ஆற்றங்கரை கிடக்கும் கண்ணன்!
கும்பகோணம் திவ்யதேச யாத்திரையில் அடுத்த கோயில் கவித்தலம் என்னும் கபிஸ்தலம்,திருவையாறு அருகே!
கூற்றமும் சாரா கொடுவினையும் சாரா தீ
மாற்றமும் சாரா வகையறிந்தேன்
ஆற்றங்கரை கிடக்கும் கண்ணன் கடல்கிடக்கும்
மாயன் உரைக்கிடக்கும் உள்ளத்து எனக்கு
— நான்முகன் திருவந்தாதி (திருமழிசையாழ்வார்)
இன்று கபிஸ்தலம் (கவித்தலம்) என்ற காவரிக்கரை திவ்வியதேசப் பெருமாளான “ஆற்றங்கரை கிடக்கும் கண்ணனை” திருமழிசைபிரான் மங்களாசாசனம் செய்த பாசுரம். இத்தலம் பாடல் பெற்றது இந்த ஒரே ஒரு பாசுரத்தால் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
கிழக்கு நோக்கி கிடந்த திருக்கோலத்தில் அருள் பாலிக்கும் மூலவ மூர்த்திக்கு ஆற்றங்கரை கிடக்கும் கண்ணன் என்ற திருநாமம். உத்சவரின் திருநாமம் கஜேந்திர வரதன். தாயார் ரமாமணிவல்லி மற்றும் பொற்றாமரையாள் என்று அழைக்கப்படுகிறார்.
இத்தலத்திற்கு கிருஷ்ணாரண்ய ஷேத்திரம் என்ற பெயரும் உண்டு.
தமிழ்நாட்டில் அமைந்துள்ள பஞ்ச கிருஷ்ண தலங்களில் ஒன்று. ஏனைய நான்கு தலங்கள் திருக்கோவிலூர், திருக்கண்ணங்குடி, திருக்கண்ணபுரம், திருக்கண்ணமங்கை.
ஆதிமூலமே என்று கஜேந்திரன் என்ற யானை அழைத்தபோது, அதற்கு அபயம் அளித்த பெருமாள், கஜேந்திர வரதன்.கபிஸ்தலத்தில் உள்ள கோவிலின் முன்பு (கிழக்கு திசையில்) அமைந்துள்ள கபில தீர்த்தம் என்னும் குளத்தில் இது நடந்தாக நம்பிக்கை.
ஆஞ்சநேயர் இந்த தலத்தில் வழிபட்டதாக வரலாறு. கபி என்றால், குரங்கு என்று ஒரு அர்த்தம் உள்ளது. அதனால் இந்த ஊர் கபி ஸ்தலம் என்று ஆனது!
கஜேந்திர மோட்சம் நடந்த இடமாக பீகார் மாநிலம் பக்ஸர் என்ற இடத்தில் சோன்பூர் என்ற ஊர் சொல்லப்படுகிறது. ஆனால் அத்தரிசனத்தை இவ்விடத்தில் (கபிஸ்தலம்) இருந்தபடி ஹனுமன் தரிசிக்க ஆசைப்பட, அவரின் ஆசைக்கு இணங்கிய பெருமாள் இவ்விடம் வந்து ஹனுமனுக்கு காட்சி கொடுத்த ஸ்தலம்
கோயில் நேரங்கள்
இந்த கோயில் காலை 07.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் மாலை 7.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment