Saturday, January 4, 2025

குழந்தைக்கு வலிப்பு நோய்களை குணமாக்கும் சக்தி கொண்டவர் சிதம்பர நடராஜர்....

#சிதம்பரத்தில்_முயலக_ரகசியம்

நடராஜரின் பாதத்தின் அடியிலுள்ள குழந்தை வடிவ அரக்கனின் பெயர் முயலகன். அவனுடைய இன்னொரு பெயர் அபஸ்மாரன். 

மருத்துவ துறையில் அபஸ்மாரா அல்லது முயலகம் என்றால் வலிப்பு/வாத நோய் என பொருள். பெரும்பாலும் சிறுகுழந்தைகளுக்கு வரும் வலிப்பு நோய்க்கு முயலகம் என பெயர். 

சிதம்பர நடராஜர் இருக்கும் ஸ்தலம் ஆகாய தத்துவத்தை சார்ந்தது. உடலில் உண்டாகும் வலிப்பு அல்லது ஜன்னி நோய்க்கு ஆகாய தத்துவத்தை சார்ந்த கபநாடியும் காரணம். மூளையில் சேர்ந்துள்ள நீர்கோர்வை இருப்பின் கபநாடி பாதிக்கப்பட்டு குழந்தைக்கு வலிப்பு உண்டாகும். 

இத்தகைய நோய்களை குணமாக்கும் சக்தி கொண்டவர் சிதம்பர நடராஜர் என குறிப்பால் உணர்த்துகிறது முயலகன் மீது ஆடும் தாண்டவம்.
நடராசர் வடிவங்களில் அவரது ஊன்றிய திருவடியின் கீழ் மிதியுண்டவாறு கிடக்கும் பூதத்தை முயலகன் என்பர். நன்னெறியில் செல்ல முயலும் உயிர்களை அவ்வழியில் தொடர்ந்து  மேற்செல்லவொட்டாமல் தடுக்கும் ஆணவ மலத்தின் வடிவமாக அவன் விளங்குகின்றான். அவன் இறைவன் அருளுக்கு மாறான தன்மை உடையவன். உயிர்கள் ஆணவத்தால் பிணிபட்டுப் பிறவியை  எடுக்கின்றன. மேலும், தொடர்ந்து வரும் பிறவிகளிலும் துன்பமே இருந்தாலும் அத்துன்பங்களைப் போக்கிக் கொள்ளாமல் மீண்டும் மீண்டும் பிறவி எடுத்து அலைகிறது. உயிர்களின் அந்த விருப்பமே  தொடர்ந்து அதற்குப் பிறவியை வழங்குகிறது.

பிறவிச் சூழலுக்குக் காரணமான ஆணவத்தை அடக்கி மிதித்து மேலெழ ஒட்டாமல் செய்து உயிர்களை பிறவிச் சூழலிலிருந்து விடுபடச் செய்வது இறைவனின் அருளாகும். முயலகனின் செயல் அழிதலே  மோட்சத்தின் வாயிலாகும். உலக நடப்பிற்கு மும்மலங்களே காரணமாக இருப்பதால், பஞ்சகிருத்திய தாண்டவங்களில் முயலகன் மகிழ்வுடன் இருப்பதாகவும், பாம்புடன் விளையாடிக்  கொண்டிருப்பவனாகவும் காட்டப்படுகிறான். முயலகனை மனதில் விளையும் ஆசைகளாகவும் அவன் ஏந்தும் பாம்பை மும்மலங்களாகவும் கூறுவர். சில வடிவங்களில் முயலகன் இறைவனைச் சுட்டிக்  காட்டியவாறும் உள்ளான். இவனை அரக்கன் போலவும், கையில் கத்தி, கேடயம் ஏந்தியவனாகவும் அமைக்கின்றனர். இது தத்துவக் கோட்பாடுகளுக்கு மாறுபட்டதாகும்.

தட்சிணாமூர்த்தியின் காலடியிலும் மும்மலங்களின் வடிவான முயலகனை அமைக்கின்றனர். ஆணவம் அடங்கி நிற்கும் இடமே ஞானத்தின் பிறப்பிடம் என்பதால், தட்சிணாமூர்த்தியின் திருவடியிலும்  இவனை அமைத்துள்ளனர் என்பர்.சில தலங்களில் நடராசர் முயலகன் மீதின்றி மலர்ப் பீடத்தில் ஆடுவதைக் காண்கிறோம். இது ஆணவம் நீங்கிய நிலையில் உள்ள அன்பர்களின் இருதயத் தாமரையில்  இறைவன் ஆடும் நடனமாகும்.திருஞானசம்பந்தப் பெருமான் கொல்லி மழவன் என்ற அரசனின் மகளைப் பற்றியிருந்த முயலகன் என்னும் நோயை நீக்கிய தலம் திருப்பாச்சிலாச்சிரமம் (திருவாசி -  திருச்சி மாவட்டம்) என்னும் திருத்தலமாகும். இத்தலத்திலுள்ள நடராசப் பெருமான் திருவடிவத்தில் ஊன்றிய திருவடியின்கீழ் முயலகன் இல்லை. இந்த நடராஜர் பாம்பின் மீது  நடனமாடிக்கொண்டிருக்கின்றார். அவர் திருவடியின் கீழ் பாம்பின் படம் உள்ளது. பாம்பின் உடல் அவரது பின்காலில் படிந்துள்ளது. திருஞானசம்பந்தர் முயலகனின் நோயை நீக்கும்படிப் பாடியபோது  நடராஜர் படிமத்திலிருந்த முயலகனும் நீங்கிவிட்டான் என்று கூறுவர்.
                ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்.. 

No comments:

Post a Comment

Followers

வாயிலார் நாயனார் மனதுக்குள் தியான முறையில் கோயில் கட்டிப் பூஜை செய்தார்...

யால் சிவபெருமானையே எப்பொழுதும் மனத்திலே வைத்துத் தொழுது சிவாலயமே செல்லாமல், ஏதும் பேசாமல் வழிபட்டு இன்பமயமான சிவபதத்தை அடைந்தார...