Monday, July 21, 2025

கொல்லூர் ஸ்ரீமூகாம்பிகை


உலகப் புகழ்பெற்ற 
முப்பெரும் தேவியரும் மும்மூர்த்திகளும் ஒன்றாக காட்சி தரும்,
இந்தியாவில் உள்ள 
51 சக்தி பீடங்களில் தேவியின் காதுகள் விழுந்த பீடமான,
புகழ்பெற்ற 
"#அர்த்தநாரிசக்திபீடமான" 
கர்நாடகா மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற 
#கொல்லூர் 
#ஸ்ரீமூகாம்பிகை திருக்கோயிலை தரிசிக்கலாம் வாருங்கள் 🙏🏻 🙏🏻 🙏🏻 

கொல்லூர் மூகாம்பிகை கோவில் கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் கொல்லூரில் அமைந்துள்ளது. இது அன்னை மூகாம்பிகைக்கு அர்பணிக்கப்பட்ட கோவிலாகும். செளபர்ணிகா நதிக்கு தென்புறக்கரையில் அமைந்துள்ளது இந்த கோவில். இந்த இடம் கோகர்ணா மற்றும் கன்யாகுமரிக்கு இடையே அமைந்துள்ளது. இந்த இடம் முனிவர் பரசுராமரால் உருவாக்கப்பட்டது என நம்பப்படுகிறது .
இக்கோயில் கோடாச்சத்ரி மலைக் குன்றுகளின் அடிவாரத்திலும், சௌபர்னிகா நதியின் தென்புறத்திலும் அமைந்துள்ளது. மேலும், இந்த இடமானது கோகர்ணம் மற்றும் கன்னியாகுமரி (பேரூராட்சி)க்கு இடையே அமந்துள்ளது. மூகாம்பிகை கோயில் அமைந்துள்ள நிலப்பகுதி புராண காலத்தில் துறவியான பரசுராமரால் உருவாக்கப்பட்டது என்று நம்பப்படுகிறது. இக் கோயிலின் பிரதான தெய்வமாக சுயம்பு மூர்த்தமான ஜோதிர்லிங்கம் ஆகும். இதன் நடுவில் தங்கத்தினாலான வரிகளையுடய ஒரு பிளவு காணப்படுகிறது. லிங்கத்தின் இடப்புறம் முப்பெரும் தேவியர்களையும் வலப்புறம் மும்மூர்த்திகளையும் குறிக்கிறது. இதனுடன் நான்கு கைகளையுடய பஞ்சலோகத்தாலான மூகாம்பிகை திரு உருவம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இக்கோவில் இந்துக்களின் மிக முக்கியமான வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது.
இது கர்நாடகாவில் உள்ள ஏழு முக்தி தலங்களில் ஒன்று .1.உடுப்பி  2.சுப்பிரமணியா.3. கும்ப காசி 4. கோடேச்வரா.5. க்ரோட சங்கரநாராயணா.6. கோகர்ணம் 7. மூகாம்பிகை. இவை ஏழும் ஏழு முக்தித் தலங்கள் ஆகும்.

இத்தளத்திற்கு வேறு பல பெயர்கள் உண்டு"" மூகாம்பாபுரி""  என்றும்"" கோலாபுரம்"'  என்றும் அது நாளடைவில் மருவி"" கொல்லூரு "" என்றும் ""கொல்லூர்"" என்றும் பல பெயர்கள் உண்டு.
    
மூலவர்: மூகாம்பிகை

தீர்த்தம்: அக்னி, காசி, மது, கோவிந்த, அகஸ்தியர்

ஊர்: கொல்லூர்

மாவட்டம்: உடுப்பி

மாநிலம்: கர்நாடகா

கொல்லூர் பகுதியில் கம்ஹாசூரன் என்ற அரக்கனின் தொல்லைகளிலிருந்து மக்களை காக்க, பார்வதி தேவி, அவ்வரக்கனை கொன்று மக்களை காத்தார். பார்வதி தேவியை இங்குள்ள மக்கள் மூகாம்பிகை என்று அழைத்து வழிபடுகின்றனர். இக்கோயில் மூலவர் மூகாம்பிகை சிலையை 1200 ஆண்டுகளுக்கு முன்னர் ஹலுகல்லு வீர சங்கய்யா என்ற அரசன் நிறுவினார். இக்கோவில் 51 சக்தி பீடங்களில் தேவியின் காதுகள் விழுந்த பீடமாகப் போற்றப்படுகிறது. தமிழ் மாதங்களான புரட்டாசியில் நவராத்திரி விழாவும், பங்குனி மாதத்தில் தேரோட்டமும் இங்கு கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்கள் ஆகும்.

சங்கர மடத்தை நிறுவிய ஆதி சங்கரர் மூகாம்பிகை தேவியின் தரிசனத்தைக் கண்டதால் இங்கு கோயிலை நிர்மாணித்தார் என்று நம்பப்படுகிறது.

ஒரு நாள், தேவி மூகாம்பிகை ஆதி சங்கரர் முன்பாகத் தோன்றி வேண்டிய வரத்தைக் கேட்குமாறு பணித்தார். அதற்கு ஆதி சங்கரர், தான் கேரள மாநிலத்தில் தேவியின் சிலையை பிரதிஷ்டை செய்து, மக்கள் அனைவரும் வழிபாடு செய்வதற்கு, ஒரு கோயில் கட்டி வழிபட விரும்புவதாகக் கூறினார். அதற்கு தேவி ஒரு நிபந்தனையுடன் ஒத்துக்கொண்டார். அதாவது, சங்கரர் முன்னே செல்ல வேண்டும் என்றும், குறிப்பிட்ட இடம் வரும் வரை பின்னால் திரும்பி பார்க்கக் கூடாது எனவும் கட்டளையிட்டார். அதனால் ஆதி சங்கரர் முன்னே சென்றார். மூகாம்பிகை தேவி சங்கரரை சோதிக்க விரும்பியதால் தன் காலில் அணிந்த "கொலுசுகளின்" சலங்கை சத்தத்தை கேட்காதவாறு நிறுத்தினார். சலங்கை சத்தம் கேட்காததால் நிபந்தனையை மறந்து சங்கரர் திரும்பிப் பார்த்தார். அங்கு தேவி மூகாம்பிகை சிலை வடிவில் உருமாறி விட்டார். அந்த இடமே தற்போதைய "கொல்லூர்" ஆகும். கோயில் கட்டப்பட்ட இடமானது ஆதி சங்கரர் தவமியற்றிய இடமாகும். மற்றும் தேவி மூகாம்பிகை சங்கரருக்கு காட்சியளித்த இடம் கோடாச்சத்ரி மலை உச்சி ஆகும். இது கொல்லூரிலிருந்து 21 கி.மீ. தொலைவில் உள்ளது. இம் மலையின் உச்சியை கொல்லூர் மூகாம்பிகை கோயிலின் வெளிப்புறத்திலிருந்து காண முடிகிறது.

#தல வரலாறு:

பல நூறு வருடங்களுக்கு முன்பு இந்தப் பகுதியில் வாழ்ந்துவந்த மூகாசுரன் என்ற ஒரு அசுரன் சிவனை நோக்கி தவம் இருந்து பெறக்கூடாத வரங்களை எல்லாம் பெற்று விட்டான். இதனால் அவனது தலைகணம் அதிகமாகி சாதாரண மக்களையும், ரிஷிகளையும் துன்புறுத்தி வந்தான். இதனைக் கண்ட தேவர்கள் மக்களை காப்பாற்ற வேண்டி அம்பிகையிடம் முறையிட்டனர். இதனால் மூகாசுரனிடம் போர் கொண்ட தேவி, மூகாசுரனை வென்றாள். அம்பிகையிடம் சரணடைந்தான் அசுரன். தனது கர்வத்தை அடக்கிய அம்பாளிடம் ஒரு வேண்டுகோளை வைத்தான் மூகாசுரன். தன்னை தோற்கடித்த அந்த இடத்திலேயே மக்களை காக்க தேவி இருக்க வேண்டும் என்ற என்ற முகாசுரன் எண்ணத்திற்கு இணங்க அவன் பெயரிலேயே மூகாம்பிகை என்ற பெயரில் அந்த இடத்தில் தங்கி விட்டால் தேவி.

இக்கோயில் மூலவர் மூகாம்பிகை சிலையை 1200 ஆண்டுகளுக்கு முன்னர் ஹலுகல்லு வீர சங்கய்யா என்ற அரசன் நிறுவினார். 

புராணக்கதை:

சங்கர மடத்தை நிறுவிய ஆதி சங்கராச்சார்யா மூகாம்பிகை தேவியின் தரிசனத்தைக் கண்டதால் இங்கு கோயிலை நிர்மாணித்தார் என்று நம்பப்படுகிறது.

ஒரு நாள், தேவி மூகாம்பிகை ஆதி சங்கரர் முன்பாகத் தோன்றி வேண்டிய வரத்தைக் கேட்குமாறு பணித்தார். அதற்கு ஆதி சங்கரர், தான் கேரள மாநிலத்தில் தேவியின் சிலையை பிரதிஷ்டை செய்து, மக்கள் அனைவரும் வழிபாடு செய்வதற்கு, ஒரு கோயில் கட்டி வழிபட விரும்புவதாகக் கூறினார். அதற்கு தேவி ஒரு நிபந்தனையுடன் ஒத்துக்கொண்டார். அதாவது, சங்கரர் முன்னே செல்ல வேண்டும் என்றும், குறிப்பிட்ட இடம் வரும் வரை பின்னால் திரும்பி பார்க்கக் கூடாது எனவும் கட்டளையிட்டார். அதனால் ஆதி சங்கரர் முன்னே சென்றார். மூகாம்பிகை தேவி சங்கரரை சோதிக்க விரும்பியதால் தன் காலில் அணிந்த "கொலுசுகளின்" சலங்கை சத்தத்தை கேட்காதவாறு நிறுத்தினார். சலங்கை சத்தம் கேட்காததால் நிபந்தனையை மறந்து சங்கரர் திரும்பிப் பார்த்தார். அங்கு தேவி மூகாம்பிகை சிலை வடிவில் உருமாறி விட்டார். அந்த இடமே தற்போதைய "கொல்லூர்" ஆகும். கோயில் கட்டப்பட்ட இடமானது ஆதி சங்கரர் தவமியற்றிய இடமாகும். மற்றும் தேவி மூகாம்பிகை சங்கரருக்கு காட்சியளித்த இடம் கோடாச்சத்ரி மலை உச்சி ஆகும். இது கொல்லூரிலிருந்து 21 கி.மீ. தொலைவில் உள்ளது. இம் மலையின் உச்சியை கொல்லூர் மூகாம்பிகை கோயிலின் வெளிப்புறத்திலிருந்து காண முடிகிறது. 

ஆதி சங்கரரும் மூகாம்பிகையும்:

ஜோதிர் லிங்கம் முன்னாள் அமர்ந்து ஆதிசங்கரர் தியானம் செய்து கொண்டிருந்தபோது ஒருநாள் அவர் முன் ஜெகஜோதியாக அம்பிகையின் உருவம் ஒளிர்ந்து காட்சி அளித்தது.

கேரளாவில் காலடியில் பிறந்த ஆதிசங்கரருக்கு எத்தனையோ பகவதி கோவில்கள் இருந்தும் கலைவாணிக்கு ஒரு கோவில் இல்லையே என்ற ஏக்கம் இருந்தது.

அவர் மைசூர் சமுண்டீஸ்வரி தாயை நோக்கி தவம் இருந்தார்.

மகனின் தெய்வீக தாகத்தைத் தீர்க்க அன்னை ஆதிசங்கரருக்கு காட்சியளித்தாள்.

தேவியின் திவ்ய ரூபம் கண்டு ஆதிசங்கரருக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. ஆனந்தக் கூத்தாடினார்.

தேவியோ, ”நீ எங்கு என்னை குடி வைக்க விரும்புகிறாயோ அங்கு கொண்டுபோ.

ஆனால் ஒரு நிபந்தனை.

நான் உன்னைப் பின் தொடர்வேன். நீ என்னை திரும்பி பார்க்கக் கூடாது.

அப்படி திரும்பிப் பார்த்தால் அந்த இடத்திலேயே நின்றுவிடுவேன்” என்றாள்.

ஆதிசங்கரர் தேவியின் நிபந்தனையை ஒத்துக் கொண்டு தேவியின் கொலுசு ஒலியைக் கேட்டபடி நிம்மதியாக நடந்து சென்றார்.

எப்பொழுதுமே தேவி சித்தாடல் புரிவது தானே இயற்கை. போகும் வழியில் கோல மகரிஷி வழிபட்டு வந்த சுயம்பு லிங்கத்தைப் பார்த்து நின்றுவிட்டாள்.

கொலுசு ஒலி கேட்டுக் கொண்டே முன்னே நடந்து சென்று கொண்டிருந்த ஆதிசங்கரர் கொலுசு ஒலி நின்றுவிட்டதே எனத் திரும்பிப் பார்க்கிறார்.

அன்னை அருள்வாக்குபடி நீ திரும்பி பார்த்தால் நான் அங்கேயே நின்றுவிடுவேன் என்ற வரிகள் நினைவுக்கு வந்தன.

எனவே அங்கு ஜோதிர் லிங்கத்தில் தேவி அந்த இடத்திலேயே ஐக்கியமாகிவிட்டாள்.

அவள் குடியேறிய இடம்தான் கொல்லூர் என்ற சக்தியின் புண்ணியத்தலம் ஆகும்.

அடர்ந்த காடு, மலை, ஆறுகள் அமைந்த இடத்தில் சுயம்புவான ஜோதிர்லிங்கம் மட்டும் தான் இருந்தது. அதிலே அரூபமான முப்பெரும் தேவியரும் உடனுறைகிறார்கள்.

ஆதிசங்கரர் வந்தபோது கோல மகரிஷி பூஜித்து வந்த தங்க ரேகை மின்னும் சுயம்புலிங்கம் மட்டுமே இருந்தது.

அம்பாள் சிலை ஏதும் இல்லை. எனினும் அரூபரூபமாய் அந்த லிங்கத்தில் இருப்பதாக எத்தனையோ காலமாய் நம்பப்பட்டு வந்த ஸ்ரீமூகாம்பிகை தேவி என்ற அம்பாளின் முகம் அப்போது எப்படி இருக்கும் என்று யாரும் கற்பனை செய்து கூட அறியமுடியவில்லை.

மூகாம்பிகை தேவியின் புகழினையும், பெருமைகளையும், மகிமைகளையும் கூறும் பல நிகழ்ச்சிகளையும், கதைகளையும் பக்தியுடன் பேசிவந்த ஊர் மக்கள் மன்தில் இது ஒரு பெருங்குறையாக இருந்தது.

இந்நிலையில் ஆதிசங்கரர் கொல்லூர் வந்திருப்பது ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது.

சக்தியை வழிபடும் சாக்தமார்க்கத்தை வழிபட அருளிய மகான் ஆதிசங்கரர் அரூபரூபமாய் உள்ள ஸ்ரீமூகாம்பிகையின் திரு உருவத்தைக் காட்டுவார் என ஊர்மக்கள் பரவசமடைந்தார்.

கொல்லூரில் ஆதிசங்கரர் தங்கியிருந்து தினமும் தியானம் செய்தது மூலவரின் சன்னதிக்கு நேர் பின்புறம் அமைந்துள்ள ஒரு மேடை ஆகும்.

ஏகாந்த வெளியில் ஜோதிர் லிங்கம் முன்னாள் அமர்ந்து ஆதிசங்கரர் தியானம் செய்து கொண்டிருந்தபோது ஒருநாள் அவர் முன் ஜெகஜோதியாக அம்பிகையின் உருவம் ஒளிர்ந்து காட்சி அளித்தது.

ஆதிசங்கரர் தரிசித்த அம்பிகையின் உருவத்தை மனதில் கண்டார்.

அவ்வுருவம் சங்கு சக்கரம் அபயக்கரம் ஏந்திய சாந்த சொரூபியாக பத்மாசனத்தில் அமர்ந்து அருட்கடாச்சம் தந்ததைக் கண்டார்.

அன்னை தானே இத்தனை காலமாக இந்த சொர்ணரேகை மின்னும் சுயம்பு லிங்கத்தில் அரூபரூபமாய் முப்பெருந்தேவி மூகாம்பிகா என அடையாளம் காட்டிக் கொண்டாள்.

ஆதிசங்கரர் மனம் மகிழ்ந்து அம்பாளை துதித்தார். அக்காட்சி அவர் இதயத்தில் தத்ரூபமாக பதிந்தது.

உடனே இச்செய்தியை உரியவர்களிடம் கூறினார். விக்கிரகக் கலையில் விஸ்வகர்மா பரம்பரையில் கைதேர்ந்த ஸ்தபதி ஒருவரை அழைத்து விக்கிரகம் செய்ய ஏற்பாடு செய்தார்கள்.

மூலவரின் சிலையும் பஞ்சலோகத்தில் உருவானது. அம்மாளை பிரதிஷ்டை செய்வதற்காக தொடர்ந்து ஒருவருடம் உட்கார்ந்த நிலையிலேயே பூஜை செய்ததால் ஆதிசங்கரரால் எழ முடியவில்லை.

தவிக்கும் தன் பக்தனைப் பார்த்த அன்னை தன் கையாலேயே கஷாயம் செய்து சங்கரருக்குக் கொடுத்தாள்.

இன்றும் இந்த தலத்தில் இரவு நேரத்தில் கஷாயம் காய்ச்சி பக்தர்களுக்கு பிரசாதமாகக் கொடுக்கி றார்கள்.

தியானத்திலே கண்ட திவ்ய சொரூபம் ஆதிசங்கரர் கண் முன் நின்று காட்சியளித்துக் கொண்டிருந்தது. விக்கிரகத்தை பார்த்தார். மெய்சிலிர்த்தது!

