Thursday, November 30, 2023

புகழ்மிக்க நூற்றியெட்டு மாரியம்மனின் வரலாற்றையும், சிறப்பையும் இந்த நூலில் காண்போம்.

ஸ்ரீ முத்து மாரியம்மன் பராசக்தியின் அம்சம் என்பதைத் தெரிந்து கொண்டோம். அத்தகைய மாரியம்மன்களில் சிறப்புமிக்க. புகழ்மிக்க நூற்றியெட்டு மாரியம்மனின் வரலாற்றையும், சிறப்பையும் இந்த நூலில் காண்போம்.

108 அம்மன் பெயர்கள்
செல்லூர் ஏழை மாரியம்மன்
கீரந்தங்குடி மாரியம்மன
நிறைமதி ஸ்ரீவிஷமீடை மாரியம்மன்
கன்யாகுறிச்சி வடிவழகி அம்மன
கொங்கானோடை பாம்புவியம்மன்
எடையூர் – சங்கேந்தி பொன்வார்த்த அம்மன்
தேத்தாகுடி குளுந்தாளம்மன
அய்யம்பேட்டை பச்சைக்காளியம்மன்
பேராவூர் ஸ்ரீகாமாட்சியம்மன்
முடிகொண்டான் ஸ்ரீமாரியம்மன்
தென்குடி ஸ்ரீமாரியம்மன்
தஞ்சை புன்னை நல்லூர் ஸ்ரீமாரியம்மன்
சமயபுரம் ஸ்ரீமாரியம்மன்
பூவனூர் ஸ்ரீசாமுண்டேஸ்வரி அம்மன்
அம்பகரத்தூர் ஸ்ரீ பத்திரகாளி அம்மன்
கருவாழக்கரை ஸ்ரீகாமாட்சி அம்மன்
கூத்தனூர் ஸ்ரீ மஹா சரஸ்வதி அம்மன்
பிட்டா புரத்தி அம்மன்
திருமலைராயன்பட்டினம் ஆயிரங்காளியம்மன்
வெள்ளை வேம்பு மாரியம்மன்
பாம்பாளம்மன் ஆலயம்
திருநாகேஸ்வரம் கிரிகுஜாம்பிகை அம்மன்
திருமீயச்சூர் ஸ்ரீ லலிதா பரமேஸ்வரி அம்மன்
விருகம்பாக்கம் சந்தோஷி மாதா அம்மன்
சென்னை ஸ்ரீ காளிகாம்பாள்
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மன்
மாங்காடு ஸ்ரீகாமாட்சி அம்மன்
திருவல்லிக்கேணி அருள்மிகு எல்லை அம்மன்
மயிலாப்பூர் அருள்மிகு கோலவிழி அம்மன்
தியாகராயநகர் முப்பாத்தம்மன்
திருவேற்காடு கருமாரி அம்மன்
கடும்பாடி மாரி சின்னம்மன்
கொன்ரையூர் மாரியம்மன்
தேக்கம்பட்டி வன பத்ரகாளியம்மன்
தொட்டியம் ஸ்ரீமதுரை காளியம்மன்
பேரூர் அங்காளம்மன்
வலங்கைமான் ஸ்ரீ சீதளாதேவியம்மன்
கருப்பூர் காவாத்தம்மன்
பாரியூர் கொண்டத்துக் காளியம்மன்
மேல்மலையனூர் ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி
நார்த்தாமலை மகாமாரியம்மன்
தஞ்சாவூர் பங்காரு காமாட்சி அம்மன்
சிறுவாச்சூர் ஸ்ரீ மதுரகாளியம்மன்
மாகாளிக்குடி உஜ்ஜயினி காளியம்மன்
இருக்கன்குடி அருள்மிகு மாரியம்மன்
கட்டளை மாரியம்மன்
பரமக்குடி அருள்மிகு முத்தாலம்மன்
பட்டுக்கோட்டை ஸ்ரீ நாடியம்மன்
வேலூர் ஸ்ரீ செல்லியம்மன்
பூதங்குடி தீப்பாய்ந்த அம்மன்
அன்பில் மகமாயி அம்மன்
விஜயவாடா கனக துர்கேஸ்வரி அம்மன்
காரைக்குடி ஸ்ரீகொப்புடைய நாயகி அம்மன்
நாட்டரசன் கோட்டை கண்ணாத்தாள்
தாயமங்கலம் அருள்மிகு ஸ்ரீ முத்து மாரியம்மன்
திருவெற்றியூர் பாகம்பிரியாள் அம்மன்
அரியாக்குறிச்சி கொல்லங்குடி ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன்
தில்லைக் காளி
நல்லூர் காளி
மடப்புரம் காளி
சென்னை ராஜகீழ்ப்பாக்கம் ஸ்ரீ பிரத்யங்கிராதேவி அம்மன்
தெத்துப்பட்டி ஸ்ரீஇராஜ காளியம்மன்
புதுக்கோட்டை புவனேஸ்வரி அம்மன்
வீரபாண்டி அருள்மிகு கௌமாரியம்மன்
திருவக்கரை ஸ்ரீ வக்ர காளியம்மன்
மாசாணி அம்மன்
அருள்மிகு பண்ணாரி மாரியம்மன்
படவேட்டம்மன்
மத்தூர் மகிஷாசுரமர்த்தனி அம்மன்
பள்ளிக்கரனை ஆதிபராசக்தி
பூமாத்தம்மன்
பெரிய பாளையத்து அம்மன்
திருச்சி வெக்காளி அம்மன்
மதுக்கரை அருள்மிகு செல்லாண்டியம்மன்
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன்
கோயமுத்தூர் ஸ்ரீ கோனியம்மன்
ஈரோடு பெரிய மாரியம்மன்
சேலம் கோட்டை மாரியம்மன்
சேலம் ஸ்ரீராஜமாதங்கி அம்மன்
அருள்சக்திபுரம் அன்னை மூகாம்பிகை அம்மன்
கல்கத்தா காளி அம்மன்
ஆட்டுக்கால் பகவதி அம்மன்
செங்கன்னூர் ஸ்ரீபகவதி அம்மன்
சோட்டாணிக்கரை பகவதி அம்மன்
கொடுங்கல்லூர் பகவதியம்மன்
மண்டைக்காடு பகவதி அம்மன்
தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன்
வாழைபந்தல் அருள்மிகு பச்சையம்மன்
வேலூர் சைதாபுரி அம்மன்
பொள்ளாச்சி மாரியம்மன்
நெல்லுக்கடை மாரியம்மன்
கோடிப்புதூர் பத்ரகாளியம்மன்
அர்ச்சனாபுரம் நல்லதங்காள் அம்மன்
சிந்தலக்கரை ஸ்ரீ வெட்காளியம்மன்
வல்லம் எகௌரியம்மன்
வெட்டுவானம் எல்லை அம்மன்
மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மன்
சேந்தமங்கலம் தட்சிணகாளியம்மன்
கொல்லூர் ஸ்ரீ தாய் மூகாம்பிகை
கீவளூர் அஞ்சுவட்டத்தம்மன்
மாதானம் ஸ்ரீ முத்து மாரியம்மன்
மயிலாப்பூர் அருள்மிகு முண்டகக் கண்ணியம்மன்
குடவாசல் காளியம்மன்
மருதூர் ஸ்ரீ செல்லாயி அம்மன்
திருவாலங்காடு ஸ்ரீமகாமாரி அம்மன்
நமச்சிவாயபுரம் ஸ்ரீவீரமாகாளியம்மன்
குரங்கணி முத்துமாலை அம்மன். 

படித்து பகிர்ந்தது
இரா. இளங்கோவன்

திருவண்ணாமலை ஆலயத்தில் மொத்தம் 56 லிங்கங்கள் உள்ளன.

அன்பே சிவம் மனமே குரு சிவாயநம நமசிவாய

திருவண்ணாமலை: ஆற்றல் தரும் அக்னிலிங்கம்
திருவண்ணாமலை தலத்திற்கு செல்பவர்கள் அக்னி லிங்கமாக வீற்றிருக்கும் அண்ணாமலையாரிடம் தங்களை முழுமையாக ஒப்படைத்துக் கொண்டால் வாழ்வில் எல்லா வளங்களையும் பெற முடியும்.

திருவண்ணாமலை கோவிலில் திரும்பிய திசை எல்லாம் லிங்கங்களை பார்க்கலாம். இந்த ஆலயத்தில் மொத்தம் 56 லிங்கங்கள் உள்ளன.

 இதில் 11 லிங்கங்கள் தனி சன்னதியுடன் அமைக்கப்பட்டுள்ளன.

 இந்த லிங்கங்கள் ஒவ்வொன்றின் பின்னணியிலும் ஒரு வரலாறு இருக்கிறது.

 அந்த வரலாற்றை தெரிந்து கொள்வது என்பது மிக கடினமானது.

 முக்கிய லிங்கங்கள் பற்றி மட்டும் இப்போதும் செவி வழி செய்தியாக தகவல்கள் உள்ளன.

 இந்த லிங்கங்கள் ஆலயத்தின் எந்தெந்த பகுதிகளில் உள்ளன என்பதை தெரிந்து கொண்டால் வழிபாடு செய்வதற்கு மிக எளிதாக இருக்கும். 

 ராஜகோபுரத்தை கடந்ததும் வரும் 5-ம் பிரகாரத்தில் பாதாள லிங்கேஸ்வரர், கல்யாண சுந்தரேஸ்வரர் என்ற 2 லிங்கங்கள் இருப்பதை பார்க்கலாம். 

அடுத்து 4-ம் பிரகாரத்தில் பிரம்ம தீர்த்தம் எதிரே பிரம்ம லிங்கம், ஸ்ரீநளேஸ்வரர், வித்யாதேஸ்வரர் ஆகிய 3 லிங்கங்கள் உள்ளன.

3-ம் பிரகாரத்தில் மகிழ மரத்தடியில் ஜலகண்டேஸ்வரர், கல்யாண மண்டபத்தில் பீமேஸ்வரர், அருணகிரி யோகீஸ்வரர், ஸ்ரீகாளத்தீஸ்வரர், சிதம்பரேஸ்வரர், ஜம்புகேஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர் உள்ளனர்.

 இவர்கள் அனைவரும் தனித்தனி சன்னதிகளில் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் இந்த பிரகாரத்தில் அமைந்துள்ள லிங்கங்கள் பஞ்ச பூதங்களை பிரதிபலிப்பதை காணலாம். இதன் மூலம் திருவண்ணாமலை தலத்தில் பஞ்ச பூதங்களும் அடங்கி இருப்பதை நமது முன்னோர்கள் உணர்த்தி உள்ளனர். 2-ம் பிரகாரத்தில் அடுத்தடுத்து லிங்கங்கள் அணிவகுத்து இருக்கின்றன.

 இந்திர லிங்கம், சனகேஸ்வரர், சனந்தனேசுவரர், சனாதனேஸ்வரர், சனதீகுமாரேஸ்வரர், கவுசிகேசுவரர், குத்ஸரிஷி ஈஸ்வரர், வால்மீகிசுவரர், அக்னி லிங்கம், விக்னேசுவரர், விஸ்வநாத ஈஸ்வரர், ஸ்ரீநாரதேசுவரர், ஸ்ரீகாசி லிங்கம், ஸ்ரீகாசி லிங்கம், வைசம் பாயனேசுவரர், ஸ்ரீவாமரீஷிசுவரர், எம லிங்கம், காசி லிங்கம், காசிலிங்கம், காசி லிங்கம், காசி லிங்கம், ஸ்ரீதும்புரேஸ்வரர், ஸ்ரீநிருதலிங்கம், ஸ்ரீ வருணலிங்கம், வியாசலிங்கம், ஸ்ரீவிக்ர பாண்டீ சுவரர், ஸ்ரீவணிஷ் டலிங்கம், ஸ்ரீசகஸ்ரலிங்கம், ஸ்ரீவாயுலிங்கம், ஸ்ரீகுபேர லிங்கம், விசுவாமித்ஸ்வரர், ஸ்ரீபதஞ்சலீசுவரர், ஸ்ரீவியாக்கிரபாதேசுவரர், 108 லிங்கம், ஸ்ரீஅகஸ்தீசுவரர், ஸ்ரீஜீரஹரேசுவரர், ஈசானலிங்கம் என 37 லிங்கங்கள் இந்த பிரகாரத்தில் உள்ளன.

இந்த 37 லிங்கங்களும் ஒவ்வொரு வகையில் தனித்துவம் கொண்டவை. எனவே இந்த லிங்கங்களை மிக பொறுமையாக வழிபாடு செய்தால் பல உண்மைகளை தெரிந்து கொள்ளலாம். மிக உன்னிப்பாக கவனித்தால் கிரிவலப்பாதையில் நாம் வழிபடும் அஷ்டலிங்கங்களும் இங்கு இருப்பதை தெரிந்து கொள்ளலாம். அதுமட்டுமின்றி ஒரே கல்லில் 1008 லிங்கம் இருப்பதை பார்க்கலாம். இந்த லிங்கங்களில் பெரும்பாலானவை ரிஷிகளால் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்யப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்து கருவறையில் இருக்கும் மூலவரான அண்ணா மலையார் லிங்கத்தை பார்க்கலாம். 5-ம் பிரகாரத்தில் இருந்து ஒவ்வொரு லிங்கமாக நாம் கணக்கிட்டு வந்தால் மிகச்சரியாக 50-வது லிங்கமாக கருவறை லிங்கம் திகழ்கிறது. இந்த லிங்கத்திற்கு அக்னி லிங்கம் என்று பெயர். சிவப்பெருமான் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களின் வடிவமாக திகழ்கிறார். அதை உணர்த்தவே காஞ்சீபுரத்தில் மண்லிங்கம், திருவானைகாவலில் நீர் லிங்கம், ஸ்ரீகாளகஸ்தீயில் வாயு லிங்கம், சிதம்பரத்தில் ஆகாய லிங்கம் இருக்கின்றன. அதேபோன்று திருவண்ணாமலையில் அக்னி லிங்கம் திகழ்கிறது.

முன் ஒரு காலத்தில் சிவபெருமானை நோக்கி பார்வதி தேவி கடும் தவம் இருந்தாள். 

அவளுக்கு காட்சி கொடுப்பதற்காக சிவபெருமான் அக்னி வடிவம் எடுத்து வந்தார்.

 பார்வதியும் பரமசிவனும் ஒன்று சேர்ந்து அர்த்தநாரீஸ்வரர் ஆக மாறி அக்னி மண்டலத்தின் நடுவில் நடனம் புரிந்தனர்.

 பிறகு சிவலிங்கமாக மாறினார்கள். அந்த லிங்கம்தான் அக்னி லிங்கமாக போற்றப்படுகிறது.

 அக்னி லிங்கம் மிகுந்த ஆற்றல் உடையது. நாம் கேட்கும் அனைத்து வரங்களையும் தரும் சிறப்புடையது.

 திருவண்ணாமலை தலத்திற்கு செல்பவர்கள் அக்னி லிங்கமாக வீற்றிருக்கும் அண்ணாமலையாரிடம் தங்களை முழுமையாக ஒப்படைத்துக் கொண்டால் வாழ்வில் எல்லா வளங்களையும் பெற முடியும்.

 அக்னி லிங்கத்தை வழிபடும்போது நமது மனம் இலவம்பஞ்சு போல லேசாகி விடும். 

நம் மன பாரத்தை எல்லாம் அக்னி லிங்கமாக இருக்கும் அண்ணாமலையார் ஏற்றுக் கொண்டு விட்டார் என்று தோன்றும்.

 சுருக்கமாக சொல்வது என்றால் நம் மனது நிர்விகல்பம் ஆகி விடும். அக்னி லிங்கத்திடம் நம் மனதை ஆத்மார்த்தமாக செலுத்தினால் மட்டுமே இந்த நிலையை நாம் பெற முடியும்.

இத்தகைய சிறப்புடைய அக்னி லிங்கத்தை வழிபட்ட பிறகு வெளியில் வந்து முதல் பிரகாரத்தை சுற்றி வரலாம். அங்கு லிங்கோத்பவர் உள்ளார்.

 அடுத்து உண்ணாமலையம்மன் சன்னதியிலும் லிங் கங்கள் உள்ளன. அங்குள்ள அஷ்ட லட்சுமி மண்டபத்தில் சோழலிங்கம், சேரலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

 இவை சோழ மன்னர்கள், சேர மன்னர்கள் நிறுவி வழிபட்டதாக சொல்லப்படுகிறது. இந்த லிங்கங்கள் தவிர அடிமுடி அறியாதவர், லிங்கம், ஸ்ரீசோமேசுவரர் உள்ளனர்.இவ்வளவு லிங்கங்கள் இருந்தாலும் தனி சன்னதிகளில் உள்ள லிங்கங்களுக்கு வெவ்வேறு சிறப்புகள் உள்ளன.

 5-ம் பிரகாரத்தில் உள்ள பாதாளலிங்கம் ரமணர் காலத்தில் புகழ்பெற்றது.

 இந்த பாதாள லிங்கம் ஆயிரம்கால் மண்டபத்தில் ஒரு பகுதியில் பாதாளத்தில் அமைந்துள்ளது. 

ரமணர் சிறுவயதில் திருவண்ணாமலைக்கு வந்த போது குகை போன்று இருந்த இந்த பாதாளத்திற்குள் சென்று தவம் இருந்தார்.

நீண்ட நாட்களுக்கு பிறகு ரமணரை கண்டுபிடித்து வெளியில் அழைத்து வந்தனர். 

அதன் பிறகு இந்த பாதாள லிங்கத்திற்கு சிறப்பான பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

 இந்த லிங்கம் இருக்கும் சன்னதியில் அமர்ந்து தியானம் செய்தால் மரண பயம் நீங்கும் என்பது ஐதீகமாகும்.

 இந்த பிரகாரத்திலேயே கல்யாண சுந்தரேஸ்வரர் சன்னதி உள்ளது.

 அங்கு கிழக்கு திசையை நோக்கி ஈஸ்வரர் அமர்ந்து உள்ளார்.

 அவரை சாட்சியாக வைத்து அந்த சன்னதியில் திருமணம் நடத்தப்படுகிறது.

 சிவராத்திரி தினத்தன்று இவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்படுகின்றன.

 நான்காம் பிரகாரத்தில் நளேஸ்வரர் சன்னதி உள்ளது. இந்த சன்னதியின் பின்னணியில் ஒரு வரலாறு உள்ளது. 

சேதி நாட்டு இளவரசி தமயந்தி நிடத நாட்டு மன்னன் நளன் என்பவனை திருமணம் செய்ய முடிவு செய்தாள்.

 இதனால் கோபம் கொண்ட தேவர்கள் சனி பகவானை தூண்டி விட்டு நளனை துன்புறுத்த செய்தனர். 

உடனே நளன் சிவபெருமானை வேண்டி வணங்கி தனது துன்பத்தில் இருந்து விடுபட்டார். 

அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நளன் இத்தலத்துக்கு வந்து இந்த லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். 

இதனால் இந்த லிங்கம் நளேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறது.

 நளேஸ்வரரை வழிபட்டால் களத்திர தோஷம் நீங்கும் என்பது ஐதீகமாகும்.

இந்த சன்னதி அருகிலேயே வித்யாதேஸ்வரர் சன்னதி உள்ளது. 

இவரை வழிபட்டால் கல்வியில் சிறப்புகளை பெறலாம் என்பது ஐதீகமாகும். 

அடுத்து அதே வரிசையில் பிரம்மலிங்கம் தனி சன்னதியில் இருப்பதை காணலாம்.

 பிரம்மா இத்தலத்தில் அண்ணாமலையாரை வழிபட்டதன் அடிப்படையில் இந்த லிங்கத்தை பிரதிஷ்டை செய்துள்ளனர். 

பிரம்மா எப்போதும் வேதத்தை ஓதிக் கொண்டு இருப்பார்.

 இதை உணர்த்தும் விதமாக இந்த லிங்கத்தின் நான்கு பக்கத்திலும் நான்கு முகங்கள் உள்ளன.

 அக்னி, வாயு, மண், தண்ணீர் ஆகியவற்றை குறிப்பதால் இந்த நான்கு முக லிங்கத்தை சதுர்முக லிங்கம் என்று சொல்கிறார்கள்.

 உச்சியில் ஐந்தாவது முகமும் இருப்பதாக கருதப்படுகிறது. 

அந்த முகத்துக்கு ஆகாசம் என்று பெயர். இதனால் இந்த லிங்கம் பஞ்சமுக லிங்கம் என்றும் அழைக்கப்படுகிறது.

அதே பிரகாரத்தில் அடிமுடி காணா அண்ணாமலையார் சன்னதி உள்ளது.

 அண்ணாமலையார் பாதம் அருகே அமைந்துள்ள இந்த சன்னதியில் சிவபெருமானும் பார்வதியும் சேர்ந்து காட்சி அளிக்கிறார்கள்.

 திருவண்ணாமலை தலத்தில் இந்த சன்னதி மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. 

அடுத்து மூன்றாம் பிரகாரத்தில் தல விருட்சமான மகிழம் மரம் அருகே கல்யாண மண்டபத்திற்குள் பீமேஸ்வரர் சன்னதி உள்ளது. பஞ்ச பாண்டவர்கள் மகாபாரதபோரில் வெற்றி பெறுவதற்காக ஒன்றாகவும் தனித்தனியாகவும் பல்வேறு தலங்களுக்கு சென்று வழிபட்டனர்.

 அந்த வகையில் பீமன் திருவண்ணாமலை தலத்துக்கு வந்து அண்ணாமலையாரை வழிபட்டு பலன் பெற்றார்.

 அதை பிரதிபலிக்கும் வகையில் இந்த சன்னதி அமைந்துள்ளது.

 சிலர் இந்த சன்னதி அமைந்துள்ள இடத்தில் தான் அண்ணாமலையாரை பீமன் நேரில் கண்டு தரிசித்ததாக சொல்கிறார்கள்.

இந்த சன்னதியை கடந்துசென்றால் மேற்கு பகுதியில் அருணகிரி யோகீஸ்வரர் மண்டபத்தை காணலாம். நான்கு துண்களுடன் அமைந்துள்ள இந்த சன்னதியில் அருணகிரி நாதர் சிலை அமைந்துள்ளது. 

ஆனால் உண்மையில் அண்ணாமலையார் அங்கு யோகியாக வீற்றிருப்பதாக சான்றோர்கள் கணித்துள்ளனர்.

 இதனால் இந்த மண்டபம் அருணகிரி யோகீஸ்வரர் மண்டபம் என்று அழைக்கப்படுகிறது.

 சித்தர்கள் இந்த இடத்தில் தியானம் செய்து பலன் பெற்றுள்ளனர். 

எனவே இந்த மண்டபம் பகுதியில் அமர்ந்து மனதை ஒருநிலைப்படுத்தி தியானம் செய்தால் ஆத்ம ஞானம் பெறலாம் என்ற நம்பிக்கை பக்தர்கள் மத்தியில் உள்ளது.

  இதே மூன்றாம் பிரகாரத்தில் உள்ள அகத்தீஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர், சிதம் பரேஸ்வரர், ஜம்புகேஸ்வரர் ஆகிய சன்னதி கள் சிவபெருமான் பஞ்சபூதங்களாக இத்தலத்தில் இருப்பதை பிரதிபலிக்கின்றன.

 இரண்டாம் பிரகாரத்தில் 37 லிங்கங்கள் அணிவகுக்கின்றன. அந்த லிங்கங்களின் பெயரிலேயே அவற்றின் வரலாறு உள்ளது.

 நேரம் இருப்பவர்கள் இந்த லிங்கங்களின் வரலாறை தெரிந்து கொண்டு வழிபட்டால் அந்த வழிபாடு முழுமையானதாக இருக்கும். 

 திருவண்ணாமலை தலத்தில் மற்ற இறை சன்னதிகள் போல நந்திக்கும் பல்வேறுஹ சன்னதிகள் உள்ளன.

 அந்த சன்னதிகளிலும் ரகசியங்கள் மறைந்துள்ளது.

காசி விஸ்வநாதர் ஆலயம் பற்றிய முழு விபரம்

காசி விஸ்வநாதர் ஆலயம் பற்றிய முழு விபரம் ஓரளவு வரலாற்றில் தெரிந்தது  யாரால் எப்போதெல்லாம் தகர்க்கபட்டது? எதனால்? —இன்று 15/11/2023 புதன்கிழமை அன்று விவரங்கள் தெரிந்து கொள்வோம் 
அரஹர அரஹர அரஹர லிங்கம்
சிவசிவ சிவசிவ சிவசிவ லிங்கம்
காசி விஸ்வநாதர் ஆலயம் பற்றிய முழு விபரம் கிடைக்குமா? யாரால் எப்போதெல்லாம் தகர்க்கபட்டது? எதனால்? —
 · 
: காசி விஸ்வநாதர் ஆலயம் பற்றிய முழு விபரம், யாரால் எப்போதெல்லாம் தகர்க்க பட்டது எதனால்?
புதுடில்லி: 500 ஆண்டுகள் நீண்ட காத்திருப்புக்கு பிறகு அயோத்தியில் ராம் கோயிலின் கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாத் கோயில் விஷயத்தில் எப்போது தீர்வு கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

12 ஜோதிலிங்ககளின் ஒன்றான, காசியில் உள்ள ஜோதிர்லிங்கம், அது ஏற்கனவே இருந்த இடத்தில் நிறுவுவதற்கான சட்ட முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஞான்வபி (Gyanvapi ) என்றால் அறிவின் கிணறு அல்லது குளம் என்று பொருள்

காசி விஸ்வநாதர் ஆலயம் தொடர்பாக மக்களிடமிருந்து வேண்டுமென்றே மறைக்கப்பட்ட உண்மைகள் :

காசி விஸ்வநாதர் கோயிலுக்கும், ஞான வாபி மசூதிக்கும் இடையிலான சர்ச்சையை விசாரித்த ஒரு வாரணாசி நீதிமன்றத்தில், 351 ஆண்டுகள் கால உண்மைகளை விவரிக்கும் சில வரலாற்று சிறப்பு மிக்க முக்கியமான ஆவணங்களை இந்து தரப்பினர் சமர்ப்பித்தனர்.

1. 1669 ஏப்ரல் 18 ஆம் தேதி அவுரங்கசீப்பின் ஒரு ஆலோசகரால் வெளியிடப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆவணம் இது. முதலில் பாரசீக மொழியில் எழுதப்பட்டது. அதில் முல்தான் மற்றும் பனாரஸின் சில புறநகர்ப்பகுதிகளில், சில பிராமணர்கள் தங்கள் குப்பை புத்தகங்களை பள்ளிகளில் கற்பிக்கிறார்கள் என்று செய்தி அவுரங்கசீப்பிற்கு வழங்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

2. இதைக் கேட்ட அவுரங்கசீப், காஃபிர்களின் கோயில்களையும் பள்ளிகளையும் இடிக்க வேண்டும் என்று ஒரு ஆணையை வெளியிட்டார். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேதம் மற்றும் சிலை வழிபாடு தொடர்பான அனைத்து வகையான நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

3.1669 செப்டம்பர் 2 ஆம் தேதி, காசி விஸ்வநாதர் கோயில் இடிக்கப்பட்டது என்றும் அவுரங்கசீப்பின் உத்தரவு நிறைவேற்றப்பட்டது என்றும் அறிவிக்கப்பட்டது

4. அரங்கசீப்பின் உத்தரவின் பேரில் காசி விஸ்வநாதர் கோயில் சேதமடைந்தது என்பதை இந்த வரலாற்று ஆவணம் உறுதிப்படுத்துகிறது.

5. காசி விஸ்வநாதர் கோயில் சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றாகும், எனவே இது இந்து மதத்தின் மிக முக்கிய கோவிலாக கருதப்படுகிறது.

6. இந்தியாவின் மீது முஸ்லிம்கள் படைஎடுப்பு தொடங்கியதும், காசி விஸ்வநாதர் மீதான தாக்குதலும் தொடங்கியது. முதல் தாக்குதல் 11 ஆம் நூற்றாண்டில் குதுபுதீன் ஐபக் என்பவரால் செய்யப்பட்டது. கோயிலின் சில பகுதி உடைக்கப்பட்டது, ஆனால் தாக்குதல் நடந்தாலும் சிவபெருமானை வழிபாடு தொடர்ந்தது.

7. காசி விஸ்வநாதர் கோயில் 1585 ஆம் ஆண்டில் தோடர்மால் (Todarmal) மன்னரால் புனரமைக்கப்பட்டது. முகலாய பேரரசர் அக்பரின் நவரத்தினங்களில் ஒருவராக இருந்தார். அவர் நிதி துறையில் இருந்தார்

8. 1669 ஆம் ஆண்டில் கோயில் முற்றிலுமாக அழிக்கப்பட்டு அவுரங்கசீப்பின் உத்தரவின் பேரில் அங்கு ஒரு மசூதி கட்டப்பட்டது.

9. 1780 ஆம் ஆண்டில், மால்வாவின் ராணி அகிலியாபாய் ஹோல்கர் கியான்வாபி வளாகத்திற்கு அடுத்ததாக, அருகில் ஒரு புதிய கோவிலைக் கட்டினார். புதிய வளாகம் தான் இப்போது காசி விஸ்வநாதர் கோயில் என்று அழைக்கப்படுகிறது. 1853 ஆம் ஆண்டில், பஞ்சாபின் ரஞ்சித் சிங் கோயிலின் கோபுரத்தை அலங்கரிப்பதற்காக 880 கிலோ தங்கத்தை நன்கொடையாக வழங்கினார்.

அப்போதிருந்து, இந்த சர்ச்சை தொடர்கிறது, இப்போது இந்த வழக்கு வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த சர்ச்சைக்கு தீர்வு காண 2018 ஆம் ஆண்டில், கியான்வாபி வளாகம் முழுவதையும் தொல்பொருள் துறை ஆய்வு செய்ய வேண்டும் என்று இந்து தரப்பு கோரியது.

காசி விஸ்வநாதர் ஆலயத்தின் சுயம்பு ஜோதிர்லிங்கம் ஞான்வபி வளாகத்தில் இருப்பதாக இந்துக்கள் நம்புகிறார்கள். அதனால், அந்த வளாகத்தை அகழ்வாராய்ச்சி செய்ய விரும்புகிறார்கள். அதே நேரத்தில் முஸ்லிம்கள் அந்த இடத்தில் கோயில் இல்லை என மறுக்கின்றனர்

இந்துக்கள் 1991 இல் 3 முக்கிய கோரிக்கைகளை வைத்து ஒரு வழக்கைத் தாக்கல் செய்தனர்.

1. முதல் கோரிக்கை, ஞான்வாபி நிலம் கோயிலின் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட வேண்டும்.
2. இரண்டாவது கோரிக்கை, தற்போதைய கட்டமைப்பு இடிக்கப்பட்டு இந்துக்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
3. மூன்றாவது கோரிக்கை என்னவென்றால், சுயம்புவாக உள்ள சிவலிங்கம் உள்ள இடத்தில் கோவிலை புனரமைக்க அனுமதிக்க வேண்டும். முஸ்லிம்கள் அதை தடுக்கக்கூடாது.

செப்டம்பர் 23, 1998 அன்று, ஞான்வபி வளாகத்தின் எந்த மதத்திற்கு சொந்தமாக இருந்தது என்பதை முதலில் முடிவு செய்ய வேண்டும் என்று வாரணாசி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. அதாவது 1947 ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்த இடம் ஒரு கோவிலால அல்லது மசூதியாக இருந்ததா என்பதை தீர்மானிக்க நடவடிக்கை வேண்டும். ஏனென்றால், வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991 இன் படி, அயோத்தியை தவிர, பிற வழிபாட்டி தலங்கள் அனைத்தும், ஆகஸ்ட் 15, 1947 ம் தேதி இருந்த நிலை பராமரிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது
இருப்பினும், உயர் நீதிமன்றம் மாவட்ட நீதிமன்ற தீர்ப்புக்கு தடை உத்தரவு பிறப்பித்தது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு, 2018 ஆம் ஆண்டில் மீண்டும் விசாரணை தொடங்கியது. ஆனால் முஸ்லீம் தரப்பு மீண்டும், தடை உத்தரவை பெற்றது.

இந்து தரப்பின் மிகப்பெரிய வாதம் மசூதியின் மற்ற சுவர்களில் இருந்து வேறுபடும் கியான்வாபி மசூதியின் சுவர்களை ஆதாரமாக காட்டியுள்ளது ஞான்வபி வளாகத்தின் பல புகைப்படங்கள் ஆதாரமாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

சுதந்திர நாளில் சர்ச்சைக்குரிய இடத்தில் கோயில் அல்லது மசூதி உள்ளதா என்பதை வாரணாசி மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் முதலில் தீர்மானிக்க விரும்பினர். காசிவிஸ்வநாத் கோயிலுக்கு ஒரு பழங்கால வரலாறு இருப்பதாகவும், இது மக்களின் மத உணர்வுகளுடன் தொடர்புடையது என்றும் நீதிமன்றம் நம்பியது. எனவே இந்த சர்ச்சை விரைவில் தீர்க்கப்பட வேண்டும் என கூறியது.

குறிப்பாக, வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் தற்போது நடைபெற்று வரும் வழக்கில் மூன்று தரப்பினர் உள்ளனர். முதல் தரப்பு ஜோதிர்லிங்கமாக உள்ள சிவன், அதாவது, அயோத்தி வழக்கில் ராம்லல்லா அதாவது குழந்தை ராமர் போல், இங்கு சிவ பெருமான். சிவபெருமானின் நண்பராக நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் விஜய் சங்கர் ரஸ்தோகி சிவன் சார்பாக வாதிடுகிறார். இரண்டாவது கட்சி சுன்னி மத்திய வக்ஃப் வாரியம், மூன்றாம் தரப்பு அஞ்சுமான் இன்டெஜாமியா மசாஜித் குழு.

தற்போதைய வழக்கு 1991 இல் தொடங்கப்பட்ட போதிலும், இது திடர்பாக சட்ட பிரச்சனை 1936 ஆம் ஆண்டு தொடங்கியது. அப்போது முஸ்லீம் தரப்பு வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தது. தீன் முகமது என்பவர் தாக்கல் செய்த அந்த மனுவில், முழு ஞான்வாபி வளாகத்தையும் மசூதி நிலமாக அறிவிக்க நீதிமன்றத்தில் கோரப்பட்டது. 1937 ஆம் ஆண்டில், நீதிமன்றம் அவரது கோரிக்கையை நிராகரித்தது. ஆனால் சர்ச்சைக்குரிய இடத்தில் தொழுகை நடத்த அனுமதித்தது.

இந்த வழக்கில் இந்துக்கள் ஒரு கட்சியாக வாதிடவில்லை என்றாலும், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சான்றுகள் இன்னும் இந்த வழக்கின் முக்கிய ஆவணங்களாக உள்ளன.

இந்த வழக்கு விசாரணையின் போது, ​​பிரிட்டிஷ் அதிகாரிகள் 1585 இல் கட்டப்பட்ட பண்டைய விஸ்வநாதர் கோயிலின் வரைபடத்தை முன்வைத்தனர். வரைபடத்தை நீதிமன்றத்தில் முன்வைத்து, பிரிட்டிஷ் அதிகாரிகள் அதன் ஒரு பகுதியில் ஒரு மசூதி கட்டப்பட்டதாகக் கூறினர்.

அயோத்தி சர்ச்சையைப் போலவே, காசி விஸ்வநாத் கோயில் தகராறும் பல வன்முறைகளை கண்டது. 1809 ஆம் ஆண்டில், காசியில் நடந்த இந்து-முஸ்லீம் கலவரத்தில் பலர் கொல்லப்பட்டனர் . கல்கத்தாவின் கவுன்சில் துணைத் தலைவர், காசியின் மாஜிஸ்திரேட் ஆக இருந்த வாட்சனிடம் கலவரத்தின் பின்னணியில் இருந்த காரணத்தைக் கேட்டார். அவுரங்கசீப்பால் கோயில் இடிக்கப்பட்டதே முக்கிய காரணம் என்று வாட்சன் கூறியதாக கூறப்படுகிறது. சர்ச்சைக்கு தீர்வு காண முஸ்லிம்களை ஞான்வபியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.

இருப்பினும், கல்கத்தா கவுன்சில் துணைத் தலைவர், வாட்சனின் பரிந்துரைகளை நிராகரித்தார். ஏனெனில் பிரிட்டிஷ் தரப்பு சர்ச்சையை முடிவுக்கு கொண்டுவர விரும்பவில்லை. இந்த உண்மை 1936 ஆம் ஆண்டில் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்தியாவில் தற்போது 30 லட்சத்திற்கும் அதிகமான கோவில்கள் உள்ளன. சிறிய, பெரிய, புதிய மற்றும் பழங்கால கோயில்கள் இதில் அடங்கும், இவற்றில் 10,000 க்கும் மேற்பட்ட பழங்கால கோவில்கள் சேதமடைந்தன. இவற்றில் சில முற்றிலுமாக அழிக்கப்பட்டன மேலும் அவற்றின் மீது மசூதிகள் கட்டப்பட்டன என 2011 எடுத்த கணக்கெடுப்பு கூறுகிறது
கருணையின் வடிவே கைலாச லிங்கம்
காசினி காக்கும் விசுவ லிங்கம்
திருப்பரங் குன்றின் பரங்குன்ற லிங்கம்
திருவா னைக்காவில் ஜம்புலிங்கம்

ஆடல் புரிந்த கூடல்லிங்கம்
அன்பைப் பொழியும் ஆட்கொண்ட லிங்கம்
பாடலின் சிறந்த மருதீச லிங்கம்
பக்திக் கடலின் திருவீச லிங்கம்

வெற்றி நல்கும் செயங்கொண்ட லிங்கம்
விண்ணவர் போற்றும் வளரொளி லிங்கம்
கற்றவர் ஏற்றும் ஐநூற்று லிங்கம்
கண்ணின் ஒளியாம் காளத்தி லிங்கம்

சுயம்பாய் வந்த தான்தோன்றி லிங்கம்
சொர்க்கம் நல்கும் தேசிக லிங்கம்
பயனாம் நயனாம் பசுபதி லிங்கம்
பாலைய நாட்டின் சண்டீஸ்வர லிங்கம்

புள்ளூர் வாழும் வைத்திய லிங்கம்
பொங்கும் மங்கள சங்கர லிங்கம்
உள்ளம் உறைந்த பூசலார் லிங்கம்
உயர்ந்த மயிலைக் கபாலி லிங்கம்

மார்க்கண்டன் காத்த அமுதீச லிங்கம்
மாதேவன் வீரசேகர லிங்கம்
ஆர்த்துப் போற்றும் காளீஸ்வர லிங்கம்
ஆவுடைக் கோவிலின் ஜோதிலிங்கம்

அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி உடனுறை ஸ்ரீ சென்னீஸ்வரர் திருக்கோயில், வாணத்திரையன் பட்டினம் கிராமம், உடையார் பாளையம்,



சென்னீஸ்வரர் ஆலயம்
சித்தன் அருள் – 1120 – அன்புடன் அகத்தியர் – அகத்தியர் வாக்கு – சென்னீஸ்வரர் ஆலயம்

வாக்குரைத்த ஸ்தலம் : அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி உடனுறை ஸ்ரீ சென்னீஸ்வரர் திருக்கோயில், வாணத்திரையன் பட்டினம் கிராமம், உடையார் பாளையம், ஜெயம் கொண்டான் வட்டம், அரியலூர் மாவட்டம்.

“”உலகமெல்லாம் ஆளுகின்ற ஈசா!!! போற்றி!!!! ஈசா!! போற்றி!!! உந்தனை பணிந்து வாக்குகள் செப்புகின்றேன் அகத்தியன்!!

இவையென்றும் கூறாத அளவிற்கு, அப்பனே!! இன்னும் பல முன்னேற்றங்கள் உண்டு திருத்தலங்களை யாங்கள் வடிவமைப்போம்  இனிமேலும்!!

ஏனென்றால் மக்களைப் பாதுகாக்க வேண்டும்.!!

வேண்டும்!! இதனை பல ,பல வழிகளிலும்!!!

இத்திருத்தலமும் சிறப்பு வாய்ந்தது தான்!!! வெற்றிக்கான திருத்தலம் என்பேன்!!!

எதையென்றும் பின் பின் வரும் காலங்களிலெல்லாம் இன்னும் சில திருத்தலங்கள் மறைந்து போயிற்று!!! மறைந்து போயிற்று!!!

இதன் (இவ்வாலயத்தில்) சிறப்பு என்னவென்று செப்புகிறேன்!!

இதைதன் பின் ராஜ ராஜ சோழன்…இதையன்றி ஆண்டுவந்தான் இத்தேசத்தை….. ஆண்டு வந்த பொழுது ஆனாலும் எளிய நடையில் தற்பொழுது ஓய்வு இருக்கும்  நேரமெல்லாம் ஈசன் அருளை பலமாக பெற்று  சில சுவடிகளை பின் எழுதி வைத்திருந்தான்.சில மர்மமான விஷயங்களைக்கூட….

இதையன்றி கூற கணிப்பதற்கு.. பின் தோல்வியை வெற்றியை இவையன்றி கூற சில விஷயங்கள் இவ்வுலகத்தில் அழிந்து போகும் என்று கூட இதனால் எதையென்று கூறாமலே எழுதி வைத்துவிட்டு சென்றான் சில சுவடிகளில் அழகாகவே!!!!

இதனால் மர்மம் நிறைந்தது நிறைந்தது இன்னும் பல வழிபாட்டுத் தலங்களிலும் உண்டு. உண்டு பின் நன்கறிய இதனையும் அறிந்து அறிந்து பின் மேற்சொன்ன கடைசி காலங்களில் கூட அதை அழகாக ஓர் இதையன்றி கூற அறிவித்த நிலையில் இங்கே(இவ்வாலயத்தில்) புதைத்துவிட்டு சென்றான். இன்னும் சுவடிகள் எதையென்று கூறும் பொழுது இங்கேயே புதைக்கப்பட்டுள்ளது.!!!

இதையன்றி கூற ஆனாலும் இவற்றின் தன்மைகளை ஆனாலும் அறிந்தான் இதையன்றி  கூற ராஜேந்திரன்!!
 (ராஜ ராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழன்) .

இதை, இதனை நலமாக!! நலமாக!! ஆனாலும் இதை தவிர தன் பரம்பரையில் இருக்கும் எதையன்றி கூற அவன் தான் இதனையும் எடுக்க
(சோழ வாரிசுகள் மட்டும்) வேண்டுமென்று கூட ..

இதனையன்றி வேறு யாராவது பின் எடுத்து விட்டால் பின் நாகம் தீண்டிவிடும்..(நாகத்தால் தண்டிக்கபட வேண்டும்) என்று கூட ஈசனிடம் வரம் கேட்டு விட்டான் ராஜராஜ சோழன்.

இதையன்றி கூற அவ் நாகத்திற்கும் இன்னும் சாவு நேரம் வரவில்லை
( இன்று வரை உயிருடன் சுவடிகளை பாதுகாத்து வருகின்றது).

அழகாக இட்ட கட்டளை அதுபோல் காத்துக் கொண்டிருக்கின்றது ஆனாலும் இதை அறிந்து பின் மாய்ந்தான்.
(ராஜ ராஜ சோழன்) 
பின் ஆனாலும் இவையன்றி கூற ராஜேந்திரனும் அழகாக பின் இறைவனிடத்திலே… தஞ்சம் புகுந்து இதையன்றி கூற…. இவ்வுலகத்தை எப்படி ஆட்சி செய்வது?? என்பதை கூட தெரியாமல் போய் விட்டது.

ஆனாலும் இதன் சூட்சமங்கள் எண்ணி, எண்ணி ,எண்ணி, எண்ணி, இதனையும் அறிந்து அறிந்து உண்மைகள் தெளிய,தெளிய !பல திருத்தலங்களுக்கு சென்றான்.

ஓர் நாள் கனவிலே பின் நன்கறிந்து ராஜராஜ சோழன் இதையன்றி கூற பின் ராஜேந்திரன் சொப்பனத்தில் வந்து இவையன்றி கூற பின் .. இச் சுவடிகள் ஓரிடத்தில் உந்தனுக்கு ஒன்றை மட்டும் வைத்திருக்கின்றேன்.

அச் சுவடியில் மாணிக்கம் காணப்படும்!! அச் சுவடியை  எடுத்துக்கொண்டால் .. அதில்!!  இவ்வுலகத்தில் எப்படி எல்லாம் ஆளலாம்? என்று கூட தெரியும்!! அதை மட்டும் எடுத்துக் கொள் என்று கூட சொப்பனத்தில் வந்து சொல்லிவிட்டான் ராஜராஜ சோழன்.

இதையன்றி கூற ஆனாலும் பின் மகிழ்ந்தான் ராஜேந்திரன். இதையன்றி கூற…

அதனால் அதை எடுப்பதற்கோ…!!??  பல வழிகளில் நாகங்கள் விடவில்லை. ஆனாலும் இதையன்றி… தயங்கினான்!!தயங்கினான்!! ராஜேந்திரன்.

இதனையன்றி பல பல சோழர்களையும் அழைத்து வந்து ஆனாலும் நாகங்கள் விடவில்லை!! அனைவரையும் கொன்று விட்டது…

நல் முறையாக இதனையுமென்று ஆராய்ந்து ஆராய்ந்து பார்த்ததில் மீண்டும் மனக் கவலை அடைந்தான் ராஜேந்திரன்.

இதையன்றி கூற அறியாத அறியாது மீண்டும் மீண்டும் ஆனாலும்  சொப்பனத்தில் வரவில்லை. வரவில்லை ராஜராஜ சோழனும்.

மீண்டும் தவங்கள் புரிந்து பல ஆலயங்களுக்குச் சென்று சென்று சென்று ஈசனை வழிபட்ட பிறகு மீண்டும் எதையன்றி கூற.. ராஜராஜசோழன் கனவில் வந்தான்.

ஆனாலும் இதற்கு பல வழிகள் உண்டு உண்டு என்பதற்கிணங்க பின்,பின் இதனையென்றும்… அதற்குள்ளேயே பல விஷயங்கள் நடந்து விட்டது.

ஆனாலும் மேற்கொண்டான்!! மேற்கொண்டான் !! இதையன்றி கூறும் பொழுதும் கூட….

கடைசியில் என்னிடத்திலே (அகத்தியரிடம்) 
வந்தான்.

இதையென்று அறியாமல், அறியாமல், இவையன்றி கூற அவந்தனுக்கும் யாங்கள் வழிகள் காண்பித்தோம்.

காண்பித்தோம்!! இப்படி செய்தாலே …நன்று!!! என்று!!!

இதையன்றி கூற ஆனாலும் வந்தான் சொப்பனத்தில் ராஜராஜ சோழன். இதையன்றி அறிந்து பின் நீயே!!!  இங்கு சில நாட்களும் தவம் செய்தால்.. உன் நிலைமைகள் அவ் சர்ப்பங்களுக்கு(நாகம்) தெரிந்துவிடும்.

தானாகவே அதை(சுவடியை) எதையன்றி கூற நீ!!! எடுக்காமலே.. அவ் சர்ப்பம் உந்தனுக்கு என்ன வந்து சொப்பனத்தில் உரைத்தானோ!!! அச்சுவடி உந்தனுக்கு கிடைக்குமென்று சொல்லிவிட்டேன் யானே!!!

அதனால் இவையன்றி கூற இங்கே தவம் செய்தான் ராஜேந்திரன். இதையன்றி கூற பல ஆண்டுகளுக்கு!!!

பல ஆண்டுகளுக்கு அதனால் மிகுந்த செல்வாக்குடைய ஒரு இதையன்றி கூற சர்ப்பமே!!… அவ் மாணிக்கத்துடன் நல் விதமாகவே பின் எடுத்து வந்து கொடுத்துவிட்டது ராஜேந்திரனிடம்.

அதில் அச்சுவடியில் பல வெற்றி ரகசியங்கள் வெற்றி ரகசியங்கள் எழுதப்பட்டிருந்தன. இதனை இதனை சரியாக கவனித்துக் கொண்டு பல வழிகளிலும், பலவழியிலும் வென்றான் ராஜேந்திரன்..இதையன்றிகூற….

அதனால் இதிலும்கூட ராஜராஜ சோழன் இவையன்றி கூட இப்படி செய்தால்!! இப்படி திருத்தலங்களை பின் கட்டினால் இவையன்றி கூற பின் சிறப்பாக வாழலாம் என்று கூட ஆனாலும் அதற்கு கூட பன்மடங்கு பல வழிகளிலும் திருத்தலத்தில் பல பல விஷயங்களை இட வேண்டும் என்பதெல்லாம் அச் சுவடியில் நிலைத்துவிட்டது… இப்பொழுதுகூட …

அத் திருத்தலம் கங்கை கொண்ட சோழபுரம்!!!! என்றே…

இவையன்றி கூற அங்கேயே வைத்து விட்டான் பின் ராஜேந்திரன்.

இதனையென்று கூற.. அங்கும் அத்தலம் சிறப்பு வாய்ந்தது என்பேன்.

அச் சுவடியும் இப்பொழுதும் கூட ஒளிவட்டமாகவே மாணிக்கம் போல் காட்சியளிக்கும் என்பேன்.

அறிவதற்குள் இதனை பயன்படுத்தி ஆனாலும் கட்டடங்கள் கட்டினான் அதி விரைவிலே!!!

பல திருத்தலங்களும் எதற்காக ?எவையென்று கூற !!!ஆனாலும் அதில் “ஒன்று” உங்களுக்கு குறிப்பிடப் போகிறேன்.

இதையன்றி பின் பல கஷ்டங்கள் அவமானங்கள் பட்டு பட்டு இங்கு வந்தவனுக்கு இங்கே வந்தால் சனீஸ்வரன் விலக்கம்( சனி விலகல்) அளித்து விடுவான். இதுதான் இத் தன்மையின்(ஸ்தல மகிமை) சிறப்பு!!!. ஆனாலும் யாரும் அறிந்திருக்கவில்லை என்பதுதான் கருத்து..

இவையன்றி கூற இப்படித்தான் முதலில் எழுதப்பட்டது இப்படித்தான் முதலில் எழுதப்பட்டு இருந்தது ..

இவை ஆனாலும் சனீஸ்வரன் பின் இதையன்றி  கூற பிடித்துக்கொண்டால் இதனைமென்றறிவதற்கு ஆனாலும் சில கஷ்டங்கள் தோன்றித் தோன்றி வெற்றிநடை போடுவதில்லை இதனால் இவையன்றி கூற….

இதனையும் ஓர் மண்டலம் இவந்தனுக்கே பின் எவையென்று கூற சனியவனே பின் பின் வந்து பின் அழகாகவே இவந்தனை தரிசித்து பார்த்தாலே
( 48 நாட்கள் ஒரு மண்டலம் சென்னீஸ்வரர் தரிசனம்)  பின் சனியவன் போய்விடுவான். கஷ்டங்கள் சடுதியாக (விரைவாக) நீங்கிவிடும். என்பதே முதல் கருத்து.

இதை அப்படியே செய்தான் பின் ராஜேந்திரன்!!

 (சுவடியில் முதலில் எழுதப்பட்டு இருந்த விஷயம்)….

 இவையன்றி கூற கஷ்டங்களும் கலைந்துவிட்டது அனைத்தும் ஏற்பாடு செய்தான் .உடனே…

இதையன்றி கூற ஆனாலும் இவைதன் உணர்வதற்கு இத் தலத்தில் ராகுவும் கேதுவும் சிறப்பான இடத்தை பிடித்துள்ளனர்.

இதனால் இங்கு எதையன்றி கூற வணங்கி கொண்டே வருபவர்களுக்கு கூட திடீரென்று மாற்றம் நிச்சயம் ஏற்படும் என்பேன் .

சர்ப்பமும்
( ராகு கேது தோஷம்)
 பின் எதையன்றி கூற… அடியோடு அழிந்து விடும் இது உண்மை.

இவையன்றி கூற இங்கே இதையன்றி பின் நன்றாகவே இதைப் பயன்படுத்தி பின் கங்கை கொண்ட சோழபுரம் நல்விதமாகவே அங்கே சென்றால் அங்கேயும் தீர்க்கம்!!!! 
(முதலில் சென்னீஸ்வரர் வழிபட்டு பின் கங்கை கொண்ட சோழபுரம் தரிசனம்) 
தீர்க்கம் என்பேன். நிச்சயம் வெற்றிகள் பிடித்துக்கொள்ளும் இதுதான் உண்மை.

ஆனாலும் பல மனிதர்களுக்கு இதுவும் தெரியும் என்பேன் ஆனாலும் சொல்வதில்லை!!!!

இதையன்றி கூறிய அளவிற்கு மேலாகவே புண்ணியங்கள் அதனால் புண்ணியங்கள் சேரவில்லை என்றால் இன்னொரு விஷயத்தையும் சுவடியில் எழுதி வைத்திருந்தான் ராஜராஜசோழன் இதையன்றி கூற….

புண்ணியங்கள் பின் சேர்த்துக் கொண்டே இருந்தாலே… இவ்வாலயம் தானாகவே!! அழைத்துக் கொள்ளும். அழைத்துக் கொண்டு வந்துவிடும்.

இதனால் இவையென்றும் அதில் அச்சுவடியில் எழுதப்பட்டிருந்தது.

இதையன்றி அறிவதற்குள் அதனால் சில சில எவை என்று கூட புண்ணியங்கள் ஆனாலும் செய்ய முடியவில்லையே!!! இறைவா !!!என்று தேடி வந்து விட்டாலும் அவந்தனை புண்ணியப் பாதையில் அழைத்துச் செல்வான் இவ் இறைவன்!!
(சென்னீஸ்வரர்).
 இவ் இறைவன்!!! சொல்லி விட்டேன் யான்.!!

இதன்போலே!! புண்ணியங்கள் செய்து செய்து பல வெற்றிகளை குவித்து விடலாம் என்பேன்.

ஆனாலும் அனைத்து ரகசியங்களும் அதிலே!! அடங்கியுள்ளது!!!

அதனையும் யான் செப்பிவிட்டால்?!! மனிதர்கள் தவறான நோக்கத்தையே!!! பயன்படுத்துவார்கள்.

சில, சில வினைகளை அறுப்பதற்கு பின் சொல்லிவிட்டேன்.!!

ஆனாலும் இவையென்று கூட… (கோயில்) அடியில் கூட…. பல சர்ப்பங்கள்!!!! இவையன்றி கூற காத்தும் நிற்கின்றது…

அச் சுவடிகள்!!! யாரும் அண்டவும் விடவும் முடியாது சொல்லிவிட்டேன்!!!

பல ரகசியங்கள்!!! அவ் ரகசியங்களை தெரிந்து கொண்டால் ஆனாலும் இவைதன் உணர, உணர, இனிமேலும் எதையன்றி கூற கூற ஆனாலும் திருத்தலங்களை அடிமட்டம் ஆக்குவார்கள் மனிதர்கள்.

ஏனென்றால் இவையன்றி கூற..ஓர் மனிதனுக்கே!!(மனிதர்களுக்கு மட்டும்)
 இவ் விஷயங்கள் ரகசியங்கள் தெரியும்.

ஏனென்றால் எதையன்றி கூற அவ் ஆலயத்திற்கு கீழே!!! பல ரகசியங்கள் பல சுவடிகள் ஒவ்வொரு இடத்திலும் ஒளிந்து விட்டது.

இதனை எப்படி!?? எடுத்து வந்து விட்டு வந்து விட்டாலே கைக்கு வந்து விட்டாலே அவன் செல்வாக்கு உடையவன்.. இவ்வுலகத்தை ஆளலாம் நிச்சயம்.

ஆனாலும் யாங்கள்(சித்தர்கள்) தடுப்போம் யாங்கள் நிச்சயமாய் மனிதர்களுக்கு இவை கொண்டு செல்ல விடமாட்டோம்.

பல திருத்தலங்களும் இது போலவே மாறி மாறி மாறி மாறி அமைந்துள்ளது.

இதனால் எதையன்றி கூற எவையன்றி இன்னும் இன்னுமின்னும் காணக்கிடைக்காத பொக்கிஷங்களும் இதனருகே இங்கிருந்து ஒரு வட்டத்திற்குள்ளவே!!! பின் இவையன்றி கூற இருநூறு!! (அடி வட்டத்திற்குள்) பின் இதையன்றி கூற அமைந்துள்ளது.

அதனை நிச்சயம் எங்கள் அருள் இல்லாமல் எடுக்க முடியாது!!!

ஆனாலும் தற்போது நிலைமைகள் தானாகவே மனிதர்கள் எழுதிக் கொண்டிருக்கின்றார்கள் பொய்யாகவே
(போலியான ஓலைச்சுவடிகள்) 
இதுதான் பலிப்பதில்லை வாக்குகள் சொல்லிவிட்டேன்.

நலமாக புண்ணியங்கள்!!!

இதையன்றி கூற இதனால் ஒன்றை சொல்கின்றேன்.

“”ராஜராஜ சோழன் அமைத்த திருத்தலங்கள் எல்லாம் புண்ணியம் செய்தவர்களே வரமுடியும் என்பேன்.

இதையன்றி கூற அவன் சரித்திரத்தையும் இன்னும் இன்னும் ஆண்டுகள் சொல்லச் சொல்ல……தீராது

ஆனாலும் ராஜேந்திரன் ஒரு தவறு செய்து விட்டான் இதையன்றி கூற …அச் சுவடியை பணத்திற்காக கொடுத்துவிட்டான். இதனால் அவந்தன் பரம்பரையையும் பின் அழிந்துவிட்டது அடியோடு!!!…….

ஆனாலும் இதையன்றி கூற ஆனாலும் உண்டு!! உண்டு!! ஆனாலும் அதையும் கூட பின் அவந்தனும் பின் பெற்றுச் சென்றானே… சில ரகசியங்கள் தெரிந்து கொண்ட பிறகும் ஆனாலும் அவனும் மாய்ந்து விட்டான் .

பின் சர்ப்பம் அழகாக அச்சுவடி அங்கே(கங்கை கொண்ட சோழபுரத்தில்) கொண்டு திரும்பவும் சேர்த்துவிட்டது.

இதையன்றி கூற அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன்!! ஓவ்வொரு இதையன்றி கூற இங்கும்  ஆளும் திறன் பெற்றவர்கள் எதையென்று கூற அறியாமலே ஒவ்வொரு லிங்க வடிவமான ஈசனின் இடத்தில் அடியில் சுவடிகள் கிடந்துள்ளது. அதன்படியே தான் நடந்து கொண்டிருக்கின்றது அதற்கு ஒளி வடிவம் உண்டு என்பதற்கிணங்க ஈசனே!!! இதையன்றி கூற..

ஆனாலும் உண்டு!! உண்டு!! இன்னும் பன்மடங்கு வெற்றிகள்!!!. இத் திருத்தலத்தை வந்து நாடினால் அப்பனே….

ஏனென்றால் அப்பனே தர்மம் மறைந்துவிட்டது ஏனென்றால் அநியாயம்!! அக்கிரமங்கள்!!! மிகுந்து விட்டது. இதையன்றி கூற அதனால் கலியுகத்தில் அப்பனே சில திருத்தலங்களை நாடினாலே போதுமானது!!

“”வெற்றிகள் குவியும்!!!!

ஆனாலும் அவ் வெற்றியை சரியான முறையில் பயன்படுத்தி கொண்டால்தான் நலமாகும் என்று விதி இருந்தால் மட்டுமே இத்திருத்தலத்திற்கும் வரமுடியும் என்று சொல்லிவிட்டேன்.

ஆனாலும் இதையன்றி கூற வந்து வணங்கி விட்டால் பணம் ,,பணம்,, என்று மாயையை நோக்கி கொண்டிருக்கிறார்களே!! அவர்களுக்கு நிச்சயம் குவியும்!!! என்று சொல்லிவிட்டேன்.

ஆனாலும் அதைதன்(பணத்தை) நல்நோக்கத்திற்காகவே பயன்படுத்த வேண்டும்.

பின் ராஜேந்திரன் செய்தானே !!!அவை போன்று செய்துவிட்டால்!!! இன்னும் பேராசை கொண்டு பின் அவந்தனும் அடியோடு கூட அழிந்து விடுவான் சொல்லிவிட்டேன்.

ஆனாலும் நிச்சயமாய் வெற்றிகள் உண்டு!!!

நல் விதமாகவே புண்ணியம் செய்தவர்க்கே உண்டு திறமைகள் என்பேன்.

ஏனென்றால் ஒன்றை மட்டும் சொல்கிறேன்!!!

ராஜராஜ சோழன் அமைத்த திருத்தலங்கள் பல உள்ளது.

ஆனாலும் அவற்றையெல்லாம் ஈசனிடம் (வரமாக) கேட்டுக்கொண்டான்.

யார் ??யார்?? எவையென்று கூற புண்ணியம் செய்தவர்களே!!!

நான்!! எதையென்று உருவாக்கிய தலத்திற்கு வரவேண்டும்!! அவர்கள் வெற்றி நடை போட வேண்டும்!!

இதையன்றி கூற இன்னும் பல ஆலயங்கள் எவ்வாறு என்று சீரமைக்க வேண்டும் யான் சென்று விட்டாலும் இன்னும் எதையன்றி கூற என்னுடைய திருத்தலங்களை நல் விதமாகவே நீதி!! நேர்மையுடன்!!! செய்ய வேண்டும் என்று கூட ஈசனிடமே  எதையென்று கூற சத்தியத்தை வாங்கிக் கொண்டான்.

அதனாலே ஈசனும் கொடுத்துவிட்டான்.

அதனால் இன்னும் பல திருத்தலங்கள் பின் வடியமைக்கவே  முடியவில்லை என்பேன்.

இதனால் நன்மைகள்!! வெற்றிகள்!! நிச்சயம் உண்டு!!…. இவையன்றி கூற…

இத் திருத்தலமே “”பணம்”” திருத்தலம் என்பதுதான் யான்  சொல்லிவிட்டேன். கலியுகத்தில்.

இவையன்றி கூற அப்பனே இன்னும் பன்மடங்கு எதை எதை என்று கூற இன்னும் உள்ள திருத்தலங்கள் பற்றியும் சொல்கின்றேன் விவரமாகவே!!!

இவையன்றி கூற இன்னும் திருத்தலம் இதனையும் சரிசெய்ய வருவான் என்பேன். எவை!! எவை!! என்று கூற….

நல் விதமாகவே ஆக்குவார்கள் இதையன்றி கூற இன்னும் பல விஷயங்கள் அடங்கியுள்ளது..

சொல்லிவிட்டேன் நல்படியாக இதனால் தான் இதிலும் சூட்சுமங்கள் அடங்கியுள்ளது அதனுள்ளே நன்றாகவே அனைத்தும் ஏற்பாடு செய்வேன். யானும் இங்கு( ஆலயத்திற்கு) வந்துவிட்டேன். கவலைகள் இல்லை

வரும் வைகாசி திங்களிலும் விரிவாக விவரிக்கின்றேன்!!

அனைவருக்கும் எம்முடைய ஆசிகள்!!!!

ஆலய முகவரி மற்றும் விபரங்கள்

ஸ்ரீ  பெரியநாயகி உடனுறை சென்னீஸ்வரர் ஆலயம். வாணதிரையன்பட்டணம் கிராமம் உடையார்பாளையம் வட்டம் ,ஜெயம் கொண்டான்.

அரியலூர் மாவட்டம் .

ஆலயம் இந்து அறநிலையத் துறையின் கீழ் உள்ளது. கோவில் புனரமைக்கும் பணி தொடங்க உள்ளது.

ஓம் நமச்சிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா. இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

கோயம்பேடு குறுங்காலீசுவரர் அல்லது குசலவபுரீசுவரர் என்றும், அம்மன் தர்மசம்வர்த்தினி அல்லது அறம் வளர்த்த நாயகி என்றும் அழைக்கப்படுகின்றனர்.

குறுங்காலீசுவரர் கோவில் (Kurungaleeswarar Temple) என்பது இந்தியாவின் சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்துக் கோவிலாகும். இக்கோவில் சுமார் 25,200 சதுரடி பரப்பளவில் அமைந்துள்ளது.[1] இடைக்காலச் சோழர் காலத்தைச் சேர்ந்த பெரிய குளத்தை உள்ளடக்கிய கோயில்.
சொற்பிறப்பியல்
தொகு
கோவில் அமைப்பு
தொகு
குறுங்காலீசுவரர் கோவில் தமிழ்நாட்டின் சென்னை நகரத்தில் உள்ள கோயம்பேடு அருகே அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்து கோவிலாகும். இந்த கோவில் கோயம்பேடு கூவம் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. மூன்று நிலைகளுடன் இராஜகோபுரம். கோவிலின் மூலவர் குறுங்காலீசுவரர் அல்லது குசலவபுரீசுவரர் என்றும், அம்மன் தர்மசம்வர்த்தினி அல்லது அறம் வளர்த்த நாயகி என்றும் அழைக்கப்படுகின்றனர்.[2] தல விருட்சம் (கோயிலின் தெய்வீக மரம்) ஒரு பலா மரம் .

அதிகார நந்தி, காலபைரவர், வீரபத்திரர், விநாயகர், பிரம்மன், சுப்பிரமணியர் ஆகிய தெய்வ சன்னதிகள் உள்ளன. மூலவர் விமானத்தின் கருவறையின் பின்புற கோட்டத்தில் தட்சிணாமூர்த்தி காட்சி தருவது சிறப்பு. வழக்கமாக இங்கு இலிங்கோத்பவர் சிலை அமைப்பது வழக்கம். மகாவிஷ்ணு மற்றும் துர்க்கை கருவறையின் மேற்குபுற கோட்டங்களில் உள்ளனர். திருச்சுற்றில் நடராசர் மற்றும் நாயன்மார்களுக்கான சன்னதிகள் உள்ளன. நவக்கிரக மண்டபத்தில் சூரியன் எழுகுதிரை பூட்டிய தேரில் மனைவியருடன் காட்சி தருகிறார்.

கோவில் முன் 16 கால் மண்டபம் உள்ளது. மண்டபத் தூண்களில் இராமாயணக் காட்சிகள் குறுஞ்சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. இம்மண்டபத்தின் தூண் ஒன்றில் சரபேசுவரரின் புடைப்புச் சிற்பம் உள்ளது. இவருக்கு ஞாயிறு தோறும் மாலை இராகு கால பூசை நடைபெறுவது கோவிலின் மற்றொரு சிறப்பு.[3]

கல்வெட்டுகள்
தொகு
தொன்மம் மற்றும் வரலாறு
தொகு
இராமரைப் பிரிந்த பிறகு சீதை கனத்த மனதுடன் இங்கு வந்த போது, இந்தக் கோவிலை வால்மீகி உருவாக்கியதாக நம்பப்படுகிறது. சிவனை வழிபட்டு வந்த சீதை இலவன் மற்றும் குசனைப் பெற்றெடுத்தாள். வால்மீகியின் ஆதரவால் இலவன், குசன் ஆகிய இருவரும் நன்கு வளர்ந்து வருகிறார்கள். ஒரு நாள் அயோத்தியில் இராமர் அஸ்வமேத வேள்வி நடத்தினார், வேள்வி முடிந்ததும் இராமர் அனுப்பிய குதிரை ஓடிவந்து, தற்போது கோயம்பேடு என்று அழைக்கப்படும் இந்த இடத்தை அடைந்தது. கோயம்பேடு முன்னாளில் கோசை என்று அழைக்கப்பட்டது.

குதிரையை கண்டுபிடித்து வேள்வி தொடங்கிய இடத்திற்கு கொண்டு வர வேண்டும். ஆனால் இராமரின் மைந்தர்களான இல்வனும் குசனும் குதிரையைப் பிடித்து வைத்து, இராமரின் படையை உறுதியாக எதிர்த்தனர். இராமர் படை தோற்றதால், இறுதியாக இலக்குஷ்மணனும் வந்து போரிட்டான். அவனும் லவ குசர்களிடம் தோற்றான்.

இறுதியாக, இராமர் போரில் களம் காண வந்தார். இலவ குசர்களும் இராமனை எதிர்க்கத் துணிந்தனர்.. நல்வாய்ப்பாக வால்மீகி முனிவர் இலவ குசர்கள் தங்கள் சொந்த தந்தையை எதிர்த்துப் போராடப் போவதை குழந்தைகளுக்கு உணர்த்தினார்.

இதற்குப் பிறகு இராமர் குடும்பம் ஒன்றுபட்டது, அன்றிலிருந்து, இராமரின் குடும்பம் மீண்டும் ஒன்றிணைவதற்கு சிவபெருமான் காரணமாக இருந்ததால், இந்த கோவில் குடும்ப ஒற்றுமைக்கான கோவில் என்று பெயர் பெற்றது.

இக்கோயில் 12ஆம் நூற்றாண்டு குலோத்துங்க சோழன் காலத்தைச் சேர்ந்தது.[4

திருவாலங்காடு, சிதம்பரம் - இறைவன் காளியுடன் நடனமாடியது.

*சிவபெருமான்  தாண்டவம் ஆடிய முக்கிய இடங்கள் என்ன தெரியுமா?"*
*சிவபெருமான் யோக நிலை மற்றும் தாண்டவ நிலை என இரண்டு நிலையில் காணப்படுகிறார்.*

*இதில் யோக நிலை பொருள் இல்லாத நிலை என்றும் தாண்டவ அல்லது லாஸ்ய நிலை பொருள் சார்ந்த நிலை என்று அழைக்கப்படுகிறது.*

*மதுரை - வரகுன பாண்டியனுக்கு காலமாறி (வலதுபாதம்) தூக்கி ஆடியது.*
 
*கீள்வேளூர் - அகத்தியருக்கு 10 கைகளுடன் நடராஜர் கால்மாறி (வலதுபாதம்) தூக்கி ஆடியது.*

*திருவாலங்காடு, சிதம்பரம் - இறைவன் காளியுடன் நடனமாடியது.*
 
*மயிலாடுதுறை - அம்பாள் மயில் வடிவம் கொண்டு ஈசன் முன்பு கௌரி தாண்டவம் ஆடினார்.*
 
*திருப்புத்தூர் - சிவன் லட்சுமிக்கு கௌரி நடனத்தை ஆடி காட்டியது.*
 
*திருவிற்கோலம் - காளி அம்மன் ஆலங்காடு பெருமானோடு தர்க்கித்து ரக்ஷா நடனம் ஆடி மகா தாண்டவம் ஆடியது.*
 
*திருவாவடுதுரை - இறைவன் வீர சிங்க ஆசனத்தில் சுந்தர நடனம் மகா தாண்டவம் ஆடியது.*
 
*திருக்கூடலையாற்றார் - பிரம்மனுக்கு நர்த்தனம் செய்து காட்டியது.*
 
*திருவதிகை - சம்பந்தருக்கு இறைவன் திருநடனம் ஆடிகாட்டியது - இறைவி பாட இறைவன் ஆடியது.*
 
*திருப்பனையூர் - ஊரின் புறந்தே சுந்தரமூர்த்திக்கு நடன காட்சி தந்தது.*

*திருவுசாத்தானம் - விஸ்வாமித்திரருக்கு நடன காட்சி தந்தது.*
 
*திருக்களர் - துர்வாச முனிவருக்கு பிரம்ம தாண்டவம் ஆடி காட்டியது.*
 
*திருவான்மியூர் - வான்மீகி முனிவர்க்கு இறைவன் பிரம்ம தாண்டவ நடன காக்ஷியும் கல்யாண காட்சியும் அருளியது...*

*சிவாய நம*

*இவை எல்லாம் நம்பெருமான் செயலன்றி யாமொன்றும் அறியேன் பராபரமே!*

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா. இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Wednesday, November 29, 2023

சக்கரத்தாழ்வார் பெருமாள் கையை அலங்கரிப்பவர்

சக்கரத்தாழ்வார் வழிபாடு பற்றிய பதிவுகள் 
திருமாலின் வலக்கையை அலங்கரிக்கும் சக்கர ஆயுதமே சக்கரத்தாழ்வார். இவர் திருமாலுக்கு இணையானவர் என்று வேதாந்த தேசிகர் கூறுகிறார். இவர் திருவாழியாழ்வான், சக்கரராஜன், நேமி, திகிரி, ரதாங்கம், சுதர்சன ஆழ்வார் என்றெல்லாம் பல பெயர்களால் அழைக்கப்படுபவர். 

திருமால் கோவில்களில் சக்கரத்தாழ்வாருக்குத் தனிச் சன்னதி உண்டு. இவர் பதினாறு, முப்பத்திரண்டு என்ற எண்ணிக்கைகளில் கைகளை உடையவர்.

பெரியாழ்வார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு’ என வாழ்த்திப் பாடியுள்ளார். திருமாலுக்கு இணையானவர் என்று எழுதிய சுவாமி தேசிகன், சுதர்சனாஷ்டகத்தில் சக்கரத்தாழ்வாரைப் பலவாறும் போற்றியுள்ளார்.

*சக்கரத்தாழ்வாரின் ஆயுதங்கள்*

சக்கரத்தாழ்வாரின் ஆயுதங்கள் பதினாறு. அதில் வலக்கையில் உள்ள ஆயுதங்கள் சக்கரம், மால், குந்தம், தண்டம், அங்குசம், சதாமுகாக்னி, மிஸ்கிரிசம், வேல் ஆகியவை. இடக்கையில் வைத்திருக்கும் ஆயுதங்கள் சங்கு, வாள், பாசம், கலப்பை, வஜ்ராயுதம், கதை, உலக்கை, திரிசூலம் ஆகியன.

*பெருமாள் கையை அலங்கரிப்பவர்*

சங்கு, சக்கர, கதாபாணியான பெருமாளின் கரங்களில் எப்போதும் வலக்கையிலேயே இடம் பெற்று இருப்பவர் சக்கரத்தாழ்வார். ஆனால் சில இடங்களில் மாறுபட்டும் அமைந்திருப்பது உண்டு. 

திருக்கோவிலூரில் மூலவர் இடக்கையில் காட்சி அளிக்கிறார் சக்கரத்தாழ்வார். அதே போல் அமைந்து பிரயோகிக்கும் நிலையில் காணப்படுவது பஞ்ச கிருஷ்ண திருத்தலங்களில் ஒன்றான திருக்கண்ணபுரத்தில்.

*நவகிரக தோஷம் நீங்க*

சிவன் கோயில்களில் மட்டுமே நவகிரக வழிபாடு உண்டு. அவ்வழிபாடுகளினால் பக்தர்கள் தங்கள் தோஷங்களை நீக்கிக்கொள்வார்கள். விஷ்ணு கோவில்களில் உள்ள சக்கரத்தாழ்வார் வழிபாடும் நவகிர தோஷங்களை நீக்கும் என்பது ஐதீகம். 

சக்கரத்தாழ்வார் சன்னதியில் நெய் தீபம் ஏற்றி, ஓம் நமோ பகவதே மஹா சுதர்சனாய நம’ என்ற மந்திரம் சொன்னால் நவகிரக தோஷங்கள் விரைவில் நீங்கிவிடும் என்பது நம்பிக்கை.

மேலும் திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கூடும் என்பதும் ஐதீகம். இந்த சுதர்சனருக்கு உகந்த நாள் வியாழன் மற்றும் சனிக்கிழமை. அன்று அவருக்கு சிவப்பு மலர்களால் மாலை சூட்டி வழிபட்டால் நினைத்த நல்ல காரியங்களில் வெற்றி கிட்டும் என்றும் நம்பிக்கை உள்ளது.

*சக்கரத்தாழ்வார் எதிரிக்கு எதிரி*

சிசுபாலனின் தாய்க்கு அளித்த வாக்கின்படி, சிசுபாலனின் தவறை 100 முறை மன்னித்துவிட்டார் கிருஷ்ணர். அவனது 101 வது தவறை கண்டு கொதித்த சுதர்சன சக்கரம் சீறி எழுந்து பெருமாளின் எதிரியான சிசுபாலனை அழித்தது.

மகாபாரத யுத்தத்தின் போது ஜயத்ரதனை வெல்ல இயலாத நிலையில் பெருமாளின் சக்கரம் வானில் சுழன்று எழுந்து சூரியனை மறைத்தது. அதனால் குருஷேத்திரமே இருண்டது. இதனால் ஜயத்ரதன் ஒழிக்கப்பட்டு, மகாபாரத வெற்றிக்கு வித்திடப்பட்டது.

கஜேந்திர மோட்சம் என்ற புராண கதையில், யானையிண் காலை பிடித்துக் கொண்ட மகேந்திரன் என்ற முதலையை சீவி தள்ளி, கஜேந்திரனை காப்பாற்றியது சுதர்சன சக்கரமே.

பக்தர்களுக்கு துன்பம் ஏற்பட்டால், பெருமாளுக்கே இடையூறு ஏற்பட்டாற்போல் விரைந்து காப்பவர் சக்கரத்தாழ்வார் என இவை நிரூபிக்கின்றன.

*பக்தர்களுக்கு சந்தோஷம் தருபவர்*

பக்தர்களுக்கு வரும் பகையை அழித்து, உள்ளார்ந்த பயத்தை போக்கிக் காப்பவர் சுதர்சனர். மனிதனின் நிம்மதியை பாதிப்பவை கடன், வியாதி, எதிரி தரும் துன்பம் இவற்றை முற்றிலும் நீக்கி சந்தோஷத்தை அளிப்பவர். இவர் கல்வியில் தடையை நீக்கி இடைவிடாது தொடரும் கல்வி யோகத்தை தருபவர் என்பது நம்பிக்கை. 

சக்கரத்தாழ்வாரை சனிக்கிழமைகளில் தரிசிக்க வாழ்வு வளம் கூடும்.

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது இரா .இளங்கோவன் நெல்லிக்குப்பம்.

இத்தல சிவலிங்கத்தின் மீது பசு வந்து அணைந்து பால் சொரிந்ததால் இத்தலம்,* பசுவும் - தேவர்களும் வழிபட்ட சிவாலயம்:”*



”பசுவும் - தேவர்களும் வழிபட்ட சிவாலயம்:”*
*தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள ஓட்டப்பிடாரத்தை அடுத்துள்ளது பசுவந்தனை.*

*இந்த ஊரில் கயிலாசநாத சுவாமி கோவில் இருக்கிறது.*

*இத்தல இறைவனின் பெயர் கயிலாசநாதர்.*

*இறைவியின் பெயர் ஆனந்தவல்லி அம்மன்.*

*ஆலய தல விருட்சம் வில்வ மரம்.*

*இத்தல சிவலிங்கத்தின் மீது பசு வந்து அணைந்து பால் சொரிந்ததால் இத்தலம்,* 

*’பசுவந்தனை’*

*என்று அழைக்கப்படுகிறது.*

*கயிற்றாறு (தற்போது கயத்தாறு என்று அழைக்கப்படுகிறது) என்னும் பகுதியை ஆண்டு வந்த மன்னன் ஆநிரைகளை (பசுக்களை) போற்றி வந்தான்.*

*பசுக்கூட்டங்கள் மன்னனின் ஆட்சிக்கு உட்பட்ட ஒரு பகுதியில் தினமும் புல் மேய்வது வழக்கம்.*

*அந்த பசுக் கூட்டத்தில் இருந்த ஒரு பசு மட்டும் அங்குள்ள ஒரு குளத்தில் நீராடி வில்வ மரத்தடியில் இருந்த ஒரு சிவலிங்கத்தின் மீது பாலைச் சொரிந்து விட்டு பின்னர் தனது கூட்டத்தில் புகுந்து சேர்ந்து விடும்.*

*அந்த பசு மாட்டில் மட்டும் பால் குறைவதை அறிந்த மன்னன் தனது காவலர்களை அனுப்பி,*

*‘உண்மை என்ன?’*

*என்று கண்டறிந்து வருமாறு ஆணையிட்டான்.*

*மன்னனின் உத்தரவுக்கு கட்டுப்பட்ட காவலர்கள் அந்த மாட்டை கண்காணிக்கத் தொடங்கினர்.*

*அப்போது தான் பசு தினமும் சிவலிங்கத்தின் மீது பால் சொரிந்து வந்தது தெரியவந்தது.*

*இறையுணர்வு மிக்க தனது பசு பால் சொரிந்த இடத்தை சென்றடைந்த மன்னன் அங்கிருந்த சிவலிங்கத்தை கண்டு பணிந்து பயபக்தியுடன் வணங்கினான்.*

*இரவு படையுடன் அங்கு தங்கியிருந்த மன்னன் வானவர்கள் வந்து அந்த சிவலிங்கத்தை அர்ச்சித்து வழிபாடு செய்வதைக்கண்டு மெய் உருகிப் போனான்.*

*பசுபால் சொரிந்து வானவர்கள் வழிபட்ட சிவலிங்கத்திற்கு அந்த இடத்திலேயே ஆலயம் ஒன்று எழுப்ப முனைந்தான்.*

*அதன்படி அந்த இடத்தில் ஆனந்தவல்லி சமேத கயிலாசநாதருக்கு சிறியதாக ஒரு ஆலயத்தை அமைத்தான்.*

*அதனை சுற்றி முறைப்படி வீதிகள் அமைத்து நகரமாக்கினான்.*

*பசுவந்து நீராடிய குளமாதலால்,*

*’சிவ தீர்த்தம்’*

*என்றும்,*

*‘கோசிருங்கவாவி’*

*என்றும் அழைக்கப்படுகிறது.*

*இத்திருக்கோவிலில் சுவாமிக்கும் - அம்மனுக்கும் நடுவே பாலமுருகன் சன்னிதி அமையப் பெற்றுள்ளது.*

*இதனால் இந்த ஆலயம்,*

*’சோமஸ்கந்தர் தலம்’*

*என்றும் போற்றப்படுகிறது.*

*இந்த ஆலயத்தில் சஷ்டியப்த பூர்த்தி (60 வயது கடந்தவர்களுக்கும்,)*

*சதாபிஷேகம் (80 வயது கடந்தவர்களுக்கும்…)*

*திருமணம் நடைபெறுவது மிகச்சிறப்பு வாய்ந்ததாகும்.*

*இக்கோவிலில் சுவாமி சுயம்புலிங்கமாக வீற்றிருக்கிறார்.*

*இத்தல இறைவனுக்கு செய்யப்படும் அபிஷேகப் பாலை வாங்கி சாப்பிட்டால் தீராத நோய்கள் கூட தீரும் என்று பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.*

*இந்த ஆலயத்தில்,*

*’சித்திரைப் பெருவிழா, வைகாசி விசாகம், ஆடிப்பூர வளைகாப்பு விழா, நவராத்திரி விழா, கந்த சஷ்டி திருவிழா, திருவாதிரை, மகா சிவராத்திரி விழா’*

*ஆகியவை முக்கிய திருவிழாக்களாகும்.*

*இங்கு நாள்தோறும் ஐந்து கால பூஜைகள் நடைபெற்று வருகிறது…*

*அமைவிடம் :*

*கோவில்பட்டியில் இருந்து 23 கிலோமீட்டர் தொலைவிலும்,*

*தூத்துக்குடியில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவிலும்,*

*திருநெல்வேலியில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவிலும் இக்கோவில் அமைந்துள்ளது.!*

*”ஓம் ஶ்ரீ பசுவந்தனையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் கயிலாசநாதர் திருவடிகளை போற்றி பண்பாடுவோமாக..!!”*

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா. இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

ஸ்வாமி ஐயப்பனின் திருவாபரணப் பெட்டிகளில் இருப்பவை என்னென்ன*

*ஸ்வாமி சரணம்*

*ஸ்வாமி ஐயப்பனின் திருவாபரணப் பெட்டிகளில் இருப்பவை என்னென்ன*
சைலபதியில்
நடக்கும் அதிசயம் என்னவென்றால் திருவாபரணம் எங்கு சென்றாலும் கருடன் அதன் மேலேயே பறந்து வருவதுதான். 

சந்நிதானத்தைப் பெட்டி அடைந்ததும் கருடன் சந்நிதானத்தை மூன்றுமுறை வலம் வந்துப் பின் பறந்து மறையும். 

அப்படி என்னதான் இருக்கிறது அந்தத் திருவாபரணப் பெட்டிகளில்...

திருவாபரணம்

சபரிமலையில் மகிமை மிகுந்த தரிசனமாக விளங்குவது மகரஜோதி தரிசனம். 

ஐயப்பன் ஜோதி ஸ்வரூபனாகக் காட்சி கொடுக்கும் அருள் தரிசனம். 

மகர சங்கராந்தி அன்று ஐயப்பனுக்கு திருவாபரணங்களை அணிவித்து தீப ஆரத்தி காட்டியதும் ஐயப்பனின் மகர ஜோதி தரிசனத்தை பொன்னம்பல மேட்டில் நாம் காண முடியும். 

இந்தத் திருவாபரணப் பெட்டி பந்தள அரண்மனையிலிருந்து சபரிமலை வரை பயணித்து வந்து சரியாக மகரஜோதி தினத்தன்று சபரிமலை வந்து சேரும். 

இந்த நாளில் ஐயப்பன் திருவாபரணங்கள் அணிந்து பூரண சொரூபனாகக் காட்சி கொடுப்பான். 

இந்தக் கண்கொள்ளாக் காட்சியைக் காண பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்வார்கள். 

ஐயனின் இந்தப் பூரண சொரூப தரிசனம் என்ன? 

திருவாபரணப் பெட்டிகளில் என்ன இருக்கும் என்று நிறைய சாமிமார்கள் கேள்வியெழுப்பியுள்ளனர். 

திருவாபரணக் கோலம் - மாதிரி
"மகர சங்கராந்தி தினத்தன்று பந்தள ராஜனின் காணிக்கையான திருவாபரணம் பெட்டிகளில் சபரிமலைக்கு எடுத்துவரப்பட்டு ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும். 

திருவாபரணம் 3 பெட்டிகளில் எடுத்துவரப்படும். பக்தர்கள் அதைக் காணும்போதே மெய்சிலிர்ப்பதைக் காண முடியும். இந்தத் திருவாபரணப் பெட்டியில் என்னதான் இருக்கிறது என்று பலரும் கேட்பதைக் காணமுடியும். 

சிலர் மணிகண்டன் பூமியில் வாழ்ந்தபோது அணிந்துகொண்டிருந்த ஆபரணங்கள் இது என்று சொல்லக் கேள்விப்பட்டிருப்போம். 

ஆனால், அது ஒரு ஏற்புடைய கருத்தாக இல்லை. 

ஏன் என்பதற்கான பதிலாகத் திருவாபரணப் பெட்டியில் என்னென்ன உள்ளன என்பதை அறிந்துகொண்டால் போதுமானது.

திருவாபரணப்பெட்டிகள் மொத்தம் மூன்று. 

ஒன்று ஆபரணப்பெட்டி, வெள்ளிப்பெட்டி, கொடிப்பெட்டி. இதில் ஆபரணப்பெட்டியில்தான் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் ஆபரணங்கள் இருக்கும்.

திருவாபரணம்
1. திருமுக மண்டலம் எனப்படும் முக கவசம்.

2. பூரணா புஷ்கலா தேவியருடைய உருவங்கள்.

3. பெரிய வாள் மற்றும் சிறிய வாள்.

4 இரண்டு யானை உருவங்கள்.

5. கடுவா எனப்படும் புலி உருவம்.

6. வில்வமாலை.

7. சரப்பொளி மாலை.

8. நவரத்தின மாலை.

9. வெள்ளிகட்டிய வலம்புரிச் சங்கு.

இவைபோன்ற விஷயங்கள் இந்த ஆபரணப் பெட்டியில் இருக்கும்.

அடுத்த பெட்டியாக இருக்கக்கூடிய வெள்ளிப் பெட்டியில் தங்கக்குடம் மற்றும் பூஜா பாத்திரங்கள் இருக்கும். 

கொடிப்பெட்டியில் யானைப் பட்டம், தலப்பாற மலை முதலிய மலையின் கொடிகள் ஆகியன இருக்கும். 

ஆபரணப்பெட்டி தவிர்த்த இரண்டு பெட்டிகளும் மாளிகை புறத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு 'எழுந்தளிப்பு' என்னும் நிகழ்வு நடைபெறும் அப்போது யானைக்கு அந்தப் பட்டத்தை சாத்தி ஊர்வலங்கள் நடைபெறும். 

திருவாபரணப் பெட்டி சந்நிதானத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு பகவானுக்கு ஆபரணங்கள் அணிவிக்கப்படும்.

சபரிமலை ஐயப்பன்

சபரிமலை க்ஷேத்திரத்தின் சிறப்பே மகர சங்கரம்தான். 

மகர சங்கரம காலத்தில்தான் பகவான் தவக்கோலத்திலிருந்து கண்விழிக்கிறார். 

அன்றைய நாளில் ஐயன் ராஜ அலங்காரத்தில் தரிசனம் கொடுக்கிறார். 

மணிகண்டன் அவதாரக் காலத்தில் தன் வளர்ப்புத் தந்தையிடம், "ஆண்டுதோறும் தவக்கோலத்தில் இருக்கும் ஐயன் அந்த ஒருநாளில் கண்விழித்து தன் பக்தர்களைப் பார்த்து அனுக்கிரகம் செய்வேன்" என்று வாக்களித்திருந்தார். 

பகவான் கண்விழிக்கும் அந்தக் காலத்தில் தேவர்கள் எல்லாம் விசேஷமாக ஆராதனை செய்வார்கள் என்பது நம்பிக்கை. 

இத்தனை சிறப்புமிக்க நாளைக் கொண்டாடும் விதமாகத் திருவாபரணங்களைக் கோஷயாத்திரையாகக் கொண்டுவந்து அணிவித்து மகிழ்கிறார்கள்.

அந்தக் காலத்தில் மகர சங்கராந்தி அன்று காலையில்தான் பந்தள அரண்மனையில் இருந்து இந்தப் பெட்டிகள் கிளம்புமாம். 

இந்தப் பெட்டிகளைச் சுமப்பவர்கள், பெட்டியைத் தலைமேல் ஏற்றிக்கொண்டதும் தேவதா ஆவேசம் கொண்டு ஓடிவந்து அந்த நாளின் மாலையிலேயே சந்நிதானம் வந்து சேருவார்களாம். 

காலங்கள் மாறிவிட்டன. தற்போது சுமார் இரண்டரை நாள்கள் ஆகின்றன.

 மகரஜோதிக்கு முன்பே பந்தளத்தில் இருக்கும் கோயிலில் வழிபாடுகள் செய்து திருவாபரணப் பெட்டியைக் கொண்டுவந்து வெளியே வைப்பார்கள். 

இந்தப் பெட்டிகளைச் சுமப்பதற்கென்றே சில குடும்பங்கள் உள்ளனர். 

அவர்கள்தான் இவற்றைச் சுமப்பர். இதில் பகவானின் சாட்சியம் என்பதுபோல இந்தப் பெட்டிகள் வெளியே எடுத்துவரப்பட்டுக் காத்திருக்கும்போது கிருஷ்ணபருந்து மேலே வரும். 

கருடனை தரிசனம் செய்த பின்புதான் தலையில் திருவாபரணப் பெட்டிகள் ஏற்றப்பட்டு யாத்திரை புறப்படும். 

திருவாபரணப் பெட்டியோடு ஒரு பல்லக்கும் பந்தள ராஜாவும் உடன் வருவார்.

இந்த யாத்திரை செல்லும் வழியெல்லாம் உள்ள மக்கள், பகவானை தரிசனம் செய்ய வீட்டுவாசல்களில் கோலமிட்டு பூக்கள் தூவி வரவேற்பார்கள். 

இப்படி சரணகோஷத்தின் நடுவே மிதந்துவரும் இந்தத் திருவாபரணப்பெட்டி,
பம்பை, நீலிமலை வழியாக சந்நிதானத்தை மகரசங்கராந்தி அன்று அடையும்.

திருவாபரணத்தைச் சுமந்துசென்று 18 படிகளில் ஏறி ஸ்வாமிக்கு அணிவிப்பார்கள். 

 ஐயப்பன் தன் முக மண்டலத்தில் மீசையோடும் பூரணா புஷ்கலா சமேதராக அச்சன்கோயில் அரசராகக் காட்சிகொடுப்பார்.

யானை புலிகள் எல்லாம் முன்பாக இருக்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு முன்பாக இரு வாள்களும் வைக்கப்பட்டு ஐயன் அருட்காட்சி தருவார். 

அந்தக் கோலத்தில் ஐயப்பனுக்கு தீபாராதனை முடிந்ததும் மகரஜோதி தரிசனம் நடைபெறும்.

மகர சங்கரத்தன்று மட்டுமல்லாமல் அடுத்த இரண்டு நாள்களுக்கும் இந்தத் தரிசனம் நடைபெறும். திருவாபரண தரிசனம் பக்தர்களுக்குக் கிடைக்கும் பெரும் பாக்கியம்.

வாழ்வில் விலைமதிக்க முடியாத தரிசனம் திருவாபரண தரிசனம். 

சபரிமலைக்குச் செல்லும்  ராஜனின் காணிக்கையான திருவாபரணம் பெட்டிகளில் சபரிமலைக்கு எடுத்துவரப்பட்டு ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும். 

திருவாபரணம் 3 பெட்டிகளில் எடுத்துவரப்படும். பக்தர்கள் அதைக் காணும்போதே மெய்சிலிர்ப்பதைக் காண முடியும். இந்தத் திருவாபரணப் பெட்டியில் என்னதான் இருக்கிறது என்று பலரும் கேட்பதைக் காணமுடியும். 

சிலர் மணிகண்டன் பூமியில் வாழ்ந்தபோது அணிந்துகொண்டிருந்த ஆபரணங்கள் இது என்று சொல்லக் கேள்விப்பட்டிருப்போம். 

ஆனால், அது ஒரு ஏற்புடைய கருத்தாக இல்லை. 

ஏன் என்பதற்கான பதிலாகத் திருவாபரணப் பெட்டியில் என்னென்ன உள்ளன என்பதை அறிந்துகொண்டால் போதுமானது.

திருவாபரணப்பெட்டிகள் மொத்தம் மூன்று. 

ஒன்று ஆபரணப்பெட்டி, வெள்ளிப்பெட்டி, கொடிப்பெட்டி. இதில் ஆபரணப்பெட்டியில்தான் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் ஆபரணங்கள் இருக்கும்.

திருவாபரணம்
1. திருமுக மண்டலம் எனப்படும் முக கவசம்.

2. பூரணா புஷ்கலா தேவியருடைய உருவங்கள்.

3. பெரிய வாள் மற்றும் சிறிய வாள்.

4 இரண்டு யானை உருவங்கள்.

5. கடுவா எனப்படும் புலி உருவம்.

6. வில்வமாலை.

7. சரப்பொளி மாலை.

8. நவரத்தின மாலை.

9. வெள்ளிகட்டிய வலம்புரிச் சங்கு.

இவைபோன்ற விஷயங்கள் இந்த ஆபரணப் பெட்டியில் இருக்கும்.

அடுத்த பெட்டியாக இருக்கக்கூடிய வெள்ளிப் பெட்டியில் தங்கக்குடம் மற்றும் பூஜா பாத்திரங்கள் இருக்கும். 

கொடிப்பெட்டியில் யானைப் பட்டம், தலப்பாற மலை முதலிய மலையின் கொடிகள் ஆகியன இருக்கும். 

ஆபரணப்பெட்டி தவிர்த்த இரண்டு பெட்டிகளும் மாளிகை புறத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு 'எழுந்தளிப்பு' என்னும் நிகழ்வு நடைபெறும் அப்போது யானைக்கு அந்தப் பட்டத்தை சாத்தி ஊர்வலங்கள் நடைபெறும். 

திருவாபரணப் பெட்டி சந்நிதானத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு பகவானுக்கு ஆபரணங்கள் அணிவிக்கப்படும்.

சபரிமலை ஐயப்பன்

சபரிமலை க்ஷேத்திரத்தின் சிறப்பே மகர சங்கரம்தான். 

மகர சங்கரம காலத்தில்தான் பகவான் தவக்கோலத்திலிருந்து கண்விழிக்கிறார். 

அன்றைய நாளில் ஐயன் ராஜ அலங்காரத்தில் தரிசனம் கொடுக்கிறார். 

மணிகண்டன் அவதாரக் காலத்தில் தன் வளர்ப்புத் தந்தையிடம், "ஆண்டுதோறும் தவக்கோலத்தில் இருக்கும் ஐயன் அந்த ஒருநாளில் கண்விழித்து தன் பக்தர்களைப் பார்த்து அனுக்கிரகம் செய்வேன்" என்று வாக்களித்திருந்தார். 

பகவான் கண்விழிக்கும் அந்தக் காலத்தில் தேவர்கள் எல்லாம் விசேஷமாக ஆராதனை செய்வார்கள் என்பது நம்பிக்கை. 

இத்தனை சிறப்புமிக்க நாளைக் கொண்டாடும் விதமாகத் திருவாபரணங்களைக் கோஷயாத்திரையாகக் கொண்டுவந்து அணிவித்து மகிழ்கிறார்கள்.

அந்தக் காலத்தில் மகர சங்கராந்தி அன்று காலையில்தான் பந்தள அரண்மனையில் இருந்து இந்தப் பெட்டிகள் கிளம்புமாம். 

இந்தப் பெட்டிகளைச் சுமப்பவர்கள், பெட்டியைத் தலைமேல் ஏற்றிக்கொண்டதும் தேவதா ஆவேசம் கொண்டு ஓடிவந்து அந்த நாளின் மாலையிலேயே சந்நிதானம் வந்து சேருவார்களாம். 

காலங்கள் மாறிவிட்டன. தற்போது சுமார் இரண்டரை நாள்கள் ஆகின்றன.

 மகரஜோதிக்கு முன்பே பந்தளத்தில் இருக்கும் கோயிலில் வழிபாடுகள் செய்து திருவாபரணப் பெட்டியைக் கொண்டுவந்து வெளியே வைப்பார்கள். 

இந்தப் பெட்டிகளைச் சுமப்பதற்கென்றே சில குடும்பங்கள் உள்ளனர். 

அவர்கள்தான் இவற்றைச் சுமப்பர். இதில் பகவானின் சாட்சியம் என்பதுபோல இந்தப் பெட்டிகள் வெளியே எடுத்துவரப்பட்டுக் காத்திருக்கும்போது கிருஷ்ணபருந்து மேலே வரும். 

கருடனை தரிசனம் செய்த பின்புதான் தலையில் திருவாபரணப் பெட்டிகள் ஏற்றப்பட்டு யாத்திரை புறப்படும். 

திருவாபரணப் பெட்டியோடு ஒரு பல்லக்கும் பந்தள ராஜாவும் உடன் வருவார்.

இந்த யாத்திரை செல்லும் வழியெல்லாம் உள்ள மக்கள், பகவானை தரிசனம் செய்ய வீட்டுவாசல்களில் கோலமிட்டு பூக்கள் தூவி வரவேற்பார்கள். 

இப்படி சரணகோஷத்தின் நடுவே மிதந்துவரும் இந்தத் திருவாபரணப்பெட்டி,
பம்பை, நீலிமலை வழியாக சந்நிதானத்தை மகரசங்கராந்தி அன்று அடையும்.

திருவாபரணத்தைச் சுமந்துசென்று 18 படிகளில் ஏறி ஸ்வாமிக்கு அணிவிப்பார்கள். 

 ஐயப்பன் தன் முக மண்டலத்தில் மீசையோடும் பூரணா புஷ்கலா சமேதராக அச்சன்கோயில் அரசராகக் காட்சிகொடுப்பார்.

யானை புலிகள் எல்லாம் முன்பாக இருக்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு முன்பாக இரு வாள்களும் வைக்கப்பட்டு ஐயன் அருட்காட்சி தருவார். 

அந்தக் கோலத்தில் ஐயப்பனுக்கு தீபாராதனை முடிந்ததும் மகரஜோதி தரிசனம் நடைபெறும்.

மகர சங்கரத்தன்று மட்டுமல்லாமல் அடுத்த இரண்டு நாள்களுக்கும் இந்தத் தரிசனம் நடைபெறும். திருவாபரண தரிசனம் பக்தர்களுக்குக் கிடைக்கும் பெரும் பாக்கியம்.

வாழ்வில் விலைமதிக்க முடியாத தரிசனம் திருவாபரண தரிசனம். 

சபரிமலைக்குச் செல்லும் ஸ்வாமிகள் அந்த ஆனந்த அற்புத தரிசனங்களைக் கண்டு வழிபடுவது மிகவும் விசேஷமாகும்".

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா. இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

குறுங்காலீசுவரர் கோவில் தமிழ்நாட்டின் சென்னை நகரத்தில் உள்ள கோயம்பேடு அருகே அமைந்துள்ளது

குறுங்காலீசுவரர் கோவில் (Kurungaleeswarar Temple) என்பது இந்தியாவின் சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்துக் கோவிலாகும். இக்கோவில் சுமார் 25,200 சதுரடி பரப்பளவில் அமைந்துள்ளது.[1] இடைக்காலச் சோழர் காலத்தைச் சேர்ந்த பெரிய குளத்தை உள்ளடக்கிய கோயில்.
சொற்பிறப்பியல்
தொகு
கோவில் அமைப்பு
தொகு
குறுங்காலீசுவரர் கோவில் தமிழ்நாட்டின் சென்னை நகரத்தில் உள்ள கோயம்பேடு அருகே அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்து கோவிலாகும். இந்த கோவில் கோயம்பேடு கூவம் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. மூன்று நிலைகளுடன் இராஜகோபுரம். கோவிலின் மூலவர் குறுங்காலீசுவரர் அல்லது குசலவபுரீசுவரர் என்றும், அம்மன் தர்மசம்வர்த்தினி அல்லது அறம் வளர்த்த நாயகி என்றும் அழைக்கப்படுகின்றனர்.[2] தல விருட்சம் (கோயிலின் தெய்வீக மரம்) ஒரு பலா மரம் .

அதிகார நந்தி, காலபைரவர், வீரபத்திரர், விநாயகர், பிரம்மன், சுப்பிரமணியர் ஆகிய தெய்வ சன்னதிகள் உள்ளன. மூலவர் விமானத்தின் கருவறையின் பின்புற கோட்டத்தில் தட்சிணாமூர்த்தி காட்சி தருவது சிறப்பு. வழக்கமாக இங்கு இலிங்கோத்பவர் சிலை அமைப்பது வழக்கம். மகாவிஷ்ணு மற்றும் துர்க்கை கருவறையின் மேற்குபுற கோட்டங்களில் உள்ளனர். திருச்சுற்றில் நடராசர் மற்றும் நாயன்மார்களுக்கான சன்னதிகள் உள்ளன. நவக்கிரக மண்டபத்தில் சூரியன் எழுகுதிரை பூட்டிய தேரில் மனைவியருடன் காட்சி தருகிறார்.

கோவில் முன் 16 கால் மண்டபம் உள்ளது. மண்டபத் தூண்களில் இராமாயணக் காட்சிகள் குறுஞ்சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. இம்மண்டபத்தின் தூண் ஒன்றில் சரபேசுவரரின் புடைப்புச் சிற்பம் உள்ளது. இவருக்கு ஞாயிறு தோறும் மாலை இராகு கால பூசை நடைபெறுவது கோவிலின் மற்றொரு சிறப்பு.[3]

கல்வெட்டுகள்
தொகு
தொன்மம் மற்றும் வரலாறு
தொகு
இராமரைப் பிரிந்த பிறகு சீதை கனத்த மனதுடன் இங்கு வந்த போது, இந்தக் கோவிலை வால்மீகி உருவாக்கியதாக நம்பப்படுகிறது. சிவனை வழிபட்டு வந்த சீதை இலவன் மற்றும் குசனைப் பெற்றெடுத்தாள். வால்மீகியின் ஆதரவால் இலவன், குசன் ஆகிய இருவரும் நன்கு வளர்ந்து வருகிறார்கள். ஒரு நாள் அயோத்தியில் இராமர் அஸ்வமேத வேள்வி நடத்தினார், வேள்வி முடிந்ததும் இராமர் அனுப்பிய குதிரை ஓடிவந்து, தற்போது கோயம்பேடு என்று அழைக்கப்படும் இந்த இடத்தை அடைந்தது. கோயம்பேடு முன்னாளில் கோசை என்று அழைக்கப்பட்டது.

குதிரையை கண்டுபிடித்து வேள்வி தொடங்கிய இடத்திற்கு கொண்டு வர வேண்டும். ஆனால் இராமரின் மைந்தர்களான இல்வனும் குசனும் குதிரையைப் பிடித்து வைத்து, இராமரின் படையை உறுதியாக எதிர்த்தனர். இராமர் படை தோற்றதால், இறுதியாக இலக்குஷ்மணனும் வந்து போரிட்டான். அவனும் லவ குசர்களிடம் தோற்றான்.

இறுதியாக, இராமர் போரில் களம் காண வந்தார். இலவ குசர்களும் இராமனை எதிர்க்கத் துணிந்தனர்.. நல்வாய்ப்பாக வால்மீகி முனிவர் இலவ குசர்கள் தங்கள் சொந்த தந்தையை எதிர்த்துப் போராடப் போவதை குழந்தைகளுக்கு உணர்த்தினார்.

இதற்குப் பிறகு இராமர் குடும்பம் ஒன்றுபட்டது, அன்றிலிருந்து, இராமரின் குடும்பம் மீண்டும் ஒன்றிணைவதற்கு சிவபெருமான் காரணமாக இருந்ததால், இந்த கோவில் குடும்ப ஒற்றுமைக்கான கோவில் என்று பெயர் பெற்றது.

இக்கோயில் 12ஆம் நூற்றாண்டு குலோத்துங்க சோழன் காலத்தைச் சேர்ந்தது.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா .இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

சங்கடங்கள் தீர்த்து சகல நலன்களும் தரும் சங்கடஹர சதுர்த்தி விரதம்!

 சங்கடஹர சதுர்த்தி! 
சங்கடங்கள் தீர்த்து சகல நலன்களும் தரும் சங்கடஹர சதுர்த்தி விரதம்!

திருவும் கல்வியும் சீரும் தழைக்கவும்
கருணை பூக்கவும்
தீமையைக் காய்க்கவும்
பருவமாய் நமது உள்ளம் பழுக்கவும்
பெருகும் ஆழத்துப் பிள்ளையைப் பேணுவாம்,

வணங்குவதற்கு எளியராகவும், வாழ்வில் எல்லா வளங்களையும் தருபவராகவும் இருப்பவர் விநாயகப்பெருமான். அவரை எண்ணி வணங்கும் எல்லா நேரமும் விசேஷமானவைதான். எனினும் சதுர்த்தி நாளில் மேற்கொள்ளப்படும் சங்கடஹர சதுர்த்தி விரதம் கணபதிக்கு என்றே உருவான அருமையான விரதம். இதை மேற்கொண்டு கணபதியை பூஜிக்கும் பக்தர்களுக்கு எந்தக் குறையும் இருப்பதில்லை என்றே சொல்லப்படுகிறது. 

சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய இந்த சதுர்த்தி நாளில் விரதம் இருந்தால் வேண்டியது மட்டுமல்ல, நமக்குக் கிடைக்க வேண்டிய அத்தனை வரங்களும் நமக்கு கிடைத்து விடும். பௌர்ணமிக்கு அடுத்து வரும் நான்காம் நாள் சங்கட ஹர சதுர்த்தி.  சங்கட என்றால் துன்பம் ஹர என்றால் அழித்தல். துன்பங்களை அழிக்கும் விரதமே சங்கடஹர சதுர்த்தி. பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் சதுர்த்தி திதியே மாத சங்கடஹர சதுர்த்தி எனப்படுகிறது.

 இந்த சிறப்பான விரதத்தை அனுஷ்டித்தே  அங்காரகன் என்ற செவ்வாய், நவகிரகங்களில் ஒரு கிரகமாக பதவியை அடைந்தார். கிருஷ்ணர், புருகண்டி முனிவர் ஆகியோர் சங்கடஹரசதுர்த்தி விரதம் இருந்து விநாயகரின் அருளைப் பெற்றனர்.   சிவனைப் பிரிந்த சக்தி இந்த விரதத்தை மேற்கொண்டுதான் சிவனை அடைந்தார் என்றும் கூறப்படுகிறது. கிருதவீரியன் இந்த சங்கடஹர சதுர்த்தி விரதம் மேற்கொண்டுதான் கார்த்தவீரியன் என்ற மகனைப் பெற்றான்.  பாண்டவர்கள்கூட இந்த விரதம் இருந்தே வெற்றி பெற்றனர் என்றும் புராணங்கள் கூறுகின்றன. எண்ணியது யாவற்றையும் அளிக்கும் இந்த சங்கட ஹர சதுர்த்தி ஒரு எளிமையான விரதம். 

சங்கடஹர சதுர்த்தி வரும் அதிகாலையில் எழுந்து வீட்டில் உள்ள  விநாயகரை முதலில் தரிசித்து விட வேண்டும். பின்னர் குளித்து முடித்து விநாயகருக்கு விளக்கேற்றி, அருகம்புல் அல்லது கிடைத்த மலர்களை வைத்து பூஜிக்கலாம். தூப தீப, நைவேத்தியம் செய்வது சிறப்பானது. அன்று முழுவதும் அதாவது மாலை வரை உபவாசம் இருப்பது நல்லது.  மாலை வேளையில் அருகில் உள்ள கணபதி கோயிலுக்குச் சென்று சங்கடஹர சதுர்த்தி பூஜையில் கலந்து கொள்ள வேண்டும். வசதி இருந்தால் அபிஷேகம், அர்ச்சனை செய்யலாம். பிரசாதமும் அளிக்கலாம். வழிபட்டு வீடு திரும்பும்போது அந்த நாளைய   சந்திரனை தரிசித்து வேண்ட வேண்டும். அதன்பிறகு உணவு முடித்து விரதத்தை பூர்த்தி செய்யலாம். முடியாதவர்கள் பால், பழங்கள் போன்றவற்றை உட்கொள்ளலாம்.  தேய்பிறை  செவ்வாய்க்கிழமை அன்று வரும் சதுர்த்தி திதியில் துவங்கி ஓர் ஆண்டு முழுமையாக இந்த விரதம் இருந்தால் எண்ணியது எண்ணியவாறே நடக்கும். எல்லா காரியமும் தடையின்றி நடக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த விரதத்தால் தீராத நோய் தீரும். நிலையான இன்பம் கிட்டும். கல்வி அறிவு, புத்திக் கூர்மை, காரியங்களில் வெற்றி,  நீண்ட ஆயுள், நிலையான ஆரோக்கியம், நன்மக்கட்பேறு, பெருமைக்கு உரிய புகழ் என எல்லா நன்மைகளையும் அடைய முடியும் என்று புராணங்கள் சொல்கின்றன. சனி தோஷத்திற்கு ஆட்பட்டு கஷ்டம் அனுபவிப்பவர்களுக்கு இந்த விரதம் ஒரு நல்ல விடிவு என்றே சொல்லலாம். 

தன்னைக் கிண்டல் செய்த சந்திரனின் ஆணவத்தைக் கண்டித்து சாபமிட்டார் விநாயகப்பெருமான். ஆணவம் ஒழிந்த சந்திரன் இந்த சதுர்த்தி நாளில்தான் அனுக்கிரஹம் பெற்றான். எனவே இந்த நாளில் கணபதியை தரிசித்து விட்டு சந்திரனைக் காணலாம் என்று சொல்லப்படுகிறது.  வாழ்வின் எல்லா நலன்களையும் அளிக்கும் சங்கடஹர சதுர்த்தி விரதத்தின் மகிமையை உணர்ந்து பலன் பெறுவோம். 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா. இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

ஒரே கோயிலில் 64 பைரவர்கள்...!கும்பகோணம்- சென்னை நெடுஞ்சாலையில் 13 கி.மீ. தூரத்தில் உள்ள சோழபுரத்தில் இக்கோயில் உள்ளது.

ஒரே கோயிலில் 64 பைரவர்கள்...!
ஊரெங்கும் இருக்கும் 64 பைரவர்களையும் ஒரே சமயம் வணங்குவது சாத்தியமா? சாத்தியம் தான்.

பைரவ மூர்த்திகளுக்கெல்லாம் 
மூல மூர்த்தியான சிவனே பைரவேஸ்வரர் எனும் பெயரில் கோயில் கொண்டுள்ள தலம்.

இங்கு ஸ்ரீபைரவேஸ்வரர் என்ற பெயரைத் தாங்கிய சிவலிங்கத் திருமேனியைத் தரிசனம் செய்யலாம். 

பைரவ மூர்த்திகளுக்கெல்லாம் மூர்த்தியாக, ஸ்ரீபைரவேஸ்வரராக ஈஸ்வரன் தோன்றிய தலம்.

இத் தலத்தில் நிறைய மகான்கள் சித்தி அடைந்துள்ளனர். இக்கோயிலில் அஷ்ட புஜ பைரவர் சிலை உள்ளது.

இங்கு 64 பீடங்கள் உள்ளன. இந்த 64 பீடங்களிலும் 64 பைரவர்களும் அமர்ந்து பூஜையும் , தியானமும் செய்வதாக நம்பப்படுகிறது.

ராமாயண காலத்தில் ராவணன் கடுமையாக தவம் இருந்து நவகிரகங்களைக் கட்டிப் போட்டான். நவகிரகங்களில் சக்தி வாய்ந்த சனி பகவானும் செய்வதறியாமல் திகைத்தார்.

அவர், இத்தல ஸ்ரீபைரவேஸ்வரிடம் தன் கடமையைச் செய்ய உதவி செய்யுமாறு வேண்டினார்.

இத்தலத்தில் அவருக்கு குளிகன் ( மாந்தி ) என்னும் மகன் பிறந்தார். குளிகன் பிறந்த அந்த நேரமே ராவணனின் அழிவு காலம் என்று ஸ்ரீராமர் போர் தொடுத்து ராவணனை அழித்தார் என்று தல புராணம் சொல்கிறது.

பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள் இங்கு பைரவ யோக முறையில் தவம் செய்துள்ளார்.

பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து பைரவ மூர்த்திகளுக்கும் ஆதிமூலம் இந்த சோழபுரம் ஸ்ரீபைரவேஸ்வரர்தான். 

64 பைரவ வடிவங்களும் தோன்றிய தலம். பிரபஞ்சத்தின் அனைத்து பைரவ உபாச சித்தர்களும் ரிஷிகளும், யோகிகளும் அஷ்டமி திதி தினங்களில் கண்களுக்குத் தெரியாத வடிவங்களில் இங்கு வந்து பூஜித்து செல்கிறார்கள் என்பது ஐதீகம். 

இந்த பைரவரை வழிபட்டால் பித்ரு தோஷம் நீங்கும். பித்ரு சாபங்களால் பல வருஷங்களாகப் பாதிக்கப்பட்டவர்களின் பிரச்னைகளும், பில்லி, சூன்யம், செய்வினை, ஏவல், மாந்திரீகம் போன்ற பிரச்னைகளும் அகலும்.

பைரவரிடம் வேண்டிக்கொண்டு உங்கள் பிரார்த்தனை நிறைவேறும் வரை ஒவ்வொரு சனிக்கிழமையும் வெண்பூசணியில் பைரவருக்கு விளக்கு போட வேண்டும். 

சனி பகவானுக்கு குருவாக விளங்குபவர் இந்த பைரவர்தான். அதனால் சனிக்கிழமை வழிபாடு சிறப்பு. "கால தேவன்' என்று அழைக்கப்படுபவர் ஸ்ரீமஹா காலபைரவர்!

இவரை பல கோடி ஆண்டுகளாக தியானித்து பைரவ சித்தராக ஆனவர்தான் ஸ்ரீ வாரதாரகர் என்ற சித்தர் ஆவார்; இவ்வூரில் மூன்று சிவாலயங்கள் உள்ளன. 1.காசி விஸ்வநாதர் 2.பைரவநாதர் 3.கைலாசநாதர்.

மிகப்பழைமை வாய்ந்த சோழர்கால கற்கோயில். வழி, சுற்றுச் சுவர்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதால் கோயில் முகப்பு என ஒன்றும் இல்லை. 

உள்ளே சென்றால் கம்பீரமான முகப்பு மண்டபம் கொண்ட கோயில், தற்போது முகமண்டபத்தின் அடித்தளம் மட்டுமே உள்ளது.

கருவறையில் இறைவன் பைரவேஸ்வரர் பெரிய லிங்கமாக கம்பீரத்துடன் உள்ளார். இறைவி தென்புறம் நோக்கியபடி உள்ளார். கருவறை வாயிலின் இருபுறமும் விநாயகர், முருகன் மாடங்களில் உள்ளனர்.

கும்பகோணம்- சென்னை நெடுஞ்சாலையில் 13 கி.மீ. தூரத்தில் உள்ள சோழபுரத்தில் இக்கோயில் உள்ளது. இவ்வூரின் பழைய பெயர் பைரவபுரம் என்பதாகும்.

Tuesday, November 28, 2023

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்தில் அரூபமாக லட்சுமி அருள்வதுடன், அன்னபூரணியும் சரஸ்வதியும் சந்நிதிகொண்டிருக்கின்றனர்.



தேவியின் சக்தி பீடங்களாக சிறப்புற்று விளங்கும் 51 சக்தி பீடங்களில், காஞ்சி காமாட்சி அம்மனின் காமகோடி பீடமும் ஒன்று. 
காஞ்சி என்றாலே காமாட்சிதான் என்று சொல்லும்படி காமாட்சி அம்மனால் மகிமை பெற்ற தலம் காஞ்சி. கா' என்றால் விருப்பம் என்று பொருள். 

மனிதர்களின் விருப்பங்களை ஆள்பவள் என்பதாலும், நிறைவேற்றுபவள் என்பதாலும், அம்பிகைக்கு காமாட்சி என்ற பெயர் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு மகான் அம்பிகையைப் போற்றி ஸ்லோகங்களை இயற்றி இருக்கிறார்கள். கிருதயுகத்தில் துர்வாசரரால் 2,000 ஸ்லோகங்களாலும், திரேதாயுகத்தில் பரசுராமரால் 1,500 ஸ்லோகங்களாலும், துவாபரயுகத்தில் தௌமியாசார்யரால் 1,000 ஸ்லோகங்களாலும், கலியுகத்தில் ஆதிசங்கரரால் 500 ஸ்லோகங்களாலும் போற்றி வழிபடப் பெற்றவள் காஞ்சி காமாட்சி அம்மன்.

காஞ்சியில் காமாட்சி ஒன்பது வயது சிறுமியாகத் தோன்றி, பண்டாசுரன் என்னும் அசுரனை வதம் செய்தாள். பண்டாசுர வதம் முடிந்ததும், அம்பிகை ஆகாயத்தில் மறைந்திருந்தாள். 

பண்டாசுரனை வதம் செய்தது யார் என்று தெரியாமல், தேவர்கள் அனைவரும் திகைத்து நின்ற வேளையில், காயத்ரி மந்திரத்தின் 24 அட்சரங்களை 24 தூண்களாகவும், நான்கு வேதங்களை நான்கு சுவர்களாகவும் கொண்டு ஒரு மண்டபம் எழுப்பும்படி கூறியதுடன், அந்த இடத்தில் சுமங்கலிப் பெண், கன்றுடன் கூடிய பசு, கண்ணாடி, தீபம் ஆகியவை இருக்கட்டும். 

அப்போது நான் யார் என்று காட்டுகிறேன்’ என்றும் அசரீரியாக தேவியின் குரல் ஒலித்தது. தேவர்களும் அப்படியே செய்ய, அன்னை சிறுமியாக அவர்களுக்குக் காட்சி தந்தாள். 

அன்னையின் உத்தரவின்படி கதவுகளை மூடிவிட்டு, வெளியில் இருந்தபடியே தேவர்கள் அம்பிகையை ஸ்தோத்திரம் செய்தனர். 

மறுநாள் காலையில் கதவுகளைத் திறந்தபோது, அன்னை காமாட்சியாக அவர்களுக்கு தரிசனம் தந்தாள். இப்படி அன்னை காமாட்சியாக காட்சி தந்த நாள், சுவயம்புவ மன்வந்த்ரம், பங்குனி மாதம், கிருஷ்ணபட்ச, பிரதமை திதியுடன் கூடிய பூரம் நட்சத்திரம் ஆகும்.

காஞ்சி காமாட்சி அம்மனுக்கு ஆதிசங்கரரின் சௌந்தர்ய லஹரி, மூக கவியின் மூக பஞ்சசதீ, துர்வாசரின் ஆர்யா த்விசதி ஆகிய ஸ்தோத்திரங்கள் மிகவும் ப்ரீதியானவை.

கருவறையில் அம்பிகை பத்மாசன கோலத்தில் கரும்பு வில்லும், புஷ்ப பாணமும் கொண்டு எழிலார்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள். அம்பிகை பத்மாசன கோலத்தில் வீற்றிருப்பது மிகவும் விசேஷமாகும்.

கருவறையில், அம்பிகையின் வலப் புறத்தில் ஒற்றைக் காலில் பஞ்சாக்னி நடுவில் நின்றபடி காட்சி தரும் அம்மனையும் நாம் தரிசிக்கலாம்.

பண்டாசுரன் என்ற அசுரனை அழிப்பதற்காகவே அவதரித்தவள் காமாட்சி அம்மன். பண்டாசுரணை வதம் செய்த உக்கிரத்துடன் திகழ்ந்த அம்மனின் திருவுருவத்தின் முன்பாக ஆதிசங்கரர் ஸ்ரீசக்ர பிரதிஷ்டை செய்து சாந்தப்படுத்தினார்.

அம்பிகையின் முன்பாக பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் ஸ்ரீ சக்கரத்தில் 'ஸ்ரீ' என்பது லட்சுமியின் அம்சம் ஆகும். எனவே, காமாட்சி அம்மனை வழிபட்டால், அனைத்து ஐஸ்வர்யங்களும் உண்டாகும். என்பதுடன், மற்றவர்களுக்கு கொடுத்து வராமல் போன கடன்களும் வந்து விடும் என்ற நம்பிக்கை பக்தர்களிடம் உள்ளது.

அம்பிகையின் அருட்பிரசாதமாக நமக்கு வழங்கும் குங்கும பிரசாதத்தை அப்படியே நெற்றியில் அணிந்து கொள்ளாமல், கருவறைக்கு வெளியில் அம்பிகையின் இடப்புறத்தில் உள்ள மாடத்தில் காட்சி தரும் திருவடிகளில் வைத்து எடுத்த பிறகே அணிந்து கொள்ள வேண்டும்.

காமாட்சி அம்மன் ஆலயத்தில் அரூபமாக லட்சுமி அருள்வதுடன், அன்னபூரணியும் சரஸ்வதியும் சந்நிதிகொண்டிருக்கின்றனர். காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலுக்கு சென்றால், அனைத்து அம்மன் ஆலயங்களையும் தரிசித்த பலன் கிடைக்கும்.

மகா பெரியவா தம்முடைய அருளுரையில், மாயைக்கு காரணமான பிரம்ம சக்தி காமாட்சி தேவி. அவளே ஞானமும் அருளுபவள். அனைத்துக்கும் அவளுடைய கருணைதான் காரணம். மாயைகள் பலவற்றை அவள் நம்முடைய வாழ்க்கையில் நிகழ்த்தினாலும், அவற்றில் இருந்து விடுவிக்கிற கருணையும் அவளிடம் பூரணமாக உள்ளது. மாயையினால் நாம் உண்டாக்கிக்கொள்கிற கஷ்டங்களுக்கும் துக்கங்களுக்கும் காரணம் நம்முடைய இந்திரியங்களும் மனசும் தான்.

இந்திரிய சுகங்களின் வழியில் நம்முடைய மனதை செலுத்தி, நம்முடைய ஸ்வபாமான ஆத்ம சுகத்தை மறந்து விடுகிறோம். பஞ்சேந்திரியங்களும், மனமும் நம்மை ஆட்டி படைக்கின்றன. இவற்றுக்கு காரணம் மாயை, அந்த மாயையே இவற்றை சுத்தப்படுத்தி, இந்திரிய விகாரங்களில் இருந்தும், மன சஞ்சலங்களில் இருந்தும் ஜீவனை விடுவிப்பதற்காகவே அம்பிகை காமாக்ஷியாக வருகிறாள்"

 ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம்

குழந்தை பாக்கியம்,தீராத பிரச்சினையை தீர்க்கும் ஸ்ரீ காளஹஸ்தீசுவரர் கோயில்...!

குழந்தை பாக்கியம்,தீராத பிரச்சினையை தீர்க்கும் 
ஸ்ரீ காளஹஸ்தீசுவரர் கோயில்...!
ராகு, கேது கிரக தோஷம், சர்ப்ப தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், நீண்டகாலம் தீராத பிரச்சினையில் சிக்கி திண்டாடுபவர்கள் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக வழிபடக் கூடிய ஆலயமாக இருப்பது ஆந்திர மாநிலம் காளஹஸ்தியில் இருக்கும் காளஹஸ்தீஸ்வரர் கோயில் என்பது இந்து சமயத்தினரின் நம்பிக்கை.

தல வரலாறு

சிவன் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்த அந்த பாம்பு பாதாளத்தில் இருந்து மாணிக்கங்களை எடுத்து வந்து சிவலிங்கத்திற்கு தினமும் பூஜை செய்தது.

பாம்பு பூஜை செய்து முடித்த பின்னர் அங்கு வரும் யானை, மாணிக்கங்களை தனது துதிக்கையால் அப்புறப்படுத்திவிட்டு பூக்கள், தண்ணீர், வில்வ இலை கொண்டு சிவனை பூஜித்தது.

தான் வைக்கும் மாணிக்கங்களை தள்ளிவிடுவது யார் என்பதை அறிய ஒரு நாள் அந்த பாம்பு பூஜைக்குப் பின்னரும் அங்கேயே காத்திருந்தது. 

வழக்கம் போல் வந்த யானை, மாணிக்கங்களை தள்ளிவிட்டு பூஜை செய்தது. கோபம் கொண்ட பாம்பு, யானையின் துதிக்கை வழியாக அதன் தலைக்குள் புகுந்து, யானை மூச்சு விட முடியாதபடி செய்தது.

பரிதவித்த யானை துதிக்கையால் சிவலிங்கத்தை தொட்டு வழிபாடு செய்துவிட்டு, பாறையில் மோதி இறந்தது. யானையின் தலைக்குள் இருந்த பாம்பும் நசுங்கி இறந்தது.

இதேபோன்று, சிவன் மீது பக்தி கொண்டிருந்த சிலந்தி ஒன்றும் அதே சிவலிங்கத்தை வழிபட்டு வந்தது. தனது உடலில் இருந்து வரும் நூலினால் சிவனுக்கு கோவில் கோபுரம், பிரகாரம் கட்டி பூஜித்து வந்தது. காற்றில் நூல் அறுந்து போனாலும் மீண்டும் கட்டியது.

ஒரு முறை சிலந்தி கட்டிய நூல் கோபுரத்தை எரிந்து சாம்பலாகும்படி செய்தார் சிவபெருமான். கோபம் கொண்ட சிலந்தி, எரிந்து கொண்டிருந்த தீபத்தை விழுங்க சென்றது. சிலந்தியின் பக்தியை கண்டு வியந்த சிவபெருமான், அதனிடம் என்ன வர வேண்டும் என்று கேட்டார்.

மீண்டும் பிறவாமை வேண்டும் என்று வேண்டிய அந்த சிலந்திக்கு முக்தி கொடுத்து தன்னுடன் ஐக்கியமாக்கிக் கொண்டார் சிவன். இதே போன்று, தன் மீது கொண்டிருந்த அபரிமித பக்தியால் இறந்து போன யானை, பாம்பு ஆகியவற்றுக்கும் முக்தி அளித்தார் சிவன்.

இந்த அற்புதங்கள் நிகழ்ந்த தலம் தான் ஸ்ரீகாளஹஸ்தி. இங்கு லிங்கமாக காட்சியளிக்கும் சிவனின் திருமேனியை கூர்ந்து கவனித்தால், கீழ் பாகத்தில் யானை தந்தங்கள், நடுவில் பாம்பு, பின்புறம் சிலந்தி ஆகியவற்றை காணலாம். இங்கு எழுந்தருளியுள்ள சிவன், காளஹஸ்தீஸ்வரர் என்றும், அம்மன் ஞானபிரசுனாம்பிகை என்றும் அழைக்கப்படுகின்றனர்.

பெயர்க் காரணம்

சீகாளத்தில் என்ற சொல்லில், சீ என்பது சிலந்தியை குறிக்கிறது. காளத்தி என்பது காளம், அத்தி என இரு பெயர் பெறுகிறது. இதில் காளம் என்பது பாம்பினையும், அத்தி என்பது யானையையும் குறிக்கிறது.

சிலந்தி, பாம்பு, யானை ஆகிய உயிர்கள் சிவலிங்கத்தை பூஜித்து முக்தி பெற்றதால் அவற்றின் பெயரால் இவ்வூர் சீகாளத்தி எனப் பெயர் பெற்றது என்கிறார்கள் சிலர்.

ஸ்ரீகாளஹஸ்தி எவ்வாறு உருவானது என்பதற்கும் ஒரு கதை சொல்லப்படுகிறது. சிவபெருமான் ஆணைப்படி பிரம்மன் கயிலாயத்தை படைத்த போது அதில் இருந்து ஒரு பகுதி பூமியில் தவறி விழுந்து விட்டது. அந்த இடமே சீகாளத்தி என்ற இப்போதைய ஸ்ரீகாளஹஸ்தி என்கிறார்கள் சிலர்.

கோயில் அமைப்பு

கோவிலின் உள் பிரகாரத்தில் சிவனுக்கும், பார்வதிக்கும் தனி சன்னதிகள் உள்ளன. காசி விஸ்வநாதர், பால ஞானாம்பா, நந்தி, விநாயகர், சுப்பிரமணியர், அஷ்டோத்ரலிங்கம், சுயம்புநந்தி, வாயுலிங்கம், கண்ணப்பன், சகஸ்ரலிங்கம், சனிபகவான், துர்கா, 63 நாயன்மார்களுக்கு தனி சன்னதிகள் உண்டு.

ஞானபிரசுன்னாம்பிகை சன்னதியை கடந்து சண்டிகேஸ்வரர் சன்னதிக்கு சென்றால் அங்கிருந்து கண்ணப்ப நாயனார் மலை சிகரத்தை காணலாம்.

தென் கயிலாயம் என்று போற்றப்படும் ஸ்ரீகாளகஸ்தி, பஞ்சபூத தலங்களில் வாயு (காற்று) வுக்கு உரிய தலமாகும். இங்குள்ள லிங்கம் வாயு லிங்கமாகும்.

இன்றைக்கும் காற்றுப்புக முடியாத கர்ப்பக கிரகத்தில், சுவாமிக்கு ஏற்றி வைத்திருக்கும் அகல் தீபம் படிப்படியாக சுடர் விட்டு மேலெழுந்து அங்கும், இங்கும் அசைந்தாடுவது ஓர் அற்புத நிகழ்ச்சியாகும்.

பாதாள விநாயகர்
கோவிலின் வெளிப்பிரகாரத்தில் பாதாள கணபதி கோவில் உள்ளது. ஒரு சமயம் அகத்தியர் சிவபெருமானையும், விநாயகரையும் வழிபட மறந்தார்.

இதனால் விநாயகரின் கோபத்தால் ஸ்ரீகாளஹஸ்தியை ஒட்டி ஓடும் பொன்முகலி என்ற சொர்ணமுகி ஆறு வற்றிவிட்டது. தன் தவறை உணர்ந்த அகத்தியர் விநாயகரை பூஜை செய்து வழிபட்டு விநாயகரின் அருளுக்கு உரியவர் ஆனார் என இக்கோவில் தலபுராணம் கூறுகிறது.

காலப்போக்கில் விநாயகர் கோவில் இருந்த பகுதியை விட, அதை சுற்றியிருந்த பகுதிகள் எல்லாம் உயர்ந்து விட்டன. அதனால் விநாயகர் கோவில் பாதாளத்திற்கு போய் விட்டது. 

இதனால் இங்குள்ள விநாயகர், பாதாள கணபதி என்று அழைக்கப்படுகிறார். படிக்கட்டுகள் வழியே 20 அடி கீழே இறங்கிச் சென்று இந்த விநாயகரை வழிபட வேண்டும்.

தோஷங்கள் விலக பரிகார பூஜை

ஸ்ரீகாளஹஸ்தி, காளஹஸ்தீஸ்வரர் கோவில் ராகு மற்றும் கேது கிரகங்களின் பரிகார தலமாகவும் திகழ்கிறது. ராகு, கேது கிரக தோஷம், சர்ப்ப தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், நீண்டகாலம் தீராத பிரச்சினையில் சிக்கி திண்டாடுபவர்கள் இங்கு வந்து ராகு மற்றும் கேது சர்ப்பதோஷ நிவாரண பூஜை செய்து கொண்டால், பிரச்சினையில் இருந்து விடுபடுகின்றனர்.

தினமும் காலை 6.30 மணியில் இருந்து இரவு 9 மணி வரை பரிகார பூஜை செய்யப்படுகிறது. இந்த பூஜை செய்பவர்கள் அன்று இரவு ஸ்ரீகாளஹஸ்தியில் தங்கி செல்வது நல்லது.

பயண வசதி

ஆந்திர மாநிலத்தில் திருப்பதிக்கு கிழக்கே 40 கிலோ மீட்டர் தொலைவில் சென்னை செல்லும் சாலையில் ஸ்ரீகாளஹஸ்தி அமைந்துள்ளது.

சென்னையில் இருந்து காரில் சென்றால் 4 அல்லது 5 மணி நேரத்தில் ஸ்ரீகாளகஸ்தியை சென்றடையலாம். சென்னையிலிருந்து நேரடியாக இந்த ஊருக்கு பேருந்து வசதியும் செய்யப்பட்டுள்ளது.

இறைவன், வில்லேந்திய வேடுவனாக தோன்றியதால் இத்தலம் திருவேட்டக்குடி என வழங்கப்படுகிறது.

அருள்மிகு
திருமேனி அழகர் திருக்கோயில்,
திருவேட்டக்குடி - 609609
காரைக்கால். 
                 
*மூலவர்:
சுந்தரேஸ்வரர், திருமேனியழகர்

*உற்சவர்:
வேடமூர்த்தி

*தாயார்:
சௌந்தர நாயகி, சாந்தநாயகி

*தல விருட்சம்:
புன்னை.

*தீர்த்தம்:
தேவதீர்த்தம்.

 *இது பாடல் பெற்ற தலம். திருஞானசம்பந்தர் தேவாரப் பதிகம் பாடிய தலமாகும்.  

*திருஞான சம்பந்தர் ‘சுடர்பவளத் திருவுருவில் வெண்ணீற்றார் திருவேட்டக்குடியாரே’ என அவரது திருமேனி அழகில் லயித்து திளைத்துப் போகிறார்.  

*இத்தகைய எழில் வடிவம் கொண்ட இறைவன் ‘திருமேனி அழகர்’ என்று போற்றப்படுகிறார். 

*கருவறையில் மூலவர் திருமேனியழகர் என்கிற சுந்தரேஸ்வரர் லிங்க வடிவில் சதுர பீடத்துடன் ருத்ராட்ச பந்தலின் கீழ் கிழக்கு நோக்கி அருட்காட்சி தருகிறார். உயரமான பாணத்துடன் தீபாராதனை ஒளி திருமேனியில் தெளிவாகத் தெரிகின்றபடி காட்சி அளிக்கிறார். 

*பஞ்ச பாண்டவர்களில் ஒருவனான அர்ஜூனன் தனக்கு பாசுபத அஸ்திரம் என்னும் ஆயுதம் வேண்டி கடுந்தவம் புரிந்தான். அவனுடைய தவத்தினை பன்றி வடிவில் வந்த அரக்கன் ஒருவன் கலைத்தான். அதனால் அரக்கனை அர்ஜூனன் தன்னுடைய வில் அம்பினால் வதம் செய்தான். அந்த நேரத்தில் வேறொரு வேடன் அங்கு வந்து, தானே பன்றியைக் கொன்றதாகக் கூறி உரிமை கொண்டாடினார். இறுதியில் வேடனாக வந்தது சிவபெருமான் என்பதை அர்ஜூனன் உணர்ந்தான். 

*சிவபெருமான் அர்ஜூனனுக்கு ஆயுதங்களில் உயரியதான பாசுபத அஸ்திரத்தை அளித்தார். 

*இறைவன், வில்லேந்திய வேடுவனாக தோன்றியதால் இத்தலம் திருவேட்டக்குடி என வழங்கப்படுகிறது.  

*இக்கோயிலில் உள்ள, வேடனாக வந்த தலமூர்த்தி - "வேடரூபர்", வேடுவச்சியாக வந்த அம்பாள் -  "வேடநாயகி",  ஆகிய இருவரின்  திருமேனிகளும் சிறப்பானவை; வேடரூபர், கையில் வில்லேந்திக் கம்பீரமாக காட்சித் தருகிறார். 

*ஆண்டுதோறும் மாசி மகத்தன்று திருமேனியழகரான சுவாமி வேடமூர்த்தியாகக் காட்சி தந்து கடல் நீராடுகிறார்; இது "கடலாடுவிழா " என்று சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. 

*இத்தலத்தில் முருகனும் வேடன் வடிவத்தில் வில்லேந்தி காட்சிதருவது மற்றுமோர் சிறப்பு.  

*இத்தல இறைவியின் பெயர் சாந்தநாயகி என்பதாகும். இவருக்கு சவுந்திர நாயகி என்ற திருநாமமும் உண்டு.  

*சிவபெருமான், தம்மை சோதித்து, உயிர்களுக்கு துன்பத்தை விளைவித்த பார்வதியை நோக்கி, “உயிர்களுக்கு துன்பம் விளையக் காரணமாக இருந்த நீ, பூலோகத்தில்  மீனவ குலத்தில் பிறந்து என்னை நினைத்து தவம் செய்து, மீண்டும் கயிலாயம் வந்தடைவாய்” என்றார். அதன்படி பார்வதிதேவி, புன்னை வனமாக இருந்த திருவேட்டக்குடி என்ற இத்தலத்தில், குழந்தை வடிவில் கிடந்தார். அவ்வழி வந்த மீனவர் ஒருவர் குழந்தையை பரிவோடும் பாசத்தோடும் எடுத்துச் சென்று வளர்த்தார். பருவ வயதை அடைந்த பார்வதி, சிவபெருமானை நினைத்து சிவலிங்கம் ஸ்தாபித்து பூஜித்து வந்தார். இறைவன் மீனவனாக வந்து அம்பிகையை ஏற்றுக்கொண்டார். 

*மேற்கு பிரகாரத்தில்புன்னை வனநாதர் சன்னிதி உள்ளது. சன்னிதியின் முன்புறம் இடது பக்கத்தில் சம்பந்தரும், வலது பக்கத்தில் சனி பகவானும் காட்சி தருகின்றனர். 

*இங்கு ஐயனார் தனது  மனைவியரான பூரணை, புஷ்களை இருவருடன் காட்சியளிக்கிறார்.  

*காரைக்காலுக்கு வடகிழக்கே 10 கிலோமீட்டர் தூரத்தில் திருவேட்டக்குடி உள்ளது. பொறையாறு - காரைக்கால் சாலையில் வரிச்சிகுடி என்ற ஊர் உள்ளது. இங்கிருந்து கிழக்கே 2 கிலோமீட்டர் சென்றால், திருவேட்டக்குடியை அடையலாம். 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா .இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Monday, November 27, 2023

குருவாயூருக்கு வாருங்கள்,ஒரு குழந்தை சிரிப்பதை பாருங்கள்:

குருவாயூருக்கு வாருங்கள்,
ஒரு குழந்தை சிரிப்பதை பாருங்கள்:
குருவாயூரில் கண்ணனுக்கு உற்சவ காலங்களில், ஆராட்டு முடிந்தபின்பு ,
இளநீர் கொண்டு அபிஷேகம் ஆகின்றது,

இதன் பின்னே ஒரு உண்மைக் கதை உண்டு,
கேரளாவீல் கணக்கன்மார்கள், என்கின்ற ஒரு இன தாழ்த்தப்பட்ட மக்கள் உண்டு. இவர்களின் பணி தென்னைமரம் ஏறி தேங்காய் பறித்தல் 

அவர்களைத்  தெங்ஙேற்றக்காரன், என அழைப்பர்

கணக்கன் அவர்கள் இனத்தின் பெயர் ,

அந்த இனத்தில் பிறந்தவன், கிட்டுண்ணி

கிட்டுண்ணி என்றால் கிருஷ்ணன் குட்டி +உண்ணி; கிட்டுண்ணி என மருவி வரும் 

இவனுக்கு குருவாயூர் கிருஷ்ணன் மேல் அலாதி ப்ரியம்,

குருவாயூரப்பனுக்கும் கிட்டுண்ணி மேல் தனிப் பிரியம்,

ஒருநாள் நட்ட பட்டப்பகல் நேரத்தில் வியர்த்து, வியர்வையினால் உடல் முழுவதும் நனைந்து குருவாயூர் கோவில்  தந்தரி  கிட்டுண்ணியின்  குடிசையின் வாசலில் அமர்ந்திருந்தார்,

கிட்டுண்ணி அப்போது தான் தென்னை மரங்கள் ஏறி தேங்காய்களை பறித்து கொடுத்து தளர்வாக தனது குடிசைக்கு வந்தான்,

குடிசை வாசலில் ஒரு ப்ராமணன் அமர்ந்திருப்பதை பார்த்து பயந்து போனான்,
சாதிய வர்க்க பேதம் கடுமையாக இருந்த காலம் அது,

அந்த  கோவில் தந்தரி அந்தணன் " ஏய் கிட்டுண்ணி கணக்கா!
எனக்கு கடுமையான நீர்தாகம், நீ என்ன செய்கிறாய் என்றால், இரண்டு இளநீர் தென்னைமரம் ஏறி பறித்து வா? "என்றார்,

"கோவில் தந்த்ரியே  கேட்டு விட்டாரே, அதுவும் தாழ்த்தப்பட்ட என்னிடம்" என்று தென்னைமரம் நோக்கி ஓடினான்.அதற்குள் அந்த அந்தணர் 
"ஏய் கிட்டுண்ணி கணக்கா!
இன்றைக்கு குருவாயூர் க்ஷேத்ரத்தில் ஆராட்டு பூஜா நடக்கின்றது, நான்தான் ஆராட்டு பூஜா கர்மங்கள் செய்கின்ற தந்திரி,
நீ ஒரு காரியம் செய்?  இளநீர் எடுத்துகொண்டு  அந்த ஆராட்டு செய்யும் க்ஷேத்ரத்திற்கு வா?" என்று கட்டளை இட்டு விட்டு 
அவர் போய் விட்டார்.

கிட்டுண்ணி பரிதவித்தான் "நானோ தாழ்ந்த குலத்தவன்!
என்னை எப்படி க்ஷேத்ரம் நுழைய தருவார்கள்?
இளநீர் கொண்டுபோய் கொடுக்கவில்லை என்றாலும் குற்றம், கொண்டு போய் கொடுத்தாலும் அதைவிட குற்றம்! மேல்சாதி மக்கள் என்னைத் தோலை உரித்து விடுவார்களே!! என்ன செய்வது" என பயந்தான் 
அன்றைய காலகட்டங்களில் தாழ் குடி மக்களுக்கு க்ஷேத்ர தர்ஸன அனுவாதம் கிடையாது,
கவலையோடு தனது குடிசை வாசலில் அமர்ந்து யோசனை செய்து கொண்டிருந்தான்,
"ஹேகிருஷ்ணா?
நான் உனது நண்பன்!
மனதால்!
உன்னை உனது க்ஷேத்ர த்தில் வந்து பார்த்தது இல்லை!
பார்க்கவும் முடியாது!
பார்க்கவும் கூடாது!!
கிருஷ்ணா!
இந்த இக்கட்டான சோதனையில் இருந்து நீ தான் என்னை காப்பாற்ற வேண்டும்!" என வேண்டினான் 

அப்போது அவன் குடிசை முற்றத்தில், ஒரு குலை தேங்காய்கள் தென்னைமரத்திலிருந்து
விழுந்தன அத்தனையும் இளநீர்கள்,
கிருஷ்ணன் கொடுத்த உத்தரவாக எண்ணி 
சோகமே உருவாக வருத்தத்தோடும், பயத்தோடும் குருவாயூர் க்ஷேத்ரம் நோக்கி, அந்த  இளநீர் குலைகளை தோளில் போட்டுகொண்டு நடந்தான்,

க்ஷேத்ர வாசலில், ஒரு கணக்கன், நீச்ச சாதியோன் இளநீர் குலையை கொண்டு வருவதை கண்டு க்ஷேத்ர நீர்வாகிகள் அதிர்ந்தனர்.

என்ன திமிர் இவனுக்கு? என்று தன்க்சளுக்குல்பேசி முடிவெடுத்து

கிட்டுண்ணியை அப்படியே க்ஷேத்ர வாசலில் தூணில் கயிற்றால் கட்டினர்,

சாட்டை வந்தது!

சுளீர்! சுளீர்!!
என அடித்தனர்! க்ஷேத்ர நிர்வாகிகள்!

கிட்டுண்ணிக்கு வலியோ. அடிப்பட்ட தழும்போ அவன் சரீரத்தில் தோன்றவில்லை!

ஏதோ புஷ்பம் கொண்டு தழுவுதல் போன்று தோன்றியது!

கண்களை மூடி கொண்டு கிருஷ்ணா! கிருஷ்ணா! என மனதால் ப்ரார்த்தித்து கொண்டிருந்தான்.

க்ஷேத்ர நிர்வாகிகளுக்கு பேரதிர்ச்சி!!!

அதுமட்டுமல்ல மூலஸ்தானத்தில்
க்ஷேத்ர மேல்சாந்தி க்ஷேத்ரத்தினுள் , போய் நோக்கியபோது குருவாயூரப்பன் மேனியெங்கும் இரத்தக் காயம்.

அதிர்ந்தார்கள் க்ஷேத்ர நிர்வாகிகள்,

தீடீரென ஒரு அசரீரி,
மேல்சாந்தியே! இளநீர் கொண்டு வந்திருக்கும் கிட்டுண்ணி கணக்கன் என் ஆத்ம தோழன

இதோ தூணில் உங்களால் கட்டப்பட்டு துன்புறுத்தப்பட்டுருக்கும் கிட்டுண்ணி ,
 தாழ்ந்த குலத்தில் ஜெனித்ததால் என்னை வந்து பார்க்க முடிய வில்லை!

என்னை பார்க்க வராத அந்தத தோழனை  நான் தான் தந்தரி   வேஷத்தில்  பார்த்து வந்தேன்! எனக்கு பிடித்தச இளநீரும் கேட்டு வந்தேன் 

அது மட்டுமல்ல அவனை என்னை நேரில் , பார்க்க வைக்க நான் செய்த லீலா வினோதம் தான் இது!

என் ஆத்ம நண்பனை  சாட்டையால் அடித்த அடிகளை நான்  தான் தாங்கி கொண்டேன்.

எனவே எனது நண்பனை  அவிழ்த்து விடுங்கள்!! அவனிடம் மன்னிப்பு கேளுங்கள் 

இனி வருஷா வருஷம் நடக்கின்ற, உற்சவ ஆராட்டு முடிந்தபின்னர், கிட்டுண்ணி வீட்டு முற்றத்து நிலத்தில் இருக்கும்,
தென்னைமரத்திலிருந்து இளநீர் கொண்டு வந்து எனக்கு இளநீர் அபிஷேகம் செய்ய. வேண்டும்,

நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்,

எனக்கு , வர்க்க சாதி பேதங்கள் கிடையாது,,

நீங்கள் தான் உருவாக்கியது ! நீங்கள் பூஜிப்பது. ஒரு ப்ராமண கிருஷ்ணனை அல்ல!?

நானும் தாழ்த்தப்பட்ட யாதவ குலத்தில் (இடைய) ஜெனித்தவன் தான்,

நீங்கள் ப்ராமண குலத்தில் ஜெனித்ததால் பெரிய அகந்தை கொள்ள வேண்டாம்.

காரணம் ஜென்மம் கொண்டு என் நண்பன்  கிட்டுண்ணி  கணக்கன் என்கின்ற நீச்ச குலத்தில் ஜெனித்தாலும் கர்ம்மம் கொண்டு அவன் பரிசுத்த ப்ராமணன்,

ஜென்மதோ ஜாயதா நீச்சா
கர்மணே பவதி ப்ராமணா!!

ஆகவேதான் எல்லா பிராமணர்களும் தாழ்குலத்தில் ஜெனித்த இடையனான என்னை தேடி வருகிரீர்கள் ,

ஆனால் தாழ்குலத்தில் ஜெனித்தாலும் என்மேல் பக்தி கொண்டு. உயர்ந்தவன்  ஆன கிட்டுண்ணி குடிசைக்கு நான் சென்றேன், இளநீர் கேட்டேன்,

என் நண்பனையும் என் க்ஷேத்ரத்தினுள்ளில் வரவழைத்தேன்! இனியாவது திருந்துங்கள் !"

 என்று உரத்த குரலில் கூறிய அசரீரி மறைந்தது

இன்றும் கிட்டுண்ணி குடும்பம் உள்ளது . அவர்கள்  பகவான் அனுக்ரகம் கொண்டு செல்வந்தர்கள் ஆகி விட்டனர்

இப்போதும் வருஷாவருஷம் நடக்கின்ற உற்சவ ஆராட்டு பூஜா முடிந்த பின்னர் பழைய கிட்டுண்ணி முற்றத்து நிலத்திலுள்ள தென்னை மரத்திலுள்ள இளநீர் கொண்டுதான், பகவானுக்கு இளநீர் அபிஷேகம் செய்யப்படுகின்றது,
ஹரே ஸ்ரீ கிருஷ்ணா குருவாயூரப்பா !

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா .இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

Followers

மனிதனை மாமனிதனாக்குகிறது தியானம்

தூங்காமல் தூங்கி சுகம் பெறுதல் ஞான வழி என்ற தியானம் “தூங்கிக்கண்டார் சிவலோகமும் தம்உள்ளே தூங்கிக்கண்டார் சிவயோகமும் தம் உள்ளே ...