Friday, January 17, 2025

மனிதனை மாமனிதனாக்குகிறது தியானம்



தூங்காமல் தூங்கி சுகம் பெறுதல் ஞான வழி என்ற தியானம்
“தூங்கிக்கண்டார் சிவலோகமும் தம்உள்ளே
தூங்கிக்கண்டார் சிவயோகமும் தம் உள்ளே
தூங்கிக் கண்டார் சிவபோகமும் தம்உள்ளே
தூங்கிக் கண்டார் நிலை சொல்வதெவ்வாறே”

தூங்கும் போது என்ன நிகழ்கின்றன என்று அறியாது இருப்பது போலத் தியான நிலையில் உலக விடயங்களை உணராது இருத்தலின் , அந்நிலையில் ஈடுபட்டிருந்த நிலையை தூங்கும் நிலையாகும், தூங்காமல் தூங்கி சுகம்பெறும் அமைதியான நிலையை தியானம் என்கிறார் திருமூலர், அந்நிலையில் இருப்பவர் இறைவனது இருப்பிடமான சிவலோகத்தையும், சிவனோடு ஒன்றியிருக்கும் யோகநிலையையும் அடைவர், இதனால் அவருக்கு அழியா இன்பத்தையும் பெறுவர் என்கிறார்,

மனிதனை மாமனிதனாக்குகிறது தியானம், மகான்கள் இடைவிடாது ஆற்றொழுக்காய் தியானித்து கொண்டிருக்கிறார்கள், தியானத்தில் கிடைக்கிறது ஆத்ம ஞானம், அதுவே மண்ணில் இருந்து விண்ணுக்குப் பாலமாகிறது, அது பொய்யில் இருந்து உண்மைக்கும் இருளில் இருந்து ஒளிக்கும் துன்பத்திலிருந்து இன்பத்திற்கும், குழப்பத்திலிருந்து தெளிவிற்கும், நிம்மதியற்ற நிலையில் இருந்து நிலையான அமைதிக்கும், தீயஒழுக்கத்தில் இருந்து நல்லொழுக்கத்திற்கும் நம்மை நிலைமாற்றம் செய்கிறது, தியானத்தில் ஈடுபடுகிறவர் அமைதியும், ஒருமுகப்படத்திய அறிவும், கவனமும் கொண்டிருக்கவேண்டும்,

நுட்பமான பிரம்மத்தை நுட்பமனத்துடன் அணுகுங்கள், தியாகத்திற்கேற்ற சாத்வீக சூழ்நிலையை தோற்றுவித்துக் கொள்ளுங்கள், தியானத்ததிற்கு உகந்த நேரம் பிரம்ம முகூர்த்த காலை நேரமே உகந்தது, ஏனெனில் அந்நேரம் உங்கள் மனம் தெளிவாகவும், அமைதியாகவும, இருக்கும், பற்றுகளைப போலவே கவலைகளையும் ஒதுக்கியவர்க்கே தியானம் உண்டாகும், மனதை வழிக்கு கொண்டு வருவதற்கு கடுமையான போராட்டங்கள் வேண்டாம், எண்ணங்களை வலுக்கட்டாயமாக விரட்டியடிக்க முடியாது, எண்ணஙகள் தானாக வந்து, தானாகவே போய்விடும், என்று இயல்பாக இருந்து விடுங்கள், தியானப் பயிற்சி பழக்கத்தில் சரியாக அமையும்.
தியானத்தில் பொறுமை அவசியம், அதன் பலனை உடனே எதிர் பார்க்க முடியாது, சிலருக்கு பல ஆண்டுகள் வரைகூட ஆகலாம், பொறுமையுடன் பயிற்சி அவசியம், தியானப்பாதையில் தடைகள் நீங்கும், ஐயங்கள் தீர்வதும் படிப்படியாகவே நிகழும், தியானம் ஒரு யோகம், மோட்ச சாதனம், எண்ணங்களின் ஆற்றல் பெருகவும், நோக்கம் நிறைவேறவும் தியானம் உதவும், தியானம் என்கிற பெருநெருப்பில் தீய சக்திகள் அழிந்துவிடும்,

கீதையில் ” தியான யோகத்தில் முன்னேற விரும்புகிறவனுக்கு கர்மம் உபாயமாகிறது, தியான சித்தி அடைந்தவனுக்கு செயலற்று இருப்பது உபாயமாகிறது,”என்கிறது,

மனம், புலன்கள் இவற்றை அடக்கி எதிலும் ஆசையில்லாமல் தனியொருவனாய் தன்னிடத்தில் இருந்து இடைவிடாது மனதை ஒடுக்க வேண்டும்,உள்ளதை உள்ளபடி அறிய ஏகாந்தம் அவசியம், தியானிப்பவர் நாசி முனையில் பார்வையை ஒருமுனைப்படுத்தினால் தடுமாற்றம் தூக்கம் ஏற்படாது, தியானத்தின் போது விருப்பு வெறுப்பு மகிழ்ச்சி துயரம், தீய நினைவுகள் இருக்கக் கூடாது, மனதில் வைராக்கியம் இருக்க வேண்டும்,

தியானத்தின் மூலம் யோகி தன்னுடைய ஆத்மாவை இறைவனுடன் இணைத்துக் கொண்டு அமைதி அடைகிறான்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

மனிதனை மாமனிதனாக்குகிறது தியானம்

தூங்காமல் தூங்கி சுகம் பெறுதல் ஞான வழி என்ற தியானம் “தூங்கிக்கண்டார் சிவலோகமும் தம்உள்ளே தூங்கிக்கண்டார் சிவயோகமும் தம் உள்ளே ...