Tuesday, June 10, 2025

காசியினும் வீசமிகு ஷேத்திரமாக ஒதியம்பட்டு காசி விசுவநாதர்...

காசியினும் வீசமிகு ஷேத்திரமாக ஒரு திருக்கோவில் தமிழகத்தில் எங்குள்ளது தெரியுமா ?. 
கங்கை கரை ஓரத்திலே கோவில் கொண்டு காசி விஸ்வநாதர் தன் பக்தர்களுக்கு அருள்புரிகிறார். அதே போல காசிக்கு நிகரான, ஏன் காசியை விட ஒரு படி அதிகம் சக்தி கொண்ட ஒரு கோவில் தமிழகத்திலும் உள்ளது. அந்த கோவில் எங்கு உள்ளது, அதன் சிறப்புகள் என்ன என்று பார்ப்போம் வாருங்கள்.

புதுச்சேரி மாநிலம் வில்லியனுர் அருகே ஒதியம்பட்டு என்னும் கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ளது ஸ்ரீ காசி விசுவநாதர் திருக்கோவில். 

காசியில் உள்ள காசி விசுவநாதர் கோவில் எப்படி கங்கை கரையோரம் அமைந்துள்ளதோ அதே போல ஸ்ரீ காசி விசுவநாதர் ஆலயம், சங்கராபரணி என்னும் நதிக்கரையின் வடக்கு கறையில் அமைந்துள்ளது. சங்கராபரணி நதியானது கங்கை நதிக்கு நிகராக போற்றப்படுகிறது. 

இந்த நதிக்கு கிளிஞ்சியாறு, செஞ்சியாறு, வராக நதி என்று பல பெயர்கள் உண்டு. 
இந்த கோவிலில் வீற்றிருக்கும் ஸ்ரீ காசி விசுவநாதர் சுவாமியை வேண்டினால் பித்ரு தோஷங்கள் நீங்கி  16 செல்வங்களும் பெறுவது ஐதீகம். அதோடு பூர்வ ஜென்ம பாவ தோஷங்கள் அனைத்தும் நம்மை விட்டு விலகும் என்று கூறப்படுகிறது. 

இந்த திருத்தலமானது  சூரியன் பிரம்மாவால்  பூஜிக்கப்பட்ட  சிவஸ்தலம் என்பதால் உதயன்பட்டு என்ற அழைக்கப்பட்ட பின் இன்று ஒதியம்பட்டு என்று மாறியுள்ளது

காசிக்கு நிகராக  போற்றப்படுவதால்  இத்திருத்தலத்திற்கு  திருக்காசி என்னும் அடைபெயர் உண்டு இன்றய வாழ்மொழியாக திருக்காஞ்சி என்று அழைக்கப்படுகிறது 

இந்த ஸ்தலமானது காசிக்கு நிகராக போற்றப்படுவதற்கு பின் ஒரு புராண காலத்து கதையும் உள்ளது.

மாவீரர் தொண்டைமான் அரசர் ஒரு சமயம் படை சூழ வேத விற்பன்னர் ஒருவற்டைய அஸ்தியை கங்கையில் கரைக்க புறப்பட்டு சென்றுள்ளார். 

போகும் வழியில் இங்குள்ள சங்கராபரணி நதிக்கரை வழியே வந்தவுடன் அன்று இரவு நதிக்கரையில் ஓய்வு பெற்றுள்ளனர் , அன்றைய தினம் மாசி மாதம் மகம் நட்சத்திரம் , ஆழ்ந்த உறக்கத்தில் அரசர் இருந்த போது 
அஸ்தி முழுவதும் மல்லிகை பூக்களாய் மாறி மனம் விசியுள்ளது  இதை கண்ட மந்திரியார்  தாங்கள் கொண்டு வந்த அஸ்தியை திறந்து பார்த்துள்ளார் முழுவதும் மல்லிகை பூக்கள் மாறியதைக் கண்டு வியந்த பின் பயந்துள்ளார் , இரவு பயதில் மன்னரிடமும் கூட கூராமல் விட்டுவிடிகிறார் மறுநாள் மந்திரி அஸ்தியை காணும்போது அஸ்தியாகவே இருந்துள்ளது , வழக்கம்போல் காசிக்கு பயணம் தொடர்ந்துள்ளார்கள் காசிக்கு சென்று அடைய ஒரு வருடகாலம் ஆகிறது 

கங்கைக்கரைக்கு சென்றபின் அந்த வேத விற்பன்னர் அஸ்தியைக் கரைக்க நதிக்கரையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டது 

அப்பொழுது மந்திரி அரசரிடம் தான் இந்த அஸ்தி முழுவதும் மல்லிகை பூக்களாக ஓரிடத்தில் மாறியது பற்றி கூறுகிறார், அதிசயம் மிக்க இந்த விஷயத்தை ஏன் மறைத்தீர்கள் என்று மன்னர் மந்திரியார் இருவருக்குல் சர்ச்சை ஏற்பட்டு பின் அஸ்தியை எங்கு கரைப்பது என்று குழப்பம் நிலவியது , அப்போது அசரீரி குரல் ஒன்று கேட்டுள்ளது

அஸ்தியை பூக்களாக மாற்றும் சக்தி கொண்ட இடம் உள்ளது என்றால் அது காசியை மிஞ்சும் வகையில் சக்தி பெற்ற ஒரு இடமாக இருக்கக்வேண்டும் 
காசியில் செய்யவேண்டிய பிதுர் கர்மாக்கள் அவ்விடத்தில் செய்வது  சிறந்தது என அசரீரி வாக்கில் கூறியுள்ளது

இதைக்கேட்ட மன்னர் அஸ்தியை கரைக்காமல் அஸ்தியை மல்லிகை பூக்களாக மாற்றிய இடத்திலேயே கரைக்க முடிவெடுத்தார் , அதன்பின்னர் கங்கைக்கரையில் குளிக்கச் சென்று  முழுகிய போழுது ராஜவின் கையில் ஒரு பிம்பம் கிடைக்கப்பெற்றது நதிக்கரைகள் உருண்டோடி வந்த அந்த பிம்பமானது லிங்க வடிவில் இருந்தததை கண்டு மனம் மகிழ்ந்தார் 

அதன் பின்னர் அந்த லிங்க வடிவம் கொண்ட பிம்பத்தையும் , அஸ்தியையும் எடுத்துக்கொண்டு ஒதியம்பட்டு சங்கராபரணி நதியில் வடக்கு கரைக்கு வந்து அடைகின்றார்கள் 
கொண்டு அந்த பிம்பத்தை சிவரூபமாக பிரதிஷ்டை செய்து காசி விஸ்வநாதர் எனப் பெயர் சூட்டி பிறகு அந்த சங்கராபரணி நதிக்கரையில் கரைக்கப்பட்ட பொழுது  மாசி மாதம் மக நட்சத்திரதினாள் அஸ்தி முழுவதும் மல்லிகை பூக்களாக கரைந்து ஓடியது

ஸ்தல சிறப்புகள் : 
பொதுவாக சிவலிங்கப் பிரதிஷ்டை செய்ய மூன்று பாகங்களாக  செய்யப்படும் இங்குள்ள சிவலிங்கமானது 2 பாகங்கள் ஆகவே வைக்கப்பட்டுள்ளது , தமிழகத்திலேயே எங்கும் இல்லாத வகையில் முருகர் இல்லாத சிவாலயம் துர்கை நடராஜர் அறுபத்து மூவர் நால்வர் இல்லாத சிவாலயமாக விளங்குவது தனி சிறப்பு, பித்ருக்களுக்கு காரியங்களும் , தெவசங்கள்ளும் பரிகாரங்களும் இன்றைய காலம் வரை ஐதீகமாக நடைபெற்று வருவிகிறது என்பது ஸ்தல வரலாறு கூறுகிறது.

மூலவர் இருபாங்களாக கிழக்கு நோக்கி அமர்ந்துள்ள காசி விஸ்வநாதர் மற்றும் தெற்கு நோக்கி அமர்ந்துள்ள ஸ்ரீ காசி விசாலாட்சி ஒரே மண்டபத்தில் இரு சன்னதிகள் அமைக்கப்பட்டிருப்பது ஒரு தனி சிறப்பாகும்  மேலும்  காசியில் இருப்பது போன்ற ஜலலிங்கம் என்ற சன்னதியும் வடக்கு நோக்கிய அன்னபூரணி அம்பாள் சன்னதியும் கால பைரவர் சன்னதியும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது

அதிசயம் மிக்க இயற்கை எழில் பொங்கும் நதிக்கரை ஓரத்தில் அமைந்திருக்கும் இத்திருக்கோவில் காசி விஸ்வநாதர் தரிசனம் செய்து வாழ்வில் வளமும் நலமும் பெற்று வாழ வேண்டுகிறோம்

புதுச்சேரியில் இருந்து ஆலயத்திற்கு செல்லும் வழி: 
புதுச்சேரி கடலூர் தேசிய நெடுஞ்சாலைகள் முருங்கப்பாக்கம் 
வில்லியனூர் சாலை வழியாக கொம்பாக்கம் , ஒதியம்பட்டு வந்தடையலாம் 

GOOLGE MAP LOCATION LINK 

Kasi Viswanathar Temple
Othiyampet, Thirukanji, Puducherry 605110
96265 36469

https://goo.gl/maps/mbVwdGFosRy

மேலும் விவரங்களுக்கு ஆலய அர்ச்சகர்

சிவஸ்ரீ . வாமதேவ சீனுவாச சிவாச்சாரியார் - 9345456810 

சிவஸ்ரீ . பரணிதர குருக்கள் - 9003819320 

சிவஸ்ரீ . பிரதீப் சிவம் - 9626536469

#திருக்காசி  #ஒதியம்பட்டு 
#காசிவிஸ்வநாதர் #திருக்கோவில் 
#புதுச்சேரி #வில்லியனூர்

No comments:

Post a Comment

Followers

செய்யாறு திருவோத்தூர் வேதபுரீஸ்வரர்

தேவாரப் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றான  #திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள #செய்யாறு என்று அழைக்கப்படும் #திருவோத்தூர் #வேதபுரீஸ்...