Sunday, November 5, 2023

பஞ்ச பூதத் தத்துவராகவும் ஐயன் நடராஜர் விளங்குகின்றார்.

#திருச்சிற்றம்பலம்
திருவாசியால் குறிக்கப்படும் இப்பிரபஞ்சத்துள்ளே அனைத்து இயக்கங்களுக்கு அவரது தாண்டவமே மூலமாக அமைந்துள்ளது.

மாயையின் தளையிலிருந்து எண்ணிறந்த உயிர்களை விடுவிப்பதையே அவரது தாண்டவம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

சிதம்பரம் விராடபுருஷன் என்னும் அண்டசராசரங்கள் அனைத்தின் வடிவான இறைவனுக்கு இருதயத் தானமாகும். 

அண்டத்தில் உள்ளதுவே பிண்டம் ஆகிய நமது உடலிலும் உண்டு.

நமது உடலில் உள்ள சிதம்பரத்தை விளக்குவது உபநிடதங்களில் உள்ள தஹரவித்தை. இந்த உடலில் எமது இருதயம் ( இரத்தத்தை சுற்றோட்டம் செய்யும் இருதயம் அல்ல) நடு மார்பில் சற்றே வலப்புறமாக உள்ளது. 

பார்வைக்கும் ஆராய்ச்சிகளுக்கும் எட்டாதது. இதனுள் உள்ள வெளி தஹராகாசம் என்று வேத உபநிடதங்களும் வியோமம் என்று ஆகமங்களும் சிற்றம்பலம் என்று திருமுறைகளும் முழங்குகின்ற சிதம்பரம். இது பராசக்தி. வெளியில் உள்ளது போலச் சட ஆகாசம் அல்ல.

அண்டசராசரத்தின் இருதயத்தானமான சிதம்பரம் நமது இதயத்தானமாகும் இதயத்தில் தான் அவரது நடனம் திகழ்கிறது.

ஆனந்த நடராச மூர்த்தியின் மூர்த்தம் ஸ்ரீ சக்கர வடிவிலும், ஓம் பிரணவத்தையும், நமசிவாய என்னும் பஞ்சாட்சர மந்திரத்தையும் விளக்கும் விதமாக அமைந்துள்ளது.

1.வலக்கரத்திலுள்ள உடுக்கை
படைத்தல்தொழிலையும்,

2.அபய கரம் – காத்தல் தொழிலையும்,

3.இடக்கரத்தில் மேல் உள்ள அக்னி அழித்தல் தொழிலையும்,

4.முயலகனின் மேல் ஊன்றிய பாதம் – திரோதம் எனப்படும் மறைத்தல் தொழிலையும் ,

5.தூக்கிய குஞ்சிதபாதம் முக்திக்கு காரணமாகி அருளல் தொழிலை குறிக்கின்றது.

”தோற்றம் துடியதனில் தோயும் திதி அமைப்பு

சாற்றிடும் அங்கையிலே சங்காரம்- ஊற்றமாய்

ஊன்று மலர்பதத்தே உற்ற திரோதன் முத்தி

நான்ற மலர் பதத்தே நாடு”
திருவடிவே பஞ்ட்சாட்சரம் திருப்பாதம்

 – ந ,உதரம் -
    ம ,தோள் –
   சி, முகம் –
   வ , திருமுடி -
   ய எனலாம்.

 உடுக்கை – சி,
 வீசிய கரம் -வ
அபய கரம் – ய ,
       அக்னி – ந,
முயலகன் – ம
எனலாம்.

வலப்பக்கம் – சிவாய ,
இடப்பக்கம் – நம எனலாம்
திருவாசி- ஓம் என்னும் பிரணவம்.

 பராசக்தி
சடைமுடி- ஞானம். சடை விரித்தாடுவது ஞானத்தை வழங்குவதற்காக.

வீசிய கரம் மாயையை உதறித்தள்ளுவதையும் ஊன்றிய பாதம் மலத்தினை நீக்குவதையும், தூக்கிய திருவடி அருளை அளித்து ஆன்மாக்களை ஆனந்தக்கடலில் அழுத்துவதையும் குறிக்கும்.

பஞ்ச பூதங்களை குறிக்கும் வண்ணம் ஐயனின் சிலை வடிக்கப்படுகின்றது. பஞ்ச பூதத் தத்துவராகவும் ஐயன் விளங்குகின்றார். 

மூக்கு காற்றையும் , முகம் பூமியையும், நெற்றிக்கண் அக்னியையும், முகத்தின் காந்தி ஆகாயத்தையும், விரி சடை நீரையும் குறிக்கின்றது.

நமசிவாய வாழ்க

No comments:

Post a Comment

Followers

இந்தியாவில் அமைந்துள்ள புகழ்பெற்ற 51 மகாசக்தி பீடங்கள்..

இந்தியாவில் அமைந்துள்ள புகழ்பெற்ற 51 மகாசக்தி பீடங்கள்..._ இந்த சக்தி பீடங்கள் இந்தியாவில் எங்கெங்கு அமைந்துள்ளன என்று பார்க்கலா...