பத்மாசன தோற்றம்-நான்கு கைகள், சங்கு சக்கரம், ஒரு கை அருளையும் ஒரு கை தன் மலர் பாதத்தை சரணடையத் தூண்டும் வகையிலும் இருந்தன.

சுயம்பு லிங்கத்தின் பின்னால் சிறிது இடைவெளி விட்டு மூகாம்பிகா சிலையை பிரதிஷ்டை செய்தார்.

அதனடியில் சக்தி மிகுந்த ஸ்ரீ சக்கரத்தை ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்தார்.

அச்சக்கரத்தில் ஒன்பது சக்கரம் அடக்கம் அறுபத்து நான்கு கோடி தேவதைகளை ஆவாஹனம் செய்தார்.

ஸ்ரீ சக்கரத்தின் மீது அன்னையின் விக்கிரக ரூபத்தை நிறுவினார்…

தேவி ஸ்ரீ மூகாம்பிகை:

இத்தளத்தில் முதன்முதலில் அம்பாள் மூகாம்பிகையானவள், சிலை வடிவில் இல்லை. மூலவராக சுயம்பு லிங்கம் மட்டுமே இருந்தது. சிவபெருமானின் லிங்கத்தில், அம்பாள் அரூபமாகவே பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருந்தார். ஆதிசங்கரர் இந்த கோவிலுக்கு வருகை தந்தபோது சுயம்பு லிங்கத்தை மட்டுமே தரிசனம் செய்தார். இந்த கோவிலில் இருக்கும் சுயம்பு லிங்கத்தை முதன்முதலில் வழிபட்டவர் கோல மகரிஷி ஆவார். லிங்கத்தில் அரூப வடிவில் மறைந்திருக்கும் அம்பாளை வெளிக்கொண்டு வருவதற்கு ஆதிசங்கரர் கடும் தவம் மேற்கொண்டார். ஆதிசங்கரரின் வேண்டுதலை ஏற்ற தேவி, மூகாம்பிகை வடிவில் ஆதிசங்கரருக்கு காட்சி தந்தால். அந்த ரூபத்தை மூகாம்பிகை சிலையாக உருவம் அமைத்து பிரதிஷ்டை செய்தார் ஆதிசங்கரர். இங்கு இருக்கும் அம்மனுக்கு அபிஷேகம் கிடையாது. அலங்காரமும், ஆராதனையும் மட்டுமே நடைபெறும். அபிஷேகங்கள் எல்லாம் லிங்கத்திற்கு மட்டுமே நடைபெறுகிறது. இத்தளத்தில் இருக்கும் லிங்கத்தின் நடுவே தங்க நிற கோடு உள்ளது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று. கோடு இருப்பதை அபிஷேக நேரத்தில் மட்டுமே காண முடியும். லிங்கத்திற்கு இடது பக்கமாக பிரம்மா விஷ்ணு சிவன் இவர்கள் மூவரும், வலது பக்கமாக சரஸ்வதி லட்சுமி பார்வதி இவர்கள் மூவரும் வீற்றிருப்பதாக இருப்பதாக கூறப்படுகிறது. இங்கு வீற்றிருக்கும் லிங்கத்தை வணங்கினால் கோடி புண்ணியம் கிடைக்கும். முதன்முதலாக இந்த லிங்கத்தை கோல மகரிஷி  வழிபட்டதால் கொல்லூர் என்ற பெயர் இந்த இடத்திற்கு வந்தது. இத்திருத்தலம் 51 சக்தி பீடங்களில் அம்பாளின் காதுகள் விழுந்த பகுதியாக கருதப்படுகிறது.

இங்கு காட்சிதரும் ஸ்ரீ மூகாம்பிகையின் இரு பக்கங்களிலும் ஐம்பொன்னாலான காளி தேவியும், சரஸ்வதி தேவியும் காட்சி தருகின்றனர். இதனால் இவர்களுக்கு முப்பெரும் தேவியர் என்ற சிறப்பு பெயரும் உண்டு. நவராத்திரியின் ஒன்பது தினங்களும் இங்கு விசேஷமான பூஜைகள் நடத்தப்படும். அம்பிகையை பிரதிஷ்டை செய்த ஆதிசங்கரர் மூகாம்பிகையை, சரஸ்வதி தேவியாக நினைத்து வணங்கி ‘கால ரோகணம்’ பாடி அருள் பெற்றார். இத்தளத்தில் இருக்கும் சரஸ்வதி தேவியின் சிலையானது, சரஸ்வதி பூஜை அன்று வீதி உலா எடுத்துச் செல்லப்படுகிறது. குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவதற்கு வித்தியாரம்ப நிகழ்ச்சியும் சரஸ்வதி பூஜை அன்று சிறப்பாக இத்தளத்தில் நடத்தப்படுகிறது.

கோவில் அமைப்பு:

கோவில்களின் அமைப்பும், கட்டிட தொழில் நுட்பமும் மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடும். தமிழ்நாட்டில் பிரமாண்ட பிரகாரங்கள், கலர்கள், கோபுரங்கள் இருக்கும். மற்ற மாநில ஆலயங்களில் அப்படி பார்க்க முடியாது.

அந்த வகையில் கொல்லூர் மூகாம்பிகை ஆலயமும் தமிழக ஆலய அமைப்புகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இருப்பதை காண முடிகிறது. இந்த ஆலயம் முழுவதும் கேரளா ஆலய கட்டுமான பாணியில் உள்ளது. 

ஸ்ரீமூகாம்பிகை கோவில் கர்நாடகத்தில் இருந்தாலும் கேரள கோவில்களின் அமைப்புகளையும், பாணியையும் ஒத்திருக்கின்றது. கிழக்கு கோபுரவாயிலை 1996&ம் ஆண்டு புனர் நிர்மானம் செய்து பழைய அமைப்பு மாறாமல் கருங்கற்களால் கட்டியுள்ளார்கள். இக்கோவிலின் கருவறை விமானம் முழுவதும் தங்கத் தட்டினால் வேயப்பட்டதாகும்.

எல்லா கோவில்களை போல முதலில் நம் கண்ணில் தென்படுவது கொடிக்கம்பம். அம்பாளின் கர்பக்கிரகம் கொடிக் கம்பத்தை ஒட்டியிருப்பது விளக்குத்தூண். ஒரே கல்லினால் ஆன அழகிய தூண் இது. இதில் ஆயிரம் விளக்குகள் ஏற்றலாம்.

கேரள கோவில்களில் ஆண்கள் கோவிலின் உள்ளே& சன்னதி அல்லது கருவறை அருகில் சட்டை அணிந்து செல்லக்கூடாது என்ற மரபு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கொல்லூர் மூகாம்பிகை கோவிலிலும் இந்த விதி கடைபிடிக்கப்படுகிறது.

அன்னையின் கருவறை& எதிரில் பணிவுடன் அமர்ந்த நிலையில் அம்மனின் சிம்ம வாகனம். கருவறையின் இருபுறமும் தியான மண்டபம் உள்ளது. பக்தர்கள் அங்கு அமர்ந்து தியானம் செய்கிறார்கள். அன்னைக்கு முன்பாக ஸ்வர்ணரேகையுடன் கூடிய ஜோதிர்லிங்கம் உள்ளது. 

அன்னை பத்மாசனத்தில் அமர்ந்த நிலையில் வேண்டும் வரம் அருள்கிறாள்.

கன்னியாகுமரியில் பகவதி தேவியின் மூக்கில் மாணிக்க மூக்குத்தி அலங்கரிப்பது போல் கொல்லூரில் அவள் மார்பில், இடையில் மரகதம் பதித்த பொற்சரம் அலங்கரிக்கின்றது. பின் மகாகாளி கலைமகள், ஆகியோரின் உற்சவத் திருமேனிகளும் மூன்று முகமும் தசகரமும் பாம்பின் மீது கால் ஊன்றிய நிலையில் கணபதியின் திருவுருவம் உள்ளன.

முதல் பிரகாரத்தில் பஞ்சமுக சுயம்பு கணபதி உள்ளார். இங்கு காணப்படும் ஸ்ரீசக்கரம் மும்மூர்த்திகளால் அமைக்கப்பெற்றது என்பது மரபு. இது இறைவியின் அருவுருவ நிலையை சுட்டிக் காட்டுவதாகும்.

முன்வாயிலைக் கடந்து மீண்டும் வெளிப்பிரகாரம் சுற்றினால் முதலில் சரஸ்வதி மண்டபம். இது மிகவும் விசேஷமான இடம். ஆதி சங்கரர் ஸ்ரீமூகாம்பிகையை நோக்கி மனமுருகி “சவுந்தர்ய லஹரியை” இங்கு அமர்ந்து எழுதியதாகவும் இங்கே தான் அரங்கேற்றி அருளியதாகவும் கருத்துக்கள் நிலவுகின்றன. இந்த சரஸ்வதி மண்டபம்& கலா மண்டம் எனப்போற்றப்படுகிறது.

கேரளம் தந்த மாபெரும் ஓவியர் ரவி வர்மா இங்கு சித்திரங்கள் வரைந்துள்ளார்.

அம்மன் சிவேலி முடிந்ததும் அம்பாளின் பஞ்சலோக விக்ரகத்தை இந்தச் சரஸ்வதி மண்டபத்தில் வைத்து வழிபாடு செய்வர். அந்த சமயங்களில் தான் இசை நடனம் என அரங்கேற்றங்கள் நடைபெறும். 

நவராத்திரி நாட்களில் இந்த சரஸ்வதி மண்டபம் தனி பொலிவு பெறும். விஜயதசமி அன்று இங்கு தங்கள் குழந்தைகளுக்கு அட்சராப்பியாசம் செய்யும் நிகழ்ச்சி நடக்கும். அன்னையின் சன்னதிக்கு நேர் பின்புறம் அன்று ஆதிசங்கரர் தியானம் செய்ய அமர்ந்த இடம் இன்னும் சங்கரர் பீடம் என்று போற்றிப் பாதுகாக்கப்படுகிறது. நவராத்திரி சமயத்தில் ஆதிசங்கரரின் சிலைக்கு சிறப்புப் பூஜைகள் செய்யப்படுகின்றன.

ஆலயத்தில் தனிச் சன்னதியில் முருகப்பெருமான் மேற்குப் பார்த்து அருள் பாலிக்கிறார். முருகன் சன்னதிக்கு அடுத்திருப்பது தான் சரஸ்வதி மண்டபம்.
மேற்கு கோபுரவாசல் அருகில் வடமேற்கு மூலையில் கிணறு உள்ளது. அதற்கு முன் ஆஞ்சநேயர் சன்னதி. இந்த தனிச்சன்னிதி வாயுதிசையில் அமைந்துள்ளது.
அதனை அடுத்து உள்ளது விஷ்ணு சன்னதி, கேரள பக்தர்கள் இந்த விஷ்ணுவை குருவாயூரப்பன் என்றே வணங்குகின்றனர். 

வடகிழக்கு மூலையில் துளசிமாடம். அதனை அடுத்து அம்பாளின் பரிவார தேவதைக்கு எல்லாம் தளபதியான வீரபத்திரர் சன்னதி அமைந்துள்ளது. இவர் தானே கம்ஹாசூரன் சம்ஹாரத்தில் அம்பாளுக்குப் படைத்தளபதியாக நின்றவர்.

மேலும் ஆக்ரோஷம் மிகுந்த வீரபத்திரரின் உக்கிரம் குறைக்கத்தான் அவருக்கு எதிரே ஆஞ்சநேயரைப் பிரதிஷ்டை செய்ததாக சொல்லுகிறார்கள். அதனால் தான் வீரபத்திரர் அமைதியாக இருக்கிறார் எனக் கூறுகிறார்கள்.

வீரபத்திரர் இந்த தலத்திற்கு ரட்சாதிகாரி, சிவேலி தவிர அன்னைக்குச் செய்யப்படும் அனைத்து பூஜைகளும் இவருக்கும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது…

அன்னை மூகாம்பிகை அனைத்து வித சக்தியையும் பெற்று அசுரனை அழித்தாள். குடசாத்திரி மலையில் உள்ள இடத்தில்தான் அவள் அசுரனை அழித்தாள். அந்த இடம் கொல் லூரில இருந்து மலை மீது 4500 அடிகள் உயரத்தில் உள்ளது. இங்கு முகட்டில் ஓர் கருங்கல்லில் கட்டப்பட்ட கோவில் உண்டு. இதனை சர்வக்ஞபீடம் என்பர். இது கொல்லூரிலிருந்து 18 மைல் தொலைவில் உள்ளது.

ஒன்பது மைல் வரையில் பஸ்சில் செல்லலாம். பின் காட்டில் 6 மைல் நடந்து செல்ல வேண்டும். அதன்பின் மலை மீது மூன்று மைல் ஏறிச் செல்ல வேண்டும். சக்யாத்திரி மலைக்காடுகளில் நறு மணம் பரப்பும் மலர்கள் பல உள்ளன. அவற்றைக் கண்டுகளித்துக் கொண்டே செங்குத்தான மலை மீது ஏறிச் சென்றால் குடசாத்திரி மலை முகட்டை அடையலாம்.

இங்கு இரண்டு சிறிய கோவில்கள் முகட்டின் அடிவாரத்தில் உள்ளன. முதற்கோவிலில் சவுந்திர வடிவுடை காலபைரவியாக அம்பிகை உள்ளாள். இக்கோவிலின் முன் 25 அடி உயரத்தில் ஓர் துருபிடிக்காத இரும்புத் தூண் உள்ளது. இது மூகனை அழித்த திரிசூலம் என்று சொல்கிறார்கள்.

கசாய_நைவேத்தியம்:

கொல்லூர் மூகாம்பிகை ஆலயத்தில் இரவு 9 மணிக்கு கசாய தீர்த்தம் வழங்கப்படுகிறது. இந்த தீர்த்தத்தில் இஞ்சி, குரு மிளகு, ஏலக்காய் திப்பிலி, இலவங்கம், வெல்லம் ஆகிய மருத்துவ மூலிகைப் பொருட்கள் சேர்க்கப்படுகிறது. நல்ல மருத்துவ குணம் கொண்ட இம்மூலிகை கஷாயத்தை பக்தர்கள் வாங்கிக் குடிப்பதற்கு தவறுவதில்லை. இக்கசாயம் ஸ்ரீ ஆதிசங்கரர் அவர்கள் கூறிய முறைப்படி தயார் செய்யப்பட்டு இன்றளவும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

கொல்லூரில்_நட்சத்திர
தரிசனம்:

மாலை 6.30 மணிக்குமேல் கொல்லூரில் இருந்து நட்சத்திர தரிசனம் பார்க்கலாம். இது நட்சத்திரமல்ல. ஆனால் இது ஒரு ஒளிதரும் கிரகம். இதனை மங்கள கிரகம் என கேரள பக்தர்கள் அழைக்கின்றனர். இது மேற்குத்திசையில் அடிவானத்தில் தெரியும். 7 மணிக்கு ‘பளிச்’ என்று மிகத் தெளிவாகத் தெரியும். 

திருவிழாக்கள்:

கொல்லூர் மூகாம்பிகை ஆலயத்தில் மார்ச் மாதம் வசந்த விழா நடைபெறும். அப்பொழுது தேர் திருவிழா நடைபெறும். ஜூன், ஜூலை மாதங்களில் வளர்பிறை அஷ்டமி நாளில் அம்பிகையின் திரு அவதாரத் திருவிழா நடைபெறும். புரட்டாசி மாதம் நவராத்திரித் திருவிழா நடைபெறும்.

மகாலட்சுமி விரதம். மகா சிவராத்திரி, கிருஷ்ணஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, ஜ்வேஷ்டலட்சுமி சங்கர ஜெயந்தி ஆகிய நாட்களில் அம்பிகைக்கு சிறப்பான பூஜைகள் நடைபெறும்.

பங்குனி உத்திரத்தின் பொழுது மிகப்பெரிய விழாவான தேர் திருவிழா தொடங்குகிறது. அன்று கொடியேற்றுவிழா நடைபெற்று மூல நட்சத்திரத்தன்று தேர் திருவிழா முடிவடைகிறது. அன்று ஆற்றங் கரையில் மக்களுக்கு விருந்து கொடுக்கப்படுகிறது.

அன்னையின் விழாவிற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் மூகாசூரனுக்கு திருவிழா நடைபெறும். விழாகாலத்தில் சண்டிஹோமம் உருத்திராபிஷேகம் சகஸ்ரநாம அர்ச்சனை முதலிய சிறப்பு பூஜைகள் நடைபெறும். எட்டாம்நாள் தேர் திருவிழாவின்போது தேரிலிருந்து நாணயம் உலோகத்துண்டுகள் வீசப்படும் அவை கிடைப்பது பெரும் பேறாக மக்கள் கருதுகின்றனர். 

ஒன்பதாம் நாள் ”ஒகுலி” என்று ஓர் விளையாட்டு நடைபெறும். கலைமகள் மண்டபத்திற்கு அருகில் உள்ள குளத்தில் நீர் நிறைத்து, வாழைப்பழக்குலையை ஓர் கம்பில் கட்டி தொங்கவிடுவார்கள். அதனை பிடிக்க முயலும் பொழுது வாழைக்குலையை எட்டிப்பிடிப்பவர் வெற்றி பெற்றவராகிறார். இவ்விளை யாட்டிற்கு பின்னர் அம்பிகையை ஆற்றில் நீராட்டி ஆலயத்திற்கு அழைத்து வருவார்கள். அத்துடன் இத்திருவிழா நிறைவு செய்யும். 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

தஞ்சையில் தரிசிக்க வேண்டிய புன்னை நல்லூர் மாரியம்மன்.

புன்னை நல்லூர் முத்து மாரி அம்மன் ஆலயம். 1680 வாக்கில் மராட்டிய ராஜா வெங்கோஜி ஒருநாள் சமயபுரம் மாரியம்மன் ஆலயத்துக்கு தரிசனம் செ...