சுந்தர வரதராஜ மற்றும் மஹாலக்ஷ்மி கோயில் -அரசர்கோயில்
இறைவன் : சுந்தர வரதராஜர்
தாயார் : சுந்தர மஹாலக்ஷ்மி
ஊர் : அரசர்கோயில்
மாவட்டம் : காஞ்சிபுரம் ,தமிழ்நாடு
அதிகம் அறியப்படாத கோயில்களில் இக்கோயிலும் ஒன்று , சுமார் 1000 பழமையான கோயில் சிதலம் அடைந்திருந்த நிலையில் இருந்து இப்போது பராமரிப்புகள் முடிந்து புது பொலிவுடன் காட்சிதருகிறது .
காஞ்சிபுரம் வரதராஜர் பெருமாள் கோயிலைவிட பழமையான கோயிலாகும் .
சுந்தர வரதராஜர் பெருமாள் சாலிக்ராம கல்லால் ஆனவர் ,இவர் தனது வலது கரத்தில் தாமரை மலரை ஏந்தியபடி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார் ,இது ஒரு அபூர்வ கோலமாகும்.
இக்கோயிலில் வீற்றியிருக்கும் மஹாலக்ஷ்மி மிகவும் பிரபலமானவர் மற்றும் சக்தியானவர் ,பெயருக்கு ஏற்றார் போல் குண்டான கன்னங்களுடன் தாமரை மலரின் மேல் பத்மாசனத்தில் வீட்டிருக்கிறார். இவர் ஆதி மஹாலக்ஷ்மி ஆவார் .
தாயாரின் வலது காலில் ஆறு விரல்கள் உள்ளன ,இது ஒரு அபூர்வ அமைப்பாகும் ,ஆறு விரல்கள் என்பது சுக்கிரனின் சக்தியை கொண்டதாகும் ,தாயார் சுக்ர சக்தியை அடக்கி தன்னை வணங்குபவர்களுக்கு அவற்றை தந்து அவர்களின் வாழ்க்கையில் எல்லா வசதிகளையும் ஏற்படுத்தி மகிழ்விப்பார்.
64 லட்சுமி அவதாரங்களின் தாயார் அவர் இங்குள்ள மஹாலக்ஷ்மி ஆதலால் இவரை ஆதி மஹாலக்ஷ்மி என்று அழைக்கிறார்கள். இவரின் மண்டபம் அழகிய வேலைப்பாடுகள் அமைந்த அழகிய மண்டபம் ஆகும் மற்றும் இசை தூண்கள் அமைந்த மண்டபம் ஆகும் .
பல்லவர்கள் மற்றும் சோழர்கள் இக்கோயிலை நிறுவி பராமரித்து வந்துள்ளார்கள்.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது இரா இளங்கோவன் நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment