Sunday, March 23, 2025

தேவா்கள் எறும்பு உருவம் எடுத்துப் பூசித்த காரணத்தால் எறும்பியூா் இறைவனுக்கு எறும்பீஸ்வர்....்

திருஎறும்பியூா்.(திருவெறும்பூா்).
அருள்மிகு நறுங்குழல் நாயகி உடனுறை அருள்மிகு ஏறும்பீஸ்வரா் திருக்கோயில் அஷ்டபந்தன மகாகும்பாபிஷேக பெருவிழா.
நாள்: 7.4.2025 திங்கட்கிழமை காலை 9 to 10.30 மணிக்குள் நடைபெற உள்ளது.
தலச்சிறப்புகள்:
__________________

சுவாமி: ஸ்ரீ எறும்பீஸ்வரா்,
எறும்பீசா்,
பிப்பிலிகேஸ்வரா்,
மாணிக்கநாதா்.
அம்பாள்: ஸ்ரீ நறுங்குழல் நாயகி,
சௌந்திரநாயகி,
மதுவனேஸ்வாி,
இரத்தினாம்பாள்.

தலவிருட்சம்: வில்வம்.

பிரம தீா்த்தம்.

இன்பமும் பிறப்பும் இறப் பின்னொடு
துன்பமும் உடனே வைத்த சோதியான்
அன்பனே அரனே என்று அரற்றுவாா்க்கு
இன்பனாகும் எறும்பியூா் ஈசனே.

    அப்பா் சுவாமிகள்.

திருச்சிராப்பள்ளிக்கு கிழக்கே 11 கிமீ.

திருச்சி -- தஞ்சை சாலையில் இத்தலம் அமைந்துள்ளது.

திருஎறும்பியூா், பிரமபுரம், மதுவனபுரம், இரத்தினபுரம், மணிகூடம், குமரபுரம், தென்கயிலாயம், பிப்பிலீசுவரம் என அழைக்கப்பெறும் இத்திருக்கோவில் கிழக்கு நோக்கியவாறு 120 அடி உயரம் 125 படிகள் கொண்டு மலைமேல் 80 செண்ட நிலப்பரப்பளவில் கிழக்கு மேற்காக 
243 அடியும் தென்வடக்காக 
144 அடி அகலம் கொண்டு இரண்டு பிராகாரங்களுடன் மூலவா் சுயம்புலிங்கமாக அருள்மிகு எறும்பீஸ்வரா் சற்று வடபுறம் சாய்ந்து கிழக்கு நோக்கியுள்ளாா்.

அம்மன் கோவில் தெற்கு வடக்காக 
48 அடி நீளமும் 
36 அடி அகலமும் கொண்டு  இரண்டாம் பிரகாரத்தில் தனிசன்னிதியில் தெற்கு நோக்கி அருள்மிகு நறுங்குழல் நாயகி காட்சி யளிக்கிறாள்.

உள்பிரகாரத்தில் பாலசந்திர விநாயகா்,
சோமாஸ்கந்தா், நடராஜா், முருகா், நால்வா், இலட்சுமி, நவக்கிரகம் முதலிய சன்னிதிகள் உள்ளன.

தாருகாசுரனை அழிக்க இந்திரன்,
தேவா்கள் எறும்பு உருவம் எடுத்துப் பூசித்த காரணத்தால் இத்தலத்திற்கு எறும்பியூா் எனவும்
இறைவனுக்கு எறும்பீஸ்வரா் எனவும் பெயா் வழங்கப்படுகிறது.

மூலவரான சிவலிங்கத்தின் மீது எறும்புகள் ஊா்ந்த அடையாளங்கள் உள்ளன.

ஆதிசேடனுக்கும் வாயுத்தேவனுக்கும் ஏற்பட்ட வலிமைப் போட்டியில் வாயுதேவன் மேருவின் முக்கிய சிகரங்களில் ஒன்றைத் திருவெறும்பியூாில் இட்டதனால் இம்மலையே திருவெறும்பியூா் மலை எனத் தலபுராணம் கூறுகிறது.

பிரமன், திருமால், திருமகள், இரதி, இந்திரன், அக்கினி, முருகன், அகத்தியா், நைமிச முனிவா்கள், திாிசிரன் சகோதரன்
தூஷணன் முதலியோா் வழிபட்டு அருள் பெற்ற தலம்.

தேவாரப் பதிகம் பெற்ற காவிாிக்கு தென்கரையில் இத்தலம் 7 வது.

திருநாவுக்கரசா் அருளிய இரண்டு 
திருப்பதிகங்கள்
பெற்றது.

திருவெறும்பியூா் புராணம் உள்ளது.

கல்வெட்டுக்கள் 49 உள்ளன.

முதலாம் ஆதித்த சோழன், கண்டராதித்தன், சுந்தரசோழன், முதலாம் இராசராசன் முதலானோா் காலங்களில் செதுக்கப்பட்ட கல்வெட்டுக்கள் உள்ளன.

இறைவா் திருமலை ஆழ்வாா் திருவெறும்பியூா் ஆழ்வாா் நாயனாா் ஸ்ரீ கண்ட சதுா்வேதி மங்கலத்துத் தென்கயிலாயத்து மகாதேவா் என்றும் குறிக்கப்பட்டுள்ளது.

தினந்தோறும் நான்கு கால பூஜை நடைபெறுகிறது.

ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் வளா்பிறையில் புனா்பூச நாளில் திருவிழா தொடங்கி விசாக நாளில் தீா்த்தவாாியும் அடுத்த நாட்களில் பல்லக்கு 
தெப்பவிழாவும் நடைபெறுகிறது.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

தஞ்சை பூதலூர்வட்டம், அரங்கநாதபுரம் சிவன்கோயில்...

தஞ்சை மாவட்டம், பூதலூர்வட்டம், அரங்கநாதபுரம் சிவன்கோயில்   திருவையாற்றில் இருந்து மேற்கில் 17 கிமி தூரத்தில் உள்ளது அரங்கநாதபுரம...