Saturday, September 30, 2023

எந்த கோவிலுக்கு சென்றால், என்ன பலன்கள் கிடைக்கும் என்று தெரியுமா?

அனைத்து சங்கடங்களும் நீங்கி வளமோடு வாழ்வோம்...!
எந்த கோவிலுக்கு சென்றால், என்ன பலன்கள் கிடைக்கும் என்று தெரியுமா?

1.பரிகாரத் தலங்கள் ஆயுள் பலம் வேண்டுதல்!!!

1.அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில்,திருக்கடையூர்,
2.அருள்மிகு எமனேஸ்வரமுடையார் திருக்கோவில், எமனேஸ்வரம், பரமக்குடி
3.அருள்மிகு காலகாலேஸ்வரர் திருக்கோவில், கோவில்பாளையம்,
4.அருள்மிகு சித்திரகுப்தசுவாமி திருக்கோவில், காஞ்சிபுரம்,
5.அருள்மிகு தண்டீஸ்வரர் திருக்கோவில், வேளச்சேரி,
6.அருள்மிகு ஞீலிவனேஸ்வரர் திருக்கோவில். திருப்பைஞ்ஞீலி.
7.அருள்மிகு வாஞ்சிநாதசுவாமி திருக்கோவில், வாஞ்சியம்,

2.ஆரோக்கியத்துடன் வாழ..

1.அருள்மிகு தன்வந்திரி திருக்கோவில், ராமநாதபுரம், கோவை.
2.அருள்மிகு பவஒளஷதீஸ்வரர் திருக்கோவில்,
திருத்துறைப்பூண்டி.
3.அருள்மிகு பிரசன்னவெங்கடேச பெருமாள் திருக்கோவில், குணசீலம்.
4.அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோவில், திருவான்மியூர்.
5.அருள்மிகு மகா மாரியம்மன் திருக்கோவில், வலங்கைமான்.
6.அருள்மிகு வைத்தியநாதசுவாமி திருக்கோவில், மடவார்விளாகம், ஸ்ரீவில்லிபுத்தூர்.
7.அருள்மிகு வைத்தியநாதசுவாமி திருக்கோவில், வைத்தீஸ்வரகோவில்.

3.எதிரி பயம் நீங்க..

1.அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவில், மேல்மலையனூர்.
2.அருள்மிகு அங்காளபரமேஸ்வரி அம்மன் திருக்கோவில், கல்மண்டபம் இராயபுரம் ,சென்னை.
3.அருள்மிகு காலபைரவர் திருக்கோவில், கல்லுக்குறிக்கி. கிருஷ்ணகிரி.
4.அருள்மிகு காளமேகப்பெருமாள் திருக்கோவில், திருமோகூர்.
5.அருள்மிகு காளிகாம்பாள் திருக்கோவில், தம்புசெட்டித்தெரு, சென்னை.
6.அருள்மிகு தட்சிணகாசி உன்மத்த காலபைரவர் திருக்கோவில்,
அதியமான்கோட்டை.
7.அருள்மிகு தில்லைகாளியம்மன் திருக்கோவில், சிதம்பரம்.
8.அருள்மிகு பிரத்யங்கராதேவி திருக்கோவில், அய்யாவாடி. கும்பகோணம்.
9.அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோவில், ஆணைமலை.
10.அருள்மிகு முனியப்பன் திருக்கோவில், பி.அக்ரஹாரம், தர்மபுரி.
11.அருள்மிகு ரேணுகாம்பாள் திருக்கோவில், படவேடு.
12.அருள்மிகு வெட்டுடையார் காளியம்மன் திருக்கோவில், கொல்லங்குடி

4.கடன் பிரச்சனைகள் தீர..

1.அருள்மிகு அன்னமலை தண்டாயுதபாணி திருக்கோவில், மஞ்சூர், ஊட்டி
2.அருள்மிகு கருமாரியம்மன் திருக்கோவில், திருவேற்காடு.
3.அருள்மிகு சாரபரமேஸ்வரர் திருக்கோவில், திருச்சேறை, கும்பகோணம்.
4.அருள்மிகு சிவலோகதியாகர், நல்லூர்பெருமணம், ஆச்சாள்புரம், சீர்காழி.
5.அருள்மிகு திருமலை-திருப்பதி ஸ்ரீநிவாசபெருமாள் திருக்கோவில், திருமலை.

5.கல்வி வளம் பெருக…

1.அருள்மிகு கரிவரதராஜ பெருமாள் திருக்கோவில், மாதவரம்.
2.அருள்மிகு தேவநாதசுவாமி திருக்கோவில், திருவஹிந்தீபுரம், கடலூர்.
3.அருள்மிகு மகாசரஸ்வதி அம்மன், கூத்தனூர். பூந்தோட்டம்.
4.அருள்மிகு வரதராஜபெருமாள் திருக்கோவில், செட்டிபுண்ணியம்.

6.குழந்தைப்பேறு அடைய…

1.அருள்மிகு ஏகம்பரநாதர் திருக்கோவில், காஞ்சிபுரம்.
2.அருள்மிகு சங்கரராமேஸ்வரர் திருக்கோவில், தூத்துக்குடி.
3.அருள்மிகு சிவசுப்ரமண்யசுவாமி திருக்கோவில், குமாரசாமிபேட்டை, தர்மபுரி.
4.அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோவில், மலைக்கோட்டை, திருச்சி.
5.அருள்மிகு பாலசுப்ரமணியசுவாமி திருக்கோவில், ஆயக்குடி, தென்காசி.
6.அருள்மிகு மயூரநாதசுவாமி திருக்கோவில், பெத்தவநல்லூர், ராஜபாளையம்.
7.அருள்மிகு முல்லைவனநாதசுவாமி திருக்கோவில், திருக்கருகாவூர்.
8.அருள்மிகு நச்சாடை தவிர்தருளியசுவாமி திருக்கோவில், தேவதானம், ராஜபாளையம்.
9.அருள்மிகு விஜயராகவபெருமாள் திருக்கோவில், திருபுட்குழி.

7.குடும்பத்தில் ஒற்றுமை ஓங்க…

1.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில், வில்லிவாக்கம்.
2.அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில், திருச்செங்கோடு.
3.அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவில், முத்தனம்பாளையம்.திருப்பூர்
4.அருள்மிகு கல்யாணவிகிர்தீஸ்வரர் திருக்கோவில், வெஞ்சமாங்கூடலூர்.
5.அருள்மிகு சங்கரநாராயணசுவாமி திருக்கோவில், சங்கரன்கோவில்.
6.அருள்மிகு நவநீதசுவாமி திருக்கோவில், சிக்கல்.
7.அருள்மிகு பள்ளிக்கொண்டீஸ்வரர் திருக்கோவில், ஊத்துக்கோட்டை,சுருட்டப்பள்ளி.
8.அருள்மிகு மனிஹடா ஹெத்தையம்மன் நாகராஜா திருக்கோவில், மஞ்சக்கம்பை.
9.அருள்மிகு மாரியம்மன்,காளியம்மன் திருக்கோவில், ஊட்டி
10.அருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோவில், பரிக்கல்.
11.அருள்மிகு வெக்காளியம்மன் திருக்கோவில், உறையூர்
12.அருள்மிகு ஸ்தலசயனப்பெருமாள் திருக்கோவில், மாமல்லபுரம்.

8.செல்வ வளம் சேர…

1.அருள்மிகு அனந்தபத்மநாபசுவாமி திருக்கோவில், அடையாறு.
2.அருள்மிகு அஷ்டலட்சுமி திருக்கோவில், பெசண்ட்நகர், சென்னை.
3.அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவில், தாரமங்கலம்.
4.அருள்மிகு பக்தவச்சலப்பெருமாள் திருக்கோவில், திருநின்றவூர்.
5.அருள்மிகு மாதவப்பெருமாள் திருக்கோவில், மயிலாப்பூர்.

9.திருமணத்தடைகள் நீங்க…

1.அருள்மிகு உத்வாகநாதசுவாமி திருக்கோவில், திருமணஞ்சேரி.
2.அருள்மிகு கல்யாணபசுபதீஸ்வரர் திருக்கோவில், கரூர்.
3.அருள்மிகு கல்யாணவேங்கடரமணசுவாமி திருக்கோவில், தான்தோன்றிமலை.
4.அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவில், தாரமங்கலம்.
5.அருள்மிகு சென்னமல்லீஸ்வரர், சென்னகேசவபெருமாள் திருக்கோவில், பாரிமுனை.
6.அருள்மிகு பட்டீஸ்வரர் திருக்கோவில், பேரூர். கோவை.
7.அருள்மிகு நித்யகல்யாண பெருமாள் திருக்கோவில், திருவிடந்தை.
8.அருள்மிகு வரதராஜபெருமாள் திருக்கோவில், நல்லாத்தூர்.
9.அருள்மிகு வீழிநாதேஸ்வரர் திருக்கோவில், திருவீழிமழலை.

10.தீவினைகள் அகன்றிட..

1.அருள்மிகு காலபைரவர் திருக்கோவில், குண்டடம்.
2.அருள்மிகு காளிகாம்பாள் திருக்கோவில், தம்புசெட்டி தெரு, சென்னை.
3.அருள்மிகு குறுங்காலீஸ்வரர் திருக்கோவில், கோயம்பேடு.
4.அருள்மிகு சரபேஸ்வரர் திருக்கோவில், திருபுவனம்.
5.அருள்மிகு சிங்காரத்தோப்பு முனீஸ்வரர் திருக்கோவில், நடுப்பட்டி, மொரப்பூர்.
6.அருள்மிகு பண்ணாரிமாரியம்மன் திருக்கோவில், பண்ணாரி.

11.நிலம், வீடு, மனை அமைந்து சங்கடங்கள் தீர…

1.அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோவில், திருப்புகலூர்.
2.அருள்மிகு தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோவில், தீர்த்தமலை, அரூர்.
3.அருள்மிகு பூவராகசுவாமி திருக்கோவில், ஸ்ரீமுஷ்ணம்.
4.அருள்மிகு வராகீஸ்வரர் திருக்கோவில், தாமல். காஞ்சீபுரம்.

12.நோய், நொடிகள் தீர…

1.அருள்மிகு இருதயாலீஸ்வரர் திருக்கோவில், திருநின்றவூர்.
2.அருள்மிகு தோரணமலை முருகன் திருக்கோவில், தோரணமலை.
3.அருள்மிகு பண்ணாரிமாரியம்மன் திருக்கோவில், பண்ணாரி.
4.அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோவில், திருவான்மியூர்.
5.அருள்மிகு வீர்ராகவர் திருக்கோவில், திருவள்ளூர்.
6.அருள்மிகு வீழிநாதேஸ்வரர் திருக்கோவில், திருவீழிமழலை.
7.அருள்மிகு வைத்தியநாதசுவாமி திருக்கோவில், மடவார் விளாகம். ஸ்ரீவில்லிப்புத்தூர்.

13.பெண்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண…

1.அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோவில், மலைக்கோட்டை, திருச்சி.
2.அருள்மிகு பாதாள பொன்னியம்மன் திருக்கோவில், கீழ்ப்பாக்கம், சென்னை.
3.அருள்மிகு மகாதேவர் திருக்கோவில், செங்கனூர்.கேரளா

14.முன்னோர் வழிபாட்டிற்கு..

1.அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோவில், பவானி.
2.அருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோவில், கொடுமுடி.
3.அருள்மிகு வரமூர்த்தீஸ்வரர் திருக்கோவில், அரன்வாயல். கவரப்பேட்டை.
4.அருள்மிகு  வீரராகவர் திருக்கோவில், திருவள்ளூர்.
6.அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோவில், ராமேஸ்வரம்.
7.அருள்மிகு திருப்பள்ளிமுக்கூடல். குருவிராமேஸ்வரம் திருக்கோவில், திருவாரூர்
8 காசி காசி விஸ்வநாதர்
9 பாபநாசம் திருநெல்வேலி மாவட்டம்
10 அருள்மிகு  சொறிமுத்து அய்யனார் கோயில்
பாபநாசம் திருநெல்வேலி மாவட்டம்!!!

புரட்டாசி சனி விரதம்*

*புரட்டாசி  சனி விரதம்* 
====================
தமிழ் மாதங்கள் பன்னிரண்டில் ஆறாவது மாதமான புரட்டாசிக்கு தனி மகிமை உண்டு. இது காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவுக்கு உகந்த மாதமாகும். ஒவ்வொரு மாதத்திலும் விரதநாட்கள் இருந்தாலும் புரட்டாசி முழுவதும் விரதநாட்கள்தான். சனி விரதம், நவராத்திரி விரதம் என தினம் தினம் திருவிழா கோலம்தான். திருமாலை சனிக்கிழமையில் வழிபடுவது மிகவும் சிறப்பென்கின்றனர் பெரியோர்கள். அதுவும் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பது இந்து மதத்தின் மரபு வழி நம்பிக்கை.

ஒன்பது கோள்களில் ஒன்றான புதன் கிரகத்திற்கு உரிய மாதங்களில் புரட்டாசியும் ஒன்று. புதனின் அதி தேவதையாக இருப்பவர் மஹாவிஷ்ணு. எனவேதான் விஷ்ணுவின் அருள்பெற உகந்த மாதமாக புரட்டாசி திகழ்கிறது. பெருமாளின் அம்சமாக கருதப்படும் புதனுடைய வீடு கன்னி. இந்த கன்னி ராசியில் சூரியன் அமர்வது புரட்டாசி மாதத்தில்தான். ஆகவே இந்த மாதத்தில் பெருமாளுக்கு வேண்டிய பஜனைகள் பிரம்மோற்சவங்கள் நடைபெறுகின்றன. புதனுக்கு நட்பு கிரகம் சனிபகவான். அதனால்தான் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமைகள் விஷேசமாக கொண்டாடப்படுகிறது.

புரட்டாசி மாதத்தை எமனின் கோரைப் பற்களுள் ஒன்றாக அக்னி புராணம் குறிப்பிடுகிறது. எமபயம் நீங்கவும், துன்பங்கள் விலகவும் புரட்டாசி மாதத்தில் காத்தல் கடவுளான விஷ்ணுவை வணங்குவது சிறப்பு. ஒவ்வொரு மாதமும் சனிக்கிழமைகளில் விரதம் கடைப்பிடிப்பது நல்லது. அப்படி விரதத்தினை மேற்கொள்ள முடியாதவர்கள், புரட்டாசி சனிக்கிழமைகளில் அவரவர் குடும்ப வழக்கப்படி மாவிளக்கு ஏற்றி, பெருமாளுக்குப் பூஜை செய்து வழிபட்டு, முடிந்த அளவு அன்னதானம் செய்து வந்தால் பெருமாளின் அருள் கிடைக்கும்.

சனிக்கிழமைகளில் பொதுவாக பெருமாளுக்கு விரதமிருப்பது வழக்கம் தான். இதில், புரட்டாசி மாத சனிக்கிழமைக்கென ஒரு விசேஷம் இருக்கிறது. புரட்டாசி சனிக்கிழமையில் தான் சனிபகவான் அவதரித்தார். அதன் காரணமாக, அவரால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது வழக்கத்தில் வந்தது. இந்த விரதத்தின் மகிமையை விளக்க கதை ஒன்று கூறப்படுகிறது.

பெருமாள் கோயில்களில் மிக உயர்ந்ததாக கருதப்படுவது திருப்பதி வெங்கடாசபதி கோயில். இங்கு பீமன் என்ற குயவர் வசித்துவந்தார். இவர் பெருமாள் பக்தர். ஆயுள் முழுவதும் சனிக்கிழமை விரதம் இருப்பதாக சங்கல்பம் எடுத்துக் கொண்டவர். ஆனால், இவரது ஏழ்மையின் காரணமாக எந்நேரமும் தொழிலில் மூழ்கிக் கிடப்பார்.

சனிக்கிழமைகளில் கோயிலுக்கு போக நேரம் இருக்காது. போனாலும் பூஜை முறையும் தெரியாது. தப்பித்தவறி போனால், பெருமாளே, நீயே எல்லாம் என்ற வார்த்தையை மட்டும் சொல்லிவிட்டு வந்து விடுவார். ஒருமுறை மனதில் ஒரு எண்ணம் உதித்தது. பெருமாளைப் பார்க்க கோயிலுக்கு போக நேரமில்லை. பெருமாளை இங்கேயே வரவழைத்தால் என்ன என்று யோசித்தார். படபடவென களிமண்ணால் ஒரு சிலையைச் செய்தார். பூ வாங்குமளவுக்கு அவரிடம் பணம் கிடையாது. எனவே, தான் வேலை செய்து முடித்த மீந்து விடும் மண்ணை சிறு சிறு பூக்களாகச் செய்து அதைக் கோர்த்து சிலையின் கழுத்தில் போட்டு வணங்கி வந்தார். அவ்வூர் அரசர் தொண்டைமானும் பெருமாள் பக்தர். அவர், சனிக்கிழமைகளில் தங்கப்பூ மாலை ஒன்றை அணிவிப்பார்.
ஒருமுறை இப்படி அணிந்து விட்டு, மறுவாரம் வந்தார். பெருமாளின் கழுத்தில் மண் பூ மாலை தொங்கியது. பட்டர்கள் தான் ஏதாவது தவறு செய்கிறார்களோ என குழப்பத்தில் சென்றார். அன்று கனவில் தோன்றிய பெருமாள், நடந்ததைச் சொன்னார். அந்த குயவரின் இல்லத்திற்கு நேரில் சென்ற அரசர், அவருக்கு வேண்டிய அளவு பொருளுதவி செய்தார். அப்பொருளைக் கண்டும் மயங்காமல், பெருமாள் பணியே செய்து வந்த குயவர் இறுதிக்காலத்தில் வைகுண்டத்தை அடைந்தார். பெருமாளின் ஆணைப்படி, அந்த பக்தரைக் கவுரவிக்கும் வகையில் இப்போதும், திருப்பதி ஏழுமலையானுக்கு மண்சட்டியில்தான் நைவேத்யம் செய்யப்படுகிறது.

புரட்டாசி மாதத் திருவோணம், திருப்பதி மலையப்ப சுவாமி தன்னை வெளிப்படுத்திக் கொண்ட தினம் என்றால், புரட்டாசி சனிக் கிழமையிலோ சனிபகவான் அவதரித்து புரட்டாசிக்கு முக்கியத்துவம் தந்துவிட்டார். அதன் காரணமாக சனிபகவானால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய, காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது மரபாகிவிட்டது. இதற்காகத்தான் புரட்டாசி சனி விரதத்தை பக்தர்கள் வழி வழியாக கடைபிடிக்கின்றனர்
🙏🙏🙏🙏🙏.

200க்கும் அதிகமான மகான்கள் ஒரே இடத்தில் சமாதியான சிவாலயம்.:---

200க்கும் அதிகமான மகான்கள் 
ஒரே இடத்தில் சமாதியான சிவாலயம்.:--- 
சுமார் 4000 ஆண்டுகளுக்குமுன் ஒரே இடத்தில் மன்னனால் 200க்கும் மேற்பட்ட மகான்களை சமாதி செய்துவைக்கப்பட்ட பிரசித்தமான சிவாலயம்,இன்று பராமரிப்பின்றி தனிநபர் ஒருவரின் அர்ப்பணிப்பால் புதுப்பிக்கபட்டு இருக்கிறது.

ஒரு சாதாரண சிவபக்தன் தான் குடியிருந்த வீட்டை விற்று கிடைத்தபணத்தில் ஆலய புணரமைப்பு பணிகளை செய்து வருகிறார்.

இவ்வாலயத்தின் சிறப்பை வார்த்தையால் சொல்ல இயலவில்லை.

ஆலயத்தில் எங்கு நின்றாலும் Cosmic Vibration நம்மை   ஆட்கொள்கிறது.

நமது வாழ்வியல் முறைகளை அங்குள்ள சிற்பங்கள் பறைசாற்றுகின்றன.

அதில் ஒரு சிற்பம்:தாயின் வயிற்றிலிருந்து குழந்தைபிறப்பை காட்டுகிறது,

அப்புறம்குழந்தை நிலைதடுமாறியிருக்கும் போது (இன்று Breach என்று சிசேரியன் செய்வார்கள்) மருத்துவம் பார்க்கும்   டெக்னிக்கூட தத்ரூபமாக தூணில் சிற்பமாக காட்டபட்டுள்ளது.

அதனை தொடும்போது 
நமது மூச்சுநிலை  பிராணாயாமத்தை 💥உணரலாம்

*ஒரு தூணில் பிராணயாம பயிற்சியை  விளக்கும் அரிய சிற்பம் உள்ளது.

ஒரு சிறப்பு என்னவென்றால் அந்த சிற்பத்தின்மீது கை வைத்தாலே நமக்கு மூச்சு மேலும் கீழும் இயங்கத்தொடங்கி பிராணயாமம் இயல்பாகவே நடக்கிறது.

இது சத்தியமான உண்மை.அனுபவித்தேன்.

இன்னும் பலசிறப்புகள் கொண்டுள்ள சிவாலயம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டால் சுவாரஸ்யம் குறைந்துவிடும்.

இப்பவும் பௌர்ணமி யாகபூஜை சிறப்பாக செய்யபடுகிறது.யாக ஜோதியில் பல்வேறு இறை ரூபங்கள் காட்சிகளாக கிடைத்துள்ளது.

Photo ஆலயபராமரிப்புசெய்யும் சிவனடியாரிடம் தொகுப்பாக இருக்கு.பாக்கியமுள்ளவர்கள் பௌர்ணமி ஹோமத்தில் பங்கெடுக்கலாம்
முடிந்தால் காணிக்கை செலுத்தலாம்.கட்டாயமில்லை.

ஆலய அமைவிடம்:-தென்காசி To மதுரை மார்க்கத்தில் கடையநல்லூருக்கு அடுத்த 4Km தூரத்தில் சுந்தரேஸ்வரபுரம் என்ற ஊரில் ஊருக்கு வெளியே அமைதியான தோப்புகளின் நடுவே அமைந்துள்ளது.

கடையநல்லூரிலிருந்து Auto வசதியுள்ளது.

சிவனருள் கிடைத்தவர்கள் பாக்கியவான்கள் தரிசிக்கலாம்.

ஓம் சிவாய வசி.நன்றி.

திருநெல்வேலி கடையநல்லூர் அருகில் உள்ள சுந்தரேஸ்வரபுரம் சுந்தரேஸ்வரர்
கோவிலில் சூரியன் மறைந்துவிட்ட போதும் பிரகாரத்தில் உள்ள விளக்குகளை
அணைத்துவிட்டால் வெளியே உள்ள ஒளி மூலவர் மீது விழுவதைக் காணலாம்.

ஓம் நமசிவாய

பகிர்வு நன்றி

அம்பிகை, மங்களாம்பாள் என்ற பெயருடன் விளங்கும் சில திருத்தலங்களை இங்கு பார்க்கலாம்.



ஸ்ரீ மங்களாம்பாளின் ஆறு நாமங்களின் பொருளும் மகிமையும்
“எழுபத்திரண்டு மந்திரங்களால் செய்த யந்திரத்தில் அமர்ந்திருப்பதால் தேவர்கள் ஸ்ரீமங்களாம்பாளை ‘மந்திரபீடேஸ்வரி’ எனக் கூறுகின்றனர்.
சர்வ மங்களத்துடன் கூடிய அழகு வாய்ந்தவளாக இருப்பதாலும், பக்தர்களுக்கு சர்வ மங்களத்தையும் அளிப்பதாலும் தேஜஸ்களுக்கெல்லாம் தலைவியாக (ஈஸ்வரியாக) இருப்பதாலும், ஸ்ரீ மங்களாம்பாள் என்று கூறுகின்றனர்.
கிடைக்கக்கூடிய பொருள்களையெல்லாம் எந்த மங்களாம்பாளின் அருளால் மனிதர்கள் அடைகின்றனரோ, அதனால் அந்த தேவியை ‘துர்கடார்த்தப்ரதா’ என முனிவர்கள் கூறுகின்றனர்.
பூதகணங்களால் தோஷமேற்பட்டவர்கள் அங்கு வந்ததும் அவை பயந்து ஓடுவதால், ‘கணபேதிநீ’ என்றும் ஸ்ரீ அம்பாளுக்குப் பெயர்.

எந்த மங்களாம்பாளைத் தரிசித்த மாத்திரத்தில் சுவாச காசம் முதலிய நோய்கள் பயந்து ஓடுகின்றனவோ அதனால் ‘ரோகவிபேதிநீ’ என்றும் அழைக்கின்றனர்.

உலகில் எந்த அபீஷ்டங்களைக் கோரி பிரார்த்திக்கின்றனரோ அவ்வப் பொருளை அளிப்பதால் அம்பாளை ‘ஸர்வேப்ஸதப்ரதா’ என்றும் அழைக்கின்றனர்.

சிம்ம ராசியில் சூரியன் இருக்கும்போது ஆவணி மாதத்தில் வெள்ளிக்கிழமையன்று ஸ்ரீஅம்பாளுக்கு அர்ச்சனை செய்கிறவன் சர்வ மங்களங்களையும் அடைந்து விடுகிறான்.
கும்பகோணத்தை மகாக்ஷேத்திரம் என்று ஞானிகள் உணர்கின்றனர். சர்வ மங்களத்தையும் அளிக்கும் மந்த்ர பீடேஸ்வரீ என்னும் ஸ்ரீ மங்களாம்பாள் பூமியில் இருக்கையில், அவளைத் தரிசிக்காதவர்கள் தாம் பிறவிக் குருடர்கள். கண்பார்வையற்றவர்கள் குருடர்கள் அல்லர்.
கற்பக விருட்சத்திற்கு ஒப்பான ஸ்ரீ மங்களாம்பாள் பூமியில் இருக்கும்போது அவளைத் தரிசிக்காத மனிதர்கள்தாம் பயனற்றவர்கள்.
ஸ்ரீ மங்களாம்பாளுக்கு அஷ்டபந்தனம் செய்து யார் கும்பாபிஷேகம் செய்கிறார்களோ யார் உதவுகிறார்களோ அவர்கள் பெரும் பதவிகள் பெற்று சகல சௌக்கியங்களையும் அனுபவிப்பார்கள். இதில் சந்தேகமில்லை.”
*****
பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க என்று பலரும் ஆசீர்வதிப்பார்கள். மங்களாம்பிகை என்ற பெயரில் அம்பாள் அருளும் சில தலங்களை நாம் தரிசித்தோம். மங்களாம்பிகை என்ற பெயரில் இன்னும் பல தலங்கள் இருக்கக்கூடும். காமாட்சி, மீனாட்சி, விசாலாட்சி, நீலாம்பாள், பாலாம்பாள் என்பது போல் காளிகாம்பாள் என்பவளும் அவளே. அவளை வணங்குவோம்.
வெள்ளிக்கிழமைகளில் நூற்று எட்டு செம்பருத்தி பூக்களைத் தொடுத்து மாலையாக ஸ்ரீமங்களாம்பாளுக்கு ஒரு முறையாவது அர்பணித்தால், அவன் குடும்பமும் சந்ததியும் வாழையடி வாழையாக விருத்தியாகும். இது நிச்சயம். செம்பருத்தி பூவால் கிரீடம் செய்து ஒரு வெள்ளிக்கிழமை ஸ்ரீ மங்களாம்பிகைக்குச் சூட்டினால் அவன் குபேரனுக்கு ஒப்பான ஐஸ்வர்யமுள்ளவனாக ஆகிறான். ஸ்ரீ பரமேச்வரமாகவும் ஆகிறான். கோரிய பொருள்களை அடைவதற்காக ஸ்ரீ அம்பாளுக்கு மஞ்சள் குங்குமத்தால் கால் நுனிகளில் அஷ்டோத்தரமோ சஹஸ்ரநாமமோ சொல்லி அர்ச்சித்தால் அவனுக்குக் கிடைத்தற்கரிய பொருள் கிட்டி விடும். இதில் சந்தேகம் வேண்டாம். வெள்ளிக்கிழமையன்று முடியாதவர்கள் இதர நாட்களிலும் செய்யலாம்.

மங்களம் தரும் மங்களாம்பிகை

மங்களம் என்றால் நிறைவு, பூரணமானது என்று அர்த்தம். கச்சேரியில் இறுதியாக மங்களம் பாடி முடித்தல் மரபு. நாதஸ்வரத்துக்கு மங்கள வாத்தியம் என்றே பெயர். மணமக்களை வாழ்த்தி எடுக்கும் ஆரத்தி, இறைவனைப் போற்றி எடுக்கும் ஆரத்தி மங்கள ஆரத்தி என்று பெயர் பெறுகிறது. எதிலும் சுபத்தை, நன்றாக முடித்தலை, மங்கள முடிவினை, மகிழ்ச்சியான எண்ணங்களைத் தரவல்லது மங்களம் என்ற வார்த்தையாகும். இது நெடுங்காலமாக மக்கள் மனத்தில் ஊறிப்போய் உறுதியாகிவிட்ட சொல்.

இறையனுபவத்தைப் பெற விழைந்த அன்பர்கள், பக்தர்கள் ஆன்றோரும் சான்றோரும் இறைவனுக்கும், குறிப்பாக இறைவிக்கும் மங்களம் என்று பெயரிட்டு அழைத்திருக்கிறார்கள். அம்பாளின் நூறு நாமாக்களிலும் ஆயிரம் நாமாக்களிலும் மங்களம், மங்களாம்பிகை என்ற பெயர் உள்ளது. காளி உபாசனையிலும் கூட இந்த நாமா வருகிறது. அந்தக் குன்றாச் சிறப்புடைய அம்பிகை, மங்களாம்பாள் என்ற பெயருடன் விளங்கும் சில திருத்தலங்களை இங்கு பார்க்கலாம்.

1. திருமங்கலக்குடி என்ற தலம் திருவிடைமருதூர் அருகில் உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்களில் இது 38-ஆவது ஆகும். இத்தலத்திற்குப் பஞ்ச மங்கள க்ஷேத்ரம் என்று பெயர். மங்கள விமானம், மங்கள விநாயகர், மங்களாம்பிகை, மங்களதீர்த்தம், மங்கலக்குடி என்ற ஊர்ப்பெயர். இக்கோவிலை மன்னனுக்குத் தெரிவிக்காமல் கட்டிய மந்திரிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. மந்திரியின் மனைவி இத்தல இறைவனையும் அம்பாள் மங்களாம்பிகையையும் தொழுது நின்றாள். அப்போது, இறைவி, இறைவனிடம் நிலைமையை இறைவனுக்கு உணர்த்தி மந்திரியை உயிர்ப்பித்ததாகத் தல வரலாறு. அம்பாள் கருணைக் கடலாகவே காட்சியளிக்கிறாள். இறைவன் பிராணநாதேஸ்வரர். இங்கு வெள்ளெருக்கு இலையில் சூடான தயிர் சாதம் பிரசாதமாகக் கொடுக்கப்படுகிறது. இது குஷ்டரோக நிவர்த்தித்தலம்.

2. திருக்குடந்தை என்ற கும்பகோணம் சைவ வைணவத் தலங்கள் பல நிறைந்த ஊர். சக்தி தலங்களின் தலையாய பீடம். இங்குள்ள கும்பேஸ்வரர் கோவிலில் அம்பாள் மங்களாம்பிகையாக அருளுகின்றாள். இவளைப் பார்த்த மாத்திரத்திலேயே நம் துயர் களையப்படும் அற்புத அழகுடன் இருக்கிறாள். தனிக்கோவிலாகக் கிழக்குப் பார்த்த சந்நிதி. உலகம் போற்றும் மகாமகம் நிகழும் ஊர். இந்த ஊரில் உள்ள கோவிந்த தீட்சிதர் ஏற்படுத்திய இராஜ வேத காவ்ய பாடசாலை 400 ஆண்டுகளுக்கும் முந்தையது. அவர் இத்தலத்திலும் அருகில் உள்ள பல ஊர்களிலும் பல திருத்தலங்களைக் கட்டியும் திருப்பணிகள் செய்தும் உள்ளார். இத்திருக்கோவிலில் உள்ளே நுழையும்போது திருஞானசம்பந்தரின் “திருஎழுகூற்றிருக்கை” என்ற பிரபந்தம் வண்ணச்சித்திரமாக எழுதப்பட்டுள்ளது. மகாமகத் தீர்த்தக் குளத்தில் பதினாறு கோவில்களையும் மண்டபங்களையும் கோவிந்த தீட்சிதர் கட்டியுள்ளார். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதரின் நவாவர்ணக் கீர்த்தனைகள் அம்பாள் பிராகாரத்தில் எழுதப்பட்டுள்ளன. தேவாரப் பாடல்கள் பெற்ற காவிரித் தென்கரைத்தலங்களில் இது 26-ஆவது ஆகும். முத்துசாமி தீட்சிதர் இங்குள்ள மங்களாம்பிகை மீதும் கும்பேஸ்வரர் மீதும் பல கீர்த்தனங்களை இயற்றியுள்ளார். சக்தி பீடத்தில் இத்தலமே முதலாவதாகக் கருதப்படுகிறது.

3. ஸ்ரீவாஞ்சியம் என்ற தலம், இறைவன் வாஞ்சிநாதருக்கும், இறைவி மங்களாம்பிகைக்கும் யமதர்மராஜ வாகனம் இங்கு பிரபலம். இது வேறு எந்தத் தலத்திலும் கிடையாது. அதேபோல் ஊரில் எந்த இடத்தில் இறப்பு நிகழ்ந்தாலும் மற்ற தலங்கள் போல் கோவில் மூடப்படுவதும் கிடையாது. தமிழ்நாட்டில் உள்ள க்ஷேத்திரங்களில் திருக்கடவூருக்கு அடுத்தப்படி நிகரற்றத்தலம் ஆகும். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் குடவாசல் மார்க்கத்தில் உள்ளது. காசிக்குச் சமமாகச் சொல்லப்படும் ஆறு தலங்களில் இதுவும் ஒன்று. மற்றவை - திருவையாறு, வேதாரண்யம், மயிலாடுதுறை, திருவிடைமருதூர், திருவெண்காடு. சிலர் திருச்சாய்க்கட்டையும் சொல்வார்கள். இத்தலத்தில் இறப்பவர்களுக்கு எம வேதனை கிடையாது. தேவாரப்பாடல் பெற்ற சோழ நாட்டுத் தென்கரைத் தலங்களில் இது 70-ஆவது தலம் ஆகும். கார்த்திகை ஞாயிறு இந்தத் தீர்த்தமான குப்த கங்கையில் நீராடுவது திருநள்ளாறு நள தீர்த்தத்தைப் போல் மிகப் புனிதமாகக் கருதப்படுகிறது. இதனை விளக்கும் தல புராணப்பாடல் வருமாறு:

“மெய்தரு கயநோய் குட்டம் விளைத்தமுற் கொடிய சாபம்
பெய்துறல் செய்யும் வன்கண் பிரமராக்கதம் வேதாளம்
எய்திடின் அன்ன தீர்த்தம் இழிந்ததில் படியத்தீரும்
செய்துரும்கடத்தின் ஏற்றுத் தெளிக்கினும் தீருமன்றே”

இக்கோவிலின் சண்டிகேஸ்வரர் யம சண்டிகேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். அம்பாள் மங்களாம்பிகை அருள் தரக் காத்திருக்கிறாள். தற்போது பலர் புற்று நோயின் பாதிப்பால் அவஸ்தைப்படுகிறார்கள். புற்று நோயின் தீவிரத்தைக் கட்டுப்படுத்தும் சிறந்த தலமாக விளங்குகிறது. இங்கு வந்து பிரார்த்தித்து குணமடைந்தவர்கள் பலர். ஆனால் இத்தலமோ அல்லது திருச்சிறுகுடியோ நாம் நினைத்த மாத்திரத்தில் போய்வர முடியாது. மங்களாம்பிகைதான் நம் வரவைத் தீர்மானிக்க முடியும். இஃது என் அனுபவ உண்மை. இத்தலத்து மங்களாம்பாளையும், வாஞ்சிநாதரையும் முத்துஸ்வாமி தீட்சிதர் பல கீர்த்தனங்களால் போற்றிப் பாடியுள்ளார்.

4. கோனேரிராஜபுரம், திருநல்லம் என்ற பெயருடன் விளங்கிடும் தலம். கும்பகோணம்-காரைக்கால் பேருந்துப் பாதையில் எஸ். புதூர் அடைந்து அங்கிருந்து செல்ல வேண்டும். இங்குள்ள இறைவன் பெயர் உமாமகேஸ்வரர், பூமீஸ்வரர், வைத்தியநாதர். அம்பாள் அங்கவளநாயகி, மங்களாம்பிகை என்று அழைக்கப்படுகிறாள். தலமரம் அரசு, தீர்த்தம் பிரம்ம தீர்த்தம். சம்பந்தர் அப்பர் பாடல் பெற்றது. தேவாரப்பாடல் பெற்ற காவிரித் தென்கரைத் தலங்களில் இது 34-ஆவது ஆகும். இங்குள்ள வைத்தியநாதர் சந்நிதி உலகப் புகழ் வாய்ந்தது. உமா மகேஸ்வரர் சிலையும் மிகப் பிரசித்தி பெற்றது. இத்தல நடராஜப் பெருமானும் பெரிய வடிவில் காட்சி அளிப்பவர். அற்புத அழகுடன் மிளிர்பவர். மேலும் நன்னிலம் அருகில் உள்ள அம்பர் மாகாளம் கோவில் பற்றிய சித்திரம் ஒன்று இக்கோவிலில் உள்ளது. இந்தச் சுவையான அனுபவங்களை நேரில் சென்று பார்த்தாலே புரியும். அம்பாள் மங்களநாயகி, கருணைக்கடலாக விளங்கி வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் தந்து அருளுகிறாள்.

5. திருநெடுங்களம் என்ற திருத்தலம் திருச்சியிலிருந்து தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள பிரபலமான கோவில். இறைவன் நித்ய சுந்தரேஸ்வரர், திருநெடுங்களநாதர். அம்பாள் மங்களநாயகி, மங்களாம்பிகை என்ற ஒப்பிலாநாயகி. சம்பந்தர் பாடல் பெற்றது. சோழநாட்டுத் தேவாரத் தென்கரைத் தலங்களில் இஃது எட்டாவது. இங்குள்ள மகாமண்டபத்தில் பல்லவர் காலத்துக் கல் உரல் ஒன்று உள்ளது. அதில் மஞ்சள் இடித்து சப்த கன்னியரில் வாராகிக்கு அபிஷேகித்து அர்ச்சித்தால் எண்ணங்கள் நிறைவேறும் என நம்பப்படுகிறது. இங்குள்ள யோக தட்சிணாமூர்த்தி வெகு பிரபலம். இதேபோன்ற ஒரு சிற்பத்தைத் திரு உத்தரகோசமங்கை என்ற தலத்தில் காணலாம். இவர் பத்மாசனமாக ஒரு காலை இன்னொரு கால் மேல் இருத்திக் கொண்டு அமர்ந்துள்ள அழகை நேரில் பார்த்து அனுபவித்தால்தான் புரியும். இதே போல் தட்சிணாமூர்த்தியின் திருவுரு திருஉத்தரகோசமங்கை என்ற திருமறைத்தலத்திலும் உள்ளது. இங்குள்ள அம்பாள் அடியார்கள் இடர் தீர்ப்பதில் வல்லவர். அற்புதத் திருவுருவம். இங்கு சம்பந்தர் பாடிய பதிகம் இடர் களையும் திருப்பதிகமாய் அன்பர்களால் போற்றிப் பாடப்படுகிறது. ‘இடர்களையாய் திருநெடுங்கள மேயவனே’ என்ற மகுடத்துடன் விளங்குவது.

6. உத்தரகோசமங்கை, மாணிக்கவாசகரால் திருவாசகத்தில் 38 இடங்களில் புகழ்ந்து சொல்லப்பட்ட தலம். இராமநாதபுரத்தை அடைவதற்கு முன்பாக (பத்து கி.மீ. தூரம்) இத்தலம் செல்ல வழி அமைக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் சமஸ்தானக் கோவில்களில் ஒன்று. சமீபத்தில் கும்பாபிஷேகம் கண்டது. இறைவன் மங்களநாதர், மங்களேஸ்வரர், அம்பாள் மங்களாம்பிகை, மங்களேஸ்வரி என்றும் அழைக்கப்படுகிறாள். தல மரம் இலந்தை. தீர்த்தம் அக்னி தீர்த்தம். கோவிலுள் உள்ளது. இங்குள்ள மரகத நடராஜரை திருவாதிரை தின இரவில் மட்டும் நிர்மால்ய தரிசனமாகக் காணலாம். வருட முழுவதும் இவர் சந்தனக்காப்பில்தான் தரிசனம் தருகிறார். அதே போல் இங்குள்ள பஞ்சலோக நடராஜர் மிகச் சிறப்பு வாய்ந்தவர். இவர் வலப்புறம் ஆண்கள் ஆடும் தாண்டவமும் இடப்புறம் பெண்டிர் ஆடும் லாஸ்யமும் ஆக ஒரு நயமான கலைப்படைப்பாகத் திகழ்கிறார். இவரைத் தக்க பந்தோபஸ்து செய்யப்பட வேண்டும் என்பதே பக்தர்கள் எதிர்பார்ப்பு. இதுபோல் ஆணும் பெண்ணும் கலந்த நடராஜர் படைப்பு வேறு கிடையாது. இறைவன் இத்தலத்தில் அம்பாளைத் திருமணம் செய்து கொண்டு அவளுக்கு வேதப் பொருளை உபதேசம் செய்ததாக ஒரு வரலாறு உண்டு. இது மதுரைப்புராணத்தில் காணப்படுகிறது. இத்தலப் பழைமை பற்றி “மண் முந்தையதோ, மங்கை முந்தையதோ” என்ற பழமொழி ஏற்பட்டது. (திருவாரூர் மண் தலம். உலகில் மிக முற்பட்ட தலம். மண் தோன்றிய போதே (உத்தரகோச மங்கை)யும் தோன்றியதோ என்று வியக்கிறார்களாம்! மாணிக்கவாசகர் இத்தலத்தைப் பற்றிக் கூறும்போது ‘உத்தரகோச மங்கைக்கு அரசே’ என்றே விளிக்கிறார். இத்தலத்து இறைவன் இராவணன் மனைவி மண்டோதரிக்குக் காட்சி கொடுத்துள்ளார். மங்களநாயகியின் கருணையை விளக்க வார்த்தைகள் போதா.

7. திருச்சிறுகுடி என்ற சிற்றூர் மயிலாடுதுறையை அடுத்துள்ள பேரளம் என்ற ஊரின் அருகில் உள்ளது. பெயருக்கு ஏற்றாற்போல் சிறுபிடி என்ற பெயர் மருவி சிறுகுடி என்றாகியுள்ளது. இங்குள்ள இறைவன் மங்களநாதர். இறைவி மங்களாம்பிகை. சூட்சுமபுரி என்பது இவ்வூரின் பெயராக விளங்கி இருக்கிறது. இங்கும் விநாயகர் பெயர் மங்கள விநாயகராகவும், தீர்த்தம் மங்கள தீர்த்தமாகவும் உள்ளது. சம்பந்தரின் தேவாரப் பாடல் பெற்ற இத்தலம் காவிரித் தென்கரைத் தலங்களில் 60-ஆவது தலம். பேரளத்தை அடுத்த பூந்தோட்டம் வந்தால் இத்தலத்தை அடையலாம். பேரளத்திலிருந்து ஆட்டோ, டாக்சிகள் கிடைக்கும். இத்தலத்தில் உள்ள சந்தோஷ ஆலிங்கனமூர்த்தி பிரசித்தம். அம்பிகையின் பூஜைக்கு மகிழ்ந்து அம்பாளை ஆலிங்கனம் செய்யும் அமைப்பில் அவள் தோள்மீது கைபோட்டுக் காட்சி தரும் அழகு, நேரில் பார்த்து அனுபவிக்க வேண்டிய ஒன்று.

8. சோழநாட்டுத் தென்கரைத்தலங்களில் ஒன்று தென்குடித் திட்டை. கும்பகோணம்-திருக்கருகாவூர் பாதையில் உள்ளது. தஞ்சாவூர் மயிலாடுதுறை வழியே செல்லும் ரயில்கள் இவ்வூர் வழியே செல்கின்றன. காவிரியின் கிளை நதிகளான வெண்ணாறு-வெட்டாறு ஆகியவற்றின் இடையில் திட்டில் அமைந்த தலம். உலகப் பிரளய காலத்தில் இப்பகுதி திட்டாகத் தோன்றியதாகவும், இறைவன் இங்கு சுயம்புவாக வெளிப்பட்டு அருளினான் என்றும் வரலாறு. விமானங்கள் அனைத்தும் கருங்கற்களால் ஆன அற்புதக் கலையம்சம் மிக்க கோவில். இறைவன் வசிஷ்டேஸ்வரர், அம்பாள் மங்களாம்பிகை. உலகநாயகி, சுகந்தகுந்தளாம்பிகை என்ற பெயர்களும் வழக்கில் உள்ளன. சம்பந்தர் பாடல் பெற்ற தலம். கிழக்கு நோக்கிய சந்நிதி. சதுர ஆவுடையார். மூலவர் நான்கு பட்டைகளாகக் காணப்படுகிறார். அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது. கொடிமரம் கல்லால் ஆனது. அம்பாள் சந்நிதிக்கு வெளியே எதிரில் மண்டபத்தில் மேற்புறத்தில் பன்னிரண்டு இராசிகளுக்குரிய உருவங்கள் கல்லில் செதுக்கப்பட்டுள்ளன. இங்குள்ள மூலவர் விமானத்தின் மீது சந்திரகாந்தக்கல் பதிக்கப்பட்டிருக்கிறது. அதனால் கோடை நாள்களிலும் சந்நிதி சற்று குளுமையுடன் காணப்படும். 24 நிமிடங்களுக்கு ஒரு முறை ஒரு சொட்டு நீர் இறைவன் மீது விழுந்து அபிஷேகம் ஆகிறது. இந்த விசேஷம் வேறு எங்கும் இல்லை. சந்திரனின் ஒளியை உள்வாங்கி இந்த அதிசயம் நடப்பதாகக் கூறப்படுகிறது. சிறப்பு வாய்ந்த சிறுவாச்சூர் காளிதேவியின் மகாமேருவும் சிவலிங்கமும் மரப்பீடத்தில் வைக்கப்பட்டுள்ளன. மங்களாம்பாளின் அழகும், வனப்பும், கருணையும் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டன. தேவாரப்பாடல் பெற்ற காவிரித் தென்கரைத் தலங்களில் இது 15-ஆவது ஆகும்.

9. திருவெண்ணெய்நல்லூர் நடுநாட்டில் உள்ள தேவாரப்பாடல் பெற்ற தலம். இறைவன் சுந்தரரை அவருடைய திருமண விழாவின்போது தடுத்தாட்கொண்ட செயல் இத்தலத்தில்தான் நிறைவு பெற்றது. கிழக்குப் பார்த்த கோவில். அம்பாள் தனிக்கோவிலாகப் பிரகாரத்தில் உள்ளார். இப்பொழுது பிரதோஷ விழாவிற்கு ஆயிரக்கணக்கில் பக்தர்களைத் தன்பால் ஈர்த்துள்ளார். திருக்கோவிலூரிலிருந்து அடிக்கடி பேருந்து வசதி உண்டு. அம்பாள் மங்களாம்பிகை. பெயருக்கேற்றாற்போல் அழகும் கருணையும் ஒன்றாக இணைந்த திருவுருவம். அலங்காரம் செய்து பார்த்தாலே நம் துன்பங்கள் பறந்தோடும் என்ற மன நிறைவு. இறைவன் தடுத்தாட்கொண்ட ஈஸ்வரர், வேணுபுரீஸ்வரர், கிருபாபுரீஸ்வரர் என்றும் பெயர்கள் உண்டு. சைவசித்தாந்த நூலான சிவஞானபோதம் நூலை அருளிச் செய்த மெய்கண்டார் வாழ்ந்து உபதேசம் பெற்ற சிறப்புத் தலமும் இதுவே. சுந்தரமூர்த்தி நாயனாரின் “பித்தா பிறைசூடிப் பெருமாளே அருளாளா” என்ற பிரபல தேவாரப்பாடல் எழுந்தது இத்தலத்தில்தான்.

10. திருக்கண்டியூர் திருவையாறுக்கு அருகில் உள்ள தலம். அட்ட வீரட்டானத் தலங்களில் முதலாவதாய்க் கொண்டாடப்படுகிறது. தஞ்சாவூரிலிருந்து ஒன்பது கி.மீ. தொலைவு. இறைவன் பிரம்மசிரக்கண்டீசர் என்ற பெயருடன் விளங்குகிறார். பிறப்புத் தொழிலைச் செய்யும் பிரம்மன் தலையைக் கொய்த இடமாகக் கருதப்படுகிறது. இதனால் ஏற்பட்ட தோஷம் விலக இறைவன் காசியில் அன்னபூரணியிடம் பிட்சை எடுத்து விமோசனம் பெற்றதாக ஒரு வரலாறு உண்டு. சதாதப முனிவருக்கு காளத்தி தரிசனத்தைக் காட்டிய தலம். இங்கு பிரம்மன் சரஸ்வதி இருவரும் ஒன்றாக உள்ள ஒரு கருவறை உள்ளது. மாசி மாதம் 13, 14, 15-ஆம் நாள்களில் மாலையில் 5.45 மணி முதல் 6.10 வரை சூரிய ஒளி இறைவன் மீது படுகிறது. அருணகிரியாரின் பாடல் பெற்றது. இத்தலம் சப்த ஸ்தானத் தலங்களில் ஐந்தாவது தலம். அம்பாள் மங்களாம்பிகை. மங்களநாயகி என்றும் அழைக்கப்படுகிறாள். தெற்கு நோக்கிய சந்நிதி. நின்ற கோலத்தில் நான்கு திருக்கரங்களுடன் அருள்பாலிக்கிறாள். தீர்த்தம் கபால, தக்ஷ, பிரம்ம, பாதாளகங்கைத் தீர்த்தங்கள். அர்த்த மண்டபத்தில் சப்தஸ்தான லிங்கங்களும், பஞ்சபூத லிங்கங்களும் உள்ளன. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் தேவாரம் பெற்ற காவிரி தென்கரையில் இது 12-ஆவது தலம்.

11. திருப்பரிதிநியமம் என்ற ஊர், தஞ்சாவூர்-பட்டுக்கோட்டை சாலையில் உள்ளது. இங்குள்ள சிவன் கோவில் பருத்தியப்பர் கோவில் என்று அழைக்கப்படுகிறது. இறைவன் பாஸ்கரேஸ்வரர், அம்பாள் மங்களாம்பிகை. தீர்த்தம்-சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம் என்று இரு தீர்த்தங்கள் உள்ளன. சூரியன் இறைவனை வணங்கிய நிலையில் உள்ள சிற்பமும் பலிபீடத்தை அடுத்து உள்ளது. வருடந்தோறும் பங்குனி மாதம் 17, 18, 19 தேதிகளில் சூரியக்கதிர்கள் ஸ்வாமி மீது படுகின்றன. சூரியன் வழிபட்ட பல தலங்களில் இஃது ஒன்று. இதைப்பற்றிய பழம் பாடல் ஒன்று வருமாறு:
“கண்டியூர் வேதிகுடி கற்குடந்தைக் கீழ்க்கோட்டம்
பண்பரிதி நன்நியமம் பாங்கார் தெளிச்சேரி
பொற்புறவார் பனங்காட்டூர் நெல்லிக்கா ஏழும்
பொற்பரிதி பூசனை ஊர்.”
பரிதிநியமம், திருக்கண்டியூர், குடந்தைக் கீழ்க்கோட்டம், திருவேதிகுடி, தெளிச்சேரி, புறவார்பனங்காட்டூர், திருநெல்லிக்கா என்பவை அந்தத் தலங்கள். சம்பந்தர் பாடல் பெற்றது. தேவாரப்பாடல் பெற்ற காவிரித் தென்கரைத் தலங்களில் இது 101-ஆவது தலம். இக்கோவில் கீழ்வேங்கை நாட்டாருக்கும் சொந்தமானது. மங்களாம்பிகை தெற்குப் பார்த்து நின்ற கோலத்தில் உள்ளாள். தம்மிடம் வந்து வேண்டுவோர்க்கு வேண்டுவன அளித்துக் காக்கும் அநாதரட்சகி.

12. இடும்பவனம், முத்துப்பேட்டை-வேதாரண்யம் பேருந்துச் சாலையில் உள்ள தலம். தேவாரப்பாடல் பெற்ற காவிரித் தென்கரைத் தலங்களில் இது 108-ஆவது ஆகும். சம்பந்தர் இத்தலத்தைப் பாடியுள்ளார். இடும்பன் என்ற அசுரன் வழிபட்ட தலம். அகத்தியருக்குத் திருமணக் கோலம் காட்டியருளிய தலம். கருவறையில் இறைவனுக்குப் பின்புறம் இந்த மணவாளக்கோலம் உள்ளது. இறைவனுக்குப் பல பெயர்கள். சற்குணேஸ்வரர் இடும்பவனேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இறைவி மங்களாம்பிகை, மங்களநாயகி என்ற பெயருடன் விளங்குகிறாள். இத்தலம் பிதுர்க்கர்மாக்களைச் செய்ய விசேஷமானதாகக் கருதப்படுகிறது. மராட்டிய மன்னர்கள் இத்தலத்துக்கு அளவற்ற மான்யங்களை அளித்துள்ளதாகத் தெரிகிறது. இதற்கான கல்வெட்டுகள் கோவிலில் உள்ளன.

13. திருநாட்டியாத்தான்குடி என்ற தலம் தேவாரத் தென்கரைத்தலங்களில் 118-ஆவது தலம். சுந்தரர் பாடியது. திருவாரூர்-திருத்துறைப்பூண்டி சாலையில் மாவூர் கூட்டு ரோடு வந்து வடபாதிமங்கலம் செல்லும் சாலையில் பயணம் செய்ய வேண்டும். இங்கு வருவதற்குத் திருத்துறைப்பூண்டி அல்லது திருவாரூரிலிருந்து டாக்சி எடுத்து வருவது சிறந்தது. கோட்புலி நாயனாரின் அவதாரத்தலம். அவருடைய பெண்களைச் சுந்தரர் தன் மகள்களாக ஏற்ற தலம். இறைவன் மாணிக்கவண்ணர், நாட்டியாத்தான் குடிநம்பி. அம்பாள் மங்களாம்பிகை. சுந்தரர் இத்தலத்துக்கு வந்தபோது இறைவனையும் இறைவியையும் கோவிலில் காணாது திகைத்தார். விநாயகரைக் கேட்க அவர் வயலில் நாற்று நட்டுக் கொண்டிருந்த உழவன் உழத்தியைக் கை காட்டினார். அவர்கள் இறைவனும் அம்பாளும் என்று உணர்ந்த சுந்தரர்,
“நட்ட நடாக்குறை நாளைநடலாம்
நாளை நடாக்குறை சேறு தங்கிடவே
நட்டதுபோதும் கரையேறி வாரும்
நாட்டியாத்தான்குடி நம்பி”
என்று பாடினார். உடனே அவர்கள் கோவிலுக்கு வந்து காட்சி தந்தார்கள். இக்கோவில் இறைவர் பிணக்குகளைத் தீர்த்துவைப்பதில் வல்லவர். அண்ணன் தம்பி இருவருக்குமிடையில் இரத்தினக் கற்களைப் பிரித்துக் கொள்வதில் ஏற்பட்ட பிரச்னையை இறைவனே ரத்தின வியாபாரியாக வந்து தீர்த்து வைத்தார்.

14. ஆவூர்ப்பசுபதீஸ்வரம் அம்பாள் பசுவாக இறைவனைப் பூஜித்த பல தலங்களில் ஒன்று. சோழநாட்டுத் தேவாரத் தென்கரைத் தலங்களில் இது 21-ஆவது ஆகும். காமதேனு என்ற தெய்விகப் பசு உலகிற்கு வந்த கோவிந்தகுடி (கோ வந்த குடி) என்ற சிற்றூருக்கு அருகில் உள்ளது. குடந்தையிலிருந்து அடிக்கடி பேருந்துகள் உள்ளன. இது கோச்செங்கட்சோழன் கட்டிய மாடக்கோவில்களில் ஒன்று. ஊரின் பெயர் ஆவூர். கோவில் பசுபதீச்சுரம். அம்பாள் மங்களாம்பிகை. இக்கோவிலில் உள்ள காமதேனு தீர்த்தத்திலிருந்து எடுக்கப்பட்டுப் பிரதிஷ்டையாகி உள்ளது. சங்கப்புலவர்கள் ஆவூர்க்கிழார், ஆவூர் மூலங்கிழார் போன்ற சான்றோர்களைத் தந்த ஊர். சோழ மன்னர்களின் கோட்டையாக விளங்கிய இடம். சம்பந்தர் பாடல் பெற்றது. அம்பாள் பக்தர்களின் குறைகளைத் தீர்ப்பதில் வல்லவர்.

15. திருப்பேணும்பெருந்துறை என்ற தலம் சிறு கிராமம். திருப்பந்துறை என்றும் அழைக்கப்படுகிறது. ஸ்வாமி பிரணவேஸ்வரர், சிவானந்தேஸ்வரர். அம்பாள் மங்களாம்பிகை. தீர்த்தம்: மங்கள தீர்த்தம். தலமரம் வன்னி. அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது. சம்பந்தர் தேவாரப்பாடல் பெற்றது. பாடல் பெற்ற காவிரித் தென்கரைத்தலங்களில் இது 64-ஆவது. மூர்த்தியும் சின்முத்திரை காட்டி தியானநிலையில் இருக்கும் தண்டபாணித் தெய்வமும் கண்டு மகிழ வேண்டிய திருவுருவங்கள். இங்குள்ள முருகன் தலையில் குடுமியுடன் சிவபிரானை வணங்கிய நிலையில் காணப்படுகிறார். கல்வெட்டுகள் ஐந்து உள்ளன. இறைவன் பெயர் பேணுபெருந்துறை மகாதேவர் என்றும் அம்பாள் பெயர் மலையரசியம்மை எனவும் குறிப்பிட்டிருக்கிறது. திருஞானசம்பந்தர் பாடல் பெற்றது. திருச்செங்காட்டங்குடி போல் சித்திரைப் பரணியில் அமுது படையல் விழா நடக்கிறது. அற்புத அழகுடன் திகழும் மங்களாம்பிகை பக்தர்கள் வரவை எதிர்நோக்குகிறாள்.

16. திருவிஜயமங்கை சோழநாட்டு வடகரைத்தலங்களில் 47-ஆவது ஆகும். சிவராத்திரித் தலமாகப் புகழ்பெற்ற திருவைகாவூரின் அருகில் இருக்கிறது. இறைவன் விஜயநாதர். அம்பாள் மங்களாம்பிகை. இது பாண்டவர் காலத்துக் கோவில். அர்ச்சுனன் என்ற விஜயன் வழிபட்டதால் விஜயமங்கை என்று பெயர். இதனை அப்பர் தம் தேவாரத்தில்
“பாண்டு வின்மகன் பார்த்தன் பணிசெய்து
வேண்டுதல் வரங்கொள் விசய மங்கை”
என்று பாடுகிறார். இங்குள்ள சப்த(ஏழு)மங்கைத் தலங்களில் இஃதும் ஒன்று. இங்கு சதுர ஆவுடையார் மேல் இறைவன் எழுந்தருளியுள்ளார். கோஷ்டமூர்த்தமாக தட்சிணாமூர்த்தி அருள்கிறார். மங்களாம்பிகை தெற்கு நோக்கிக் காட்சி.

17. மூவலூர் மயிலாடுதுறை-கும்பகோணம் சாலையில் உள்ள ஊர். பெரிய கோவில். இறைவன் மார்க்கசகாயேஸ்வரர். அம்பாள் மங்களாம்பிகை. அப்பர் பாடலில் இத்தலம் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு ஒரு சிற்பக்கலைப் பெட்டகமே உள்ளது. பரமேஸ்வரன், திருமால், பிரம்மன் மூவரும் இத்தலத்தில் காட்சி அளித்ததால் மூவலூர் என்று பெயர். திருவாவடுதுறை ஆதீன முதற்குரவர் ஸ்ரீநமசிவாய மூர்த்திகளின் அவதாரத்தலம். பைரவரும் சூரியனும் சனிபகவானும் காட்சி தருகின்றனர். தட்சிணாமூர்த்தியின் திருவடிக்கீழ் யானை முகம், மான், சிம்மம், ரிஷபம் முதலியனவும் முயலகன் சனகாதி முனிவர் நால்வருடன் சேர்ந்திருப்பது புதுமையாக உள்ளது. ரதசப்தமியன்று சப்தமாதர் வழித்துணையப்பரை வழிபட்டுப் பேறடைந்தனர்.

18. துடையூர் திருச்சி மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலம். திருச்சி-முசிறி-நாமக்கல் பாதையில் பத்தாவது கி.மீ.தொலைவில் துடையூர் உள்ளது. அப்பர் தேவாரத்தில் குறிப்பிடப்படுகிறது. ஸ்வாமி விஷமங்களேஸ்வரர். அம்பாள் மங்களநாயகி என்ற மங்களாம்பிகை. பாற்கடலில் ஆலகால விஷம் தோன்றிய காலத்தில் சிவபிரான் அதை அருந்தி மக்களைக் காத்த தலம். சமீபத்தில் இக்கோவிலுக்குக் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. இங்குள்ள பிட்சாடனர் மற்றும் அம்பாளின் தோள் மீது ஸ்வாமி கையை வைத்துச் சார்ந்திருக்கும் அற்புதத் திருவுருவங்கள் கண்டு ரசிக்கத்தக்கவை.

19. கோவிந்தபுத்தூர் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலம். கோகறந்தபுத்தூர், கோவிந்தபுதூர் என்றும் பெயர்கள் வழங்கப்படுகின்றன. ஜயங்கொண்டத்தில் இருந்து ஸ்ரீபுரந்தன் என்ற ஊர் வழியாக கோவிந்தபுத்தூர் செல்லமுடியும். சிறிய கிராமம். இடிந்து உருக்குலைந்த இச்சிவாலயம் சமீபத்தில் திருப்பணிகள் முடிந்து கோவில் கும்பாபிஷேகம் முடிந்துள்ளது. ஸ்வாமி கங்காஜடேஸ்வரர். அம்பாள் மங்களநாயகி, மங்களாம்பிகை. கோவில் விமானம் உத்தமசோழப் பல்லவன் காலத்திய வேலைப்பாடமைந்தது. தேவாரப்பாடல் பெற்ற விஜயமங்கை என்ற தலம் இதுதான் என்ற கருத்தும் உள்ளது.

20. மேல்சேவூர் என்ற கிராமம் திண்டிவனம்-செஞ்சி சாலையில் வல்லம் என்ற ஊரிலிருந்து சுமார் ஆறு கி.மீ. தூரத்தில் உள்ளது. செஞ்சி பேருந்து நிலையத்திலிருந்து மணிக்கொருமுறை பேருந்து வசதி உண்டு. சிவபிரானின் வாகனமான ரிஷபம் இத்தலத்தில் சிவனை வழிபட்டதால் இறைவனுக்கு ரிஷபேஸ்வரர் என்று பெயர். 
21. இடையாற்றுமங்கலம் என்ற சிற்றூரில் உள்ளது மங்களாம்பிகை சமேத மங்களீஸ்வரர் ஆலயம். திருச்சி அன்பில் சாலையில் லால்குடி பேருந்து நிலையத்திலிருந்து 8 கி.மீ. தூரம் உள்ளது. தரிசன நேரம் காலை 6 மணி முதல் 11 மணி வரை. மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை.  அம்பாள் மங்களாம்பிகையின் சந்நிதி. மேலிரு கரங்களில் தாமரையும் கீழ் இரு கரங்கள் அபயவரத ஹஸ்த முத்திரையுடனும் காணப்படுகிறாள். அம்பாள் தெற்கு நோக்கிக் காட்சி. அருகில் கிழக்கு முகமாய் இறைவன் கிழக்கு நோக்கி அருள் பாலிக்கிறார். நவகிரகங்களுக்குத் தனிச்சந்நிதி. இங்குள்ள மாங்கல்ய மகரிஷி அவ்வூரில் அவதரித்து இங்கேயே சித்தியானவர். இவர் கன்னிப் பெண்களுக்குக் கண் கண்ட தெய்வமாய் விளங்குகிறார். உத்திர நட்சத்திரத்தில் இவருக்கும் இறைவன் இறைவிக்கும் அபிஷேக ஆராதனைகள் செய்து சீப்பு, கண்ணாடி, குங்குமம், மஞ்சள், சட்டைத்துணி, பழம், பூ போன்ற மங்கலப் பொருள்களைப் பெண்களுக்குத் தானம் செய்கிறார்கள். தங்கள் பிரார்த்தனை நிறைவேறியதும் கணவருடன் வந்து வழிபட்டுச் செல்கின்றனர். முதல் பத்திரிகையை மாங்கல்ய முனிவரின் பாதத்தில் வைத்து வழிபடுகிறார்கள். மங்களாம்பிகை இங்கு பெரும் போற்றுதலுக்கு உரிய தெய்வமாய்த் தொழப்படுகிறாள்.

22. திருத்துறைப்பூண்டி அம்பாள் பெரியநாயகி, உற்சவர் மங்களநாயகி. மங்களாம்பாள் கோவிலுக்குரிய சொத்துகள் இந்த மங்களாம்பிகையின் பெயரில் தாம் உள்ளன. இந்த ஊரில் உள்ள சொத்துகள் யாவுமே மங்களாம்பாளுக்குச் சொந்தம் என்கிறார்கள். என்றாலும் கோயில் சொத்துக்களின் இன்றைய நிலை மிகவும் பெருமைப்படும்படி இல்லை. மங்களாம்பாள் தன் அருளாட்சியை இங்கே நடத்துவதால் கோவில் பூஜைகள் நடந்து வருகின்றன.

23. ஆலம்பூண்டி என்ற சிற்றூர் செஞ்சியிலிருந்து எட்டு கி.மீ. தொலைவில் உள்ளது. இவ்வூரில் உள்ள சிவன் கோவிலில் அம்பாள் மங்களாம்பிகை என்ற பெயருடன் அருள்கிறாள். இத்திருத்தலம் சுமார் 800 ஆண்டுகள் பழைமையானது. 

24. பேரணம்பாக்கம் என்ற சிற்றூர், திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகாவில் உள்ளது. தேவிகாபுரம் என்ற ஊர் வழியே செல்ல வேண்டும். இங்குள்ள சிவபிரான் ருணஹரேஸ்வரர் என்ற பெயரால் அழைக்கப்படுகிறார். அம்பாள் மங்களாம்பிகை. 

25. திருவையைச்சேரி என்ற கிராமம் திருவாரூருக்கு அருகில் உள்ளது. இங்குள்ள மங்களாம்பிகை வெகு விசேஷம். இவளைப் பற்றி பிரபல பாடலாசிரியர் பாபநாசம் சிவன் ‘
ஓம் நமசிவாய

இறை பணியில்
இரா. இளங்கோவன்
நெல்லிக்குப்பம். 

திருக்கோவிலூர் அருள்மிகு வீரட்டேஸ்வரர் கோவில்.

காலையில் கோபுர தரிசனம் கோடிப் புண்ணியம்.

திருக்கோவிலூர் அருள்மிகு வீரட்டேஸ்வரர் கோவில்.
இத்தலத்தில் ஈசனே, பைரவ வடிவம் என்பதால் தேய்பிறை அஷ்டமி நாளில் வீரட்டேஸ்வரரை வழிபட்டால் தீவினைகள் அகன்று, செல்வங்கள் தேடி வரும்.

அவ்வையாரை இத்தல விநாயகர், விஸ்வரூபம் எடுத்து தனது துதிக்கையால் திருக்கயிலாயம் கொண்டு போய் சேர்த்ததால், ‘பெரிய யானை கணபதி’ என்று அழைக்கப்படுகிறார். இவ்விநாயகர் திருக்கோவிலூர் வீரட்டேஸ்வரர் ஆலயத்தில் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். இத்தல ஈசன் வீரட்டேஸ்வரர்.

பெருமை : கொன்றையும், வில்வமும் தல மரங்களாக உள்ளன. மெய்ப்பொருள் நாயனார் ஆட்சி செய்த அருட்பதி இதுவாகும். ராஜராஜ சோழன் பிறந்த ஊர் இது. ராஜராஜ சோழனின் சகோதரி, இந்த ஆலயத்திற்கு விளக்குகள் ஏற்றிட நிதி வழங்கினார் என கல்வெட்டு சான்று பகிர்கிறது. இத்தல தீர்த்தம் தென்பெண்ணை ஆகும். கபிலர் வழிபட்ட தலம் இது. தென்பெண்ணை ஆற்றின் நடுவில் கபிலர் குகைக்கோவில் அமைந்துள்ளது.

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசரின் பாடல் பெற்ற தலம். சப்த கன்னிகளும், 64 வித பைரவர்களும் தோன்றிய தலம். பைரவ உபாசகர்களுக்கு முதன்மையான கோவில் இது என பல்வேறு சிறப்பு அம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளது இந்த ஆலயம். இத்தலத்தில் ஈசனே, பைரவ வடிவம் என்பதால் தேய்பிறை அஷ்டமி நாளில் வீரட்டேஸ்வரரை வழிபட்டால் தீவினைகள் அகன்று, செல்வங்கள் தேடி வரும்.

இன்னும் பல பெருமைகளைக் கொண்டது இத்திருத்தலம்.

கோவில் திறந்திருக்கும் நேரம் காலை 6 மணியிலிருந்து 12 மணி வரையிலும், மாலை 4 மணிமுதல் இரவு 8 மணி வரையிலும்.

பன்னிரெண்டு ஜோதிர் லிங்கங்கள் பற்றிய பதிவுகள்

பன்னிரெண்டு ஜோதிர் லிங்கங்கள் பற்றிய பதிவுகள்
1. அருள்மிகு ராமநாதர் திருக்கோயில், 
ராமேஸ்வரம்-623 526

குறிப்பு: கங்கை நீரை கொண்டு வந்து அபிஷேகிப்பது வழக்கம். இங்கு மட்டும் கடலில் எந்நாளும் என்நேரமும், நீராடலாம். ஆஞ்சனேயர் கொண்டு வந்த லிங்கத்திற்கும், சீதை மணலால் செய்த லிங்கத்திற்கும் ராமர் பூஜை செய்தது சிறப்பு.

2. அருள்மிகு மல்லிகார்ஜுனேஸ்வரர் திருக்கோயில், 
ஸ்ரீ சைலம்-518 101, 

கர்நூல் மாவட்டம். ஆந்திரா - கர்நூல் மாவட்டம் நந்தியாவிலிருந்து 70 கி.மீ.

குறிப்பு: நந்தியே மலையாக சிவனை தாங்குகிறார். விநாயகர் சித்தி புத்தியரை மணந்த தலம்.

3. அருள்மிகு பீமசங்கரர் திருக்கோயில், பீமசங்கரம், 

மஹாராஷ்டிரம் புனாவிலிருந்து 140 கி.மீ.

குறிப்பு: கருவறைக்கு முன் நந்திக்கு பதில் ஆமை. அவசரப்படாமல் வழிபட வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக.

4. அருள்மிகு திரியம்பகேஸ்வரர் திருக்கோயில், 

திரியம்பகம்-422 212, மஹாராஷ்டிரம். நாசிக்கிலிருந்து 29 கி.மீ.

குறிப்பு: சுயம்பு லிங்கம். லிங்கக் கருவறையில் எப்பொழுதும் நீர் ஊறுகிறது. சிவனே மலையாக இருப்பதாக தலம், கோதாவரி உற்பத்திக்கும் ஸ்நானம்.

5. அருள்மிகு குஸ்ருணேஸ்வரர் திருக்கோயில், 

குஸ்ருணேஸ்வரம்(வேரூன்)-431 102, மஹாராஷ்டிரம்-எல்லோரா குருகே.

குறிப்பு: அம்பிகை குங்குமப்பூவால் வழிபட்ட தலம். (குஸ்ருணம்-குங்குமம்) கருவறையின் சுவற்றில் அன்னையின் திருவுருவம் உள்ளது.

6. அருள்மிகு சோமநாதர் திருக்கோயில், 

ப்ராபாச பட்டினம் (விராவெல்) குஜராத்

குறிப்பு: கடற்கரை தலம். சந்திரன் சாபம் தீர்த்த தலம். அமாவாசை கூடிய திங்கட்கிழமை தரிசனம் மிகவும் சிறப்பு. மிகச்சிறிய சுயம்பு மூர்த்தி.

7. அருள்மிகு நாகநாதர் திருக்கோயில், 

ஓனண்டா-396 526, குஜராத்

குறிப்பு: தெற்கு நோக்கிய லிங்கம். நாமதேவர் வணங்குவதற்காகத் திரும்பிய கோலம்.

8. அருள்மிகு ஓம்காரேஷ்வரர் (அமலேஸ்வரர்) திருக்கோயில், 

ஓங்காரம், மத்திய பிரதேசம் உஜ்ஜயினிலிருந்து 281 கி.மீ.

குறிப்பு: மலைமுகட்டில் சுயம்புலிங்கம். பாணாசுரன் ஒவ்வொரு நாளும் 2000 லிங்கங்களை பூஜித்து நர்மதை நதியில் விடப்பட்டவையே சாளக்கிராமங்களாக மாறியதாக வரலாறு.

9. அருள்மிகு மஹாகாளர் திருக்கோயில், 

உஜ்ஜயினி (அவந்தி)-456 001, மத்திய பிரதேசம்

குறிப்பு: கார்த்திகை பவுர்ணமி தரிசனம் விசேஷம். 5 அடுக்கு கோயில். தோல் வியாதிகளை நீக்கும் கோடித் தீர்த்தம்.

10. அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில், 

சித்த பூமி (தேங்கர்) பீகார்

குறிப்பு: பல மாநிலங்களில் வைத்தியநாதம் இருப்பதாகக் கூறினாலும் சிவபுராணத்தில் குறிப்பிட்டுள்ளது இதுவே. திருமாலின் லீலையால் ராவணன் கொண்டுவந்த லிங்கம் தங்கி விட்ட தலம்.

11. அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில், 

காசி(வாரணாசி)-221 003, உத்திரப்பிரதேசம்

குறிப்பு: இங்கு இறப்பவருக்கு ஈசனே தாரக மந்திரம் ஓதுகிறார். தாங்களே அபிஷேகம் செய்யலாம். சிவராத்திரி தரிசனம் விஷேசம். ராமேஸ்வரத்திலிருந்து கொண்டு வந்த மணலை த்ரிவேணியில் கரைப்பது வழக்கம்.

12. அருள்மிகு கேதாரேஸ்வரர் திருக்கோயில், 

கேதார்நாத், உத்திரப்பிரதேசம்

குறிப்பு: இமயமலையில் சுயம்பு பனிலிங்கம். அம்மன் ஈசனின் இடப்பாகம் பெற்ற தலம். 6 மாத மானிட பூஜை. 6 மாதம் தேவ பூஜை.

சிவாயநம 🙏🙏🙏

Friday, September 29, 2023

சிவபெருமானை மனமுருகித் தொழ அழகான ஆண்குழந்தை பிறந்தது. குழந்தைக்கு மார்க்கண்டேயர் எனப் பெயர் சூட்டிமகிழ்ந்தனர்

மிருகண்டு முனிவர் மருத்துவவதியைத் திருமணம் செய்தார். நீண்டகாலமாக அவர்களுக்கு குழந்தைப் பாக்கியம் இல்லாமல் இருந்தது. சிவபெருமானை மனமுருகித் தொழ அழகான ஆண்குழந்தை பிறந்தது. குழந்தைக்கு மார்க்கண்டேயர் எனப் பெயர் சூட்டிமகிழ்ந்தனர் மிருகண்டு முனிவரும் மருத்துவவதியும் ஜோதிடம் பார்க்கப்பட்டபோது மார்க்கண்டேயன் நீண்டகாலம் உயிர்வாழமாட்டான் பதினாறு வயதில் அவன் இறந்துவிடுவான் என்று கூறப்பட்டது. மற்ற ஞானிகளும் அவ்வாறுதான் நடக்கும் என்றனர். பெற்றோர் அழுதனர், புலம்பினர், விதியை வெல்லமுடியாது என்று மனம் சாந்தியடைந்தாலும் பதினாறு வயதில் மார்க்கண்டேயர் இறந்துவிடுவார் என நினைத்து வேதனைப்பட்டனர். மார்க்கண்டேயர் வளந்தார். அவர் நாட்டமெல்லாம் சிவபூஜையில் தான் இருந்தது. சிவபெருமானிடம் மார்க்கண்டேயன் பூரணமாகச் சரணாகதி அடைந்தான்.பதினாறு வயது வந்தடைந்து மார்க்கண்டேயர் சிவபூசையில் தன்னை மறந்து உட்கார்ந்து விடுகின்றார். அவரது உயிரை எடுக்க எமதூதர்கள் வருகின்றனர். ஆனால் மார்கண்டேயனிடம் நெருங்கமுடியவில்லை. இறுதியில் எமதர்மனே எருமைக்கடா மீது வருகின்றார். உயிர்வாங்க பாசக் கயிற்றினை வீசுகின்றான். என்ன ஆச்சரியம் உக்கிரமூர்தியாகச் சிவபெருமான் தோன்றி காலனை எட்டி உதைக்கின்றார். எமதர்மன் மூர்ச்சையாகி கீழே சாய்கின்றார். பூமாதேவியின் வேண்டுகோளுக்கிணங்க எமதர்மனை சிவபெருமான் மன்னித்து மூர்ச்சை தெளியவைக்கின்றார். என்றும் பதினாறு வயதுடன் சீரஞ்சீவியாக மார்க்கண்டேயன் வாழ அம்பலத்தரசர் அருள்பாலிக்கின்றார்

நற்பலன்கள் அள்ளித்தரும் நந்திதேவர் வழிபாடு!*

*பிரதோஷ வரலாறு!*

*நற்பலன்கள் அள்ளித்தரும் நந்திதேவர் வழிபாடு!*
*பிரதோஷ வேளையில்  சிவன் கோயிலுக்கு முன் எவ்வளவு கூட்டம்! வாருங்கள்... உள்ளே போய்ப் பார்க்கலாம்.*

ஆன்மிக வெள்ளம் அந்த ஆலயத்தினுள் ததும்பி வழிகிறது. ஏராளமான பக்தர்கள் சிவ நாமத்தை உச்சரித்தபடி வரிசையில் நிற்கிறார்கள்.

 'ஓம் நமசிவாய...’, 'தென்னாடுடைய சிவனே போற்றி; எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி’ _ இப்படி காது குளிரும் கோஷங்கள். சிலர் கைகளில் பிரசாதப் பாத்திரங்கள். சிலர், நந்தியின் கழுத்தைக் கட்டியபடி அவர் காதுகளில் ஏதோ சொல்கிறார்கள்.

 இன்னும் சிலர் முழுமையாக அப்பிரதட்சிணம் (வழக்கத்துக்கு மாறான முறையில்) செய்கிறார்கள். அங்கே சண்டிகேஸ்வரர் சந்நிதியைக் கவனியுங்கள்.

சிலர் கைகளைத் தட்டுகிறார்கள். இன்னும் சிலர் தங்கள் ஆடையில் இருந்து நூல்களைப் பிரித்து, சண்டிகேஸ்வரர் மீது போடுகிறார்கள்... ஏன்?  

கேட்டால், ''இது செவிட்டு சாமிங்க! அதான் கையைத் தட்டிக் கும்பிடுகிறோம்!'' என்றும், ''இவர் சந்நிதியில் நமது ஆடையிலிருந்து நூல் பிரித்துப் போட்டால் புது ஆடை கிடைக்கும்!'' என்றும் சொல்வார்கள். உண்மைதான்! நமது ஆடையில் இருந்து, தினம் இரண்டு நூல்களாக எடுத்து சண்டிகேஸ்வரர் மீது போட்டால், நான்கு நாட்களில் கிழிசலாகி விடும். புது ஆடை வாங்கித்தானே ஆக வேண்டும்! - இதெல்லாம் நாமாக ஏற்படுத்திக் கொண்ட தவறான அணுகுமுறைகள்.

 இவற்றைக் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போமே!

ஒருவரிடம் நாம் மந்திர உபதேசம் பெற்றால், அந்த மந்திரத்தை தினந்தோறும் இவ்வளவு தடவை (குருநாதர் சொன்னபடி) சொல்லி உருவேற்ற வேண்டும். 

*⚜️அப்படி நம்மால் செய்ய முடியாதபோது, நமக்கு விபரீத பலன்கள் விளைய வாய்ப்பு உண்டு. இதைத் தவிர்க்க, குறிப்பிட்ட மந்திரத்தை, ஒரு பசு மாட்டின் காதில் ஓத வேண்டும். இதனால் மந்திரத்தைச் சொல்லாததால் உண்டாகும் விபரீதப் பலன்கள் நம்மைத் தீண்டாது. மிகவும் நுட்பமான தகவல் இது.*

இந்த உண்மை தெரியாமல் யாரோ - எப்படியோ ஆரம்பித்து வைத்த (கோயிலில் நந்தியின் காதுகளில் சொல்லும்) பழக்கம் இன்று மக்களிடையே பரவி விட்டது. உண்மையில் இப்படிச் செய்யக் கூடாது!

 கோயிலில் உள்ள நந்தியின் உருவத்தை நாம், நம் கைகளால் தொடக் கூடாது.

 அதற்கென உரியவர்கள் (குருக்கள்) மட்டுமே தொட்டு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் செய்ய வேண்டும். 

இதை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.

இங்கு, மந்திர உபதேசம் பெறுவது பற்றி சில முக்கியமான தகவல்கள்:

ஒரு குருவிடம் இருந்து ஒரு மந்திரத்தை மட்டுமே உபதேசம் பெற வேண்டும். மந்திர உபதேசம் செய்யும் குருவுக்கு அந்த மந்திரம் ஸித்தியாகி இருக்க வேண்டும்.

''எனக்கு ஏழு தடவை மந்திர உபதேசம் ஆகியிருக்கு!'' என்பது போல, பலரிடம் இருந்து பல விதமான மந்திரங்களை உபதேசம் பெறக் கூடாது!

நாம் பெற்ற மந்திர உபதேசத்தைத் தினந்தோறும் உரிய முறைப்படி உச்சரித்து வந்தால், குறிப்பிட்ட காலத்துக்குள் அந்த மந்திரம் நமக்கு ஸித்தியாகும். பலன் அளிக்கும். 

'மந்திர ஸித்தி கிடைத்து விட்டதே!’ என்று அடுத்த மந்திர உபதேசத்துக்குத் தாவக் கூடாது.

ஆனால், நம் மனம் சும்மா இருக்காது. அடுத்த மந்திரத்தை நோக்கித் தாவவே செய்யும். அப்போது, நமக்கு மந்திர உபதேசம் செய்த குருவை நாடி, அவர் என்ன சொல்கிறாரோ, அதன்படி நடப்பதே நல்லது.

எந்த மந்திரமாக இருந்தாலும் அது, விடாமுயற்சியோடு பரிபக்குவமாகத் தன்னைப் பிடித்துக் கொண்டிருக்கும் ஜீவன்களுக்கு மட்டுமே ஸித்தி அளிக்கும்.

*இனி பிரதோஷ வரலாறு.*

பிரதோஷம் வந்த விதம்

தேவேந்திரன் தனது வாகனமான ஐராவதத்தின் (வெள்ளை யானையின்) மீது அமர்ந்து சந்தோஷத்துடன் ஊர்வலம் வந்து கொண்டிருந்தான். அப்போது துர்வாச முனிவர் எதிரில் வந்தார்.

தேவேந்திரனது ஊர்வலம் அவர் உள்ளத்தில் ஏதோ மாறுதலை உண்டாக்கியது போலும். எப்போது பார்த்தாலும் ''பிடி, சாபம்!'' என்று சொல்லும் துர்வாசர், தன் கையில் இருந்த மலர் மாலையை, மிகுந்த அன்போடு தேவேந்திரனை வாழ்த்தும் விதமாக அவனிடம் கொடுத்தார்.

தேவேந்திரன் அதை அலட்சியமாக யானையின் தலையில் வைத்தான். துர்வாசரின் கண்கள் சுருங்கின.

யானையோ அந்த மாலையை எடுத்துத் தனது காலடியில் போட்டு மிதித்தது.

வெடித்தார் துர்வாசர். ''தேவேந்திரா! அவ்வளவு ஆணவமா உனக்கு? வெறுக்கை (செல்வத்தின்) மேல், வெறுக்கை (வெறுப்பு) கொண்டவர்கள் நாங்கள். லட்சுமிதேவியின் அருள் கடாட்சம் உனக்கு இன்னும் பரிபூரணமாகக் கிடைக்கட்டும் என்ற எண்ணத்தில், அந்த தேவியின் பிரசாதத்தை உனக்கு அளித்தேன். ஆனால், செல்வச் செருக்கில் ஊர்வலம் வரும் நீயோ, அதை அலட்சியப்படுத்தி விட்டாய். உன் ஆணவத்துக்குக் காரணமான அந்தச் செல்வம் முழுவதையும் நீ இழக்கக் கடவாய்!'' என சாபம் கொடுத்தார்.

உத்தமர் சாபம் உடனே பலித்தது. தேவேந்திரனது செல்வங்கள் அவனை விட்டு நீங்கி மறைந்தன. பாற்கடலைக் கடைந்தால்தான் இழந்த செல்வம் முழுவதையும் திரும்பப் பெற முடியும் என்ற நிலை தேவேந்திரனுக்கு. ஆகவே, தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து ப

ாற்கடலைக் கடைவது என முடிவாயிற்று.

திருப்பாற்கடலில் எல்லா விதமான மூலிகைகளையும் போட்டார்கள். மந்தர மலையை மத்தாக்கி, வாசுகி என்ற பாம்பைக் கயிறாகச் சுற்றி, பாற்கடலைக் கடையத் தொடங்கினர். வாசுகியின் தலைப்பக்கத்தை அசுரர்களும், வால் பக்கத்தை தேவர்களும் பிடித்துக் கொண்டனர். படுவேகமாகப் பாற்கடல் கடையப்பட்டது.

சோதனை போல, மத்தான மந்தர மலை கடலுக்குள் அமிழத் தொடங்கியது. உடனே மகாவிஷ்ணு கூர்மாவதாரம் எடுத்து, அதைத் தாங்கி, மூழ்காதபடி தடுத்தார். பழையபடியே கடலைக் கடைந்தார்கள். அப்போது வேறு ஒரு விபரீதம் விளைந்தது. ஆலகால விஷம் எழுந்தது. அதன் கடுமையைத் தாங்க முடியாத அனைவரும் அங்கிருந்து ஓடி, நந்திதேவரிடம் அனுமதி பெற்றுக் கயிலாயத்தின் உள்ளே போய் சிவபெருமானின் திருவடிகளில் விழுந்தார்கள்.

''ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் ஜோதியே! உமையருபாகா! கங்காதரா! கடுமையான இந்த விஷத்தில் இருந்து எங்களைக் காக்க வேண்டும் ஸ்வாமி... அபயம்... அபயம்!'' என்று வேண்டினர்.

சிவபெருமான் திரும்பினார். அருகில் இருந்த அவரின் மறு வடிவான சுந்தரரைப் பார்த்தார்: ''கடும் விஷத்தைக் கைகளில் எடுத்துக் கொண்டு வா!'' என்றார்.

இந்த இடத்தில் கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள், '''சுந்தரா! அவ்விடத்தை இவ்விடத்துக்குக் கொண்டு வா!’ என்றார் பரம்பொருளான சிவபெருமான்!'' என அழகாக நயம்படக் கூறுவார்.

விஷத்தைக் கொண்டு வந்தார் சுந்தரர். ஆல(கா)ல விஷத்தைக் கொண்டு வந்ததால் அவர், 'ஆல(க)£ல சுந்தரர்’ எனப்பட்டார். விஷத்தை வாங்கிய சிவபெருமான் அதை உண்டார். தன் கழுத்திலேயே அதை நிறுத்திக் கொண்டார். அதன் காரணமாக அவருக்கு '(திரு)நீலகண்டர்’, 'ஸ்ரீகண்டன்’ என்ற திருநாமங்கள் உண்டாயின.

(சிவபெருமான் விஷத்தை உண்டபோது, 'அகில உலகங்களும் இவருக்குள் இருக்கின்றன. இந்த விஷம் உள்ளுக்குள் இறங்கிவிட்டால், உலகங்களில் இருக்கும் ஜீவராசிகள் அனைத்துக்கும் துயரம் உண்டாகும். விஷம், வெளியே வந்து விட்டாலோ, தேவர்களும் அசுரர்களும் துயரம் அடைவார்கள். யாருக்கும் எந்தத் துயரமும் ஆலகால விஷத்தால் உண்டாகக் கூடாது!’ என்ற கருணை உள்ளத்துடன் அம்பிகை, சிவபெருமானின் கழுத்தைத் தடவினாள். விஷம் அங்கேயே நின்று விட்டது என்றும் சொல்வது உண்டு.)

அனைவரும் மனக் கலக்கம் தீர்ந்தார்கள். அவர்கள் மகிழ்ச்சி அடையும் பொருட்டு, ரிஷபத்தின் பிரணவ வடிவமான கொம்புகளின் நடுவில் சிவபெருமான் ஆனந்தத் தாண்டவம் ஆடினார்.

மற்ற தெய்வங்களும் மகா முனிவர்களும் உட்பட அனைவரும் மகாதேவனின் அந்த ஆனந்தத் தாண்டவத்தை தரிசித்தார்கள். இவ்வாறு சிவபெருமான் அருள் புரிந்த காலமே 'பிரதோஷ வேளை’ எனப்படுகிறது.

ரஜனீ-பிரதோஷம்*

பிரதோஷத்துக்கு 'ரஜனீ முகம்’ என்ற பெயர் உண்டு. சம்ஸ்கிருதத்தில் 'ரஜனீ’ என்றால் இரவு என்று பொருள். 'ரஜனீ முகம்’ என்பது இரவின் முன்பகுதியான சாயங்காலத்தைக் குறிக்கும்.

வளர்பிறை திரயோதசி திதி அன்றும், தேய்பிறை திரயோதசி திதி அன்றும் - மாலை 4.30 முதல் 6 மணி வரை உள்ள காலம் 'பிரதோஷ காலம்’ எனப்படுகிறது.

தேவர்களுக்கும் மற்றவர்களுக்கும் சிவபெருமான் அருள் புரிந்தது, ஒரு சனிக்கிழமையன்று என்பதால், சனிக்கிழமை அன்று வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது.

பிரதோஷங்கள் ஐந்து!*

பிரதோஷத்தில் ஐந்து வகை உண்டு: நித்தியப் பிரதோஷம், பக்ஷப் பிரதோஷம், மாதப் பிரதோஷம், மகா பிரதோஷம், பிரளயப் பிரதோஷம் என்பவை அவை.*

நித்தியப் பிரதோஷம்:* ஒவ்வொரு நாளும் சூரியன் மறைவதற்கு முன்னால் இருக்கும் ஒன்றரை மணி நேரத்தில் இருந்து (சுமாராக மாலை 4.30 மணியில் இருந்து), நட்சத்திரங்கள் தோன்றக் கூடிய காலம் வரை உள்ள மாலை நேரம், நித்தியப் பிரதோஷம் எனப்படும்.

பக்ஷப் பிரதோஷம்:* வளர்பிறை திரயோதசி திதியில் வரும் பிரதோஷம் 'பக்ஷப் பிரதோஷம்’ எனப்படும்.

மாதப் பிரதோஷம்:* தேய்பிறை திரயோதசி திதியில் வரும் பிரதோஷம் 'மாதப் பிரதோஷம்’ எனப்படும்.

மகா பிரதோஷம்:* சிவ பெருமான் விஷம் அருந்தி, துயர் தீர்த்த (பிரதோஷம்) காலம் ஒரு சனிக்கிழமையன்று என்பதால், சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் 'மகா பிரதோஷம்’ எனப்படும்.

பிரளய பிரதோஷம்:* பிரளய காலத்தில் எல்லா ஜீவராசிகளும் சிவபெருமானிடம் ஐக்கியம் ஆகும். உலக முடிவில் உண்டாகும் அந்தக் காலமே பிரளய பிரதோஷம் என அழைக்கப்படுகிறது.

பிரதோஷத்தின்போது வலம் வரும் முறை*

மற்ற நாட்களில் சிவன் கோயிலில் வலம் வருவதற்கும் பிரதோஷத்தின்போது வலம் வருவதற்கும் வித்தியாசம் உண்டு.

 பிரதோஷத்தன்று வலம் வரும் முறையை, 'சோமசூக்தப் பிரதட்சிணம்’ அல்லது சோமசூத்ரப் பிரதட்சிணம் என்று சொல்வார்கள்.*

சோமசூக்தப் பிரதட்சிணம் செய்யும் முறை:* முதலில் நந்தியை வணங்கி, பிறகு அதன் பிரணவ வடிவமான கொம்புகளின் நடுவே சிவபெருமானை தரிசனம் செய்ய வேண்டும்.

அதன் பிறகு வழக்கமாக வலம் வருவதற்கு மாறாக, அப்பிரதட்சிணமாக (எதிர் வலமாக) சண்டிகேஸ்வரர் சந்நிதி வரை போய்த் திரும்ப வேண்டும். அபிஷேகத் தீர்த்தம் வரும் வழியைத் தாண்டக் கூடாது!

இதன்பின் போன வழ

ியே திரும்ப வேண்டும். நந்தியை தரிசித்து, தினந்தோறும் செய்யும் வழக்கப்படி வலம் வர வேண்டும். அப்போதும், அபிஷேகத் தீர்த்தம் வரும் வழியைத் தாண்டாமல் அப்படியே திரும்பி, நந்தி வரை வர வேண்டும். இந்த முறைப்படி மூன்று தடவை செய்ய வேண்டும். இதுவே 'சோமசூக்தப் பிரதட்சிணம்’.

ஆலகால விஷம் வெளிப்பட்டபோது, பயத்துடன் அனைவரும் கயிலையை நோக்கி ஓடினர். அப்போது விஷம் அப்பிரதட்சிணமாக - அவர்களுக்கு எதிராக வந்து விரட்டியது. எனவே, அவர்கள் வந்த வழியே திரும்பி ஓடினர். அங்கும் அவர்களுக்கு எதிராக விஷம் வந்து துன்புறுத்தியது. இப்படி இட-வலமாக அவர்கள் வலம் வந்த முறைதான் 'சோமசூக்தப் பிரதட்சிணம்’ என்று கடைப்பிடிக்கப்படுகிறது.

பிரதோஷ காலத்தில் மேற்குறிப்பிட்ட முறைப்படி தரிசனம் செய்து வழிபட்டால் கடன், வியாதி, அகால மரணம், வறுமை, பாவம், மனத் துயரம் முதலானவை நீங்கும். முக்தி கிடைக்கும்.*

பிரதோஷத்தின்போது கோயில்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். 'சோமசூக்தப் பிரதட்சிணம் செய்கிறேன் பேர்வழி’ என்று நாம் நிலையாக நந்திக்கு முன்னால் நின்று கொள்ளக் கூடாது. கோபமே இல்லாமல், பொறுமையாக, அமைதியாக வலம் வர வேண்டும்.

நந்திகேஸ்வரருக்குக் காப்பரிசி நிவேதனம் ஏன்?*

குழந்தை இல்லாக் குறை நீங்குவதற்காக சிலாத முனிவர் என்பவர், சிவபெருமானை நோக்கிக் கடுந்தவம் இருந்தார். சிந்தை குவிந்த அவரது தவம், அரனை அவர் முன்னால் கொண்டு வந்து நிறுத்தியது.

''சிலாதா! என்ன வேண்டும் கேள்!'' என்றார் சிவபெருமான்.

''தெய்வமே... நீயே எனக்குப் பிள்ளையாக வர வேண்டும்!'' _ சிலாதர்.

''என் அம்சமாக உனக்கு ஒரு பிள்ளை பிறக்கும். கவலையை விடு!'' என்று அருள் புரிந்து மறைந்தார் சிவபெருமான்.

இறைவனின் வாக்குப்படி சிலாதருக்கு ஓர் ஆண் குழந்தை அவதரித்தது. அந்தக் குழந்தையே 'நந்தி’.

சிவத்தை நோக்கி தவத்தைச் செய்த நந்தி, சிவபெருமானுடன் கயிலாயத்தில் இருக்கும் பேறு பெற்றார். வாயிற்காவல் தொழிலைப் பெற்று, ஒரு கணத்துக்கு (சிவ கணங்களில் ஒரு பிரிவு) தலைவராகவும் சிவபெருமானால் நியமிக்கப்பட்டார்.

தேவர்களும் அசுரர்களும் ஆலகால விஷத்துக்கு பயந்து கயிலாயத்துக்கு வந்து சிவபெருமானிடம் முறையிட்டபோது, ''பயப்படாதீர்கள்!'' என்று அபயம் அளித்த சிவபெருமான், எதிரில் இருந்த நந்திகேஸ்வரனை அழைத்து, ''அந்த ஆலகால விஷத்தை இங்கே கொண்டு வா!'' என்றார் (இப்படியும் சொல்வதுண்டு).

ஈசனை வணங்கி விடை பெற்ற நந்திபகவான், ஆலகால விஷத்தை நெருங்கினார். அதன் வெம்மை மாறியது. அதை எடுத்துக் கொண்டு வந்து ஈஸ்வரனிடம் தந்தார். ஈசன் அதை வாங்கி உண்டார்.

அருகில் இருந்த அம்பிகை, சிவபெருமானின் கழுத்தை மென்மையாகத் தொட்டதால், விஷம் அங்கேயே நின்று விட்டது. இதைப் பார்த்த நந்தி பகவான் கேலியாகச் சிரித்தார். ''ஹே! இந்த விஷம் அவ்வளவு கடுமையானதா? சர்வ சாதாரணமாக நான் எடுத்து வந்த விஷமான இதற்கு, கொல்லும் அளவுக்குச் சக்தி இருக்கிறதா என்ன?'' என எகத்தாளமாகப் பேசினார்.

உடனே சிவபெருமான், ''நந்தி! இங்கு வா!'' என்று அழைத்து, விஷத்தை வாங்கி உண்ட தன் கையை விரித்து,  ''இதை முகர்ந்து பார்!'' என்றார்.

நந்தி பகவான் முகர்ந்தார். அதே விநாடியில் சுயநினைவை இழந்தார். கீழே விழுந்தார். எழுந்தார். அழுதார். சிரித்தார். பித்துப் பிடித்தவர் போலப் பலவிதமான சேஷ்டைகளைச் செய்து சுற்றித் திரிந்தார்.

உலகின் அனைத்து ஜீவராசிகளுக்கும் தாயான உமாதேவி அதைக் கண்டு வருந்தினாள். ''ஸ்வாமி! நந்திக்கு இப்படிப்பட்ட தண்டனை தரலாமா? போதும்... மன்னித்து விடுங்கள்!'' என வேண்டினாள்.

''உமாதேவி! ஆணவத்துடன் பேசியதால் அவனை அடக்கவே அவ்வாறு செய்தோம். விஷத்தின் வாசனையை முகர்ந்ததற்கே இந்தப் பாடுபடுகிறான் என்றால், அதை உண்டால் என்ன பாடுபட்டிருப்பான்? அதை அவனுக்குக் காட்டவே இவ்வாறு செய்தோம். அரிசியைப் பொடி செய்து வெல்லத்துடன் சேர்த்துக் கொடு. அவன் தெளிவு பெற்றுப் பழைய நிலையை அடைவான்!'' என்றார் சிவபெருமான்.

அவரது சொற்படியே செய்தாள் அம்பிகை. அதை உண்ட நந்தி பழையபடி சுயநிலையை அடைந்தார்.

அன்று முதல் பிரதோஷ நாளன்று, நந்திக்குக் காப்பரிசி நைவேத்தியம் செய்யப்படுகிறது

ஓம் நமசிவாய 🌹🌹🌹

#கண்டேன்_அவர்_திருப்பாதம் #கண்டறியாதன_கண்டேன் அப்பர் சுவாமிகள்...

#திருக்கைலாயம் என்ற #திருநொடித்தான்மலை 🙏🙇
#கண்டேன்_அவர்_திருப்பாதம் #கண்டறியாதன_கண்டேன் 
🙏🙇

சீனாவின் எல்லைக்குட்பட்ட திபெத் பகுதியில் அமைந்திருக்கும் 'திசே' எனும் ஒரு மலை தான் நமது புராணங்களில் 'கயிலை' என்று போற்றப்பட்ட மலை.  சைவம், பௌத்தம், சமணம், திபெத்திய பொன் சமயம் நான்கிலும் முக்கியமானது இம்மலை. பொன்  சமயத்தவருக்கு உலகத்தின் அச்சு. சைவத்தில் சிவனது உறைவிடம். பௌத்தநூல்கள் சொல்லும் மகாமேரு. சமணரின் தீர்த்தங்கரர் இடபதேவர் முக்தியடைந்த அஷ்டபத கிரி, எல்லாம் இதுதான். சிந்து நதியும் பிரம்மபுத்திரா முதலிய ஆறுகளும் இம்மலையடிவாரத்தில் அமைந்துள்ள மானசரோவர் ஏரியில் தான் ஊற்றெடுக்கின்றன.

இந்தியாவிலிருந்து பயணிப்பது என்றாலே, விசேட அனுமதி பெற்று  விமானத்தில் நேபாளம் போய், அங்கிருந்து இப்பகுதிக்குச் செல்லவேண்டும். இந்தியாவிலிருந்து செல்ல சாதாரணமாக 2000 அமெரிக்க டொலர் செலவு செய்யவேண்டுமாம்.  மிகக்கடுமையான பயணம் அது. எந்தவித வசதிகளுமற்ற பனிப்பிரதேசம். உயரம் அதிகம் என்பதால் மூச்சுத்திணறல், சுவாசப்பிரச்சினைகள் ஏற்படும். யாத்திரை செல்லும் முதிர்ந்த பலர் அங்கேயே மரிப்பதுண்டு. 

இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலேயே இப்படி இருக்கும் இந்த மலைக்கு, அந்தக்காலத்தில் பயணப்பட்டார் ஒரு மனிதர். வயது எழுபதைத் தாண்டிவிட்டது. தமிழகத்திலிருந்தே கால்நடையாகச் சென்றார். கேட்கவும் வேண்டுமா? கல்லும் மண்ணும் அடர்ந்த வரண்ட காட்டுப்பாதை. கால் தேய்ந்தால் என்ன, கையால் நடப்பேன், கை தேய்ந்தால் நெஞ்சால் நடப்பேன், நெஞ்சும் தேய்ந்தால் ஊர்ந்தாவது போவேன்,  என்னும்  வைராக்கியம். உடல் கேட்கவில்லை. பல இடங்களில் தடுமாறி விழுந்தார். சாப்பாடில்லை. தண்ணீரில்லை. உடம்பில் சிராய்ப்புக்காயங்கள். தோலெல்லாம் உரிந்துவிட்டது. கண்ணெல்லாம் இருட்டி வந்தது. முடியவில்லை. அறிவுமயங்கி கீழே விழுந்துவிட்டார்.

கண் விழித்தபோது இன்னொரு வயோதிபர் தனக்கு பணிவிடை செய்துகொண்டிருப்பதைக் கண்டார். அவர் கொடுத்த தண்ணீரை திணறியபடி அருந்தி மீண்டார். விடாய் அடங்கியிருந்தது. உடம்பில் ஓரளவு தெம்பு திரும்பியது போலிருந்தது. இவருக்கு நன்றி கூறிவிட்டு புறப்பட முயன்றார்.

"எங்கு செல்கிறீர்?"

"கயிலைக்கு."

"இந்த வயதிலா?"

"ஏன் போகக்கூடாதா?"

"இல்லை மோசமான பாதை"

"அது தெரியும்"

"ஏற்கனவே களைத்து விழுந்து விட்டீர்"

"இதோ, எழுந்து விட்டேன் தானே?"

"ஐயா, சொன்னால் கேளும். உம்மால் கயிலைக்குப் போகமுடியாது"

"போக முடியாவிட்டால் போகும் வழியிலேயே செத்து விழுகிறேன்"

"உம் மீது அக்கறையில் தான் சொல்கிறேன்"

"உம் அக்கறைக்கு நன்றி"

வயோதிபர் புன்னகைத்தார். "சரி.  சொல்லும், ஏன் கயிலைக்குப் போகிறீர்?"

"இதென்ன கேள்வி. அங்கே என்னப்பனும் அம்மையும் அழகுற அமர்ந்திருக்கும் காட்சியைத் தரிசிக்கத்தான்" அவர் கண்கள் கசிந்தன.

"சரி. நம்புகிறேன். நீர் கட்டாயம் கயிலையைக் காண்பீர். அதற்கு முதல் களைப்புத் தீர கொஞ்சம் ஓய்வெடுத்துவிட்டுச் செல்லும்.   நான் உமக்கு ஏதாவது உண்பதற்கு  தயார் செய்கிறேன்."

"உமக்கு கடன்பட்டிருக்கிறேன். ஆனால் நேரத்தை வீணாக்க நான் தயாரில்லை. புறப்படுகிறேன்"

"சரியான பிடிவாதக்காரர் நீர், ஓய். ஓய்வெடுக்கவேண்டாம். அருகில் ஒரு தடாகம் இருக்கிறது. குளித்துவிட்டாவது புறப்படுகிறீரா? உடல் களைப்பாவது தீரும்."

இவர் யோசித்தார். குளித்தால் கொஞ்சம் நன்றாகத் தான் இருக்கும். அப்படியே நடந்து குளத்தில் இறங்கினார். குளிர்ந்த நீர் முதிர்ந்த உடலை மெல்ல நடுங்கச்செய்தது. உடலிலிருந்த காயங்கள் எல்லாம் தீப்பட்டது போல் எரிந்தன. சிவசிவ என்றபடியே நீரில் மூழ்கினார். உடல் குளிரத்தொடங்கியது. கண்கள் சொக்கிக்கொண்டு வந்தன.

மூச்சுத்திணறுவதை உணர்ந்து திடுக்கிட்டு விழித்து மேலே வந்தவர் திகைத்துப்போனார். "இது எந்த இடம், எங்கு நிற்கிறேன் நான்?  என்னை குளிக்கச்சொன்ன முதியவரைக் காணவில்லையே? ஆ! இது ஐயாறு, திருவையாறு சிவன் கோவில். இங்கெப்படி நான் வந்தேன்?"

இப்படி அதிர்ந்தவர் தன்னை மேலும் கீழும் பார்த்தார். உடல் மீண்டிருந்தது. காயங்களின் தடத்தைக் கூடக் காணவில்லை. அதிசயமாக இருக்கிறது. ஒருவேளை கனவேதும் கண்டபடி இந்தக் குளத்தில் விழுந்துவிட்டேனோ!

வியப்புடன் சுற்றுமுற்றும் பார்வையை செலுத்தினார். இனிமையான அதிகாலை. இப்போது தான் விடிய ஆரம்பித்திருக்கிறது. கோவில் இளவெயிலில் மெல்ல தெளிந்துவந்தது. பறவைகளின் ஓசை. விடிவதை அறியாத சுவர்க்கோழியின் சத்தம். 

சில அடியவர்கள் வந்து குளத்தில் இறங்கி தாமரைமொட்டுக்களைப் பறித்து  குடத்தில் நீரள்ளி கோவில் நோக்கி நடந்துசென்றார்கள். ஏதோ முடிவுக்கு வந்தது போல் குளத்திலிருந்து வெளியேறி அவர்களுக்குப் பின்னால் நடக்கத் தொடங்கினார். இவர் 

தூரத்தே ஒரு பிளிறல், திரும்பிப் பார்த்தால் கோவில்யானைகள் இரண்டு மெல்ல அசைந்தாடி வந்துகொண்டிருந்தன. ஆண் யானை, பிடியானை மீது மெல்ல முட்டியது. பிடி விலகி கோபத்துடன் உறுமியது. களிறு மீண்டும் செல்லமாக முட்டியது. பின் அதன் மீது அன்போடு  தும்பிக்கையைப் போட்டது. பிடி செவிச்சுளகுகளை வீசி மெல்ல முனகியது. 

யானைகளின் குறுக்கே ஓடியது ஒரு பெட்டைக்கோழி. அதைத் துரத்திக்கொண்டு வந்தது ஒரு சேவல். கொக்கரக்கோ என்று அது கூவ, கோழி கொக்கொக் என்று மறுத்தபடி வேகமாக நடந்தது. விர்ரென்று கிறீச்சிட்டபடி  இரு பறவைகள் வானில் தோன்றின. அண்ணாந்து பார்த்தால் குயில்கள். குளத்தின் கரையிலிருந்த  வில்வ மரத்தின் ஒரு கிளையில்  ஊடலுடன்  ஒரு குயில் அமர, மற்றையது அடுத்த கிளையில் அமர்ந்து கூவியது. "கூ...!" வசந்தத்தின் கீதம். 

மரத்தின் கீழே கொடியில் காயப்போட்ட வெண்ணிறத்துணிகள் இரண்டு பறந்தன. என்ன அது? ஓ, அன்னங்கள். இரு அன்னங்கள் "அழகாக நடக்கிறோம், இல்லையா?" என்று இடையை அசைத்து கேட்டபடி நடந்து மெல்ல குளத்தில் இறங்கின. குளத்தின் அக்கரையில் "மாயோன்" என்று அகவியது ஆண்மயிலொன்று. அருகே அவன் தோழி மண்ணைத் தோண்டி எதையோ கொத்தி உண்டுகொண்டிருந்தாள். "நான் அருகில் இருக்க என்ன தீனி வேண்டிக் கிடக்கிறது உனக்கு" என்று  தோகைவிரித்து சிலிர்த்தாடினான் அவன். அவள் அவனைக் கவனிக்கவேயில்லை. நிலத்தைக் கிளறுவதில் மும்முரமாக இருந்தாள்.

அவர்களின் தலைக்கு மேலால் பறந்த இரு அன்றில் பறவைகள் கீச் என்றபடி வேகமாக வந்து கரையிலிருந்த கோரைப்புதரில் புகுந்து மறைந்தன. உறுமியபடி அந்தப்பக்கம் குளத்தில் நீர்குடிக்க வந்தன காட்டுப்பன்றியும் அதன் துணையும். அதனருகே கலைமானும் அதன் பிணையும் "ம்?" என்றன. எங்கிருந்தோ வந்து குளத்தில் இறங்கிய ஒரு நாரைச்சோடி "பேக்!" என்றபடி நீரில் பாய்ந்தது. "கீக்கீ!" என்று அவற்றுக்குப் பதிலளித்தபடி அடுத்த மரத்தில் சிரித்தன இரு கிளிகள்.

மிக அருகே "ம்பா" என்று கேட்ட சத்ததைக் கேட்டு அவர் பதறி விலகினார். அது ஒரு மாடும் பசுவும். கனிந்த கண்களால் அவரைப் பார்த்து நாக்கைச் சுழற்றி மூக்கைத் துடைத்தது எருது. பசு அதனருகே குனிந்து "ஹ்ரூம்" என்றது. இரண்டும் அவரை விலகி நடந்து குளக்கரையை நெருங்கின. 

ஒவ்வொன்றாகப் பார்த்து வந்தவருக்கு உள்ளே எதுவோ அதிர்ந்தது. மயங்கிக்கிடந்த தன்னை மீட்டு தண்ணீர் தந்த வயோதிபரின் கள்ளமற்ற விழிகள் நினைவில் எழுந்தன. "இதென்ன கேள்வி. அங்கே என்னப்பனும் அம்மையும் அழகுற அமர்ந்திருக்கும் காட்சியைத் தரிசிக்கத்தான்" என்று தான் சொன்னதும், அவர் சிரித்து "சரி. நம்புகிறேன். நீர் கட்டாயம் கயிலையைக் காண்பீர்." என்று சொன்னதும் இவர் மூளையில் பளிச்சிட்டன.  உடல் முழுதும் மெல்லிய பரவசம் பரவியது. ஆ! இதுதான் கயிலை! இதுதான் கயிலை! நான் எதற்கு அவ்வளவு தூரம் செல்லமுயன்றேன்? கண்டுகொண்டேன்! இதுவரை கண்டறியாததைக் கண்டுகொண்டேன்! என் அப்பனே, என் அம்மையே, இத்தனை அருகிலா இருந்தீர்கள் நீங்கள், தெரியாமல் போய் விட்டதே எனக்கு!

பெரியவர் உருகினார். அவர் கண்களில் ஆனந்தக்கண்ணீர் வடிந்தது. அதற்குள் வந்திருப்பது யாரென்று அந்தப்பகுதியில் உலவியவர்களுக்குத் தெரிந்துவிட்டது. எல்லோரும் கைகூப்பியபடி ஓடிவந்தார்கள். அவர் கண்களை மூடி குரலை சுருதிகூட்டினார்.  கிழக்கே எழுந்த சூரியனின் முதற் கிரணம் அவர் மீது விழுந்ததில் முதிய குரல்வளை ஏறி இறங்குவது தெரிந்தது. உதடுகள் மெல்ல அசைந்தன. வந்துவிழுந்தன சொற்கள் "மாதர் பிறைக்கண்ணியானை மலையான் மகளோடும் பாடி"  பாடிமுடித்ததும் கூடியிருந்தவர்கள் நெகிழ்வுடன் கைகூப்பினார்கள் " நமோ பார்வதீபதயே! அரகர மகாதேவா! அப்பரே போற்றி! தம்பிரான் அடிகளே போற்றி!"

*********

இப்படியாக,  சைவத்தின் சமய நாற்குரவர் நால்வரில் ஒருவரான அப்பரடிகள், கயிலைக்குச் செல்ல திட்டமிட்ட பயணம், திருவையாறு நோக்கித் திருப்பப்பட்டு அவர் அங்கு “மாதர்பிறைக்கண்ணி யானை” என்று தொடங்கிப் பாடிய பதினொரு பாட்டுகளுக்கும் “கயிலைப்பதிகம்” என்று பெயர்.  இந்தப் பாடல்கள் எல்லாவற்றிலுமே ஒரு கவித்துவ அழகு உண்டு. 

இந்த எல்லாப் பாடல்களுமே சந்திரனைக் கண்ணியாகக் கொண்டவன் என்று தொடங்குகின்றன. மாதர்ப்பிறை (அழகான பிறை), போழிளம் (இளம்பிறை), எரிப்பிறை (ஒளிரும் பிறை), ஏடுமதி (இளம்பிறை) என்றெல்லாம் அவை சந்திரனை வர்ணிக்கின்றன. கண்ணி என்றால் ஆண்கள் தலையில் அணியும் பூமாலை. சிவன் தலையில் இளம்பிறையே கண்ணியாக விளங்குகிறது என்று பாடுகிறார் அப்பர்.

இரண்டாம் வரிகள் எல்லாம் சிவன் உமையோடு இருப்பதைப் பாடுகின்றன. மலையான்மகளொடும் பாடி, பூந்துகிலாளொடும் பாடி, ஏந்திழையாளொடும் பாடி, என்று பலவாறு வருகின்றது. பதினொரு பாட்டின் எல்லா ஐந்தாம் வரிகளும் “கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்” என்று முடிகின்றன. இதற்கு முன்பு தான் அறியாத ஏதோவொன்றைத் தான் கண்டுவிட்டேன். அப்படிக் கண்டதால் அவர் திருப்பாதம் கண்டேன் என்று பொருள்.

சிவன் தலையில் அணிந்த பிறையைப் பாடுவதில் தொடங்கி பாதங்களைப் பாடுவதில் முடியும் இப்பாடல் “கேசாதிபாதம்” எனும் பிற்கால சிற்றிலக்கிய வகைக்கு அடிப்படை. தெய்வங்களை உச்சி (கேசம் - தலைமுடி) முதல் உள்ளங்கால் (பாதம்) வரை வர்ணிப்பது தான் கேசாதிபாதம். பிற்காலத்தில் பாதத்திலிருந்து தலை வரை மாறிப் பாடும் வழக்கமும் ஏற்பட்டது. அதற்கு “பாதாதிகேசம்” என்று பெயர்.

பதினொரு பாடல்களிலும் கேசாதிபாதம் பாடும் அப்பர், ஈசனுடன் இணைபிரியாதிருக்கும் உமையவளையும் பாடுகிறார். இப்படி இருவரையும்  அடி முதல் முடி வரை கண்ணாரக் கண்டுவிட்டதால், கண்டறியாதன கண்டுகொண்டேன் என்கிறார் அவர். அப்படி என்ன கண்டறியாததைக் கண்டுவிட்டார் அப்பர்?

இதற்கான பதில் ஒவ்வொரு பாட்டிலும் நான்காவது வரியில் வருகின்றது. ஒவ்வொரு பாட்டிலுமே ஒவ்வொரு விலங்குச்சோடி பாடப்படுகிறது. நாம் மேலே பார்த்த களிறும் பிடியும், சேவலும் கோழியும், அன்னமும் பேடும், இப்படி பதினொரு விலங்குகளின் இணையைப் பார்த்ததைத் தான் கயிலையில் சிவனுமையைக் கண்டதாகப் பாடுகிறார் அப்பர்!

ஒன்றோடு ஒன்று தொடர்புகொண்ட, ஆனால் முற்றாக மாறுபட்ட இரண்டை இறைவனின் உருவமாகக் காணும் மரபே சைவமரபு. மணிவாசகர் “மெய்மையும் பொய்மையும் ஆயினாருக்கு, சோதியுமாய் இருள் ஆயினார்க்கு, இன்பமும் துன்பமும் ஆயினார்க்கு” என்று முரண்களின் இருமையாகவே இறைவனைப் பாடுவார். சிவனும் உமையுமே கூட முரண்களின் இருமை தான். அவன் ஆண், அவள் பெண்; அவன் சிவப்பு, அவள் கறுப்பு; அவன் நெருப்பு அவள் நீர். அந்த இருமையைத் தான் அப்பர் பாடுகிறார். யானைச்சோடி, அன்னச்சோடி, கிளிச்சோடி என்றெல்லாம். 

இறைவனின் அடியையும் முடியையும் ஆனானப்பட்ட பிரம்மா விஷ்ணுவாலேயே காணமுடியாது என்பது ஐதிகம். ஒன்றை ஒன்று நிரப்புகின்ற – ஒன்றாலொன்று ஆன இயற்கையின் ஆண்-பெண் இருமையில் சிவசக்தியைக் கண்டுகொண்ட அப்பர், அடிமுடி கண்டதாக உரிமைகோருகிறார். கயிலையைக் கண்டேன், கண்டறியாதன கண்டுகொண்டேன் என்று மகிழ்ந்தாடுகிறார்.   

தமிழ்ப்பக்தி மரபில் அப்பரின் கயிலைப்பதிகம், முக்கியமான புரட்சி. கயிலைக்கெல்லாம் புறப்பட்டுக் கடவுளைத் தேடி நீ போகத் தேவையில்லை. நம்மைச் சுற்றி இருக்கும் ஒவ்வொரு உயிர்ச்சோடியுமே சிவனுமை தான். நாம் வாழும் இடமே கயிலை தான் என்ற மகத்தான தரிசனம் இடம்பெற்ற பாடல் அது. எத்தனை மனமுடைந்திருந்தாலும், மனதுக்குப் பிடித்தவர் அருகில் இருக்கிறார் என்று கற்பனை செய்துகொள்வதே சில சந்தர்ப்பங்களில் நாம் மீண்டுகொள்ளப் போதுமானது. கடவுளே நம்மருகில் இருக்கிறான் என்று எண்ணிக்கொள்வது? அவனது இடத்தில் இப்போது நாம் இருக்கிறோம் என்று எண்ணிக்கொள்வது?

அந்த மகிழ்ச்சியைத் தருவது இந்தக் கயிலைப்பதிகம். 

"மாதர்பிறை கண்ணியானை மலையான் மகளொடும் பாடி

போதொடு நீர்சுமந்தேத்தி, புகுவார் அவர்பின் புகுவேன்

யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்றபோது

காதல் மடப்பிடியோடு களிறு வருவன கண்டேன்.

கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்.

**“கண்டேனவர் திருப்பாதம், கண்டறியாதன கண்டேன்!”** 

திருச்சிற்றம்பலம்
🙏🙇

Thursday, September 28, 2023

சிவனை வணங்கினால் சிறப்பான வாழ்வுவரும் என்கின்றன ஆகம விதிகள்

*வேறு எங்கும் காண இயலாத சிறப்பான 28 சிவ ஆகமக் கோயில்*
ஆகமம் என்பதன் பொருள் என்ன?

சிவனை வணங்கினால் சிறப்பான வாழ்வு
வரும் என்கின்றன ஆகம விதிகள், 

அந்த ஆகமம்
என்பதன் பொருள் என்ன?

ஆ-ஆகதம்
சிவ பத்ராஸ்ச-
சிவ பெருமான் 
வாக்கிலிருந்து
வந்த

க-கதம்து கிரிஜா கதௌ -கிரிஜா என்ற
பார்வதிக்கு உபதேசிக்கப்பட்டது.

ம-மதஞ்ச வாசுதேவஸ்ச -வாசுதேவனாம்
மகாவிஷ்ணு வால் தன் 
மதம் ஏற்றுக்
கொள்ளப்பட்டது.

ம்-தஸ்மாது ஆகம
ஈரித:- இவை அனைத்தும் சேர்ந்ததே ஆகமம்.

ஆகம விஷயங்கள் இரகசியங்களை
அறிந்தவர்கள் சுக போக வாழ்க்கையை
அடைவார்கள

1 . சிவாகமங்கள்:
ஆகமங்கள் என்பவை இறைவனால்
அருளப்பெற்ற நூல்களாகும். 

இவை மனித
குலத்தவர்கள் நித்திய 
மோட்ச நிலையை
அடைவதற்குரிய வழிமுறைகளைப்
போதிக்கின்றன.

சிவபெருமான் மகேந்திர மலையில்
அமர்ந்திருந்து ஆகமங்களை அருளினார் என்று
மாணிக்க வாசக சுவாமிகள் திருவாசகத்தில்
குறிப்பிடுகின்றார்.

மன்னு மாமலை மகேந்திர மதனிற்
சொன்ன ஆகமம் தோற்றுவித்தருளியும்
என்று கீர்த்தித் திரு அகவலில் குறிப்பிடுகின்றார்.

சிவபெருமான் தமது ஐந்து முகங்களாலும்
இருபத்தெட்டு ஆகமங்களை அருளினார். 

இவை
சிவபேதம், ருத்திரபேதம் 
என்று இரண்டு
வகைப்படும்.

சிவபேதத்தில் பத்து ஆகமங்களும்,
ருத்திரபேதத்தில் 
பதினெட்டு ஆகமங்களும்
உள்ளன.

இந்த இருபத்தெட்டு ஆகமங்களின் பெயர்கள்
வருமாறு:
காமிகம், யோகஜம், 
சிந்தியம், காரணம்,
அஜிதம்,
தீப்தம், சூக்ஷ்மம், சகஸ்ரம், அம்சுமான்,
சுப்ரபேதம், விஜயம், நிச்வாசம், ஸ்வாயம்பு,
அநலம் ( ஆக்னேயம் ), வீரம், ரௌரவம்,
மகுடம், விமலம், சந்திரஞானம், முகபிம்பம்,
புரோக்கீதம், லளிதம், ஸித்தம், சந்தானம்,
சர்வோக்தம், பாரமேச்வரம், கிரணம், வாதுளம்
என்பனவாம்.

இவற்றை 28 லிங்கங்களாக விருத்தாசலம் பழமலைநாதர் ஆலயத்தில் முருகப்பெருமான் பிரதிஷ்டை செய்து பூஜை செய்துள்ளார். 

இந்த லிங்கங்கள் கைலாசப் பிராகாரத்தின் வட மேற்கு பகுதியில் தனி சன்னதியில் அமைந்துள்ளன. 

இதில் தெற்கு வரிசையில் உள்ள லிங்கங்களில் நடுவில் விநாயகரும், மேற்கு வரிசையில் உள்ள லிங்கங்களின் நடுவில் வள்ளி தெய்வானையுடன் முருகனும் அருள்பாலிக்கின்றனர். 

28 ஆகமங்களுக்குரிய பெயர்களான, காமிகேஸ்வரர், யோகேஸ்வரர், சிந்தியேஸ்வரர், காரணேஸ்வரர், அஜிதேஸ்வரர், தீபதேஸ்வரர், சூட்சமேஸ்வரர், சகஸ்ரேஸ்வரர், அம்சுமானேஸ்வரர், சப்பிரபேதேஸ்வரர், விசயேஸ்வரர், விசுவாசேஸ்வரர், சுவாயம்பேஸ்வரர், அநலேஸ்வரர், வீரேஸ்வரர், ரவுரவேஸ்வரர், மகுடேஸ்வரர், விமலேஸ்வரர், சந்திரஞானேஸ்வரர், முகம்பிபேஸ்வரர், புரோத்கீதேஸ்வரர், லலிதேஸ்வரர், சித்தேஸ்வரர், சந்தானேஸ்வரர், சர்வோத்தமேஸ்வரர், பரமேஸ்வரர், கிரணேஸ்வரர், வாதுளேஸ்வரர் என்ற பெயர்கள் அவற்றுக்கு சூட்டப்பட்டுள்ளன. 

இந்த அமைப்பு வேறு எங்கும் காண இயலாத சிறப்பாகும். 

இக்கோயிலை ஆகமக்கோயில் என்றும் அழைப்பார்கள்.

திருவண்ணாமலைக்கு “நவதுவார பதி” என்றும் ஒரு பெயர் உண்டு.

*திருவண்ணாமலை*

திருவண்ணாமலைக்கு “நவதுவார பதி” என்றும் ஒரு பெயர் உண்டு.
அதற்கு 9 நுழைவாயில்களைக் கொண்ட நகரம் என்று அர்த்தமாகும். திருவண்ணாமலைக்கும் 9 என்ற எண்ணுக்கும் நிறைய தொடர்பு உண்டு.

அதில் ஒன்று, திருவண்ணாமலை ஆலயத்தில் 9 கோபுரங்கள் இருப்பதாகும்.

இந்த 9 கோபுரங்களில் 4 கோபுரங்கள் பெரியது. 5 கோபுரங்கள் “கட்டை கோபுரம்” என்றழைக்கப்படும் சிறிய கோபுரங்களாகும். அந்த 9 கோபுரங்கள் விபரம் வருமாறு:-

1. ராஜகோபுரம் (கிழக்கு), 
2. பேய்க் கோபுரம் (மேற்கு),
3. திருமஞ்சன கோபுரம் (தெற்கு), 
4. அம்மணியம்மாள் கோபுரம் (வடக்கு), 
5. வல்லாள மகாராஜா கோபுரம், 
6. கிளி கோபுரம்,
7. வடக்கு கட்டை கோபுரம், 
8. தெற்கு கட்டை கோபுரம்,
9. மேற்கு கட்டை கோபுரம்.

*1. ராஜகோபுரம்*

திருவண்ணாமலை ஆலயத்தில் கிழக்கு திசையில் கம்பீரமாக ராஜகோபுரம் கட்டப்பட்டுள்ளது. இந்த கோபுரத்துக்கு ராயர் கோபுரம் என்றும் ஒரு பெயர் உண்டு.

தென்னகத்தில் மிகப்பெரும் ஆன்மிக பணி செய்த மன்னரான கிருஷ்ண தேவராயர் இந்த கோபுரத்தை கட்டுவதற்கு அடித்தளம் அமைத்தார் என்பதால் அவர் பெயரால் இந்த கோபுரம் அழைக்கப்படுகிறது.

ஒரு காலத்தில் இந்த கோபுரம்தான் தமிழ்நாட்டிலேயே மிக உயர்ந்த கோபுரமாக திகழ்ந்தது. அதன் பின்னணியில் ஒரு வரலாறு உள்ளது. தஞ்சையை ஆண்ட ராஜராஜசோழன் தஞ்சை பெரிய கோவிலை அமைக்கும்போது கருவறை கோபுரத்தை 216 அடிகள் உயரம் கொண்டதாக அமைத்து இருந்தார்.

அவருக்கு பிறகு 15-ம் நூற்றாண்டில் தென்னகத்தை ஆண்ட கிருஷ்ண தேவராயர் தனது வெற்றிகளுக்கு நினைவாக திருவண்ணா மலையில் பிரமாண்டமான ராஜகோபுரத்தை அமைக்க வேண்டும் என்று முடிவு செய்தார்.

ராஜராஜன் சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோவில் கோபுரத்தை விட அதிக உயரம் கொண்டதாக திருவண்ணாமலை ஆலயத்தின் ராஜகோபுரம் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

1550களில் அந்த ராஜ கோபுரத்தை கட்டும் பணியை கிருஷ்ண தேவராயர் தொடங்கி தீவிரப்படுத்தி இருந்தார்.

135 அடி நீளம், 98 அடி அகலத்தில் அடித்தளம் அமைத்து ராஜகோபுரத்தை அவர் எழுப்பினார். ஆனால்

அதன் பணிகள் முடிவதற்குள் அவர் காலம் முடிந்து விட்டது. இதையடுத்து அந்த ராஜகோபுரத்தை கட்டும் படி சிவநேசர், லோகநாதர் என்ற முனிவர்கள் தஞ்சையை ஆண்ட செவ்வப்ப நாயக்கரிடம் தெரிவித்தனர். அதை ஏற்று செவ்வப்ப நாயக்கர் திருவண்ணாமலை ராஜ கோபுரத்தை கட்டி முடித்தார்.

கிருஷ்ணதேவராயரின் ஆசைப்படி தஞ்சை பெரிய கோவில் கோபுரத்தை விட ஒரு அடி உயரமாக 217 அடி உயரத்துடன் திருவண்ணாமலை ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டது.

ஆங்கிரச ஆண்டு கார்த்திகை மாதம் புதன்கிழமை பவுர்ணமி ரோகிணி நட்சத்திர நாளில் அந்த ராஜகோபுரத்தில் கலசங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. அந்த ராஜகோபுரம் பார்க்க பார்க்க கண்களுக்கு சலிப்பே தராத சிறப்பை கொண்டது. எவ்வளவு நேரம் பார்த்தாலும் ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் இருக்கும்.

தஞ்சை பெரிய கோவில் கோபுரம் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு சாரம் கட்டி அமைக்கப்பட்டது என்று சொல்வார்கள்.

அதேபோன்றுதான் இந்த கோபுரமும் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு சாரம் கட்டி பெரிய பெரிய பாறாங்கற்களை கொண்டு வந்து அழகுற கட்டி முடிக்கப்பட்டதாகும். கோபுரத்தின் கீழ் பகுதி கற்களாலும் மேற்பகுதி செங்கல் மற்றும் சுதையாலும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

11 நிலைகள் கொண்ட இந்த கோபுரத்தில் விஜயநகர மன்னர்களின் கட்டிட கலை அம்சங்களை அதிகமாக காணலாம். கோபுரத்தின் சுற்றுப்பகுதிகளில் நிறைய நாட்டிய சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன.

விநாயகர், முருகர், பிரம்மா, துர்க்கை, காளை வாகனம், மயில்மேல் அமர்ந்த முருகன், அன்னபறவை, லிங்கத்திற்கு பால் வார்க்கும் பசு உள்பட பல்வேறு சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன.

கோபுரத்தில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள பூதகனங்களும் கண்களுக்கு விருந்து கொடுப்பதாக உள்ளன.

கோபுரத்தின் இடது பக்கத்தில் செல்வகணபதி சிலை உள்ளது. விறன்மிண்ட நாயனாரின் சிலையும் இடம் பெற்றுள்ளது. ஆங்காங்கே மன்னர் காலத்து கல்வெட்டுகளும் உள்ளன. அந்த காலத்தில் வாழ்ந்த புலவர்கள் இந்த கோபுரத்தின் அழகை புகழ்ந்து பாடியுள்ளனர். அந்த பாடல்களும் கல்வெட்டுகளாக உள்ளன.

அந்த காலத்தில் இறந்தவர்களின் 16-வது நாள் தினத்தன்று மோட்ச தீபம் ஏற்றி வழிபடுவார்கள். திருவண்ணாமலை மற்றும் சுற்றுப்பகுதி மக்கள் இந்த ராஜகோபுரத்தின் ஒரு பகுதியில் மோட்ச தீபம் ஏற்றுவதை வழக்கத்தில் வைத்திருந்தனர். சமீப காலமாக இந்த பழக்கத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

*2. பேய்க்கோபுரம்*

ராஜகோபுரத்திற்கு நேரே மேற்கு பகுதியில் பேய்க்கோபுரம் உள்ளது. இந்த கோபுரம் மலையை பார்த்தப்படி இருப்பதால் சிறப்பானதாகக் கருதப்படுகிறது.

ராஜகோபுரத்தை கட்டுவதற்கு கிருஷ்ணதேவ ராயர் திருப்பணிகள் தொடங்கியபோதே இந்த மேற்கு கோபுரத்தை கட்டுவதற்கும் திருப்பணிகளைத் தொடங்கி நடத்தினார். இந்த கோபுரத்தின் பணிகளையும் செவ்வப்ப நாயக்கர்தான் கட்டி முடித்தார்.

இதன் உயரம் 160 அடியாகும். இந்த மேற்கு கோபுரம் பேச்சு வழக்கில் மேக்கோபுரம் என்று மாறியது. பிறகு அது பேக்கோபுரம் என்று பேசப்பட்டது.

கடந்த நூற்றாண்டில் பேக்கோபுரம் என்பதை மக்கள் தவறாக பேசி பேசியே பேய்க்கோபுரம் என்று அழைக்க தொடங்கி விட்டனர்.

மற்றபடி பேய்க்கும் இந்த கோபுரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 9 நிலைகள் கொண்ட இந்த கோபுரத்தில் மகிசாசூரணை துர்க்கை வதம் செய்யும் காட்சி, காளை வாகனத்தில் அமர்ந்த சிவன், உமை அம்மை, பிரம்மா, முருகன், சரபேஸ்வரர், முனிவர்கள், பூதகனங்கள் இடம் பெற்றுள்ளனர்.

*3. திருமஞ்சன கோபுரம்*

திருவண்ணாமலை ஆலயத்தின் தெற்கு திசையில் திருமஞ்சன கோபுரம் அமைந்துள்ளது. அந்த காலத்தில் திருமஞ்சனம் செய்வதற்காக யானை மீது புனித நீரை இந்த வாசல் வழியாகத்தான் எடுத்து வருவதை வழக்கத்தில் வைத்திருந்தனர்.

எனவே இந்த கோபுரத்திற்கு திருமஞ்சன கோபுரம் என்ற பெயர் ஏற்பட்டது. சுமார் 150 அடி உயரம் கொண்ட இந்த கோபுரத்தை யார் கட்டியது என்று தெரியவில்லை.

எந்த நூற்றாண்டில் கட்டப்பட்டது என்றும் தெரியவில்லை. ஆனால் ஏராளமான அழகு சிற்பங்களும், கல்வெட்டுகளும் நிறைந்ததாக இந்த கோபுரம் திகழ்கிறது.

ராஜகோபுரத்திற்கு அடுத்தப்படியாக இந்த கோபுரத்திற்கும் சில சிறப்புகள் உண்டு. ஆனி மாதம் நடைபெறும் ஆனி திருமஞ்சனம், மார்கழி மாதம் நடைபெறும் ஆரூத்ரா தரிசனம் ஆகிய இரு விழாக்களின் போது இந்த கோபுரம் வழியாகத்தான் நடராஜரை வீதி உலாவிற்கு எடுத்து செல்வார்கள்.

அதுபோல வீதி உலா முடிந்த பிறகு இந்த கோபுரம் வழியாகத்தான் நடராஜரை உள்ளே அழைத்து வருவார்கள். இந்த கோபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள இசைவானர்கள் சிற்பம் மிகுந்த சிறப்பு பெற்றது.

*4. வல்லாள மகாராஜா கோபுரம்*

இந்த கோபுரத்தை வீர வல்லாள மகாராஜா கட்டினார். 1318-ம் ஆண்டு தொடங்கி 1340-ம் ஆண்டு இந்த கோபுரத்தின் கட்டுமானப்பணி முடிந்ததாக ஒரு தகவல் உள்ளது. எனவே இந்த கோபுரத்திற்கு வீர வல்லாள திருவாசல் என்ற ஒரு பெயரும் உண்டு.

ராஜகோபுரத்தை தாண்டியதும் அடுத்து வருவது இந்த கோபுரம்தான். இந்த கோபுரத்தின் கீழ் பகுதி தூண் ஒன்றில் வல்லாள மகாராஜாவின் சிற்பம் கை கூப்பிய நிலையில் இருப்பதை காணலாம்.

இந்த கோபுரத்தில் சிவன், பார்வதி, விநாயகர் சிற்பங்களுடன் கல்லால மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் சிவபெருமான், காளை மீது அமர்ந்த சிவபார்வதி, சமணரை கழுவேற்றம் செய்யும் சிற்பங்களும் உள்ளன. லிங்கத்தை பார்வதி தழுவி நிற்பது போன்ற சிற்பமும் இடம்பெற்றுள்ளது.

அண்ணாமலையார் தனது மகனாக வல்லாள மகாராஜாவை ஏற்றுக் கொண்ட சிறப்பை இந்த உலகுக்கு உணர்த்தும் வகையில் இந்த கோபுரம் திகழ்ந்து கொண்டிருக்கிறது.

*5. கிளி கோபுரம்*

திருவண்ணாமலையில் வாழ்ந்த அருணகிரி நாதர் பற்றி சிவ பக்தர்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

அவரோடு தொடர்புடையது இந்த கிளி கோபுரமாகும். திருவண்ணாமலை தலத்தில் உள்ள கோபுரங்களில் இது மிக மிக பழமையானதாகும்.

1053-ம் ஆண்டு இந்த கோபுரத்தை ராஜேந்திர சோழன் கட்டினார். சுமார் 140 அடி உயரம் கொண்ட இந்த கோபுரம் 5 நிலைகளை கொண்டது. இந்த கோபுரத்தின் உச்சியில் கிளி சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் பின்னணியில் ஒரு வரலாறு உள்ளது.

அருணகிரி நாதர் கிளி உருவம் எடுத்து தேவலோகம் சென்ற போது அவரது உடலை சம்பந்தாண்டான் என்பவன் எரித்து விட்டான். இதனால் அருணகிரிநாதர் கிளி உருவில் அலைய வேண்டியதாற்று.

அவர் கிளி உருவத்தோடு இந்த கோபுரத்தில் அமர்ந்து நிறைய பாடல்களை பாடினார்.

கந்தர் அனுபூதி, சுந்தர அந்தாதி ஆகிய இலக்கியங்கள் இந்த கோபுரத்தில் கிளி உருவத்தில் அமர்ந்த அருணகிரிநாதரால் பாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த கோபுரத்திற்கு கிளி கோபுரம் என்ற பெயர் ஏற்பட்டது.

இந்த கோபுரத்தில் 33 கல்வெட்டுகள் இருக்கின்றன. அதில் பல்வேறு தகவல்கள் உள்ளன. ஆனால் அவற்றை இன்னமும் வெளியில் கொண்டு வர முடியவில்லை.

*6. தெற்கு கட்டை கோபுரம்*

திருமஞ்சன கோபுரம் அருகே 5 நிலைகளுடன் உள்ள சிறிய கோபுரம் தெற்கு கட்டை கோபுரம் என்று அழைக்கப்படுகிறது. 70 அடி உயரம் கொண்ட இந்த கோபுரத்தில் புராண நிகழ்ச்சிகளை விளக்கும் சிற்பங்கள் அமைந்துள்ளன.

*7. மேற்கு கட்டை கோபுரம்*

பேய் கோபுரத்திற்கு அடுத்தப்படியாக அமைந்துள்ள சிறிய கோபுரமாகும். 5 நிலைகளை கொண்ட இந்த கோபுரம் 70 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கோபுரத்தில் திசை காவல் தெய்வங்கள் இடம்பெற்றுள்ளன.

*8. வடக்கு கட்டை கோபுரம்*

அம்மணியம்மன் கோபுரத்தை அடுத்து இந்த சிறிய கோபுரம் உள்ளது. 70 அடி உயரம் உள்ள இந்த கோபுரத்தில் சிவன், பார்வதி, விநாயகர், முருகன், துவார பாலகர்கள் சிற்பங்கள் உள்ளன. இந்த கோபுரத்தில் உள்ள நடன பெண்மணிகளின் சிற்பங்கள் மிக அழகாக அமைக்கப்பட்டுள்ளன.

*9. அம்மணியம்மாள் கோபுரம்*

திருவண்ணாமலை ஆலயத்தின் வடக்கு திசையில் இந்த கோபுரம் அமைந்துள்ளது. அம்மணிம்மாள் ய கோபுரம் இது.

அருள்மிகு ஶ்ரீநிதீஸ்வரர் திருக்கோயில், அன்னம்புத்தூர், விழுப்புரம்!

அருள்மிகு ஶ்ரீநிதீஸ்வரர் திருக்கோயில், அன்னம்புத்தூர், விழுப்புரம்!
நம்முடைய தலையெழுத்தை எழுதும் பிரம்மனின் தலையெழுத்தையே மங்கலகரமாக மாற்றி எழுதிய சிவனார் வீற்றிருக்கும் அருள்மிகு ஶ்ரீநிதீஸ்வரர் திருக்கோயில், அன்னம்புத்தூர், விழுப்புரம்!

குபேரனுக்கும் பிரம்மனுக்கும் அருளிய ஸ்ரீநிதீஸ்வரரை வழிபட்டால் வற்றாத செல்வம் பெருகுமன்றோ!

தலத்தின் சிறப்பு!

குபேரன் தனக்கு நிதி வேண்டி வணங்கிய தலங்களில் இதுவும் ஒன்று என்பதும், தலையெழுத்தை எழுதும் பிரம்மனின் தலையெழுத்தையே மாற்றி எழுதிய சிவனார் வீற்றிருக்கும் தலம் என்பதும் தலத்தின் சிறப்பு. 

பிரம்மனும் விஷ்ணுவும் சிவனாரின் அடிமுடியை தேடிச் சென்றனர். அப்போது முடி தேடி சென்று தோற்றுப் போன பிரம்மன், முடியைக் கண்டேன் என்று பொய் சொன்னார்.

அன்னமூர்த்தி, அன்ன வாகனன் என்றெல்லாம் புகழப்பட்ட பிரம்மனுக்கு பொய் சொன்னதால் இழுக்கு ஏற்பட்டதுதான் மிச்சம். 

இதில் வேதனையுற்ற பிரம்மன், இந்த தலத்து இறைவனுக்கு கைநிறைய மலர்களை அள்ளிச் சூட்டி, மனம் கனிந்து வணங்க, அள்ளிச் சூட்டி, மனம் கனிந்து வணங்க, இழுக்கினால் நேர்ந்த துன்பங்கள் யாவும் விலகியதாம். 

ஆகவே, இந்த 
ஊருக்கு அன்னம்புத்தூர் என்று பெயர் அமைந்ததாக சொல்கிறது சோழ மன்னனின் கல்வெட்டு.

மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய கோயில் ஒன்று, திண்டிவனம் அருகில், அன்னம்புத்தூரில் உள்ளது. அடிமுடி தேடிப் புறப்பட்டு, பொய் சொல்லி மாட்டிக்கொண்டு சாபம் பெற்ற பிரம்மா, சிவனாரை வணங்கி வழிபட்ட தலம் என்பதால், பிரம்மாவின் வாகனத்தை நினைவுபடுத்தும் வகையில் அன்னம்புத்தூர் என்றானது. இது திருவண்ணாமலைக்கு நிகரான தலமாகும்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் – புதுச்சேரி சாலையில், சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ளது வரகுப்பட்டு. இங்கிருந்து கிளை பிரிந்து செல்லும் சாலையில் 4 கி.மீ. பயணித்தால், அன்னம்புத்தூர் கிராமத்தை அடையலாம். இங்கே ஸ்வாமியின் திருநாமம்- ஸ்ரீநிதீஸ்வரர்.

1008-ஆம் வருடம், தன்னுடைய 23-வது ஆட்சியாண்டில், அன்னம்புத்தூர் கோயில் ஸ்ரீநிதீஸ்வரருக்கு ராஜராஜ சோழ மன்னன் திருப்பணி செய்ததைத் தெரிவிக்கிற கல்வெட் டுகள் உள்ளன. 

‘நிதிகளுக்கெல்லாம் தலைவரான குபேரனுக்கு அருளியதால் ஸ்ரீநிதீஸ்வரர் எனும் திருநாமத் துடன் சிவனார் அருளும் இக்கோயில்!

பதும நிதி, மகா பதுமநிதி, மகாநிதி, கச்சபநிதி, முகுந்த நிதி, குந்த நிதி, நீலநிதி, சங்கநிதி ஆகிய எட்டு வகையான நிதிச் செல்வங்களுக்கும் தலைவன் குபேரன். 

எனவே அவனுக்கு "நிதிபதி' என்ற பெயரும் உண்டு. குபேரன் வழிபட்டு வரம் பெற்றதாலே அன்னம்புத்தூர் கிராமத்தில் அருளும் ஈசனுக்கு "ஸ்ரீநிதீஸ்வர்' என்ற பெயரும் ஏற்பட்டது.

பிரம்மாண்டமான லிங்கத் திருமேனியாக காட்சி தருகிறார் ஈசன். இவரை வழிபட பிரம்மஹத்தி தோஷம் உள்ளிட்ட கொடிய தோஷங்கள் நீங்கும். 

இல்லத்தில் வறுமை நீங்கி செல்வம் கொழிக்கும்.
இவ்வாறு தன்னை நாடும் பக்தர்களுக்கு எண்ணிலடங்கா செல்வங்களை வாரி வழங்கும் ஸ்ரீநிதீஸ்வரர்.

குபேரனுக்கும் பிரம்மனுக்கும் அருளிய ஸ்ரீநிதீஸ்வரரை வழிபட்டால் வற்றாத செல்வம் பெருகுமன்றோ!

அமைவிடம்: திண்டிவனத்திலிருந்து புதுச்சேரி செல்லும் சாலையில் வரகுப்பட்டு என்னும் கிராமத்தை அடுத்து வரும் சாலையில் வலது பக்கம் உள்ள சாலை வழியாக 4 கி.மீ. பயணித்தால் திருக்கோயிலை அடையலாம்.

Wednesday, September 27, 2023

அருள் தரும் ஸ்படிக லிங்கங்கள்...!

அருள் தரும் ஸ்படிக லிங்கங்கள்...!
ஆதிசங்கரர் கயிலாய மலை நோக்கி சென்று கொண்டிருந்தபோது, வழியில் காட்சி தந்த சிவபெருமானால், அவருக்கு ஐந்து ஸ்படிக லிங்கங்கள் தரப்பட்டன.

அவை முக்திலிங்கம், வரலிங்கம், மோட்சலிங்கம், போகலிங்கம், யோகலிங்கம் என்பனவாகும்.

அவற்றை பெற்ற ஆதிசங்கரர், சிவபெருமான் அருளியபடி, ஐந்து தலங்களில் பிரதிஷ்டை செய்தார். 

அவற்றில் முக்தி லிங்கம் கேதார்நாத்திலும், வரலிங்கம் நேபாளத்தில் உள்ள நீலகண்டத்திலும், மோட்ச லிங்கம் சிதம்பரத்திலும், போக லிங்கம், கர்நாடகா சிருங்கேரியிலும், யோக லிங்கம் காஞ்சீபுரத்திலும் அமைக்கப்பட்ட
சிதம்பரத்தில் சந்திர மவுலீஸ்வரராகவும், மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலிலும், காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலிலும், ராமேஸ்வரத்திலும் ஸ்படிக லிங்கங்கள் அருளாட்சி செய்து வருகின்றன.

முக்கியமாக ராமேஸ்வரம் தலத்தில் அதிகாலை நான்கு மணிக்கு ஸ்படிக லிங்க தரிசனம் செய்துவிட்டு, கோவிலில் இருக்கும் அனைத்து புண்ணிய தீர்த்தங்களிலும் புனித நீராடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது.

விபீஷணனால் கொண்டு வரப்பட்டதோடு, ராமரும் சீதையும் பூஜித்த விஷேச லிங்கமாகவும் இது கருதப்படுகிறது.

திருவெண்காடு தலத்திலும், திருநெல்வேலி சங்கரன்கோவிலிலும் ஸ்படிக லிங்க வழிபாடு பிரசித்தம்.

தன்னருகில் வைக்கப்படும் பொருட்களின் தன்மையை பிரதிபலிக்கக்கூடியதால், ஸ்படிகமானது மங்களகரமான ஒன்றாக கருதப்படுகிறது.

ஓம் நமசிவாய

இறை பணியில்
இரா. இளங்கோவன்

புண்ணியம் நிறைந்த புரட்டாசி பவுர்ணமி..

புண்ணியம் நிறைந்த புரட்டாசி பவுர்ணமி.. 

பூ ஆர் மலர் கொண்டு அடியார் தொழுவார்; புகழ்வார், வானோர்கள்;
மூவார் புரங்கள் எரித்த அன்று மூவர்க்கு அருள் செய்தார்
தூ மாமழை நின்று அதிர, வெருவித் தொறுவின் நிரையோடும்
ஆமாம் பிணை வந்து அணையும் சாரல் அண்ணாமலையாரே.

நினைத்தாலே முக்தி தரும் தலம் திருவண்ணாமலை. யார் பெரியவர் என்று பிரம்மாவும் விஷ்ணுவும் மோதிக்கொண்டு, ஈசனின் அடிமுடி காண விரைந்த தலம் திருவண்ணாமலை. அக்னியே குளிர்ந்து மலையாகி, ஈஸ்வர அம்சமாக உள்ள இடம் திருவண்ணாமலை

சிவபெருமானே மலையாக வீற்றிருப்பதால் திருவண்ணாமலை புனிதமானதாக கருதப்படுகிறது.
பவுர்ணமி தோறும் கிரிவலம் வருவது சிறப்புக்குரியது

நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலம் என்று போற்றப்படுவது, திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் திருக்கோவில். விஷ்ணுவும், பிரம்மாவும் 'யார் பெரியவர்?' என்று சர்ச்சையில் ஈடுபட்டபோது, அவர்கள் இருவரும் அடிமுடி காண முடியாதபடி ஜோதி வடிவாக உயர்ந்து நின்றார், சிவபெருமான். அந்த சிறப்புக்குரிய தலம் இது.

'அண்ணுதல்' என்பதற்கு 'நெருங்குதல்' என்று பொருள். 'அண்ணா' என்பது, 'நெருங்க முடியாத' என்ற பொருளைத் தரும். பிரம்மனாலும், விஷ்ணுவாலும் நெருங்க முடியாத நெருப்பு மலையாக நின்றதால், இத்தலம் 'அண்ணாமலை' என்று பெயர் பெற்றது.

சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகப் போற்றப்படுவது திருவண்ணாமலை. 

மலையே சிவனாக காட்சி தரும் திருவண்ணாமலையில் பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் கிரிவலம் வருவார்கள். கிரிவலம் வரும் போது தரிசிக்க வேண்டிய கோவில்கள் உள்ளன. கிரிவலம் வருவதற்கு ஒரு முறை உள்ளது. அண்ணாமலையார் கோவில் ராஜகோபுரம் முன்பு நின்று தரிசனம் செய்து விட்டு கிரிவலம் வந்து மீண்டும் ராஜ கோபுரத்தில் முடிக்க வேண்டும்.

அண்ணாமலையாரே ஆண்டுக்கு இரண்டு முறை கிரிவலம் வருகிறார். கார்த்திகை மாதம் தீபம் திருவிழா முடிந்து கிரிவலம் வருவார். அதே போல தை மாதம் 2ஆம் நாள் கிரிவலம் வருவார். கிரிவலப்பாதை யில் உள்ள அஷ்ட லிங்கங்களையும், ஆசிரமங்களையும், கோவில்களை யும் தரிசனம் செய்ய வேண்டும்.

ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது வழக்கம். அதன்படி புரட்டாசி மாத பவுர்ணமி வியாழக்கிழமை இன்று  மாலை 6.46 மணிக்கு தொடங்கி மறுநாள் வெள்ளிக்கிழமை மாலை 4.34 மணிக்கு நிறைவடைகிறது. இது கிரிவலம் செல்ல உகந்த நேரம். 

வறுமையின் பிடியில் இருந்து மீண்டு, வாழ்க்கையில் மிக உயர்ந்து நிலைக்கு செல்ல முடியும். ஞானம், செல்வம், வாழ்க்கை என அனைத்திலும் உயர்வை தரக்கூடியது கிரிவலம். அனைத்து விதமான பிரச்சனைகளையும் தீர்க்கும் அற்புத சக்தி கிரிவலத்திற்கு உண்டு.

மாதந்தோறும் பவுர்ணமிகள் வந்தாலும் புரட்டாசி பவுர்ணமிக்கு என்று தனி சிறப்பு உள்ளது. இந்த நாளில் விரதம் இருந்து சிவ வழிபாடு செய்தால் முன்பிறவியில் செய்த பாவங்கள் நீங்கும். செல்வ வளம் பெருகும் லட்சுமி கடாட்சம் பெருகும் என்பது நம்பிக்கை.

ஆடி முதல் மார்கழி வரை உள்ள தட்சிணாயணம் தேவர்களுக்கு இரவு காலம். இதில் புரட்டாசி மாதம் என்பது தேவர்களின் இரவு காலத்தின் நடுநிசியாகும். நடுநிசியான புரட்டாசி மாதத்தில் முழு நிலவு நாளான பெளர்ணமி என்பது அம்பிகையின் அருள் அதிகரிக்கும்.

புரட்டாசி பௌர்ணமி தினத்தன்று தேவர்கள் அன்னையின் நாமத்தை ஜெபித்தபடியே தியானமும் தவமும் செய்து அன்னையின் அருளைப் பெறுவார்கள். பௌர்ணமி இரவின் நடுநிசியில் தியானம், ஜெபம், பூஜை, பிராணாயாமம், தவம் செய்தால் எதிர்காலத்தை உணர்ந்து கொள்ளும் இறைசக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை. வீட்டில் விரதமிருந்து சிவபெருமானை வழிபடுவதாலும், அருகிலுள்ள சிவாலயங்களுக்குச் சென்று வில்வ அர்ச்சனை செய்து, நெய் தீபங்கள் ஏற்றிவைத்து வழிபடுவதால் தெய்வ அனுகிரகம் வீடு தேடி வரும். எனவே இந்த புரட்டாசி பவுர்ணமி தினத்தன்று கிரிவலம் வருவது சிறப்பானது 

அனைத்து நலன்களையும் தரக் கூடியது பெளர்ணமி கிரிவலம். எதை நினைத்து செல்கிறோமோ அதை நிறைவேற்றி, அத்தனை நலன்களையும் தரக் கூடியது.
வாழ்நாளில் ஒருமுறையாவது கிரிவலம் செல்ல வேண்டும். வாய்ப்பு உள்ளவர்கள் மாதத்திற்கு ஒரு முறையாவது கிரிவலம் செல்ல வேண்டும். வேண்டியது அனைத்தையும் இறைவன் நிறைவேற்றி தருவார் 
. ஓம் நமசிவாய
இறை பணியில்
இரா. இளங்கோவன்

Followers

மனிதனை மாமனிதனாக்குகிறது தியானம்

தூங்காமல் தூங்கி சுகம் பெறுதல் ஞான வழி என்ற தியானம் “தூங்கிக்கண்டார் சிவலோகமும் தம்உள்ளே தூங்கிக்கண்டார் சிவயோகமும் தம் உள்ளே ...