சங்கு சக்கரம் ஏந்திய நடராஜர்
சக்ரதாரிக்கே சக்ர தானம் செய்தவர் சிவபெருமான்.
மகேஸ்வரனுக்கு ஐந்து முகங்கள் உண்டு. அவை சத்யோஜாதம், அகோரம், வாமதேவம், தத்புருஷம் மற்றும் ஈசானம்.
ஒவ்வொரு முகத்திலிருந்தும் ஐந்து சிவ வடிவங்கள் தோன்றின. 5 x 5 = 25 மூர்த்திகள் - மகேஸ்வர வடிவங்கள் என்று அழைக்கப்படும்.
அந்த மகேஸ்வர வடிவங்கள் இருபத்து ஐந்தினுள் ஒன்று சக்ரதான மூர்த்தி. மஹாவிஷ்ணுவுக்கு சுதர்சனம் எனும் சக்ரத்தை அருளியவர் சக்ரதான மூர்த்தி.
மகாவிஷ்ணுவின் சக்கராயுதத்தை சலந்தரன் என்ற அரக்கன் பறித்துச் சென்று விட்டான்.
அவர் பரமசிவனிடம், சக்ராயுதத்தை மீட்டுத்தர வேண்டினார்.
பூலோகத்தில் வீழிச்செடிகள் அடர்ந்த இடத்தில் தான் இருப்பதாகவும், அங்கு தினமும் பூஜை செய்தால் சக்ராயுதம் கிடைக்கும் என்றும் அருளினார்.
விஷ்ணுவும் திருவீழிமிழலை தலத்தில் தனது பெயரால் ஒரு தீர்த்தம் உண்டாக்கி, அதிலிருந்து சிவனுக்கு அபிஷேகம் செய்து ஆயிரம் தாமரை மலர்களால் ஈசனை வழிபாடு செய்து வந்தார்.
ஒருநாள் சிவனின் திருவிளையாடலால், சிவபூஜைக்கான ஆயிரம் தாமரையில் ஒன்று குறைந்தது.
அந்த ஒரு தாமரைக்கு பதில் விஷ்ணு தன் கண்ணையே ஆயிரமாவது மலராக தந்தார்.
இப்பூஜைக்கு மகிழ்ந்த சிவன், சலந்தரனை வதம் செய்து, சக்கராயுதத்தை கொடுத்தருளினார்.
இராஜராஜசோழன் அமைத்த தஞ்சைப் பெரிய கோயிலில் உள்ள வெற்றிவேல் முருகன் சன்னிதியில் உள்ள தூணில், நடராஜர் சிற்பம் - கைகளில் உடுக்கை, தீயகலுக்குப் பதிலாக சங்கு மற்றும் சக்கரத்தை ஏந்தியுள்ளதாக அமைந்துள்ளது. மிக அரிய சிற்பம்.
பாம்பின் மீது தாண்டவம் ஆடுவது போல் அமைந்துள்ளது.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment