Tuesday, February 28, 2023

மாசி மகம் 2023 எப்போது ? விரதம், மற்றும் வரலாறு

மாசி மகம் 2023 எப்போது ? விரதம், மற்றும் வரலாறு.... 16
🙏🙏🌺🙏🙏🍀🙏🙏🌿🙏🙏🌹🙏🙏🌺
மகா சிவராத்திரிக்கு(maha shivratri)  அடுத்த படியாக மாசி மாதத்தில் மிகவும் புண்ணியமான, முக்கிய நாளாக போற்றப்படுவது மாசி மகம் (masi magam). புனித நீராடுவதற்கும், பாவங்கள் தீரவும், முன்னோர்கள் சாபம் விலகும் வழிபடுவதற்கான மிக உன்னதமான நாள் மாசி மக திருநாளாகும். இந்த நாளில் அமிர்தத்திற்கு இணையாக போற்றப்படும் கங்கா தேதி, அனைத்து நீர் நிலைகளிலும் வாசம் செய்வதாக ஐதீகம். இதனால் மாசி மகத்தன்று புனித நீராடினால் அனைத்து புண்ணிய நதிகளிலும் நீராடிய பலன் கிடைக்கும்.

பெளர்ணமி தினம் சந்திர வழிபாட்டிற்கும், சிவ வழிபாட்டிற்கும் ஏற்ற நாளாகும். பெளர்ணமியுடன் மகம் நட்சத்திரம் கூடும் மாசி மகம் தினத்தின் சிவ பெருமானுடன் சந்திரனையும் வழிபட்டால் அனைத்து விதமான தோஷங்களில் இருந்தும் விடுபட முடியும். புத்தியின் செயல்பாட்டிற்கு காரணமான சந்தினின் பாதிப்பால் மனம் தடுமாறால் இருப்பதற்காகவே இது போன்ற சிறப்பான நாட்களில் தியானம், வழிபாடு போன்றவற்றில் மனதை ஈடுபடுத்தும் படி புராணங்கள் சொல்கின்றன.
மாசி மகம் 2023 :

-2023-

தமிழ் மாதங்களில் 11 வது மாதமாக விளங்குவது மாசி மாதம். சூரிய பகவான், கும்ப ராசியில் தனது பயணத்தை துவங்கும் காலமாகும். இறை வழிபாட்டிற்கான மாதமாகவும், பல சிறப்புக்களையும் கொண்ட மாசி மாதத்தில் வரும் முக்கியமான தினம் மாசி மகம்.

மாசி மாதம் பெளர்ணமி திதியுடன் வரும் மகம் நட்சத்திர தினத்தை மாசி மகம் என்கிறோம். இந்த நாளை இந்துக்கள் கடலாடும் விழா என்ற பெயரில் கொண்டாடுவதுண்டு. மாசி மகம் தினத்தில் கடல், ஆறு, குளம் ஆகியவற்றில் புண்ணிய நதியாம் கங்கை கலந்திருப்பதாக ஐதீகம். இதனால் மாசி மகத்தன்று புனித நீராடுவது ஏழு ஜென்ம பாவங்களை போக்கும் என சொல்லப்படுகிறது. இதன் காரணமாகவே 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பகோணத்தில் மகாமகம் நடத்தப்படுகிறது. இதையே வட இந்தியாவில் கும்பமேளாவாக கொண்டாடுகின்றனர்.

மாசி மக வரலாறு :

பிரம்மகஹ்தி தோஷத்தால் பாதிக்கப்பட்ட வருண பகவான், கடலில் மூழ்கி கிடந்தார். இந்த தோஷத்தில் இருந்து விடுபட, சிவ பெருமானை அவர் வணங்கினார். வருணனுக்கு, சிவ பெருமான் அருள் செய்து, அவர் நிவாரணம் பெற்ற தினம் தான் மாசி மகம். இந்த நாளில் புனித நீராடுபவர்களின் பாவங்களை போக்கி அருள வேண்டும் என வருண பகவான் கேட்டுக் கொண்டதால், சிவ பெருமானும் அவ்வாறே அருளினார். வருண பகவான் தோஷ நிவர்த்தி பெற்ற நாள் என்பதால் இந்த நாளில் புனித நீராடுவது புண்ணியமானதாகும்.

சக்தியே பெரியது என சிவனிடம் ஆணவத்துடன் விவாதம் செய்ததன் விளைவாக, சிவனின் சாபத்தால் வலம்புரி சங்காக தாமரையில் தவம் இருந்தால் அன்னை பார்வதி. தட்ச பிரஜாபதி தனது மனைவியுடன் வந்து யமுனை நதியில் நீராடினான். வலம்புரி சங்கினை அவர் கையில் எடுத்ததும் அது அழகிய பெண் குழந்தையாக மாறியது. அந்த குழந்தையை அரண்மனைக்கு எடுத்து வந்து தாட்சாயிணி என பெயரிட்டு வளர்த்தார். அம்பிகை வலம்புரி சங்காக இருந்து, தாட்சாயிணியாக அவதரித்த தினமும் மாசி மக நாள் தான்.

மாசி மகம் 2023 எப்போது ?

2023 ம் ஆண்டில் மாசி மகம் மார்ச் 06 ம் தேதி வருகிறது. மகம் நட்சத்திரமானது மார்ச் 05 ம் தேதி இரவு 09.30 மணிக்கு துவங்கி, மார்ச் 07 ம் தேதி நள்ளிரவு 12.05 மணி வரை தொடர்கிறது. அதே சமயம் மார்ச் 06 ம் தேதி மாலை 05.39 துவங்கி, மார்ச் 07 ம் தேதி இரவு 07.14 வரை பொர்ணமி திதி நீடிக்கிறது. பெளர்ணமி மற்றும் மகம் நட்சத்திரம் கூடும் நாள் என்பதால் மார்ச் 06 ம் தேதியே மாசி மகம் கொண்டாடப்பட உள்ளது. அன்று நாள் முழுவதும் மகம் நட்சத்திரம் உள்ளது.

மாசி மகத்தன்று என்ன செய்ய வேண்டும்?

மாசி மகம் வழிபாட்டிற்கு உரிய நாள் மட்டுமல்ல பித்ரு வழிபாட்டிற்கும் தர்ப்பணம் கொடுப்பதற்கும் மிக உகந்த நாளாகும். பொதுவாக அமாவாசை நாளிலேயே முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஏற்ற நாளாக கருதப்படுகிறது. ஆனால் புண்ணியம் நிறைந்த மாசி மாதத்தில் பெளர்ணமி நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது முன்னோர்களின் ஆசியை பெற்று தரும். மாசி மகத்தன்று புனித நீராடுதல் புண்ணிய பலன்களை தரும்.

யாரை வழிபட வேண்டும்?

மாசி மகத்தன்று சிவ பெருமானையும், மகா விஷ்ணுவையும் வழிபடுவது சிறந்தது. சிவ, விஷ்ணு, பிரம்மா இணைந்த ரூபமாக கருதப்படும் மருகப் பெருமானையும் மாசி மகத்தன்று வழிபடுவது தோஷங்களை நீக்கும்.

​மகா சிவராத்திரியில் நடக்கும் நான்கு கால பூஜைகளின் சிறப்புக்கள்​

மாசி மகம் விரத பலன்கள் :

மாசி மகத்தன்று புனித நீராடி, விரதமிருந்து, இறைவனை வழிபட்டால் ஆரோக்கியமான வாழ்வுடன், உலகையே ஆளும் பேற்றினை இறைவன் அருளுவான் என்பது நம்பிக்கை. வாழ்வில் இருக்கும் சகல துன்பங்களும் நீங்கி, வளமான வாழ்க்கை பெற முடியும். சிவ தீட்சை பெறுவதற்கும் ஏற்ற நாளாக மாசி சகம் கருதப்படுவதால் இந்த நாளில் சிவ சிந்தனையுடன் இருப்பது பல மடங்கு புண்ணியத்தை பெற்றுத் தரும்.

மகாவிஷ்ணுவாக அவதாரம் எடுத்தது மாசி மகத்திருநாளில் தான்.

மாசி மகத்தின் மகத்துவங்கள் 
(1) மகாவிஷ்ணுவாக அவதாரம் எடுத்தது மாசி மகத்திருநாளில் தான்.

(2) மாசி மாதத்து சங்கடஹர சதுர்த்தி மிக விசேஷம். அந் நாளில் விரதம் இருப்பவர்கள் எல்லாவித தோஷங்களிலிருந்தும் விடுபடுவர்.

(3) மாசி மாதத்தன்று தான் பார்வதிதேவி காளிந்தி நதியில் ஒரு தாமரை மலரில் வலம்புரிச் சங்காகத் தோன்றினாள்.

(4) சிவபெருமான் திரு விளையாடல்கள் பல புரிந்தது மாசிமாதத்தில் தான்.
(5)  மாசி மாதத்தன்று மந்திர உபதேசம் பெறுவது சிறந்ததாகத் கருதப்படுகிறது.

(6) குலசேகர ஆழ்வார் மாசி மாதம் புனர்பூச நட்சத்திர நாளில் தான் அவதரித்தார்.

(7) அன்னதானத்தின் பெருமைகளை உணர்த்துவது மாசி மகம் தான்.

(8)  மாசி மாத பூச நட்சத்திரம் தினத்தன்று தான் முருகப்பெருமான் சுவாமி மலையில் தன் தந்தை சிவபெருமானுக்கு உபதேசம் செய்தார்.

(9)  பிரம்மஹத்தி போன்ற பெரும் பாவங்களைப் போக்கி பேய்க்கும் நற்கதி கொடுக்கும் இரு ஏகாதசிகள் வருவது மாசி மாதத்தில் தான்.

(10) உயர் படிப்பு படிக்க விரும்பு பவர்கள் ஆராய்ச்சி செய்ய விரும்புபவர்கள் மாசிமக நாளில் அவற்றைத் தொடங்கினால் அதில் சிறந்து விளங்கலாம்.

(11) அகத்தியர் தன் விருப்பங்கள் நிறைவேற தவம் இருந்து அருள் பெற்றது மாசிமாதத்தில் தான்.

(12) காரடையான் நோன்பும் சாவித்ரி விரதமும் இம்மாதத்தில் வரும் விசேஷ விரதங்கள். மாசி மகத்தன்றுதான் காமதகன் விழா நடைபெறுகிறது.

(13) மாசி மாதத்தில் வீடு குடி போனால் வாடகை வீடாக இருந்தாலும் அவ் வீட்டில் அதிக நாட்கள் வாழ்வார்கள். எனவே இம்மாதத்தில் புது வீடு கிரகப்பிரவேசம் நடத்தலாம்.

(14) இம் மாதத்தை மாங்கல்ய மாதம் என்றும் கூறுவர்.

(15) மாசி மக நட்சத்திரத்தில் பிறப்போர் ஜனத்தை ஆள்வர் என்பதும் மாசிக் கயிறு பாசி படியும் என்பதும் பழமொழி. இம் மாதத்தில் பெண்கள் புது மாங்கல்யச் சரடு கட்டிக் கொள்வது சிறப்பானது.

(16) மாசிமக புனித நீராடல் செய்ய இயலாதோர் மாசி மக புராணம் படிக்கலாம். அல்லது கேட்கலாம் அதுவும் புண்ணியமே.

(17) மாசி மகத்தன்று நெல்லையப்பர் கோவில் பொற்றாமரை தீர்த்தத்தில் திருநாவுக்கரசருக்கு தெப்ப விழா நடத்துவர். இதற்கு அப்பர் தெப்பம் எனப் பெயர்.

(18) மாசி மாதத்தில் அதிகாலை எழுந்து குளித்தபின் துளசியால் மகாவிஷ்ணுவை வழிபட்டால், வைகுண்டத்தில் இடம் கிடைக்கும்.

(19) மாசிமக நாளில் அம்பிகையை குங்குமத்தால் அர்ச்சித்து வழிபடுபவர்களுக்கு, இன்பமும் வெற்றியும் தேடி வரும்.

(20) மாசி சுக்ல பக்ஷ பஞ்சமியில் ஸ்ரீசரஸ்வதி தேவியை மணமுள்ள மலர்களால் அலங்கரித்து வழிபட்டால்,கல்வியில் சிறந்து விளங்குவர்.    

மஹாவரம்படைத்த ஸ்ரீமாசிவனாரே போற்றி போற்றி போற்றி...  🙏🙏🙏🙏🙏

அருள்மிகு பாணபுரீஸ்வரர் திருக்கோவில், கும்பகோணம்.

அருள்மிகு பாணபுரீஸ்வரர் திருக்கோவில், கும்பகோணம்.
நந்தி தேவரிடம் பெற்ற சாபம் நீங்க, மகாவிஷ்ணுவின் அறிவுரைப்படி இத்தலத்தில் தங்கி சிவனை வழிபட்டு தனது சாபத்தை தீர்த்துக்கொண்டார் வியாச பகவான். 

அவர் இங்கு ஸ்தாபித்த லிங்கம் வியாச லிங்கம் என அழைக்கப்படுகிறது. வங்காள நாட்டு மன்னன் சூரியசேனன் தனது மனைவி காந்திமதியின் நோய் தீர இத்தலத்தில் தங்கி, இக்கோவிலுக்கு திருப்பணி செய்து மனைவியின் நோய் நீங்கியதோடு, சிறந்த புத்திர பாக்கியத்தையும் பெற்றான்.

உலகமே நீரில் மூழ்கிய ஊழிக்காலங்கள் பல முறை ஏற்பட்டதாகவும், அப்போதெல்லாம் சிவபெருமான் மீண்டும் உலகில் உயிர்களை தோன்ற செய்ததாகவும் பழங்கால தமிழ் ஆன்மீக இலக்கியங்கள் கூறுகின்றது. 

அப்படியான ஒரு ஊழிக்காலத்தில் சிவபெருமானின் மகிமையால் உருவான ஒரு கோவில் தான் “கும்பகோணம் அருள்மிகு பாணபுரீஸ்வரர் திருக்கோவில்”. இக்கோவிலின் விஷேஷ அம்சம் என்ன என்பதை இங்கு அறிந்து கொள்ளலாம்.

மிகவும் புராதனமான கோவிலாக பாணபுரீஸ்வரர் கோவில் இருக்கிறது. இந்த கோவிலின் இறைவனான சிவபெருமான் பாணபுரீஸ்வரர் எனவும், அம்பாள் சோமகலாம்பாள் எனவும் அழைக்கப்படுகிறார்கள். சோழ மன்னர்கள் காலத்தில் இக்கோவில் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வந்ததாக வரலாறு கூறுகிறது.

இத்தல புராணத்தின் படி உலகமே நீரில் மூழ்கிய ஊழிக்காலத்தில் பிரம்மன் மிதக்கவிட்ட கும்பம் இப்பகுதிக்கு மிதந்து வந்த போது, கயிலையிலிருந்து வேடன் வடிவில் வந்த சிவபெருமான், தனது வில்லிலிருந்து ஒரு பாணத்தை செலுத்தி அந்த கும்பத்தை உடைத்தார்.

அக்கும்பத்தில் இருந்த அமிர்தம் வழிந்தோடி மகாமக குளமாக உருவானது. இத்தலத்தில் பாணத்தை கொண்டு கும்பத்தை உடைந்ததால் இங்கு கோவில் கொண்டிருக்கும் சிவபெருமானுக்கு பாணபுரீஸ்வரர் என்கிற பெயர் உண்டாயிற்று.

இந்த தலத்தில் சிவபெருமான் அமிர்த கலசத்தை உடைத்ததால் இங்கு வந்து பாணபுரீஸ்வரரை வழிபடுபவர்களுக்கு நீண்ட ஆயுளும், பொருள் அபிவிருத்தியும், மங்காத புகழும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

மேலும் இந்த ஆலயத்தின் இறைவியான சோமகாலம்பாளை வழிபடுபவர்களுக்கு உடல் மற்றும் மனதில் இருக்கும் சோம்பல்தனம் நீங்கி மிகுந்த சுறுசுறுப்பு ஏற்படும் என்றும், சிறந்த முகபொலிவும் உண்டாகும் என்பது அனுபவம் பெற்ற பக்தர்களின் வாக்காகும்.

அருள்மிகு பாணபுரீஸ்வரர் திருக்கோவில் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் கும்பகோணம் நகரில் பாணத்துறை என்கிற பகுதியில் அமைந்திருக்கிறது. பாணத்துறை செல்ல பேருந்து, வாடகை வண்டி வசதிகள் இருக்கின்றன.

அருள்மிகு பாணபுரீஸ்வரர் திருக்கோவில், பாணத்துறை
கும்பகோணம்
தஞ்சாவூர் மாவட்டம் – 612 001

காசி நகரம் இந்துக்களின் போற்றுதலுக்குரிய ஸ்தலமாக மாறிப்போனது எதனால்?

காசி நகரம் இந்துக்களின் 
போற்றுதலுக்குரிய ஸ்தலமாக 
மாறிப்போனது எதனால்?
காசி என்பது 168 மைல் பரப்பளவில்
சிவபெருமானால் (சிவசக்தியால்) அமைக்கப்பட்ட ஒப்பற்ற, நினைப்பதற்கே அரிய ஓர் சிவ சக்தி யந்திரம். 

வருடத்தின் எல்லா நாட்களும், ஒரு நாளின் எல்லா மணிநேரமும் ஓய்வின்றி செயல்படும் ஒப்பற்ற சிவ சக்திநிலை இங்கே இருப்பதாக அனைவரின் நம்பிக்கை. 

சிவன் வடிவமைத்த காசியின் 168 மைல் சுற்றளவில் 468 சக்தி மையங்கள். அவற்றில் 108 அடிப்படை சக்தி மையங்கள். இதில் 54 ஆண்தன்மை நிறைந்த சக்தி வடிவங்கள், 54 பெண் தன்மை நிறைந்த சக்தி மையங்களாக சிவனால் அமைக்கப்பட்ட தென்பது வரலாறு.

நிலவின் சுழற்சிக் கணக்கில், மூன்று வருடத்திற்கு ஒரு முறை 13 மாதங்கள் இருக்கும். நம் சூரிய குடும்பத்தில் இருப்பது 9 கோள்கள். 4 திசைகள் அல்லது பஞ்சபூதங்களில் ‘ஆகாஷ்’ தவிர்த்து நான்கு அடிப்படைக் கூறுகள். ஆக, 13*9*4 = 468.

