Thursday, March 20, 2025

நோய்களை தீர்க்கும் கோவில்கள், பாவங்கள் போக்கும் தலங்கள்...

 12 ஜோதிர்லிங்க தல வழிபாடுகளும் அவற்றின் பலன்களும் பற்றிய பதிவுகள் :*
12 ஜோதிர்லிங்க தலங்களுமே சிறப்பு வாய்ந்தவை என்றாலும் இந்த ஒவ்வொரு தலத்திற்கும் ஒவ்வொரு தனிச்சிறப்பு உண்டு. இந்த 12 ஜோதிர் லிங்கங்களையும் தரிசிப்பதால் என்ன கிடைக்கும் என்பதை குறித்து நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் மூலம் விரிவாக தெரிந்துக் கொள்ளலாம்.

சிவ பெருமானுக்கு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான கோவில்கள் இருந்தாலும் மிக சில கோவில்கள் மட்டுமே மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது. இவற்றில் தமிழகத்தில் 275 பாடல் பெற்ற தலங்கள் உள்ளன. 

இது தவிர பஞ்சபூத தலங்கள் என தமிழகத்தில் 4, ஆந்திராவில் ஒன்று என ஐந்து தலங்கள் உள்ளன. இருந்தாலும் இவை அனைத்தையும் விட மிக முக்கியமான தலங்களாக சொல்லப்படுவது 12 ஜோதிர் லிங்க தலங்களும், காசி, ராமேஸ்வரம் போன்ற முக்தி தலங்களும்.

ஜோதிர்லிங்க தலங்கள் :

திருவண்ணாமலையில் ஜோதி வடிவமாக பிரம்மாவுக்கும், விஷ்ணுவிற்கும் காட்சி கொடுத்த சிவ பெருமான், ஜோதி வடிவமாக 12 ஜோதி பிளம்பாக பிரிந்து உறைந்த இடங்களே ஜோதிர்லிங்க தலங்கள் என போற்றப்படுகின்றன. 

அதாவது இந்த 12 இடங்களிலும் சிவ பெருமான் இன்றும் நித்தியமாக இருந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பதாக ஐதீகம். இங்கு உண்மையான பக்தியுடனும், தூய மனதுடனும் சென்று சிறிது நேரம் அமர்ந்து வழிபட்டாலே சிவ பெருமான் நம்முடன் இருப்பதை உணர முடியும். 

இந்த 12 ஜோதிர் லிங்க தலங்களிலும் சென்று வழிபடுவது சிவனின் அருளை பெற்றுத் தரும் என்பது தெரியும். இது தவிர வேறு என்ன பலன் கிடைக்கும். 

*ஜோதிர்லிங்க தல வழிபாடுகளும், பலன்களும் :*

* பீமசங்கர் கோவில், புனே - இங்கு வந்து வழிபட்டாலே வெற்றிகரமான வாழ்க்கை அமையும். மன நிம்மதி, அமைதியை உணர முடியும்.

* கிரிஷ்னேஷ்வர் கோவில், மகாராஷ்டிரா - இந்த கோவிலுக்கு வந்து வழிபட்டாலே ஒருவர் செல்வ செழிப்பான வாழ்க்கையை பெற முடியும். ஆன்மா தூய்மை அடையும்.

* கேதார்நாத் கோவில் - இங்கு வழிபட்டால் கடந்த கால பாவங்களில் இருந்து விடுபடுவதுடன், மோட்சத்தை அடைய முடியும்.

* மஹாகாலேஸ்வர் கோவில் - வாழ்க்கையில் ஏற்பபடும் தடைகள், துன்பங்களை கடக்க உதவுவதுடன் மோட்சத்தையும் அடைய வேண்டும் என்பவர்கள் இந்த கோவிலுக்கு வந்து வழிபடலாம்.

நோய்களை தீர்க்கும் கோவில்கள், பாவங்கள் போக்கும் தலங்கள்... 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

திருச்சி உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில்

ஐவண்ணப்பெருமான்.. திருமூக்கீச்சுரம்.. பிரம்மன் வழிபட்ட தலம்..!! அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில்...!!    *இந்த கோயில் எங்க...