Thursday, January 23, 2025

சப்த ஸ்தான தலங்களில் ஒன்றான திருப்பூந்துருத்தி புஷ்பவனேஸ்வரர்.



” மாமலை மங்கை ஓர் பால் குறியுடையன்”, என்று #அர்த்த_நாரீஸ்வரர் திருமேனியைத் தனது திருப்பூந்துருத்தி முதலாம் பதிகத்தில் பாடுகிறார் #அப்பர்_சுவாமிகள்.

தஞ்சை — திருக்கண்டியூர் சாலையில், திருக்கண்டியூருக்கு அருகில் சப்த ஸ்தான தலங்களில் ஒன்றான திருப்பூந்துருத்தி திருத்தலத்தில் ஸ்ரீ #புஷ்பவனேஸ்வரர் ஆலயத்தின் பின்புறம் #லிங்கோத்பவர் இருக்க வேண்டிய இடத்தில் (கோஷ்டத்தில் )மேற்கு திசையை நோக்கியவண்ணம் அருள்பாலிக்கிறார்.

இவர் ரிஷபத்தின் தலை மீது வலது கரத்தை ஊன்றியபடி சாய்ந்த நிலையில் நின்றிருக்கும் பாங்கு மற்ற #அர்த்தநாரீஸ்வரர் திருவுருவங்களில் இருந்து மாறுபடுகிறது. சொக்கவைக்கும் அழகில் சொக்கேசனாக, உமையொரு பாகனாக காட்சியளிக்கிறார்.
ஆண்மையின் கம்பீரமும், பெண்மையின் நளினமும் வெளிப்படுகின்றன.

வித்தியாசமான சடைமுடியும், சிவனின் காதில் மகர குண்டலமும், உமையின் காதில் குழையும் மார்பிலும், கழுத்திலும் உள்ள அணிமணிகள் ஆணுக்குரியனவும் பெண்ணுக்குரியனவும் வித்தியாசப்படுத்தி காட்டப்பட்டுள்ளன.

அணிந்துள்ள முப்புரி நூலில் கூட #உமையின் பாகத்தில் மணிகளைப் போலவும், மார்புக்கு கீழ் சாதாரண நூலாகவும் காணப்படுகிறது.

#சிவனின் மேல் கரத்தில் மழு உள்ளது. கீழ்க் கரத்தை ரிஷபத்தின் தலை மீது ஊன்றி, சாய்ந்த நிலையில் இடுப்பை சற்று யோஒசித்து(ஒடித்து) நிற்கும் அழகோ அழகு.

#அன்னை தன் கரத்தை சாய்ந்த இடுப்பின் மீது ஒயிலாக வைத்திருக்க, கையிலுள்ள நீலோற்பலம் மலர் நேராக இல்லாமல், அவள் தோள் மீது சாய்ந்தபடி இருப்பது வசீகரிக்கிறது .

அன்னையின் ஆடை அமைப்பும், வஸ்திரக் கட்டும் மிகவும் அற்புதம்.

ரிஷபம் கூடத் தலையை சற்றே திருப்பி நிற்கிறது.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

திருவதிகை கோயிலின் நிழல் தரையில் விழாதபடி கணித சாஸ்திரபடி கட்டப்பட்டுள்ளது.

அருள்மிகு வீரட்டானேசுவரர் திருக்கோயில், திருவதிகை, பண்ருட்டி போஸ்ட், கடலூர் மாவட்டம். காலை 6மணி முதல் 12 மணி வரை மாலை 5 மணி முதல...