நம் உடலில் இருக்கும் சக்தி 
சக்கரங்கள் 114. இதில் 2 நம் உடல் தாண்டி இருக்கிறது. மீதம் இருக்கும் 112ல், 4 சக்கரங்களுக்கு நாம் ஏதும் செய்ய அவசியம் இருக்காது. மற்ற 108ம் சரியாய் இருந்தால், இந்த நான்கும் தானாய் மலர்ந்திடும். 

இந்த 108ல் 54 பிங்களா (ஆண்தன்மை), 54 ஈடா (பெண் தன்மை). அதனால் 108 அடிப்படை சக்தி ஸ்தலங்களில் 54 சிவன், மற்றும் 54 தேவி கோவில்கள் காசியில் அமைக்கப் பட்டன.

காசி நகர அமைப்பே வடிவியல் (geometry) அளவிலும் கணிதவியல் அளவிலும் மிகக் கச்சிதமான, அற்புதமான வடிவமைப்பு. பிரபஞ்சத்தின் சிறு அம்சமான மனிதனும், அந்தப் பிரபஞ்சமும் தொடர்பு கொள்வதற்கான மிக நேர்த்தியான அமைப்பு. 

இது முழு உயிரோட்டத்தில் இயங்கும் ஒரு மாபெரும் மனித உடலின் பிரதிபலிப்பு. முழு உயிரோட்டத்தில், முழுமையான சக்தி அமைப்பில் ஒரு உடல் இயங்கினால், அதுவே பிரபஞ்சத்தை அவனிற்குத் திறந்து வைக்கும். இப்படி பிரபஞ்சத்துடன் தொடர்பு கொள்ளக் கூடிய இடமாகத்தான் சிவசக்தியினால் காசி உருவானதாம்.

இங்கே ஒருவர் வாழமுடிந்தால், பிரபஞ்சத்துடன் இவ்வழியில் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முடிந்தால், எவர் தான் காசியை விட்டு வெளியேற சம்மதிப்பார்?

468 கோவில்களில், 108 போக, மீதத்தில் 56 விநாயகர் கோவில்கள், 64 யோகினி கோவில்கள், 12 சூரியன் கோவில்கள், 9 நவதுர்கை கோவில்கள், 9 சண்டி கோவில்களும் அடங்கும். 

இதில் 56 விநாயகர் கோவில்கள் 8 திசைகளில், 7 பொதுமையம் கொண்ட வட்டத்தில் அமைக்கப் பட்டிருக்கிறது. 

இந்த வட்டத்தில் நடக்க ஆரம்பித்தால், இதன் முடிவு காசி விஸ்வநாதர் கோவிலில் முடியும். அதோடு சூரியனின் 12 கோவில்களும் தக்ஷிணாயனத்தில் இருந்து உத்தராயணத்திற்கு நகரும் சூரியனின் திசையை ஒத்து இருக்கிறது.

இப்படி படைப்பை உற்று நோக்கி, ஒவ்வொரு மாறுதலுக்கும் ஏற்ற வகையில் இயங்கும்
வண்ணம் காசி அமைக்கப்பட்டது. இது தவிர சிவன், சப்தரிஷிகளை உலகின் வெவ்வேறு மூலைக்கு அனுப்பிய போது, அவர்கள் அவரைப் பிரிய மனமில்லாமல் ஏங்கியதால், அவர்களுக்கு ‘சப்தரிஷி’ பூஜையை கற்பித்து, அதை அவர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் செய்தால், சிவனுடன் இருக்கும் உணர்வைப் பெறுவார்கள் என்றும் சொல்லி அனுப்பினாராம். 

இன்றளவிலும் இப்பூஜை விஸ்வநாதர் கோவிலில் இரவு 7 மணியளவில் நடைபெறுவது இக்கோவிலின் சிறப்பு.

அப்பூஜையை உணர்ந்தால் தான் புரியும். அப்பூஜையை செய்பவர்களுக்கு அதன் மகத்துவம் தெரியவில்லை எனினும், அதைச் சிறிதும் பிசகாமல் செய்வதால், அவ்விடத்தில் நம்பற்கரிய சக்தி உருவாகிறது. 

அக்காலத்தில், இந்தப் பூஜை ஒரே நேரத்தில், காசியின் 468 கோவில்களிலும் செய்யப்பட்டது. இதன் தாக்கத்தை வார்த்தைகளில் அடக்கிட முடியாது. 

இப்படியொரு மாபெரும் உயிரோட்டத்தில் காசிதிளைத்திருந்ததை நாம் அனுபவிக்காமல் போனது, நம்முடைய மிகப்பெரும் துரதிர்ஷ்டம் என ஆன்றோர்கள் கூறுகிறார்கள்.

இதை நாம் கவனித்துப் பார்த்தால், எல்லையில்லாமல் வளர வேண்டும் என்கிற ஆசை ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு. இது வெறும் ஆசையாய் இருந்தால் போதாது என்று, அதை நிறை வேற்றிக் கொள்வதற்குத் தேவையான கருவியாய் காசி உருவாக்கப்பட்டது. 

இது ஒரு சக்தி உருவம். இந்த உருவத்திற்கு ஏற்றாற்போல், அதைச் சுற்றி ஒரு ஊர் தானாக உருவானது. 

அதனால் காசி என்பதை ஊராகப் பாக்காமல், அதை ஒரு வாய்ப்பாகப் பார்க்க வேண்டும். இந்த மகத்தான வாய்ப்பை உணர்ந்துதான் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மக்கள் காசியை இன்றும் போற்றி வருகின்றனர்.

ஓம் நமசிவாய!
.

திருவேடகம் ஏடகநாதேஸ்வரர் திருக்கோவில் மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே திருவேடகம் எனும் கிராமத்தில் அமைந்து உள்ளது.

காசிக்கு நிகரான சிறப்பு உடையதாக திருவேடகம் 
ஏடகநாதேஸ்வரர் திருக்கோயில் தலத்தில் இறைவனை வழிபட்டால் ஆயுள் முழுவதும் வாழ்ந்த புண்ணியம் கிடைக்கும்.

தேவாரம் பாடல் பெற்ற திருஏடகம் ஏடகநாதேசுவரர் திருக்கோயில்

திருவேடகம் ஏடகநாதேஸ்வரர் திருக்கோவில் மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே திருவேடகம் எனும் கிராமத்தில் அமைந்து உள்ளது. ஏடகநாதர் கோயில் திருஞானசம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலமாகும்.

மதுரையில் இருந்து வடக்கே வைகை நதியின் கரையோரம் அமைந்துள்ள சிவத்தலம் திருவேடகம். இங்கு வைகை நதி தெற்கு வடக்காக ஓடுவதால் காசிக்கு நிகரான சிறப்பு உடையதாக இத்தலம் கருதப்படுகிறது.

இத்தலத்தின் மூலவர் ஏடகநாதேஸ்வரர், தாயார் ஏலவார்குழலி. இத்தலத்தின் தலவிருட்சமாக வில்வ மரமும், தலத்தின் தீர்த்தமாக பிரம தீர்த்தக்குளம் மற்றும் வைகை ஆறு ஆகியவை உள்ளன.

மூலவர் ஏடகநாதேஸ்வரர், தாயார் ஏலவார்குழலி.

இறைவன் மற்றும் இறைவிகளுக்கு தனித்தனியாக கோபுரம் இவ்வாலயத்தில் உள்ளது. இறைவன் சன்னதி எதிரே ஐந்து நிலை ராஜ கோபுரம் வழியே உள்ளே நுழைந்தால் கம்பத்தடி மண்டபம் உள்ளது. இங்கு நந்தி பலிபீடம் முதலியவற்றைக் கண்டு இறைவனின் கருவறையை அடையலாம். கருவறையை சுற்றி 63 நாயன்மார்கள் விநாயகர் வள்ளி முருகன் தெய்வானை ஆகிய சன்னதிகள் உள்ளன. கருவறையில் மூலவர் ஏடகநாதர் சுயம்பு லிங்கத் திருமேனியாக காட்சியளிக்கிறார்.

தல வரலாறு:

நின்றசீர் நெடுமாற நாயனார் (எ) கூன்பாண்டிய பாண்டிய மன்னரும் சைவ நாயன்மார்களுள் ஒருவரும் ஆவார். “நின்றசீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்” என்று திருத்தொண்டத் தொகை குறிப்பிடுகிறது. இவர் சோழமன்னரின் பாவையாகிய மங்கையர்க்கரசியாரின் கணவர். 

இவர் காலத்தில் சமணர் பல்கிப் பெருகி, சமணசமயத்தைப் பரப்பி வந்தனர் சைவத்தைக் காப்பாற்ற மங்கையர்க்கரசியாரின் அழைப்பின் பேரில்  திருஞானசம்பந்தர் மதுரைக்கு வந்தபோது திருநீறு பூசி அரசன் கூன்பாண்டியனின் வெப்ப நோய் நீங்க உதவினார்.  அங்கிருந்த சமணர்கள் ஆத்திரமுற்று திருஞானசம்பந்தர் அனல் வாதம் புனல் வாதம் புரிந்தனர். 

சமணர்கள் தங்கள் ஏட்டை தீயில் இட்ட போது அது எரிந்து சாம்பல் ஆயிற்று. ஆனால் சம்பந்தர் திருநள்ளாற்றுப் பதிகம் எழுதிய ஏட்டை தீயில் இட்ட போது அது எரிந்து சாம்பல் ஆகாமல்  பச்சையாகவே இருந்தது.  பின்பு புணல் வாதத்தின் போது சமணர்கள் எழுதிய ஏட்டை ஆற்றில் விட்ட போது அது ஆற்றுடன் சென்றது. ஆனால் சம்பந்தர் “வாழ்க அந்தணர் ” என்று தொடங்கும் பதிகம் எழுதியிட்ட ஏட்டை வைகை ஆற்றில் விட்ட போது அது வைகை நதியின் நீரோட்டத்தை எதிர்த்து சென்றது. 

மதுரை பாண்டிய மன்னனின் மந்திரி குலச்சிறையார் என்பவர் குதிரையின் மீதேறி வைகை நதியின் நீரோட்டத்தை எதிர்த்து செல்லும் ஏட்டைப் பின் தொடர்ந்து செல்ல அது ஓரிடத்தில் வைகை ஆற்றின் கரையில் ஒதுங்கியது. பாண்டிய மன்னன் ஏடு ஒதுங்கிய இடத்தில் ஒரு சிவலிங்கத்தைக் கண்டு அங்கு ஒரு ஆலயம் எழுப்பினான். அதுவே திருவேடகம் என்ற இந்த பாடல் பெற்ற ஸ்தலம்.

திருஞானசம்பந்தர் திருக்கோவில்

“வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயதெல் லாம்அரன் நாமமே
சூழ்க வையக முந்துயர் தீர்கவே”.

இந்த பாடல் திருஞானசம்பந்தர் எழுதிய ’வாழ்க அந்தணர்’ என்ற  திருப்பதிகம்  காசிக்கு நிகரான சிறப்பு உடையதாக இங்கு வைகை நதி தெற்கு வடக்காக ஓடுவதால் இத்தலத்தில் ஒரு நாள் தங்கி இருந்து இறைவனை முழுமனதுடன் பூஜை,
செய்து வழிபட்டால் காசியில் ஆயுள் முழுவதும் வாழ்ந்த புண்ணியம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. 

பராசரர், பிரம்மா, வியாசர் ஆகியோர் இத்தலத்தில் இறைவனை வழிபட்டுள்ளனர்.

திருவேடகம் ஏடகநாதேஸ்வரர் திருக்கோவில் காலபைரவர் சந்நிதி

இந்த கோயிலில் உள்ள கால பைரவர் சன்னதி மிகவும் விசேஷமானது வைகை நதிக்கரையில் பித்ரு காரியங்கள் மற்றும் அவர்கள் இறந்த திதி அமாவாசை போன்ற நாட்களில் மிகவும் சிறந்ததாக கருதப்படுகிறது. காசிக்கு நிகரான கருதப்படுவதால் முன்னோர் வழிபாடுகள் இத்தளத்தில் செய்யலாம். 

நம் முன்னோர்களின் முக்தி அடையை மோட்ச தீபம் ஏற்றும் பழக்கம் உள்ளது. இக்கோவிலில் பிரம்ம தீர்த்தக் குளத்தில் நீராடி இறைவனை வழிபட்டால் தீர்த்த பிரமை நீங்குவதை தலத்தின் தனி சிறப்பாகும்.

Monday, February 27, 2023

வாழ்வில் ஒரு முறையாவது தரிசித்து விடுங்கள்!ஆவுடையார் கோயில் - ஆத்மநாதசுவாமி கோயில்

வாழ்வில் ஒரு முறையாவது தரிசித்து விடுங்கள்!
ஆவுடையார் கோயில்  -  ஆத்மநாதசுவாமி கோயில்...!
திருப்பெருந்துறை என்கிற ஆவுடையார்கோயில் (Avudaiyarkoil) இந்திய மாநிலமான தமிழ்நாடு புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆவுடையார் கோயில் வட்டத்திலுள்ள, தேவார பாடல் பெற்ற சிவன் கோயில் ஆகும்.

மூலஸ்தானத்தில், சுவாமி - அம்பாள் சிலைகள் இருப்பது தான் வழக்கம்; ஆனால், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகிலுள்ள ஆவுடையார்கோவிலில் சிவலிங்கத்துக்கு பதிலாக குவளையும்,அம்பாளுக்கு பதிலாக பாதமும் மட்டுமே உள்ளது.

பொதுவாக, சிவாலய மூலஸ்தானங்களில், ஆவுடையார் மீது லிங்கம் இருக்கும்; ஆனால், இங்கு, வெறும் ஆவுடையார் மட்டுமே உள்ளது.

லிங்கம் இருக்க வேண்டிய இடத்தில் குவளை சாத்தப்பட்டுள்ளது.

குவளை உடலாகவும், உள்ளிருக்கும் உருவமற்ற பகுதி ஆத்மாவாகவும் கருதப்படுவதால், சுவாமிக்கு, 'ஆத்மநாதர்' என பெயர் வந்தது.

கோவில்களில் தீபாராதனை தட்டைத் தொட்டு, பக்தர்கள் கண்ணில் ஒற்றிக் கொள்வர். ஆனால், இங்கு, சுவாமிக்கு தீபாராதனை செய்த தட்டை வெளியில் கொண்டு வருவதில்லை.

ஆவுடையாருக்கு பின்புறம் வெள்ளை, சிவப்பு மற்றும் பச்சை நிறங்களில் மூன்று தீபங்கள் ஏற்றப்பட்டுள்ளன. வெள்ளை நிறம் சூரியனாகவும், சிவப்பு - அக்னியாவும், பச்சை நிறம், சந்திரனாகவும் கருதப்படுகின்றன.

சுவாமிக்கு சிலை இல்லை என்பதால், அவரது மூன்று கண்களை குறிக்கும் விதமாக இந்த தீபங்களை ஏற்றுகின்றனர். இவற்றை வணங்கினாலே தீபாராதனை தட்டை வணங்கியதற்கு சமம் என்பதால், அதை வெளியில் கொண்டு வருவதில்லை.

அதேபோன்று, பொதுவாக, சிவன் கோவில்கள் கிழக்கு நோக்கியும், சில மேற்கு பார்த்தவாறும் இருக்கும். ஆனால், ஆவுடையார் கோவில் தெற்கு நோக்கி உள்ளது.

சிவன், குருவாக இருந்து, தெற்கு நோக்கி அமர்ந்து உபதேசிக்கும் நிலையை, தட்சிணாமூர்த்தி என்பர்.
'(தட்சிணம்)' என்றால் தெற்கு; சிவன்,

மாணிக்கவாசகருக்கு குருவாக உபதேசம் செய்த தலம் என்பதால், தெற்கு நோக்கி அமைந்துள்ளது.

சூரிய, சந்திர கிரகணங்களின் போது கோவில்களில் நடை சாத்தப்படுவது வழக்கம்.

ஆனால், இங்கு கிரகணநாளில், ஆறு கால பூஜை நடைபெறுகிறது. ஆதியந்தம் இல்லாத உருவமற்ற சிவனுக்கு, எக்காரணத்தாலும் பூஜை தடைபடக்கூடாது என்பதற்காக இவ்வாறு செய்கின்றனர்.

அம்பாளின் பெயர் யோகாம்பாள்; இவளுக்கும் உருவம் இல்லை.

சிவனை மீறி, தட்சனின் யாகத்திற்கு சென்றதற்கு மன்னிப்பு பெறுவதற்காக, இத்தலத்தில் யார் கண்ணுக்கும் தெரியாமல், உருவத்தை மறைத்து தவம் செய்தாள். எனவே, அம்பாளுக்கும் விக்ரகம் இல்லை.

அவள் தவம் செய்த போது பதிந்த பாதத்திற்கு மட்டுமே பூஜை நடைபெறுகிறது. பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக இப்பாதத்தை கண்ணாடியில் பிரதிபலிக்க செய்துள்ளனர்.

இவளது சன்னிதி அடைத்தே இருக்கும் என்பதால், சன்னிதி முன் உள்ள ஜன்னல் துவாரம் வழியாகத்தான் பாதத்தை தரிசிக்க முடியும்.

ஆத்மநாதர் முன் உள்ள படைக்கல்லில், புழுங்கல் அரிசியில் சமைத்த
சூடான சாதத்தை ஆவி பறக்க கொட்டுவர்.

அப்போது சன்னிதி கதவுகள் சாத்தப்பட்டு, சிறிதுநேரம் கழித்து திறக்கப்படும்.

சுவாமி உருவமற்றவர் என்பதால், உருவமில்லாத ஆவியுடன் நைவேத்யம் படைக்கப்படுகிறது.

இது தவிர பாகற்காய் மற்றும் கீரையும் நைவேத்தியமாக படைக்கப்படும்.

வித்தியாசமான நடை முறைகள் கொண்ட இக்கோவிலை, வாழ்வில் ஒரு முறையாவது தரிசித்து விடுங்கள்!

1100 ஆண்டுகளுக்கு முந்திய கோயில்!

ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலே எழுப்பப்பட்ட இந்தக் கவிபாடும் கலைக் கூடத்தின் சிறப்புகளை ஒன்றிரண்டு வரிகளிலேசொல்லி அடக்கி விட முடியாது.

அடங்காமை என்று கூறுவார்களே அந்த அடங்காமை இந்த ஆவுடையார்கோயிலுக்கு மிகவும் பொருந்தும். புதிதாகக் கோயில்கள் கட்டுகிற ஸ்தபதியார்கள் கூட ஆவுடையார்கோயில் சிற்ப அடங்கலுக்குப் புறம்பாக என்று தங்களது ஒப்பந்தத்தில் குறிப்பிட்டு எழுதுவதிலிருந்தே
இந்தக் கோயிலின் கலைத்திறன் வேறு எந்தக் கோயிலிலும் அடங்காது என்பது தெளிவாகும்.

மாணிக்கவாசகர் சோதியிலே கலந்துள்ளார்

இதே போல இக்கோயிலின் சிறப்புக்களைக் கூறத்தலைப்பட்டால்
அது ஏட்டில் அடங்காது.

இந்தக் கோயிலிலே மற்ற சிவாலயங்களில் இருப்பது போல கொடிமரம் இல்லை. பலி பீடமும் இல்லை. நந்தியும் இல்லை. சுவாமிக்கு உருவமும் இல்லை.

இன்னும் சொல்லப்போனால் இங்கு வருகின்ற பக்தர்களுக்கு மற்ற கோயில்களைப் போல தீப ஆராதனையினைத் தொட்டு வணங்க அனுமதிப்பதும் இல்லை. மாணிக்கவாசகர் சோதியிலே கலந்துள்ளார் என்பதாலேயே தீபம் தருவதில்லை.

இங்குள்ள தேர் தமிழகத்திலுள்ள பெரிய தேர்கள் சிலவற்றில் ஒன்றாகும். திருநெல்வேலி,  திருவாரூர், ஆவுடையார்கோயில் ஆகிய ஊர்களில் உள்ள தேர்கள்தான் தமிழகத்தில் உள்ள கோயில்களின் தேர்களில் மிகவும் பெரிய தேர்களாகும்.

இந்த தேர்ச் சக்கரத்தின் குறுக்களவு மட்டும் 90 அங்குலம் ஆகும்.
சக்கரத்தின் அகலம் 36 அங்குலமாகும்.

50 முதல் 500 பேர் வரை கூடினால் எந்தத் தேரையும் இழுத்து விடலாம். ஆனால் இந்த ஆவுடையார்கோயில் தேரை இழுக்க சுமார் 5000 பேர் கூடினால்தான் இழுக்க முடியுமாம். இதிலும் அதன் அடங்காத் தன்மை வெளிப்படுகிறது.

50 ஆண்டுகள் ஆகியும் இந்த ஆவுடையார்கோயில் தேர் அப்படியே  நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கல்லோ - மரமோ - காண்போர் வியப்பர்
இந்த ஆவுடையார்
கோயிலுக்குள் என்னென்ன அதியற்புத வினைத்திறன் கொண்ட கற்சிலைகள் இருக்கின்றனவோ அவை அனைத்துமே மரத்திலும் செய்து இந்தத் தேரில் எட்டுத் திசையும் பொருத்தி இருப்பதைக் கண்ணுறும் போது இந்தச் சிலைகள் கல்லோ மரமோ என வியக்கத் தோன்றும்.

வடக்கயிறு:-
இந்தத் தேரை இழுப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட வடக்கயிற்றை நமது இரு கைகளாலும் இணைத்துப் பிடித்தால்கூட ஒரு கையின் விரல் இன்னொரு கையின் விரலைத் தொடாது. இரு கைகளால் பிடிக்கும் போது வடக்கயிறு நமது கைக்குள் அடங்காது. இதிலும் அதன் அடங்காத்தன்மை பளிச்செனத் தெரியும்.

உருவம் இல்லை - அருவம்தான்:-

தமிழகத்திலுள்ள ஆலயங்கள் எல்லாவற்றிலுமே உருவ வழிபாடுதான் நடைபெற்று வருகின்றன. ஆனால் இந்த ஆத்மநாதர் ஆலயத்தில்
மட்டுந்தான் அருவ வழிபாடு நடைபெற்று வருகிறது. மூலஸ்தானத்தில்
எந்த விதச் சிலையும் கிடையாது.

அப்படிப் பார்த்தாலும் இது மற்ற கோவில்களில் அடங்காத கோயில்
என்பது சொல்லாமலே விளங்கும்.

பூதம் கட்டிய கோயில்:-

ஆவுடையார் கோயிலை பூதம்தான் கட்டிற்று என்று இவ்வட்டார மக்களின் நம்பிக்கை. பெரிய பாறைகளைக் கொண்டு வந்து தூண்கள் அமைத்தும் சிலைகள் வடித்தும் கொடுங்கைக் கூரைகள் இணைத்தும் மதில் சுவர்கள் கோபுரங்கள் எழுப்பியும் வைக்கப்பட்டுள்ளது.

கொடுங்கை:-
கோயிலின் தாழ்வாரத்திலுள்ள கொடுங்கைகள்  கல்லை தேக்கு மரச்சட்டம் போல் இழைத்து அதில்  (கம்பிகளை இணைத்துச் சேர்த்து அதிலே குமிழ் ஆணிப்பட்டை ஆணிகள் அறைந்திருப்பது போல) எல்லாமே கல்லில் செய்து அதன் மீது மெல்லிய ஓடு வேய்ந்திருப்பது போல செய்திருப்பது சிற்பக்கலை வியக்கத் தக்க ஒப்பற்ற திறனாகும்.

ஒரு கல்லுக்கும் மறு கல்லுக்கும் எப்படி எந்த இடத்தில் இணை சேர்க்கப்பட்டுள்ளது என்பதைக் கண்டு பிடிக்க முடியாத அளவிற்கு அமைக்கப்பட்டுள்ள இந்தத் தாழ்வாரம் எனப்படும் கொடுங்கைக்கூரை
ஆனது மொத்தம் பதிமூன்றரை அடி நீளமும் ஐந்தடி அகலமும்
இரண்டரையடி கனமும் உள்ளதாகும்.

இந்த இரண்டரையடி கனத்தை இப்படி தாழ்வாரக் கூரையாக்கி
செதுக்கிச் செதுக்கி ஒரு அங்குல கனமுள்ள மேலோடு அளவிற்குச் சன்னமாக்கப்பட்டிருக்கிறது.

திருவலஞ்சுழி பலகணி, திருவீழிமழலை வௌவால்நத்தி மண்டபம், ஆவுடையார்கோயில் ஆத்மநாதசுவாமி கோயில் கொடுங்கை போன்ற கட்டிடப்பணி தவிர்த்து பிற வகையிலான கட்டட அமைப்புகளை கட்டித்தருவதாக கட்டிடக்கலைஞர்கள் உறுதி கூறுவதாகக் கூறுவதுண்டு.

இதன்மூலமாக கட்டிடக்கலை நுட்பத்தை உணர முடியும். திருவலஞ்சுழி பலகணி (சன்னல்) மிகவும் நேர்த்தியாகவும் நுட்பமானதாகவும் அமைக்கப்பட்டிருக்கும். திருவீழிமிழலை வௌவால்நத்தி மண்டபத்தில் வௌவால்களால் தொங்க முடியாது. ஆவுடையார்கோயில் கொடுங்கை மிகவும் மெல்லியதாக இருக்கும்.

ஒரே கல்லிலான கற்சங்கிலி:-
கல் வளையங்களாலான சங்கிலி

இதே மண்டபத்தில் 10-15 வளையங்கள் கொண்ட ஒரே கல்லிலான கற்சங்கிலி செதுக்கப்பட்டு உயரத்தில் பொறுத்தித் தொங்க விடப்பட்டுள்ளது.

படைகல்:-

இங்கே மூலஸ்தானத்தில் அமுது மண்டபத்திலே படைகல் என்கிற ஒரு திட்டுக்கல் இருக்கிறது. இந்தத் திட்டுக்கல் 3 அடி உயரம் 7 அடி நீளம் 6 அடி அகலம் கொண்ட ஒரே பாறைக்கல்லாகும். இந்தத் திட்டுக்கல்லில்தான்
6 கால பூசைகளுக்கும் உரிய அமுதினை வடித்துப் படைத்து ஆற வைக்கிறார்கள்.

புழுங்கல் அரிசி நெய்வேத்தியம்:-

எல்லா ஆலயங்களிலும் பூசை நடைபெறும்போது பச்சை அரிசியிலே
அமுது படைத்து நெய்வேத்தியம் செய்வார்கள்.

ஆனால் இந்த ஆவுடையார் கோயிலிலே 6 காலத்திற்குமே புழுங்கல் அரிசியால்தான் அமுது படைக்கப்படுகிறது. அதோடு பாகற்காய் கறியும் கீரையும் சேர்த்துப் படைக்கப் படுவது இங்கு மட்டும்தான்.

அணையா நெருப்பு:-

ஆறு கால பூசைக்கும் தொடர்ந்து அமுது படைத்துக் கொண்டிருப்பதனால் ஆயிரக்கணக்கான வருடங்களாக இங்கு உள்ள அமுது படைக்கும்
அடுப்பின் நெருப்பு அணைந்ததேயில்லை.

பாண்டியர் - சோழர் - நாயக்க மன்னர்கள் கட்டியது!

இந்தக் கோயிலில் ஆனந்தசபை தேவசபை கனகசபை சிற்சபை நடனசபை பஞ்சாட்சரம் போன்ற மண்டப அமைப்புகள் உள்ளன.

இக்கோயிலினுள் கருவறைப் பகுதியை மட்டும் மாணிக்கவாசகர் கட்டியதாகவும் அதைத் தொடர்ந்து விக்ரம சோழபாண்டியர் (பார்த்திபன்
கனவு என்கிற சரித்திர நாவலில் சொல்லப்படுகிற அதே விக்ரமாதித்ய
சோழன் தான்) மற்றும் சோழ மன்னர்கள் தஞ்சையை ஆண்ட நாயக்கர் மன்னர்கள் மகாராஷ்டிர மன்னர்கள் இராமனாதபுரம் சேதுபதி மன்னர் சிவகங்கை மன்னர் புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர் பாலைவன ஜமீன்தார் ஆகியோரால் ஆறு மண்டபங்கள் இணைத்துக் கோவிலாக கட்டப்பட்டுளது.

உருவமற்ற அருவக் கோயில்:-

தமிழகத்திலே மற்றதொரு உருவமற்ற அருவக் கோயிலான தில்லையம்பல சிதம்பர நடராசர் ஆலயத்திலே பொன்னோடு வேயப்பட்ட விமானம் உள்ளது.

அதேபோல இங்கு செப்போடு வேயப்பட்ட விமானம் இருக்கிறது. இந்த செப்போடு விமானத்தின் இணைப்பையும் வடிவையும் நாளெல்லாம் பார்த்து ரசிக்கலாம். இந்த விமானத்திலுள்ள மரங்கள் எல்லாமே தேவதாரு மரத்தால் ஆனவையாகும்.

தேவதாரு மரம்:-

மரங்களில் உறுதி வாய்ந்தது தேக்கு மரம் என்பதும் தேக்கு மரங்கள் நூற்றாண்டுக் கணக்கில் கெட்டுப் போகாமல் தாங்கும் சக்தி படைத்தது என்பது நமக்குத் தெரியும். 

ஆனால் இக்கோயிலில் பயன்படுத்தியுள்ள தேவதாரு மரங்களோ ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தாங்கும் சக்தி பெற்றதாகும். 

இந்த தேவதாரு மரங்கள் இந்தியாவில் இல்லை என்றும் பர்மாவில் உள்ளது என்றும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் சிவபெருமான் வாசஸ்தலமான கைலாயத்தில் தேவதாரு மரம் இருப்பதாக புராணங்கள் வாயிலாக நாம் அறிய முடிகிறது.

அந்தத் தேவதாரு மரத்தின் மீது இந்தச் செப்போடு வேயப்பட்ட விமானம் உள்ளது. இந்த தேவதாரு மரத்தின் பலகைச் சட்டத்தை இன்று பார்த்தாலும் நேற்று அறுத்து இன்று வழவழப்பேற்றி பலகையாக்கி இணைக்கப்பட்டது போல எண்ணெய் செறிந்துள்ள பளபளப்பைக் காணலாம்.

இது 5 ஆயிரம் ஆண்டுகள் தாங்கும் சக்தியை படைத்தது என்றும் கூறப்படுகிறது.

வற்றாத திருக்குளம்:-

இங்கு திருத்தமம் பொய்கை எனப்படும் வற்றாத திருக்குளமும் மூல விருட்சமான குருந்த மரமும் 96 அடி உயரம் 51 அடி அகலம் உடைய ராஜகோபுரம் ஆகியவையும் உள்ளன. இந்தக் கோவிலுக்குள் கருவறைக்கு மிக அருகில் 2 கிணறுகள் உள்ளன இதில் 5 அடி ஆழத்தில் இன்றும்
தண்ணீர் ஊறுவது அதிசயத்திலும் அதிசயம்.

கவிபாடும் கற்சிலைகள்:-

உயிர்த்துடிப்பு ஒன்றைத் தவிர மற்ற எல்லா அம்சங்களும் இங்குள்ள சிலைகளில் உள்ளன என்று கூறியுள்ளார்கள். அந்த அளவிற்கு ஈடு இணையற்ற கவிபாடும் கற்சிலைகள் இங்கே ஒவ்வொரு தூண்களிலும் நிறைந்து விளங்குகின்றன.

அங்குலம் உயரம் உள்ள ஆயிரங்கால் மண்டபம் முதல் 12 அடி உயரம் உள்ள அகோர வீரபத்திரர் ரணவீரபத்திரர் சிலை வரை சிற்பக்கலை தேனடை போல செறிந்து கிடக்கிறது.

இங்குள்ள எல்லா உருவச்சிலைகளிலேயும் காலில் உள்ள நரம்பு கூட வெளியே தெரிகின்றன. சிலைகளின் தலைமுடி கூட சன்னமாக அளந்து நீவி விடப்பட்டுள்ளன.

நவநாகரீக நகைகள்:-

தற்காலிக நவநாகரீக நகைகள் கல்லூரி மாணவிகளும் உயர்தர குடும்பப் பெண்களும் அணிகின்ற நவீன அணிகலன்கள் தங்க நகைகள் சங்கிலிகள் போன்ற எந்த ரக நகையானாலும் அவையனைத்தும் 1000 ஆண்டுகளுக்கு முன்னமேயே இங்குள்ள சிலைகளிலே வழங்கப்பட்டுள்ளதை இன்றும் காணலாம்.

நரியைப் பரியாக்கியது இத் தல புராணத்தின் பெருமையாகும்.

இந்த ஆவுடையார் கோயிலிலே தாவும்பரி என்று ஒரு குதிரை கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. அந்தக் குதிரை மீது சிவபெருமான் அமர்ந்து வருவது போல செய்யப்பட்டுள்ளது. குதிரையின் அமைப்பு ஒவ்வொன்றாய்ப்பார்த்தால் உயிர்க்குதிரையோ என்று தோன்றும்.

குதிரைகளிலே சிறந்ததும் அழகு வாய்ந்ததும் பஞ்ச கல்யாணிக் குதிரையாகும்.

பஞ்ச கல்யாணி என்றால் அந்தக் குதிரையின் நான்கு கால்களிலும் அதன் கனுக்காலிலும் வெள்ளை நிறம் இருக்கும்.
நெற்றியிலும் பொட்டு வைத்தாற்போல வெள்ளை நிறம் இருக்கும்.

இவ்வாறு ஐந்து இடத்தில் வெள்ளை நிறம் இருக்கும் குதிரை பஞ்ச கல்யாணி குதிரையாகும்.

சிவபெருமான் தாங்கி நிற்கின்ற இங்குள்ள குதிரைச் சிலையிலும் மேற்சொன்ன ஐந்து இடங்களிலும் வெள்ளை நிறம் இருக்கின்றன. அது மட்டுமல்ல அந்தக் குதிரையின் பற்களும் வெண்மையான கற்களால் செதுக்கப்பட்டுள்ளது.

வேடுவச்சி எனப்படும் மலைக்குறத்தி

இந்தக் கோயிலுக்குள் வேடுவச்சி எனப்படும் மலைக்குறத்தியின் சிலை ஒன்று அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஓலையினால் செய்யப்பட்டது போன்ற ஒரு கூடையினை இடுப்பில் வைத்து கையில் இடுக்கிக் கொண்டு குறி சொல்ல வருகின்ற குறத்தி போல அமைந்துள்ளது அச் சிலை.

இந்தச் சிலையை இந்தக் கோயிலின் செக் போஸ்ட் என்று சொன்னால் கூட பொருந்தும்.

இந்தச் சிலையை யார் பார்த்தாலும் பார்த்தவர்கள் அந்த இடத்தை விட்டு எளிதில் அகல மாட்டார்கள். தன்னிலை மறந்து அந்தச் சிலையையே சுற்றி வருவார்கள். 

தோள் கண்டார் தோளே கண்டார் என்று கம்பர் கூறியதைப் போல இந்த சிலை அழகில் மயங்கியவர்கள் ஆடைகண்டார் ஆடையே கண்டார் கூடை கண்டார் கூடையே கண்டார் என்று அச்சிலையின் ஒவ்வொரு அங்குலத்தையும் ரசிப்பதிலேயே மனம் பறிகொடுப்பார்.

1000 ஆண்டுகளுக்கு முந்திய ஓலைச்சுவடி

இந்த ஆவுடையார்கோயில் ஆத்மநாதர் ஆலயத்தில் 1000 ஆண்டுகளுக்கு முந்திய திருவாசகம் மற்றும் திருக்கோவையார் ஓலைச்சுவடிகள் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

நாமும் வாழ்க்கையில் ஒரு முறை கண்டிப்பாக இந்த அதிசய ஆலயத்தை தரிசித்தது வரலாமே!!!!!

திருச்சிற்றம்பலம்!!!!!

கோவில்கோபுரத்தில்இருக்கும்_பொம்மைகளைபற்றி_உங்களுக்கு_தெரியுமா? கோவிலுக்கு சென்றால் இதை தரிசனம் செய்ய மறந்து விடாதீர்கள்

🔯🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔯

#கோவில்கோபுரத்தில்இருக்கும்_பொம்மைகளைபற்றி_உங்களுக்கு_தெரியுமா? கோவிலுக்கு சென்றால் இதை தரிசனம் செய்ய மறந்து விடாதீர்கள், கோடி புண்ணியத்தை இழந்து விடுவீர்கள்!**_ 
 🌹கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று கூறுவார்கள். 

🍁காலையில் எழுந்ததும் முதல் தரிசனமாக நீங்கள் கோவில் கோபுரத்தை கண்டால் அந்த நாள் முழுவதும் உங்களுக்கு #இலாபமும்_அதிர்ஷ்டமும் பெருகும். 

🍁கோபுர தரிசனம் செய்பவர்களுக்கு கோடி புண்ணியங்கள் வந்து சேரும் என்கிறது #ஆகமவிதிகள்! 

🍁இப்படி இருக்க கோபுரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த பொம்மைகளுக்கு #பின்னால்இருக்கும்சூட்சமம்என்ன? என்கிற ரகசியத்தை தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

🍁கோவிலுக்கு சென்றால் முதலில் #கோபுரம்வழியாகநுழைந்துபின்புகருவறையை_அடைவது_வழக்கம். இப்படி கோபுரங்கள் இருக்கும் கோவில்களுக்கு அதிக சக்தி உண்டு. 

🔥பெரிய பெரிய கோபுரங்கள் அமைத்து அதில் கலசங்களை வைப்பது காலா காலத்திற்கும் நிலைத்து நிற்கும் ஒரு %#அற்புதமானஅறிவியல் ஆகும். இப்படி பார்த்து பார்த்து கம்பீரமாக எழுப்பப்பட்டிருக்கும் கோவில் கோபுரங்களில் இருக்கும் பொம்மைகளை என்றாவது நீங்கள் உற்று நோக்கியது உண்டா?

🔥எதற்காக கோபுரங்கள் முழுவதும் பொம்மைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது? 

🔥கோவில் கோபுர பொம்மைகளை எப்படி வேண்டுமானாலும் அமைத்து விடக் கூடாது. எந்தந்த இடங்களில், எந்தெந்த தெய்வ உருவங்கள் இடம் பெற வேண்டுமோ, அந்த அமைப்பின் படி இருந்தால் தான் அதற்கு அதிக சக்தி உண்டு. 

🍂கோபுரத்தின் மேல் பகுதியில் #சிவபெருமான் தொடர்புள்ள பொம்மைகளும்,  

🍂நடுப்பகுதியில் #விஷ்ணுபகவான் தொடர்புள்ள பொம்மைகளும், 

🍂அடிப்பகுதியில் பிரம்ம தேவர் தொடர்புள்ள பொம்மைகளும் அமைக்கப்பட்டு இருக்கும். 

🍂 மற்ற பகுதிகளில் ரிஷிகள், பூதகணங்கள், தேவதைகள், பக்தர்கள் ஆகியோரின் திருஉருவங்கள் அமைக்கப்பட்டு இருக்கும்.

⭕இப்படி ஒவ்வொரு பொம்மைகளையும் செதுக்கும் பொழுது அதில் இலக்கண விதி உண்டு. இந்த விதிக்கு *‘#பிரதிமாலஷணம்’* என்பது பெயராகும். 

⭕இந்த விதியின்படி கோபுர பொம்மைகள் செதுக்கப்பட வேண்டும். இதில் தெய்வ திருஉருவங்கள் அமைக்கப்படும் பொழுது அதன் கண்கள் ***#அனுக்கிரகபார்வையுடன்சாந்தமாக_அமைக்கப்பட்டுஇருக்கவேண்டும். தெய்வத்தின் திருமுகத்தை விட, **#உடல்பத்துமடங்குபெரியதாகஇருக்கவேண்டும்.

⭕அது போல மனித உருவங்கள் அமைக்கப்படும் பொழுது #முகத்தைக்காட்டிலும்_உடல்_எட்டுமடங்குஅதிகம்இருக்கவேண்டும்.

⭕ தேவதைகளின் திருஉருவம் ****#முகத்தைக்காட்டிலும்9மடங்குஉடல்பெரியதாகஅமைக்கப்பட்டிருக்கவேண்டும். 

🌳பூதகணங்கள், துவாரபாலகர்கள், அசுரர்கள் ஆகியோருடைய #கண்கள்உக்கிரமாகஅமைக்கப்பட்டிருக்கவேண்டும். 

⭕கோபுர பொம்மைகளில் இவர்கள் மட்டுமல்லாமல் தேவர்கள், பறவைகள், மிருகங்கள் கூட செதுக்கப்பட்டு இருக்கும். 

⭕இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு உயிருக்கும் தெய்வம் அருள் புரிவார் என்பதையும், #எல்லோரும்இங்குசமம் என்பதையும் உலக மக்களுக்கு புரிய வைக்க இவ்வாறு கோவில் கோபுர பொம்மைகள் அமைக்கப்பட்டுள்ளது.

💐கோவிலுக்கு செல்லும் பொழுது #கட்டாயம்கோபுரத்தைதரிசனம்செய்து_விட்டுவரவேண்டும்.

⭕ கோவிலுக்கு போனோமா, வந்தோமா என்றில்லாமல் கோபுரத்தில் இருக்கும் ஒவ்வொரு பொம்மைகளையும் பார்த்து #கண்குளிரரசிக்கவேண்டும். 

🙏கோபுரத்தை இவ்வகையில் தரிசனம் செய்த பின்பு, கோவிலுக்குள் சென்று மூலவரை வணங்க வேண்டும். 

🌺பின்பு எல்லா கடவுளரையும் வணங்கி விட்டு பிரகாரத்தை வலம் வர வேண்டும். அதன் பிறகு கொஞ்ச நேரமாவது அங்கு அமர்ந்து விட்டு, பின்னர் வீட்டுக்கு புறப்படலாம். 

🍂 முறையாக ஒரு கோவிலை இந்த வகையில் தரிசனம் செய்தவர்களுக்கு மனதில் தீய எண்ணங்கள் எழுவதற்கு வாய்ப்பே கிடையாது.

🌷🌷🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

எட்டு குணங்களை உடையவன் :எட்டு குணங்களை உடைய இறைவனை வழிபடாதவர்களின் உடலில் ஐந்து பொறிகள் செயல்படக் கூடிய நிலையில் இருந்தும், அந்த பொறிகள் செயல்படுவதாக கருதப்பட மாட்டாது

#சைவ_சமயத்தில்_எட்டு
சிவபெருமான் விரும்பி அணிகின்ற மலர்கள் எட்டு. அவை...
1. புன்னை,
2. வெள்ளெருக்கு,
3. சண்பகம்,
4. நந்தியாவட்டை,
5. குவளை,
6. பாதிரி,
7. அலரி,
8. செந்தாமரை.
-------    ---------    --------
எட்டு மூர்த்தியாக (அட்ட மூர்த்தி) விளங்குபவன். அவை...
பூதங்கள் ஐந்து.
1. நிலம்,
2. நீர்,
3. தீ,
4. காற்று,
5. ஆகாயம்,
6. சூரியன்,
7. சந்திரன்,
8. ஆன்மா.
-------    ---------    --------
எட்டு மந்திரங்கள் :
1. ஓம் பவாய தேவாய நம ( பிறப்பு இறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை அளிப்பவன்)
2. ஓம் சர்வாய தேவாய நம (அனைத்து தேவர்களுக்கும் தலைவன்)
3. ஓம் ஈசானாய தேவாய நம (அனைத்து தேவர்களையும் ஆள்பவன்)
4. ஓம் பசுபதே தேவாய நம (அனைத்து உயிர்களுக்கும் தலைவன்)
5. ஓம் ருத்ராய தேவாய நம (எவராலும் வெல்ல முடியாதவன்)
6. ஓம் உக்ராய தேவாய நம (அனைவரும் நடுங்கக்கூடிய தோற்றமும், வல்லமையும் கொண்டவன்)
7. ஓம் பீமாய தேவாய நம (மிகவும் அதிகமான வல்லமை படைத்தவன்)
8. ஓம் மஹதே தேவாய நம (அனைத்துத் தேவர்களிலும் உயர்ந்தவன்).
-------    ---------    --------
எட்டு குணங்களை உடையவன் :
எட்டு குணங்களை உடைய இறைவனை வழிபடாதவர்களின் உடலில் ஐந்து பொறிகள் செயல்படக் கூடிய நிலையில் இருந்தும், அந்த பொறிகள் செயல்படுவதாக கருதப்பட மாட்டாது என்பது வள்ளுவர் வாக்காகும்.

கோளில் பொறியின் குணம் இலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.

இந்த குறளுக்கு உரை வகுத்த பரிமேலழகர் எட்டு குணங்களாக...
1. தன்வயத்தன் ஆதல்,
2. தூய உடம்பினனாக இருத்தல்,
3. இயற்கை உணர்வினன் ஆதல்,
4. முற்றும் உணர்தல்,
5. இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்குதல்,
6. பேரருள் உடைத்தல்,
7. முடிவில்லாத ஆற்றல் உடைமை,
8. வரம்பு இல்லாத இன்பம் உடைத்தல். ஆகியவற்றை கூறுகின்றார்.

மேற்குறிப்பிட்ட இவைகளையே சிவபெருமானின் எட்டு குணங்களாக சைவ சித்தாந்தமும் கூறுகின்றது.
-------    ---------    --------
எட்டு வீரட்டான தலங்கள் :
பிரம்மா, அந்தகாசுரன், திரிபுர அசுரர்கள், தட்சன், ஜலந்தரன், மன்மதன், காலன், கஜமுகாசுரன் ஆகியோரின் ஆணவத்தை அடக்கி, ஆட்கொண்டவை அட்ட வீரட்டான தலங்கள் என்று அழைக்கப்படுகிறது. அவை...

1. திருக்கண்டியூர் - பிரமனுடைய தலையைக் கொய்து செருக்கழித்த தலம்

2. திருக்கோவலூர் - அந்தகாகரனை வதம் செய்த தலம்.

3. திருவதிகை - திரிபுரத்தை எரித்த இடம்.

4. திருப்பறியலூர் - தக்கன் தலையைத் தடிந்த தலம்.

5  திருவிற்குடி - சலந்தராசுரனை வதைத்த தலம்.

6. திருவழுவூர் - கஜமுகாசுரனைக் கொன்று தோலை உரித்துப் போர்த்திய தலம்

7. திருக்குறுக்கை - மன்மதனை எரித்த தலம்.

8. திருக்கடவூர் - மார்க்கண்டேயனைக் காத்துக் கூற்றுவனை உதைத்த தலம்.
-------    ---------    --------
மேலும் இவற்றிற்கு மகுடம் வைத்தாற்போன்று திருவாரூர் தலத்தில் பெருமான் தோன்றிய காலம் எப்போதோ என்று வியந்து அப்பர் சுவாமிகள் அருளிய "ஒருவனாய் உலகேத்த நின்ற நாளோ" பதிகத்தின் ஒரு பாடலில் 9ம் பாடலில்...

புகை எட்டும் போக்கெட்டும் புலன்கள் எட்டும்
பூதலங்கள் எட்டும் பொழில்கள்  எட்டும் 
கலை எட்டும் காப்பு எட்டும் காட்சி எட்டும் கழல்
சேவடி அடைந்தார் களைகண் எட்டும்
நகை எட்டும் நாள் எட்டும் நன்மை எட்டும் நலம்
சிறந்தார் மனத்தகத்து மலர்கள் எட்டும்
திகை எட்டும் தெரிப்பதற்கு முன்னோ பின்னோ
திருவாரூர்க் கோயிலாக் கொண்ட நாளே.

புகை எட்டும் 
போக்கெட்டும் 
புலன்கள் எட்டும்
பூதலங்கள் எட்டும் 
பொழில்கள்  எட்டும் 
கலை எட்டும் 
காப்பு எட்டும் 
காட்சி எட்டும் 
கழல் சேவடி அடைந்தார் களைகண் எட்டும்
நகை எட்டும் 
நாள் எட்டும் 
நன்மை எட்டும் 
நலம் சிறந்தார் மனத்தகத்து மலர்கள் எட்டும்
திகை எட்டும் தெரிப்பதற்கு முன்னோ பின்னோ திருவாரூர்க் கோயிலாக் கொண்ட நாளோ என்று வியந்து பாடுகிறார். அவைகளை விரித்து காண்போம்.

புகை எட்டும் - உயிர் புகக் கூடிய எட்டு பிறவிகள்.
மிகு, நகு என்பவை ஐகாரம் பெற்று மிகை, நகை என வருதல்போல "புகு" என்பது ஐகாரம் பெற்று "புகை" என பயின்று வந்துள்ளது. 
பொதுவாக உயிர்கள் ஏழு வகையான பிறவிகளை எடுப்பதாக கூறுவர். ஆனால் இங்கே அப்பர் சுவாமிகள், ஏழு வகையான பிறப்புகள் அல்லாமல் நரகர் என்ற நிலையையும் ஒரு பிறப்பாக கருதி எட்டு பிறவிகள் என்று கூறுகின்றார்.
"நரகரைத் தேவுசெய்வானும்..." (4-4-2)

எட்டு பிறவிகளாவன - தேவர், மனிதர், விலங்குகள், பறவைகள், ஊர்வன, நீர் வாழ்வன, தாவரங்கள் மற்றும் நரகர் என்பன.
-------    ---------    --------
போக்கு எட்டும் - போக்கு - குற்றம்.
எட்டு வகையான குற்றங்கள். அவை
1. அறியாமை,
2. மயக்கம்,
3. யான் என்கிற அகங்காரம்,
4. எனது எனப்படும் மமகாரம்,
5. விருப்பு,
6. வெறுப்பு,
7. நல்வினை மற்றும் 
8. தீவினை ஆகிய எட்டும் உயிருக்கு உள்ள குற்றங்களாகும்.

நல்வினை குற்றமாக கருதப்படுவதன் காரணம், நல்வினை அடுத்த பிறப்புக்கு வழி வகுப்பதால் தீவினையை இரும்புச் சங்கிலிக்கும் நல்வினையை பொன் சங்கிலிக்கும் ஒப்பிட்டு பொன்னாக இருப்பினும், இரும்பாக இருப்பினும் இரண்டின் தன்மையும் ஒன்றாகும்.
-------    ---------    --------
புலன்கள் எட்டும் - ஐந்து புலன்கள் முதலாய இருபத்து நான்கு தத்துவங்களை ஆன்ம தத்துவம் என்று ஒரு கூட்டமாக சொல்வார்கள். இந்த இருபத்து நான்கு தத்துவங்களை சுருக்கி எட்டு தொகுப்பாக கூறுவதும் வழக்கம். அப்பர் பிரான், புலன்கள் முதலாக உள்ள இந்த எட்டு தொகுப்புகளை, புலன்களின் முதன்மை கருதி புலன்கள் எட்டு என்று இங்கே கூறுகின்றார். 

எட்டு புலன்களாவன: 
புலன் முதலிய கருவிகள். அவை உணரும் போது புலன் முதலாக கொண்டே உணரப்படுவதினால் அவையும் புலன்கள் ஆகும்.

சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்றைந்தின் வகை தெரிவான் கட்டே உலகு.
குறள் - 27.
என திருவள்ளுவ நாயனாரும் புலன்களையே எடுத்து இயம்பினார்.

ஆன்மதத்துவம் - 24.

1. ஐம்பூதங்கள் - நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்.

2. கன்மேந்திரியங்கள் 5 - வாய், கை, கால், எருவாய், கருவாய்.

3. ஞானேந்திரியங்கள் 5 - மெய், வாய், கண், மூக்கு, செவி.

4. தன்மாத்திரைகள் 5 - சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்.

5. அந்தக்கரணங்கள் 4 - மனம், புத்தி, சித்தம், அகங்காரம்.
-------    ---------    --------
பூதலங்கள் எட்டும் - மேல் உலகங்கள் ஏழுடன் நிலவுலகத்தையும் இணைத்து எட்டு உலகங்கள், கீழுலகங்கள் ஏழுடன் நிலவுகத்தையும் சேர்த்து எட்டு உலகங்கள் ஆகும். "கச்சியப்ப சிவாச்சாரியார் கந்தபுராணம் அண்டகோசப் படலத்தில் இதனை விவரித்து அருளியுள்ளார்."

பூமிக்கு மேலே உள்ள 7 உலகங்கள் :

1) சத்தியலோகம் - பிரம்மன்,
2) தபோலோகம் - தேவதைகள்,
3) ஜனோலோகம் - பித்ருக்கள்,
4) மஹர்லோகம் -முனிவர்கள்
5) சுவர்லோகம் சொர்க்கம்-இந்திரன் மற்றும்
தேவர்கள்
6) புவர்லோகம்-கிரகங்கள், நட்சத்திர தேவதைகள்,
7) பூலோகம் மனிதர்கள், விலங்குகள்.

