அற்புதமான சிவலிங்கங்கள்--- நாளுக்கு நாள் வளர்ந்து வரும் சிவலிங்கங்கள்!!!
உலகெங்கிலும் கணக்கில் அடங்காத சிவலிங்கங்கள் உள்ளன ஞான பூமியான பாரதத் திருநாட்டிலும் இலட்சக் கணக்கில் சிவாலயங்கள் உள்ளன. சிவப்பரம்பொருளின் அன்பர்கள் அவற்றின் சிறப்பையும் முக்கியத்துவத்தையும் உணர்ந்துள்ளார்கள். உலகில் சில சிவலிங்கங்கள் வரலாற்றின் காரணமாக பிரபலமாக உள்ளன, மேலும் சில அவற்றுடன் தொடர்புடைய அற்புதங்கள் காரணமாக பிரபலமாக உள்ளன. பல சிவலிங்கங்கள் அற்புதத்துடன் சிறப்பு பெற்றுள்ளன.அந்த வகையில் நம் பாரதத் திருநாட்டில் நாள்தோறும் வளர்ந்து வரும் சிவலிங்கங்கள் ஐந்தினைப் பற்றி இப்பதிவில் காண்போம். ஒவ்வொரு வருடமும் அவைகள் அதிசயமாக வளர்ந்து வருவதால், இந்த சிவலிங்கங்கள் சிறப்புப் பெற்றது.
மத்திய பிரதேஷ், கஜூராஹோவில் உள்ள மதங்கேஸ்வர் திருக்கோயிலில் உள்ள '' மதங்கேஸ்வர் '' ஆண்டுதோறும் வளர்ந்து வரும் சிவலிங்கமாகும்.எட்டடி நான்கங்குலம் உயரமும் மூன்றடி எட்டங்குலம் விட்டமும் உடைய சிவலிங்கம் இது.அயோத்தி இராமன் இங்குவந்து மதங்கேஸ்வரரை வணங்கியதாக புராணங்கள் கூறுகின்றன.இச்சிவலிங்கம் மிருத்துஞ்சய மஹாதேவ் என்றும் அழைக்கப்படுகிறது.கஜூராஹோவில் உள்ள மிக முக்கியமான சிவாலயம் இது.உள்ளூர் மக்கள் ,ஒவ்வொரு ஆண்டும் எள் அளவு இச்சிவலிங்கம் வளர்ந்து வருவதாகக் கூறுகிறார்கள்.
சத்தீஸ்கர் மாநில தலைநகரான ராய்ப்பூரிலிருந்து சுமார் ௯௦ [90] கி.மீ. தூரத்தில் காரியாபந்த் என்ற மாவட்டம் உள்ளது. அங்குள்ள மரோடா என்ற கிராம பகுதியில் உள்ள காட்டில் பூதேஸ்வர் மகாதேவ் என்னும் சிவலிங்கம் அமைந்துள்ளது. உலக அளவில் பெரிய அளவுள்ள சுயம்பு சிவலிங்கமாக இது சொல்லப்படுகிறது.
உலக அளவில் பிரபலமாகியுள்ள இந்த சிவலிங்கம் அதன் வளரும் சக்திக்காக அனைவராலும் பயபக்தியுடன் வணங்கப்படுகிறது. சுற்றுப்புற மக்களிடையே இந்த சிவலிங்கம் ‘பாகுரா மகாதேவ்’ என்றும் குறிப்பிடப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான மக்கள் அங்கு வந்து வழிபட்டு செல்வதாக கோவில் நிர்வாகத்தினர் குறிப்பிட்டுள்ளார்கள்.
ஒவ்வொரு வருடமும் இந்த சிவலிங்கம் குறிப்பிட்ட அளவுக்கு வளர்ச்சி அடைகிறது என்பது ஒரு அதிசய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. அதாவது, உயரம் மற்றும் அகலம் ஆகிய இரண்டு பரிமாணங்களில் அதன் வளர்ச்சி அதிகமாகிக்கொண்டு உள்ளது. தற்போதைய நிலவரப்படி அதன் உயரம் ௮௫ [ 85 ] அடியாகவும், சுற்றளவு ௧௦௫ [ 105 ] அடியாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.[Size - 85 feet high and 105 feet circular]
இந்த சிவலிங்கத்தின் அளவானது ஒவ்வொரு வருடமும் வரக்கூடிய மகாசிவராத்திரி அன்று வருவாய்த் துறை அதிகாரிகளால் அளவீடு செய்யப்படுவதாக கோவிலில் பூஜை செய்பவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். அதன் அடிப்படையில் ஒவ்வொரு வருடமும் ௬ [6] அங்குலம் முதல் ௮ [8]அங்குலம் வரையிலும் அந்த சிவலிங்கம் வளர்ச்சி பெற்று வருவது அறியப்பட்டுள்ளது என்று அங்குள்ள கிராம மக்கள் தெரிவித்திருக்கிறார்கள். மேலும், சுற்றிலுமுள்ள ௧௭ கிராமத்தை சேர்ந்தவர்கள் ‘மக்கள் சபை’ அமைத்து கோவில் நிர்வாகத்தை கவனித்து வருகிறார்கள்.
பூதேஸ்வர் மகாதேவ் சிவலிங்கத்தின் அளவு முதன் முதலில் ௧௯௫௨[1952] ஆம் ஆண்டு முதல் அளவிடப்பட்டு வருகிறது. அன்று முதல் இன்று வரை அதன் உயரமும், அகலமும் அதிகரித்த வண்ணம் உள்ளது. கல்லால் தாமாக உருவான சுயம்பு சிவலிங்கம் ஒவ்வொரு வருடமும் எவ்வாறு வளர்கிறது என்பதற்கான விடை அறியப்படாமல் உள்ளது.
௩.மருதேஸ்வர் மஹாதேவ், சாஹிரா ,பஞ்சமஹால் ,குஜராத் .==[Mardeshwar Mahadev Mandir, Shahera, Panchmahal.GUJARAT]
குஜராத்,பஞ்சமஹால் மாவட்டம் ,கோத்ரா சாஹிராவில் அமைந்துள்ளது மருதேஸ்வர் மஹாதேவ் திருக்கோயில்.சத்யயுகம் என்னும் கிரேதா யுகத்தில் தோன்றிய இந்த சுயம்பு இலிங்கம்,வளர்ந்து விதானத்தைத் தொடும்போது மகாபிரளயம் வந்து அனைத்தும் அழியும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.ஆண்டுக்கு அரிசியளவு வளர்கிறதாம்!சிவலிங்கத்தின் தோற்றம் அதன் பழமையை உணர்த்துகிறது.அதுமட்டுமன்று;கங்கை சிவலிங்கத்தின் உச்சியிலிருந்து பிரவாகம் செய்வதாகவும் நம்புகிறார்கள்;அதற்குச் சான்றாக,சிவலிங்கத்தின் உச்சியிலிருந்து நீரானது சதா ஊறிக்கொண்டிருக்கிறது.
[ இதனைக் குறிப்பிடும்பொழுது நமது திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் அடியேன் நினைவுக்கு வருகிறார் .பாறைகளால் அமைந்த மலையின் உச்சியில் அமைந்துள்ள கோயில் கருவறையில் அர்த்தநாரீஸ்வரர் திருவடியில் சதா நீரூறிக்கொண்டே உள்ளது!அதைத்தான் வரும் பக்தர்களுக்குப் பிரசாதமாகத் தருகிறார்கள்.மருதேஸ்வர் மஹாதேவ் சிவலிங்கத்தில் திருமுடியில் தீர்த்தம் ;திருச்செங்கோட்டில் திருவடியில் தீர்த்தம்;என்னே இறைவனின் கருணை!]
இந்த இடத்தில் பாரதத் திருநாட்டின் காலமுறைப்பற்றிய குறிப்பைப் பார்ப்போம்.
யுகம் என்பது நமது சனாதன தர்மத்தின் படி கால கணிப்பு முறையில் காலத்தை அளக்கும் அலகுகளில் ஒன்று. யுகங்கள் நான்கு.கிருத யுகம் - 1,728,000 வருடங்கள்;திரேதா யுகம் - 1,296,000 வருடங்கள்;துவாபர யுகம் - 864,000 வருடங்கள்
கலியுகம் - 432,000 வருடங்கள் [ கலியுகம் கி மு 3102 இல் தொடங்கியதாக நம்பப்படுகிறது. இப்பொழுது கலி 5120 ]
இந்த 4 யுகங்களும் சோ்ந்தது ஒரு மகா யுகம் அல்லது சதுா்யுகம். 12 மகா யுகங்களைக் கொண்டது ஒரு மன்வந்திரம். 14 மன்வந்திரங்கைளக் கொண்டது ஒரு கல்பம். இப்படியாக 30 கல்பங்கள் இருக்கின்றன.தற்போது நடந்து கொண்டிருப்பது ஸ்வேத வராக கல்பம் ஆகும்.
௪.திலபந்தேஸ்வர் மஹாதேவ் மந்திர் ,வாரணாசி,உத்தரப்பிரதேஷ்.===[Shri Tilbhandeshwar Mahadev Mandir , also known as Tilbhandeshwar Mahadev Mandir and Tilbhandeshwar Mandir, is one of the oldest and most famous temples in the holy city of Varanasi. This temple has great religious importance in Hinduism and is dedicated to the Lord Shiva.]
காசிமாநகரம்,பாரத மணித்திருநாட்டின் புண்ணிய இடங்களிலே தலைமைப் பீடம்.விஸ்வநாதர் திருக்கோயில் மட்டுமன்று எண்ணற்ற சிவாலயங்களைக் கொண்டுள்ள புனித இடம்.காசியில் பாண்டே ஹவேலி என்னும் இடத்தில் அமைந்துள்ள பாபா தில்பந்தேஸ்வரர் திருக்கோயில் சிவலிங்கம் சுயம்பு இலிங்கமாகும்..சத்யயுகம் என்னும் கிரேதா யுகத்தில் தோன்றிய இந்த சுயம்பு இலிங்கம்,நாளுக்கு நாள் எள் அளவு வளர்ந்துகொண்டே வருகிறது.ஆண்டுதோறும் மகரசங்கராந்தியன்று இதனைக் கண்கூடாகக் காணலாம் என்கிறார்கள் .
௫. பௌரிவாலா ஷிவ் மந்திர், நாகன்,ஹிமாச்சல் பிரதேஷ்.==[Shiv Mandir Pauri Wala- Doosri Swarg Ki Seedhi
-Made by Ravan (Nahan, Distt Sirmaur, Himachal Pradesh)]
பௌரிவாலா ஷிவ் மந்திர்,இராவணனின் வரலாற்றோடு சம்பந்தப்பட்டுள்ளது.இராவணன் சிவப்பரம்பொருளிடம் என்றும் இறவா சிரஞ்சீவி பதவியைக் கேட்டானாம்.சிவப்பரம்பொருள்,ஒரு நாளுக்குள் ஐந்து பௌரிகளை [படித்துறைகளை]அமைக்க வேண்டும் அப்படி அமைத்தால் சிரஞ்சீவிப் பதவி கிடைக்கும் என்று கூற,இராவணன் முதலில் அமைத்தது ஹரித்துவாரில் உள்ள ஹர் கி பௌரி.[ ஹர் கி பௌரி [ Har ki Pauri] = சிவபெருமானின் பாதங்கள்].இரண்டாவதாக இந்த தலத்து பௌரிவாலா;மூன்றாவதாக சித்தேஸ்வர் மஹாதேவ் [Chudeshwar Mahadev];நான்காவதாக கின்னர் கைலாஷ் [Kinnar Kailash]; அதன்பிறகு உறங்கிவிட்டானாம் .விழித்தெழுந்து பார்த்தபொழுது விடிந்துவிட்டதாம் .சிவப்பரம்பொருள் முன்பு நாணி நின்றானாம்.இராவணன் வணங்கிய இந்த சுயம்பு இலிங்கம் இன்று நாளுக்கு நாள் வளர்ந்து வருவதாகக் கூறுகிறார்கள்;ஆண்டுக்கு பார்லி அரிசி அளவு வளர்கிறதாம் !
மற்றுமொரு வரலாற்றையும் இங்குள்ள மக்கள் கூறுகிறார்கள்;மகரிஷி மார்கண்டேயரை யமதர்மனிடமிருந்து காப்பாற்றி,சிவப்பரம்பொருள்சி ரஞ்சீவியாக்கியது இந்த தலத்தில் தான் என்று கூறுகிறார்கள்.மகரிஷி மார்கண்டேயர் மகா மிருதுஞ்சய மந்திரத்தைக் கூறியதும் இங்குதான் என்றும் சிவப்பரம்பொருளின் திருமுகம் உண்மையான பக்தர்களுக்குத் தெளிவாகத் தெரியும்.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment