Friday, July 4, 2025

உத்தமசோழன் புதுப்பித்த கருந்திட்டை குடியான் மகாதேவர் கோயில்.

உத்தமசோழன் புதுப்பித்தகருந்திட்டை குடியான் மகாதேவர் கோயில்
முற்காலச் சோழர்களின் கோயில்கள் வரிசையில் பரந்தகச்சோழன்காலத்தியதாக உள்ளகட்டிடக்கலை சிறப்புகளுடன் திகழும் இக்கற்றலியை செம்பியன்மாதேவியாரின் திருமகன் மதுராந்தக உத்தம சோழன் புதுப்பித்தான் என சான்றிதழ் அடிப்படையில் அறிஞர்கள்குறிப்பிட்டுள்ளனர்.

வடவாற்றின்வடகரையில் இத்தலம் அமைந்துள்ளது கோயிலின் கீழ்புறம் அழகிய திருக்குளம் விளங்க இரண்டு திருச்சுற்றுகள் திருமதிகள் சிறிய கோபுரங்கள் அழகிய ஒரு தலை விமானங்கள், திருமண்டபங்கள்ஆகியவற்றுடன் மூலவர் கிழக்கு நோக்கியும் உமையம்மை தெற்கு நோக்கியும் காட்சிதருமாறுஇவ்வாலயம் விளங்குகின்றது. 
சோழர் காலத்தில் இவ்வாலயம் இரண்டாம் முறை புதுப்பிக்கப்பட்ட போது சில புதிய மாடங்களும்சிற்பங்களும் அங்கு இடம் பெற்றன. கருவறை அர்த்தமண்டபம் ஆகியவற்றின்புறச்சுவர்களில் லிங்கத்தை வணங்கும் கோலத்தில் திருஞானசம்பந்தர், நடராஜர், திருநாவுக்கரசர் பிச்சாடனார் ,விநாயகர், தென்முகக் கடவுள் அகத்தியர் மாதொருபாகர் பிரம்மன் திருமால் ஆகியோருடன்லிங்கோத்பவர் கங்காள மூர்த்தி வீணாதாரர் காலகாலர் துர்க்கை கந்தவேல் ஆகிய தெய்வத் திரு உருவங்கள்இடம்பெற்றுள்ளன.

கோஷ்ட தெய்வங்களில் ரிஷி பத்தினி ஒருத்தி யிடம் பிச்சையை ஏந்தியவராகக்காணப்படும் கங்காள மூர்த்தியும் (பிச்சாடனார்)ஆடவல்லபெருமானும் கங்காதரரும் காலகாலரும், உமையொருபாகரும் தனிச்சிறப்பு வாய்ந்த சிற்பங்களாககாணப்படுகின்றனர். பொதுவாக அர்த்தனாரி சிற்பங்களில் பெருமானாரின் இடபாகத்தில்தான் உமை பாகம் காண பெறும் இங்கு வலபாகத்தில் உமாதேவி ஒரு பாதிவுடலுடன் காட்சி நல்குகின்றாள்.

இச் சிற்பங்கள் பத்தாம் நூற்றாண்டின் சோழர்கள் பாணியில்அமைந்தனவாகும். மதுராந்தக உத்தமசோழனின் பத்தாம் ஆட்சி ஆண்டு ஆகிய கி.பி 980இல் அருணி விமலை பிராட்டி என்னும் நங்கை ஒருத்தி துவாரபாலகர் சிற்பங்களை தன் நன்கொடையாகஅமைத்தாள்என்பதைஇவ்வாலயத்து கல்வெட்டு சாசனம் ஒன்று கூறுகின்றது..

மதுராந்தக உத்தமர் சோழனின் மகனான மதுராந்தகன்கண்டராதித்தன் இத்திருக்கோயில் இறைவன் முன்பு திருவிளக்குஎரிப்பதற்காக 96 ஆடுகளை முதலீடாக அளித்ததை ஒரு சாசனம் விவரிக்கின்றது. கிழவன் ஆனைக்காவன் என்பவனின் தாயார் 
தன் பெயரில் கோயில் திருப்பணிகளுக்காக 
ஒரு பெரிய கற்களை அளித்தாள் என்பதை இவ்வாலயத்து கல்வெட்டு ஒன்று குறிப்பிடுகின்றது. 

மாமன்னன் ராஜராஜ சோழனின் தமக்கையார் நல்லூர் நாட்டு ராஜகேசரி என்னும் ஊரிலிருந்து இக்கோயிலுக்காக மன்னரின் ஆணைப்படி நிலமொன்றினை விற்று கொடுத்தது பற்றி விவரிக்க பெற்றுள்ளது. ராஜராஜ சோழனின் குதிரை படை வீரர்களான இத்தாதர முத்தரையர் என்பவனும், காரி குளிர்வாகை என்ற மற்றொரு போர் வீரனும் விற்போர் புரிந்த போது காரி குளிர்வாகை என்பவனின் தோளில் அம்பு பாய்ந்து இறந்து விட்டான் என்றும் அவன் ஆன்மா சாந்திக்காக அவன் உறவினர்கள் கருந்தித்திட்டைக் குடி மகாதேவர் முன்பு நந்தா விளக்கு எரிப்பதற்காக அறக்கொடை ஒண்றினை முதலீடு செய்தனர் என்ற தகவலைஇக்கோவிலுள்உள்ள கல்வெட்டுச் சாசனம் கூறுகின்றது. 

கங்கைகொண்ட முதலாம் ராஜேந்திர சோழன் பெயரால் 'ராஜேந்திர சோழன் பட்டம் 'என்று மன்னர் பெயரில் அணிகலன் ஒன்றும், பல்வேறு விதமான அணிகலன்களும், இக்கோயில் ஈசனுக்காக வழங்கப்பெற்றமை ஒரு சாசனம்எடுத்துரைக்கின்றது.இவ்வாறுஇவ்வாலயத்துசுவர்களில்காணப்பெறும்கல்வெட்டுக்கள்
அனைத்தும் 1100 ஆண்டுகள் கால வரலாற்று நிகழ்வுகளை சுமந்து கொண்டு நிற்கின்றன. 

தஞ்சாவூருக்கு செல்வோர் புறநகரான கரந்தைக்குச் சென்று கருந்திட்டை குடி மகா தேவரை வணங்கி அங்குள்ள கலைநயம் வாய்ந்த கோஷ்ட சிற்பங்களைகண்
குளிர காணுங்கள். அவ்வாலயத்து வரலாற்று சிறப்புகளை அறிந்து ஈசனை போற்றுங்கள். 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

அப்பரைக் கல்லிலே கட்டி கடலிலே விட அது மிதந்து கரைசேர்ந்த தலம்

தேவாரம் மற்றும் திருப்புகழ் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றானதும், புலிக்கால் முனிவர் தவமிருந்து பேறுபெற்ற #திருப்பாதிரிப்புலியூர் #பாடலேஸ்வரர் ...