பூமிக்கு கீழே 7 உலகங்கள் :

1) அதல லோகம், காமுகர்கள்
2) விதல லோகம் அரக்கர்கள்
3) சுதலலோகம் - மகாபலி,
4) தலாதல லோகம் - மாயாவிகள்
5) மகாதல லோகம் - அசுரர்கள்
6) ரஸாதல லோகம் - அசுர ஆசான்கள்.
7) பாதாள லோகம் - வாசுகி முதலான பாம்புகள்.
-------    ---------    --------
பொழில்கள்  எட்டும் - இறைவன் படைத்தும், காத்தும், அழித்தும் கரந்தும் விளையாடும் இடமாகவும், உயிர்கள் போக்கும், வரவும் புரிவதற்கு இடமாகவும் திகழ்பவை.
பொழில்கள் - தீவுகள். அவை எட்டு ஆகும்.
நாவல், சாகம், குசை, கிரௌஞ்சம், சால்மலி, கோமேதகம், புட்கரம் மற்றும் தேவர் உலகம் ஆகியவை எட்டு தீவுகள்.
-------    ---------    --------
கலை எட்டும் - மேலே குறிப்பிட்ட எட்டு பொழில்களைச் சுற்றி அமைந்துள்ள கடல்கள் அந்த தீவுகளுக்கு ஆடை போன்று அமைந்திருப்பதால், கடல் என்று கூறாது கலை என்று கூறினார்.
எட்டு கடல்களாவன - உவர்க்கடல், பாற்கடல், தயிர்க்கடல், நெய்க்கடல், கருப்பஞ்சாற்றுக் கடல் தேன் கடல், நன்னீர்க்கடல், மற்றும் சக்கரவாக மலையைச் சூழ்ந்துள்ள பெரும்புறக் கடலோடு எட்டாகும்.
-------    ---------    --------
காப்பு எட்டும் - காப்பு என்பதற்கு அரண் என்று பொருள். இந்த எட்டு கடல்களைச் சூழ்ந்த மலைகள் எட்டும் எட்டு அரண்களாக கருதப்படுகின்றன. நிடதம், ஹேமகூடம், இமாசலம், நீலம், சுவேதம், சிருங்கவான், மாலியவான், கந்தமாதனம் ஆகிய மலைகள் எட்டு மலைகளாகும்.
-------    ---------    --------
காட்சி எட்டும் - பொழில்கள் எட்டிலும் காணப்படும் எட்டு வேறு வேறு வகைப்பட்ட இயல்புகள் நிறைந்த காட்சிகள்.
-------    ---------    --------
கழல் சேவடி அடைந்தார் களைகண் எட்டும் - 
இறைவனின் திருக்கழல் சேவடி அடைந்தார் பெறும் பயனை களைகண் என்றருளியுள்ளார். அப்பயன்கள் புவலோகம், சுவலோகம், மகலோகம், ஜனலோகம், தபலோகம், சத்யலோகம், விஷ்ணுலோகம் மற்றும் உருத்திரலோகம் ஆகும். இவையெல்லாம் அவ்வுயிர்கள் பெரும் பதங்கள் ( பதவிகள் ) எனப்படும் புண்ணிய லோகங்கள் ஆகும். மீண்டும் வாரா பெருநிலையான வீட்டுலகம் என்னும் சிவலோகம் இவையனைத்திலும் மேலானதாக திகழ்வதாகும்.
-------    ---------    --------
நகை எட்டும் - நகை என்பது ஒளிவீசும் கோள்களையும் நட்சத்திரக் கூட்டங்களையும் குறிக்கும். இராகு, கேது கிரகங்கள் சுயமான ஒளிர்வதில்லை என்பதால் அவை இரண்டையும் தவிர்த்து சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி மற்றும் நட்சத்திரக் கூட்டங்கள் ஆகியவை நகை எட்டு ஆகும்.
-------    ---------    --------
நாள் எட்டும் - காலத்தின் கூறான நாழிகை, நாள், வாரம், பட்சம், மாதம், ருது, அயனம், வருடம் ஆகிய எட்டும் ஆகும். 
-------    ---------    --------
நன்மை எட்டும் - அறம், பொருள், இன்பம். வீடு என்னும் உறுதிப் பொருள் நான்கும், அவற்றிற்கு மறுதலையாக (எதிர் பொருளாக) உள்ள மறம், இன்மை, துன்பம், பிறப்பு என்னும் நான்கும் கூடிய எட்டுமாகும்.
-------    ---------    --------
நலம் சிறந்தார் மனத்தகத்து மலர்கள் எட்டும் - 
நலம் சிறந்தார் மனத்தகத்து எட்டு மலர்கள் என்று நம்மிடம் இருக்க வேண்டிய எட்டு குணங்களை அப்பர் பிரான் கூறுகின்றார். இவற்றை அகமலர்கள் என்று கூறுவார்கள். அவை 
கொல்லாமை, இரக்கம், ஐம்பொறிகளை அடக்குதல், பொறுமை, தவம், வாய்மை, அன்பு, அறிவு ஆகியன அந்த எட்டு மலர்கள் ஆகும்.
-------    ---------    --------
திகை எட்டும் - திகை என்பது திசை என்ற சொல்லின் திரிபு.
நேர்த்திசைகள் நான்கும், கோணத் திசைகள் நான்கும் சேர்ந்து எட்டு ஆகும். அவை கிழக்கு, தென் கிழக்கு, தெற்கு, தென்மேற்கு, மேற்கு, வட மேற்கு, வடக்கு, வட கிழக்கு ஆகிய எட்டு திசைகளாகும்.

Sunday, February 26, 2023

திருக்குரங்கணில்முட்டம் தலபுராணம்🌺🌺🌺

🌏பிறவி வினைகளைத் தீர்க்கும் வாலீஸ்வரர் திருக்கோவில்🌙🌺🌺🌺
      🔥அவன் அருளாலே அவன் தாள் பணிந்து🌺  பக்தியுடன்🙏 ...மாங்காடு மணிவண்ணன் பலராமன் அரும்பாக்கம் கிராமம் திருவண்ணாமலை மாவட்டம் ..... 🙏 🙏 🙏

மலையே சிவனாக காட்சி தரும் திரு அண்ணாமலை.
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை மாவட்டத்தில் பிறவி வினைகளைத் தீர்க்க அருட்பெருஞ்ஜோதி ஆகிய சிவபெருமான்  வாலீஸ்வரராக திருக்கோவில் கொண்டுள்ளார் 
வாலி குரங்கு வடிவிலும், இந்திரன் அணில் வடிவிலும், எமன் முட்டம் (காகம்) வடிவிலும் இறைவனை வழிபட்ட தலம்; ஆதலால்  குரங்கணில்முட்டம் என்ற பெயர் பெறலாயிற்று.
காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் பேருந்து சாலையில் பாலாற்றைத் கடந்து, 'தூசி' என்னும் கிராமத்தை அடைந்து, அங்கிருந்து 2-கி. மீ. சென்றால் இத்தலத்தை அடையலாம்.

#திருக்குரங்கணில்முட்டம் தலபுராணம்🌺🌺🌺

வாலி, இந்திரன், எமன் ஆகிய மூவரும், தங்களின் முன்வினைப் பயனால் பறவை மற்றும் விலங்கு களாக பிறக்க நேர்ந்தது. அதன்படி வாலி குரங்காகவும், இந்திரன் அணிலாகவும், எமன் காகமாகவும் உருவம் பெற்று வருந்தி வாழ்ந்து வந்தனர். தங்களுடைய வினைப்பயன் நீங்க ஜோதி வடிவான அண்ணாமலையாரை வேண்டி நின்றனர். காஞ்சிபுரத்திற்கு தெற்கே உள்ள சிவாலயம் சென்று வழிபட்டால், அவர்களுடைய வினைப் பயன் நீங்கி பழைய நிலைக்கு திரும்பலாம் என இறைவன் வழிகாட்டினார்.

அதன்படியே மூவரும் இங்கு வந்து  வழிபட்டு தங்கள் இயல்பு நிலையை அடைந்தார்கள் என்பது தலபுராணம். இப்படி குரங்கு, அணில், காகம் வழிபட்டு பேறு பெற்ற தலமாக திகழ்வது, குரங்கணில்முட்டம் வாலீஸ்வரர் எனும் சிவாலயமாகும். 
தொண்டை நாட்டில் பாடல் பெற்ற சிவத்தலங்களில் ஆறாவது தலமாக குரங்கணில்முட்டம் திகழ்கின்றது. கிருஷ்ணதேவராயர், சம்புவராயர் எனப் பல்வேறு மன்னர்களாலும் போற்றப்பட்ட தலமாகவும் இது விளங்குகின்றது.

கொய்யார் மலர்சூடி குரங்கணில் முட்டம்
கையால் தொழுவார் வினை காண்டல் அரிதே"

என்கின்றார் திருஞானசம்பந்தர்.

இத்தல இறைவனான வாலீஸ்வரர், மேற்கு நோக்கியபடி எளிய வடிவில் கம்பீரத்துடன் காட்சி தருகின்றார். இவரே 'கொய்யாமலர்நாதர்' என்றும், மலைமீது சுயம்புவாக தோன்றியதால் 'கொய்யாமலைநாதர்' என்றும் அழைக்கப்படுகின்றார். கருவறையில் வழக்கமாக காணப்படும் துவாரபாலகர்களுக்குப் பதிலாக, வலம்புரி விநாயகரும், முருகப்பெருமானும் அமைந்துள்ளனர். இத்தல இறைவனை வழிபட்டால், பிறவி வினைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.

இறைவனின் கருவறைக்கு வெளியே வலதுபுறம் அன்னையின் சன்னிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. அன்னையின் திருப்பெயர், 'இறையார் வளையம்மை' என்பதாகும். அன்னை சிறிய வடிவில் எழிலான கோலத்தில் தெற்கு நோக்கி காட்சி தருகிறாள். அன்னையின் பெயரை 'இறையார் வளையாளை ஓர் பாகத்து அடக்கி..' என்ற பாடல் வரிகளால் திருஞானசம்பந்தர் உறுதி செய்கிறார். இவ்வாலயத்தின் தல மரமாக இலந்தை மரமும், தீர்த்தமாக பிறைச்சந்திர வடிவில் காகம் தன் அலகால் கீரிய 'காக்கை மடு'வும் விளங்குகின்றன.

தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
அண்ணாமலை எம் அண்ணா போற்றி!
கண்ணாரமுதக் கடலே போற்றி!
மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடிபோற்றி🙏🙏🙏

பொதுவாகவே,மக்கள் அஷ்டமி அன்று எந்த நல்ல காரியமும் செய்ய மாட்டார்கள்.அதன் உண்மைக்காரணம் வேறு.

#அண்ணாமலை சிவமே
#அருணாச்சல சிவமே....
*அஷ்டமியில் எந்த நல்ல காரியமும் செய்யமாட்டோம். அதேசமயம் அஷ்டமி என்பது பைரவரை வழிபட உகந்த அற்புதமான நாள்.*

 வீட்டில் சுபகாரியம் நடத்தாத போதும் நல்ல நிகழ்வுகளை எதையும் நடத்தாத போதும், பைரவ வழிபாடு மட்டும் அஷ்டமியில் கடைப்பிடிக்கப்படுகிறது

பைரவருக்கு மிகவும் உகந்த நாள் அஷ்டமி என்கிறது புராணம்.

 பொதுவாகவே,மக்கள் அஷ்டமி அன்று எந்த நல்ல காரியமும் செய்ய மாட்டார்கள்.அதன் உண்மைக்காரணம் வேறு.

அனைத்து ஜீவராசிகளுக்கும் எல்லா ஐஸ்வர்யங்களையும் அள்ளித்தரும் பணியினை நிறைவேற்றுபவர்கள் அஷ்ட லட்சுமிகள்.சொர்ணபைரவரிடம்,சக்திகளைப் பெற்று தாங்கள் பெற்ற சக்தியைக் கொண்டு, உலக பக்தர்களுக்கு விநியோகம் செய்துவருகின்றனர் .

தாங்கள் பெற்ற சக்தி குறையாமல் இருப்பதற்காக, ஒவ்வொரு அஷ்டமியிலும் பைரவரை வழிபாடு செய்து தங்கள் சக்தியை பெருக்கிக் கொள்கின்றார்கள் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

.அஷ்டமிஅன்று, அஷ்டலட்சுமிகளே பைரவ வழிபாட்டில் ஈடுபடுவதால்,அவர்களால் அன்று நடைபெறும் நற்காரியங்களில் ஹோம, பூஜை, நியமங்களுக்கு வரமாட்டார்கள் என்பதால், அஷ்டமியில் நற்காரியங்கள் ஏதும் செய்வதில்லை என்றும் சொல்லப்படுகிறது. .

ஆகவே,அஷ்ட லட்சுமிகளே வழிபடும் அந்த அஷ்டமி நன்னாளில்,நாம் அனைவரும் நேரடியாக பைரவரை வணங்கிவந்தால், அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

தேய்பிறையை விட வளர்பிறை காலத்துக்கே முக்கியத்துவம் தருகிறோம். அதேபோல், அஷ்டமியன்று எந்த நிகழ்வுகளையும் தொடங்குவதில்லை. ஆனால்  அஷ்டமி என்பது பைரவருக்கு உகந்த நாள். இந்தநாளில் பைரவ வழிபாடு, துஷ்ட சக்தியையெல்லாம் விரட்டியடிக்கும்.

 நல்லவற்றையெல்லாம் நமக்குக் கொண்டுவந்து சேர்க்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

 இந்த அஷ்டமி நாளில், மறக்காமல் பைரவரை வழிபடுவோம். 

 நம் பாவங்களில் இருந்து நம்மை விலக்கி, நம் வாழ்வில் உள்ள தடைகளையெல்லாம் தகர்த்தருள்வார்...

#மகேஷ்வரன் அருளோடு ....

#ரமணர் திருவடிகளே
சரணம் சரணம்....

திருவிடைமருதூா் ஸ்ரீ மகாலிங்கசுவாமி பாிவாரத் தலங்கள். சோழநாட்டில் ஒரு சிவாலயம் போன்று இது அமைந்துள்ளது.

1)திருவிடைமருதூா் 
ஸ்ரீ மகாலிங்கசுவாமி பாிவாரத் தலங்கள்.
 சோழநாட்டில் ஒரு சிவாலயம் போன்று இது அமைந்துள்ளது.
------------------------------------------
1.திருவலஞ்சுழி- விநாயகா்.

2திருவேரகம் (சுவாமிமலை)- முருகன்.

3.திருவாவடுதுறை- நந்தியெம்பெருமான்.

4.திருவிடைமருதூா் _ மகாலிங்கசுவாமி.

5.சிதம்பரம்- நடராஜா்.

6.திருவாரூா்_ சோமாஸ்கந்தா்.

7.திருஇரும்பூளை
(ஆலங்குடி) தெட்சிணாமூா்த்தி.

8.சூாியனாா்கோயில்- நவக்கிரகம்.

9.சீா்காழி- பைரவா்.

10.திருவாப்பாடி- சண்டேசா்.
 
2)சப்தஸ்தான தலங்கள் :
--------------------------------------
1.திருவையாறு : 
திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூா், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம்.

2.திருக்குடந்தை : திருக்கலயநல்லூா், தாராசுரம், திருவலஞ்சுழி, சுவாமிமலை, கொட்டையூா், மேலக்காவோி.

3.திருச்சக்கராப்பள்ளி : அாியமங்கை ,சூலமங்கை, நந்திமங்கை, பசுபதிமங்கை, தாழைமங்கை, திருப்புள்ளமங்கை.

4.திருநீலக்குடி :
இலந்துறை, ஏனாதிமங்களம், திருநாகேச்சுரம், திருபுவனம், திருவிடைமருதூா், மருத்துவக்குடி.

3)முருகன் சந்நிதி விசேடத் தலங்கள் :
****************************
1.காஞ்சிக்குமரக்கோட்டம்.
2.திருக்கீழ்வேளூா்.
3.திருகொடிமாடச்செங்குன்றூா் (திருச்செங்கோடு).
4.திருக்கொடுங்குன்றம் (பிரான்மலை).
5.திருச்சிக்கல்.
6.திருப்பரங்குன்றம்.
7.திருப்புள்ளிருக்கு வேளூா்.

4)நடராஜா் கால் மாறி ஆடிய தலங்கள் :
************************
1.மதுரை- பாண்டிய மன்னருக்காக.
2திருக்கீழ்வேளூா் அகத்தியருக்காக.

5) ஆடல் வல்லாாின் அபிஷேகங்கள் ஆறு :
***********************
1.மாா்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரம் - உஷக்காலம்.
2. மாசிமாதம் சுக்லபட்ச சதுா்த்தசி திதி- காலசந்தி.
3.சித்திரை மாதம் திருவோண நட்சத்திரம்- உச்சிக்காலம்.
4.ஆனிமாதம் உத்திர நட்சத்திரம்- சாயரட்சை.
5.ஆவணி மாதம் சுக்லபட்ச சதுா்த்தசி திதி- இரண்டாங்காலம்.
6.புராட்டாசி மாதம் சுக்ல பட்ச சதுா்த்தசி திதி- அா்த்தசாமம்.

7)நால்வா் தில்லை கோயிலுக்குள் சென்ற வழி :
--------------------------------------
1.திருஞானசம்பந்தா் -
தெற்குக்கோபுர வாயில்.
2. திருநாவுக்கரசா் -
மேற்குக்கோபுர வாயில்.
3.சுந்தரா்- வடக்குக்கோபுரவாயில்.
4.மாணிக்கவாசகா் -
 கிழக்குக்கோபுர வாயில்.

8)காசிக்கு வாசி அதிகமான தலங்கள் :
------------------------------------
1.திருமுதுகுன்றம். 
2.திருஆலவாய்.

9)காசிக்கு வீசம் அதிகமான தலம்:
 திருக்குடந்தை.

10)காயாரோகணத் தலங்கள்:
--------------------------------
1.கச்சிக் காரோணம்
2.குடந்தைக் காரோணம்
3.நாகைக் காரோணம்.

11)தலத்திற்குள் தலம் அமைந்த தலங்கள் :
-------------------------------------
1.திருவாரூா் அரநெறி- திருவாரூா்.
2.மீயச்சூா்இளங்கோயில்- திருமீயச்சூா்.
3.திருப்புகலூா் வா்த்தமானீச்சரம்- திருப்புகலூா்.

12)நந்தி விலகிய தலங்கள் :
********************
1.திருப்பட்டீச்சரம்- சம்பந்தருக்காக.
2.திருப்புன்கூா்- நந்தனாருக்காக.
3.திருப்பூந்துருத்தி_ சம்பந்தருக்காக

13)நந்தி திரும்பி உள்ள தலங்கள்: 
**************************
1.சோழநாடு- திருவைக்காவூா்.
2 நடுநாடு- திருப்பெண்ணாகடம்
3.தொண்டைநாடு- திருவோத்தூா், திருவல்லம், வடதிருமுல்லைவாயில்.

4.நந்திக்கு கொம்பு ஒடிந்த தலம்_ திருவெண்பாக்கம்.
5.நந்திதேவா் நின்ற கோலம்- திருமாற்பேறு.
6.நந்திதேவருக்குத் திருமணம் நடக்கும் தலம்- திருமழபாடி.
 
14)இடிபூஜை நடைபெறும் தலங்கள்:
****************************
1.திருக்கழுக்குன்றம்.
2.திருவாட்போக்கி.

15)பஞ்சநாதம்:
*****************
1.விஸ்வநாதம்
2.சோமநாதம்
3.ஜகந்நாதம்
4.ராமநாதம்
5.வைத்தியநாதம்.

16)ஆதிசேஷன் பூசித்த தலங்கள் :
**************************
1.திருக்குடந்தை கீழ்கோட்டம் .
2.திருநாகேஸ்வரம்.
3.திருபாம்புரம் .
4.திருநாகைக்காரோணம்.

        திருச்சிற்றம்பலம்...

Saturday, February 25, 2023

ஆஞ்சநேயரின் பல வகையான வடிவங்கள்!!

ஆஞ்சநேயரின் பல வகையான வடிவங்கள்!!
ஆஞ்சநேயரின் வடிவங்களில், ஒன்பது வடிவங்கள் மிகவும் போற்றுதலுக்குரியதாக கூறப்படுகிறது. அவற்றை இந்தப் பகுதியில் பார்க்கலாம். 

பஞ்சமுக ஆஞ்சநேயர் : 

மயில் ராவணன் என்பவன், ராவணனுடனான யுத்தத்தின்போது பல மாய வேலைகளைச் செய்து ராமபிரானுக்கு தொந்தரவு செய்து வந்தான். அவனை அழித்து ராம-லட்சுமணரை மீட்பதற்காக, அனுமன் எடுத்த அவதாரமே 'பஞ்சமுக ஆஞ்சநேயர்" வடிவம் ஆகும்.

நிருத்த ஆஞ்சநேயர் : 

இந்த அனுமன், போருக்குச் செல்வது போன்ற தோற்றத்தில் காட்சி தருவார். ராம-ராவணப் போரின்போது, அசுரர்களுடன் மிக உக்கிரமாக போரிட்ட ஆஞ்சநேயரின் தோற்றம் இது. இவரை வணங்குவதால், வாழ்வில் ஏற்படும் இடர்கள் அனைத்தும் நீங்கும். 

கல்யாண ஆஞ்சநேயர் : 

அனுமன், சஞ்சீவி மலையைத் தூக்கிக் கொண்டு பறந்தபோது, அவரது வியர்வைத் துளி கடலில் விழுந்தது. அதனை மீன் வடிவில் கடலில் நீந்திக்கொண்டிருந்த தேவ கன்னி பருகியதால் அவளுக்கு ஓர் ஆண் குழந்தைப் பிறந்தது. அந்த தேவ கன்னியை, பின்னர் அனுமன் மணந்ததாக கூறுகிறது ஒரு கிளைக் கதை. இந்தக் கோலத்தில் இருக்கும் அனுமனே 'கல்யாண ஆஞ்சநேயர்" என்று அழைக்கப்படுகிறார். 

பால ஆஞ்சநேயர் : 

அஞ்சனை மகனாக, அழகான பாலகனாக, அவர் தாயோடு சேர்ந்து இருக்கும் கோலமே 'பால ஆஞ்சநேயர்" என்று சொல்லப்படுகிறது. இவரை துதித்தால் குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை. 

வீர ஆஞ்சநேயர் : 

ஒரு முறை முனிவர்களின் சாபத்திற்கு ஆளானார் அனுமன். அதனால் அவரது சக்திகள் அனைத்தும் அவருக்கு மறந்து போனது. இந்த நிலையில் சீதையை கண்டு வருவதற்காக அனுமனை, இலங்கைக்குப் போகச் சொன்னார் ராமன். அப்போது ஜாம்பவான், அனுமனுக்கு அவரின் சக்திகளைப் பற்றி எடுத்துக்கூற, தனது வீரமும், வலிமையும் நினைவுக்கு வந்து விஸ்வரூபம் எடுத்தார். அந்த வடிவமே 'வீர ஆஞ்சநேயர்" ஆகும்.

பக்த ஆஞ்சநேயர் : 

தன்னை வழிபடும் பக்தர்களை, இரு கரம் கூப்பி வணங்கும் தோற்றத்தில் இருப்பவரே 'பக்த ஆஞ்சநேயர்." ராமரை எங்கும் எதிலும் காண்பவர் அனுமன். அதன்படி ராமநாமம் சொல்லி தன்னை வணங்கும் பக்தர்களின் மனதிலும் ராமரைக் காண்கிறார் அனுமன். அதனாலேயே அவர் பக்தர்களை கரம் குவித்து வணங்குவதாக சொல்லப்படுகிறது. 

யோக ஆஞ்சநேயர் : 

ராமாயணத்தின் முடிவில் ராமநாமத்தை பூலோகத்தில் உள்ள மக்கள் சொல்வதைக் கேட்டு இன்புறுவதற்காக இங்கேயே தங்கிவிட்டார் அனுமன். ராமரின் நாமத்தை மட்டுமே கேட்கும் தொனியில் அவர் யோக நிஷ்டையில் ஆழ்ந்தார். இந்த வடிவத்தையே 'யோக ஆஞ்சநேயர்" என்கிறோம். இவரை ராம நாமம் சொல்லி வழிபட்டால் கேட்டவை கிடைக்கும்.

சிவ பிரதிஷ்டை ஆஞ்சநேயர் : 

ராவணனைக் கொன்றதால் ராமருக்கு பிடித்த பிரம்மஹத்தி தோஷத்தை போக்க காசியிலிருந்து சிவலிங்கத்தை கொண்டுவர சென்ற அனுமன் வருவதற்கு நேரம் ஆனதால், சீதை மணலில் செய்த லிங்கத்தைக் கொண்டு பூஜை செய்தார் ராமர். அதனால் வருந்திய அனுமனின் வாட்டத்தைப் போக்க, அனுமன் கொண்டு வந்த லிங்கத்தையும் பூஜித்து அருள் செய்தார் ராமபிரான். லிங்கத் திருமேனியை ஸ்தாபனம் செய்த வடிவில் காட்சி தருபவர் 'சிவ பிரதிஷ்டை ஆஞ்சநேயர்."

சஞ்சீவி ஆஞ்சநேயர் : 

ராவணனுடனான போரில் ராமருக்கு பேருதவியாக இருந்தவர் அனுமன். ஒருமுறை லட்சுமணன் போரில் மூர்ச்சை அடைந்தபோது, அவரை காப்பதற்காக சஞ்சீவி மலையையே பெயர்த்து எடுத்து வந்தவர் அனுமன். இப்படி சஞ்சீவி மலையை தூக்கிக் கொண்டு பறப்பது போன்ற தோற்றத்தில் இருப்பவரையே 'சஞ்சீவி ஆஞ்சநேயர்" என்கிறோம்.

_திருவலஞ்சுழி ஸ்வேத விநாயகர்!_கடல் நுரையால் செய்யப்பட்டு இந்திரனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மூர்த்தியே ஸ்வேத விநாயகர் என்ற வெள்ளைப் பிள்ளையார் ஆவார்

_திருவலஞ்சுழி ஸ்வேத விநாயகர்!_


கடல் நுரையால் செய்யப்பட்டு இந்திரனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மூர்த்தியே ஸ்வேத விநாயகர் என்ற வெள்ளைப் பிள்ளையார் ஆவார். இவரே இத்தலத்தின் சிறப்பு மூர்த்தியாவார். 

திருவலஞ்சுழியில் உள்ள தல விநாயகர் ஸ்வேத விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். தேவர்கள் திருப்பாற்கடலை கடையத் தொடங்கும் முன் விநாயக பூஜை செய்ய மறந்தார்கள். ஆகையல் தான் ஆலகால விஷம் பாற்கடலில் இருந்து வெளி வந்தது. 

அதனால் அவதிகளுக்கு உட்பட்ட தேவர்கள், தங்கள் தவறை உணர்ந்து, அந்த வேளையில் விநாயகரை ஆவாஹனம் செய்ய வேறு ஏதும் இல்லா நிலையில் பொங்கி வந்த கடல் நுரையை பிடித்து பிள்ளையாரை உருவாக்கி பூஜை செய்தனர். அதன் பின் விநாயகர் அருளால் எடுத்த காரியம் பூர்த்தி அடைந்து அமுதம் பெற்றார்கள்.

அந்த விநாயகர் மூர்த்தியைப் பிரதிஷ்டை செய்யத் திருவலஞ்சுழியே ஏற்ற இடம் என இங்கே பிரதிஷ்டை செய்து வழிபட்ட இந்திரன் ஒரு கோயிலும் கட்டினான். 

அந்தக் கோயிலில் இன்றும் இந்திரன் பூஜித்த அந்த விநாயகர் மூர்த்தி அருள் பாலிக்கிறார். இன்றும் ஒவ்வொரு விநாயக சதுர்த்தி அன்று தேவேந்திரன் வந்து விநாயகரை வழிபட்டுச் செல்வதாக ஐதீகம்.

தேவர்களால் உருவாக்கப்பட்ட இந்த விநாயகர் தான் திருவலஞ்சுழியில் உள்ள ஸ்வேத விநாயகர். மற்ற ஆலயங்களில் நடப்பது போன்ற அபிஷேகம் இவருக்கு இங்கே இல்லை. சுமார் 10 அங்குல உயரமே உள்ள இந்த வெள்ளைப் பிள்ளையாருக்கு புனுகு மட்டும் சாத்துவார்கள். 

மேலும் பச்சைக் கற்பூரத்தைக் குறிப்பிட்ட பக்குவத்தில் அரைத்து, அதை இந்த விநாகயரின் திருமேனியைத் தொடாமல் அவர் மேல் மெள்ள தூவி விடுவார் அர்ச்சகர். அதனால் இந்த விநாகயர் தீண்டாத் திருமேனி ஆவார். 

*விநாயகர் துதிக்கை வலப்பக்கம் சுழித்துள்ளதால் திருவலஞ்சுழி என இத்தலம் பெயர் பெற்றதென்றும் கூறுவர்*

இப்பிள்ளையார் உள்ள மண்டபம் இந்திரனால் அமைக்கப்பட்டது என்று புராணங்கள் கூறுகின்றன. சித்திரத் தூண்களும், கல்குத்துவிளக்கும் கொண்ட அழகான மண்டபமாக இது விளங்குகிறது. 

இச்சந்நிதியிலுள்ள கருங்கல் பலகணி நுணக்கமான சிற்ப வேலைப்பாடுடன் திகழ்கிறது. இத்தலம் திருமுறைத் தலம் என்பதைவிட வெள்ளை விநாயகர் தலம் என்ற பெயரிலேயே மிகவும் பிரசித்தி பெற்றுள்ளது.

Friday, February 24, 2023

அப்படி என்ன பெரிதாய்ச் செய்துவிட்டார் ராமானுஜர்?கேளுங்கள்....

அப்படி என்ன பெரிதாய்ச் செய்துவிட்டார் ராமானுஜர்?
கேளுங்கள்....
சுமார் 1000 வருடங்களுக்கு முன்பே பெண்களை ஆலய நிர்வாகத்தில் ஈடுபடுத்தி, சமூகமே அறியும் வண்ணம் பெண்களுக்குப் பல சமயப் பொறுப்புக்களைக்  கொடுத்தார்.

அத்துழாய்,ஆண்டாள்,பொன்னாச்சி,
தேவகி,அம்மங்கி,
பருத்திக் கொல்லை அம்மாள்,
திருநறையூர் அம்மாள்,
எதிராச வல்லி என்று எத்தனை எத்தனை பெண்கள் அவரது அரங்கத்துக் குழாமில்!
அவர் பெண் குலம் தழைக்க வந்த பெரும்பூதூர் மாமுனிகள்.
-----
என்ன செய்தார் ராமானுஜர்?
ஒரு இஸ்லாமியப் பெண்ணுக்கு இந்துக் கோயிலில் பூஜைகள்!
அரங்கன் காலடியில் துலுக்க நாச்சியார் பிரதிஷ்டை. கனவிலும் நினைத்துப் பார்க்க முடியுமா? அதுவும் சுமார் ஆயிரம் ஆண்டுக்கு முன்பு?

அறிவியல் யுகமான இன்றைக்கு எழுதினாலே, பலருக்குப் பிடிக்க மாட்டேன் என்கிறது! அதுவும் ஆயிரம் ஆண்டுக்கு முன்பு என்றால் சும்மாவா?
அரங்கனுக்கு லுங்கி கட்டி, ரொட்டி நைவேத்தியம் செய்வித்தாரே! எந்த சாஸ்திரத்தில் உள்ளது?
எந்த ஆகமத்தில் உள்ளது?
அவர் துலுக்க நாச்சியாரையும் கொண்டாடிய சமரச சன்மார்க்க வள்ளல்.
-------
என்ன செய்தார் ராமானுஜர்?
மேலக்கோட்டையில் தலித் ஆலயப் பிரவேசம் இன்றைக்கு வேண்டுமானால் அது பெரிய விஷயமில்லை. ஆனால் சுமார் 1000 ஆண்டுக்கு முன்னால்?
இன்றைக்கும் கண்டதேவி என்னும் ஊரில்  தலித்துக்கள் வடம் பிடிக்க முடியாமல், ஆயிரம் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. 

அரசே ஒன்றும் செய்யும் முடியாத நிலைமை!
ஆனால் ஆயிரம் ஆண்டுக்கும் முன்னால்...
காந்தியடிகள் “ஹரிஜன்” என்ற வார்த்தையை உருவாக்கும் முன்னால்…
மேலக்கோட்டையில் அவர்களை “திருக்குலத்தார்” என்று அழைத்து ஆலயத்தின் உள்ளே அரவணைத்துக் கொண்ட பெருந்தகை அவர்.
சாதி இல்லா இறைமையை சாதித்துக் காட்டிய இராமனுஜன் திருவடிகளே தஞ்சம்!
-----
என்ன செய்தார் ராமானுஜர்?
திருக்கச்சி நம்பிகளின்  சாதி பார்க்காது அவரை வீட்டுக்குள் உணவருந்த வைத்து, அவர் தன்னைச் சீடனாக ஏற்றுக் கொள்ளத் தயங்கினாலும், அவர் உண்டதைத் தானும் உண்டு, சீடத் தன்மையாவது ஏற்றிக் கொள்வோம் என்று எண்ணினார். 

அதனால் தன் ஆச்சாரம் மிக்க மனைவியால் குடும்பத்தில் குழப்பம்  ஏற்பட்டு
எம்பெருமானின்  அடியவருக்காக,
தனது குடும்ப வாழ்க்கையை விட்டு,
ஸ்ரீவைஷ்ணவத்தையும் சம்பிரதாயத்தையும் காக்க நின்ற உள்ளத்தை என்னவென்று சொல்லுவது?
-------
என்ன செய்தார் ராமானுஜர்? 
எங்கோ வயலில் வேலை செய்யும் ஒரு விவசாயி யாத்திரை போகும் போது, நான்கு ரோடு சந்திக்கும் சாலையில, காஞ்சிபுரம் செல்ல எந்த வழிப்பா?-என்று கேட்க அவரும் சரியான வழி சொன்னதற்கு
மோட்சத்துக்கு வழி காட்டி நிற்கிறான் வரதன் பேரருளாளன்.
அந்த வழிகாட்டியைக் காண எனக்கு வழிகாட்டிய விவசாயி இவன் என்று
ஒரு வேளாளனைக் கீழே வீழ்ந்து வணங்கிய பெருமகன் தான் ராமானுஜர்…
------
என்ன செய்தார் ராமானுஜர்?
எப்போதோ ஆண்டாள் பாடிய ஒரு பாட்டு...
“நூறு தடா அக்கார அடிசில்
வாய் நேர்ந்து பராவி வைத்தேன்”
அந்த வேண்டுதல் நிறைவேறாமல் வெறும் பாட்டோடு முடிந்து போயிருக்கும்!
"கோதை பொய் சொல்லி விட்டாள்!
சும்மா வேண்டிக் கொண்டாள்! வேண்டுதலை நிறைவேற்ற வில்லை!" என்ற பேர் வராது. 

அதைத் தவிர்க்க அண்ணன் பொறுப்பில் அந்த வேண்டுதலைக் காத்துக் கொடுத்தார்!
ஆண்டாளின் வேண்டுதலை நிறைவேற்ற வேண்டும் என்ற யோசனை யாருக்காவது தோன்றிற்றா?
வெறும் பாட்டாக மட்டும் பார்க்காது இருநூறு வருடங்களுக்குப் பிறகு
அதை பக்தியோடு  சுவாசிக்கும் உள்ளம் அவருடையது...
-----
என்ன செய்தார் ராமானுஜர்?
குழந்தைகள் ஆடும் “சொப்பு” விளையாட்டுப் பெருமாளை ஊரறிய கீழே விழுந்து கும்பிட்ட அந்த உள்ளம் வேறு யாருக்கு வரும்?
அரங்கன் ஆலயத்தில் ஆகம விதிகளை  ஏற்படுத்திய ராமானுஜர், அரங்கத்தில் காவிரிக் கரையில் ஆகமம் என்றால் என்னவென்று தெரியாத சிறிய குழந்தைகளின், சொப்பு விளையாட்டுப் பெருமாளுக்கு மரியாதை கொடுத்து விழுந்து வணங்கியது அந்த உயர்ந்த ஜீவன்.
------
என்ன செய்தார் ராமானுஜர்?
வேதத்துக்கு பாஷ்யமும் எழுத வல்ல வேதாந்த உள்ளம்! அதே சமயம், தமிழ் உணர்வால் அன்பினால் கரைந்து வாழ்ந்த ஆழ்வார் உள்ளம்!
இரு உள்ளங்களும் ஒருங்கே பெற்ற உடையவர் அவர்.
------
என்ன செய்தார் ராமானுஜர்? 
திருமலை திருப்பதியில்  எம்பெருமான் திருவேங்கடமுடையான்.
அவன் தமிழ்-முல்லைத் தெய்வமான மாயோன் திருமாலே என்று
புறநானூறு, கலித்தொகை., சிலப்பதிகாரம் என்று சங்க இலக்கியங்கள் வாயிலாகத் தரவு காட்டி, மற்ற வீண் கும்மிகளை அன்றே ஒழித்துக் கட்டிய பாங்கு கொண்டவர்.
--------
என்ன செய்தார் இராமானுஜர்?
இன்றைக்கு அனைத்து மடாதிபதிகளும், சொகுசு வாகனங்களில், பல்லக்கில், செல்கிறார்கள்! ஆனால் தன் வாழ்நாள் முழுவதும் அதாவது 120  வருடங்களும் கால்நடையாகவே அலைந்து அலைந்து 
ஸ்ரீ வைஷ்ணவத்தை வளர்த்த கால்கள் அவருடையது.
சோழன் துரத்தத் துரத்த ஓடிய கால்கள் அவை. 
மேலக்கோட்டை செல்வப் பிள்ளையின் சிலையைப் பெற  வடநாடு ஓடிய கால்கள் அவை.

திருப்பதியில் இருந்தது காளியா? சிவனா?  அல்லது முருகனா? என்று  வம்பு வந்த போது வயதான காலத்திலும் அங்கு ஓடிய கால்கள் அவை.
தி்ருக்கோட்டியூருக்கு 18 முறை நடையாய் நடந்த கால்கள் அவை, திரு மந்திர இரகசியம் அறிவதற்காக! 
அதைக் கோபுரத்தின் மேலேறி ஊருக்கே மந்திரத்தை வெட்ட வெளிச்சம் ஆக்கிய கால்கள் அவருடையது!
இவையெல்லாம் நம்மால் செய்ய முடியுமா?
இராமனுஜன் திருவடிகளே தஞ்சம்!

உய்ய ஒரு வழி| உடையவர் திருவடி||

🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

தட்சிணாமூர்த்தி என்பவர் வேறு.குரு பகவான் என்பவர் வேறு. இருவரும் ஒருவரல்ல.

அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம்-தட்சிணாமூர்த்தி என்பவர் வேறு.குரு பகவான் என்பவர் வேறு. 
இருவரும் ஒருவரல்ல.
ஆனால் நிறைய பேர் தட்சிணாமூர்த்தியும் 
குரு பகவானும் ஒருவர்தான் என்று நினைத்துக் கொண்டு வழிபாடு செய்கிறார்கள். 

உண்மையில் தட்சிணாமூர்த்திக்கும் குருபகவானுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. 

அது தொடர்பான விவரங்கள் வருமாறு:- தட்சிணாமூர்த்தி என்பவர் சிவவடிவம், குரு பகவான் என்பவர் கிரக வடிவம். 

இவர் சிவன், அவர் பிரகஸ்பதி. தட்சிணாமூர்த்தி என்பவர் முதலாளி, குரு-அதிகாரி. 

தட்சிணாமூர்த்தி சிவகுரு,
குரு தேவகுரு. 

தட்சிணாமூர்த்தி கல்லால மத்தின் கீழ் அமர்ந்து நான்மறைகளோடு ஆறு அங்கங்களையும் சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் என்ற நான்கு பிரம்மரிஷிகளுக்கு போதிப்பவர். 

குரு பகவான் நவகோள்களில் குரு என்ற வியாழனாக இருந்து உயிர்களுக்கு அவை முன்ஜென்மங்களில் செய்த நல்வினைதீவினைகளுக்
கான பலாபலன்களை இடமறிந்து காலமறிந்து கொண்டு சேர்ப்பவர். 

தட்சிணாமூர்த்தி 64 சிவவடிவங்களில் ஒருவர், குரு ஒன்பது கோள் தேவதைகளில் 5 ஆம் இடத்தில் அங்கம் வகிப்பவர். 

சிவன் தோன்றுதல் மறைதல் என்ற தன்மைகள் இல்லாதவர், 
குருவோ உதயம்-அஸ்தமனம் என்ற தன்மைகள் உடையவர். 

இத்தனை தத்துவ வேற்றுமைகளைக் கொண்டுள்ள இந்த இருதேவர்களையும் குரு என்ற ஒற்றைச் சொல்லை மட்டும் வைத்துக்கொண்டு அவர்தான் இவர் இவர்தான் அவர் என்று வாதிடுவது சரியல்ல... 

தட்சிணாமூர்த்தியை தட்சிணாமூர்த்தியாக (சிவகுருவாக) வழிபடுங்கள். 
சில ஆலயங்களில் தட்சிணாமூர்த்தியை குரு பகவான் என்றே மாற்றி விட்டார்கள்.

அதற்கே அனைத்து பரிகார பூஜைகளையும் செய்கிறார்கள். குருவுக்கு அணிவிக்கவேண்டிய மஞ்சள் துணியை தட்சிணா மூர்த்திக்கு அணிவிக்கிறார்கள். 

கடலை சாதம் போன்ற குருகிரக நைவேத்திய பொருள்களை தட்சிணாமூர்த்திக்கு
நைவேத்தியம்செய்கிறார்கள். 
குருப்பெயர்ச்சியன்று தட்சிணாமூர்த்தி சன்னதியில் ஹோமங்கள் அபிஷேக ஆராதனைகள், சாந்தி பரிகாரங்களை செய்கிறார்கள். 

இவையெல்லாம் தவறு என்று ஆன்மீக பெரியவர்கள் சொல்கிறார்கள். என்றாலும் தட்சிணாமூர்த்தியும் குருவும் ஒன்றே என்று பலரும் வாதிடுகிறார்கள். 

குருபகவான் என்பவர் தேவகுரு மட்டும் தானாம். ஆனால் தட்சிணாமூர்த்தி என்பவர் குருவுக்கும் குருவான பெரிய குருவாம். அதனால் குருவுக்குச் செய்வதை இவருக்குச் செய்வதில் தவறில்லை என்று வாதிடுகிறார்கள். சிலர் குருவுக்கு அதிதேவதை தட்சிணாமூர்த்தி என்று சொல்கிறார்கள். 

அதுவும் தவறு. 
குருவுக்கு அதிதேவதை இந்திரன். பிரத்யதி தேவதையோ பிரம்மதேவன். இதற்கான ஆதாரங்கள் பல தொன்னூல்களில் உள்ளன. 

எனவே தட்சிணாமூர்த்தியும் குரு பகவானும் ஒன்றே என நம்மை நாமே குழப்பிக் கொள்ளக்கூடாது...

ஒரே ஒருமுறை அண்ணாமலை கிரிவலம் செல்வதால் உண்டாகும் புண்ணியங்கள் என்ன தெரியுமா?

_*கிரிவலம்*_ 
ஒரே ஒருமுறை அண்ணாமலை கிரிவலம் செல்வதால் உண்டாகும் புண்ணியங்கள் என்ன தெரியுமா?

உங்களால் ஒரே ஒருமுறை அண்ணாமலை கிரிவலம் செல்ல முடிந்தது என்றால் அதற்குப் பின்னால் இருக்கும் ஆன்மீக ரகசியங்கள் எத்தனை தெரியுமா?

நீங்கள் இதுவரை அருள்மிகு உண்ணாமுலை சமேத அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் கோவிலைச் சுற்றிலும் அமைந்திருக்கும் கிரிவலப் பாதையில் (14 கி மீ) ஒரே ஒரு முறை வலம் வந்திருந்தால்,அதுவே அண்ணாமலை கிரிவலம் என்று பெயர்; அது பவுர்ணமி அன்று சென்றிருந்தாலும் சரி; விடுமுறை நாளில் சென்று இருந்தாலும் சரி; எந்த நாளாக இருந்தாலும் சரி;

பகலில் கிரிவலம் சென்று இருந்தாலும், இரவில் கிரிவலம் சென்று இருந்தாலும், வெயிலில் கிரிவலம் சென்று இருந்தாலும், கொட்டும் மழையில் கிரிவலம் சென்று இருந்தாலும்; பனியில் கிரிவலம் சென்று இருந்தாலும் சரி;

உலகத்தின் அனைத்து ஜீவன்களுக்கும் அப்பா தான் இந்த அண்ணாமலை என்று எண்ணியவாறு கிரிவலம் சென்று இருந்தாலும் சரி; கொஞ்சம் கூட பக்தி உணர்ச்சியே இல்லாமல் ஒருவர் கூப்பிட்டார்; அதனால் கிரிவலம் வந்தேன் என்று கிரிவலம் சென்று இருந்தாலும் சரி; ஜோதிடர் சொன்னதால் பரிகாரத்திற்காக கிரிவலம் சென்று இருந்தாலும் சரி!!!

3000 முறை மனிதப் பிறவிகள் எடுத்தப் பின்னர் தான் ஒரே ஒருமுறை அண்ணாமலை கிரிவலம் செல்ல ஒருவரால் முடியும்;

உங்களுடைய அப்பா, அம்மா மற்றும் அவர்களுடைய அப்பாக்கள், அம்மாக்கள், அவர்களுடைய அப்பாக்கள், அம்மாக்கள் என்று முன்னோர்கள் அவர்களுடைய இறப்பிற்குப் பிறகு, அவரவர் செய்த புண்ணியங்களுக்கு ஏற்றவாறு பித்ருக்கள் உலகத்திற்கு செல்கிறார்கள்;

அங்கே அவர்கள் பல கோடி முறை பூஜை செய்து, தவம் இருந்து பெற்ற வரத்தால் தான் உங்களால் ஒரே ஒருமுறை அண்ணாமலை கிரிவலம் செல்ல முடிந்திருக்கின்றது என்பது நம்மில் எத்தனை பேர்களுக்குத் தெரியும்?

அதுமட்டும் அல்ல; பல நூறு பிறவிகளாக நம்மைப் படைத்த அந்த ஈசனிடம் கோவிலுக்குச் சென்று உருகி,உருகி, அழுது, அழுது "அண்ணாமலைக்குச் செல்ல வேண்டும்; அண்ணாமலை கிரிவலம் வர வேண்டும்" என்று வேண்டியிருந்தால் மட்டுமே இப்பிறவியில் அருணாச்சலேஸ்வரர் என்ற அண்ணாமலையாரின் அருள் கிட்டும்; இதை நாம் உணர்வது கிடையாது;

பல விதமான விலங்குகள், செடி, கொடிகள் என்று 84,00,000 பிறவிகள் எடுத்துவிட்டு, இறுதியாக காளை பிறவி எடுக்கும் ஆத்மா, அதற்கு அடுத்த படியாக முதன் முறையாக ஆண் மனிதப் பிறவி எடுக்கும்; பசு பிறவி எடுக்கும் ஆத்மா, அதற்கு அடுத்த படியாக முதன் முறையாக பெண் மனிதப் பிறவி எடுக்கும்; அப்படி முதன் முறையாக மனிதப் பிறவி எடுக்கும் போது, அண்ணாமலையில் தான் ஈசன் பிறக்க வைக்கிறார் என்பது அகத்தீசர் நமக்கு போதிக்கும் அருணாச்சல ரகசியங்களில் ஒன்று!!!

நாம் கிரிவலம் செல்லும் போது இதுவரை நாம் எத்தனை முறை மனிதப் பிறவி எடுத்திருந்தோமோ அத்தனை பிறவிகளும் நம்முடன் கூடவே ஆவி வடிவில் கிரிவலம் வரும்; அதனால் தான் யார் இந்த பிறவியில் 1008 முறை அண்ணாமலை கிரிவலத்தை நிறைவு செய்கிறார்களோ, அவர்களுக்கு மறுபிறவி இல்லாத முக்தி கிடைக்கும் என்று அகத்தீசர் உபதேசித்து இருக்கிறார்;

1008 முறை கிரிவலம் முடிக்கும் போது நமது அனைத்து முற்பிறவி பாவங்களும், புண்ணியங்களையும் அண்ணாமலையார் ஈர்த்து நம்மை பரிசுத்தமான ஆத்மாவாக மாற்றிவிடுகிறார்; நமது அனைத்து முற்பிறவிகளின் மொத்த கர்மாக்களும் அக்னி மலையான அருணச்சலம் என்ற அண்ணாமலையார் எரித்துவிடுகிறார்;

ஒருவேளை, இப்பிறவியில் ஒரே ஒரு முறை கூட அண்ணாமலை கிரிவலம் வராமல் வாழ்ந்துவிட்டால், நமது வாழ்க்கையில் என்ன நடக்கும்?

போன நான்கு பிறவிகளில் செய்த பாவ புண்ணியத்தை மட்டுமே அனுபவிக்க இப்பிறவி செலவாகிவிடும்; போன நான்கு பிறவிகளில் செய்த புண்ணியங்கள் தான் பெற்றோர், உடன் பிறந்தோர், வாழ்க்கைத்துணை, வாரிசுகள், சொத்துக்கள், படிப்பு,

புகழ், வருமானம், லாபம், பெருமை, பிரபல யோகம் என்று கிடைக்கின்றன;

அதே போன நான்கு பிறவிகளில் செய்த பாவங்கள் தான் ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, கண்டச்சனி காலத்தில் எதிர்கொள்ளும் நோய், அவமானங்கள், கடன், வம்பு வழக்குகள், மாந்திரீகத்தால் எவனுக்காவது/எவளுக்காவது அடிமையாக இருத்தல், விரக்தி மனப்பான்மை, தற்கொலை எண்ணங்கள், ஏமாறுதல், துரோகத்தால் துவண்டு போகுதல், பணம் இருந்தும் சாப்பிட முடியாமல் தவித்தல், சுய இன்பத்தால் உடல் நலத்தைச் சீரழித்தல், ஆங்கில மருத்துவத்தினால் உண்டாகும் பக்கவிளைவுகள், விபத்துக்களால் உண்டாகும் உடல் உறுப்புச் சேதாரம், தெய்வங்களைப் பழித்துப்பேசுதல் அல்லது கேலி செய்தல்=அதன் மூலமாக மேலும் பல கொடூரமான பாவவினைகளை உருவாக்கிடுதல் போன்றவைகள் உண்டாகின்றன;

பல கோடி கர்மவினைகள் ஒரே ஒரு அண்ணாமலை கிரிவலத்தினால் தீர்கின்றன; அதே சமயம், இன்னும் பல ஆயிரம் கோடி கர்மவினைகளை நாமே முற்பிறவிகளில் உருவாக்கி வைத்திருக்கிறோம்;

உங்களில் சிலருக்கு இந்த கிரிவலம் எளிமையானதாக இருக்கும்; பலருக்கு கடினமானதாக இருக்கும்; சிலருக்கு கிரிவலம் செல்லும் போதே வயிற்று உபாதைகள், காலில் அடிபட்டு ரத்தம் வருதல், தொடர்ந்து நடக்க முடியாத அளவுக்கு மயக்கம் வருதல் போன்றவைகள் ஏற்படும்; இவையெல்லாம் இனி வரும் காலங்களில் உங்களுக்கு வர இருக்கும் விபத்து, அறுவை சிகிச்சை போன்றவைகளுக்கு மாற்றாக அருணாச்சலேஸ்வரர் தரும் பரிகாரம் ஆகும்;

மிகவும் அபரிதமான தெய்வீக சக்திகளை ஒரே ஒரு முறை கிரிவலம் சென்றாலே பெற முடியும்; அதை முறைப்படி பாதுகாப்பது நமது சுய கட்டுப்பாட்டில் தான் இருக்கின்றது;

பகலில் கிரிவலம் செல்பவர்கள் இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எம லிங்கம் வரையிலும் பசுக்கள் இருப்பதைக் காணலாம்; அதற்கு வாழைப்பழம் அல்லது அகத்திக்கீரை தானமாகத் தருவது இன்னும் பல கோடி புண்ணியத்தை அள்ளித் தரும்; நமது ஊரில் இருக்கும் கோவில் பகுதியில் அல்லது நமது தெருவில் இருக்கும் ஒரே ஒரு பசுவுக்கு (நாட்டுப் பசு தான் புண்ணியம் தரும்; ஜெர்ஸிப்பசுவால் ஒரு ஆன்மீக நன்மையும் ஒரு போதும் கிடையாது) ஒரு வாழைப்பழம் தானம் செய்தாலே பெரும் புண்ணியம்;அப்படிப் பட்ட சூழ்நிலையில் அண்ணாமலை கிரிவலப் பாதையில் ஒரே ஒரு பசுவுக்கு தானம் செய்தால் அது எப்பேர்ப்பட்ட புண்ணியம் என்பதை இக்கணத்தில் புரிந்து கொள்ளுங்கள்:

இரவில் கிரிவலம் செல்பவர்கள் கிரிவலப் பாதை முழுவதும் பைரவர்களை (நாய்களை) பார்க்கலாம்; அவைகளுக்கு உணவு பொருட்கள் தானம் செய்வது ஒரே நேரத்தில் பைரவரின் அருளையும், அண்ணாமலையாரின் ஆசிகளையும் அள்ளித் தரும் என்பதை மறக்காதீர்கள்;

நீங்கள் கிரிவலம் செல்லும் போது திடீரென மழை வந்தால், உடனே கட்டிடத்திற்குள் ஒதுங்க வேண்டாம்; விடாப்பிடியாக கிரிவலம் செல்லுங்கள்; மழை வரும் சமயத்தில் சில பல வருண சித்தர்கள் அப்போது கிரிவலம் வருவார்கள்: அதை நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களால் உணர முடியாது; ஆனால்,அவர்கள் நம்மை ஒரே ஒரு விநாடி பார்ப்பார்கள்; அதன் மூலமாக பெருமளவு கர்மாக்கள் நம்மிடம் இருந்து அருணாச்சலேஸ்வரரின் அருளால் ஈர்த்துக் கொள்வார்கள்;

மழை பொழியும் போது சுவாமி தரிசனம் செய்வது நமது ரகசியக் குற்றங்களை மன்னித்து அரிய பெரிய வரங்களை அள்ளித் தரும்; மழை பொழியும் போது கிரிவலம் சென்றாலே அருணாச்சலேஸ்வரராகிய அண்ணாமலையார் நமது உணர்ச்சி மேலீட்டால் செய்த பாவங்களை மன்னிக்கிறார் என்று தான் அர்த்தம்; ஆனால், இது எப்போதாவது யாருக்காவது மட்டுமே அருளாக கிடைக்கும்;

இந்த வரிகளை வாசித்துவிட்டு, மழை நாட்களாக தேர்வு செய்து கிரிவலம் சென்று கொண்டே, மீண்டும் உணர்ச்சி பூர்வமான தவறுகளைச் செய்தால் ஒரு போதும் அருணாச்சலேஸ்வரர் மன்னிக்க மாட்டார் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்;

ஓம் அகத்தீசாய நமஹ

ஓம் அருணாச்சலாய நமஹ

🌷🌷

சிவபுராணம் என்றால் என்ன? அதை தினமும் படிப்பதால் வரும் பயன்கள் என்ன?

சிவபுராணம் என்றால் என்ன? அதை தினமும் படிப்பதால் வரும் பயன்கள் என்ன?
ஹரி ஓம் ஷம்போ சிவ ஷம்போ மகாதேவ் அமைதியை தேடுங்கள் அன்பே சிவம்

மாணிக்கவாசகர்

சிவபுராணத்தின் பெருமைகள் :

1. தில்லையில் ஒரு ஆனி மாதம் ஆயில்யம் அன்று சிவபெருமான் அந்தணர் வடிவம் தாங்கி திருநீறு பூசி மாணிக்கவாசகர் தங்கியிருந்த மடத்திற்கு வந்தார்.

2. வந்தவர் மாணிக்கவாசகர் பெருமானிடம் தாங்கள் எழுதிய ' திருவாசகத்தை' நீங்கள் ஒருமுறை சொன்னால் அப்படியே ஓலைச்சுவடிகளில் எழுதிக் கொள்கிறேன் என்றார்.

3. மாணிக்கவாசகர் அமர்ந்து இருந்தபடியே 51 பதிகங்கள் கொண்ட திருவாசகத்தின் 658 பாடல்களையும் சொல்ல சொல்ல, பெருமான் எழுதிக் கொண்டார்.

3. எழுதிக் கொண்ட திருவாசகம் அடங்கிய அத்தனை ஓலைச் சுவடிகளையும் பெருமான் நடராசர் சன்னதி முன்பு வைத்து விட்டு மறைந்து விட்டார்.

