Thursday, March 13, 2025

37 ஆண்டுகளாய் எரியும் விளக்கு, ஜுரகண்டேஸ்வரர் ஜலகண்டேஸ்வரராய் மாறினார்.


வேலூர்:
அருள்மிகு ஜலகண்டேஸ்வரர்
திருக்கோவில்...
சகல திருஷ்டிகளையும் நீக்கி பக்தர்களை காத்தருளும் ஜலகண்டேஸ்வரர் கோவில் வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும், பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முத்தேவியரும் அருளும் தலம்.

மூலவர் : ஜலகண்டேஸ்வரர்

உற்சவர் : சோமாஸ்கந்தர், சந்திரசேகரர்

அம்மன்ஃதாயார் : அகிலாண்டேஸ்வரி

தல விருட்சம் : வன்னி

தீர்த்தம் : கங்காபாலாறு, தாமரை புஷ்கரிணி
ஆகமம்ஃபு ஜை : சிவாகமம்

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : வேலங்காடு

மாவட்டம் : வேலூர்

தல வரலாறு :

அக்காலத்தில் சப்தரிஷிகளில் ஒருவரான அத்திரி இத்தலத்தில் லிங்கம் ஒன்றை வைத்து வழிபட்டார். காலப்போக்கில், லிங்கம் இருந்த பகுதியானது வேலமரக் காடாக மாறியது. லிங்கத்தையும் புற்று மூடிவிட்டது. அதன்பிறகு பொம்மி என்னும் சிற்றரசர் இப்பகுதியை ஆண்டு வந்தார், அவரது கனவில் சிவன் தோன்றி, தான் புற்றால் மூடப்பட்டுள்ள லிங்கமாக உள்ளதை சுட்டிக்காட்டி கோவில் எழுப்பும்படி கூறினார். பொம்மியும் பயபக்தியுடன் சிவனின் கட்டளைக்கு உட்பட்டு கோவில் எழுப்பினார். இந்த சிவலிங்கத்திற்கு கீழே தண்ணீர் இருப்பதாகச் கூறப்படுகிறது. எனவே இங்குள்ள சிவனுக்கு 'ஜலகண்டேஸ்வரர்" என்று பெயர் ஏற்பட்டது.

தல சிறப்பு :

பிரம்மா, திருமால் இருவரின் ஆணவத்தை அடக்குவதற்காக சிவன், ஜோதி சொரூபனாக காட்சி தந்த நாள் கார்த்திகை. இந்நாளில் மும்மூர்த்திகளும் ஒன்றாக காட்சி தந்ததன் அடிப்படையில், இங்கு மும்மூர்த்திகளும் ஒரே பல்லக்கில் அருள்பாலிக்கின்றனர். 

மும்மூர்த்திகளைப் போல முப்பெரும் தேவியரையும் இங்கு தரிசிக்கலாம். இங்குள்ள நந்தியின் முன்பு, பக்தர்கள் தங்கள் பிரார்த்தனை நிறைவேற, தீபம் ஏற்றாத அகல்விளக்கை வைப்பது வித்தியாசமான பிரார்த்தனை.

அம்பாள் அகிலாண்டேஸ்வரி சன்னதி எதிரில், அணையா நவசக்தி ஜோதி தீபம் இருக்கிறது. அம்பிகை தீபத்தின் வடிவில் நவசக்திகளாக அருளுகிறாள்.

இத்தலத்து சிவன் பத்ம விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார். சிவன் சன்னதியின் பின்புறம் திருப்பதி அமைப்பில் வேங்கடேசப்பெருமாள் காட்சி தருகிறார்.

மன்னர் பொம்மி, சிவனுக்கு கோவில் எழுப்பியபோது சுற்றிலும் ஒரு பிரம்மாண்டமான கோட்டையைக் கட்டினார். கோட்டையைச் சுற்றி தண்ணீர் நிறைந்த பெரிய அகழி இருக்கிறது. பிரகாரத்தில் கலை அழகு மிளிரும் கல்யாண மண்டபம் இருக்கிறது. 

பிரார்த்தனை :

நீண்ட ஆயுளுடன் வாழவும். திருமணத்தடை நீங்கவும், திருஷ்டிகள் விலகவும் பக்தர்கள் இங்கு பிரார்த்தனை செய்து சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் வஸ்திரம் சாத்தி நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். 

விஜயநகர பேரரசின் கீழ் வேலூர் இருந்தபோது  கட்டப்பட்டது இக்கோவில்.  கிட்டத்தட்ட 600 ஆண்டுகால பழமை வாய்ந்தது. இப்ப தொல்பொருள் ஆராய்ச்சியாளர் வசம் இருக்கு. இக்கோவிலின் விமானம் ஆகமவிதிப்படி பத்ம விமானம் ஆகும். 

கோட்டைக்குள் நுழைந்ததும் வலதுப்புறம் திரும்பினால் ஜலகண்டேஸ்வரர் ஆலயம்
மற்ற கோவில்கள் போல இங்க அர்ச்சனைக்குரிய பொருட்கள் விற்கும் கடைகள் அதிகம் இருக்காது. ஓரிரு கடைகள் மட்டுமே இருக்கும். தரைமட்டத்திலிருந்து சில அடிகள் கீழ இருக்கும் இக்கோவில். சுமார் எட்டு படிகள் கீழிறங்கியதும் கோவில் வரலாற்றை தொல்லியல் துறை சார்பா கல்வெட்டி பொரிச்சு வச்சிருக்காங்க. 

அத்திரி முதலான சப்தரிஷிகளும் வேலூருக்கு கிழக்கே 3 கி.மீ. தூரத்தில் இருக்கும் பாகமதிமலையில் சிவலிங்க பூஜை செய்தனர். அவர்களில் அத்திரி முனிவர் மட்டும் வேலமரங்கள் நிறைந்த இந்த வனப்பகுதியில் ஒரு லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வணங்கி வந்தார் . சில காலம் கழித்து அவர் அவ்விடம் அகன்றதும் அந்த லிங்கம் கேட்பாரற்று நாளடைவில் புற்றுக்களால் சூழப்பட்டது
இறைவனிடம் ஆலயம் அமைக்க அருள்புரிய வேண்டும் என வேண்டினார். ஆலயம் அமைப்பது எளிதானதா? அதற்கு அதிகம் செலவாகுமே என்று ஈசன் தெரிவித்தார் . 'உன் அருள் இருந்தால் பிற எல்லாம் தாமே வந்து சேரும்' என்று நம்பிக்கையுடன் பதிலளித்தார் பொம்மி. அவருடைய ஆழ்ந்த பக்தியை மெச்சிய ஐயன், பள்ளிகொண்டராயன் மலையில் ஒரு புதையல் இருப்பதாகவும், அதை ஏழு நாட்களுக்குள் எடுத்துக் கொள்ளுமாறும் அருளாணையிட்டார்.

கனவில் நடந்தவை அனைத்தும் நனவிலும் நிகழத் தொடங்கியது. புதையல் இருந்த இடத்திலிருந்து புற்றுவரை மக்களை வரிசையாக நிற்கவைத்து ஒருவர் கை மாற்றி அடுத்தவர் என்று பொக்கிஷம் அத்தனையையும் இவ்விடம் கொண்டு சேர்த்தார். கோயில் கட்டுவதற்காக வேலமரக்காடு சீர் செய்யப்பட்டது. சிவபெருமான் பொம்மியின் முன்தோன்றி இன்னும் ஒன்பது ஆண்டுகள் கழித்து ஜலகண்டேஸ்வரர் என்ற பெயரில் லிங்கம் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று கூறிவிட்டு மறைந்தார். 

அப்போது ஓர் அதிசய காட்சியை கண்டார் பொம்மி. 

