அருள்மிகு புண்ணியகோடியப்பர் திருக்கோயில், திருவிடைவாசல் – 613 702, குடவாசல் தாலுக்கா திருவாரூர் மாவட்டம்.
*இறைவன் – புண்ணியகோடி நாதர், விடைவாயப்பர்,
*இறைவி – அபிராமி உமையம்மை.
*தலவிருட்சம்: கஸ்தூரி அரளி
*தீர்த்தம்: ஸ்ரீ தீர்த்தம்
*இது பாடல் பெற்ற தலம். திருஞானசம்பந்தரால் பாடல் பெற்றது.
*தேவாரப்பாடல் பெற்ற தலங்கள் 274 என்று இருந்த நிலையில், திருவிடைவாய் தலத்திற்காக சம்பந்தர் பாடிய பாடல்கள் 1917ல் கண்டுபிடிக்கப்பட்டு, தேவாரப்பாடல் பெற்ற தலங்கள் வரிசையில் சேர்க்கப்பட்டு 275வது தலமானது.
*(விழுப்புரம் அருகில் உள்ள "கிளியனூர்" 276 வது பாடல் பெற்ற தலமாகும்)
*திருவிடைவாசல் கோயில் விடையன் என்ற சூரிய குலத்து அரசர் கட்டி வழிபட்ட தலமாதலால் திருவிடைவாசல் என்றழைக்கப்பட்டது.
*சிவனின் வாகனமாகவும், கொடியாகவும் “விடை’ உள்ளது. சிவத்தலமான இதற்கு விடையுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாலும், இத்தலம் திருவிடைவாசல் என பெயர் பெற்றதாக கூறப்படுகிறது.
*இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்கிறார். இவர்மீது வைகாசி, மார்கழி மாதங்களில் சூரிய ஒளி படுவது சிறப்பு.
*திருமணத்தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இங்கு வேண்டிகொள்கிறார்கள்.
*இத்தல இறைவி அபிராமி என்ற திருநாமத்துடன் அருள்புரிகிறார்.
*சித்ரா பவுர்ணமி இத்தலத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
*இத்தல தட்சிணாமூர்த்தி சிம்மாசன மண்டபத்தில் வீற்றிருக்கிறார்.
*இத்தலத்தில் சாஸ்தா குழந்தை வடிவில் பாலசாஸ்தாவாக அருளுகிறார்.
*கோயில் பிரகாரத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, நர்த்தன விநாயகர், லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, சண்டிகேஸ்வரர், நந்தி கஜலட்சுமி, வள்ளி தெய்வானையுடன் முருகர், பாலசாஸ்தா, நவகிரகங்கள், பைரவர், அய்யனார், சூரிய சந்திரர்கள் ஆகியோர் உள்ளனர்.
*திருஞான சம்பந்தர் காலத்திற்கு முன்பிருந்தே இத்தலம் திருவிடைவாசல் என அழைக்கப்பட்டு இருக்கிறது. எனவே தான் சம்பந்தர் தனது பாடலில் “விடைவாயே” என குறிப்பிட்டுப் பாடியிருக்கிறார்.
*கோயிலின் மேற்கே காவிரியின் கிளைநதியான வெண்ணாறு, தெற்கே வெள்ளையாறு, வடக்கே பாண்டையாறு, கிழக்கே கடல் சூழ இத்தலம் அமைந்துள்ளது.
*இக்கோயில் முதலாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டிருக்கிறது.
*கும்பகோணத்திலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் நாச்சியார்குப்பம் தாண்டியபிறகு இந்த ஊர் வரும். கும்பகோணம், திருவாரூர் பகுதிகளிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன
*கொரடாச்சேரியிலிருந்து கூத்தாநல்லூர் செல்லும் பாதையில் வெண்ணாற்றுப் பாலத்திற்கு அருகில் திருவிடைவாயில் வழிகாட்டி உள்ளது. அவ்வழியில் 2 கிமீ சென்றால் இத்தலத்தை அடையலாம்.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment