Tuesday, October 31, 2023

அடிமுடி சித்தர் 27 அடி நீளமுடைய தலைமுடியை கொண்டவர் அவர். அந்த பாறையை தனது ஜடாமுடியில் கட்டி தனி ஒருவராக இழுத்து ஓரமாக வைத்தவர்.

அடிமுடி சித்தர் ! 
கிரேன் கருவி இந்தியாவுக்குள் வராத காலம்.

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் பல நூறு டன் எடை உள்ள ஒரு சிறிய மலையை போன்ற ராக்ஷத பாறை இருந்தது. அந்த பாறை மக்கள் கிரிவலம் செய்வதற்கு மிக இடையூறாக இருந்தது. 10,15 காட்டு யானைகளை வைத்து அந்த பாறையை அப்புறப்படுத்த முயற்சித்தார்கள். ஆனால் பலன் இல்லை. அப்பொழுது அங்கு ஒருவர் வந்தார்.

27 அடி நீளமுடைய தலைமுடியை கொண்டவர் அவர். அந்த பாறையை தனது ஜடாமுடியில் கட்டி தனி ஒருவராக இழுத்து ஒரு பாதுகாப்பான இடத்தில் தூக்கி வீசி எரிந்தார். அவர்தான் அடிமுடி சித்தர். மறக்காதிரு, பிறக்காதிரு, இறக்காதிரு என்னும்  உபதேசம் செய்தவர் அடிமுடி சித்தர். இறைவனை மறக்காதிருந்தால்  நீ இன்னொரு பிறவி பிறக்காது இருப்பாய். இன்னொரு பிறவி நீ பிறக்காது இருந்தால் இறக்காது இருப்பாய் என்பதே இதன் அர்த்தம். அடிமுடி சித்தர் பல அற்புத சித்துக்களை சர்வ சாதாரணமாக செய்தவர். ரமண மகரிஷி, சேஷாத்ரி சுவாமிகள் ஆகியோருக்கெல்லாம் மூத்தவர். ரமண மகரிஷி, சேஷாத்ரி சுவாமிகள், யோகிராம் சுரத் குமார் முதலான மகான்களால் வழிபடப்பட்டவர். மிக குறிப்பாக அடிமுடி சித்தர் ஜீவசமாதி அடைந்தவர்.

அடிமுடி சித்தருக்கு மிகவும் பிடித்த உணவு கேழ்வரகு. கேழ்வரகு கஞ்சி, கேப்பங்கூழை மட்டுமே இவர் உணவாக உட்கொண்டு வாழ்ந்தார். அடிமுடி சித்தருக்கு கேழ்வரகு, பூ, நல்லெண்ணெய் ஆகிய மூன்றை காணிக்கையாக கொடுத்து. முடிந்தால் ஒரு வேட்டி. கொடுத்து நாம் வேண்டி கொண்டால். நமது அணைத்து துன்பங்களும், துயரங்களும் தூள், தூளாகும் என்பது நிதர்சனம்.
அடிமுடி சித்தரின் கோவிலுக்கு நேர் எதிரே கௌதம மகரிஷியின் ஜீவசமாதி இருக்கிறது. அதுவும் அவசியம் தரிசிக்க வேண்டிய கோவில்.

அந்த கௌதம மகரிஷியின் கோவிலுக்கு அருகே தான் சூர்ய லிங்கம் கோவில் இருக்கிறது. இந்த அடிமுடி சித்தர் சித்தியை வெற்றியை தருபவர் சித்தர்கள் மீது சித்தம் வைத்தால் சித்தம் ஆகாதது உண்டோ.  

சிவாய நம 🙏

நாமக்கல் ஆஞ்சநேயர் கும்பாபிஷேக சிறப்பு பதிவு

🌼கும்பாபிஷேக சிறப்பு பதிவு. 🌼                                    🌼நாமக்கல் ஆஞ்சநேயர் வெற்றிலை காப்பு அலங்காரத்தில் அருட்காட்சி. 🌼
🌼 தமிழகத்தில் மிகவும் பிரசித்திபெற்ற அனுமன் கோவிலென்றால் அது நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் தான். புனிதப் பயணிகளும், சுற்றுலாப் பயணிகளும் பார்க்க வேண்டிய முக்கிய இடம் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலாகும். 1500 ஆண்டுகள் பழமையான இந்த கோவில் நாமக்கல் கோட்டைக்கு கீழே அமைந்துள்ளது.

🌼 மலைக்கோட்டைக்கு மேற்கே நரசிம்மரும், நாமகிரி தாயார் கோவிலுக்கு நேர் எதிரே அமைந்துள்ளது. இங்குள்ள ஆஞ்சநேயர், எதிரிலுள்ள நரசிம்மரை திறந்த விழிகளுடன் கைகூப்பி வணங்கிய நிலையில் காட்சி தருகிறார்.

🌼கோவில் வரலாறு🌼 :

🌼 இராமாயண காலத்தில், சஞ்சீவி மலையில் உள்ள மூலிகையைப் பெறுவதற்காக இமயத்தில் இருந்து மலையைப் பெயர்த்து எடுத்து வந்தார்.

🌼 பணி முடிந்ததும் மலையை அதே இடத்திலேயே வைத்துவிட்டு திரும்பினார். அவ்வாறு வருகையில் அங்கிருந்து ஒரு பெரிய சாளக்கிராமத்தை பெயர்த்து எடுத்து வந்தார். அந்த நேரத்தில் சு+ரியன் உதயமானதால் வான்வழியாக வந்துகொண்டிருந்த ஆஞ்சநேயர், தமது கையில் இருந்த சாளக்கிராமத்தை கீழே வைத்துவிட்டு சு+ரிய நமஸ்காரம் செய்தார். மீண்டும் வந்து சாளக்கிராமத்தைத் தூக்க முயற்சித்தார். ஆனால் அதைத் தூக்க அவரால் முடியவில்லை. 

🌼 அப்போது 'இராமனுக்குச் செய்ய வேண்டிய உதவிகளைச் செய்து முடித்துவிட்டு பிறகு வந்து என்னை எடுத்துச் செல்" என்று அசிரீரி ஒலி கேட்க, ஆஞ்சநேயரும் சாளக்கிராமத்தை அங்கேயே விட்டு விட்டு கிளம்பினார். இராமன் போரில் வென்று சீதையை மீட்ட பிறகு ஆஞ்சநேயர் மீண்டும் அங்கே வந்தார். ஆஞ்சநேயர் விட்டுப் போன சாளக்கிராமம் நரசிம்ம மூர்த்தியாக வளர்ந்து நிற்க ஆஞ்சநேயர் நரசிம்மரை வணங்கியவாறு நின்று நமக்கெல்லாம் அருள் பாலிக்கிறார்.

🌼தல பெருமைகள்🌼 : 

🌼 இங்குள்ள ஆஞ்சநேயர; சிலை மிகவும் பிரம்மாண்டமானது. பீடத்திலிருந்து 22 அடியும், பாதத்திலிருந்து 18 அடியும் உயரம் கொண்டதாக உள்ளது. 

🌼 இங்குள்ள ஆஞ்சநேயர்; முகம் மிகவும் அழகாக தேஜஸ் உள்ளதாக இருப்பது மிக முக்கியமான சிறப்பம்சம்.

🌼 தமிழகம் முழுவதும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து கும்பிட்டுச் செல்லும் புகழ் பெற்ற கோவில்.

🌼 எதிரே உள்ள லட்சுமி நரசிம்மர; ஆலயத்தின் உப கோவில்தான், இந்த ஆஞ்சநேயர் சன்னதி என்றாலும் இச்சன்னதியில்தான் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது.

🌼 இச்சா சக்தி (நாமகிரி அம்மன்), கிரியாசக்தி (நரசிம்மர்), ஞானசக்தி (ஆஞ்சநேயர்) ஆகிய மூன்று சக்திகளும் ஒருங்கே அமையப்பெற்ற கோவில் இது.

🌼 இங்குள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு நேரெதிராக இருக்கும் லட்சுமி நரசிம்மர் ஆலயத்தை தொழுதபடி இருக்கிறார்.

🌼 மிக பிரம்மாண்டமாக காற்று, மழை, வெயில் இவைகளை தாங்கிக் கொண்டு திறந்த வெளியில் தொழுத கைகளோடு நின்றிருக்கிறார்.

🌼வடைமாலை சாத்துவது ஏன்?🌼
முன்பு ஒருசமயம் நவகிரகங்களில் அதிக குரூரமான ராகுவும், சனியும் ஸ்ரீஆஞ்சநேயரிடம் தோல்வியுற்றதனால் ஆஞ்சநேயருக்கு கீழ்ப்படிந்தார்கள். பு+வுலகில் மாந்தர்களுக்கு சனியாலும், ராகுவாலும் ஏதேனும் இடையு+று ஏற்படின் அவர்களை திருப்திபடுத்துவதின் பொருட்டு ராகுவுக்கு பிடித்த உளுந்தும், சனிக்கு பிடித்த எள்எண்ணெய்யாலும் செய்த வடைமாலையை ஸ்ரீஆஞ்சநேயருக்கு சாத்தி வழிபட்டால் சனி, ராகு இவர்களுடைய இடையூறிலிருந்து மனிதர் விடுபடுகிறார்கள் என்பதற்காகவே தான் ஸ்ரீஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்துகிறார்கள்.

🌼கோபுரம் இல்லாதது ஏன்?🌼
லோகநாயகனான ஸ்ரீ நரசிம்மரே (எதிரில் உள்ள ஆலயம்) கிரி உருவில் மேல் விதானம் இல்லாமல் இருப்பதால் தாசனான எனக்கும் விதானம் தேவையில்லை என்று ஸ்ரீ ஆஞ்சநேயர் திறந்த வெளியில் கோபுரம் இல்லாமல் நின்றிருக்கிறார்.

நாளை புதன்கிழமை நவ.1-ம் தேதி நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேக விழா

🌺🌺🌺 🙏🙏நாளை புதன்கிழமை   நவ.1-ம் தேதி  நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேக விழா 
🌺🌺🌺 🙏🙏  நவ.1-ம் தேதி புதன்கிழமைநாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேக விழா 

 🌺🌺🌺 🙏🙏நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேக விழா 

  🌺🌺🌺 🙏🙏நாளை காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் மகா கும்பாபிஷேக பெருவிழா

🌺🌺🌺 🙏🙏நாளை புதன்கிழமை   நவ.1-ம் தேதி  கோலாகலமாக நடைபெற உள்ளது. 

🌺🌺🌺 🙏🙏இதையொட்டி முதல் கால யாக சாலை பூஜை நேற்று நடைபெற்றது.

🌺🌺🌺 🙏🙏 கும்பாபிஷேகத்தையொட்டி ரூ.67 லட்சம் மதிப்பீட்டில் கோவிலில் பல்வேறு திருப்பணிகள் 
             
நாமக்கல் நகரின் மையப் பகுதியில், ஸ்ரீ நரசிம்ம சுவாமி மற்றும் நாமகிரித் தாயார் கோயில் எதிரில் ஒரே கல்லினால் 18 அடி உயரத்தில் உருவான ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. இங்கு வணங்கிய நிலையில் சாந்த சொரூபியாக ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். கடந்த 1996-ம் ஆண்டு கோயில் கும்பாபிஷேகம் நடை பெற்றது. தொடர்ந்து 2009-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதையடுத்து 13 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை (நவ.1-ம் தேதி) கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

இதன்படி, முதல் கால யாக சாலை பூஜைகள் நேற்று மாலை நடைபெற்றன. தொடர்ந்துஇன்று காலை வருண தீர்த்தம்புனிதப்படுத்துதல், அக்னி பகவான்பூஜை, தமிழ் திவ்ய ப்ரபந்த வேள்வி, அனுதின வேள்வி ஆகிய பூஜைகள் நடைபெற உள்ளன.

தொடர்ந்து 10.45 மணிக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றுதலும், மாலைபிம்ப வாஸ்து, மஹா சாந்தி வேள்வியை நிறைவு செய்தல், ஒன்பது கலச திருமஞ்சனம் உள்ளிட்டவை நடைபெறுகின்றன. தொடர்ந்து நாளை காலை 9.30 மணிமுதல் 10.30 மணிக்குள் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.
ஸ்ரீ ஆஞ்சநேயா ஜெய்ஸ்ரீராம் 🌺🌺🌺 🙏🙏ஸ்ரீ ஆஞ்சநேயா ஜெய்ஸ்ரீராம் 🌺🌺🌺 🙏🙏ஸ்ரீ ஆஞ்சநேயா ஜெய்ஸ்ரீராம் 🌺🌺🌺 🙏🙏

இறைவர் திருப்பெயர் : சூட்சுமபுரீஸ்வரர், மங்களநாதர்இறைவியார் திருப்பெயர் : மங்களநாயகி

செவ்வாய் தோஷம் போக்கும் சிறுகுடி 
இறைவர் திருப்பெயர் : சூட்சுமபுரீஸ்வரர், மங்களநாதர்
இறைவியார் திருப்பெயர் : மங்களநாயகி
தல மரம் : வில்வம்
தீர்த்தம் : மங்களதீர்த்தம்
வழிபட்டோர் : அம்பிகை, சூரியன், விசுவாமித்திரர், கந்தர்வர்கள், அங்காரகன்
தேவாரப் பாடல்கள் :திருஞானசம்பந்தர்,

தல வரலாறு:
சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 123 வது தேவாரத்தலம் ஆகும்.

ஒருமுறை கயிலையில் சிவபெருமானும், அம்பாளும் சொக்கட்டான் (தாயம்) விளையாடினர். அம்மன் பக்கம் வெற்றி திரும்பியது.  இந்நிலையில், திடீரென சிவபெருமான் அவ்விளையாட்டில் இருந்து காணாமல் போனார். பின்னர், ஈசனை தேடி அலைந்தாள் அம்பிகை. எங்கும் காணாததால், காவிரியின் தென்கரையில் வில்வ மரங்கள் அடர்ந்த, அமைதியான சூழல் உள்ள குளக்கரையில் மண்ணில் லிங்கம் பிடித்து வைத்து வழிபட்டாள். காணாமல் போன சிவபெருமான் அந்த இடத்தில் தோன்றினார். விளையாட்டில் தான் வேண்டுமென்றே தோற்க இருந்ததாகவும், மனைவியின் மனம் மகிழ்வதற்காகவும், குடும்பம் மங்களகரமாக இருப்பதற்காக, கணவனிடம் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை வேண்டுமென்றும் அருள்பாலித்தார்.

இதனால் அம்பிகை "மங்களாம்பிகை' என்று பெயர் பெற்றாள். அவள் தவமிருந்த குளக்கரை "மங்கள தீர்த்தம்' ஆயிற்று. சுவாமிக்கு மங்களநாதர் என்று பெயர் சூட்டப்பட்டது.

பிரிந்த தம்பதிகள் மீண்டும் ஒன்று சேர்ந்ததால், சூஷ்மபுரீஸ்வரம் என்று இவ்விடம் கூறப்படுகிறது. திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற இக்கோயிலில் சூரியனும், சனீஸ்வரனும் அருகருகே இருப்பது சிறப்பாகும். மேலும் சூரியன், விசுவாமித்திரர், கந்தர்வர்கள் ஆகியோரால் பூஜிக்கப்பட்டதாகும். அங்காரகனுக்கு ஏற்பட்ட சாபம் நீங்கி பூஜித்து வரம் பெற்றமையால், இக்கோயிலில் உள்ள அங்காரகனை தரிசனம் செய்பவர்களுக்கு செவ்வாய் தோஷம், திருமணத் தடை, பலவித நோய்கள் தீரும்.

அங்காரகனை தரிசனம் செய்ய  மாசி மாதம் செவ்வாய் கிழமைகள் ஏற்றது. இந்நாட்களில் இங்கு விசேஷ பூஜை நடக்கும். பிரிந்த தம்பதிகள் ஒன்றுசேர, இத்தலத்தில் பிரார்த்தனை செய்யலாம்.வில்வ இலை, மங்கள நீர் (குளத்து நீர்) ஆகியவை கொண்டு செவ்வாய் தோஷ பரிகாரம் செய்யப்படுகிறது. செவ்வாய்தோஷ ஜாதகதாரர்கள் இங்கு ஏராளமாக வருகின்றனர்.

நவக்கிரக மண்டப சிறப்பு: இந்தகோயிலின் நவக்கிரக மண்டபம் மிகவும் வித்தியாசமானது. நவக்கிரகங்களுடன் கோளறுபதிகத்தின் 11 பாடல்கள் பாடிய திருஞானசம்பந்தர் குழந்தை வடிவில் உள்ளார்.  மதுரையில் சமணர்களின் பிடியில் சிக்கித்தவித்த கூன் பாண்டியனை காப்பாற்ற சென்ற திருஞானசம்பந்தரை திருநாவுக்கரசர் "நாளும் கோளும் சரியில்லை, இப்போது சென்றால் சிறுவனான தங்களுக்கு ஆபத்து' என சொல்லித் தடுத்தார். அப்போது,  சம்பந்தர், சிவபக்தனை கிரகங்கள் ஏதும் செய்யாது எனக்கூறி பாடியதே கோளறுபதிகம். அன்றுமுதல் கிரகக்கோளாறு உள்ளவர்கள் கோளறுபதிகம் பாடி வருகின்றனர். இதைக் குறிக்கும் வகையில், இங்கே நவக்கிரகங்களின் நண்பராக சம்பந்தர் உள்ளார்.

இவரை தரிசித்தால், எப்படிப்பட்ட கிரக தோஷமும் விலகும் என்பது நம்பிக்கை. மேலும் விநாயகரும், பைரவரும் இதே மண்டபத்தில் இருப்பது இன்னுமொரு விசேஷம்.

கோவில் அமைப்பு:

மூன்று நிலைகளுடன் கூடிய ராஜகோபுரம் கிழக்கு நோக்கியவாறு உள்ளது. வாயிலின் உள்ளே சென்றால் பலிபீடம் நந்தி ஆகியன உள்ளன. இவ்வாலயத்தில் கொடிமரம் இல்லை. வெளிப் பிரகாரத்தில் மங்களவிநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் சந்நிதிகள் ஆகியவை உள்ளன. முன் மண்டபத்தில் நவக்கிரக சந்நிதி உள்ளது. நவக்கிரகங்களில் சனீஸ்வரனுக்கு கீழே சனைச்சரன் என்று பெயர் எழுதப்பட்டுள்ளது. இதுவே சரியான பெயர். இதற்கு மெதுவாக ஊர்ந்து செல்பவன் என்று பொருள். இதுவே மருவி சனீச்வரன் என்றாயிற்று.

நவக்கிரக சந்நிதிக்கு அருகில் ஞானசம்பந்தரின் பெரிய மூலத் திருமேனி, இடுப்பில் அரைஞாண் கயிறு, கழுத்து மாலை ஆகியவற்றுடன் அழகாக தோற்றமளிக்கிறார்.

முன் மண்டபத்தில் தெற்கு நோக்கிய அம்பாள் மங்களநாயகி சந்நிதி உள்ளது. அபயவரதத்துடன் நின்ற திருக்கோலத்தில் அம்பாள் காட்சி அளிக்கிறாள். இத்தலத்தில் அம்பாளுக்குத் தான் அபிஷேகம் தடைபெறுகிறது.

முன் மண்டபம் வழியே உள்ளே சென்றால் நேரே மூலவர் சூட்சுமபுரீஸ்வரர் சந்நிதி அமைந்துள்ளது. மூலவர் சுயம்புத் திருமேனி. அம்பிகை கைப்பிடியளவு மணலால் பிடித்துவைத்து மங்கள தீர்த்தம் உண்டாக்கி வழிபட்ட தலம். சிறுகுடியீசர் என்ற பெயருக்கேற்றவாறு மிகச் சிறிய லிங்கம். ஒருபிடி அளவேயுள்ள மண் லிங்கம் ஆதலால் இதற்கு அபிஷேகம் கிடையாது. நெற்றியில் பள்ளமும் இருபுறமும் கைபிடித்த அடையாளமும் உள்ளது. அம்பிகை இறைவனை ஆலிங்கனம் செய்து கொண்டதால் இத்தழும்புகள் உண்டானது என்பர்.

லிங்கத் திருமேனி எப்போதும் கவசம் சாத்தியே வைக்கப்பட்டுள்ளது. கருவறை தெற்கு கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, மேற்கு கோஷ்டத்தில் மகாவிஷ்ணு, வடக்கு கோஷ்டத்தில் பிரம்மாவையும், வழக்கமாக துர்க்கை இருக்குமிடத்தில் அர்த்தநாரீஸ்வரரையும் காணலாம். சண்டிகேஸ்வரர் சந்நிதியும் உள்ளது. கருவறைச் சுற்றில் மங்கள விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகர் சந்நிதி ஆகியவையும் உள்ளன.

உற்சவ மூர்த்திகளுள் சந்தோஷ ஆலிங்கன மூர்த்தி சிறப்பானது. அம்பிகையின் பூஜைக்கு மகிழ்ந்து ஆலிங்கனம் செய்யும் அமைப்பில் அவள் தோள் மீது கை போட்டுக்கொண்டு இறைவன் காட்சி தரும் அழகு பார்க்க வேண்டியதாகும். இத்திருத்தலத்தில் செவ்வாய் பகவான் இறைவனை வழிபட்டுள்ளார். இத்தலத்தில் அங்காரகனுக்கு தனி சந்நிதி உள்ளது. செவ்வாய் தோஷமுடையவர்கள், திருமணமாகாதவர்கள் இங்கு வந்து வழிபட்டால் அங்காரகதோஷம் நிவர்த்தியாகிறது என்பது இங்கு பிரசித்தம். செவ்வாய் வழிபாடு விசேஷமானது. ஆலயத்திற்கு வெளியே நேரே எதிரிலுள்ள மங்கள தீர்த்தத்தில் நீராடி கோயிலுக்குச் சென்று அங்காரகனை வழிபட்டு வந்தால் செவ்வாய் தோஷங்கள் நீங்கி நலம் பெறலாம். வேற்று மதத்தினர்கள் கூட இங்கு வந்து வழிபடுவதைப் பார்க்கலாம்.

திருஞானசம்பந்தர் பாடியருளியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் 3-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. முதல் பாடலில் சிறுகுடி இறைவனை வழிபடுவர்கள் இவ்வுலகிற்கு அப்பாலுள்ள சிவலோகத்தை அடைவார்கள் என்று குறிப்பிடுகிறார்.

சிறப்புக்கள் :
சூஷ்மபுரீஸ்வரரை தரிசித்தால், எப்படிப்பட்ட கிரக தோஷமும் விலகும் என்பது நம்பிக்கை.

சிவன், அம்பாளிடம் வேண்டிக்கொண்டால் குடும்பத்தில் மங்களம் என்றும் நிலைத்திருக்கும் என்பது நம்பிக்கை.

இத்தலத்தில் அங்காரகனுக்கு தனி சந்நிதி உள்ளது. செவ்வாய் தோஷமுடையவர்கள், திருமணமாகாதவர்கள் இங்கு வந்து வழிபட்டால் அங்காரகதோஷம் நிவர்த்தியாகிறது என்பது இங்கு பிரசித்தம்.

போன்:  -

அமைவிடம் மாநிலம் :

தமிழ் நாடு
கும்பகோணம் - நாச்சியார்கோவில் - கூந்தலூர் - பூந்தோட்டம் சாலையில் கூந்தலூர் கடந்து கடகம்பாடியை அடைந்து அங்கிருந்து வடக்கே அரசலாற்றுப் பாலம் தாண்டி சுமார் 3 கி. மி. தொலைவில் சிறுகுடி தலம் இருக்கிறது.

லிங்கத் திருமேனி எப்போதும் கவசம் சாத்தியே வைக்கப்பட்டுள்ளது.

அம்பிகை கைப்பிடியளவு மணலால் பிடித்துவைத்து மங்கள தீர்த்தம் உண்டாக்கி வழிபட்ட தலம்.ஆதலால் இதற்கு அபிஷேகம் கிடையாது. நெற்றியில் பள்ளமும் இருபுறமும் கைபிடித்த அடையாளமும் உள்ளது.

இங்கு வந்து வழிபட்டால் அங்காரகதோஷம் நிவர்த்தியாகிறது என்பது இங்கு பிரசித்தம்

Monday, October 30, 2023

திருக்களாவனம் என்ற #கோவில்பட்டி (#கோவிற்புரி)#பூவனநாதசுவாமி#செண்பகவல்லி_அம்மன் திருக்கோயில் வரலாறு:

#தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற 
சிவத் தலங்களில் ஒன்றான,
அகத்தியர் தவமிருந்து, திருமணக் கோலத்தில் எம்பெருமான் ஈசனை வழிபட்ட தலமான #திருக்களாவனம் என்ற 
#கோவில்பட்டி (#கோவிற்புரி)
#பூவனநாதசுவாமி
#செண்பகவல்லி_அம்மன் 
திருக்கோயில் வரலாறு:

       
திருமங்கை நகர், பொன்மலை, கோயில்புரி, கோயில்பட்டி என்றெல்லாம் அழைக்கப்பட்ட ஊர் தற்போது ‘கோவில்பட்டி’ என்றழைக்கப்படுகிறது. 
இங்கிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் வெம்பக்கோட்டை பகுதியை அரசாண்ட செண்பகமன்னன் என்பவன், களாக்காட்டினை வெட்டித் திருத்தி, கோவிலும், ஊரும் எழுப்பினான் என்கிறது கோயில்புரி வரலாறு. ஆனால் அவருடைய காலத்தை அறிய இயலவில்லை.

இவ்வூருக்கு தெற்கே சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மந்தித்தோப்பிலுள்ள சங்கரபாரதி திருமடத்தில் ஒரு செப்புப் பட்டயம் உள்ளது. 
அது குலசேகர பாண்டியனால் கலி4131 சாலிவாகன சகாப்தம் 952-ல் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் இவ்வூர் குறிப்பிடப்பட்டுள்ளதால், கோயில்புரி கலி 4131-க்கு முற்பட்டது எனத் தெரிகிறது. சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு இங்குள்ள ஆலயத்தை உள்ளமுடையான் என்பவர் புதுப்பித்தார் என்பதும், அதற்கு 148 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட மந்தித்தோப்பு பட்டயத்தில் இவ்வூர் குறிக்கப்பட்டுள்ளதாலும், சுமார் 950 ஆண்டுகளுக்கு முன்னரே இவ்வூர் இருந்ததென்பது தெளிவாகிறது. இத்திருக்கோவிலைப் புதுப்பித்த உள்ளமுடையான் சிலை ஒன்று, சுவாமி சன்னிதி மகாமண்டபத்தின் தூண் ஒன்றில் உள்ளது.

மூலவர்: பூவனாதர்
அம்மன்:-செண்பகவல்லி
தல விருட்சம்:- களா மரம்
தீர்த்தம்:- அத்தியர்
பழமை :- 1000-2000 
புராண பெயர் :-கோவிற்புரி (மங்கைநகர்)
ஊர் :- கோவில்பட்டி
மாவட்டம் :- தூத்துக்குடி 
மாநிலம் : தமிழ்நாடு 

 
#தல வரலாறு :

சிவனார் மனம் மகிழ தவமியற்றிய பார்வதி தேவிக்கு, இறைவன் காட்சி கொடுத்து திருமணம் முடிக்க வந்து சேர்ந்தார். ஈடிணையில்லா ஈசன் திருமணம் காண யாவரும் ஒருங்கே கயிலை மலையில் கூடினர். இதனால் உலகின் வடபுலம் தாழ்ந்து, தென்புலம் உயர்ந்தது. அதனைச் சமம் செய்ய இறைவன், கடல் குடித்த குடமுனியாம் அகத்தியரைத் தென்புலம் செல்லப் பணித்தார். அதன்படி தெற்கு நோக்கி வரும் வழியில் அகத்தியர் பொன்மலைக்கு வந்தார்.

அங்கு களாமரக் காட்டில் லிங்கத் திருமேனியாய் எழுந்தருளியுள்ள ஈசன் பூவனநாதரை வழிபட்டு, அங்கேயே தவமியற்றி வந்த முனிவர்களைக் கண்டார். அம்முனிவர்களின் வேண்டுக்கோளுக் கிணங்க அகத்தியர் சிவலிங்கத்திற்கு வடகிழக்கில் பொன்மலையில் தட்டியவுடன் அருவி ஒன்று ஓடி வரலாயிற்று. அதுவே ‘அகத்தியர் தீர்த்தம்’ என்று பெயருடன் விளங்கும், இந்தத் திருக்கோவிலின் தீர்த்தக் குளம் ஆகும்.

அதன் பின்னர் அகத்தியர் பொன்மலை முனிவர்களுடன் பூவனநாதரை வழிபட, இறைவன் அகத்தியர் முன்பாக தோன்றினார். ‘நீ என்னுடைய பெருமைகளை இங்குள்ள முனிவர்களுக்கு எடுத்துரைத்து விட்டு, இங்கிருந்து பொதிகை மலை சென்று என்னுடைய திருமணக் காட்சியை கண்டு தரிசிப்பாயாக’ என்று அருளினார். அதன்படி பொன்மலை முனிவர்களுக்கு, பொன்மலை பூவனநாதரின் பெருமைகளை எடுத்துரைத்த அகத்தியர், அங்கிருந்து பொதிகை மலைக்கு புறப்பட்டார். அகத்தியர் பொதிகை மலையை அடைந்ததும், உலகம் சமநிலையை அடைந்தது.

முன்பு ஒரு காலத்தில் சங்கன், பதுமன் என்ற இரு பாம்புத் தலைவர்களுக்கு, சிவன், திருமால் இருவரில் யார் பெரியவர் என்ற ஐயம் ஏற்பட்டது. ஐயம் தெளிவு பெற களாக் காட்டிடையே லிங்க வடிவில் எழுந்தருளி இருந்த ஈசனை, பூவனப் பூக்களால் அர்ச்சித்து வழிபட்டனர். அவர்கள் முன் இறைவன் தோன்றி காட்சி கொடுத்து இன்று முதல் இச்சிவலிங்கம் ‘பூவனநாதர்’ என்று பெயர் பெறும். புன்னைக்காவலில்(சங்கரன்கோவில்) உங்கள் ஐயம் தீர்ப்போம் என்று கூறி மறைந்தார்.

சங்கனும், பதுமனும் பூவன பூக்களால் இத்தல இறைவனை வழிபட்டதால், இறைவனுக்கு ‘பூவனநாதர்’ என்று பெயர் வந்தது. இத்திருத்தலத்தில் எழுந்தருளி இருக்கும் அம்பாள் செண்பகவல்லி, ஒரு முறை இறைவன் திருமுடியில் அமர்ந்திருக்கும் கங்கையை இகழ்ந்தாள். ஈசன் அம்பாளை அருவிக்கு அழைத்துச் சென்று, கங்கையை பேரழகுடைய பெண்ணாகவும், பின் சிவனாகவும் காட்டினார். அதனைக் கண்ட அம்பாளின் அகந்தை அழிந்தது. அம்பாள் அருள்தரும் அன்னையாக, செண்பகவல்லி என்ற பெயரில் 7அடி உயரத்தில் எழில் கொஞ்சும் தோற்றத்துடன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள்.

இவ்வன்னை இப்பகுதி மக்களின் வேண்டுதலை நிறைவேற்றும் தெய்வமாக விளங்குகிறாள். எனவே தான் இத்திருக்கோவிலுக்கு வரும் அன்பர்கள், முதலில் அம்பாள் சன்னிதியில் வழிபாடு முடித்துவிட்டு, பின்னர் சுவாமி சன்னிதிக்குச் செல்கின்றனர். இப்பகுதியில் உள்ள மக்களிடையே, பெண் குழந்தைகள் பிறந்தவுடன் பெரும்பாலும் செண்பகவல்லி என்ற பெயர் வைக்கும் பழக்கம் இன்னும் நீடிக்கிறது. தென் தமிழ் நாட்டு திருக்கோவில்கள் பலவற்றில் தேவியருக்கே மகிமை அதிகம். மாமதுரை மீனாட்சி, நீலத்திரை கடல் ஓரத்திலே நித்தம் தவம் செய்யும் குமரி அன்னை, திருநெல்வேலியில் காந்திமதி, சங்கரன்கோவில் கோமதி. இந்த வரிசையில் செக்கிழுத்த செம்மல் செந்தமிழில் புகழ்ந்து பாடிய கோயில்புரியாம் கோவில்பட்டியில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் அன்னை செண்பகவல்லியின் அருள் அளவிடற்கரியது.

பார்க்கும் இடமெங்கும் நீக்கமற நிறைந்துள்ள பரமன், இத்திருத்தலத்தில் லிங்கத் திருமேனியுடன் பூவனநாதராகப் பக்தர்களுக்கெல்லாம் பேரருள் புரிந்து வருகிறார். பொன்மலை களாக்காட்டிடையே தோன்றிய மூர்த்தி என்பதால் இவருக்கு ‘களாவனநாதர்’ என்ற திருநாமமும் உண்டு.

ஆலய அமைப்பு :

இத்திருக்கோவில் இறைவனும் இறைவியும் தனித்தனி சன்னிதிகளில் எழுந்தருளி, கிழக்கு நோக்கி அருள் பாலிக்கின்றனர். சுவாமி- அம்பாள் இருவருக்கும் தனித் தனி திருவாசல்கள் அமைந்திருப்பது சிறப்பு. இதில் அம்பாள் திருவாசலில் சுவாமி அம்பாள் திருமணக் காட்சியுடன் கூடிய எழில் கொஞ்சும் சிறிய சாலைக்கோபுரம் உள்ளது. சுவாமி திருவாசலின் முன்பாக ஏழு நிலைகள் கொண்ட ராஜகோபுரம் கண்கொள்ளாக் காட்சி தருகிறது. அம்மன் சன்னிதி குடவரை வாசலில் தென்புறம் பஞ்சமிகு விநாயகர் சன்னிதியும், வடபுறம் வள்ளி- தெய்வானை சமேத சண்முகர் சன்னிதியும் உள்ளன.

செண்பகவல்லி அம்மனின் சன்னிதி முன்புறம் அமைந்துள்ள பலிபீடம், கொடிமரம், நந்தி ஆகியவற்றைக் கடந்து செல்லும் வழியில், கருவறையின் இருபுறமும் துவார சக்திகள் உள்ளனர். அவற்றின் தென்புறம் விநாயகரும், வடபுறம் பாலசுப்பிரமணியரும் உள்ளனர். அம்பாள் சன்னிதி கருவறையின் பின்புறம் கிரியா சக்தி பீடமும், வடபுறம் சண்டிகேஸ்வரியின் தனி சன்னிதியும் உள்ளன. அம்பாள் திருக்கோவிலை அடுத்துள்ள தெற்குப் பலிச்சுற்றில் தென்கிழக்கு மூலையில் மடப்பள்ளியும், அதனை அடுத்து உக்கிராண அறையும் உள்ளன.

சுவாமி, அம்பாள் திருக்கோவில்களுக்கு நடுவே உற்சவமூர்த்திகள் சன்னிதி காணப்படுகின்றன. அதன் முன்புறம் கொலுமண்டபம் இருக்கிறது. பழங்காலத்தில் இந்த சன்னிதி பாலசுப்பிரமணியருக்கு தனி சன்னிதியாக இருந்ததாகக் கூறப்படுகிறது. கொலுமண்டபத்தின் முன்புறம் அம்பாள் சன்னிதி கொடிமரத்தை அடுத்து, ஆலய தல விருட்சமான களா மரம் உள்ளது. இத்திருக்கோவில் வளாகத்தினுள் 32 சிறிய பலிபீடங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தல இறைவனையும், இறைவியையும் வழிபட்டு வந்தால் தீராத பிணியெல்லாம் தீரும். எல்லா செல்வமும் நம்மை வந்து சேரும், பூவனநாதரை வேண்டி அபிஷேகம் செய்து வழிபட்டால் செய்த பாவங்களுக்கு புண்ணியம் கொடுப்பார் என்பது ஐதீகம்.

 #அகத்தியர்:

ஈசன் திருமணத்தின் போது வடபுலம் தாழ்ந்து தென்புலம் உயர்ந்த நிலையில் உலகைச் சமன்செய்யும் பொருட்டு இறைவன் ஆணைப்படி அகத்தியர் பொதிகை நோக்கிப் பயணமானார். வழியில் எதிர்த்த அரக்கர்களான வாதாபி மற்றும் விலவனன் ஆகிய‌ேரை வதைத்தனால் உண்டான பிரம்மகத்தி²ம் நீங்கப்பெற்றார். பொன்ம‌லை முனிவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க அகத்தியர் தீர்த்தத்தை ஏற்படுத்திவிட்டு தன் பயணத்தைத் ‌தொடர்ந்தார். வெள்ளிமலை சிவக்குழவைச் சார்ந்த வாமனன் நந்திதேவரின் சாபத்தால் வெம்பக்‌கோட்டையில் ‌வேந்தனாகப் பிÓந்து செண்பக மன்னன் எனப் பெயர் பெற்றான். இறைவன் ஆணைப்படி கோவிற்புரியையும் பூவனாதருக்‌கு கோவிலும் அமைத்து சாபநிவர்த்தி பெற்றான். செண்பக மன்னனால் தோற்றுவிக்கப்பட்ட இத்திருக்கோயிலில் அம்பாள் செண்பகவல்லி என்று பெயர் பெற்றாள். உள்ளமுடையான் ( ஒளி நூற் புலவர் கி.பி.1029க்கு முற்பட்டவர்) என்பவரால் புதுப்பிக்கப்பட்டது.

#தல சிறப்பு:

இங்கு மட்டும் நிற்கும் அம்பாளை உட்கார்ந்துள்ளது போல அலங்காரம் செய்கிறார்கள்.

#தல பெருமை:

மது‌‌ரையில் எப்படியோ அதுபோல் இங்கு அம்பாளுக்குத்தான் முக்கியத்துவம். இந்த சந்நிதி நு‌ழைவாயிலில் பிரம்மாண்டமான துவாரபாலகிகள் காண்ப்படுகின்றனர். மூல விக்ரகம் எப்படியுள்ள‌தோ அப்படியேதான் அலங்காரம் செய்வது எல்லா கோயில்களிலும் உள்ள வழக்கம். இங்கு மட்டும் நிற்கும் அம்பாளை உட்கார்ந்துள்ளது போல அலங்காரம் செய்கிறார்கள். இராமபிரான் சிவ வழிபாடு செய்த பெருமை உடையது. சதுங்கன், பதுமன் என்ற இரு பாம்புத் தலைவர்கள் இறைவனைப் பூவனப் பூக்களால் அர்ச்சித்ததால் இறைவன் பூவனநாதர் என பெயர் பெற்றார்.

#திருவிழா:

வசந்த உற்சவம் வைகாசி 10 தினங்கள் அம்பாள் ‌‌வளைகாப்பு உற்சவம் (ஆடிப்பூரம்) அம்பாளுக்கான சிறப்புத் திருவிழா நவராத்திரி புரட்டாசி 10 தினங்கள் திருக்கல்யாணத் திருவிழா 12 நாள் பெருந்திருவிழா சித்திரைத் தீர்த்தம் தமிழ் புத்தாண்டு தினம். இந்த முக்கிய வழாக்கள் தவிர ‌வெளர்ணமி, அமாவாசை, பிரதோச நாட்களில் கோயிலில் பக்தர்களின் வருகை பெருமளவில் இருப்பது சிறப்பு தமிழ், ஆங்கில வருடபிறப்பு, தீபாவளி, பொங்கல் ஆகிய விசேச நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து ‌கொள்வர்.

அருள் தரும் அம்பிகை செண்பகவல்லி அம்பாள் 7 ஆடி உயரத்தில் எழில் ‌‌கொஞ்சும் தோற்றததுடன் காட்சி தருகிறார்.
இங்கு வேண்டிக்கொள்ளும் பக்தர்களுக்கு தீராத பிணி தீரும். மனம் போல் மணவாழ்க்கை அமையும், குறைவில்லா குழந்தை பேறு கிடைக்கும். விவசாய ‌செழிப்பு,வியாபார விருத்தி ஆகியவற்றுக்காவும் இத்தலத்தில் வேண்டிக்‌‌கொள்ளலாம். 

ஓம் நமசிவாய 🙏
ஓம் சக்தி🙇

தில்லை காளியம்மன் ஆலய வரலாறு

தில்லை காளியம்மன் ஆலய வரலாறு
ஒரு முறை தேவ லோகத்தில் சிவனுக்கும் பார்வதிக்கும் ஒரு வாக்குவாதம் ஏற்படுகின்றது. அது நீ பெரியவனா இல்லை நான் பெரியவளா எனத் துவங்கிய சண்டை சக்தி இல்லையேல் சிவனும் இல்லை என பார்வதி வாதாடும் நிலைக்குப் போக கோபமுற்ற சிவபெருமான் பார்வதியை கோர உருவம் கொண்ட காளியாக மாறுமாறு சாபம் தந்து விடுகிறார். சிவனை விட்டுப் பிரிய மனமில்லாத பார்வதி அழுது புலம்பி தன்னை மன்னித்து விடுமாறு அவரை கேட்டுக் கொண்டப் பின் சாப விமோசனம் பெற்று மீண்டும் அவரை எப்படி அடைவது எனக் கேட்க அதற்கு சிவபெருமான் கூறினார் "இன்னும் சிறிது காலத்தில் அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் போர் நடக்க உள்ளது. அந்த நேரத்தில் நீ இதே காளி உருவில் தேவர்களுக்காக போரிட்டு அசுரர்களை அழிப்பாய். அப்போது நீ தில்லை மரங்கள் சூழ்ந்த தில்லைக்கு வந்து என்னை நினைத்து தவம் இருக்க வேண்டும். அப்போது ஒரு கட்டத்தில் உன்னுடன் சேர்ந்து நடனமாடி உன்னை என்னுடன் மீண்டும் அழைத்துக் கொள்வேன்".
காலம் ஓடியது. தாரகாசுரன் என்ற அசுரன் தோன்றி தேவர்களை துன்புறுத்தி வரலானான். தேவர்களும் ரிஷி முனிவர்களும் மும்மூர்த்திகளிடம் சென்று அவன் தொல்லையில் இருந்து தம்மை காப்பாற்றுமாறு வேண்டிக் கொண்டனர். அவர்கள் அனைவரும் சேர்ந்து சிவபெருமானிடம் ஆலோசனைக் கேட்க அவர் காளி உருவில் இருந்த பார்வதியை அதற்கு அனுப்பினார். காளி உருவில் இருந்த பார்வதி யுத்தகளத்துக்குச் சென்றாள். தாரகாசூரனையும் அவன் சேனையும் அழித்தப் பின் வெற்றி அடைந்தாள். ஆனால் அவனை வெற்றி கொண்டபின்னும் அவள் கோபம் அடங்கவில்லை. வெறியாட்டம் போல ஊழித்தாண்டவம் ஆடத் துவங்கினாள்.
தாரகாசுரன் அழிந்தாலும் முனிவர்களின் தொல்லை தொடர்ந்தது. அவர்கள் சிவபெருமானிடம் மீண்டும் சென்று வேண்டினார்கள். அனைவரும் சிவபெருமானையே மீண்டும் மீண்டும் தஞ்சம் அடைவது காளிக்குப் பிடிக்கவில்லை. அதனால் அவளுக்கு சிவபெருமான் மீது கோபம் ஏற்பட்டது. அவரை விட தானே பெரியவள் என முன்னர் கொண்டு இருந்த எண்ணம் இன்னமும் குறையவில்லை. வெறியும் அடங்கவில்லை. அவளுடைய உக்ரஹத்தினால் அனைத்து முனிவர்களும் ரிஷிகளும் சொல்லொண்ணத் துயருக்கு ஆளாகினார்கள்.
அந்த நேரத்தில் அங்கு இருந்த வியாக்கிரபாதர் மற்றும் பதஞ்சலி முனிவர்களின் வேண்டுகோளை ஏற்று சிவபெருமான் அவர்களுக்கு தில்லையில் திருநடனக் காட்சி தந்தார். அதை மெச்சி அனைவரும் அமர்ந்து இருந்த வேலையில் காளி சிவனை நடனப் போட்டிக்கு அழைத்தாள். போட்டியில் யார் தோற்றாலும் அந்த ஊரின் எல்லைக்கு சென்று விட வேண்டும் என்பது நிபந்தனை. நடனம் துவங்கியது. அனைத்து தேவர்களும் கடவுட்களும் இசை ஒலிகளை எழுப்ப காளி மற்றும் சிவபெருமானின் நடனப் போட்டி தொடர்ந்தது. வெற்றித் தோல்வியை நிர்ணயிக்க முடியாமல் அனைவரும் திகைத்து நின்றபோது சிவபெருமான் ஊர்த்துவத் தாண்டவம் என்பதை ஆடிக் காட்டினார். அதில் அவர் தனது காலால் கீழே விழுந்த குண்டலத்தை எடுத்து காலை மேலே தூக்கி தனது காதில் அணிந்து கொள்ள அதே ஊர்த்துவத் தாண்டவத்தை பெண்ணான காளியினால் செய்ய முடியாமல் நாணம் தடுத்தது. பெண்ணினால் எப்படி காலை மேலே தூக்கிக் காட்டுவது? அதனால் போட்டியில் தோற்றுப் போனாள்.
போட்டியில் தோற்று போனதும் அவமானம் அடைந்தவள் ஊர் எல்லைக்குச் சென்று உக்ரஹமாக வட எல்லைக் காளியாக அமர்ந்தாள். அதைக் கண்ட அனைவரும் அதிர்ந்து போனார்கள். சக்தி இல்லையேல் சிவனும் இல்லை. இருவரும் இணைந்து இல்லாதவரை பிரபஞ்சம் எப்படி இயங்கும் என கவலைப்பட அனைத்து தேவர்களும், மகாவிஷ்ணுவும் பிரும்மாவும் ஒன்று சேர்ந்து காளியிடம் சென்று அவளை சாந்தமடையுமாறு வேண்டிக் கொண்டனர். பிரும்மா அங்கேயே அமர்ந்து கொண்டு காளியை புகழ்ந்து வேதங்களை ஊதி அவளை பூஜிக்க அவர் பூஜையை ஏற்றுக் கொண்ட காளி பிரும்மசாமுண்டேஸ்வரி என்ற பெயரால் நான்கு முகம் கொண்ட சாந்தநாயகி ஆகி அதே இடத்தில் இன்னொரு சன்னதியில் சென்று அமர்ந்தாள்.
ஆக அந்த ஆலயத்தில் ஒரு சன்னதியில் உக்ரஹ காளி தேவியாக பல ஆயுதங்களையும் ஏந்திய எட்டுக் கைகளைக் கொண்ட தில்லைகாளியாகவும் இன்னொரு சன்னதியில் சாந்தமான நான்கு முக பிரும்மசாமுண்டேஸ்வரி அம்மனாகவும் காட்சி தந்தவாறு பக்தர்களை ரட்சித்து வருகிறாள். காளி சொரூபத்தில் உள்ளவள் பில்லி சூனியப் பேய்கள், சினம், பகை, கொடிய வியாதிகள், ஆணவம், அகம்பாவம் போன்றவற்றை அழித்து வருகிறாள். சாந்தமான பிரும்மசாமுண்டேஸ்வரி கல்வி, ஐஸ்வர்யம் , வீரம் போன்ற அனைத்தையும் அளித்து வருகிறாள்.
இந்த ஆலயத்தை பன்னிரெண்டாம் நூற்றாண்டில் அதாவது 1229 AD மற்றும் 1278 AD ஆண்டுகளில் கோபெருங்ஜிங்கன் என்ற மன்னன் கட்டினான் என்று தெரிகின்றது. அந்த காலத்தில் நடைமுறையில் இருந்த பழக்கத்தின்படி போரில் வெற்றி அடைவதற்காக தமது தலையையே தருவதாக வேண்டிக் கொண்ட படையினர் சிலர் போர்களில் வெற்றிப் பெற்றப் பின் அங்கு வந்து தமது தலைகளையே வெட்டிக் கொண்டபடையினர் சிலர் போர்களில் வெற்றிப் பெற்றப் பின் அங்கு வந்து தமது தலைகளையே வெட்டிக் கொண்டு மரணம் அடைந்ததாக வாய்மொழிக் கதைகளும் உள்ளதாம்.
ஆலயம் மிகப் பெரியது அல்ல ஆனால் மிகப் பழமையானது. உள்ளே நுழைந்ததும் வலது பக்கத்தில் உள்ள தனி சன்னதியில் ஆனந்த நர்த்தனமாடும் விநாயகரும், இடதுபுற தனிச் சன்னதியில் முருகனும் கிழக்கு திசையை நோக்கிப் பார்த்தவாறு இருந்து கொண்டு பக்தர்களை காத்து அருளுகிறார்கள். முதல் மண்டபமான தியான மண்டபத்தின் இரண்டு பக்கங்களிலும் அலுவலக அறைகள் உள்ளன. தியான மண்டபத்தில் பக்தர்கள் நெய் விளக்குகளை ஏற்றி தேவிகளை ஆராதிக்க விளக்கு பீடமும் வைக்கப்பட்டு உள்ளது. அடுத்த மண்டபத்தில் உள்ள சன்னதிகளில் நாம் காணுவது கிழக்கு நோக்கி தனி சன்னதியில் அமர்ந்து உள்ள தில்லைக் காளி அம்மனும் மேற்கு நோக்கி அமர்ந்து உள்ள பிரும்ம சாமுண்டியும் ஆவர்கள். அவர்கள் அங்கு அமர்ந்தவாறு பக்தர்களை ரட்சித்து கொண்டு உள்ளனர். அந்த மண்டப நுழை வாயிலில் இருபுறமும் பிரும்மாண்டமான காவல் தேவதைகள் நின்று கொண்டு உள்ளார்கள். சுவறுகளில் சில கல்வெட்டுக் குறிப்புகள் காணப்படுகின்றன.
தில்லை காளியம்மனுக்கு வெள்ளைப் புடவையை மட்டுமே சாத்துகிறார்கள். தினமும் அவளுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் மட்டுமே நடைபெறுகின்றது. காளி சாந்தம் அடையக்கூடாது என்பதற்காக உஷ்ணம் தரும் எண்ணையான நல்லெண்ணை மட்டுமே உபயோகிக்கின்றார்களாம். உடம்பு முழுவதும் மஞ்சளினால் ஆன குங்குமம் கொட்டப்பட்டு ( அதைக் காப்பிடுதல் என்று கூறுகிறார்கள்) வெள்ளைப் புடவையால் உடல் மறைக்கப்பட்டு உள்ளது. கண்கள் மட்டும் ஜொலிக்கும் வகையில் வெள்ளை நிறத்தில் காட்சி தருகின்றது. தில்லை காளியை அந்த கோலத்தில் மட்டுமே தரிசிக்க முடிந்தது. (படத்தைப் பார்க்கவும்). அவள் சன்னதிக்கு பக்கத்திலேயே அவளை ஆராதித்து தீபம் ஏற்றி வேண்டிக் கொள்ள விளக்கு பீடமும் வைக்கப்பட்டு உள்ளது. அந்த சன்னதியில் தில்லை காளியை தரிசிப்பவர்கள் கண்டிப்பாக அவள் உக்ரஹமான கண்களை உற்று நோக்கி அவளை வேண்டிக் கொண்டால்தான் பலன் உண்டு. ஆனால் அதற்கு மாறாக பிரும்ம சாமுண்டிக்கோ அனைத்து விதமான அலங்காரங்களும் செய்யப்பட்டு தேன், பால், போன்ற அபிஷேகங்களும் செய்யப் படுகின்றனவாம்.
அவள் சன்னதிக்கு பக்கத்தில் சுமார் ஆறு அல்லது ஐந்து அடி உயரமும் நான்கு அல்லது ஐந்து அடி சுற்றளவும் கொண்ட மிகப் பெரிய நாகதேவர் சிலை உள்ளது. காளியை வணங்கியப் பின் அவரையும் வணங்க வேண்டுமாம். அதன் பக்கத்திலேயே போர் வீரர்கள் தமது தலைகளை வெட்டிக் கொண்டு பலி தந்தக் காட்சியைக் காணலாம்.

63 நாயன்மார்களில் ஒருவரான,இடங்கழி_நாயனார் குருபூஜை இன்று:(#ஐப்பசி_கார்த்திகை)

63 நாயன்மார்களில் ஒருவரான,
சிவனடியார்களுக்கு 
திருவமுது படைக்க தனது அரச களஞ்சியத்திலிருந்து பொன்னையும் நெல்லையும் தந்து சிவத்தொண்டு புரிந்த
#இடங்கழி_நாயனார் குருபூஜை இன்று:
(#ஐப்பசி_கார்த்திகை)

இடங்கழி நாயனார் அரச களஞ்சியத்திலிருந்து சிவனடியார்களுக்குத் தேவையான பொன்னையும் நெல்லையும் எடுத்துக் கொள்ள அனுமதித்த குறுநில மன்னர். இவர் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர்.

இடங்கழி நாயனார் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார். தில்லையம்பலத்துக்குப் பொன்வேய்ந்த ஆதித்தனுக்கு முன்னோராகச் சோழர் குடியில் தோன்றினார்; கோனாட்டின் தலைநகராகிய கொடும்பாளூரில் தங்கியிருந்து வேளிர் குலத்து அரசினை ஏற்று ஆட்சிபுரிந்தார்.

புதுக்கோட்டை சமஸ்தானத்தில் கோநாடு, காநாடு என்ற இரு பிரிவுகள் இருந்தன. கோ நாட்டின் தலைநகராக விளங்கியது கொடும்பாளூர் ஆகும். கோவலன் வரலாற்றில் கொடும்பை என்று வர்ணிக்கப்படும் ஊர்தான் கொடும்பாளூர் ஆகும். இவ்வூர் திருச்சிராப்பள்ளி வழி விராலிமலை வழியே மதுரை செல்லும் வழியில் புதுக்கோட்டை மணப்பாறை சாலை சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது. மதுரை ராணி மங்கம்மாள் இவ்வூரில் சத்திரம் ஒன்றையும் கட்டியுள்ளார்.

இந்த கொடும்பாளூர், வேளிர் மன்னர்களின் தலைநகராக இருந்தது, கொடும்பாளூர் வேளிர்களும், முத்தரையர்ககளும் மண உறவில் இருந்ததையும் சூரியவம்சமான  சோழர்களுடனும் இவர்கள் இணைந்து இருந்தனர் என்பதையும் வரலாறு உறுதிப்படுத்துகின்றது. இவர்களின் உறவை வரகுணனாட்டி தென்னவன் இளங்கோ முத்தரையன் என்ற தலைப்புகளிலும் காணலாம். முத்தரையர்கள் முற்கால சோழர்கள் என்பதும் இவர்கள் சூரிய வம்சத்தினர் என்பதையும் வரலாற்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இத்தகைய சூரிய வம்சத்தில் பிறந்தவர் மன்னர் இடங்கழி நாயனார் ஆவார் என்று அபிதான சிந்தாமணி நூல் விளக்குகிறது. இவன் விஜயாலயச் சோழன் குடிப்பிறந்தவன் என்பதை பெரிய புராணமும் கூறுகிறது.

மன்னர் இடங்கழி நாயனாரின் தலைநகரான கொடுமை இன்னும் கொடும்பாளூரை சிலப்பதிகாரம் மிகச்சிறப்பாக வர்ணிக்கிறது. இவ்வூர் குறிஞ்சி நிலமாகிய எயினர் வாழும் இவ்வூரில், பொன்னம்பலத்து முகட்டை கொங்குநாட்டு பசும்பொன்னால் வேய்ந்த ஆதித்த சோழர் மரபில் இருக்கு வேளிர் என்ற குறுநில மன்னர் குலத்திலே இப்பெரியார் பெரும் புகழுடன் ஆட்சி செய்தார். இவர் சிவபெருமானுக்கு திருவடி தொண்டு புரிவதே கடமையாக கொண்டிருந்தார். இவரது ஆட்சிக் காலத்தில் சைவ நெறியும் வைதீக நெறியும் வளர்ந்தது. சிவன் கோவில்களில் சிவாகம விதிப்படி வழிபாடுகள் நடைபெற்றன.

கோனாடு என்பது இன்றைய புதுக்கோட்டை நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் ஆகும்.

வேளிர் குல மன்னர்கள் சிவபிரானிடத்தில் பெரும் பக்தியைக் கொண்டவர்கள். அவர்களின் வழித்தோன்றலான இடங்கழி நாயனாரும் சிவபெருமானிடம் பேரன்பு கொண்டு சிவபிரானின் அருட்செல்வத்தைப் பெறுவதே தம்முடைய பிறவியின் பயன் என்று கருதினார்.

ஆதலால் சிவாலயங்களுக்கு பொன்னும் நெல்லும் கொடுத்து திருப்பணிகள் செவ்வனே நடைபெற உதவினார். சிவனடியார்களுக்கு அவர்கள் வேண்டுபவற்றைக் கொடுத்து அவர்களைச் சிறப்பித்து வந்தார்.

இவ்வாறு சிறப்புற்ற ஆட்சியில் தவசீலர் ஒருவர் சிவனடியார்களுக்கு திருவமுது செய்வித்து வந்தார். இவரிடம் திருவமுது படிக்க பொருள் ஏதும் ஒரு நாள் கிடைக்கவில்லை. மனம் தளர்ந்த அந்த தவசீலர் எப்படியாவது நெல் பெற எண்ணி இடங்கழியாரின் அரண்மனைக்குள் நள்ளிரவில் திருடனைப்போல் புகுந்தார். நெல் களஞ்சியத்தை திறந்து நெல்லை எடுத்தார்.

இரவுக் காவலர்கள் இதை கண்டு அந்த தவ சிலரை பிடித்து மன்னரிடம் கொண்டு சென்றனர், மன்னர் இடங்கழியார் கோபம் கொள்ளாது, "ஏனய்யா நெல்லை திருடினீர்" என்று கேட்டார், இதற்கு இந்த தவசீலர் சிவனடியார்களுக்கு திருவமுது செய்வது எனது வழக்கம், என்று பொருள் இல்லாமையால் செய்ய முடியாமல் தடைப்பட்டது என்றும், அதனால்தான் இவ்வாறு செய்தேன் என்று சொன்னார்.

இதனைக்கேட்ட இடங்கழியார் மனமிரங்கி "இவரன்றோ எனக்கு பண்டாரமாவார்" என்று கூறி அவரை விடுதலை செய்தார். பிறகு அவரது நிலை அறிந்த உள்ளதோடு சிவனடியார்கள் எல்லோரும் நற் பண்டாரம் மட்டுமேயன்றி, குறைவில்லாத மற்றைய நிதிகளின் பண்டாரங்களாகிய எல்லாவற்றையும் கொள்கையாக முகர்ந்து கவர்ந்து கொள்க! என்று பறைசாற்றினார். அத்தனை பொருட்களையும் சிவனடியார்களுக்கு வழங்கினார். நாட்டு மக்களின் நலன் கருதி நல்லாட்சி புரிந்தார் இவரது காலத்தில் காவிரி நீரை திருப்ப கொங்கண் வாய்க்கால் என்ற வாய்க்கால் சிறிது தூரம் வெட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு சிறப்புடன் ஆட்சி செய்து இடங்கழி நாயனார் 63 நாயன்மார்களில் ஒருவராக திகழ்கிறார்.

சைவநெறி வைதிகத்தின் தருமநெறியோடு தழைப்பத் திருகோயில்கள் எங்கும் வழிபாட்டு அர்ச்சனைகள் விதிப்படி திகழச் செய்தார். சிவனடியார்கள் வேண்டுவனவற்றை விரும்பிக் கொடுக்கும் சீலமுடையவராய் ஒழுகினார். இவர் அரசு புரியும் நாளில் சிவனடியார்க்குத் திருவமுதளிக்கும் தவமுடைய அடியார் ஒருவர், உணவமைத்தற்குரியன எதுவும் கிடைக்காமல் மனம் தளர்ந்தார். அடியாரை அமுது செய்வித்தலிலுள்ள பேரார்வத்தால் செய்வதறியாது அரசர்க்குரிய நெற்பண்டாரத்திலே நள்ளிரவிற் புகுந்து நெல்லைக் களவு செய்தார். அந்நிலையில் காவலர்கள் அவரைப் பிடித்து இடங்கழியராகிய மன்னர் முன் நிறுத்தினர். இடங்கழியார், அவரைப் பார்த்து, 'நீர் ஏன் நம்முடைய நெற்பண்டாரத்தைக் கவர்ந்தீர்' எனக் கேட்டார். அதுகேட்ட அடியவர், 'நான் சிவனடியார்களைத் திருவமுது செய்விக்கும் பொருளின்மையால் இவ்வாறு செய்தேன்' என்றார், அதுகேட்டு இரங்கிய மன்னர், 'எனக்கு இவரன்றோ பண்டாரம்' என்று சொல்லிப் பாராட்டிப் படைத்த நிதிப்பயன்  கொள்வாராய்ச், 'சிவனடியார்களெல்லாரும் எனது நெற் பண்டாரம் மாத்திரமன்றி நிதிப் பண்டாரங்களையும் கவர்ந்து கொள்க' என எங்கும் பறையறிவித்தார். அருள் வேந்தராகிய இவர் தண்ணளியால் நெடுங்காலம் திருநீற்றின் ஒளி தழைப்ப அரசு புரிந்திருந்து சிவபதம் அடைந்தார்.

இவ்வாறு அடியவர்களின் வறுமையைப் போக்கி சிவதொண்டு புரிந்த இடங்கழி நாயனார் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகும் பெருமை பெற்றார்.

இடங்கழி நாயனார் குருபூஜை ஐப்பசி மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது.

இடங்கழி நாயனாரை சுந்தரர் திருத்தொண்ட தொகையில் ‘மடல் சூழ்ந்த தார்நம்பி இடங்கழிக்கும் அடியேன்’ என்று போற்றுகிறார்.

திருச்சிற்றம்பலம் 
🙏🙇

சிவகங்கை மாவட்டம் தமிழ்நாடு திருப்பத்தூர் அருள்மிகு பூமாயிஅம்மன் ஆலயம்.*

◄•───✧ உ ✧───•►

*🙏 இன்றைய கோபுர*
*தரிசனம் 🙏*
*சிவகங்கை மாவட்டம் தமிழ்நாடு திருப்பத்தூர் அருள்மிகு பூமாயிஅம்மன் ஆலயம்.*

*கோபுர தரிசனம் - கோடி புண்ணியம்*

*கோபுர தரிசனம் - பாவ விமோசனம்*

*மூலவர்:*

பூமாயி அம்மன்

*அம்மன்/தாயார்:*

பூமாயி அம்மன்

*தீர்த்தம்:*

இத்திருக்கோயிலின் இராஜகோபுரத்திற்கு வடக்கே பூமாயிஅம்மன் திருக்குளம் உள்ளது. நவக்கிரக சந்நிதியை ஒட்டியுள்ள கிணறும் தீர்த்தமாக பயன்படுத்தப்படுகிறது.

*பழமை:*

500 வருடங்களுக்குள்

*புராண பெயர்:*

திருப்புற்றூர்

*ஊர்:*

திருப்புத்தூர்

*மாவட்டம்:*

சிவகங்கை

*மாநிலம்:*

தமிழ்நாடு

*திருவிழா:*

*பூத்திருவிழா:*

*சிறுவர்களுக்கு தீபாவளி என்றால் எப்படி உற்சாகமோ, திருப்புத்தூர் பகுதி மக்களுக்கு பூத்திருவிழா என்றால் சந்தோசம் கரை புரண்டோடும்.*

*பேசும் தெய்வமாம் பூமாயிஅம்மனுக்கு வருடந்தோறும் சித்திரை மாதம் வளர்பிறை பஞ்சமி திதியன்று பூச்சொரிதல் விழா நடைபெறும்.*

*காப்புக் கட்டி பத்து நாட்களும் அம்மனுக்கு உற்சவமும், திருக்குளத்தைச் சுற்றி திருவீதி உலாவும், பத்தாம் நாள் அம்மனுக்கு பொங்கல் விழாவும் நடைபெற்று வசந்தப் பெருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.* 

*பக்தர்கள் பால்குடம் எடுத்தும், பூத்தட்டு சுமந்தும் வந்து அம்மனை பூக்களால் அபிசேகம் செய்து தரிசிப்பதும் நாள் முழுவதும் நடைபெறும்.*

*அதற்கேற்ப நகரெங்கும் ஆடல், பாடல், இசைக் கச்சேரிகளும், மின்னொளி அலங்காரமும், பரவலான கிராமிய திருவிழாக் கடைகளும், விளையாட்டுக்களும், வீட்டுக்கு வீடு விருந்தினர்களுக்கு உபசரிப்பும், மின் அலங்கார தேர்களில் அம்மன் என்று நகரே திருவிழா கோலம் கொள்வதைப் பார்க்க கண் கொள்ளக் காட்சியாகும்.*

*அது மட்டுமின்றி, புரட்டாசி மாதம் 10 நாட்கள் நவராத்திரி விழாவில், தினசரி ஒவ்வொரு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி தருகிறாள். பக்தர்கள் புடைசூழ அம்பு எய்தலும் நடைபெறும்.*

*சங்கடஹர சதுர்த்தி, அஷ்டமி, கார்த்திகை, சஷ்டி நாட்களில் சிறப்பு அபிஷேகம், அனுமன் ஜெயந்தி விழாவும் இக்கோயிலில் நடைபெறுகிறது.*

*தல சிறப்பு:*

*சப்த மாதாக்கள் என அழைக்கப்படும் பிராஹ்மி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராஹி, இந்திராணி, சாமுண்டி ஆகிய அன்னை எழுவரும் ஒரே இடத்தில் இங்கு எழுந்தருளி காட்சி தருவது இத்திருக்கோயிலின் சிறப்பம்சமாகும்.*

*திறக்கும் நேரம்:*

*காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 3.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.*

*முகவரி:*

*அருள்மிகு பூமாயி அம்மன் திருக்கோயில்,தென்மாபட்டு, கண்டரமாணிக்கம் ரோடு,திருப்புத்தூர்,சிவகங்கை-630211.*

*போன்:*

*+91 99424 60707, 99426 49580.*

*பொது தகவல்:*

*திருக்கோயில் கிழக்குப் பகுதியில் சுந்தரமூர்த்தி விநாயகர் கோயில் உள்ளது.*

*வடபுறம் இராஜகோபுரம், மகா மண்டபம், வெளிப்பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் ஆதிவிநாயகர் சன்னிதி, மேற்கு மதில் சுவரையொட்டி தவ முனீஸ்வரர், உள் பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் பரிகார விநாயகர், மேற்கே வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் சன்னிதியும் உள்ளது.*

*வடக்கில் தெற்கு நோக்கிய ஆஞ்சநேயர், மூலவர் சன்னிதி எதிரே வேதாளம் சிலை, தொடர்ந்து பலி பீடம், கொடிமரம் உள்ளது.*

*மகா மண்டபத்தில் வடகிழக்கு மூலையில் நவக்கிரக சன்னிதி, அருகில் மேற்கு நோக்கிய பைரவர் சன்னிதி உள்ளது.*

*இத்திருக்கோயிலில் 1981 கும்பாபிஷேகத்தின் போது மூன்று நிலைகளுடன் கட்டப்பட்ட இராஜகோபுரம், மூலவர் விமானம் அழகிய சுதை சிற்பங்களுடன் பஞ்சவர்ணத்தில் அமைக்கப்பட்டுள்ளது.*

*மகா மண்டபம், திறந்த வெளி உள்பிரகாரம், கருவறை மண்டபம், பரிவார தேவதைகளுக்கு சிறு மண்டபங்கள் உள்ளன.*

*அன்னை பூமாயி அம்மனுக்கு ராஜ கம்பீர தோற்றத்துடன் ராஜகோபுரம் எழுப்பி, 21.06.1981, 15.09.1994, 31.10.2008 ஆகிய ஆண்டுகளில் மும்முறை கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.*

*பிரார்த்தனை:*

*பக்தர்கள் தங்களது பிரார்த்தனை அனைத்தையும் இந்த அம்மனிடம் வேண்டுகின்றனர்.*

*நேர்த்திக்கடன்:*

*வேண்டுதல் நிறைவேறியவுடன் அம்மனுக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றுகின்றனர்.*

*தலபெருமை:*

*பிராஹ்மி:*

*பிரம்மாவின் சொரூபமாக அட்சமாலையும், கமண்டலமும் ஏந்தி சிலை வடிக்கப்பட்டுள்ளது.*

*மகேஸ்வரி:*

*மகேஸ்வரரின் சொரூபமாக முச்சூலத்தையும், சந்திரனையும், பாம்பையும் தரித்து சிலை வடிக்கப்பட்டுள்ளது.*

*கவுமாரி:*

*குமரனின் அம்சமாக மயிலும் வேலாயுதமும் சூழ பெரிய வேலாயுதத்துடனும் சிலை வடிக்கப்பட்டுள்ளது.*

*வைஷ்ணவி:*

*விஷ்ணுவின் சொரூபமாக சங்கு, சக்கரம், கதை, வில் ஆயுதங்களுடன் சிலை வடிக்கப்பட்டுள்ளது.*

*வராஹி:*

*ஹரியின் வராக வடிவத்தின் சொரூபமாக கலப்பை மற்றும் சாட்டையுடன் சிலை வடிக்கப்பட்டுள்ளது.*

*சாமுண்டி:*

*தெற்றிப்பல் கொண்ட வாயும் தலைமாலை ஆபரணமும் கொண்டு சிலை வடிக்கப்பட்டுள்ளது.*

*இங்கு சப்தமாதாக்கள் எழுவரும் சிலை வடிவில் அமைந்துள்ளது இக்கோயிலுக்கு பெருமை சேர்க்கிறது.*

*தல வரலாறு:*

*தொன்மையான பூமாயி அம்மன் திருக்கோயில், தேனும் வண்டும் திளைக்கும் திருப்புத்தூர் என திருஞானசம்பந்தரும், தேரோடும் நெடுவீதி திருப்புத்தூர் என திருநாவுக்கரசரும் போற்றிப் பாடிய திருப்புத்தூரில் அமைந்துள்ளது.*

*பெண்கள் வணங்கும் தெய்வங்களாகிய சப்தமாதாக்கள் உறைந்த திருக்கோயிலாக, தென் திசை காவல் தெய்வமாக அன்னை பூமாயி அம்மன் கோயில் உள்ளது.*

*வேதச்சிறப்பும், வரலாற்றுப் பெருமையும் கொண்டது. திருப்புத்தூர் ஆதிகாலத்தில் கொன்றை வனமாக இருந்தது.* 

*இவ்வனத்தில்தான் ராமாயணம் காவியம் படைத்த வால்மீகி முனிவர் தவம் இருந்ததாகவும், அவரைச் சுற்றி புற்று மூடியதாகவும், இதனால் வன்மீகம் என்று வடமொழிச் சொல்லால் அழைக்கப்பட்டது.*

*வன்மீகம் என்றால் தமிழில் புற்று என்பதால், திருப்புற்றூர் என அழைக்கப்பட்டு தற்போது திருப்புத்தூர் என்று மருவியிருக்காலம் என்று புராண,வரலாறுச் செய்திகள் தெரிவிக்கின்றன.*

*சப்த மாதாக்களின் நடுநாயகமாக அன்னை வைஷ்ணவி, பூமாயி அம்மனாய் இங்கு அருள் புரிகிறாள்.*

*பூமா + ஆயி: இப்பூவுலகம் முழுவதையும் தன் அருட்பார்வையால் காத்து ரட்சிக்கும் தாய் எனப் பொருள் தரும் பூமாயி என்ற பெயரில் பூமாயி அம்மனாய் இங்கு அன்னை காட்சி தருகிறாள்.*

*லவகுசர்களுக்கும், ராமபிரானுக்கும் யுத்தம் முடிந்த பின் சீதா பிராட்டியைப் பூமாதேவி பூமிக்குள் அழைத்துச் சென்ற இடம் இது என்பதால் பூமாயி என்ற பெயரில் இத்திருக்கோயில் ஸ்தாபிக்கப்பட்டதாகவும், இக்கோயிலில் உள்ள சப்த மாதாக்கள் வால்மீகி முனிவரின் ஞான கடாட்சத்தாலும், தவ வலிமையாலும் ஸ்தாபிக்கப்பட்டது என்றும் புராணச் செய்திகள் கூறுகிறது.*
 
*சிறப்பம்சம்:*

*அதிசயத்தின் அடிப்படையில்:*

*சப்த மாதாக்கள் என அழைக்கப்படும் பிராஹ்மி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராஹி, இந்திராணி, சாமுண்டி ஆகிய அன்னை எழுவரும் ஒரே இடத்தில் இங்கு எழுந்தருளி காட்சி தருவது இத்திருக்கோயிலின் சிறப்பம்சமாகும்.*

*அமைவிடம்:*

*சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பஸ் ஸ்டாண்டிலிருந்து பட்டமங்கலம் செல்லும் வழியில் சுமார் 2 பர்லாங் தூரத்தில் கோயில் உள்ளது.*

*அருகிலுள்ள ரயில் நிலையம்:*

காரைக்குடி

*அருகிலுள்ள விமான நிலையம்:*

மதுரை

*தங்கும் வசதி:*

காரைக்குடி


பூமாயி அம்மன்
விநாயகர்
சுப்பிரமணியர்
ஆதி விநாயகர்
பைரவர்
நவக்கிரகம்
சப்த கன்னி
தவ முனீஸ்வரர்
ஆஞ்சநேயர்

*கோபுர தரிசனம் தொடரும்...*

*வாழ்க வளமுடன்...*

*வாழ்க வையகம்...*

*🙏 ஓம் சக்தி 🌷*

ஐப்பசி அன்னாபிஷேகம்உருவான வரலாறு

ஐப்பசி அன்னாபிஷேகம்
உருவான வரலாறு 
அன்னாபிஷேகம் நடத்துவது ஏன்?

கல்லினுள் தேரை முதல் கருப்பை உயிர் வரை எண்ணாயிரம் கோடி உயிர்களுக்கு உணவு அளிப்பவன் ஈசன். அதனை நினைவுகூர்ந்து நன்றி செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் *ஐப்பசி மாத பௌர்ணமி* நாளில் எல்லா சிவாலயங்களிலம் *அன்னாபிஷேகம்* நடத்தப் படுகிறது.
சிவலிங்கத்தை அன்னத்தினால் முழுமையாக மூடி ஆராதனைகள் செய்வதையே அன்னாபிஷேகம் என்கிறோம். 

அதை ஏன் ஐப்பசி மாத பௌர்ணமியில் செய்ய வேண்டும்? மற்ற மாதங்களில் செய்யலாமே?
ஐப்பசி மாதப் பௌர்ணமிக்கு ஒரு சிறப்பு உண்டு. அன்றுதான் சந்திரன் தனது சாபம் முழுமையாகத் தீர்ந்து பதினாறு கலைகளுடன் முழுப் பொலிவுடன் திகழ்கிறான்.

அன்னத்தின் பெருமை

ஐப்பசி பௌர்ணமி நாளன்று அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் எனப்படும் சிறப்பு வழிபாடு லிங்க மூர்த்திக்கு நடத்தப் படுகிறது. அனைத்து உயிர்களுக்கும் அன்னமான உணவை அளித்துப் பாதுகாக்கும் சிவபெருமானுக்கு சுத்தமாக சமைக்கப்பட்ட சாதத்தால் இறைவனை அலங்கரிப்பது இதன் சிறப்பம்சமாகும்.
*“அன்னம் பரப்பிரம்மம்"* என்பர். 

உணவை இறைவனாகப் பார்க்கிறது ஆன்மிகம். உடலை வளர்ப்பதுடன், உள்ளத்தையும் வளர்ப்பது அன்னம் தான். இதனால் தான், ஐப்பசி பவுர்ணமி அன்று, சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நடத்தப் படுகிறது. பிரசாதத்தை *“ப்ர+சாதம்"* என சொல்ல வேண்டும். “சாதம்" சாதாரண உணவு; “ப்ர" என்றால், சிறந்த , உன்னதமான , பிரும்மாண்ட என்று பொருள். . அதுவே கடவுளுக்கு படைக்கப்பட்டு விட்டால், அதிலுள்ள தோஷங்கள் விலகி, “பிரசாதம்" ஆகி விடுகிறது. இதனால் தான், சிவனுக்கு அன்னாபிஷேகம் நடத்தி, உணவளித்தனர்.

முனிவர் ஒருவர், ஒரு தேசத்தின் ராஜாவைச் சந்தித்தார். அவரை வரவேற்ற அவன், தனியறையில் தங்க வைத்து, சகல வசதிகளையும் செய்து கொடுத்து, சாப்பிட்டு விட்டுப் போகும் படி கட்டாயப்படுத்தினான்; முனிவர் மறுத்தார். இருப்பினும், நியமத்துடன் சமைத்துப் போடுவதாக வாக்களித்து, சமையலுக்கும் தனியாட்களை ஏற்பாடு செய்தான்; முனிவரும் சாப்பிட்டார். 

பலவகை உணவுகளால் வயிறு மந்தமாயிற்று; தூக்கம் வந்தது. சற்று நேரம் தூங்கி, பின் விழித்ததும், கண் எதிரே இருந்த சுவரில் ஒரு முத்துமாலை தொங்கியதைப் பார்த்தார். உள்ளே சென்ற உணவின் தாக்கமோ என்னவோ… அதை எடுத்து வைத்துக் கொண்டால் என்ன என்று முனிவருக்கு தோன்றியது. அதையெடுத்து தன் வஸ்திரத்தில் முடிந்து வைத்துக் கொண்டார்.

சற்று நேரம் கழித்து, ராஜாவிடம் விடைபெற்று, தன் ஆசிரமத்துக்குப் போய் விட்டார். அவர் சென்ற பிறகு தான், மாலை காணாமல் போன விஷயம் வெளிப்பட்டது. அதிகாரிகள் விசாரணையை ஆரம்பித்தனர். அந்த அறைக்கு வந்து போன அப்பாவிகளுக்கெல்லாம் உதை விழுந்தது; ஆனால், அவர்களோ ஒரேயடியாக மறுத்தனர். முனிவர் மீது சந்தேகம் என்ற சிந்தனை கூட யாருக்கும் வரவில்லை. அவர் முற்றும் துறந்தவர் என்பதில் எல்லாருக்கும் முழு நம்பிக்கை.

அன்றிரவு, முனிவருக்கு வயிறு, “கடமுடா" என்றது; கடும் பேதி. வயிறு குறைய, குறைய மனசும் பழைய நிலைக்கு வந்து விட்டது. “அவசரப்பட்டு தப்பு செய்து விட்டோமே… விசாரணையில் அப்பாவிகளெல்லாம் அடி வாங்கியிருப்பரே… என்ன நடந்தாலும் பரவாயில்லை. ராஜாவிடம் இதை ஒப்படைத்து, கொடுக்கிற தண்டனையைப் பெற்றுக் கொள்வோம்" என்று சென்றார். ராஜாவிடம் உண்மையைச் சொல்லி, மாலையை ஒப்படைத்தார் .

“யாரோ ஒருவன் இதைத் திருடி உங்களிடம் ஒப்படைத்திருக்கிறான். அவனைக் காப்பாற்ற நீங்கள் திருடியது போல் நாடகமாடுகிறீர்கள். நீங்களாவது, திருடுவதாவது…இதைக் கேட்கவே மனம் சகிக்கவில்லை…" என்றான் ராஜா. அவ்வளவு நம்பிக்கை! முனிவரோ, தன் கருத்தில் விடாப்பிடியாய் நின்றார். ராஜா அவரிடம், “நீங்கள் சொல்வது உண்மையாயினும், அதற்கும் ஒரு காரணம் இருந்திருக்க வேண்டுமே…
அதுபற்றி ஏதாவது உங்கள் பேரறிவுக்கு புலப்படுகிறதா?" எனக் கேட்டான்.

“மன்னா… நேற்றைய உணவை சமைத்தது யார்? அதற்கு பயன்படுத்திய பொருட்கள் எந்த வழியில் வந்தன என சொல்…" என்றார்.

“சுவாமி… திருடன் ஒருவன் ஒரு அரிசிக் கடையை உடைத்து மூடையை தூக்கிச் சென்ற போது, பறிமுதல் செய்த அரிசி அது. அரிசிக்குரியவர் உரிய ஆவணம் தராததால், அரண்மனை கிட்டங்கியில் சேர்க்கப்பட்டது…" என்றான்

“பார்த்தாயா… திருட்டு அரிசியை சாப்பிட்டதால், திருட்டு புத்தி வந்துள்ளது…"* என்றார் முனிவர்.

“அப்படியே இருந்தாலும் கூட, அப்படி ஒரு அரிசியை சமைக்க காரணமான நான் தான் குற்றவாளி…"* என்ற ராஜா, முனிவரை அனுப்பி விட்டான். 

உணவு பயிரிடும் விதம், பயிரிடுபவர், சமைப்பவர் இவற்றைப் பொறுத்தே சாப்பாட்டின் தரம் அமையும். அதைச் சாப்பிடும் போது, அந்த குணநலன்கள் மனிதனை தாக்கும். அதனால் தான், இறைவனுக்கு படைத்து பிரசாதமாக சாப்பிடுகிறோம். பயிரிடும் போதும், சமைக்கும் போதும், சாப்பிடும் போதும் நல்லதையே சிந்தித்தால், நாம் உண்ணும் உணவே பிரசாதம் ஆகிவிடும்.

திருமீயச்சூர் ஶ்ரீ லலிதாம்பிகை #நெய்குளம் தரிசனம்.

#திருமீயச்சூர் 
ஶ்ரீ லலிதாம்பிகை #நெய்குளம் தரிசனம்.
திருமீயச்சூர். அகிலம் சிறக்க தனது திவ்ய நாமங்களைக் கொண்டே வசினீ தேவதைகள் மூலமாக ஸ்ரீ லலிதா சகரஸ்ரநாமத்தை உருவாக்கிய தலம் திருமீயச்சூர்.
திருமீயச்சூர் 
ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம்
#தோன்றிய_திருத்தலம்.
இங்குதான் ஶ்ரீ ஹயக்கிரீவர் அகத்திய முனிவருக்கு
ஶ்ரீ லலிதா சகஸ்ரநாமம் இதன் பெருமையைப்
பற்றி விவரித்தார். 
இதைக்கேட்டஅகத்தியர்,"ஶ்ரீ லலிதா சகஸ்ரநாமத்தை எத்தலத்தில் கூறினால் முழுப்பலன்கிடைக்கும்?''என கேட்டார். 
அதற்கு ஶ்ரீ ஹயக்கிரீவர்," பூலோகத்தில் அம்பாள் மனோன்மணியாக வீற்றிருக்கும் இடத்திற்குச் சென்று சொன்னால் பூரண பலன்கிடைக்கும் என்றார்.அகத்தியர் தன்மனைவி லோப முத்திரையுடன் திருமீயச்சூர் சென்று ஶ்ரீ லலிதாம்பிகை ஸ்ரீசக்ர பீடத்தில் ராஜசிம்மாசனத்தில் அமர்ந்தி இருக்கிறாள்.
அபய, வரத ஹஸ்த முத்திரையுடன், வலது காலை மடித்து இடதுகாலை தொங்கவிட்டு அருளாட்சி செய்கிறாள். வலது காலை மடித்த
அம்பிகையைக் காண்பது அரிது, 
இவ் லலிதாம்பிகையை தரிசித்து,
ஶ்ரீ லலிதா சகஸ்ரநாமம் சொன்னார். அம்பாள் மகிழ்ந்து அத்தம்பதிகளுக்கு நவரத்தினங்களாக தரிசனம் தந்தாள். 
அப்போது அகத்தியர்,லலிதா நவரத்தின மாலை என்னும் ஸ்தோத்திரம் பாடினார்.
நெய் குள தரிசனம்
திருமீயச்சூர் ஶ்ரீ லலிதாம்பிகை அம்மனின்
நெய்க்குளம் தரிசனம் நவராத்திரி
காலத்தில் மிகவும் பிரசத்தி பெற்றது.
#விஜயதசமி அன்று கருவறைக்கு முன்பாக 15அடி நீளத்திற்கு வாழை இலையை பரப்பி அதில் சர்க்கரைப் பொங்கலை பரப்பிடுவர்.
அத்துடன் புளி சாதம்,தயிர்சாதம்
போன்றவற்றை தயாரித்து தேவியின் சந்நதியின்முன் வாழையிலை, மட்டை, தென்னை ஓலைஆகியவற்றின் மீது 15 அடி நீளம்,4 அடி அகலம், ஒன்றரை அடி உயரத்தில் படையலாகப் படைப்பர். சர்க்கரைப் பொங்கல் நடுவே குளம் போல அமைத்து அங்கே இரண்டரை டின் தூய நெய்யைக் கொண்டு நிரப்புவர்.அதன் பின்னர் கருவறையின் திரையை விலக்கினால் அலங்கரிக்கப்பட்ட அம்மனின் உருவம் நெய் குளத்தில் பிரதிபலிக்கும். 
இதனை தரிசிப்பவர்களுக்கு மறுபிறவியே கிடையாது.இதுதான் நெய்க்குள தரிசனம்.
நவராத்திரி நிகழ்வின் மிகவும் பிரசித்தி
பெற்ற தரிசனம்.
திருமீயச்சூரில் உள்ள அருள்மிகு லலிதாம்பிகை சமேத ஸ்ரீ மேகநாத சுவாமி திருக்கோயில் மட்டுமே கிடைக்கப் பெறும் நெய்குளம் தரிசனம்.
மென்மையானவள் :

ஸ்ரீ லலிதா சகஸ்ர நாமத்தை அன்றாடம் பக்தி சிரத்தையுடன் பாராயணம் செய்வதால் எல்லா நலன்களையும் அடையலாம். லலிதா என்பதற்கு மென்மையான என்று பொருள். லலிதா என்றால் மென்மையானவள் என்றும் சுலபமானவள் என்றும் அர்த்தம். விளையாடுபவள் என்றும் எடுத்துக்கொள்ளலாம் - நம் எதிரிகளுடனும் நம் துன்பங்களுடனும் விளையாடி அவைகள் நம்மை அண்டாமல் பார்த்துக்கொள்பவள் 

என்னை விட என் நாமங்கள் உயர்ந்தவை , 

என் நாமங்களை விட என்னை பற்றிய சிந்தனைகள் உயர்ந்தவை - 

என்னைப்பற்றிய சிந்தனைகளைவிட மற்றவர்கள் எல்லோரும் நலம் பெறவேண்டும் என்று என்னை வணங்குபவர்கள் மிகவும் சிறந்தவர்கள் ...

அம்மா  ஸ்புடம் போட்ட பொன் போல ஜொலிக்கும்  ஸ்ரீ வித்யாவாகிய, லலிதாம்பிகே, 

சிவந்த உடை உடுத்த, அமைதி தவழும் புன்னகை பூத்த திவ்ய முகத்தாளே ,  

தாமரை ஆசனத்தில் அமர்ந்த  மாதா,  

தாமரைக்கும் மேல் மலர்ந்த  உருண்ட கருணை  விழி கொண்ட ஜகன்மாதா, 

தங்கத்தாமரை கரத்திலேந்தியவளே,  

பக்தர் விரும்புவதெல்லாம் அருளும் பவானி,  

சகல லோக ரக்ஷகி,  

பக்தர்களை கனிவோடு காப்பவளே, 

சர்வ தேவாதி தேவர்களும்  தொழும் தாயே, தயாளு,  

செல்வங்களை வளங்களை வாரி வழங்கும்  உன்னை  மனதார பிரார்த்திக்கிறேன், தியானிக்கிறேன் பிறர் நலம் வேண்டி ...

சிரித்துக்கொண்டே  நகர்ந்தாள் 

உத்யத்பானு-ஸஹஸ்ராபா 
சதுர்பாஹு-ஸமன்விதா
ராகஸ்வரூப-பாசாட்யா 
க்ரோதாகாராங்குசோஜ்ஜ்வலா

எல்லாமாய் இருப்பவள் .....

கொலுசு கேட்கும் கொடைவல்லி -3

 . அந்த ஸஹஸ்ரநாம நாயகியின் கருணையைப்போல அவளைப்பற்றிய விஷயங்களும் நீண்டு  வளர்ந்த ஒன்று . 
அம்மா தாங்கள் யாரோ ஸ்ரீ லலிதாம்பிகை யாரோ என்று பிரித்து சொல்வதைப்போல இருக்கிறதே --- சிரித்தாள் சிங்காரவல்லி ஒரு வினாடி அவளை என்னிலிருந்து பிரித்து சொல்லும் போது என்னால் பல விஷயங்கள்  அதனால் கொஞ்சம் வேறு வேறாக பிரித்து சொல்கிறேன் ... சொல்லி முடிக்கும் வரை நான் வேறு அவள் வேறு என்றே நினைத்துக்கொள் .. 

சரி இன்று கோயில் அமைப்பை பற்றி இன்னும் கொஞ்சம் அதிகமாக சொல்கிறேன் - அங்கே கொஞ்சி  விளையாடும்  கிளியைப்பற்றியும் சொல்கிறேன் - மதுரை ஞாபகத்திற்கு வரலாம் ....

அன்னப்பாவாடை மகா நைவேத்தியம் :

சர்வலாங்கார அம்பிகையாக கைகளில் வளையல்களும் அமர்ந்த நிலையில் கால்களில் கொலுசும் இடுப்பில் ஒட்டியானமும் கழுத்தில் சகல விதமான ஆபரணங்களும் அணிந்து அற்புதமாக காட்சி அளிக்கின்றாள் திருமீயச்சூர் அன்னை ஸ்ரீ லலிதாம்பிகை.

சிறப்பு வாய்ந்த ஸ்ரீ லலிதாம்பிகைக்கு மாசி மாத அஷ்டமி நவமி இணைந்த நாளில் ஆதி சைவ சிவாச்சார்யர்களும் அன்னையின் பக்தர்களும் அம்பாள் உபாசகர்களும் கூடி இணைந்து ஏகதின லட்சார்ச்சனை மற்றும் ஹோமம் பள்ளயம் எனப்படும் அன்னப்பாவாடை மகா நைவேத்தியம் போன்ற வழிபாடுகளை மிகச் சிறப்பாக செய்து வருகின்றனர்.

லட்சார்ச்சனையின் போது 10 காலத்திற்கும் 10 விதமான பிரசாதங்கள் காலம் ஒன்றிற்கு 10 கிலோ வீதம் 100 கிலோ பிரசாதம் நைவைத்தியம் செய்யப்படுகின்றது. உச்சிகாலத்தில் விசேஷமாக பிரண்டை சாதம் 10 கிலோ நைவேத்தியம் செய்யப்படுகின்றது.

அர்ச்சனையின் போது காலை முதல் மாலை வரை 10 ஆயிரம் ஆவர்த்தி ஹோமமும் அதன் அங்கமாக ஆயிரம் ஆவர்த்தி தர்ப்பணமும் நடைபெற்று அம்பிகைக்கு மகா அபிஷேகமாக பால், பழம், பஞ்சாமிர்தம், மஞ்சள், சந்தனம், பன்னீர் போன்றவை செய்விக்கப்பட்டு கலசாபிஷேகம் செய்து சர்வலாங்கார பூஷிதையாக அலங்காரம், மலர் கிரீடம் தரித்து காட்சி தரும் அம்பிகைக்கு மஹா நைவேத்தியம் செய்யப்படும்.

அன்னப்பாவாடை என்னும் இந்த நைவேத்தியத்தில் 50 கிலோ சர்க்கரை பொங்கல், 50 கிலோ புளியோதரை மற்றும் 50 கிலோ தயிர் சாதம் படைக்கப்படும் மற்றும் பஞ்ச பட்சணங்களான அதிரசம், முறுக்கு, லட்டு, வடை, பாயாசம் போன்றவையுடன் இளநீர், பழங்கள் படைக்கப்படும்.

சர்க்கரைப்பொங்கலில் பச்சைக்கர்ப்பூரம் , நாட்டு சர்க்கரை , மலைத்தேன் , சுத்தமான அக்மார் நெய் , பாதாம் , பிஸ்தா , ஏலக்காய் , கற்கண்டு , பனைவெல்லம் எல்லாம் சேர்க்கப்படும் . 

சர்க்கரை பொங்கலில் நெய் ஊற்றி நெய்க்குளம் உருவாக்கி அதில் அம்பாளின் பிம்பத்தை விழ வைத்து தரிசனம் செய்து வைக்கப்படும். இந்த காட்சியை காண பல்லாயிரக் கணக்கான மக்கள் காத்திருந்து கண்டுகளித்து மீண்டும் மீண்டும் தரிசித்து இன்புறுவர்.

சூரியன் அருள் பெற்ற  திருமீயச்சூர்  :

அன்னை ஸ்ரீ லலிதாம்பிகை அருளும் அற்புதத்தலம் திருமீயச்சூர். அகிலம் சிறக்க தனது திவ்ய நாமங்களைக் கொண்டே வசினீ தேவதைகள் மூலமாக ஸ்ரீ லலிதா சகரஸ்ரநாமத்தை உருவாக்கிய தலம் திருமீயச்சூர். இங்கு லலிதாம்பிகை ஸ்ரீசக்ரபீடத்தில் மனோன்மணி ரூபமாக அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள்.

திருவாரூர் மாவட்டம் பேரளத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது இந்தத் தலம். வேளாக்குறிச்சி ஆதீனத்தின் கீழ் உள்ள தலம். திருமீயச்சூர் மற்றும் இளங்கோவில் இரண்டும் ஒரே ஆலயத்துககுள் திகழ்கின்றன. இவை சம்பந்தராலும், அப்பராலும் பாடப்பெற்றன.

மூலவர் சுயம்புலிங்கத் திருமேனி (மேகநாதர்), அம்பாள் சவுந்தரநாயகி, லலிதாம்பிகை, கோபுரங்கள் கஜப்பிருஷ்ட விமான அமைப்பில் உள்ளன. இக்கோவிலின் வடக்குப் பிராகாரத்திலுள்ள இளங்கோவில் இறைவன் ஸ்ரீசகலபுவனேஸ்வரர். அம்பிகை மின்னல் மேகலாம்பாள்.

உட்பிராகாரத்தில் விநாயகர், வில்லேந்திய முருகர், பஞ்ச பூதலிங்கங்கள் தனித்தனியே அஷ்ட திக் பாலகர்கள், சப்த மாதர்கள் பூஜித்த லிங்கங்கள், சேத்ர புராணேஸ்வரர், கல்யாண சுந்தரர், துர்க்கை, சூரியன் முதலிய சந்நிதிகள் உள்ளன. கோவி லின் உட்பிராகாரங்களில் மொத்தம் 25 லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

இங்கே 12 ராசிகளுக்கான 12 நாகர்களையே அபிஷேகம் செய்தும், அர்ச்சனை செய்தும் வழிபடுகிறார்கள். அருணனும் சூரியனும் வழிபட்ட தலம். 

சூரியன் சுவாமியையும் அம்பாளையும் யானை மீது வைத்து மேக மண்டலத்திலிருந்து பூஜை செய்ததால் சுவாமிக்கு மேகநாதர் என்று பெயர். எமனும், சனிபகவானும் இத்தலத்தில் சூரியனுக்கு மகன்களாகப் பிறந்தனர். 

சங்கு புஷ்பங்களை தாமரை இலையில் வைத்து அர்ச்சனை செய்தும், வஸ்ரவள்ளி எனப்படுகின்ற பிரண்டையால் சாதம் செய்து நிவேதித்துவம் எமன் வழிபட்டாராம்.

இன்றும் இங்கே பக்தர்கள் தங்களின் தேக ஆலோக்கியத்துக்காக, 108, 1008 சங்குகளால் அபிஷேகம் செய்தும், சங்கு புஷ்பங்களால் அர்ச்சனை செய்தும், பிரண்டை சாதம் நைவேத்தியம் செய்தும் கோவிலில் விநியோகித்து வழிபடுகிறார்கள்.

கிளியை தூது அனுப்பும் துர்க்கை :

திருமீயச்சூர் தலத்துக்கு நாம் எதை வேண்டி ஸ்ரீ லலிதாபர மேஸ்வரியை வழிபட வந்துள்ளோமோ அதனை ஸ்ரீ துர்க்கையிடம் “தாயே நான் இன்ன கோரிக்கையாக வந்துள்ளேன். 

நீதான் ஸ்ரீலலிதா பரமேஸ்வரியிடம் சிபாரிசு செய்ய வேணும்” என பிரார்த்தித்தால், ஸ்ரீ துர்க்கை தன் கையில் உள்ள கிளியை நமக்காக தூது செல்ல அனுப்பி வைக்கிறாள். ஸ்ரீலலிதா பரமேஸ்வரி சந்நிதி எதிரிலுள்ள கொடி மரத்தில் அந்தக் கிளி அமர்ந்து நமது கோரிக்கைகளை அம்பாளிடம் சமர்ப்பிக்கிறதாம்.

ஒரு பக்கம் கோபம் இன்னொரு பக்கம் சாந்தம் :

சூரியன் இங்கே மேகநாதரை வழிபட்டு கருமை நீங்கிச் செவ்வொளி பெற்று இன்புற்றார். மேகநாதர் சந்நிதி கோஷ்ட தெய்வமாக விளங்குவது சேத்திர புராணேஸ்வரர் சிற்பம். சிவசாபத்திலிருந்து விமோசனம் பெற சூரியன் திருமீயச்சூரில் தங்கினான்.

சாபத்தின் கடுமையால் சீக்கிரம் விமோசனம் வேண்டி சூரியன் அலறிய குரல், ஏகாந்தமாய் இருந்த அம்பாளுக்கு பாதிப்பை உண்டாக்கியது. அதனால் கோபமடைந்து, சூரியனை சபிக்கத் திருப்புகிறாள். சுவாமி அம்பாளின் முகவாயைப் பிடித்து நான் ஏற்கனவே கொடுத்த சாபத்தினால் இவ்வுலகம் மிகவும் பாதிக்கப்பட்டு விட்டது. நீயும் சபிக்காதே என்றார்....

இந்தக் காட்சி சேத்திர புராணேஸ்வரர் சிற்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பத்தை வலது புறமாய் இருந்து பார்த்தால் அம்பாள் மிக கோபமாகவும், இடது புறமாய் இருந்து பார்த்தால் சாந்தமாகவம் தெரியும்.

பிறவிகள் பாவம் தீரும் :

இங்கு ரதசப்தமி ஏகதின உற்சவம் தை அன்று நடைபெறுகிறது. பீஷ்ம பிதாமகர் முக்தி அடைந்த தினம். பரமேஸ்வரனால் சூரியனுக்கு ஏற்பட்ட சாபம் (கருமை நிறம்) நீங்கி மேகநாதரையும், லலிதாம்பிகையையும் சூரியன் வழிபட்டு சாப விமோசனம் அடைந்து முழுமையான பிரகாசம் அடைந்த தினம் இது.
ரதசப்தமி நண்பகல் 1 மணிக்கு பஞ்சமூர்த்திகள் சூரிய புஷ்கரணியில் ரிஷப வாகனராய் எழுந்தருளி தீர்த்தம் கொடுத்து அருள்கிறார். அப்போது, எருக்கம் இலை, அருகம்புல், பசுஞ்சாணம் மூன்றையும் சிரசில் வைத்து சங்கல்ப ஸ்நானம் செய்து சுவாமி அம்பாளை தரிசனம் செய்தால் ஏழு பிறவிகளில் செய்த பாவங்கள் நீங்கப் பெறும் என்பது முன்னோர் வாக்கு.

பிரண்டை சாத நைவேத்தியம் :

100 ஆண்டுகளுக்கு ஒருமுறை கடலில் தோன்றுவதால் சங்கிற்கு ஆயுளைக்காலம் உள்ளது என்பதால், சத்ய நட்சத்திரத்தின் அதிதேவதையான எமன், அதிக ஆயுளை சங்கினைக் கொண்டு 1008 சங்காபிஷேகம் செய்து, சக்தி வாய்ந்த மூலிகைகள், எமலோகத்தின் தல விருட்சமான பிரண்டை கலந்து சாதத்தினை அன்னதானம் செய்து சிவபிரானை வழிபட்டார்.

1000 வருடங்களுக்கு முந்தைய வரலாறு உடைய மயிலம் முருகன் கோவில் 🙏

1000 வருடங்களுக்கு முந்தைய வரலாறு உடைய  மயிலம் முருகன் கோவில் 🙏
மன அமைதி தரும் மயிலம் முருகன் கோவில்🙏

எப்போதும் அமைதி நிலவும் மயிலம் முருகன் கோவிலுக்கு வந்து வழிபடுகிறவர்களுக்கு நிச்சயம் மன அமைதி கிடைக்கும். இந்த கோவில் வரலாற்றை பார்க்கலாம்.

விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் முருகன் கோவில் உள்ளது. இந்த கோவில் ஒரு சிறிய குன்றின் மீது, நெடிய ராஜகோபுரத்துடன் விளங்குகிறது. பசுமையான மரங்கள் சூழ்ந்து இருப்பதால், தூரத்தி லிருந்து பார்க்கும்போது அந்த குன்று ஒரு மயில் தோகை விரித்திருப்பது போல் அழகாகக் காட்சியளிக்கிறது.

கோபுரமானது மயிலின் கொண்டை போல உச்சியில் இருக்கிறது. கோயிலைப் போலவே இந்த மலையையும் புனித மாகக் கருதி பக்தர்கள் வழி படுகிறார்கள்.

 முருகப் பெருமானால் போரில் சூரபத்மன் தோற் கடிக்கப்பட்டான் அவன் மனம் திருந்தி, இறையருள் வேண்டி... மயிலம் வந்து மயில் வடிவ மலையாக மாறி கடும் தவம் புரிந்தான். தவத்தில் மகிழ்ந்து முருகன் அவனுக்கு காட்சி தந்தார். அப்போது ‘‘என்னை தங்கள் வாகனமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்!’’ என முருகனிடம் சூரபத்மன் வேண்டினான்.

மேலும் ‘‘மயில் வடிவ மலையாக இருந்து நான் தவம் புரிந்த இந்த மலைக்கு ‘மயூராசலம்’ எனப் பெயர் வழங்க வேண்டும். தாங்கள் எந்த நாளும் இங்கு வீற்றிருந்து அன் பர்களுக்கு அருள் புரிய வேண்டும்!’’ என்றும் கோரிக்கை வைத்தான்.

உடனே முருகன் அவனிடம் ‘‘எதிர் காலத் தில் பாலசித்தர் என்பவர் இங்கு தவம் புரிவார். அப்போது உன் விருப்பம் நிறைவேறும்!’’ என்று கூறிவிட்டு மறைந்தார். சூரபத்மன், அதுவரை மலையாக நிலை கொண்டு அங்கு காத்திருந்தான். ‘மயூரா சலம்’ என்ற இந்தப் பெயரே பின்னர் மயிலம் என்று மருவியது என்கிறார்கள்.

பாலசித்தர் வழங்கும் வேலாயுதம் :🙏

பொதுவாகவே சித்தர்கள் ஜீவசமாதி அடைந்த தலங்களில், பக்தர்களுக்கு வேண்டும் வரங்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. எவரிடமும் சரணடையாத முருகனது வேலாயுதம், பாலசித்தரிடம் வசமானது என்பது ஐதீகம். இதிலிருந்து பாலசித்தரின் சக்தி விளங்கும். இன்றைக்கும் மயிலத்தில் நடக்கும் கந்த சஷ்டி விழாவின்போது சூர சம்ஹாரத்துக்குக் புறப்படும் முருகர், பாலசித்தரிடமிருந்தே வேலாயுதத்தைப் பெற்றுச் செல்கிறார்.

 வள்ளி- தெய்வானையுடன் இணைந்து நின்ற கோலத்தில் காட்சி தரும் முருகனின் ஒரு கையில் வேல். இன்னொரு கையில் சேவற்கொடி. பெரும்பாலான கோயில்களிலும் முருகனின் வாகனமான மயில் தெற்கு நோக்கியோ, நேராகவோ இருக்கும். இங்கு மட்டும் வடக்குத் திசையை நோக்கியபடி இருப்பது கோயிலின் சிறப்பு.

தவத்துக்கு உரிய திசை வடக்கு. சூரபத்மன் இங்கு வடக்கு நோக்கித் தவமிருந்து முருகனின் வாகனமாக மாறியதால், அதே திசையை நோக்கியபடி அமரும் பெருமை இங்குள்ள மயில் வாகனத்துக்கு கிடைத்திருக்கிறது.

3 உற்சவர்கள் :🙏

மயிலம் கோயிலில் முருகன் மூன்று விதமான உற்ச வராகக் காட்சியளிக்கிறார். இவர்களில் பிரதான உற்சவர் வள்ளி- தெய்வானை சமேதரான பாலசுப்பிரமணியர்.

பகலில் வெள்ளிக்காப்பு அணிந்தும், மாலை பூஜைக் குப் பிறகு தங்கக் காப்பு அணிந்தும் அருள் பாலிக்கும் இவர் மாதாந்திர கார்த்திகைகளிலும், பங்குனி உத்தரப் பெருவிழாவிலும் வீதியுலா வருகிறார். மலையைச் சுற்றி இருக்கும் மூன்றாம் பிராகாரத்தில் வீதியுலா நடக்கிறது.

பங்குனி உத்திரம் இங்கு பன்னிரண்டு நாட்கள் பிரம்மோற்சவமாக விமரிசையாக நடக்கிறது. முருகனுக்கு மயில் மட்டுமின்றி, பல்வேறு விதமான வாகனங்கள் இருப்பதாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன. இதை நினைவுறுத்தும் விதமாக பங்குனி உத்தரப் பெருவிழாவில் திருமணக் கோலத்தில் தினம் ஒரு வாகனத்தில் முருகன் வீதியுலா வருகிறார். மயில், யானை, ஆட்டுக் கிடா, நாகம், பூதம் என விதம் விதமான வாகனங்களில் வலம் வருவார் இந்த மூலவர்.

இரண்டாவது மூலவர் வள்ளி- தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி. பரணி நட்சத்திரத்தின்போது வீதியுலா வரும் இவர், தினசரி சுற்றுப் பிராகாரத்தில் இருந்தபடி அருள் பாலிக்கிறார். மாசிமக தீர்த்தவாரியின்போது இந்த உற்சவரை புதுவை கடற்கரைக்குத் தோளில் சுமந்து செல்கிறார்கள். 5 நாட்கள் அங்கிருந்தவாறே அருள் வழங்கும் இவர் 6&வது நாளன்று திரும்பி வருவார்.

மூன்றாவது உற்சவர் ஆறுமுகங்கள் கொண்ட சண்முகப் பெருமான். கந்த சஷ்டி உற்சவத்தின்போது ஆறு நாட்கள் வீதியுலா வருவது இவர்தான்.
இவை தவிர சித்திரையில் வசந்த உற்சவம், ஆனியில் ஏழு நாட்கள் லட்சார்ச்சனை என இங்கு பெரும்பாலும் திருவிழா மயம்தான்!

முருகனுக்கு மிகவும் உகந்த நொச்சி மரங்கள் மயிலம் மலையில் ஏராளமாக உள்ளன. தினமும் காலை பூஜையின்போது நொச்சி இலைகளை மாலையாகத் தொடுத்து மூலவருக்கும், உற்சவ மூர்த்திகளுக்கும் அணிவிக்கிறார்கள். அதன் பிறகே மற்ற பூமாலைகளை அணிவிக்கிறார்கள்.

மூலவர் வீற்றிருக்கும் கருவறை மண்டபத்துக்கு வெளியில் பிரமாண்டமான வேலும் மயிலும் இருக்கின்றன. மயிலம் கோயிலில் செவ்வாய்க் கிழமை தோறும் காலசந்தி பூஜையின் போது வேலாயுதத்துக்கு அர்ச்சனை செய்கிறார்கள். இப்படி அர்ச்சனை செய்யும் பக்தர்களுக்குக் கடன் தொல்லையுடன் பணப் பிரச்சினைகள் அகலும் என்பது நம்பிக்கை.

இதேபோல உற்சவமூர்த்தி முருகப்பெருமானின் அருகில் அவரின் படைத் தளபதியான வீரபாகுவும் உற்சவராக இருக்கிறார். செவ்வாய்க்கிழமை காலையில் இவருக்குப் பாலபிஷேகம் செய்து, அர்ச்சனை செய்தால் சீக்கிரம் திருமணம் நடக்கும் என்பதால், ஒவ்வொரு செவ்வாயிலும் ஏராளமான பெண்கள் இங்கு வருகிறார்கள்.

எப்போதும் அமைதி நிலவும் இந்தத் தலத்துக்கு வந்து வழிபடுகிறவர்களுக்கு நிச்சயம் மன அமைதி கிடைக்கும்!

வள்ளிமனாளனுக்கு அபிஷேகம் :🙏

மயிலம் சுப்ரமணிய சுவாமி கோயிலில் ஆடிக் கிருத்திகை விழாவுக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆடி கிருத்திகையையட்டி அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்படும். தொடர்ந்து வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், தேன், சந்தனம், விபூதி ஆகியவற்றால் அபிஷேகங்கள் செய்யப்படும்.

பின்னர் தங்க கவசத்தில் அலங்கரிக்கப்பட்ட மூலவர் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். விழாவிற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள் மலையை சுற்றியுள்ள நெல்லி மற்றும் மாந்தோப்புகளில் உணவு சமைத்து அன்னதானம் வழங்குவார்கள். கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு குடிநீர், கழிவறை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் பக்தர்கள் வசதிக்காக விழுப்புரம் போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ் நிலையம் அமைக்கப்பட்டு சிறப்பு பஸ்கள் விழுப்புரம், செஞ்சி, திண்டிவனம், புதுச்சேரி, கடலூர் ஆகிய மார்க்கங்களில் விடப்படவுள்ளன. சென்னை பஸ்கள் செண்டூர் வழியாக மயிலம் வந்து செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி, திண்டிவனம், விழுப்புரம் பகுதியை சேர்ந்த பக்தர்கள் அதிகளவில் இருசக்கர வாகனங்களில் வந்திருந்து தரிசனம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுரம் ஆதீனம் 20ம் பட்டம் ஸ்ரீல ஸ்ரீசிவஞான பாலயசுவாமிகள் தலைமையில் திருமடத்தினர் செய்துள்ளனர்.

மயிலத்துக்கு எப்படி செல்வது? :🙏

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகில் இருக்கிறது மயிலம். புதுவை, விழுப்புரம், திண்டிவனம் ஆகிய நகரங்களி லிருந்து அடிக்கடி பஸ்கள் உண்டு. சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கூட்டேரிப்பட்டு என்ற நிறுத்தத்தில் இறங்கினால் அங்கிருந்து 3 கி.மீ. தூரத்தில் இருக்கிறது மயிலம் கோயில்.

இங்கிருந்து பத்து நிமிடத்துக்கு ஒரு தடவை பஸ் போகிறது. தங்கும் வசதியோ, பெரிய ஓட்டல்களோ இல்லாத கிராமம் என்பதால், தொலைதூரத்திலிருந்து வருகிறவர்கள் பக்கத்து நகரங்களில் தங்குவது உண்டு. இதற்கு பக்கத்திலேயே திருவக்கரை வக்ரகாளியம்மன், பஞ்சவடி ஆஞ்சநேயர் ஆகிய கோயில்கள் இருப்பதால் எல்லாவற்றையும் தரிசிக்கும் ஏற்பாடுகளோடு பக்தர்கள் வரலாம்.

வாகனங்களில் வருகிறவர்கள் நேராக மலைமீதுள்ள கோயிலுக்குச் செல்ல சாலை வசதி உள்ளது. இது தவிர நடந்து வருகிறவர்களுக்காக நேர்த்தியாக அமைக்கப்பட்ட படிக்கட்டு வழி உள்ளது.

இத்தகைய பல்வேறு பெருமை களைத் தாங்கிய மயிலம் திருத்தலத்தை அருணகிரிநாதர், ஸ்ரீசிவப்பிரகாச சுவாமிகள், வைத்தியநாத தேசிகர், பண்ருட்டி மணி அய்யர், அப்பாவு அய்யர், ஆ.சிவலிங்கனார், தியாகராஜ கவிராயர், வண்ணச்சரபம் தண்ட பாணி சுவாமிகள், நமச்சிவாய முதலியார், தே.ஆ.சீனிவாசன், இராஜ மாணிக்கம் நடராஜன், இரத்தின முதலியார், வீரபத்திரன், பெரிய சாமிப்பிள்ளை, திரு.வி.கலியாண சுந்தரனார், பாவேந்தர் பாரதிதாசன், வே.விஜயரங்கம் உள்ளிட்ட பல்வேறு புலவர்கள் போற்றிப் பாடியுள்ளனர்.

மயிலம் தலத்தில் ஆனி மாத திருவாதிரை குருபூஜை, மாதக்கிருத்திகைகள், கந்தசஷ்டி பெருவிழா(சூரசம்ஹாரம்), பங்குனி உத்திரப் பெருவிழா, தைப்பூசம் போன்ற திருவிழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

நடை திறப்பு :🙏

நாள் தோறும் காலை 6 மணி முதல் மதியம் 12.30 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் கோவில் நடை திறந்திருக்கும். ஞாயிறு மற்றும் விழாக் காலங்களில் கோவில் முழுநேரம் திறந்திருக்கும்.--
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

சிவனுக்குரிய விரதங்கள் எட்டு.

சிவனுக்குரிய விரதங்கள் எட்டு.

வாழ்வு வளமாக சிவனுக்கு உகந்த இந்த எட்டு விரதங்களை கடைபிடித்து வரவேண்டும்.
இந்த விரதங்களை பற்றி பார்க்கலாம்.

சிவ லிங்கத்தில் ஆரம்ப நாட்களில் சிவனுடைய முகத்தை மட்டுமே அமைப்பதென்பது கடைபிடிக்கப்பட்டது.

ஆனால் பின்னாளில் வந்தவர்கள் தங்கள் மனதிற்கேற்ப விநாயகர், முருகர் ஆகியோரையும் கூட சிவலிங்கத்தில் அமைக்கத் தொடங்கி விட்டனர்.

சிவபெருமானுக்கு உரிய விரதங்கள் எட்டு. அவையாவன:

சோமவார விரதம்- திங்கட்கிழமை தோறும்

திருவாதிரை விரதம்- மார்கழி திருவாதிரை

மகாசிவராத்திரி- மாசி தேய்பிறை சதுர்த்தசி

உமா மகேஸ்வர விரதம் – கார்த்திகை பவுர்ணமி

கல்யாண விரதம்- பங்குனி உத்திரம்

பாசுபத விரதம்- தைப்பூசம்

அஷ்டமி விரதம்- வைகாசி பூர்வபட்ச அஷ்டமி

கேதார விரதம்- தீபாவளி அமாவாசை

Sunday, October 29, 2023

கணக்கன்குடி அருள்மிகு அனலேந்தீஸ்வரர்,தான்தோன்றீஸ்வரர் ஆலயம்.*

◄•───✧ உ ✧───•►

*🙏 இன்றைய கோபுர*
*தரிசனம் 🙏*
*சிவகங்கை மாவட்டம் தமிழ்நாடு கணக்கன்குடி அருள்மிகு அனலேந்தீஸ்வரர்,தான்தோன்றீஸ்வரர் ஆலயம்.*

*கோபுர தரிசனம் - கோடி புண்ணியம்*

*கோபுர தரிசனம் - பாவ விமோசனம்*

*மூலவர்:*

அனலேந்தீஸ்வரர், தான்தோன்றீஸ்வரர்

*அம்மன்/தாயார்:*

அமிர்தவள்ளி, சுந்தரவள்ளி

*பழமை:*

500 வருடங்களுக்குள்

*ஊர்:*

கணக்கன்குடி

*மாவட்டம்:*

சிவகங்கை

*மாநிலம்:*

தமிழ்நாடு

*திருவிழா:*

*திருக்கார்த்திகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.*

*தல சிறப்பு:*

*ஆண்டு தோறும் பங்குனி மாதம் 27, 28 தேதிகளில் மூலவர் அனலேந்தீஸ்வரர் மீது சூரிய ஒளி படர்வது சிறப்பு.*

*திறக்கும் நேரம்:*

*காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை திறந்திருக்கும்.*

*முகவரி:*

*அருள்மிகு அமிர்தவள்ளி சமேத அனலேந்தீஸ்வரர் திருக்கோயில்,கணக்கன்குடி, மடப்புரம் வழி,சிவகங்கை-630562*
 
*போன்:*

*+91 96266 67644, 90929 14316, 94438 29021*

*பொது தகவல்:*

*இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் அமிர்தவள்ளி சமேத அனலேந்தீஸ்வரர் ஸ்ரீ சுந்தரவள்ளி சமேத தான்தோன்றீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இத்திருத்தலம் திருப்புவனத்தில் இருந்து ஏழு கி.மீ தொலைவிலும், மடப்புரத்தில் இருந்து 4கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. வள்ளி, தெய்வானையும், முருகப்பெருமானும், முழுமுதற் கடவுள் விநாயகப்பெருமானும், ஞான குருவான தட்சிணாமூர்த்தியும் காட்சியளிக்கின்றனர். மூலவரான ஸ்ரீஅனலேந்தீஸ்வரருக்கு சிவப்பு வஸ்திரமும், ஸ்ரீஅமிர்தவள்ளி தாயாருக்கு பச்சை நிற வஸ்திரமும், ஸ்ரீசுந்தரவள்ளி தாயாருக்கு நீலவஸ்திரமும், சாத்தப்படுகிறது.பிரகாரத்தில் நந்தி, ஸ்ரீதேவி பூதேவி சமேத பெருமாள், லிங்கோத்பவர் அருள்பாலிக்கின்றனர்.*

*பிரார்த்தனை:*

*இங்கு வேதவள்ளி தாயார் ஞான சக்தியாக இருப்பதால் குழந்தை வரம் வேண்டி விரதம் இருந்து பூஜை செய்பவர்களுக்கு அறிவான ஞான குழந்தை பிறக்கும். மூலவர் அனலேந்தீஸ்வரரை வழிபட்டால் அக்னி சம்பந்தமான கொப்புளங்கள், வெடிப்புகள் உள்ளிட்ட நோய்கள் குணமாகும்.*

*நேர்த்திக்கடன்:*

*பிரிந்து வாழும் கணவன்-மனைவியரில் யாராவது ஒருவர் வந்து பூஜை செய்தாலும் மீண்டும் ஒன்று கூடுவார்கள், அதுபோல இழந்த சொத்தை மீட்க சிறப்பு பூஜை செய்தால் உடனடியாக பலன் கிட்டும் என்கின்றனர். வியாழன்தோறும் தட்சிணாமூர்த்திக்கு வில்வம், கொண்ட கடலை மாலை அணிவித்து நெய் விளக்கு ஏற்றி வந்தால் தீராத பல்வேறு பிரச்சனைகள் தீரும்.*

*தலபெருமை:*

*இங்கு அகத்தியர் வழிபட்ட ஸ்தலம் என்றும் இன்றளவும் அகத்தியர் அரூபமாக வந்து வழிபடுகிறார் என்றும் நம்பப்படுகிறது.*

*தல வரலாறு:*

*சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ளது கணக்கன்குடி கிராமம். தென்தமிழகத்தின் திருவண்ணாமலை என போற்றப்படும் அனலேந்தீஸ்வரர் கோயில் இங்கு அமைந்துள்ளது. பஞ்சபூதங்களான நிலம், நீர், காற்று, வாயு, நெருப்பு ஆகியவற்றின் வடிவாக சிவன் இருப்பதாக கூறப்படுகிறது. திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் நெருப்பின் வடிவாக உள்ளார், அங்கு எவ்வளவு மழை பெய்து குளிர்ச்சி நிலவினாலும் அருணாச்சலேஸ்வரர் கர்ப்பகிரகத்தினுள் வெப்பம் நிலவும். அது போல கணக்கன்குடி அனலேந்தீஸ்வரர் கோயிலிலும் நெருப்பு வடிவாக சிவன் உள்ளார். அனல் என்றால் நெருப்பு அனலேந்தீஸ்வரர் என பெயர் வந்தது. இத்திருக்கோயிலில் மூலவராக அனலேந்தீஸ்வரரும் இச்சா சக்தியாக ஸ்ரீஅமிர்தவள்ளி தாயரும், கிரியா சக்தியாக சுந்தரவள்ளி தாயாரும், ஞான சக்தியாக வேதவள்ளி தாயாரும் காட்சியளிக்கின்றனர். 300 ஆண்டுகளுக்கு முன் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட திருக்கோயில் இது. இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி ஆகிய மூன்று சக்திகளும் இணைந்த சிறப்பம்சமாகும். நமச்சிவாய என்ற எழுத்தில் நடு எழுத்தான சி நெருப்பு என்பதால் இது நெருப்பு ஸ்தலம் என அழைக்கப்படுகிறது.*

*சிறப்பம்சம்:*

*அதிசயத்தின் அடிப்படையில்:*

*ஆண்டு தோறும் பங்குனி மாதம் 27, 28 தேதிகளில் மூலவர் அனலேந்தீஸ்வரர் மீது சூரிய ஒளி படர்வது சிறப்பு.*

*அமைவிடம்:*

*மதுரையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் வழியில் 20 கி.மீ. தூரத்தில் உள்ள மடப்புரம் பஸ் ஸ்டாப்பிலிருந்து 5 கி.மீ தூரத்தில் கணக்கன்குடி அமைந்துள்ளது. மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து டவுன் பஸ் வசதி உண்டு.*

*அருகிலுள்ள ரயில் நிலையம்:*

மதுரை

*அருகிலுள்ள விமான நிலையம்:*

மதுரை

*தங்கும் வசதி:*

மதுரை

*கோபுர தரிசனம் தொடரும்...*

*வாழ்க வளமுடன்...*

*வாழ்க வையகம்...*

*🙏 திருச்சிற்றம்பலம் 🌷*

கர்நாடக மாநிலம், ஹாசன் நகரத்தில் உள்ள ஹாசனாம்பா கோவில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே திறக்கப்படுகிறது.

🛕 ஹாசனாம்பா கோவில்..!!

தீபாவளியில் திறக்கப்படும் கோவில்... 
🌹 கர்நாடக மாநிலம், ஹாசன் நகரத்தில் உள்ள ஹாசனாம்பா கோவில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே திறக்கப்படுகிறது. ஹாசனாம்பா கோவில் இருப்பதால்தான் இந்நகரமும் ஹாசன் நகரம் என்றே பெயர் பெற்றிருக்கிறது. மேலும், இக்கோவிலின் சிறப்புகளையும், தகவல்களையும் கேட்கும்போது மெய் சிலிர்க்கிறது. 

10 நாட்கள் மட்டுமே திறக்கப்படும் :

👉 இக்கோவில் ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் மட்டுமே அதாவது தீபாவளி நாட்களில் பக்தர்கள் மற்றும் பொது மக்களுக்காக திறந்து விடப்படுகிறது. அதாவது 10 நாட்களும் இரவு முழுவதும் நடை சாத்தப்படாமல் திறந்தே இருக்கும்.

👉 இத்தகைய புகழ்பெற்ற ஹாசனாம்பாவுக்கு சுமார் 12-ம் நூற்றாண்டில் கிருஷ்ணப்பா நாயக்க பாளையக்காரரின் காலத்தில் கோவில் எழுப்பப்பட்டது.

வாடா மலர்கள் :

🌹 ஹாசனாம்பா கோவில் மூடப்படும் கடைசி நாளில் அம்மனுக்கு சூட்டப்படும் மலர்கள் அனைத்தும் அடுத்த ஆண்டு கோவில் திறக்கப்படும் வரை வாடாமல் இருக்கும் என்று பக்தர்கள் கூறுகின்றனர்.

🌹 இந்த அதிசயத்தை பார்ப்பதற்காகவே ஒவ்வொரு ஆண்டும் கோவில் திறக்கப்படும் நாளில் ஏராளமான பக்தர்கள் வந்து குவிகிறார்கள்.

அணையாத தீபம் :

🔥 ஒவ்வொரு ஆண்டும் ஹாசனாம்பா கோவில் பலி பட்யாமி என்ற தினத்தில் மூடப்படுகிறது. கோவில் மூடப்படும் இந்த நாளில் அங்கு ஒரு தீபம் ஏற்றப்படுகிறது. 

🔥 இந்த தீபமானது அடுத்த ஆண்டு அஸ்வினி பூர்ணிமாவை தொடர்ந்து வரும் வியாழக்கிழமையன்று கோவில் திறக்கப்படும் நாள் வரை அணையாமல் எரிந்துகொண்டிருக்குமாம்.

மாமியார்-மருமகள் கல் :

👉 இங்கு இருக்கும் மாமியார்-மருமகள் கல்லிற்கு ஒரு குட்டி கதை சொல்லப்படுகிறது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண் நாள் தவறாமல் ஹாசனாம்பா கோவிலுக்கு வந்து வழிபட்டு கொண்டு இருந்திருக்கிறாள்.

👉 ஒருநாள் அவளை தொடர்ந்து வந்த அவளின் மாமியார் 'வீட்டில் உள்ள வேலைகளை செய்யாமல் இங்கென்ன செய்கிறாய்" என்று சொல்லி அந்தப்பெண்ணை அடித்திருக்கிறாள்.

👉 அப்போது அப்பெண் வலியால் சத்தமிட்டாள். அப்போது அம்மன் அவள் முன்பு தோன்றி அவளை கல்லாக மாற்றிவிட்டாள் என்று சொல்லப்படுகிறது. அந்த கல்தான் தற்போது மாமியார்-மருமகள் கல் என்ற பெயரில் கோவிலில் காணப்படுகிறது. 

👉 இந்த கல் அம்மன் விக்ரகத்தை நோக்கி ஆண்டுதோறும் அரிசி அளவு நகர்ந்து கொண்டிருக்கிறதாம். இந்த கல் நகர்ந்து நகர்ந்து அம்மன் விக்ரகத்தை அடைந்துவிட்டால் இந்த கலியுகம் அழிந்துவிடும் என்று நம்பப்படுகிறது.

திருடர்கள் கோவில் :

👨 ஒருமுறை நான்கு திருடர்கள் அம்மன் ஆபரணங்களை திருடிச்செல்ல ஹாசனாம்பா கோவிலுக்கு வந்துள்ளார். இதனால் கோபமடைந்த அம்மன் அவர்களை கல்லாகி போகுமாறு சபித்ததாக சொல்லப்படுகிறது. 

👨 அந்த நால்வரின் கற்சிலைகள் தனிக்கோவிலாக 'திருடர்கள் கோவில்" என்ற பெயரில் இந்த கோவிலின் வளாகத்தில் அமைந்திருக்கிறது.

👉 தீபாவளி பண்டிகையையொட்டி ஆண்டிற்கு ஒருமுறை மட்டும் திறக்கப்படும் ஹாசனாம்பா கோவிலுக்கு ஏராளமான மக்கள் வந்து வழிபட்டு செல்வார்கள்.

திருவாரூர் தியாகராஜர் கோயில் கிரகணநேரத்திலும் திறக்கபட்டு அபிஷேகமும் நடைபெறும்

திருவாரூர் தியாகராஜர் கோயில்கிரகணநேரத்திலும் திறக்கபட்டு அபிஷேகமும் நடைபெறும் அதனால் தான்.
இவர் உலகத்திற்கு ராஜா 🙏
#ஆரூரா_தியாகேசா

திருவாரூர் ஸ்ரீ தியாகராஜ கோயில் சைவ சமயங்களில் தலைமை பீடமாக விளங்குகிறது. இந்த கோயிலுக்கு என தனி சிறப்பு உள்ளது'

அதாவது இந்த கோயிலில் அனைத்து நவகிரகங்களும் ஒரே திசையில் தியாகராஜ சுவாமியை நோக்கி அமைந்துள்ளது. தியாகராஜ சுவாமி மகாராஜாவாக இருந்து நவகிரக தோஷங்களை நீக்குவதால் சர்வ தோஷ பரிகார தலமாகவும் இந்த கோயில் உள்ளது.

நடு ராத்திரியில் சந்திரகிரகணம் வந்தாலும் உச்சி வெயிலில் சூரிய கிரகணம் வந்தாலும் நடைகள் திறந்து வைக்கப்பட்டு திருவாரூர் ஸ்ரீ தியாகராஜ சுவாமி கோயிலில் பூஜைகள் நடைபெறுவது சிறப்பு அம்சமாகும்நாளை சந்திர கிரகணத்தை முன்னிட்டு உலகில் உள்ள அனைத்து கோயில்களிலும் நடை சாத்தப்படுவது வழக்கம்.

இப்படியிருக்க, திருவாரூர் ஸ்ரீ தியாகராஜ பெரிய கோயிலில் நடை திறக்கப்பட்டு ஸ்ரீ தியாகராஜ சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெறும். அந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சர்வ நவகிரக தோஷங்கள் நீங்கி வளம் பெற சுவாமி தரிசனம் செய்வார்கள்..

இந்த ஆண்டு நாளை 28-10-2023
#திருவாரூர்
அருள்மிகு ஶ்ரீ தியாகராஜ சுவாமி திருக்கோயில் இரவு 01.05 மணிக்கு மேல் #சந்திரகிரஹணத்தை முன்னிட்டு இரண்டாம் கால அளவில் #அருள்மிகு_தியாகராஜ_சுவாமி கிரஹணகாலத்தில் #மஹா_அபிஷேகம் நடைபெற்றது உள்ளது.
ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது
 இரா .இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்

அருள்மிகு மருதமலை முருகன் கோயில்*

*அருள்மிகு மருதமலை முருகன் கோயில்*
 மருதாசலமூர்த்தி கோவில், கோயம்புத்தூரிலிருந்து 15 கிமீ தொலைவிலுள்ள மருதமலை மேல் அமைந்துள்ளது. மருத மலைமேல் அமைந்துள்ளதால் "மருதன்" என்றும் அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப்பெற்ற தலமிது. இக்கோவிலின் முதன்மைக் கடவுளான முருகன், இங்கு சுப்பிரமணிய சுவாமி என்றும் தண்டாயுதபாணி என்றும் மருதாசலமூர்த்தி (மருதன்) என்றும் அழைக்கப்படுகிறார். மருதமலையின் அடிவாரத்தில் தான்தோன்றி விநாயகர் என்ற ஒரு சிறிய விநாயகர் கோயிலும் உள்ளது.

*பெயர்:*
மருதமலை மருதாசலமூர்த்தி திருக்கோயில்

*மாவட்டம்:*
கோயம்புத்தூர் மாவட்டம்

*அமைவு:*
சோமையம்பாளையம் ஊராட்சி

*ஏற்றம்:*
741 m (2,431 அடி)

*மூலவர்:*
முருகன்

Saturday, October 28, 2023

முருஅறுபடைவீடுகள்*

*#அறுபடைவீடுகள்*
🙏🙏🙏

தமிழ் நாட்டில், இந்து சமயக் கடவுள்களில் ஒருவரும், தமிழ்க் கடவுள் எனக் கருதப்படுபவருமான முருகப் பெருமானுக்குச் சிறப்பானவையாகக் கொள்ளப்படும் ஆறு கோயில்கள் ஒவ்வொன்றும் அவருடைய படைவீடு எனப்படுகின்றது. இந்த ஆறு இடங்களும் ஒருமித்து அறுபடைவீடுகள் என அழைக்கப்படுகின்றன. இந்த ஆறு இடங்கள்:

திருப்பரங்குன்றம் (மதுரை மாவட்டம்)
திருச்செந்தூர் அல்லது திருச்சீரலைவாய் (தூத்துக்குடி மாவட்டம்)
திருவாவினன்குடி (எ) பழனி (திண்டுக்கல் மாவட்டம்)
திருவேரகம் (எ) சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில் (தஞ்சாவூர் மாவட்டம்)
திருத்தணி அல்லது குன்றுதோறாடல் (திருவள்ளூர் மாவட்டம்)
பழமுதிர்சோலை (மதுரை மாவட்டம்)

*திருப்பரங்குன்றம்*

முருகனின் ஆறுபடை வீடுகளில் முதலாவது படை வீடாகத் திகழ்வது திருப்பரங்குன்றம் ஆகும். திருப்பரங்குன்றம் முருகன் கோவில், மதுரைக்கு தென்மேற்கில் சுமார் 8 கி.மீ தொலைவில் உள்ளது. இங்குதான் முருகன் தெய்வானையை திருமணம் செய்து கொண்ட நிகழ்வு நடந்ததாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன. இக்கோவிலில் முருகன் மணக்கோலத்தில் காட்சி தருகிறார்.

*திருச்செந்தூர்*

திருச்செந்தூரில் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை என்று போற்றப்படும் சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இவ்விடத்தில் முருகன், சூரபத்மனை அழித்ததாக கந்த புராணம் கூறுகிறது.

*பழனி*

பழனி, முருகனின் மூன்றாம் படை வீடாகும். நாரதர் சிவனுக்கு அளித்த ஞானப்பழம் தனக்கு கிடைக்காததால், முருகர் கோபம் கொண்டு ஆண்டியின் கோலம் பூண்டு இந்த திருத்தலத்தில் தங்கிவிட்டதாக புராணங்களில் கூறப்படுகிறது.

*சுவாமிமலை*

சுவாமிமலை முருகனின் நான்காவது படைவீடு ஆகும். இது கும்பகோணத்திலிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது. முருகன் தனது தந்தையான சிவனுக்கு பிரணவ மந்திரத்தின் பொருளை கூறியதால், இங்கு குடிகொண்டுள்ள முருகனுக்கு சுவாமிநாதன் எனப் பெயராயிற்று.

*திருத்தணி*

திருத்தணி முருகனின் ஐந்தாம் படைவீடு ஆகும். இவ்விடத்தின் மலையின் வள்ளியை முருகன் திருமணம் செய்து கொண்ட தலமாகும். திருத்தணி குன்றின் மீது முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட திருத்தணி முருகன் கோயில் உள்ளது. திருப்புகழ் பாடிய அருணகிரிநாதரால் பாடல் பெற்ற தலமிது. முத்துச்சாமி தீட்சதராலும் பாடப்பட்ட தலம்.[1] இக்கோயிலை தணிகை முருகன் கோயில் என்றும் அழைப்பர்.

*பழமுதிர்சோலை*

பழமுதிர்சோலை - முருகனின் ஆறாம் படைவீடாகும். முருகப் பெருமான் சிறுவனாய் வந்து ஔவையாரை சோதித்தது இங்குதானென நம்பப்படும் இடம். இங்குள்ள முருகன் கோயில், விஷ்ணு கோயிலான அழகர் கோவில் மலை மீது அமைந்துள்ளது. அருணகிரிநாதர் இத்தலம் மீது திருப்புகழ் பாடியுள்ளார்.

🙏🙏🙏

*"ஓம் சரவணா பவ ஓம்"*

Friday, October 27, 2023

மஹா அன்னாபிஷேகம் ஐப்பசி பௌர்ணமி 28/10/23,சனிக்கிழம

🙏🕉🌼மஹா அன்னாபிஷேகம் ஐப்பசி பௌர்ணமி 28/10/23,சனிக்கிழமை 
🕉🙏🌼அன்னாபிஷேகம் புராண கதை 🙏🌼🕉

🕉🌼🙏பிரம்மனின் கர்வத்தை அடக்க நினைத்த சிவபெருமான், பிரம்மாவின் ஒரு தலையைக் கொய்துவிடுவார். துண்டிக்கப்பட்ட தலை சிவபெருமானின் கையைக் கவ்விக்கொள்ள, அவரை பிரம்மஹத்தி தோஷம் தொற்றிக்கொள்ளும். 

🕉சிவபெருமான் தனது சுயத்தை இழந்துவிடுவார். கையைக் கவ்விக்கொண்ட பிரம்மனின் கபாலமே பிச்சைப் பாத்திரமாக மாறிவிடும். யார் பிச்சையிடும் போது இந்தக் கபாலம் அன்னத்தினால் நிறைகிறதோ அப்போது அந்தக் கபாலம் சிவபெருமானின் கையை விட்டுப் பிரியும் என்பது விதி. 

🕉சிவபெருமான் காசிக்குச் செல்லும்போது அன்னபூரணி அன்னமிடுகிறாள். அவளது அன்பினால் கபாலம் அன்னத்தினால் நிறைய, பிரம்மனின் தலை சிவபெருமானை விட்டு விலகும். சிவபெருமானும் பிரம்மஹத்தி தோஷத்திலிருந்து விடுபட்டு மாயையிலிருந்தும் விலகுவார். 

🕉அன்னபூரணி சிவபெருமானுக்கு அன்னமிட்ட தினம் ஐப்பசி மாத பவுர்ணமி. அதனால்தான் சிவபெருமானுக்கு ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தில் அன்னாபிஷேகம் செய்விக்கப்படுகிறது

🙏🌼🕉அன்னாபிஷேகத்தை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தவர்களுக்கு, அடுத்த அன்னாபிஷேகம் வரை அன்னத்துக்கு குறைவிருக்காது என்று கூறப்படுகிறது.

🕉ஆண்டுதோறும் ஐப்பசி பௌர்ணமியின் போது சிவனுக்கு செய்யப்படும் அன்னாபிஷேகத்தின் முக்கியத்துவத்தை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு. 

🕉அன்ன அபிஷேகம்: 

🕉அபிஷேகம் என்பது இறைவனுக்கு செய்யும் ஒரு செயல். இறைவனின் சிலைக்கு பால், தயிர், தேன், புனித நீர் உள்ளிட்ட அபிஷேகப்பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்படும். அந்த வகையில் அன்ன அபிஷேகம் என்பது சமைக்கப்பட்ட அரிசியால் இறைவனுக்கு அபிஷேகம் செய்வதாகும்.

🕉பொதுவாக அன்னாபிஷேகம் தமிழ் மாதமான ஐப்பசி பௌர்ணமி நாளில் செய்யப்படுகிறது. இந்தியாவில் பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடத்தப்பட்டாலும், தென்னிந்திய சிவன் கோவில்கள் அனைத்திலும் சிவலிங்கம் வடிவில் சிவபெருமானுக்கு இந்த குறிப்பிட்ட அபிஷேகம் செய்யப்படுகிறது. வருடத்திற்கு ஒரு முறை இந்த வழிபாட்டைச் செய்வதன் மூலம் வாழ்க்கையில் உள்ள அனைத்து பிரச்சனைகளிலிருந்தும் விடுபடலாம் என்று கூறப்படுகிறது. இந்த விழா சிவ அபிஷேகம் அல்லது மகா அன்ன அபிஷேகம் என்றும் அழைக்கப்படுகிறது. தென்னிந்தியா முழுவதும், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள பல சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது.

🕉அன்னாபிஷேகத்தின் முக்கியத்துவம்: 

புனித நூல்களின் படி, அரிசி என்பது வாழ்க்கை, செழுமை மற்றும் செழிப்பு ஆகியவற்றின் சின்னமாகும். சிவபெருமான் அபிஷேக பிரியர். ஆகவே அவருக்கு பொதுவாக புனித நீர், பசுவின் பால், நெய், இளநீர், கரும்புச்சாறு, சந்தனப் பசை, விபூதி, தயிர், பஞ்சாமிர்தம் போன்ற 11 புனித பொருட்களால் அபிஷேகம் செய்யப்படும். ஒருவரது வாழ்க்கையில் அரிசியின் முக்கியத்துவத்தையும் தெய்வீகப் பங்கையும் குறிக்கும் வகையில், சிவனுக்கு ஆண்டுதோறும் அன்ன அபிஷேகம் செய்யப்படுகிறது.

🕉இயற்கையின் ஐந்து கூறுகள் மற்றும் பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களின் ஒரே பாதுகாவலராக இருக்கும் சிவபெருமானுக்கு நன்றி தெரிவிக்கும் அடையாளமாக அன்ன அபிஷேகம் செயல்படுகிறது. மேலும், அரிசி என்பது இயற்கையின் ஐந்து கூறுகளின் இணைப்பின் விளைவாகும். நிலத்தில் விதை விதைக்கப்படும் போது, அது வானத்திலிருந்து வரும் தண்ணீராலும், சூரியனிடமிருந்து வரும் ஆற்றலாலும் ஊட்டமளித்து, காற்றின் உதவியால் நெல்லாக மாறுகிறது. இது அரிசியாக பதப்படுத்தப்பட்டு அனைத்து உயிரினங்களுக்கும் உணவாக வழங்கப்படுகிறது. 

🕉இறைவன் மீது இருக்கும் ஒவ்வொரு அன்னமும் ஒரு லிங்கத்துக்கு சமம் ஆகையால் இன்று தரிசனம் காண்போருக்கு கோடி லிங்க தரிசனம் பார்ப்பதர்க்கு சமமாகும் 🕉🙏🌼

எல்லாம் வல்ல ஈசன் கருனையால் அனைவருக்கும் அனைத்து  வகையான வளங்களும் பெற்று நலமுடனும் வளமுடனும் வாழ வேண்டுகிறேன் 🌼🙏🕉

🕉🙏🌼திருச்சிற்றம்பலம்🕉🙏🌼
ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா .இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

உலகிலேயே மிக* *உயரமான* *இடத்தில் உள்ள* *சிவப்பரம்பொருளின்* *ஆலயம்.!!*

🌺 *உலகிலேயே மிக* *உயரமான* *இடத்தில் உள்ள* *சிவப்பரம்பொருளின்* *ஆலயம்.!!* 
[ *சுமார் 3680 மீ ]...* 
 *அருள்மிகு துங்கநாதர் திருக்கோயில்* ,
 *துங்கநாத்,* 
 *உத்தர்காண்ட்* *மாநிலம்.* 

ஐயன் ஈசனுக்கு ஐந்து கேதார் கோயில்கள்===

பரமேஸ்வரன் கொலுவிருக்கும் கேதார் கோயில்கள் ஐந்து. இவற்றில் கேதார்நாத் கோயில் பற்றி பொதுவாக அனைவருக்கும் தெரியும். பிற நான்கு கேதார்கள் எவை, எங்கிருக்கின்றன அவை?

 ஈசனின் உடல்பாகங்களில் ஐந்தாக அவை வர்ணிக்கப்படுகின்றன:

கேதார்நாத் - ஈசனின் உடல்;
துங்கநாத் - ஈசனின் புஜம்;
ருத்ரநாத் - ஈசனின் முகம்;
மத்மஹேஷ்வர் - ஈசனின் தொப்புள்;
கபிலேஷ்வர் - ஈசனின் தலைமுடி.

குருக்ஷேத்திர யுத்தத்தில் தங்களுடைய சகோதரர்களையே கொன்றுவிட்டோமே என பஞ்ச பாண்டவர்கள் வருந்தியபோது,

வியாசர்தான் அவர்களிடம் 

‘சிவனின் உடற் பகுதிகளாகக் கருதப்படும் இடங்களில் அவருக்குக் கோயில் கட்டுங்கள். அவர் உங்கள் பாவங்களை மன்னித்து காப்பாற்றுவார்’ 

என கூறியதாகவும், அதனை ஏற்றுதான் பஞ்ச பாண்டவர்களும் ஆளுக்கு ஒரு ஆலயமாக கட்டினர் எனவும் இந்தப் பகுதி மக்கள் கூறுகின்றனர்.

உலகின் உயரமான சிவாலயம் துங்கநாத்தான். 

பஞ்ச கேதாரங்களில் அதிகமான உயரத்தில் அமைந்துள்ள தலமும் இதுதான். மகிஷாசுர மர்த்தினி ஸ்தோத்திரத்தில் ஆதி சங்கர பகவத் பாதாள் அன்னை பார்வதியை அழகிய சடையுடன் கூடிய மலைமகளை, (ரம்ய கபர்த்தினி சைலஸுதே)

சிகரி சிரோமணி துங்க ஹிமாலய
ச்ருங்க நிஜாலய மத்யகதே.....

அதாவது இமயமலையின் சிகரங்களில் துள்ளி விளையாடுபவள் என்று  குறிப்பிடுகின்றார்.

துங்கம் என்பால் சிகரம். அந்த சிகரங்களுக்கெல்லாம் ஈசர் துங்கநாத்தில் நமக்காக அருள் பாலிக்கின்றார். 

துங்கம் என்றால் கரம் என்றும் பொருள் இங்கு ஐயன் கர ரூபமாக வணங்கப்படுகின்றார்.   

 இங்கிருந்துதான் ஆகாஷ்காமினி நதி உருவாகி பாய்கின்றாள்  சந்திரசிலா பனி சிகரத்தின் அடிவாரத்தில் சுமார் 3680 மீ உயரத்தில் அமைந்துள்ளது இத்தலம்.

சந்திர சிலாவில்தான் இராமபிரான் தவம் செய்துள்ளார் என்று கூறப்படுகின்றது.

  இங்கிருந்து கொண்டல்கள் கொஞ்சும்   மஞ்சு திகழும் பஞ்சசுலி, நந்தாதேவி, தூனாகிரி, நீலகண்ட், கேதார்நாத் மற்றும் பந்தர்பூஞ்ச் சிகரங்களை காணலாம்.

 துங்கநாத் கேதார்நாத்திலிருந்து பத்ரிநாத் செல்லும் பாதையில் ஊக்கிமட்டிலிருந்து 30 கி.மீ தூரத்திலும், சோப்டாவிலிருந்து 5கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது.

பஞ்ச பாண்டவர்களில் அர்ச்சுனன் இக்கோவிலை கட்டி சிவபெருமானை வழிபட்டான் என்பது ஐதீகம். 

துங்கநாத ஆலயத்தில் சிவபெருமான் ஒரு அடி உயரத்தில் கருப்பு நிறமுடைய சுயம்பு லிங்கமாக இடப்பக்கம் சற்று சாய்ந்தவாறு அருட்காட்சி தருகின்றார். 

இத்தலத்தில் ஐயனின் பாஹூ அதாவது தோள்(புஜங்கள்- கரம்) வெளிப்பட்டன.

இங்குள்ள பிரதான சந்நிதியில் சிவபெருமான் புஜங்களோடு வெகு அழகாக தரிசனம் தருகின்றார். 

அஷ்ட உலோகத்தால் ஆன வியாசர் மற்றும் கால பைரவரின் சிலைகள் உள்ளன.   இக்கோவிலில் அம்மை மலைமகள் பார்வதிக்கு ஒரு தனி சன்னதி உள்ளது.

 இங்குதான் இராவணன் சிவபெருமானை நினைத்து தவம் செய்தான் என்று இராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது.

மற்ற கேதாரங்களை ஒப்பிடுகையில் துங்கநாத்தை அடைய 5 கி.மீ தூரம்தான் நடைப்பயணம் செய்ய வேண்டும். 

ஆனால் பல இடங்களில்  பாதை செங்குத்தாக உள்ளது. வழி முழுவதும். பசுமையான ஆல்பைன் மர காடுகளும், நீர் வீழ்ச்சிகளும் மற்றும் ரோடன்டென் (rhodenton) எனப்படும் அழகிய மலர் புதர்களும், மற்றும் இமயமலைக்கே உரிய பல அரிய மலர்களும் நீர் வீழ்ச்சிகளும் நிறைந்து காணப்படுகின்றது 

மேலே ஏற சுமார் 3 அல்லது 4 மணி நேரம் ஆகும்.

ஆதி சங்கரர் 8ம் நூற்றாண்டில் இங்கு வந்திருந்ததாக கூறப்படுகிறது. மற்ற கேதார் கோயில்களில், தென்னிந்திய அர்ச்சகர்கள்தான் காலம் காலமாக இறைப்பணி செய்து வருகிறார்கள். 

ஆனால், துங்கநாத் கோயிலில் மட்டும் மாகு என்ற கிராமத்தைச் சேர்ந்த பிராமணர்கள் அப்பணியை மேற்கொள்கிறார்கள்.

 குளிர்காலம் வந்தால் இங்குள்ள உற்சவரும், அர்ச்சகரும் 18 கி.மீ. தூரத்தில் உள்ள முக்திநாத்துக்கு வந்து விடுவர். 

கோயிலின் மேற்பகுதிக்குச் சென்றால் நந்தாதேவி, நீலகாந்த், கேதார்நாத் உட்பட பல இமயமலைப் பகுதிகளைப் பார்க்கலாம்.

தரிசனம் செய்ய ஏற்ற காலம் மே மாதம் முதல் அக்டோபர் முடிய.....!!

ஓம் நமசிவாய

படித்து பகிர்ந்தது
 இரா .இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Followers

மனிதனை மாமனிதனாக்குகிறது தியானம்

தூங்காமல் தூங்கி சுகம் பெறுதல் ஞான வழி என்ற தியானம் “தூங்கிக்கண்டார் சிவலோகமும் தம்உள்ளே தூங்கிக்கண்டார் சிவயோகமும் தம் உள்ளே ...