Saturday, November 12, 2022

சிவன் கோயில்களில் கல்வெட்டுகள்

சிதம்பரம் சிவனே சோழர் குலதெய்வம்- தொன்றுதொட்டு சோழர் முடிசூடுவது தம் குலமுதல்வன் சந்நிதியில்தான் -சான்றுகள்!!
*****

1)  திருமாணிக்குழி கல்வெட்டு "சிறீ ராஜகேஸரி பன்மரான திரிபுவன சக்கரவர்த்திகள் தில்லை நகர் சிறப்புடையதாகத் திருமுடி சூடிய சிறீ குலோத்துங்க சோழ தேவற்கு யாண்டு எட்டாவது "

2)புதுக்கோட்டை ;திருக்கோக் கர்ணம் கல்வெட்டு "மாலை அணியப்பெற்ற மன்னரைத் தம்சிறப்பு பெற்ற கைகளால் முடிசூட்டும் தில்லையைச்சேர்ந்த வேதியர் குடியில்வந்த பிராமணர்களைத் தென்கவிரை நாட்டில் குடியமர்த்தி"

3)விக்ரம சோழனின் மெய்க்கீர்த்தி கல்வெட்டு " தன்குல நாயகன் தாண்டவம் பயிலுஞ் செம்பொன்னம்பலஞ்சூழ் திருமாளிகையும்"

4) பித்தர்புரம் குட்டி ஆண்டவர் கோயில் கல்வெட்டு . பொ.யு.பி 1583 ஆண்டு " விட்டலேசுர சோழகனார்" என்று குறிப்பிடுகிறது.

5) பொ.யு 1582 புதுக்கோட்டை அருங்காட்சியைக செப்பேடு " படைபத்து கச்சிராயரும் மழவராயர் சோழகனார் காலாக்க தோழன்னு

*****
இலக்கியங்கள்.

1)  திருத்தொண்டைர் புராணம்.சேக்கிழார் "சிலந்தியும் ஆணைக்காவில் திருநிழல் பந்தர்செய்து;
உலந்தவ ணிறந்தபோதே கோச்செங்கணானும் ஆகக்;
கலந்தநீர் காவிரிசூழ் சோணாட்டுச் "சோழர் தங்கள்;
குலந்தனில் பிறந்திட்டார்" குறுக்கை வீரட்டனார்"

"தேவி புதல்வர்ப் பெற்று இறக்கச்;
செங்கோல் சோழன் சுபதேவன்;
ஆவி அனைய அரும்புதல்வன்; தன்னை வளர்த்து அங்கு அணிமகுடம்;
மேவும் உரிமை முடிகவித்துத்;
தானும் சென்றடைந்து;
தலைவர் சிவலோகம் சார்ந்தான்"

**
 "மல்லல் ஞாலம் புரக்கின்றார் மணிமா மவுலி புணைவதற்குத்;
தில்லை வாழந்தணர் வேண்ட அவரும் "செம்பியர் தம்;
தொல்லை நீடும் குலமுதலோர்க் கன்றிச் சூட்டோம் முடிஎன்று;
நல்காராகி சேரலன்தன் மலைநா டணைய நண்ணுவார்"- சேக்கிழாரின் திருத்தொண்டர் புராணம்.

2)" குன்றாத புகழாளர் களந்தைவேந்தன்;
கூற்றுவனார் மாற்றலர் மண்கொண்டு சூடப்;
பொன்றாழு முடிவேண்டப் புலியூர் வாழும்;
பூசுரர்கள் கொடாதைகல"- உமாபதி சிவன்-திருத்தொண்டர் புராணப் பயன்.

3)"பரிதி குலந்தனிலுதித்துப் பரசமய இருளகற்றிப் பரமனாடும்;
பொருவரு பேரம்பலமும் சிற்றம்பலமும் கோபுரமும்;ஆலயமும் பொன்வேய்ந் துண்மைச்;
சுருதியுடன் சைவநெறி தழைத்தோங்கித் திருநீற்றுச் சோழன் என்று;
குமணிமா முடி புனைந்த குலோத்துங்க வளவனருள் குறித்து வாழ்வோம்"- சிதம்பரம் புராணம்.

4)  கூடல் இருவாட்சி புலவர் பாடிய திருக்கை வளம் "....கூத்தாடும் அம்பலவர் முன்னே யபிஷேகம் பெற்றணியச்;
சம்புதரு னீற்றை யணி சலனக்கை.உம்பர் பிரான்"

"அஞ்சாக்கரப் படிமேலமர்ந்து பட்டந்தான் புனைந்து;
செஞ்சரணப் பூப்பணிக்கே சேருங்கை.தஞ்சமென"

"தில்லை சிதம்பரத்தில் சிம்மாச னதிபராய்;
நல்லறங்க ளெல்லாம் நடத்துங்கை"

5)"உமாபதி சிவாச்சாரியாரின் கோயில்புராணம். இரன்யவர்மனுக்கு சிதம்பரத்தில் முடிசூட்டுதல் "காலை தொடங்கி நடந்து சடங்கு கணித்தோதும்; வேலையின் மங்கல நீடபி டேகம் வியந்தாடி;மூல முயங்கிய மாமுடி  தார்முது வாள்பெற்றங்கு;
ஏல விருந்தபி னிட்டன ராண்டொன் றிரண்டென்று"

".... புலிப்பதி காவல் புரப்பாயென்று; அந்தமின் முந்து புலிக்கொடி யங்கை யகத்துய்த்து"

****

No comments:

Post a Comment

Followers

சபரிமலை ஒரு வித்தியாசாமான வழிபாட்டு ஸ்தலம்...

🌹ஏன் சபரிமலை ஒரு வித்தியாசாமான வழிபாட்டு ஸ்தலம்?  🌹உலகின் புனிதப் பயணங்களில் வருடம் தோறும்  சுமார்  40-50 மில்லியன்  பக்தர்க ள...