Tuesday, March 11, 2025

பிரதோஷ நேரத்தில் ஆனந்தத்தை அள்ளித் தரும் நந்திகேஸ்வரர்

ஆனந்தத்தை அள்ளித் தரும் நந்திகேஸ்வரர்
🪄நந்தி பகவானை  வளர் பிறை,தேய் பிறை திரயோதசி  திதிகளில்  பிரதோஷம் வேளையில் வழிபடுவது அனைவருக்கும் தெரியும்.

🪄நந்தி என்றாலே ஆனந்தம் என்ற பொருள் உண்டு.அதற்கேற்ப எல்லோரையும் ஆனந்தமாக வைத்திருப்பார்

🪄நந்தியின் நிறம் வெள்ளை.வெண்மை என்பது தூய்மையைக் குறிப்பது.அறமாகிய தர்மத்தின் நிறமும் வெண்மையே.நந்தி தூய்மையும் தர்மமும் நிறைந்தது.

🪄சிவபெருமான் திருநடனம் புரிகையில் நந்திதேவர் மத்தளம் வாசித்ததாக சிவபுராணம் கூறுகிறது.சிவபெருமான் நாட்டியக் கலையைப் பிரம்மாவுக்கு கற்றுக் கொடுக்க,அம்முறையை அறிந்த நந்தி பரத முனிவருக்கு கற்றுக் கொடுத்ததாக அபிநய தர்ப்பணம் என்ற பரத நாட்டிய நூல் கூறுகிறது.

🪄திருமூலருக்கு குருவாக இருந்த நந்தியம் பெருமான் தான் ஒன்பது வேத ஆகமங்களை விளக்கி அருளியதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

🪄சிவபெருமான் நந்தி புராணத்தில் நானும் நந்தியும் வேறல்ல,ஒருவரே என்று  கூறுகிறார்.

🪄நந்தியைத் தொழுவது சிவபெருமானைத் தொழுவதற்கு சமமானது ஆகும்.சிவன் கோவில்களில் சிவ ஆகமங்களின் அடிப்படையில் ஐந்து நந்திகளும் இடம்பெற்றிருக்கின்றன.

நந்திகேஸ்வரரின் வேறு பெயர்கள்:
🐂ருத்ரன்,
🐂தூயவன்,
🐂சைலாதி,
🐂அக்னி ரூபன்,
🐂மிருதங்க வாத்யப்ரியன்,
🐂சிவவாஹனன்,
🐂தருணாகர மூர்த்தி,
🐂வீரமூர்த்தி,
🐂தனப்ரியன்,
🐂கனகப்ரியன்,
🐂சிவப்ரியன்,
🐂நந்தீசர்,
🐂நந்தீஸ்வரர்,
🐂நந்தியெம் பெருமான் என பல்வேறு பெயர்கள் உண்டு.

🍁மூன்று முறை பிரதட்சணம் செய்தால் இஷ்டசித்தி.
🍁ஐந்து முறை பிரதட்சணம் செய்தால் ஜெயம்.
🍁ஏழு முறை பிரதட்சணம் செய்தால் சற்குணங்கள்.
🍁ஒன்பது முறை பிரதட்சணம் செய்தால் புத்திரப் பிராப்தம்.
🍁பதினோரு முறை பிரதட்சணம் செய்தால் ஆயுள் விருத்தி.
🍁பதிமூன்று முறை பிரதட்சணம் செய்தால் பிரார்த்தனை சித்தி.
🍁பதினைந்து முறை பிரதட்சணம் செய்தால் தனப்பிராப்தி.
🍁பதினேழு முறை பிரதட்சணம் செய்தால் தன விருத்தி.
🍁நூற்றெட்டு முறை பிரதட்சணம் செய்தால் அஸ்வமேதயாக பலன்.

🥀நந்திகேஸ்வரர் துதி🥀
நந்திஎம் பெருமான்தன்னை நாள் தோறும் வழிப்பட்டால்
புந்தியில் ஞானம் சேரும் புகழ் கல்வி தேடிவரும்
இவ்வுலக இன்பம்யாவும் இவரடி தொழ உண்டு!
அவ்வுலக அருளும்கூட அவர்துதி பாட உண்டு!
முற்பிறவி வினைகள்யாவும் தீயிட்ட மெழுகாகும்
நந்தியின் பார்வை பட நலங்கள்உடன் கிட்டும்!
ஈசனுக்கு எதிர் அமர்ந்து இறைஊஞ்சல் ஆட்டுவிக்கும்
நந்தீசர் நற்பாதம் நாம் தொழுவோமே!!!

🪄நந்தி பகவானை வணங்குவதால் நமது மனதில் இருக்கும் தீமையானவை அனைத்தும் நீங்கி,நமது கோரிக்கைகள்,நல்லெண்ணங்கள்,நியாயமான விருப்பங்கள் அனைத்தும் நிச்சயம் நிறைவேற அருள்புரிவார்.சிவபெருமானின் பரிபூரண அருளை பெறலாம்.அதோடு வாழ்வில் எப்போதும் ஆனந்தம் நிலைத்திருக்கும்.குருவின் ஆசி கிடைக்கும்.மேலும் மனமானது அமைதிகொள்ளும்.

🪄நந்தி பகவானுக்கு அருகம் புல் மாலையை சாற்றி,அரிசி மாவில் வெல்லம் கலந்து நைவேத்தியம் செய்து  வழிபட்டால் நோய்கள் மற்றும் வறுமை நீங்கும்.பிள்ளை பேரில்லாதவர்களுக்கு குழந்தைகள் பிறக்கும்.

🪄கோவில்களில் நந்தியை தரிசிக்காமல்  சிவபெருமானை தரிசிக்க முடியாது.ஆனால் நந்தியை மட்டுமே தரிசனம் செய்தால் கூட சிவபெருமானை தரிசித்த முழுபலனும் கிட்டும்.

🪄அதே போல பரமேஸ்வரனிடம் வைக்கும் வேண்டுதல்களை நந்திகேஸ்வரரிடம் வைத்தால் போதும்.அவர் அதை சிவபெருமானிடம்  சேர்த்து விடுவார் என்பது ஐதீகம்.

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

கடலூர் தேவனாம்பட்டினம் தீர்த்தவாரி மாசி மகம்,....

கடலூர் தேவனாம்பட்டினம் தீர்த்தவாரி மாசி மகம்,.... மாசி மகம் என்பது மாசி மாத பௌர்ணமியுடன் கூடிவரும் மக நட்சத்திர நாளில் கொண்டாடப்...