Friday, December 9, 2022

திருமுறைகளை மீட்டெடுக்கஇராசராச சோழன்

சித்தம் சிவமயம்
சைவத்திருமுறைகள் மீட்பு

சிவம் சைவசமயம் என்றால் 
மற்றையோர்க்கு எரிச்சல்,
தயக்கம், கலக்கம், நடுக்கம் ஏன்?
பதிவு : 8

சைவசமயத்தின் உயிர்நாடி சைவத்திருமுறைகள் ஆகும்.

திருமுறைகளை மீட்டெடுக்க
இராசராச சோழன் மிகுந்த
சிரமத்திற்கு ஆளாக நேர்ந்தது.

சோழநாட்டில் 
அபயகுல சோழன் என்ற பட்டம் உடைய
இராசராச சோழன் ஆட்சி செய்து வந்தான். அவனுடைய
அவைக்களத்தில் சிவனடியார்கள் தங்களுக்குத் தெரிந்த தேவாரப் பாடல்களை அவ்வப் போது ஓதி வந்தார்கள்.
அவற்றைக் கேட்ட சோழன் தேவாரப் பாடல்கள் முழுமையும்
சேகரிக்க நினைத்தான்.     முழுமையும் அவனுக்குக்
கிடைக்கவில்லை. 

அவனுடைய காலத்தில்தான் திருநாரையூர்
என்ற ஊரில் நம்பியாண்டார் நம்பி வாழ்ந்துவந்தார். அவருக்கு
அவ்வூரில் எழுந்தருளியிருந்த பொல்லாப்பிள்ளையார்
(விநாயகர்) திருவருள் புரிந்ததை அரசன் கேள்விப்பட்டான்.
அவர் மூலமாகத் தேவாரத் திருப்பதிகங்களைத் தேடிக்
கண்டுபிடித்து விடலாம் என்று எண்ணி அவருடைய உதவியை
நாடினான். 

நம்பியாண்டார் நம்பியும் அவனுடைய
வேண்டுகோளை ஏற்றுத் தான் வணங்கும் பொல்லாப்
பிள்ளையார்பால் வேண்டிக் கொண்டார். பிள்ளையாரும்
சிதம்பரத்தில் பொன்னம்பலத்தின் அருகில் உள்ள அறையில்
தேவாரத் திருமுறைகள் வைத்துப் பூட்டப் பெற்றுள்ளன எனஅருளிச் செய்தார். 

நம்பியும் மன்னனும் சிதம்பரம்
பொன்னம்பலத்திற்குச் சென்றார்கள். தில்லைவாழ் அந்தணர்கள்
அறைக்கதவு திறக்கப்பட வேண்டுமானால் தேவாரத்தை
அருளிய மூவரும் நேரில் வரவேண்டும் என்றனர். 

வாழ்ந்து இறைவனடி கண்ட
சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரும் நேரில்
வரமுடியாத காரணத்தால் அவர்களின் திருவுருவங்களை
அறையின்முன் எழுந்தருளச் செய்தான் மன்னன். 

சிலைவடிவாக இருக்கிற நடராசரை இறைவனாகவே எண்ணிவழிபாடு செய்யும் தில்லைவாழ் அந்தணர்கள், சிலைவடிவில் வந்திருக்கும் மூவரையும் நேரில் வந்ததாகவே கருதி அறையைத் 
திறந்து விட்டனர். 

அறைக்குள்ளே கரையான்
புற்றால் மூடப்பெற்றிருந்த ஏடுகளில் பழுதுபட்டதை நீக்கி
மற்றவற்றை எடுத்துவந்து நம்பியாண்டார் நம்பியைத் தொகுக்கச்செய்தான். 

நம்பியாண்டார் நம்பி கிடைத்த 
தேவாரத் திருப்பதிகங்களை முதல் 7 திருமுறைகளாகத்
தொகுத்தார். இதுவே திருமுறைகண்ட புராணம் கூறும் செய்தியாகும்.

நம்பியாண்டார் நம்பியையும்
இராசராச சோழனையும் 
தமிழ்ச்சைவர்கள் போற்றிக்
கொண்டாட வேண்டும்.

பதிவுகள் தொடரும்..........

திருச்சிற்றம்பலம்.

No comments:

Post a Comment

Followers

புராதனவனேஸ்வரர் பட்டுக்கோட்டை தஞ்சாவூர்...

அருள்மிகு புராதனவனேஸ்வரர் திருக்கோயில் பட்டுக்கோட்டை தஞ்சாவூர் மாவட்டம்.       இறைவன் :- புராதனவனேஸ்வரர் இறைவி :- பெரியநாயகி அம்...