🌏பிறவி வினைகளைத் தீர்க்கும் வாலீஸ்வரர் திருக்கோவில்🌙🌺🌺🌺
🔥அவன் அருளாலே அவன் தாள் பணிந்து🌺 பக்தியுடன்🙏 ...மாங்காடு மணிவண்ணன் பலராமன் அரும்பாக்கம் கிராமம் திருவண்ணாமலை மாவட்டம் ..... 🙏 🙏 🙏
மலையே சிவனாக காட்சி தரும் திரு அண்ணாமலை.
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை மாவட்டத்தில் பிறவி வினைகளைத் தீர்க்க அருட்பெருஞ்ஜோதி ஆகிய சிவபெருமான் வாலீஸ்வரராக திருக்கோவில் கொண்டுள்ளார்
வாலி குரங்கு வடிவிலும், இந்திரன் அணில் வடிவிலும், எமன் முட்டம் (காகம்) வடிவிலும் இறைவனை வழிபட்ட தலம்; ஆதலால் குரங்கணில்முட்டம் என்ற பெயர் பெறலாயிற்று.
காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் பேருந்து சாலையில் பாலாற்றைத் கடந்து, 'தூசி' என்னும் கிராமத்தை அடைந்து, அங்கிருந்து 2-கி. மீ. சென்றால் இத்தலத்தை அடையலாம்.
#திருக்குரங்கணில்முட்டம் தலபுராணம்🌺🌺🌺
வாலி, இந்திரன், எமன் ஆகிய மூவரும், தங்களின் முன்வினைப் பயனால் பறவை மற்றும் விலங்கு களாக பிறக்க நேர்ந்தது. அதன்படி வாலி குரங்காகவும், இந்திரன் அணிலாகவும், எமன் காகமாகவும் உருவம் பெற்று வருந்தி வாழ்ந்து வந்தனர். தங்களுடைய வினைப்பயன் நீங்க ஜோதி வடிவான அண்ணாமலையாரை வேண்டி நின்றனர். காஞ்சிபுரத்திற்கு தெற்கே உள்ள சிவாலயம் சென்று வழிபட்டால், அவர்களுடைய வினைப் பயன் நீங்கி பழைய நிலைக்கு திரும்பலாம் என இறைவன் வழிகாட்டினார்.
அதன்படியே மூவரும் இங்கு வந்து வழிபட்டு தங்கள் இயல்பு நிலையை அடைந்தார்கள் என்பது தலபுராணம். இப்படி குரங்கு, அணில், காகம் வழிபட்டு பேறு பெற்ற தலமாக திகழ்வது, குரங்கணில்முட்டம் வாலீஸ்வரர் எனும் சிவாலயமாகும்.
தொண்டை நாட்டில் பாடல் பெற்ற சிவத்தலங்களில் ஆறாவது தலமாக குரங்கணில்முட்டம் திகழ்கின்றது. கிருஷ்ணதேவராயர், சம்புவராயர் எனப் பல்வேறு மன்னர்களாலும் போற்றப்பட்ட தலமாகவும் இது விளங்குகின்றது.
கொய்யார் மலர்சூடி குரங்கணில் முட்டம்
கையால் தொழுவார் வினை காண்டல் அரிதே"
என்கின்றார் திருஞானசம்பந்தர்.
இத்தல இறைவனான வாலீஸ்வரர், மேற்கு நோக்கியபடி எளிய வடிவில் கம்பீரத்துடன் காட்சி தருகின்றார். இவரே 'கொய்யாமலர்நாதர்' என்றும், மலைமீது சுயம்புவாக தோன்றியதால் 'கொய்யாமலைநாதர்' என்றும் அழைக்கப்படுகின்றார். கருவறையில் வழக்கமாக காணப்படும் துவாரபாலகர்களுக்குப் பதிலாக, வலம்புரி விநாயகரும், முருகப்பெருமானும் அமைந்துள்ளனர். இத்தல இறைவனை வழிபட்டால், பிறவி வினைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.
இறைவனின் கருவறைக்கு வெளியே வலதுபுறம் அன்னையின் சன்னிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. அன்னையின் திருப்பெயர், 'இறையார் வளையம்மை' என்பதாகும். அன்னை சிறிய வடிவில் எழிலான கோலத்தில் தெற்கு நோக்கி காட்சி தருகிறாள். அன்னையின் பெயரை 'இறையார் வளையாளை ஓர் பாகத்து அடக்கி..' என்ற பாடல் வரிகளால் திருஞானசம்பந்தர் உறுதி செய்கிறார். இவ்வாலயத்தின் தல மரமாக இலந்தை மரமும், தீர்த்தமாக பிறைச்சந்திர வடிவில் காகம் தன் அலகால் கீரிய 'காக்கை மடு'வும் விளங்குகின்றன.
தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
அண்ணாமலை எம் அண்ணா போற்றி!
கண்ணாரமுதக் கடலே போற்றி!
மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடிபோற்றி🙏🙏🙏
No comments:
Post a Comment