ஒரு புதரில் இருந்து சில முயல்கள் வேகமாக ஓட, நாய் ஒன்று அந்த முயல்களை துரத்தியது. பயந்து ஓடிய முயல்களில் ஒன்று சட்டென்று நின்று திரும்பியது. பீறிட்ட ஆக்ரோஷத்துடன் நாயை துரத்தியது! நீண்டதூரம் ஒரு வட்டபாதையில் நாயை துரத்திய முயல் சிவலிங்கம் இருந்த புற்றினையும் சிறு வட்ட பாதையில் சுற்றிவிட்டு புற்றுக்குள் மறைந்தது. முயல் புற்றை சுற்றிய வட்டத்தையே எல்லையாகக் கொண்டு கோயிலை அமைப்பாயாக என்று ஓர் அசரீரி பொம்மிக்கு கட்டளையிட்டது.

இக்கோவிலின் அமைப்பே வித்தியாசமா இருக்கும். எல்லாக்கோவிலிலும் ராஜகோபுரத்திற்கு நேராய்தான் கருவறை இருக்கும். ஆனா, இக்கோவிலில் தெற்கு பார்த்த நிலையில் இருக்கும். ராஜக்கோபுரத்தை கடந்தபின் இன்னொரு நுழைவாயிலை கடந்து மற்ற தெய்வங்களை வணங்கியபின் கட்டக்கடைசியாதான் மூலவரை தரிசிக்க முடியும். 

பொதுவா கோவிலுக்கு போனா, அங்கிருக்கும் குளங்களில் (குளம் இல்லன்னா குழாய் தண்ணில) கைகால்களை சுத்தம் செய்துக்கிட்டு, கோடி புண்ணியம் தரும் ராஜகோபுரத்தை வணங்கி, உள்நுழைந்து கருவறை விமானத்தை வணங்கி, பிராகாரத்தை சுத்திட்டு அதுக்கப்புறமாதான் மூலவரை தரிசிக்கனும். இது எதுக்குன்னா, கோவிலுக்குள் நுழையும்போது, பலவித உணர்ச்சிகள் ஆட்பட்ட நிலையில் இருப்போம். அதுலாம், இப்படி பிராகாரத்தை வலம்வரும்போது உணர்ச்சிகள் மறைந்து மனசு ஒருநிலைப்படும்.

 இந்த ராஜகோபுரம்  ஏழு நிலைகளை கொண்டது. கோபுரத்தின் கம்பீரம் சிலிர்க்க வைக்கிறது. உள்ளே நுழைந்தால் வலதுப்புறத்தில் குளமும்,  இடதுபுறத்தில் கல்யாண மண்டபமும் இருக்கும். ஆலயத்தின் வெளிப்பிராகாரத்திலும் உட்பிராகாரத்திலும் ஆலய சுவர்களை ஒட்டி ஆறு அடி அகலத்திற்கு அழகிய வேலைப்பாடுகள் கொண்ட தூண்களைக் கொண்டு கட்டப்பட்ட முழு நீள மண்டபம் அமைந்திருக்கும். கோயிலுக்குள் இருக்கும் மண்டபம் 15ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. வடமேற்கில் வசந்த மண்டபமும், அதையொட்டி சிம்ம கிணறும், வடகிழக்கில் வெளிப்பிராகார யாகசாலையும், தென் கிழக்கில் உற்சவ மண்டபம் மற்றும் வெளிப் பிராகார மடப்பள்ளியும் என பரந்து விரிந்திருக்கு இக்கோவில். 

 37 ஆண்டுகளாய் அணையாமல் எரியும் விளக்கு, ஜுரகண்டேஸ்வரர் ஜலகண்டேஸ்வரராய் மாறினார்.

  ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

37 ஆண்டுகளாய் எரியும் விளக்கு, ஜுரகண்டேஸ்வரர் ஜலகண்டேஸ்வரராய் மாறினார்.

வேலூர்: அருள்மிகு ஜலகண்டேஸ்வரர் திருக்கோவில்... சகல திருஷ்டிகளையும் நீக்கி பக்தர்களை காத்தருளும் ஜலகண்டேஸ்வரர் கோவில் வேலூர் மாவ...