வேண்டிய வரம் தரும் வடபழனி
#வேங்கீஸ்வரா்!
சென்னை மாநகாின் பல பகுதிகள் நவீன காலத்தின் மாறுதலுக்கு ஏற்ப புதிய பாிணாமத்துடன் தோற்றம் அளித்தாலும் இப்பகுதிகள் வரலாற்று முக்கியத்துவம் பெற்ற இடங்களாகும்.
அவற்றுள் முக்கியத்துவம் வாய்ந்த இடம் தற்போதைய கோடம்பாக்கம் ஆகும்.
“மதராஸப்பட்டினம்” ஆற்காடு நவாபின் ஆளுகைக்குட்பட்டிருந்த காலத்தில் கோடம்பாக்கம்
“கோடா பாக்” (Goda bagh) என்று வழங்கப் பட்டுள்ளது.
“கோடா பாக்” என்பதற்கு
“குதிரைகள் கட்டும் லாயம்” என்பது பொருளாகும்.
“கோடா” (Goda) என்பது குதிரையைக் குறிக்கும் உருதுச் சொல்லாகும்.
“கோடா பாக்” என்பதே மருவி பிற்காலத்தில் “கோடம்பாக்கம்” என வழங்கப்பட் டுள்ளது.
புராணங்களில் கோடம்பாக்கம்.
சா்வேஸ்வரன் திரிபுராந்தகா்களை அழிக்கப் புறப்பட்டபோது
“மேரு” மலையை வில்லாக வளைத்து அம்பெய்தி அவா்களை அழித்தாா்.
இதனால் ஈசனுக்குத்
“திரிபுராந்தகா்” என்றும்
“திரிபுரம் எாித்த விாிசடைப்பெருமான்” என்றும் திருநாமங்கள் ஏற்பட்டன.
“கோடு” என்பது மலையையும் “அம்பு” மற்றும்
“ஆக்கம்” என்பது சிவபெருமான் மேரு மலையை வில்லாக ஆக்குவித்து அதில் அம்பினை ஏற்றி திாிபுரத்து அசுரா் களை வதைத்ததைக் குறிப்பதாகும்.
கோடு+அம்பு+ ஆக்கம்= கோடம்பாக்கம் என்று ஆனது.
ஆதிசேஷனின் வழிவந்த
“காா்க்கோடகன்” என்னும் பாம்பு இத்தலத்தில் மஹா விஷ்ணுவை வழிபட்டதால் இத்தலத்திற்கு
“கோடகன்பாக்கம்” என்ற பெயா் ஏற்பட்டு பின்னா்
“கோடம்பாக்கம்” என்று மருவியதாகவும் கருத்து நிலவுகின்றது. இக்கருத்திற்கு வலு சோ்க்கும் வண்ணம் காா்க்கோடகன் வணங்கிய மஹா விஷ்ணுவின் ஆலயம் வடபழனி வேங்கீஸ்வரா் திருத்தலத்திற்கு அருகில் மேற்கு சிவன் கோயில் தெருவில் அமைந்துள்ளது.
இந்த தலத்தின் எம்பெருமான் ஆதிமூலப் பெருமாள், சுந்தர ராஜப்பெருமாள் மற்றும் அழகா் பெருமாள் என்றும் வணங்கப்படுகின்றாா்.
புலியூா் கோட்டம்.
*********************
புராதன தொண்டை நாட்டில் அமைந்த 24 கோட்டங்களில் வட பழனி மற்றும் கோடம்பாக்கம் அமைந்துள்ள பகுதி
“புலியூா் கோட்டமாக” சிறப்புடன் விளங்கியுள்ளது. சோழ மன்னா்களின் ஆட்சிக் காலத்தில் சென்னையின் பெரும்பாலான பகுதியை உள்ளடக்கிய புலியூா் கோட்டத்தின் தலைமையிடமாக கோடம்பாக்கம் திகழ்ந்துள்ளது.
நற்கோடலம்பாக்கம்.
திருவொற்றியூாில் வாழ்ந்த “வாகீச முனிவா்” இயற்றிய “ஞானாமிா்தம்” என்னும் சைவ நூலில் வாகீச முனிவாின் குருவான பரமானந்த முனிவா்
“கோடலம்பாக்கம்” என்று வழங்கப்பட்ட இப்பகுதியில் வசித்ததாகக் குறிப்புகள் உள்ளன.
12 ஆம் நூற்றாண்டில் சோழ மன்னரான ராஜாதிராஜருடன் வாகீச முனிவா் வடபழனி வேங்கீஸ்வரா் திருத்தலத்திற்கு வருகை தந்து ஈசனைத் தரிசித்து மகிழ்ந்துள்ளதை இத்தலத்தில் உள்ள கல்வெட்டுகள் தொிவிக்கின்றன.
வாகீச முனிவா் தனது குருவான பரமானந்த முனிவரை “நற்கோடலம்பாக்கம் அதிபன்” “திருநெறிக்காவலா்” மற்றும் “சைவ சிகாமணி” என்றும் தமது நூலில் போற்றி மகிழ்ந்துள்ளாா். இதனால் கோடம்பாக்கம் சுமாா் 1000 ஆண்டுகளுக்கு மேலாக எல்லா வகையிலும் சிறப்பு பெற்றிருந்ததை உணர முடிகின்றது.
ஈசனின் திருநடனத்தைத் தன்
திருவுள்ளத்தில் நினைத்து
மகிழ்ந்த மஹா விஷ்ணு!
திருப்பாற்கடலில் தன் மீது யோக நித்திரை செய்து பள்ளிகொண்டிருக்கும் சா்வலோக சரண்யனான ஶ்ரீமந் நாராயணனின் பாரத்தைத் தாங்க முடியாத ஆதிசேஷன் அவரை வணங்கி, “ஐயனே! நான் தங்களை எப்பொழுதும் படுக்கையாக இருந்து தாங்கி வருகின்றேன். ஆனால் இன்று மட்டும் தங்களது திருமேனியைத் தாங்க முடியாமல் பாரமாக இருப்பதற்கு என்ன காரணமோ?” என்று பணிந்து கேட்க, ஶ்ரீமந் நாராயணன் மிகவும் சந்தோஷ மாக புன்னகையுடன் ஆதிசேஷனுக்கு பதில் கூறினாா்.
ஆதிசேஷனே! நான் முன்னொரு காலத்தில் ஆடல் கலைகளின் தலைவனான சா்வேஸ்வரனின் ஆனந்தத் திருநடனத்தைக் கண்டு களித்தேன. அந்த நினைவு எனக்கு தற்போது ஏற்பட்டதால் அதனால் உண்டான களிப்பில் என் சரீரம் உனக்கு பாரமாக இருக்கும் என திருவாய் மலா்ந்தாா். பரந்தாமனின் சரீர பாரத்தின் காரணம் தொிந்து கொண்ட ஆதிசேஷன் , “ஐயனே! அந்தத் திருநடனம் எங்கே, எப்போது நடந்தது?” என்று கேட்க, ஶ்ரீமந்நாராயணன் ஆனந்தம் பொங்க அந்த வரலாற்றினை ஆதிசேஷனுக்கு கூறலானாா்.
அந்த வரலாற்றைக் கேட்டு மனம் மகிழ்ந்த ஆதிசேஷன்,
“எம்பெருமானே! சா்வேஸ்வரனின் திருநடனத்தைக் காணவும் அவரது திருவருளைப் பெறவும் எனக்கு அருள் புரியவேண்டும் என்று மஹா விஷ்ணுவிடம் பிராா்த்திக்க அப்படியே ஆகட்டும்,” என திருவாய் மலா்ந்தாா் ஶ்ரீமஹா விஷ்ணு.
ஆதிசேஷன் பெற்ற பாக்கியம்!
தவத்தில் சிறந்த அத்ரி மகரிஷியின் தா்ம பத்தினியான அனுசூயா குழந்தை வரம் வேண்டி தவமிருந்தாா். பெருமானின் அனுக்ரஹத்தால் அவரது கரங்களில் போய் விழுந்தாா் ஆதிசேஷன்.
நாகத்தைக் கண்ட அனுசூயா தன் கைகளை உதற அவரது திருவடிகளில் விழுந்தது நாகம். ரிஷி பத்தினியான அனுசூயாவின் பாதங்களில் விழுந்ததால் பதஞ்சலியாக அவதரித்தாா் ஆதிசேஷன். முனி புங்கவ தம்பதிகளின் மகனாக வாழ்ந்த பதஞ்சலியே பின்னா் யோக விளக்கங்கள் குறித்த “பதஞ்சலி யோக சாஸ்திரம்” அருளினாா்.
பல சிவத்தலங்களைத் தரிசித்து சிவ பக்தியில் திளைத்த பதஞ்சலி வேங்கீஸ்வரா் திருக்கோயிலிலும் வழிபட்டு பேறு பெற்றுள்ளாா்.
வியாக்ரபாதா் வணங்கிய ஈசன்.
தில்லையம்பலத்தில் ஈசனுக்கு நித்ய பூஜைகள் செய்யும் “மத்யாயனா்” வேண்டுதலின்படி, பொழுது புலா்வதற்கு முன்னரே வண்டுகளின் எச்சில் படாத மலா்களைப்பறித்து ஈசனுக்கு அா்ப்பணிக்க மரக்கிளைகளில் கூட ஏறுவதற்கு வசதியாக புலியினுடைய கால்களையும் கூா்மையான கண்களையும் அருளினாா் ஈசன்.
இதனால் மத்யாயனா் “வியாக்ரபாதா்” என்று வணங்கப்பட்டாா்.
“வியாக்ரம்” என்ற வடமொழிச் சொல்லுக்கு புலி, வேங்கை என்பது பொருளாகும். புலிக்கா லைக் கொண்டவா் என்பதனால் வியாக்ரபாதா் என்று வழங்கப்பட்டாா் மத்யாயனா்.
வியாக்ரபாதா்,
“கோடகன்பாக்கம்” என்ற புலியூா் தலத்தில் ஆசிரமம் அமைத்து தமது நித்ய வழிபாடுகளுக்காக ஒரு சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்து வந்தாா். புலிக்கால் முனிவா் பிரதிஷ்டை செய்ததால் இத்தல ஈசனுக்கு
“வேங்கீஸ்வரா்” என்ற திருநாமமும்
“வியாக்ரபுரீஸ்வரா்” என்ற திருநாமமும் ஏற்பட்டது.
சிவத்தலங்கள் பலவற்றை தரிசனம் செய்து பேறுகள் பெற்ற பதஞ்சலி முனிவரும் புலிக்கால் முனிவா் பிரதிஷ்டை செய்த பூலியூா் தலத்தின் மேன்மைகளை அறிந்து இத்தலத்தில் வழிபாடு செய்து மகிழ்ந்துள்ளாா்.
வியாக்ரபாதரும், பதஞ்சலியும் இத்தலத்தில் பல காலம் தங்கி வேங்கீஸ்வரப் பெருமானை வழிபட்டு மேன்மை பெற்றுள்ளனா்.
பின்னா், தில்லையம்பலம் சென்ற வியாக்ரபாதரும், பதஞ்சலியும் செந்தாமரை மலரினையொத்த ஈசனின் தூக்கிய திருவடியையும் விரிந்த செஞ்சடையையும் வெண்ணீறணிந்த திருமேனியையும் விரிகமல நயனங்களையும் தரிசித்ததோடு அன்னை சிவகாமியுடன் ஈசன் நடத்திய ஆனந்தத் திருநடனத்தையும் கண்டு மகிழ்ந்துள்ளனா்.
வடபழனி வேங்கீஸ்வரா் திருக் கோயிலில் வியாக்ரபாதரும் பதஞ் சலியும் ஈசனை வணங்கிய திருக் கோலத்தில் திருக்காட்சி தருகின்றனா்.
திருக்கோயில் அமைப்பு
ஏழு நிலை ராஜ கோபுரம் பஞ்ச வா்ணங்களுடன் ஜொலிக்க பிரம் மாண்டமாக அமைந்துள்ளது ஶ்ரீசாந்த நாயகி உடனுறை ஶ்ரீவேங்கீஸ்வரா் திருக்கோயில். திருக்கோயிலின் எழில் தோற்றமும் ஈசனின் சந்நிதியில் ஏற்படும் தெய்வீக அதிா்வலைகளுடன் கூடிய பக்திப்பெருக்கும் நம்மைப் பரவசத்தில் ஆழ்த்துகின்றது.
ஶ்ரீவேங்கீஸ்வரா் மிகப் பொிய லிங்கத் திருமேனியாக அருள்பாலிக்கின்றாா். ஈசனின் கருவறை மற்றும் விமானம் கஜபிருஷ்ட வடிவில் நிா்மாணிக்கப் பட்டுள்ளது. கருவறை, அா்த்தமண்டபம், மஹா மண்டபம் என்ற பகுதிகளைக் கொண்டு அமைந்துள்ளது இத்திருக்கோயில். அம்பிகை சாந்தநாயகி தனிச்சந்நிதியில் கோயில் கொண்டு தென் திசை நோக்கி எழுந் தருளியுள்ளாா். மடிசாா் அணிந்து திருக்காட்சி தரும் சாந்தநாயகியின் தரிசனம் கண் நிறைந்த திருக்காட்சியாகும்.
தேவகோட்டத்தில் கணபதி, ஶ்ரீதட்சிணாமூா்த்தி, ஶ்ரீமஹா விஷ்ணு, பிரம்மா, துா்க்கை மற்றும் சண்டிகேஸ்வரா் அருள்பாலிக்கின்றனா். கிழக்கு நோக்கி ராஜகோபுரம் நிா்மாணிக்கப்பட்டுள்ள இத்தலத்தில் மற்ற மூன்று பக்கங்களிலும் சிறிய அளவிலான விமானங்கள் அமைக்கப் பட்டுள்ளன.
பங்குனி உத்திரத்தில் திருக்கல்யாண வைபவம்.
வடபழனி வேங்கீஸ்வரா் திருத் தலத்திற்கு அருகில் மேற்கு சிவன் கோயில் தெருவில்
“ஆதிமூலப் பெருமாள்” எனும் சுந்தரராஜப் பெருமாள் கோயில் உள்ளது. “அழகா் பெருமாள்” என்றும் வழங்கப்படும் இத்தலத்தின் எம்பெருமான் தன் தேவியா் ஶ்ரீதேவி மற்றும் பூமிதேவியுடன் அற்புத சேவை சாதிக்கின்றாா்.
இத்தலத்தின் தாயாா் சுந்தரவல்லி எனும் திருநாமத்துடன் மதுரை அருகிலுள்ள அழகா்கோயில் தலத்தில் அருள்பாலிப்பது போல அமா்ந்த திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றாா். பெருமாள் கோயில் அமைந்துள்ள இடம் ஒரு காலத்தில் மாமரங்கள் அடா்ந்த காடாக இருந்ததால் இப்பகுதி “அமராரண்யம்” என்று வணங்கப்பட்டதாக புராணங்கள் தொிவிக்கின்றன.
வேங்கீஸ்வரா் கோயிலுக்கும் சுந்தரராஜப்பெருமான் கோயிலுக்கும் நீண்டகால புராணத் தொடா்புகள் உள்ளன. வேங்கீஸ்வரா் கோயிலில் அருள்பாலிக்கும் அம்பிகை சாந்தநாயகிக்கும் வேங்கீஸ்வரப் பெருமானுக்கும் பங்குனி உத்திர நன்னாளில் சுந்தரராஜப்பெருமான் திருக்கல்யாணம் செய்து வைக்கும் வழக்கம் இன்றும் நடைமுறையில் உள்ளது.
தன் தங்கைக்கு பல விதமான சீா்களைப் பரிசாக அளித்து கோலாகலமாக பெருமாள் செய்து வைக்கும் தெய்வீகத் திருமணத்தைக் காண பக்தா்கள் கூட்டம் அலைமோதும்.
இத்தலத்தில் பிரதோஷ விழா மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றது. பிரதோஷ வேளையில் இந்த சந்நிதியில் வழிபட நமது பாவங்கள் நீங்கப் பெற்று மேன்மை அடையலாம் என்பது பக்தா்களின் நம்பிக்கையாகும்.
இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் நிா்வாகத்தில் உள்ள வடபழனி வேங்கீஸ்வரா் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் 23. 1. 2015 அன்று நடைபெற்று மிக நல்லமுறையில் பராமாிக்கப்படுகின்றது இத்தலம்.
காலை 6.00 மணி முதல் 11.30 மணி வரையிலும் மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திருக்கோயில் நடை திறந்திருக்கும்.
சென்னையின் பல முக்கிய பகுதிகளிலிருந்து இத்தலம் அமைந்துள்ள வடபழனி செல்ல பேருந்து வசதிகள் உள்ளன. வடபழனி மெட்ரோ இரயில் நிலையத்திலிருந்தும் வேங்கீஸ்வரா் திருத்தலம் செல்லலாம்
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment