோவிலின் மூலவர் கைலாசநாதர், தாயார் கற்பகாம்பாள் அருள்பாலிக்கிறார்கள். இக்கோயிலிலுள்ள இறைவனை சந்திரனும், சூரியனும் வந்து தொழுது செல்வதாகக் கூறப்படுகிறது.

இந்த ஊருக்கு தாரமங்கலம் என்று பெயர் வரக்காரணம், சிவபெருமானுக்கும், பார்வதிக்கும் இங்கு திருமணம் நடந்தது என்றும், திருமால் தாரை வார்த்துக் கொடுத்து மணவிழாவினை நடத்தியதால் 'தாரமங்கலம்' என்ற பெயர் வந்ததென்றும் கூறுவர்.

ஆலயத்தின் முன்கோபுரம் 90 அடி உயரத்தில் ஐந்து அடுக்குகளைக்கொண்டது. ஒரு பெரிய தேரைக் குதிரைகளும் யானைகளும் இழுத்துச் செல்வதைப் போன்ற தோற்றத்தில் இந்தக் கோபுரம் அமைந்துள்ளது

 ஆண்டுதோறும் உத்தராயண, தட்சணயான புண்ணிய காலங்களில் மாலை வேளையில் சூரியன் கதிர்களும், சந்திரன் ஒளியும் சிவலிங்கத்தின் மீது படுகின்றன. அதாவது, சூரிய ஒளி மூலஸ்தான சிவலிங்க மூர்த்தி மேல் விழுவதை சூரிய பூஜை என்று கூறுவர். சூரியனுடைய கதிர்கள் ராஜகோபுர வாயிலின் வழியே வந்து, நந்தி மண்டபத்தின் ஊடே புகுந்து, பின் மூன்று உள் வாயிலையும் கடந்து சிவலிங்கத்தின் மேல்படுவது அபூர்வமாக கருதப்படுகிறது.

 கோயிலில் உட்பிரகார தூண்கள் எல்லாவற்றிலும் அற்புதமான சிற்ப வேலைப்பாடு அமைந்த திருவுருவங்கள் காணப்படுகின்றன.

மாசி 9, 10, 11 ஆகிய தேதிகளில் சூரிய ஒளி நந்தியின் கொம்பு வழியே சென்று சிவலிங்கத்தின் மீது மூன்றாம் பிறை போல் விழுகிறது. இதைக்காண அன்றைய தேதிகளில் அடியவர்கள் ஏராளமானோர் வருகின்றனர்.

இரதி சிலையிலிருந்து பார்த்தால் மன்மதன் தெரியாத வகையிலும், மன்மதன் சிலையிலிருந்து பார்த்தால் இரதி தெரியும்படியும் அமைந்த சிற்பம் சிறப்பானது. இத்தலத்தில் உள்ள கல் சங்கிலி, கல் தாமரை, சிங்கம் ஆகியவை சிற்ப கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டு. எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும் பவளக்கல் கோயிலின் நுழைவாயிலில் படிக்கல்லாக உள்ளது.

 எதிரி நாட்டு படை தாக்க வரும்போது பொன் பொருள் மக்களை பாதுகாக்கும் வீதம் இந்த கோவில் அமைக்கப்பட்டுள்ளது. ராஜகோபுரம் 90 அடி உயரம் கொண்டது வாசல் 20 அடி கொண்ட வேங்கை மரத்தினால் ஆன கதவுகள் அமைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு கதவுகளிலும் 60 கூர்மையான உலோக குமிழ்கள் வீதம் மொத்தம் 120 கூரிய உலோக குமிழ்கள் அமைக்கப்பட்டுள்ளது. யானை வைத்து கதவுகளை உடைக்கும் அந்த காலத்தில் யானை முட்டி மோதி உடைக்கும்போது குத்தி கிழித்துவிடும்படி நுணுக்கமாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கோவில் சிற்பக்கலைக்கு புகழ் பெற்றது. சிங்கமுகமும் மனித தலையும் கொண்ட யாழியின் வாயில் உள்ள கல் உருண்டையை நாம் எவ்வாறு வேண்டுமானாலும் உருட்டலாம் ஆனால் கல்லை வெளியே எடுக்க முடியாது.

கோபுரத்தை அடுத்துள்ள சிவப்பு பவளக்கல் படிகளில் 5 நிமிடம் அமர்ந்தாலே போதும் நம் உடலில் உள்ள வெப்பம் தணிந்து விடும். இந்த சிறப்புகள் தமிழ்நாட்டில் எங்கேயும் கிடையாது. 

உலகத்திலேயே மிகச்சிறிய உயிரினமான எறும்புகள் நுழைவதற்காக துளைகளை விட்டு செதுக்கிய சிலை இந்த கோவிலில் மட்டும்தான் உள்ளது. எறும்புகள் நுழைந்து வரும் அளவுக்கு மட்டுமே துவாரம் உள்ள ஒரு மனிதனின் முகம் அமைக்கப்பட்டுள்ளது. ஊர்ந்து கொண்டிருக்கும் எறும்புகள் அந்த சிற்பத்தின் காது வழியாக உள்ளே சென்று பின்னர் மூக்கு வழியாக வெளியே வரலாம். பிறகு தாடியில் உள்ள துவாரங்கள் வழியே உள்ளே நுழைந்து மறுபக்கம் சென்று மற்றொரு காது வழியாக வெளியே செல்லும் வகையில் நுண்ணியதான துவாரங்களைக் கொண்டதாகக் கல்லில் சிலை செதுக்கியுள்ளனர்.

வளைந்த வாளுடனும், நீண்ட தாடி, தலைப்பாகையுடனும் படை எடுத்துவரும் மாலிக்கபூரின் வீரர்கள், அதை எதிர்த்து குறுவாள், கேடயத்துடன் எதிர்கொள்ளும் தமிழக மன்னர்களின் போர்க்காட்சிகள் பல இங்கு செதுக்கப்பட்டுள்ளது. சோழ, பாண்டிய நாடுகளில் இருந்த செல்வங்களை எல்லாம் கொள்ளையிட்ட பின்னர் அவற்றைத் தன்னுடன் வந்திருந்த யானை மற்றும் ஒட்டகங்களின் மீது பொதி மூட்டையாய் ஏற்றிக்கொண்டு திரும்பிச் செல்லும் காட்சியும் சித்திரங்களாக உள்ளது.

கோயில் தெப்பகுளம் எண்கோண வடிவில் அமைந்துள்ளது. இதன் சிறப்பு என்னவென்றால் ஒரு மூளையில் நாம் கல் எரிந்தால் அதன் எட்டு பக்கமும் மோதி மீண்டும் பழைய இடத்தை வந்தடையும்.

 பெண்ணிற்கு பெரியது மானமா…. தர்மமா… என்பதை விளக்கும் வகையில் இங்கு உள்ள சிற்பம் ஒன்றை அமைத்துள்ளனர். சிவபெருமான் வயதானவர் போன்று மாறு வேடத்தில் வந்து ஒரு குடியானப் பெண்ணிடம் "பிச்சை" கேட்கிறார். அப்போது அந்தப்பெண், அன்னத்தை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வெளியே வரும்போது, காற்று வேகமாக வீசியதால் அந்த பெண்ணின் மார்புச் சேலை விலகி விடுகிறது. தானத்தைவிட "மானமே" பெரிதெனக் கருதிய அந்தப்பெண், தன்னுடைய இடக்கையால் மார்புச் சேலையை இழுத்து மூடுகிறார், அப்போது பறந்து வந்த ஒரு கிளி, பெண்ணின் வலது கையிலிருக்கும் சாதத்தை எச்சம் செய்து விடுகிறது. அந்த பெண் இறைவனுக்கு உணவு எடுத்துக்கொண்டு செல்லும் காட்சி மிகுந்த முக மலர்ச்சியோடும், கிளி சாப்பிட்டு எச்சமாகி விட்டதால், அந்த பெண் கோபத்தில் முகம் வாடியுள்ள காட்சியும் இரண்டு சிலைகளில் மிக அழகாக வடித்துள்ளனர்.

மற்றொரு குறிப்பிடத்தக்க சிற்பம் 18 ஆயுதமேந்திய சிவன் நடனம். சிவபெருமான் விழுந்த தனது காதணியை தரையில் இருந்து காலால் எடுத்து மீண்டும் காதுகளுக்கு வைக்கும் காட்சி அழகாக செதுக்கப்பட்டுள்ளது.

மேலும் இங்கு அமைக்கப்பட்ட சிலைகள் ஆச்சர்யத்துக்கு மேல் ஆச்சரியம் அளிக்கிறது. 

மேலும் முன்மண்டபத் தூண்களில் ஒன்றில் இராமன் உருவமும், மற்றொரு தூணில் வாலி உருவமும் செதுக்கப்பட்டுள்ளது. வாலி சிலையில் நம் கண்களை வைத்துக்கொண்டு பார்த்தால் இராமன் உருவம் தெரியாது. இராமன் சிலையில் நம் கண்களை வைத்துக்கொண்டு பார்ந்தால் வாலி உருவம் தெரியும். இது ராமன் வாலியை வதம் செய்த நிகழ்வை காட்டுகிறது. இப்படி மிகுந்த அருமையான சிற்பங்கள் பலவற்றை இங்கு காணலாம்.

இத்தலத்திலேயே வெகு சிறப்பான சன்னதி பாதாள லிங்கம் சன்னதியாகும், மகா மண்டபத்தின் வடமேற்கு மூலையில், தலத்தின் கீழ்ப்பகுதியில் காற்று புக முடியாத ஒரு அறைக்குள் இருக்கும் இந்த பாதாள லிங்கத்திற்குப் பச்சைக் கற்பூரம் வைத்து செவ்வாய்க்கிழமை தோறும் அபிஷேகம் செய்தால் கல்யாண பாக்கியம், புத்திர பாக்கியம் மற்றும் தொழில் விருத்தி ஆகியவை கை கூடும் என்பது நம்பிக்கை.

இந்த கோவில், சிறப்பு விநாயகர் சிலையை கொண்டுள்ளது, அதில் நீங்கள் தண்ணீரை ஊற்றினால் அது கீழே ஒரு கிணற்றுக்குச் செல்லும், மேலும் நீர் எந்த வழியாகப் பயணிக்கிறது என்பதை நீங்கள் பார்க்க முடியாது, மேலும் நீரின் வீழ்ச்சியைக் கேட்கலாம்.

இத்தலத்திலேயே வெகு சிறப்பான சன்னதி இது. தலத்தின் கீழ்பகுதியில் ஒரு காற்று புக முடியாத அறைக்குள் இருக்கும் இந்த பாதாள லிங்கத்திற்கு பச்சை கற்பூரம் வைத்து செவ்வாய்க்கிழமை தோறும் வழிபாடு செய்தால் திருமணம், பிள்ளைப்பேறு மற்றும் தொழில் மேம்பாடு ஆகியவை கைகூடுவதாக நம்பப்படுகிறது.

பார்க்க வேண்டிய தூண்களில் உள்ள சிற்பங்கள், ரிஷி பதினி, பார்வதி, பிக்ஷாதனர், மோகினி அவதாரத்தில் மகாவிஷ்ணு, பதஞ்சலி, வியக்ரபதர், ஜெயமுனி, ஹயக்ரீவர், ஒர்துவ தண்டவர், சிவன் மற்றும் மனநிலை ஷிவா விஷ்ணு, அகோர வீரபாதிரர், அக்னி வீரபாதிரரர், பிரதோஷ நாயகர், தட்சிணமூர்த்தி, துவாரபலகர், ஸ்ரீ காளி, மாணிக்கவாசகர், பிரம்மா, காஞ்சி காமாட்சி, மன்மதன், ரதி

இத்தலத்தில் உள்ள சுரகேசுவரர் 3 தலை, 3 கால்களோடு இருப்பது சிறப்பு. இவருக்கு மிளகு ரசம் வைத்து சாதம் படைத்து, வடைமாலை சாற்றி வழிபாடு செய்தால் காய்ச்சல் மற்றும் தீராத நோய்கள் குணமடைவதாக நம்பப்படுகிறது.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

திருவதிகை கோயிலின் நிழல் தரையில் விழாதபடி கணித சாஸ்திரபடி கட்டப்பட்டுள்ளது.

அருள்மிகு வீரட்டானேசுவரர் திருக்கோயில், திருவதிகை, பண்ருட்டி போஸ்ட், கடலூர் மாவட்டம். காலை 6மணி முதல் 12 மணி வரை மாலை 5 மணி முதல...