Thursday, March 6, 2025

நயினா தீவு அருள்மிகு நாகபூஷணி அம்மன் திருக்கோவில்.



*நல்வாழ்வு அருளும் நயினா தீவு அருள்மிகு நாகபூஷணி அம்மன் திருக்கோவில்*
இலங்கை நாட்டின் பழம்பெரும் அம்மன் கோவில், 64 சக்தி பீடங்களுள் ஒன்றாகத் திகழும் ஆலயம், அம்மன் சுயம்புவாக தோன்றிய திருத்தலம், தலபுராணச் சிற்பங்கள் நிறைந்த சித்திரத் தேர் கொண்ட கோவில் என பல்வேறு சிறப்புகள் கொண்டு விளங்குவது, நயினா தீவு நாகபூஷணி அம்மன் திருக்கோவில். 
முக்கியத்துவம் வாய்ந்த சக்தி வழிபாட்டுத் தலங்களில், ஈழ நாட்டில் உள்ள ‘நயினா தீவு’ம் ஒன்றாகும். 64 சக்தி பீடங்களில் இது, புவனேஸ்வரி பீடமாக திகழ்கின்றது. காளிதாசரால் வணங்கப்பட்ட தலங்களுள் இதுவும் ஒன்று. நயினா தீவில் கோவில் கொண்டுள்ள நாகபூஷணி அம்மன் வரலாறு, மிகவும் தொன்மையானதாகும். கருவறையில் உள்ள மூலவர் சிலையானது, காந்தார சிற்பக் காலத்தைச் சார்ந்ததாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

சென்னையின் நவக்கிரகத் ஒன்பது தலங்கள்:

 சென்னையின் நவக்கிரகத் தலங்கள்:  சென்னையைச் சுற்றியுள்ள இந்தப் புனிதமான ஒன்பது ஆலயங்கள் ஒரே நாளில் நவக்கிரகங்களின் அருளைப் பெற ...