#கர்நாடக_மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற
சிற்ப கருவூலமாக விளங்கும்
#தங்கபூமியான
#கோலார் (குவளாலநாடு)
#கோலாரம்மன் என்ற #கோலாரம்மா (மகிஷாசுரமர்த்தினி மற்றும் சப்த மாதர்கள்)
திருக்கோயில் வரலாற்றையும் புகைப்படங்களையும் காணலாம் வாருங்கள் 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻
கர்நாடக மாநிலத்தில் தங்க பூமியான கோலாரில் சோழர்கள் கட்டிய கோலார் அம்மன் கோயில் உள்ளது.
கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டம் கோலாரில் அமைந்துள்ளது, கோலாரம்மன் கோவில். கோலார் மக்கள் பார்வதி தேவியை, கோலாரம்மா என்ற பெயரில் வணங்குகின்றனர். பண்டைய காலத்தில் இந்நகருக்கு குவளாலபுரம் என்று பெயர். இதே கோவில் பிரகாரத்தில் செல்லம்மா கோவில் என்றொரு கோவில் உள்ளது. தேள் கடித்து பாதிப்பு ஏற்படும்போது, இங்கு வழிபட்டால் நோய் தீரும் என்பது உள்ளூர் மக்களின் நம்பிக்கை.
#ராஜராஜ சோழன் அவரது மகன் ராஜேந்திர சோழன் ஆகியோர் கட்டிய கோவில்:
கி.பி 10 ஆம் நூற்றாண்டில் முதலாம் இராஜராஜன் கோலார் பகுதியை கைப்பற்றி தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தான். கோலார் அம்மன் கோயிலில் உள்ள இராஜராஜனின் 12 - 22 ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டுக்கள், குவளாலநாடு (கோலார்), நிகரிலிச்சோழ மண்டலத்தில் இருந்ததாகக் குறிப்பிடுகின்றன. கோலார் நகரை, சோழர்கள் தங்கள் ஆதிக்கத்தின் கீழ் நீண்ட நாட்கள் வைத்திருந்தமைக்கு பிரதான காரணமே அது தங்க பூமி என்பதாலேயே என்கின்றனர் சில வரலாற்று அறிஞர்கள். கோலார் நகருக்கு பெருமை சேர்பதாக இருப்பது முதலாம் இராஜராஜன் மற்றும் அவனது மகன் முதலாம் இராஜேந்திரன் ஆகியோர் கட்டிய உலகப் புகழ்பெற்ற, இந்த கோலார் அம்மன் கோவிலாகும்.
இங்கு இரண்டு கோவில்கள் உள்ளன. இரண்டுமே சப்த மாதர்களுக்காக முதலாம் இராஜராஜன் மற்றும் அவனது மகன் முதலாம் இராஜேந்திரனால் கட்டப்பட்டவை. குறிப்பாக போரில் வெற்றியை பெற்றுத்தரும் கடவுள்களான சப்த மாதர்களுக்காக (சாமுண்டி) இக்கோவில் கட்டப்பட்டதாகும்.
*மிரள வைக்கும் போர்க்களக் காட்சியின் சிற்பத் தொகுப்பு:
கோலார் அம்மன் கோவில் ஒரு சிறந்த சிற்ப கருவூலமாக விளங்குகிறது. குறிப்பாக இக்கோவிலின் முதல் பிரகாரத்தின் நுழைவாயிலின் வடக்கு பகுதி மண்டபத்தில் சுமார் ஐந்து அடி, உயரமும் நான்கு அடி அகலமும் கொண்ட கற்பலகையில் இரு நாட்டு வீரர்கள் போர்க்களத்தில் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் நேரடிக் காட்சி அப்படியே சிற்பமாக்கப் பட்டுள்ளது. சிற்ப தொகுப்பின் மேற்புறம் அரசன் போர்க்களம் புறப்படும் காட்சியும். பிறகு போர்களத்தில் தங்கியிருக்கும் காட்சியில் ஆடல் மகளிர் நடனம்புரியும் காட்சியும் உள்ளன. மறுநாள் போர் ஆரம்பம். இரு தரப்பு வீரர்களும் நேருக்கு நேராக மோதிக்கொள்ளும் போர்களக் காட்சிகள் காட்டப்பட்டுள்ளன. மேலும் யானை ஒன்று போர்க்களத்தில் எதிரி படையினரை நோக்கி வேகமாக தாக்குதல் நடத்த ஓடிவரும் காட்சி பார்ப்பவரை மிரளவைக்கிறது. அதைத் தொடர்ந்து குதிரை வீரனின் வாள் வீச்சில் எதிரி வீரன் ஒருவனின் தலை துண்டிக்கப்பட்டு தலை வேறு உடல் வேறாக கிடக்கும் காட்சியில் போரின் உக்கிரத்தை காண முடிகிறது.
மேலும் குதிரையின் காலடியில் வீரன் ஒருவனின் உடல் இரண்டாக வெட்டப்பட்டு கிடக்கும் காட்சி பார்ப்பவருக்கு மிரட்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. சிற்பத் தொகுப்பின் கீழ் பகுதியில் போரில் இறந்த வீரர்களின் உடல்களை கழுகு கொத்தி தின்னுவது போன்றும், நரியொன்று இறந்த வீரனொருவனின் உடலில் இருந்து சதைகளை பிய்த்து தின்னுவது போன்ற சிற்பங்களில் போரின் கொடூரத்தை உணரமுடிகிறது.
மொத்தத்தில் இந்த சிற்பத்தை பார்ப்பவர்களுக்கு அந்தகால போர்களத்திற்கு நம்மை கூட்டி செல்வது போன்ற உணர்வை ஏற்படுத்துவதாக உள்ளது. மேலும் தென்னிந்தியாவில் ஒரு போர்க் களத்தின் நேரடி காட்சியைத் தத்ரூபமாக வடிக்கப்பட்டுள்ள முதல் சிற்பத் தொகுப்பு அனேகமாக இதுவாகத்தான் இருக்கமுடியும்.
மைசூர் அரச குடும்பத்தினர் இந்த கோயிலுக்கு வருகை தந்து தேவியின் ஆசிகளைப் பெற்றதாக நம்பப்படுகிறது. இந்த கோயில் தென்னிந்திய விமான பாணி கட்டிடக்கலையைக் கொண்டுள்ளது மற்றும் கி.பி 1012 காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுகளைக் கொண்டுள்ளது. கோயிலின் கிரானைட் கற்களுக்குள் சிக்கலான சிற்பங்கள் மற்றும் வடிவமைப்புகள் உள்ளன.
ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்தக் கோயில் தென்னிந்திய கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது. இதில் சோழர்களால் உருவாக்கப்பட்ட பல்வேறு கல்வெட்டுகளைக் காட்டும் கிரானைட் கற்கள் உள்ளன. இந்தக் கோயிலில் இரண்டு சன்னதிகள் உள்ளன - ஒன்று கோலரம்மா, மற்றொன்று சப்தமாத்ரங்கள். பிரதான கோயில் கிழக்கு நோக்கியும், மற்றொன்று வடக்கு நோக்கியும் இருந்தாலும், இரண்டு சன்னதிகளும் ஒரு பொதுவான முன்மண்டபத்தைப் பகிர்ந்து கொள்கின்றன. கோயிலுக்குள் கன்னடம் மற்றும் தமிழில் 30க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் காணப்படுவது கவனிக்கப்பட்டுள்ளது.
செல்லம்மா கோயிலில் உள்ள மற்றொரு தெய்வம். தேள் தெய்வம் என்றும் அழைக்கப்படும் இவர், இந்த ஆலயத்தில் தவறாமல் பிரார்த்தனை செய்தால் தேள் கடியிலிருந்து தப்பிப்பார் என்று நம்பப்படுகிறது. கோயிலுக்குள் பிளாஸ்டிக் கலை ஒரு முக்கிய அம்சமாகும். கோயிலில் ஒரு போர் காட்சியை சித்தரிக்கும் ஒரு பலகை உள்ளது, சுமார் நான்கரை அடி உயரமுள்ள ஒரு கல்லும் உள்ளது, அதில் குதிரைகள், யானைகள், தேர்கள் மற்றும் வீரர்கள் சித்தரிக்கப்படுகிறார்கள்.
கோலரம்மா கோயிலின் மற்றொரு முக்கிய அம்சம் பக்தர்களிடமிருந்து காணிக்கை சேகரிக்கப் பயன்படுத்தப்படும் ஹுண்டி, ஒரு கிணறு என்றும் அழைக்கப்படுகிறது. ஹுண்டி என்பது பூமிக்குள் ஒரு பெரிய மற்றும் பெரிய துளை, அதன் உள்ளே பல ஆண்டுகளாக சேகரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான நாணயங்கள் உள்ளன.
இந்த கோயிலில் வீற்றிருக்கும் தெய்வம் மகிஷாசுரமர்த்தினி, உள்ளூர் மக்களால் கோலரம்மா என்று அழைக்கப்படுகிறார். அவர் எட்டு கைகளைக் கொண்ட துர்க்கை தேவி. பக்தர்கள் சிலைக்கு எதிரே வைக்கப்பட்டுள்ள கண்ணாடியைப் பார்த்து அவளை வணங்குகிறார்கள். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது, அப்போது பக்தர்கள் கோயிலுக்கு வருகை தருகிறார்கள்.
கோயிலின் மையத்தில், சப்தமாத்ரிகைகள் உள்ளனர். அவர்கள் ஏழு தாய்மார்கள் ஒரு குறிப்பிடத்தக்க முக்கிய நிலையில் வைக்கப்படுகிறார்கள்.
*கட்டிடக்கலை வரலாறு:
தமிழக வரலாற்றில் சுமார் 433 ஆண்டுகள் நிலையாக ஆட்சி செய்த பெருமை சோழர்களையே சாரும். இவர்களது ஆட்சிகாலத்தில் தமிழகம் கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, நிலையான நீர் மேலான்மை திட்டங்கள், உள்ளாட்சிகளுக்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதில் வெளிப்படையான தேர்தல் முறை, உள்நாடு மற்றும் வெளிநாட்டு வாணிபத்தில் நேர்மையான அணுகுமுறையால் அந்நியச் செலவாணியை ஈட்டி நிலையான அரசு வருவாயை பெற்றது.
நீதி வழங்குவதில் சமநிலையைப் பின்பற்றியது, இந்திய மன்னர்களிலேயே வலிமையான கப்பற்படையை இவர்கள் வைத்திருந்ததனால் தான் கடல் கொள்ளையர்களின் பயமின்றி தமிழகத்தோடு அணைத்து நாடுகளும் போட்டிபோட்டுக் கொண்டு வாணிபம் செய்ய முடிந்தது என இம்மன்னர்களின் பெருமைகளை சொல்லிக்கொண்டே போகலாம். கார்நாடக மாநிலத்தின் தங்கபூமியான கோலாரில் உள்ள கோலார் அம்மன் கோயிலை ஆய்வு செய்த அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியின் வரலாற்றுத்துறை பேராசிரியரான முனைவர் ஜெ.ஆர். சிவராமகிருஷ்ணன் தெரிவித்தது:
கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் 8225 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டு தற்போது தனி மாவட்டமாக விளங்குகிறது. பண்டைய காலத்தில் இந்நகருக்கு குவளாலபுரம் என்பதாகும். கி.பி 350-ல் கங்கமன்னர்களின் வம்சத்தை தோற்றுவித்த கொங்கனிவர்மானால் கோலார் நகரம் நிர்மாணிக்கப்பட்டு பிற்பாடு கங்கமன்னர்களின் தலைநகராக மாற்றம் பெற்றது. கி.பி 10-ஆம் நூற்றாண்டில் முதலாம் இராஜராஜன் கங்கர்களிடமிருந்து கோலார் பகுதியை கைப்பற்றி தனது காலனி யாதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தான். கோலார் அம்மன் கோயிலில் உள்ள இராஜராஜனின் 12 – 22 ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டுக்கள் குவளாலநாடு ( கோலார் ) நிகரிலிச்சோழ மண்டலத்தில் இருந்ததாகக் குறிப்பிடுகின்றன.
மேலும் இக்கோயிலில் பணிபுரியும் சிவபிராமணர்களுக்கு அரியூர் என்ற கிராமத்தை தேவதானமாகவும் வழங்கியுள்ளான். குறிப்பாக கோலார் நகர் கர்நாடகாவின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்திருந்த ஒரு சிறப்புற்ற நகராகும். இதனைப்பிடிப்பதினால் வடகர்நாடக பகுதிகளை தமது காலனியாதிக்கத்தின் கீழ் கொண்டு வருவது மிக எளிதாகும். மேலும் நுளம்பர்கள், மேலைச் சாளுக்கியர்கள், இராஷ்டிர கூடர்கள், கீழைச் சாளுக்கியர்கள் போன்றவர்களின் நாடுகளை தங்களது காலனியாதிக்கதின் கீழ் கொண்டுவருவது மிக எளிதாகும் என்பதை இராஜராஜன் கருதியதாலேயே கங்கர்களிடமிருந்து முதலில் கோலார் நகரை கைப்பற்றினான். கங்கர்களிடமிருந்து தாம் கைப்பற்றிய கோலார் சோழ நிலைப்படையொன்றின் முக்கிய கேந்திரமாக மாற்றப்பட்டது. குறிப்பாக கோலார் நகரை சோழர்கள் தங்கள் ஆதிக்கத்தின் கீழ் நீண்ட நாட்கள் வைத்திருந்தமைக்கு பிரதான காரணமே அது தங்க பூமி என்பதாலேயே என்கின்றனர் சில வரலாற்று அறிஞர்கள். குவலம் போற்றும் கோலார் அம்மன் கோயில் கோலார் நகருக்கு பெருமை சேர்பதாக இருப்பது முதலாம் இராஜராஜன் மற்றும் அவனது மகன் முதலாம் இராஜேந்திரன் ஆகியோர் கட்டிய உலகப் புகழ்பெற்ற கோலார் அம்மன் கோயிலாகும்.
இக்கோயில் தற்போது பிற்கால சோழர்களின் காலனியாதிக்கக் கலைப்பாணிக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும். இங்கு இரண்டு கோயில்கள் உள்ளன. இரண்டுமே சப்த மாதர்களுக்காக முதலாம் இராஜராஜன் மற்றும் அவனது மகன் முதலாம் இராஜேந்திரனால் கட்டப்பட்டவை. குறிப்பாக போரில் வெற்றியை பெற்றுத்தரும் கடவுள்களான சப்த மாதர்களுக்காக (சாமுண்டி) இக்கோயில் கட்டப்பட்டதாகும். இக் கோயிலில் 17 கல்வெட்டுக்கள் சோழர் காலத்தவை. அதில் முதலாம் இராஜேந்திர சோழனின் 22 ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டில் இவனது தளபதிகளில் ஒருவரான உத்தமசோழன் பிரம்மமாராயன் என்பவன் செங்கல் கோயிலாக இருந்த கோலாரம்மன் கோயிலை கற்றளியாக மாற்றியதைக் குறிப்பிடுகிறது. போர்க்கள காட்சியின் சிற்ப தொகுப்பு: கோலார் அம்மன் கோயில் ஒரு சிறந்த சிற்ப கருவூலமாக விளங்குகிறது.
குறிப்பாக இக்கோயிலின் முதல் பிரகாரத்தின் நுழைவாயிலின் வடக்கு பகுதி மண்டபத்தில் சுமார் ஐந்து அடி, உயரமும் நான்கு அடி அகலமும் கொண்ட கற்பலகையில் இரு நாட்டு வீரர்கள் போர்க்களத்தில் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் நேரடிக் காட்சி அப்படியே சிற்பமாக்கப் பட்டுள்ளது. சிற்ப தொகுப்பின் மேற்புறம் அரசன் போர்க்களம் புறப்படும் காட்சியும். பிறகு போர்களத்தில் தங்கியிருக்கும் காட்சியில் ஆடல் மகளிர் நடனம்புரியும் காட்சியும் உள்ளன. மறுநாள் போர் ஆரம்பம்
இரு தரப்பு வீரர்களும் நேருக்கு நேராக மோதிக்கொள்ளும் போர்களக் காட்சிகள் காட்டப்பட்டுள்ளன. மேலும் யானை ஒன்று போர்க்களத்தில் எதிரி படையினரை நோக்கி வேகமாக தாக்குதல் நடத்த ஓடிவரும் காட்சி பார்ப்பவரை மிரளவைக்கிறது. அதைத் தொடர்ந்து குதிரை வீரனின் வாள் வீச்சில் எதிரி வீரன் ஒருவனின் தலை துண்டிக்கப்பட்டு தலை வேறு உடல் வேறாக கிடக்கும் கட்சியில் போரின் உக்கிரத்தை காண முடிகிறது. மேலும் குதிரையின் காலடியில் வீரன் ஒருவனின் உடல் இரண்டாக வெட்டப்பட்டு கிடக்கும் காட்சி பார்ப்பவருக்கு மிரட்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. சிற்பத் தொகுப்பின் கீழ் பகுதியில் போரில் இறந்த வீரர்களின் உடல்களை கழுகு கொத்தி தின்னுவது போன்றும், நரியொன்று இறந்த வீரனொருவனின் உடலில் இருந்து சதைகளை பிய்த்து தின்னுவது போன்ற சிற்பங்களில் போரின் கொடூரத்தை உணரமுடிகிறது.
மொத்தத்தில் இந்த சிற்பத்தை பார்ப்பவர்களுக்கு கி.பி. 10 – 11 ஆம் நூற்றாண்டு போர்களத்திற்கே நம்மை கூட்டி செல்வது போன்ற உணர்வை ஏற்படுத்துவதாக உள்ளது. மேலும் தென்னிந்தியாவில் ஒரு போர்க் களத்தின் நேரடி காட்சியைத் தத்துருபமாக வடிக்கப்பட்டுள்ள முதல் சிறப்பத் தொகுப்பு அனேகமாக இதுவாகத்தான் இருக்கமுடியும். சாதாரண கற்பலகையில் போர்க்கள சிற்பங்களுக்கு உயிரோட்டத்தை தந்து சிறந்த காட்சி ஊடகமாக மக்களுக்கு படைத்த சிற்பியின் உளி வன்மை போற்றத்தக்கதாக உள்ளது.
இக்கோவிலில் உள்ள மஹிஷாசுரமர்த்தினியை இங்குள்ள மக்கள் கோலாரம்மனாக வழிபடுகிறார்கள். இந்த அம்மன் எட்டு கைகளைக் கொண்டு காட்சியளிக்கிறார். இவரை நேரடியாக தரிசிக்காமல், அம்மனுக்கு எதிரே கண்ணாடி வைக்கப்பட்டி அதில் தெரியும் அம்மனுடைய பிரதிபலிப்பை பக்தர்கள் பார்த்து தரிசித்துவிட்டு செல்கின்றனர். ஏனெனில், கோலரம்மனின் சக்தியை நேரடியாக மக்களால் எதிர்க்கொள்ள முடியாது என்று சொல்லப்படுகிறது.
செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் சிறப்பு பூஜையன்றே பக்தக்கள் கோவிலுக்கு வருகை தருகின்றனர். இக்கோவிலின் நடுவிலே 'சப்த மாத்ரிக்கள்' என்று சொல்லப்படும் ஏழு பெண் தெய்வங்கள் வைக்கப்பட்டுள்ளனர்.
கோலரம்மன், செல்லம்மா, சப்த மாத்ரிக்கள் மிகவும் உக்கிரமான தோற்றத்தில் தரிசனம் தருகிறார்கள். அதனால், பக்தர்கள் உன்னிப்பாக கவனிக்கும்போது பயம் ஏற்படலாம் என்று சொல்லப்படுகிறது. இந்த கோவிலின் தனித்துவத்தை உணர ஒருமுறை இங்கு சென்று தரிசித்துவிட்டு வருவது சிறப்பாகும்.
இந்த கோயிலுக்கு பக்தர்கள் மற்றும் கட்டிடக்கலை ஆர்வலர்கள் அடிக்கடி வருகிறார்கள். மார்ச் முதல் ஏப்ரல் வரையிலான காலம் இங்கு வருவதற்கு ஏற்றது. அந்த மாதங்களில் பிரபலமான தேர் திருவிழா கொண்டாடப்படுகிறது.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment