Tuesday, June 3, 2025

தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் வழிபாடு செய்யும் சற்குணலிங்கேஸ்வரர்.

*சற்குணலிங்கேஸ்வரர் (கருக்குடிநாதர்)திருக்கோயில்*, கருக்குடி, மருதாநல்லூர் கும்பகோணம் வட்டம். தஞ்சாவூர் மாவட்டம்.
இத்தல இறைவன் மணலால் ஆன சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 132 வது தேவாரத்தலம் ஆகும்.   

திருஞானசம்பந்தர் பாடல் பெற்றது.

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 69வது தலம்.
தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் வழிபாடு செய்தால் பலன் நிச்சயம்.

கிழக்கு நோக்கிய கோயில். கருவறையில் உள்ள சிவலிங்கம் மிகவும் சிறியது. மண்ணால் செய்யப்பட்டது. மண்ணினை கையால் பிடித்து செய்த சுவடுகள் தெரிகிறது. அரையடி உயர சிறிய ஆவுடையார். பீடம் கல்லால் அமைக்கப்பட்டுள்ளது.

பிரகாரத்தில் வலம்புரி விநாயகர், நவகிரகம், சூரியன், சந்திரன், லிங்கோத்பவர், முருகன் உள்ளனர்.

ராமாயண காலத்தில் ராமபிரான் இலங்கைக்கு செல்லும் முன் இத்தலத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது.

குறித்த நேரத்தில் வழிபாடு செய்ய அனுமன் சிவலிங்கம் கொண்டு வர தாமதமானதால், ராமன் தன் அருகிலிருந்த மணலிலேயே இரண்டு கைகளாலும் லிங்கம் பிடித்து வழிபட்டார் என்றும் அதுவே தற்போதைய பிருதிவி லிங்கமாகும்.

அனுமன் கொண்டு வந்த லிங்கம் கோயிலின் இடப்புறம் உள்ள அனுமந்த லிங்கம் என்ற பெயரில் உள்ளது. இத்தலத்திற்கு மற்றொரு வரலாறும் உண்டு.

தனஞ்சயன் என்ற வணிகன் ஒருவனுக்கு தொழுநோய் ஏற்படுகிறது. மனம் வருந்திய அவன் இத்தல இறைவனை வேண்டி தொழுநோய் நீங்கப்பெற்றான்.

சிவன், அம்மன் இருவரும் கிழக்கு பார்த்து திருமண கோலத்தில் அருள்பாலிக்கின்றனர்.

இவ்வூரின் அருகே ஏனாதிநாயனார் அவதரித்த ஏனநல்லூர் உள்ளது. வீணா தட்சிணாமூர்த்தி உள்ளார்.

பிரம்மா, சற்குணன் என்ற அரசன் ஆகியோர் வழிபாடு செய்துள்ளனர். இதனால் இறைவன் சற்குணலிங்கேஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.

கும்பகோணத்திலிருந்து (5 கி.மீ.) மன்னார்குடி வழியில் இத்தலம்  உள்ளது. 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

*ஆடி பூரம் அம்மனுக்கு வளையல் திருவிழா*

*ஆடி பூரம் அம்மனுக்கு வளையல் திருவிழா* ஆடி பூரத்தன்று, அம்மன் கோயில்களில் ஹோமங்கள்  பூஜைகள்  நடத்துகின்றன.  ஆண்டாளின் பிறப்பிடமா...