4. மறுநாள் ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தன்று ஆலயத்திற்கு வந்த தில்லை வாழ் அந்தணர்கள் எனப்படும் தீட்சதர்கள் கூத்தபெருமான் சன்னதியில் நிறைய ஓலைச்சுவடிகளை கண்டு திகைத்து போயினர்.

5. ஓலைச் சுவடிகள் அத்தனையையும் எடுத்து பார்த்த தீட்சதர்கள் கடைசி ஓலையில் " மாணிக்கவாசகர் சொல்ல அழகிய சிற்றம்பலமுடையான்" எழுதியது என கையொப்பம் இடப் பட்டிருந்தது.

6. மீண்டும் திகைத்து போய் பெருமான் கருணையை வியந்த அந்தணர்கள் மாணிக்கவாசகர் தங்கி இருந்த இடம் சென்று நடந்தவற்றை கூறி அவரை அழைத்து வந்தார்கள்.

7. ஓலைச்சுவடிகளில் உள்ள ஓவ்வொரு திருவாசகப் பாடலையும் பார்த்து, கடைசியில் பெருமானது ஒப்பத்தையும் கண்டு பிரமித்தவராய் " ஆம் அடியேன் சொல்ல எழுதப் பட்டது தான்" என்று சொல்லி வந்தது பெருமான்தான் என நினைந்து உள்ளம் உருகி கண்ணீர் சொரிந்தார்.

8. தீட்சதர்கள், மாணிக்கவாசகரிடம் ஓலைச்சுவடியில் உள்ள திருவாசகத்திற்கு பொருள் கூறுமாறு வேண்டினர்.

9. மாணிக்கவாசகர் , மந்தகாசப் புன்னகையுடன் நடனக் கோலத்தில் இருக்கும் நடராசப் பெருமானைக் காட்டி " இப் பாடல்கள் அனைத்துக்கும் இவர்தான் பொருள் " என்றார்.

10. அப்படி மாணிக்கவாசகர் கூறியதும் பெருமான் அருகே ஒரு ஒளி தோன்றியது. அதை நோக்கிய வண்ணம் உள்ளே சென்ற மாணிக்கவாசகர் சிவபெருமானிடம் இரண்டறக் கலந்து விட்டார்.

11. ஆக , ஆனி - மகம் மாணிக்கவாசகரின் குருபூசை நாள் ஆகும்.

12 *சிறப்பு - 1* நமச்சிவாய என்னும் ஐந்தெழுத்தில் திருவாசகத்தின் முதல் பதிகமான சிவபுராணம் தொடங்குவது.

13. *சிறப்பு - 2* சிவபுராணத்தின் முதல் 6 வரிகள் *வாழ்க* என முடியும்.

14. *சிறப்பு - 3* அதை அடுத்த 5 வரிகள் *வெல்க* என முடியும்.

15. *சிறப்பு -4* அடுத்த 8 வரிகள் *போற்றி* என முடியும்.

16. இவ்வாறு 6-5-8 என அமைந்திருப்பது திருவாசகத்தின் 658 பாடல்களை குறிக்கிறது.

17. சிவபுராணத்தின் 32 வது வரியில் *மெய்யே உன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்* என பாடி இருப்பார்.
இது மாணிக்கவாசகர் 32 வயதில் முக்தி அடைந்ததை சூட்சமமாக குறிக்கும்.

18. திருவாசகத்தின் 18 வது வரியான *அவன் அருளாலே அவன் தாள் வணங்கி* என்பது படிப்பவர் அனைவரையும் உருக்குவதாக இருக்கும்.

19. ரமண மகிஷி , திருவண்ணிமலையில் தமது தாயார் உடல் நலமின்றி இருந்த கடைசி நாளில் அன்னை அருகே அமர்ந்து தொடர்ந்து திருவாசகம் படித்தார். அன்று இரவே அவரது அன்னை முக்தி அடைந்தார்.

20. காஞ்சி மகா பெரியவரிடம் குழந்தை இல்லாத ஒரு தம்பதி சென்று தங்கள் குறையை கூறினர்.

பெரியவர் திருவாசகப் புத்தகத்தை கொடுத்து ஒரு குறிப்பிட்ட பதிகத்தை தினம் படிக்க சொன்னார்.
அவர்களுக்கு வரிசையாக 6 குழந்தைகள் பிறந்தன.

21. இறந்த வீட்டில் கட்டாயம் சிவபுராணம் படிக்க வேண்டும்.

"புல்லாகி, பூடாகி, புழுவாய், மரமாகி, பல் விருகமாகி, பறவையாய் , பாம்பாகி , கல்லாய், மனிதராய், பேயாய், கணங்களாய்" என சுவை நிறைந்த திருவாசகத்தின் பெருமைகளை சொல்லிக் கொண்டே போகலாம்.

*சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்*ஓம் நமச்சிவாய..

சிவ வழிபாட்டிற்குரிய லிங்கங்கள்மூன்று வகைப்படும்.ஷணிக லிங்கம் ... இஷ்ட லிங்கம் ... ஆத்ம லிங்கம்

சிவ வழிபாட்டிற்குரிய லிங்கங்கள்
மூன்று வகைப்படும்.
ஷணிக லிங்கம் ... 
இஷ்ட லிங்கம் ... 
ஆத்ம லிங்கம்
ஷணிக லிங்கம்:
நாள்தோறும் சிவ வழிபாடு நடத்தி பின்பு கைவிடப்படும் லிங்கம் ஷணிக லிங்கம் எனப்படும். இதை செய்வது மிகவும் எளிதானது. இது 16 வகைப்படும். இதனை நாமே செய்யலாம். குருவிடமிருந்து லிங்கத்தை பெற இயலாதவர்கள் இதை செய்து வழிபடலாம்.

1. புற்றுமண் லிங்கம் ..... மோட்சம் தரும்
2. ஆற்றுமண் லிங்கம் ..... பூமிலாபம் தரும்
3. பச்சரிசி லிங்கம் ..... பொன், பொருள் தரும்
4. அன்ன லிங்கம் ..... அன்ன விருத்தி தரும்
5. பசுவின் சாண லிங்கம் ..... நோய்கள் தீரும்
6.வெண்ணெய் லிங்கம் ..... மன மகிழ்ச்சி தரும்
7. ருத்ராட்ச லிங்கம் ..... அகண்ட அறிவைத் தரும்
8. விபூதி லிங்கம் ..... அனைத்து செல்வமும் தரும்
9. சந்தன லிங்கம் ..... அனைத்து இன்பமும் தரும்
10. மலர் லிங்கம் ..... ஆயுளை அதிகமாக்கும்
11. தர்ப்பைப்புல் லிங்கம் ..... பிறவியிலா நிலை தரும்
12. சர்க்கரை லிங்கம் ..... விரும்பிய இன்பம் தரும்
13. மாவு லிங்கம் ..... உடல் வன்மை தரும்
14. பழ லிங்கம் ..... சுகத்தைத் தரும்
15. தயிர் லிங்கம் ..... நல்ல குணத்தைத் தரும்
16. தண்ணீர் லிங்கம் ..... எல்லா மேன்மைகளும் தரும்

இஷ்ட லிங்கம்:
மரகதம், படிகம், கருங்கல் இவற்றினால் செய்யப்பட்ட லிங்கத்தை குருவிடமிருந்து முறையாக பெற்று தன் ஆயுள் உள்ள வரைக்கும் தன்னிடமே வைத்துக்கொண்டு தினமும் தாம் செல்லுமிடமெல்லாம் கூடவே எடுத்து சென்று வழிபடும் லிங்கம் இஷ்ட லிங்கம் எனப்படும்.

1. இந்திரன் ..... பத்மராக லிங்கம்
2. குபேரன் ..... ஸ்வர்ண லிங்கம்
3. யமன் ..... கோமேதக லிங்கம்
4. வருணன் ..... நீல லிங்கம்
5. விஷ்ணு ..... இந்திர நீல லிங்கம்
6. பிரம்மன் ..... ஸ்வர்ண லிங்கம்
7. அஷ்ட வசுக்கள், வசுதேவர்கள் ..... வெள்ளி லிங்கம்
8. வாயு ..... பித்தளை லிங்கம்
9. அசுவினி தேவர்கள் ..... மண் லிங்கம்
10. மகா லட்சுமி ..... ஸ்படிக லிங்கம்
11. சோம ராஜன் ..... முத்து லிங்கம்
12. சாதுர்யர்கள் ..... வஜ்ஜிர லிங்கம்
13. பிராம்மணர்கள் ..... மண் லிங்கம்
14. மயன் ..... சந்தன லிங்கம்
15. அனந்தன் முதலான நாகராஜர்கள் .... பவள லிங்கம்
16. தைத்தியர்கள், அரக்கர்கள் ..... பசுஞ்சாண லிங்கம்
17. பைசாசங்கள் ..... இரும்பு லிங்கம்
18. பார்வதி .... வெண்ணெய் லிங்கம்
19. நிருதி ..... தேவதாரு மர லிங்கம்
20. யோகிகள் ..... விபூதி லிங்கம்
21. சாயா தேவி ..... மாவு லிங்கம்
22. சரஸ்வதி ..... ரத்தின லிங்கம்
23. யட்சர்கள் ..... தயிர் லிங்கம்

ஆத்ம லிங்கம்:
தூய மனத்துடன் மனப்பூர்வமாக வழிபட சிவபெருமான் கொண்ட திருவுருவம் ஆத்மலிங்கம் ஆகும். இவ்வகை லிங்கத்திற்கு மனப்பூர்வமான வழிபாடே போதுமானது. வெளிபுற வழிபாடு தேவையில்லை. மனப்பூர்வமாக செய்யப்படும் சிவ லிங்க வழிபாடு ஆத்ம லிங்க வழிபாடு எனப்படும்.

1. மண் ..... காஞ்சிபுரம் ..... ஏகாம்பர லிங்கம்
2. நீர் ..... திருவானைக்கா ...... ஜம்பு லிங்கம்
3. நெருப்பு ..... திருவண்ணாமலை ..... அருணாசல லிங்கம்
4. வாயு ..... திருகாளத்தி ..... திருமூல லிங்கம்
5. ஆகாயம் ..... சிதம்பரம் ..... நடராச லிங்கம்

பாவங்கள் போக்கும் உடையார் கோவில் திருக்களாவுடையார்தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் அம்மாபேட்டையில் இருந்து தஞ்சை செல்லும் சாலையில் ஒரு அலங்கார வளைவு உள்ளது. அதில் நுழைந்து தெற்கில் சென்றால் உடையார்கோவிலை அடையலாம்

பாவங்கள் போக்கும் உடையார் கோவில் திருக்களாவுடையார்...!
பத்தாம் நூற்றாண்டில் ராஜேந்திரச் சோழன், வெண்ணிப்போருக்கு தயாராகிக்கொண்டிருந்தார்
ஓரிடத்தில் களாச் செடிகள் நிறைந்திருந்த காடு இருந்தது. 

அங்கு தன்னுடைய ஆயுதங்களை மறைவாக வைத்தார். அப்படி வைக்கும்போது ஒரு சிவலிங்கம் அவனது கண்ணில் பட்டது.

அன்றிரவு மன்னனின் கனவில் தோன்றிய பிரம்மன், “படைப்புத் தொழிலால் உண்டான கர்வம் காரணமாக நான் பாவத்திற்குள்ளானேன். அந்த பாவம் நீங்க ஈஸ்வரரை வேண்டினேன். 

அவர் என்னை பூலோகத்திற்குச் சென்று சதுர்வேதங்களையும் தீர்த்தங்களாக அமைத்து, இங்குள்ள களாக் காட்டுக்குள் லிங்கத்தை வழிபட்டு வந்தால் பாவம் நீங்கி, மீண்டும் படைப்புத் தொழிலைச் செய்யலாம் என்று அருளினார். 

நான் வழிபாடு செய்த லிங்கத்தையே நீ இன்று கண்டாய். நீ நான்கு புறமும் தீர்த்தம் அமைத்து அதன் நடுவில் இந்த லிங்கத்தை பிரதிஷ்டை செய்து ஆலயம் எழுப்பி வழிபடு” என்று கூறி மறைந்தார்.

மன்னனும் அவ்வாறே செய்தார். திரிபுவன மாதேவிப் பேரேரி என்னும் பெரிய குளத்தை நான்கு புறமும் அமைந்தாற்போல் வெட்டினார். அதன் நடுவே ஆலயத்தை அமைத்து, சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்தார். 

களாச் செடிகளுக்கு இடையே இருந்து கிடைத்ததால் இத்தல இறைவனுக்கு ‘கரவிந்தீஸ்வரர்’ என்றும், இந்த ஊர் ‘கரவிந்தீஸ்வரம்’ என்றும் அழைக்கப்படலானது.

நான்கு வேதங்களும் நான்கு புறமும் நீராக அமைய அதன் நடுவே இத்தல இறைவன் வீற்றிருக்கிறார். எனவே திருக்களா உடையார் என்ற பெயரும் இறைவனுக்கு உண்டு. அதோடு அந்த பெயராலேயே இந்த ஊரும் ‘உடையார் கோவில்’ 
என்று தற்போது அழைக்கப்படுகிறது.

இத்தல இறைவனின் பெயர், திருக்களாவுடையார், 
கரவந்தீஸ்வரர் என்பதாகும். 
அம்மனின் திருநாமம், தர்மவல்லி. இந்த அன்னை, தர்மமே படர்கொடியாக விளங்குபவள். 

இந்த ஆலயத்தின் தல விருட்சமாக களாச்செடி உள்ளது. இந்தச் செடியோடு நன்னாரி கொடியும் படர்ந்திருப்பது வேறு எங்கும் காண முடியாத சிறப்பு.

ஆதியில் இந்த ஆலயம் ‘கரவிந்த வனம்’ என்று அழைக்கப்பட்டு வந்துள்ளது. இந்தக்கோவிலின் பெருமைகளைப் பற்றி கந்தபுராணத்தில் சொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தக் கோவிலின் கிழக்கில் உள்ள குளத்தின் பெயர், ‘ரிக் வேத தீர்த்தம்’. பங்குனி மாத பவுர்ணமி நாளில் இந்த குளத்தில் நீராடினால் புண்ணியங்கள் வந்து சேரும். 

தெற்கு பக்கம் உள்ள குளத்தின் பெயர், ‘யஜுர் வேத தீர்த்தம்’. ஆனி மாத வளர்பிறையில் வரும் அஷ்டமி திதியிலும், சூரிய மற்றும் சந்திர கிரகணங்களின் போதும் இந்த தீர்த்தத்தில் நீராடினால், செல்வ வளம் பெருகும்.

மேற்கு பகுதியில் உள்ளது ‘சாம வேத தீர்த்தம்’. அமாவாசை, பவுர்ணமி நாட்களிலும், திருவாதிரை நட்சத்திர தினத்திலும் இந்த தீர்த்தக் குளத்தில் நீராடி வந்தால், ஞானத்தை அடையலாம்.

வடக்கில் இருப்பது ‘அதர்வண வேத தீர்த்தம்’. இந்த தீர்த்தத்தில் நீராடினால் சகல சவுபாக்கியங்களும் பெறலாம். சந்ததிகளுக்கு நன்மைகள் வந்து சேரும். இந்த தீர்த்தத்தில் நீராடும்போது பஞ்சாட்சர மந்திரத்தை பாராயணம் செய்தால், துன்பங்களில் இருந்து விடுபடலாம்.

இந்த ஆலயத்தை வலம் வருவது, இந்த பூமியையே வலம் வந்ததற்கு சமம் என்று சொல்கிறார்கள். 

சித்ரா பவுர்ணமி அன்று இந்த நான்கு தீர்த்தங்களிலும் நீராடி வழிபாடு செய்து வந்தால் வேண்டிய வரத்தைப் பெறலாம். 

இந்த ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்திருக்கிறது. மூன்று பிரகாரங்கள் உள்ளன. முன் கோபுரம் 5 நிலைகளைக் கொண்டது. உள்கோபுரம் இரண்டு நிலைகளைக் கொண்டது.

இரண்டாம் பிரகாரத்தின் தெற்கில் நந்தவனம், கோவிலுக்கு வெளியே வசந்த மண்டபம், கோவிலுக்கு எதிரில் திருக்குளம், விநாயகர் மற்றும் முருகப்பெருமான் சன்னிதிகள் அமைந்திருக்கின்றன.

உட்பிரகாரத்தில் மேற்கு வரிசையில் முக்குறுணி விநாயகர், பிரம்மபுரீஸ்வரர், ஆனந்தபுரீஸ்வரர், இரட்டைப் பிள்ளையார், முருகன் சன்னிதி, வேதபுரீஸ்வரர், சதுர்வேதபுரீஸ்வரர், கஜலட்சுமி, பூலோகநாதர் சன்னிதிகளும், வடக்கில் திருக்களா விருட்சம், சண்டிகேஸ்வரர் சன்னிதியும், கிழக்கில் வாகன மண்டபம், மடப்பள்ளி அமைந்துள்ளன.

உள் மண்டபத்தில் மூலவர் கிழக்கு நோக்கியும், அம்மன் தெற்கு நோக்கியும் உள்ளனர். இந்த ஆலயத்தில் சரஸ்வதிக்கு அருகிலேயே ராகு-கேது இருக்கின்றனர்.

எனவே ராகு-கேது திசை நடைபெறுபவர்கள், இங்கு வந்து சரஸ்வதியை வழிபட்டால் தீமைகள் குறையும்.

பிரம்மதேவன் பூலோகம் வந்து கரவந்தீஸ்வரரை வழிபட்டதற்கு ஆதாரமாக, இத்தல சிவலிங்கத்தின் பாணத்தில் பிரம்மன் அமர்ந்த பூஜை செய்வது போன்ற அமைப்பு காணப்படுகிறது.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் அம்மாபேட்டையில் இருந்து தஞ்சை செல்லும் சாலையில் ஒரு அலங்கார வளைவு உள்ளது. அதில் நுழைந்து தெற்கில் சென்றால் உடையார்கோவிலை அடையலாம்.

Followers

மனிதனை மாமனிதனாக்குகிறது தியானம்

தூங்காமல் தூங்கி சுகம் பெறுதல் ஞான வழி என்ற தியானம் “தூங்கிக்கண்டார் சிவலோகமும் தம்உள்ளே தூங்கிக்கண்டார் சிவயோகமும் தம் உள்ளே ...