செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் அருள்மிகு ஸ்ரீ ஞானாம்பிகை சமேத ஶ்ரீ காளத்தீஸ்வரர்
*தக்ஷணின் யாகத்தில் கலந்து கொண்டு அவமானத்துக்கு ஆளான பார்வதிதேவி சிவனின் உன்மத்த நடனத்தின் போது பல கூறுகளாக சிதறி அவை சக்திபீடங்களாகின்றன
*முடிவில் ஈசன் யோகநிலைக்கு தவமிருக்க எண்ணி பூவுலகில் ஸ்தலங்கள் தேட தனது கழுத்தில் கிடந்த நாகத்தை அனுப்புகிறார்.
*நாகம் தேர்ந்தெடுத்த ஐந்து தலங்களில்
முதலில் காளஹஸ்தி அடுத்து காட்டாங்குளத்தூர் .
*திருநாகேஸ்வரம் திருப்பாம்புரம் கீழ்பெரும்பள்ளம் ஆகியன மற்றவை
*பல்லவர்களால் கட்டப்பட்ட 1500 ஆண்டுகள் பழைமையான ஆலயம்.
அகத்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சுயம்புமூர்த்தி
*சுவாமியின் சக்தியை நேரே தரிசிக்க முடியாது ஆபரண நந்தி எனும் அதிகார நந்தி சாளரங்கள் வழியே தரிசிக்குமாறு சுவர் அமைந்துள்ளது.
*திருவண்ணாமலை அருணாசலேஸ்வரரை வழிபட்டு ஓர் இரவு இத்தலத்தில் ராகுவும் கேதுவும் தங்கியிருந்ததாக வரலாறு.இருவரும் ஒருவர் பின் ஒருவர் நிற்பது போன்ற அமைப்பு உள்ளது
*நவகிரஹங்கள் ஒரே இடத்தில் இல்லாமல் தனித்தனியே உள்ளனர்
*இது ராகு கேது தோஷ நிவர்த்தி தலம்
*சனிக்கிழமை தோறும் சர்பதோஷ நிவர்த்தி பூஜை
நடைபெறுகிறது.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment