Thursday, May 22, 2025

அகத்திக்கீரையை பசுவிற்கு கொடுப்பதற்கு காரணம் என்ன?

அகத்திக்கீரையை பசுவிற்கு வாங்கிக் கொடுப்பதை நிறைய பார்த்திருப்போம். இதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன? எதற்காக மக்கள் அவ்வாறு செய்கிறார்கள். அதனால் கிடைக்கக்கூடிய பலன்கள் என்ன என்பதை இந்த பதிவில் காணலாம்.

பசுக்களுக்கு பழங்களும், கீரைகளும் பொதுவாகவே கொடுப்பது நல்லதாகும். மேலும் பசு மகாலக்ஷ்மியின் அம்சமாக கருதப்படுவதால், பசுவிற்கு உணவு தானமாக வழங்கப்படுவது அதிர்ஷ்டத்தை தரும் என்றும் நம்பப்படுகிறது.

பசுவிற்கு அகத்திக்கீரையை தானமாக வழங்கும்போது வீட்டில் நீண்ட நாளாக தடைப்பட்டுக்கொண்டிருக்கும் அனைத்து விஷேசங்களும் விரைவில் நடைபெறும். நாம் தெரிந்தோ அல்லது தெரியாமலோ செய்த பாவங்கள் அனைத்தும் நிவர்த்தியாகும் என்று சொல்லப்படுகிறது. பிரமஹத்தி தோஷமே சரியாகும் பசுவிற்கு அகத்திக் கீரையை கொடுக்கும்போது என்று சொல்லப்படுகிறது.

நம் மூன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யாமல் விட்ட பாவம் கூட பசுவிற்கு 16 அகத்திக்கீரையை கொடுக்கும் போது நீங்குமாம். பசுவை ஒருமுறை பிரதக்ஷணம் செய்தால் பூலோகம் முழுவதும் பிரதக்ஷணம் செய்ததற்கான பலன் கிடைக்கிறது என்று சாஸ்திரம் கூறுகிறது. பசுவை பூஜிப்பது பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரை பூஜித்த புண்ணியம் நமக்கு கிடைக்கும்.

பசுவிற்கு புல் கொடுத்தாலோ அல்லது கழுத்தில் தடவிக்கொடுத்தாலோ கோடி புண்ணியம் என்று சொல்லப்படுகிறது. பசு நடக்கும்போது ஏற்படும் புழுதி நம் மீது படுவது கூட புண்ணியமாக கருதப்படுகிறது. பசுவின் கால் பட்ட மண்ணைத்தான் தசரத சக்ரவர்த்தி, ரகு சக்ரவர்த்தி பூசிக்கொண்டார்களாம். 

பசு ‘அம்மா’ என்று அழைப்பது அந்த இடத்தில் மங்கள ஒலியை உருவாக்குகிறது. பசு இருக்கும் இடத்திற்கு பக்கத்திலிருந்து செய்யப்படும் பூஜையால் அதிக பலன்கள் கிடைக்கும். சாதாரண மனிதர்கள் கண்களுக்கு தெரியாத எமதூதர்கள், எமன் போன்றோர் பசுமாட்டின் கண்களுக்கு தெரியுமாம். அதனாலேயே யாராவது இறக்க போகிறார்கள் என்றால் பசுமாடு ரொம்பவே சத்தம் போடுமாம்.

அகத்திக்கீரையை முனிவிருக்ஷம், வக்ரபுஷ்பம் என்றும் அழைப்பார்கள். வானத்தில் அகத்திய முனிவரின் நக்ஷத்திரம் தோன்றும் நேரம் அகத்திக்கீரையும் பூ பூப்பதால் இதற்கு அகத்திக்கீரை என்ற பெயர் வந்தது.

No comments:

Post a Comment

Followers

திருப்பாம்புரம்மூலவர்: சேஷபுரீஸ்வரர், பாம்புரேஸ்வரர், பாம்புரநாதர்

நாக நாதர் கோவில், திருப்பாம்புரம் திருப்பாம்புரம்மூலவர்: சேஷபுரீஸ்வரர், பாம்புரேஸ்வரர், பாம்புரநாதர்  அம்மன்: பிரமராம்பிகை, வண்ட...