Monday, June 9, 2025

குரு, சுக்கிரன் இரண்டு கிரகங்களின் அமைப்பில் வைகாசி விசாகம் அமைந்திருக்கிறது.

வி என்றால் பறவை (மயில்), சாகன் என்றால் பயணம் என்று பொருள்.
மயில் மீது பயணம் செய்யக் கூடியவர் என்று பொருள்பெறும்.

பழநியில் வைகாசி விசாகம், தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகிய மூன்று நாட்களிலும் மலைக் கோவிலில் வள்ளி திருமணம் நடைபெறும். அதேபோல், பழனி பெரியநாயகி அம்மன் கோவிலிலும் மூன்று முறை நிகழ்த்து கிறார்கள்.

விருச்சிக ராசியில் சந்திரன் பிரவேசித்து ரிஷப ராசியில் உள்ள சூரியனைப் பார்க்கும் காலமாக இந்த நல்ல நாள் அமைகிறது.

வைகாசியில் வரும் விசாகம் ஏற்றம் உடையது. காரணம் வைகாசி மாதத்திற்கு உரிய ராசிக்கு உரியவரும், விசாக நட்சத்திரம் (முதல் மூன்று பாதங்கள்) அமைந்த ராசிக்கு உரியவருமாக சுக்கிரன் இருக்கின்றார். எனவே குரு, சுக்கிரன் என்கின்ற இரண்டு சுபகிரகங்களின் அமைப்பில் வைகாசி விசாகம் அமைந்திருக்கிறது.

குரு என்றால் இருட்டை நீக்கி வெளிச்சத்தைத் தருபவர் என்று பொருள். குருமார்களை சமய உலகில் ஞான வெளிச்சம் தருபவர்கள் என்று சொல்வது மரபு. முருகப்பெருமான் ஞான பண்டிதனாக, தகப்பன் சுவாமியாக விளங்குவதால் தான் விசாக நட்சத்திரம் முருகன் விழாக்களுக்கு உகந்த நட்சத்திரமாக கொண்டாடப்பெறுகிறது.

வைகாசி விசாகம் ‘முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரமாகும்’. ஏனென்றால், அன்றைய தினம்தான் அவர் அவதரித்தார். 

இந்திரன் வைகாசி விசாகத்தன்று சுவாமிமலை முருகனை வழிபட்டு ஆற்றல் பெற்றான்.

ஒருவருக்குக் குருவின் கருணை மட்டும் கிடைத்து விட்டால் அவர் அக வாழ்க்கைக்கோ புற வாழ்க்கைக்கோ கவலைப்பட வேண்டியதில்லை. எல்லாவற்றையும் குரு பார்த்துக் கொள்வார். அதனால்தான் குரு பார்க்கக் கோடி புண்ணியம் என்றும், குருவின் பார்வையால் எல்லா தோஷமும் நாசமாகும் என்றும் சொல்லி வைத்தார்கள்.

சிவபெருமான் தாணு (மரமாக)வாக இருப்பதாகவும், அம்பிகை கொடியாக (அபர்ணா) இருப்பதாகவும், முருகப்பெருமான் விசாகமாக (கீழ் கன்றாக) இருப்பதாகவும் சோமாஸ்கந்த தத்துவம் விளக்கி கூறுகிறது. தெற்கு திசையின் அதிபதியும், மரண தேவதையுமான எம தர்மராஜனுக்குரியது வைகாசி விசாகமேயாகும். அன்று எம தர்மராஜனை வழிபடுவதால் நீண்ட ஆயுள் கிடைக்கும்.

முருகனின் பெருமைகளை உணர்ந்து, வைகாசி விசாகத்தில் முருகனின் திருப்பாதத்தில் சரணடைய சகல சௌபாக்கியங்களு ம் கிடைக்கும்.

எல்லோரும் இன்புற்று வாழ நம் பழனி ஆண்டவன் பாதம் பணிந்து வணங்கி பிரார்த்திக்கிறேன்.

அன்புடன்
ஆத்தங்குடி வணக்கம் சுப்பிரமணியம்.

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

தஞ்சையில் தரிசிக்க வேண்டிய புன்னை நல்லூர் மாரியம்மன்.

புன்னை நல்லூர் முத்து மாரி அம்மன் ஆலயம். 1680 வாக்கில் மராட்டிய ராஜா வெங்கோஜி ஒருநாள் சமயபுரம் மாரியம்மன் ஆலயத்துக்கு தரிசனம் செ...