Friday, May 31, 2024

தஞ்சாவூர் கபிஸ்தலம் மற்றும் கோவிலூர் கிராமத்தில் உள்ள காத்தாயி அம்மன்.

தமிழ்நாட்டின் பல கிராமங்களில் காத்தாயி அம்மன் சிறப்பாக வழிபடப்படும் தெய்வம். காத்தாயி அம்மனோடு பச்சையம்மன், பூங்குறத்தி, வேங்கையம்மன் மற்றும் சப்த முனீசுவரர்களையும் காணலாம். வெட்ட வெளியில், தென்னை மரங்களின் பின்னணியில் அவர்களைக் காணும்போது மெய்சிலிர்க்கிறது. வாள் ஏந்தி மிக உயர்ந்த உருவாக நிற்பதும், அவரது கால்களுக்கிடையே பாதாள, நரகலோக அரக்கன் ஒருவனின் தலை மீது கால் வைத்தபடி அமர்ந்துள்ளார் வாள்முனி.
அவரோடு, லலாடமுனி, முத்துமுனி, செம்முனி, கருமுனி, கும்பமுனி, சடைமுனி ஆகிய அறுவரும் சேர்த்து, அன்னை பராசக்தியான காத்தாயியின் ஏழு புதல்வர்கள் ஆவர். இவர்களை ஆறுமுகப் பெருமானின் அம்சம் என்றும் கூறுவர். வீரமும் கருணையும் கொண்ட காவல் தெய்வங்கள் அவர்கள். தவக்கோலத்துடன், வீரவேற்கோலமும் கொண்டு, அன்னையின் ஏவலை ஏற்று, பக்தர்களின் தீமைகளை அகற்றி, நன்மையை சேர்க்கும் அந்த அருளாளர்கள், வடக்கு நோக்கி அமர்ந்துள்ளனர்.

வேத முதல்வனாகிய சிவபெருமானின் திருமேனியில் இடப்பாகத்தில் இடம் பெறுவதற்காக கச்சி ஏகம்பரைப் பணிந்து வணங்கி வழிபட வந்தாள், உமையம்மை. அந்தப் பரம்பொருளை அடைந்திட, காஞ்சி மாநகரில் அவள் காமாட்சியாக ஊசி முனையில், ஒற்றைக் காலில் நின்றபடி தவமிருந்தாள். கம்பா நதிக்கரையில் நீராடி, திருநீறணிந்து ருத்திராட்சக் கண்டிகையும் அணிந்து அவள் தவமிருக்கையில், வெள்ளம் பெருக்கெடுத்தது.

அப்போது தான் வழிபட்டு வரும் சிவலிங்கத் திருமேனி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விடுமோ என்ற அச்சம் கொண்ட அன்னை, ஏகம்பநாதராகிய ஏகநாயகனை, தனது இரு கரங்களாலும் மார்போடு சேர அணைத்துக் கட்டிக் கொண்டாள். இறைவனுக்கு, ‘தழுவக் குழைந்த ஈசன்’ என்ற திருநாமத்தையும் பெற்றுத் தந்தாள்.

சிவ புராணத்திலும், காஞ்சி புராணத்திலும் விரிவாகக் கூறப்படும் இந்த நிகழ்ச்சிகள், காலப்போக்கில் கிராமங்களில் சற்றே உருமாறி காத்தாயி அம்மன் தவம், மன்னார்சாமி காத்தாயி திருமணம் என்று வழங்கப்பட்டு வருகிறது. அதுவே காலப்போக்கில் விரிவாக்கம் பெற்று, காத்தாயி அம்மனுக்கும் அவளது பரிவார தேவதைகளுக்கும் தனிக்கோயில் எழுப்பி, குலதெய்வமாகக் கொண்டாடிடும் மரபினையும் உருவாக்கியுள்ளது. தமிழ்நாட்டில் கிராமங்களில் எண்ணற்ற காத்தாயி அம்மன் திருக்கோயில்கள் அமைந்துள்ளன. தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் மற்றும் கோவிலூர் காத்தாயி அம்மன், அவர்களில் தனிச் சிறப்பு பெறுகிறாள்.

தஞ்சாவூர் கபிஸ்தலம் மற்றும்
 கோவிலூர் கிராமத்தில்  குடிகொண்டுள்ளாள் காத்தாயி அம்மன். 

காத்தாயி அம்மனோடு, பச்சையம்மன், பூங்குறத்தி, வேங்கையம்மன், விநாயகர், லவ-குசர், முருகப் பெருமான், மகாவிஷ்ணு ஆகியோர் அனைவரும் ஒரே இடத்தில் அமர்ந்துள்ள பெரிய கோயில் இது. கோயில் முன்னே வண்ணமிகு மகாமண்டபம் அமையப் பெற்றுள்ளது. ஆண்டுதோறும் நடத்தப்படும் ‘சண்டி ஹோமம்’ இங்கே மிகவும் பிரசித்தம்.

உலக வாழ்க்கையை வெறுத்திட்ட இளம் பெண்ணொருத்தி, தனது குழந்தையோடு தீயில் இறங்க முற்பட்டபோது, அவளது குழந்தையைக் காப்பாற்றினாள் காத்தாயி. அதனை நினைவுபடுத்திடவே, தனது இடது கரத்தில் குழந்தையை வைத்தபடி காட்சி தருகிறாள். தீயில் பாய்ந்திட்ட அந்தப் பேதைப் பெண்ணை காத்தாயி ஏன் காப்பாற்றவில்லை? காரணம், தீப்பாய்ந்த அம்மனாக அவளை உலகோர் வழிபட வேண்டும் என்பதற்காகவே!

அதற்காகவே, அவளது குழந்தையைக் காப்பாற்றி தனது கரத்தில் வைத்துக் கொண்டாள். அவளைத் தெய்வமாக்கி, தனது அருகிலேயே இருத்திக் கொண்டாள். காத்தாயி அம்மனின் கரத்தில் அமர்ந்துள்ள குழந்தை குமரனின் அம்சமாகவே கருதப்படுகிறது.

தெய்வமான பெண்கள் அனைவரையுமே மக்கள் பச்சையம்மனின் சகோதரிகளாகவே வணங்குகின்றனர். அவர்களையே தங்கள் குலதெய்வமாகவும், துணைத் தெய்வங்களாகவும் வழிபடுவது தமிழரின் பண்டைய மரபு. தமிழகத்தில் பல இடங்களில் தீப்பாய்ந்த அம்மனுக்கு தனிக் கோயில்கள் உள்ளன. “சிதக்னி குண்டசம்பூதாயை நம” என்று லலிதா சகஸ்ர நாமத்திலும் இடம் பெற்றுள்ளாள் அவள்.

காத்தாயி அம்மனுக்கு இடதுபுறம் காட்சி தருகிறாள் பச்சையம்மன். பச்சை நிற முகத்தை உடையவளாக, மரகதமேனி மருக்கொழுந்தாக, மார்பில் முத்தாரம், கழுத்தணி, காதணியோடு, கையில் வளையலும், இடுப்பில் ஒட்டியாணமும் அணிந்துள்ளாள். பச்சை நிறத்தாலான பாவாடை, தாவணி. பார்க்கின்ற கண்களுக்கு குளிர்ச்சியைத் தரும் பச்சை நிறம் கொண்டு, தனது எல்லைக்குட்பட்ட மக்களையும் கால்நடைகளையும் காத்து நிற்பவள் அவள். கங்கையின் அம்சமாக உருவெடுத்தவள்தான் பச்சையம்மன்.

வள்ளியம்மையின் அவதாரமாகக் கருதப்படுபவள் பூங்குறத்தி. நடந்தவை, நடக்க விருப்பவை என அனைத்தையும் குறி சொல்லி, அருள்வாக்கு கூறுகிறாள் இவள்.

புலி போல காவல் ஆற்றல் உடைய பெண் தெய்வமே வேங்கையம்மன். அன்னை பராசக்தி பயணம் செய்யும்போது, உடன் காவலாக வருபவள். பகைவர்களை எல்லைக்கு அப்பால் விரட்டி, அரணாக நிற்கும் வீரத் தாய்தான் வேங்கையம்மன்.

அஷ்ட ஐஸ்வர்யங்களுக்கு அதிபதியான ஆதிநாராயணன், மகாலட்சுமியோடு இத்தலத்தில் அமர்ந்து அருள்பாலிக்கிறார்.

அகிலம் போற்றும் புராணங்கள் புகழும் சப்த முனீசுவரர்கள், காத்தாயி அம்மன் கோயில் வடக்கு நோக்கி அமர்ந்துள்ளனர். இருளைப் போக்கிடும் செந்நிறத் திருமேனி கொண்டவராக செம்முனி, தீமைக்குக் காரணமான மருளை நீக்கும் அருளை உடைய வாழ்முனி, குறையாத செல்வங்களை அருளும் கும்ப முனி, ஞானத்தையும், அறிவாற்றலையும் தந்திடும் லலாடமுனி, யோகத்தின் பயனைத் தரும் ஜடாமுனி, நாதமாய் நிலவி நயமாய் அருள் செய்திடும் நாதமுனி மற்றும் முத்து மாலைகள் அணிந்து யோகியரில் முத்தாக விளங்கும் முத்துமுனி ஆகியோர்களே இவர்கள். சங்கடம் தீர்க்கும் சங்கிலிக் கருப்பனோடு, வினை தீர்க்கும் வில்லாளனாக பாம்பாட்டி வீரன், காட்டு வெளி செல்லும்போது காக்கின்ற கருமுனியும், காத்தாயி அம்மன் கோயில் வளாகத்தில் இடம் பெற்றுள்ளனர்.

அடியார்களின் நெஞ்சில் குடிகொண்டுள்ள செங்கமலத் திருவடியும், சிலம்பு அணிந்த சிற்றடி, அருமறை சிரமதில் சுடர் ஒளியும், முடிகொண்ட படர் அரவும், மதிநிகர் முகமும், அருள்சோதி புன்முறுவலும், முக்கண் நோக்கும், நெற்றியில் சுட்ட வெண்ணீறும், கரிகுழலும் மிளிர, செம்பட்டு உடையில், செங்கமலத்தை வலக்கரத்தில் ஏந்தி, அஞ்சேல் என அபயமளித்தபடி கொலுவீற்றிருக்கும் காத்தாயி அம்மன், தன்னை நாடி வந்தோர்க்கெல் லாம் தாயாகவே விளங்குகிறார்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Thursday, May 30, 2024

எமன் வழிபட்ட நவகிரகங்கள் இல்லாத சிவ ஆலயம்

எமன் வழிபட்ட நவகிரகங்கள் இல்லாத சிவ ஆலயம்
நவக்கிரகங்கள்  இல்லாத பிரசித்தி பெற்ற புராதன சிவன் கோயில்கள்  உள்ளன. எங்கெல்லாம் எமன் சிவனை வழிபட்டுள்ளாரோ அங்கெல்லாம் நவகிரகங்கள் இருக்காது.

திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் நவகிரகம் இல்லை ஏனென்றால் அங்கு எமன் வந்து வழிபட்ட தலம். 

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலிலும் நவகிரக சந்நதி இல்லை. அங்கும் எமன் வந்து வழிபட்டதாக கூறப்படுகிறது.

ஸ்ரீவாஞ்சியம் அங்கு எமனுக்கு முக்கியத்துவம். இங்கு எமன் சிவனை வழிபட்டதாக ஐதீகம்.

நான்காவது ஸ்தலம் திருவாவடுதுறை. இங்கு எமன் சிவனை வழிபட்டதாக வரலாறுகள் உள்ளன.

திருப்பைஞ்சீலி, வாழை மரத்தை தலவிருட்சமாகக் கொண்ட  சிவஸ்தலம். திருச்சிக்கு அருகில் உள்ள இந்த தலத்திலும் நவகிரகங்கள் கிடையாது.  

திருக்கடையூரில் மானிடர்களின் உயிரை பறித்த எமனுக்கு சிவன் இங்கு  மறுபடியும் உயிரை எடுக்கும் அதிகாரம் வழங்கிதாக ஐதீகம்  

காளஹஸ்தி ஆறாவது ஸ்தலம் . பஞ்சபூத தலங்களில் இது வாயு ஸ்தலம். அங்கு ஒன்பது படிகள் கொண்ட  தங்கஏணியில் (golden ladder) ஒவ்வொன்றிலும் மூன்று மலர்கள் பொறிக்கப்பட்டிருக்கும.  இந்த 3*9 என்பது 27 நட்சத்திரத்தை குறிக்கும். 27 நட்சத்திரங்களும் இந்த ஏணியில் ஆவாகனம் செய்யப்பட்டிருக்கிறது.  இந்த ஏணி சிவலிங்கத்தின்மீது சாய்த்து வைக்கப்பட்டிருக்கும். அதை தீபாராதனை காட்டும் போது மட்டும் தான் பார்க்க முடியும்.

திருமழபாடி. திருவையாருக்கு அருகில் உள்ளது. அங்கும் நவகிரக சந்நிதி இல்லை. 

திருக்கடையூர் . இதன் தலபுராணம்  வித்தியாசமானது. எமன் மார்க்கண்டேயனை நோக்கி பாசக்கயிறு வீசும் போது சிவன் காட்சி அளித்து என்னுடைய பக்தனை எப்படி நீ ஆட்கொள்ளலாம் என்று காலால் எட்டி உதைத்ததாகவும் அதனால் இறத்தல் தொழில் நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் இந்த ஸ்தல புராணம் கூறுகிறது.

ஒன்பதாவது ஸ்தலம் திருமழபாடி திருவையாறு அருகில் இருக்கிறது. 

பின் பத்தாவது ஸ்தலம் திருவெங்காடு. இங்கிருக்கும் நடராஜர் சிதம்பரத்தை விட பழமையானவர். 

அடுத்து திருப்புரம்பியம்  பதினோராவது ஸ்தலம். இங்கும் நவக்கிரகம் கிடையாது. 

சுருட்டப்பள்ளி அனைத்து தெய்வங்களும் தம்பதி சமேதராகக் காட்சி தருகின்ற தலம்

சுருட்டப்பள்ளி தாம்பத்ய தக்ஷிணாமூர்த்தி திருவடிகளே சரணம்....
சுருட்டப்பள்ளி ஸ்தலப் பெருமை
சென்னையில் இருந்து ஆந்திரா செல்லும் வழியில் ஊத்துக்கோட்டைக்கு அருகில் அமைந்துள்ளது சுருட்டப்பள்ளி எனும் திருத்தலம். இந்தத் தலத்தில் இரண்டு விசேஷங்கள். அனைத்து சிவாலயங்களிலும் லிங்கத்திருமேனியாக சிவபெருமானைத் தரிசிப்போம். அதேபோல், திருமாலின் திருக்கோலங்களில், சயனத்திருக்கோலமும் ஒன்று. ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பல தலங்களில், சயனித்திருக்கும் பெருமாளை தரிசிக்கலாம். இங்கே... இந்தத் தலத்தில், சிவபெருமானை லிங்கத் திருமேனியாகவும் தரிசிக்கலாம்; சயனத் திருக்கோலத்திலும் தரிசிக்கலாம்.
இன்னொரு சிறப்பு... அனைத்து சிவன் கோயில்களிலும் தட்சிணாமூர்த்தி, கோஷ்டத்தில் இருப்பார். அதேபோல் இங்கேயும் தரிசனம் தருகிறார். ஆனால்... தேவியுடன் அருள்பாலிப்பவராக, தாம்பத்ய தட்சிணாமூர்த்தி எனும் திருநாமத்துடன் அபூர்வ தரிசனம் தந்தருள்கிறார்.

அதாவது, அனைத்து சிவாலயங்களிலும் கருவறையின் தென்புறக்கோஷ்டத்தில் தென்முகக் கடவுளான தட்சிணாமூர்த்தியை தரிசிக்கலாம். சிவனாரின் 64 திருமேனி வடிவங்களில் தட்சிணாமூர்த்தி வடிவம் 32-வது வடிவமாகச் சொல்லப்பட்டுள்ளது.

தன் தந்தை தட்சன் சிவபெருமானை அழைக்காமல் யாகம் செய்தான். அப்போது, சிவனாரையும் மீறி அங்கு சென்ற பார்வதிதேவி தந்தையால் அவமானப்படுத்தப்பட்டாள். தட்சனின் மகள் என்னும் பொருள் கொண்ட தாட்சாயணி என்ற தன் பெயரை விடுவிக்க வேண்டி மீண்டும் இமவான் மகளாகப் பிறந்து, சிவபெருமானை அடைவதற்காகக் கடும் தவம் மேற்கொண்டாள் என்கிறது புராணம்.

கயிலையில் தனியே அமர்ந்து தவத்தில் ஈடுபட்டிருந்த சிவபெருமானை சனகாதி முனிவர்கள் அணுகி, தங்களுக்கு ஞானத்தை உபதேசிக்க வேண்டினர். தட்சிணாமூர்த்தி சின்முத்திரை காட்டி அவர்களுக்கு ஞானத்தை உபதேசித்து அருளினார். இந்த வடிவத்தைத்தான் அனைத்து சிவாலயங்களிலும் தரிசிக்கலாம். சாஸ்திரங்கள், வீணை, யோகம் மற்றும் ஞானம் ஆகியவற்றை உபதேசிக்கின்ற தட்சிணாமூர்த்தி வடிவமாக சிவபெருமான் வணங்கப்படுகிறார்.

பெரும்பாலும் முயலகன் மீது கால் வைத்து சின்முத்திரை காட்டி சனகாதி முனிவர்களுக்கு உபதேசம் செய்கின்ற தட்சிணாமூர்த்தியை அதிக அளவில் தரிசிப்போம். அபூர்வமாக யோக பட்டம் அணிந்த யோக தட்சிணாமூர்த்தி, வீணையைக் கையிலேந்திய வீணாதர தட்சிணாமூர்த்தி, ஞானத்தை போதிக்கும் ஞான தட்சிணாமூர்த்தி வடிவங்களை ஒருசில ஆலயங்களில் மட்டுமே தரிசிக்க முடியும்.

சிவபெருமானின் திருமேனிகளைக் குறித்த நூல்களில் 65 வகை தட்சிணாமூர்த்தி வடிவங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றுள் பார்வதி தேவியோடு இணைந்து அர்த்தநாரீஸ்வர தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வர வீணாதர தட்சிணாமூர்த்தி, கௌரி ஆலிங்கன தட்சிணாமூர்த்தி போன்ற திருவுருவங்களும் உள்ளதாக விவரிக்கின்றன ஞானநூல்கள்.

தவமிருந்து வரம் பெற்று, மீண்டும் சிவனாரை கணவனாகப் பெற்ற கெளரி எனும் பார்வதிதேவி, தன் மகிழ்ச்சியினை வெளிப்படுத்துகின்ற வகையில் தட்சிணாமூர்த்தியாக தவமியற்றிய சிவபெருமானை ஆலிங்கனம் செய்துகொண்டிருக்கும் திருமேனியை ஸ்ரீகெளரி ஆலிங்கன தட்சிணாமூர்த்தி என்கிறார்கள் ஆச்சார்யர்கள். இந்த தட்சிணாமூர்த்தியைத்தான், ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், சுருட்டப்பள்ளியில் கண்ணாரத் தரிசிக்கலாம்.

சுருட்டப்பள்ளி ஆலயம் பல்வேறு வகைகளில் பிரசித்தி பெற்றது. ஆலகால விஷத்தை அருந்திய சிவபெருமான், விஷம் உண்ட மயக்கம் தீர பார்வதி தேவியின் மடியில் தலைவைத்து சயனித்திருப்பது போன்ற அரிய திருவுருவத்தைக் கருவறையில் கொண்ட திருத்தலம் என்று போற்றுகிறார்கள் பக்தர்கள்.இங்கே சிவபெருமான் சுருண்டு பள்ளிகொண்டிருப்பதால், இந்தத் தலத்துக்கு சுருட்டப்பள்ளி எனும் பெயர் அமைந்தது.

துவாரபாலகர்களுக்கு பதிலாக, குபேரனுடன் சங்க நிதி, பதும நிதி அமைந்திருக்கும் விசேஷமான தலம் இது! மேலும், அனைத்து தெய்வங்களும் தம்பதி சமேதராகக் காட்சி தருகின்ற தலம் இது என்கிறது ஸ்தல வரலாறு.

தாம்பத்ய தட்சிணாமூர்த்தியை வணங்கினால், குடும்பத்தில் நிம்மதி நிலவும்; கணவன் மனைவிக்குள் இருக்கிற கருத்து வேற்றுமைகள் அகலும். 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

தஞ்சாவூர் கரந்தை கருணாசாமி கோயில்

தஞ்சாவூர் கரந்தை கருணாசாமி கோயில் ஏழூர் பல்லக்கு திருவிழா, 35 ஆண்டுகளுக்குப் பிறகு வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
ஆன்மீகம்: 35 ஆண்டுகளுக்கு பின் தஞ்சை கரந்தை கருணாசாமி கோயில் ஏழூர் பல்லக்கு திருவிழா
பல்லக்கு திருவிழா

தஞ்சாவூர்: தஞ்சாவூர் கரந்தை கருணாசாமி கோயில் ஏழூர் பல்லக்கு திருவிழா, 35 ஆண்டுகளுக்குப் பிறகு வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

இந்து சமய அறநிலையத்துறை, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட தஞ்சாவூர் அருகே கரந்தையில் பெரியநாயகி அம்பாள் உடனுறை கருணாசாமி கோயில் என்கிற வசிஷ்டேஸ்வர சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் தேவாரப் பாடல் பெற்ற வைப்புத் தலமாகவும் விளங்கி வருகிறது.

தஞ்சை பெரிய கோவில் கட்டப்படுவதற்கு முன்பே ராஜராஜ சோழனின் தந்தை சுந்தர சோழன் இக்கோவிலில் திருப்பணிகள் செய்து உள்ளார். ஆயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்டதும், கரிகால் சோழ மன்னனுக்கு அருள்பாலித்து ஸ்ரீ வசிஷ்ட மகா முனிவரால் பூஜிக்கப்பட்ட தலமாகவும் விளங்கி வருகிறது. இத்தகைய பிரசித்தி பெற்ற இக்கோவிலில் கடந்த 1988ம் ஆண்டு வரை வைகாசி மாத உற்சவம் கண்ணாடி பல்லக்கு மற்றும் வெட்டிவேர் பல்லக்கு ஆகியவை ஏழு ஊர்களை சுற்றி வரும் விழா நடைபெற்றுள்ளது.

கால போக்கில் விழா தடைபட்ட நிலை நிலையில் தற்போது 35 ஆண்டுகளுக்குப் பிறகு இக்கோவிலில் வைகாசி விசாகப் பெருவிழா மற்றும் ஏழூர் பல்லக்கு திருவிழா கடந்த மே 20ம் தேதி ஸ்ரீ அருந்ததி வசிஷ்டர் திருக்கல்யாணத்துடன் தொடங்கியது தொடர்ந்து தினமும் சுவாமி பல்வேறு அலங்காரங்களில் வீதி உலா நடைபெற்றது.

ஆன்மீகம்: 35 ஆண்டுகளுக்கு பின் தஞ்சை கரந்தை கருணாசாமி கோயில் ஏழூர் பல்லக்கு திருவிழா
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஏழுர் பல்லக்கு, சுவாமி கண்ணாடி பல்லக்கிலும், வெட்டி வேர் பல்லக்கிலும் உலா வரும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட கண்ணாடி பல்லக்கில் ஸ்ரீ சோமாஸ்கந்தர், ஸ்ரீ பெரியநாயகி அம்மன், ஸ்ரீ கந்தர் மற்றும் ஸ்ரீ தனி அம்மன் சுவாமிகள் பல்லாக்கில் எழுந்தருளினர், அதைப்போல் வெட்டிவேர் பல்லக்கில் ஸ்ரீ வசிஷ்டர், ஸ்ரீ அருந்ததி அம்மன் சுவாமிகள் எழுந்தருளினர். 

இதனையடுத்து சுவாமிகளுக்கு பூஜைகள் செய்து மஹா தீபாராதனை காட்டப்பட்டது, சிவகணங்கள், மங்கல வாத்தியங்கள் இசைக்க, பக்தர்கள் கண்ணாடி பல்லக்கு மற்றும் வெட்டிவேர் பல்லக்கினை தோளில் சுமந்தபடி கோவில் பிரகாரத்தில் வலம் வந்தனர். பின்னர் பல்லக்குகள் ஏழூர் சப்தஸ்தான ஸ்தலங்களான, வசிஷ்டேஸ்வரர் திருக்கோவில் (கரந்தை), தஞ்சைபுரீஸ்வரர் திருக்கோவில், (வெண்ணாற்றங்கரை), வசிஷ்டேஸ்வரர் திருக்கோவில் ( திருதென்குடி திட்டை),  சொக்கநாதர் திருக்கோவில்,( கூடலூர் திருக்கூடலம்பதி),  ராஜராஜேஸ்வரர் திருக்கோவில், (கடகடப்பை,  கைலாசநாதர் திருக்கோவில் (திருப்புன்னை நல்லூர்), பூமாலை வைத்தியநாதர் திருக்கோவில் (கீழவாசல்) ஆகிய ஏழு ஊர்களுக்கு புறப்பட்டு சென்றன.

ஏழூர் புறப்பாடு முடிந்தது சுவாமி கோவிலுக்கு வந்தடைந்ததும் பக்தர்கள் மத்தியில் ஸ்ரீ சுவாமிக்கு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி அதிவிமரிசையாக நடைபெறும்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன். 

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்புட்குழி விஜயராகவப் பெருமாள்...

நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருமாலின் 108 வைணவத் திவ்ய தேசங்களில் தொண்டை நாட்டுத் திருப்பதிகளில் ஒன்றான, 
இராமபிரான் ஜடாயுவிற்கு ஈமக்கிரியை செய்து மோட்சம் அளித்த இடமான 
#காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 
#திருப்புட்குழி
#விஜயராகவப்_பெருமாள்
#மரகதவல்லி_தாயார்
திருக்கோயில் வரலாறு:
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்புட்குழி விஜயராகவப் பெருமாள் கோயில், திருமாலின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 57-வது திவ்ய தேசமாகும். ஜடாயுவுக்கு ஈமக்கிரியை செய்த தலமாதலால் அவருக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் கொடிமரமும். பலிபீடமும் கோயிலுக்கு வெளியில் உள்ளது.

 திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் பாலு செட்டி சத்திரம் என்ற ஊரிலிருந்து தெற்கே செல்லும் சென்னை - வேலூர் சாலையில் அமைந்துள்ளது.

இராமாயணத்தில் ஜடாயு என்ற பறவைக்கு மோட்சமளித்து அதன் இறுதிச் சடங்குகளை இங்கு செய்ததால் திருப்புட்குழி (புள் (பறவை)+குழி) ஆனது என இதன் தலவரலாறு தெரிவிக்கின்றது. இதே தலவரலாறே புள்ளபூதங்குடி வல்வில் ராமர் கோயில்க்கும் கூறப்பட்டுள்ளது. 
நான்கு தோள்களுடன் கிழக்குநோக்கி வீற்றிருக்கும் திருக்கோலத்தில் இறைவன் விஜயராகவப் பெருமாள் என அழைக்கப்படுகிறார். 

மூலவர்:விஜயராகவப் பெருமாள்
தாயார்:மரகதவல்லி
தல விருட்சம்:பாதிரி
தீர்த்தம்:ஜடாயு தீர்த்தம்
புராண பெயர்:திருப்புட்குழி
ஊர்:திருப்புட்குழி
மாவட்டம்:காஞ்சிபுரம்
மாநிலம்:தமிழ்நாடு

பாடியவர்கள் :
மங்களாசாசனம்
*திருமங்கையாழ்வார்

"அலங்கெழு தடக்கை யாயன் வாயாம்பர் கழியுமா லென்னுள்ளம் மென்னும் புலங்கெழு பொருநீர் புட்குழி பாடும் போதுமோ நீர்மலைக் கென்னும் குலங்கெழு கொல்லி கோமள வல்லிக் கொடியிடை நெடுமழைக் கண்ணி இலங்கெழில் தோளிக் கென்னினைந் திருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே"

-திருமங்கையாழ்வார்

ஜடாயு மோக்ஷம்:
தந்தையின் கட்டளைப்படி ஸ்ரீராமன்  தன் சொத்துக்கள் அனைத்தையும் விட்டுவிட்டு காட்டுக்குச் சென்றதாக புராணம் கூறுகிறது  . காட்டில் இருக்கும் போது,  சீதை  ஒரு தங்க மானைப் பார்த்து, ராமனிடம் அதைப் பிடிக்கும்படி கேட்டுக்கொள்கிறாள். இருப்பினும், மான் , சீதையை தூக்கிச் செல்ல, ராமரையும் லட்சுமணனையும்  கவர்ந்திழுக்க  ராவணனால் அனுப்பப்பட்ட அரக்கன்  . ராமனும் லக்ஷ்மணனும் மானைத் தேடி வெளியேறிய நிலையில், ராவணன் சீதையைக் கடத்தி, அவளுடன் இலங்கைக்கு அழைத்துச்  செல்கிறான் .
இலங்கைக்கு செல்லும் வழியில், ஜடாயு  கழுகு ராவணனை தடுத்து நிறுத்துகிறது மற்றும் சீதையை விடுவிக்க அவனுடன் சண்டையிடுகிறது, ஆனால் ராவணன் ஜடாயுவின் இறக்கைகளை வெட்டி பூமியில் விழுந்தான். ராமரும் லட்சுமணனும் சீதையைத் தேடி அங்கு சென்றபோது, காட்டில் ஜடாயு படுகாயமடைந்திருப்பதைக் காண்கிறார்கள். ஜடாயு அவர்களிடம் ராவணன் மற்றும் சீதையைப் பற்றிச் சொல்லிவிட்டு இறந்துவிடுகிறார். ஸ்ரீராமர் ஜடாயுவிற்கு இறுதிச் சடங்குகளைச் செய்தார். ஜடாயுவின் பரிந்துரையின்படி,   ஜடாயுவின் இறுதிச் சடங்குகளை செய்த வடிவில் பெருமாள் இங்கு தனது சேவையை வழங்குகிறார்.

ஜடாயு புல் (கழுகுகளின் தனிக் குடும்பம்) குடும்பத்தைச் சேர்ந்தவர், மேலும் அவர் ஒரு குழியில் ( தமிழ்  குழி) புதைக்கப்பட்டார், எனவே இந்த ஸ்தலம் திருப்புட்குழி என்று அழைக்கப்படுகிறது. கழுகு ஜடாயு தனது இறுதி மூச்சு விடுவதற்கு முன் நடந்த சம்பவங்களை ராமனிடம் விவரித்தார். இத்தலத்தில் ஜடாயுவின் இறுதிச் சடங்குகளை விஜயராகவப் பெருமாள் செய்ததாக நம்பப்படுகிறது. ஜடாயு விழுந்த நீர்நிலை ஜடாயு தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.

குதிரை வாகனம்- ஒரு சிறப்பு அம்சம்:
சில பண்டிகை சமயங்களில், விஜய ராகவன் தனது குதிரை வாகனத்தின் மீது வீதி உலா செல்வார். ஒரு கணம், ஏறக்குறைய இது ஒரு உண்மையான குதிரை என்று ஒருவர் உணர்கிறார், அதன் குதிக்கும் நடை மற்றும் அசைவுகள். இந்தக் குதிரையை விஜய ராகவப் பெருமானுக்காகப் படைத்தவர் இன்னொரு குதிரையை உருவாக்கச் சொன்னார். இறைவனைத் தவிர வேறு எவருக்கும் தனது மந்திரத்தை மீண்டும் உருவாக்க மறுத்துவிட்டார்.

இன்றும் இறைவன் குதிரை வாகனத்தில் வீதி உலா வரும்போது, படைப்பாளிக்கு வணக்கம் செலுத்தும் வகையில் குதிரை காரர் வாழ்ந்த இடத்திற்குச் செல்வார்.

திருவிழா :

தை அமாவாசையில் தெப்ப உற்சவம், மாசியில் பிரம்மோற்ஸவம், ஆவணியில் பவித்ர உற்சவம், நவராத்திரி. திருக்கார்த்திகை.

*தல சிறப்பு :

மூலவர் தன் தொடையின் மீது ஜடாயுவை வைத்துக்கொண்டு அருள்பாலிக்கிறார். பெருமாள் திருவீதி புறப்படும் போதெல்லாம் ஜடாயுவுக்கும் சகல மரியாதை உண்டு. ஜடாயுவுக்கு ஈமக்கிரியை செய்த தலமாதலால் அதற்கு மரியாதை செய்யும் விதத்தில் கொடிமரமும், பலி பீடமும் கோயிலுக்கு வெளியில் உள்ளது.பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 58 வது திவ்ய தேசம். 

*பொது தகவல் :

மூலவரின் மேல் உள்ள விமானம்- விஜய வீர கோட்டி விமானம்

*தலபெருமை :

இங்குள்ள தாயார் வறுத்தபயிறை முளைக்க வைக்கும் மரகதவல்லித்தாயார் என அழைக்கப்படுகிறார். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இங்குள்ள ஜடாயு தீர்த்தத்தில் நீராடி மடப்பள்ளியில் வறுத்து, நனைத்த பயிறை பெண்கள் தங்களது மடியில் கட்டிக்கொண்டு இரவில் உறங்க வேண்டும். விடிந்தவுடன் அந்த பயிறு முளைத்திருந்தால் குழந்தை பாக்கியம் கட்டாயம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ராமானுஜரின் குருவான யாதவப்பரகாசர் இங்கு தான் வசித்தார். இத்தலத்தில் அசையும் உறுப்புகளைக் கொண்ட கல்குதிரை வாகனம் இருக்கிறது. சிற்பக்கலையில் இது ஒரு அதிசயமாகும். உண்மையான குதிரை போலவே அசையும் உறுப்புக்களைக் கொண்டது இந்த கல்குதிரை. இதை செய்த சிற்பி இதுமாதிரி இனி யாருக்கும் செய்து கொடுப்பதில்லை என்று உறுதியோடு இருந்து உயிர் விட்டாராம். இவரது உறுதிக்கும் பக்திக்கும் பாராட்டு தெரிவித்து பெருமாள், திருவிழாவின் 8ம் நாளன்று அவனது பெயர் கொண்ட வீதிக்கு எழுந்தருளுகிறார். ராமபிரானே இங்கு ஈமக்கிரியைகள் செய்துள்ளதால், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்பவர்கள் அமாவாசையன்று இத்தலத்தில் செய்தால் இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

*தல வரலாறு :

ராவணன் சீதையை சிறை எடுத்து செல்லும் வழியில் பறவைகளின் அரசனாகிய ஜடாயு சீதையை மீட்க ராவணனுடன் போரிட்டது. அவனால் வெட்டப்பட்டு மரணத்தருவாயில் இருந்தது. சீதையை தேடி அவ்வழியே வந்த ராமலட்சுமணரிடம் சீதையை ராவணன் கடத்தி சென்ற விஷயத்தை தெரிவித்தது. மரணத்தை எதிர் நோக்கி இருக்கும் தனக்கு ராமனே ஈமக்கிரியைகள் செய்ய வேண்டும் எனவும், ஸ்ரீதேவி பூதேவி சமேதராக காட்சி தந்து அருள வேண்டும் எனவும் வேண்டியபடி உயிர்விட்டது. அதன்படி ஜடாயுவை தன் வலதுபக்கம் வைத்து தீ மூட்டி ஈமக்கிரியைகளை செய்தார். இதனால் ஏற்பட்ட வெப்பம் தாளாமல் வலப்புறம் இருந்த ஸ்ரீதேவி தாயார் இடப்புறமும், இடப்புறம் இருந்த பூதேவித்தாயார் வலப்புறமும் மாறி அருள்பாலிப்பதாக புராணங்கள் கூறுகிறது. எனவே தான் இங்கு மட்டும் தாயார் சன்னதி பெருமாளுக்கு இடது புறமும், ஆண்டாள் சன்னதி பெருமாளுக்கு வலதுபுறமும் அமைந்துள்ளது குறிப்படத்தக்கது. ஜடாயுவின் வேண்டுகோளின் படி ராமர், தன் அம்பினால் உண்டாக்கப்பட்ட தீர்த்தத்தில் ஜடாயுவுக்கு ஈமக்கிரியை செய்தார். எனவே இங்கு தீர்த்தம் ஜடாயு புஷ்கரிணி என அழைக்கப்படுகிறது.

*பெயர்க்காரணம்: 

திரு என்றால் மரியாதை. புள் என்றால் ஜடாயு. குழி என்றால் ஈமக்கிரியை செய்தல். ராமர் ஜடாயுவிற்கு இத்தலத்தில் ஈமக்கிரியை செய்ததால் இத்தலம் திருப்புட்குழி ஆனது.

அதிசயத்தின் அடிப்படையில்: 

மூலவர் தன் தொடையின் மீது ஜடாயுவை வைத்துக்கொண்டு அருள்பாலிக்கிறார். பெருமாள் திருவீதி புறப்படும் போதெல்லாம் ஜடாயுவுக்கும் சகல மரியாதை உண்டு. ஜடாயுவுக்கு ஈமக்கிரியை செய்த தலமாதலால் அதற்கு மரியாதை செய்யும் விதத்தில் கொடிமரமும், பலி பீடமும் கோயிலுக்கு வெளியில் உள்ளது.

சிறப்புக்கள் :

ஜடாயுவுக்கு மோட்சமளித்த ராமன் இங்கு ஜடாயு தீர்த்தத்தை உண்டாக்கினார் என்று சொல்லப்படுகிறது. இங்கு கோவிலுக்கு எதிர்ப்புறத்தில் ஜடாயுவுக்கு சன்னதியுள்ளது. மூலவர் தமது தொடையின் மீது ஜடாயுவை வைத்துக்கொண்டு சடங்குகள் செய்யும் பாவனையில் அமர்ந்துள்ளார். வலப்பக்கத்தே இருக்க வேண்டிய இறைவி இடப்பக்கத்தே இருப்பது இங்கும் திருவிடவெந்தையில் மட்டுமே. இறைவன் திருவீது உலா செல்லும் போதெல்லாம் ஜடாயுவுக்கு மரியாதை செய்யப்படுகிறது. இந்த ஊரில் உள்ள ஜடாயு தீர்த்தத்தில் நீராடி பெண்கள் இரவில் மடியில் வறுத்த பயறு கட்டிக்கொண்டு படுக்க மறுநாள் விடிந்தவுடன் அப்பயறு முளைத்திருக்குமாயின் அவர்கட்கு குழந்தைப்பேறு உண்டாகும் என்பது நம்பிக்கையாகும். எனவே இந்த இறைவி 'வறுத்த பயறு முளைவிக்கும் மரகதவல்லித் தாயார்' என்ற பெயரால் அழைக்கப்படுகிறார்.

இவ்வூரில் வாழ்ந்த யாதவப் பிரகாசர் என்பவரிடமே இராமானுஜர்அத்வைத பாடங்களைப் பயின்றார். இராமானுஜர் படித்த மண்டபம் இன்றும் உள்ளது. இராமானுஜர் கல்வி கற்றதை விளக்கும் சிற்பமும் இக்கோவிலில் உள்ளது. இக்கோவிலில் அதிக அளவிற்கு கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இதன் மூலம் பாண்டிய மன்னர்களும் விஜயநகரப் பேரரசும் இத்தலத்திற்கு ஆற்றிய தொண்டினைப் பற்றி அறிந்துகொள்ள முடிகிறது. இங்குள்ள கல்வெட்டுக்கள் இக்கோவிலைப் ‘போரேற்றுப் பெருமாள் கோவில்’ என்றும் ‘சித்தன்னவேலி திருப்புட்குழி நாயனார் கோவில்’ என்றும் பலவாறு குறிப்பிடுகின்றன. இங்குள்ள குதிரை வாகனம் மிகவும் அதிசயமானதாகும். கல் குதிரை என வழங்கப்படும் இக்குதிரை உண்மையான குதிரை போலவே அசையும் உறுப்புக்களைக் கொண்டது. இதைச் செய்த தச்சன் இதுமாதிரி இனி யாருக்கும் செய்துகொடுப்பதில்லை என்று உறுதியோடு இருந்து உயிர் துறந்தானாம். இவனது உறுதியையும் பக்தியையும் போற்றும் வகையில் பெருமாள் 8ஆம் உற்சவத்தன்று அத்தச்சனது வீதிக்கு எழுந்தருளுகிறார்.

இங்கு இருக்கும் சுந்தர பாண்டிய காலத்து கல்வெட்டுகளை காணும்போது இக்கோயில் 14 நூற்றாண்டு காலத்தை சார்ந்தது என்று அறியமுடிகிறது . 

விஜய வீர கோட்டி விமானத்தின்கீழ் மூலவர் விஜயராகவப் பெருமாள் வீற்றிருந்த கோலத்தில் கிழக்கு நோக்கி சேவை சாதிக்கிறார்.

தாயார் தனி சந்நிதியில் மரகதவல்லியாக கொலுவிருக்கிறாள். பச்சை மேனியளாக தாயார் வீற்றிருப்பதில் இன்னொரு நயமும் உள்ளது. அதுதான் வறுத்த பச்சைப் பயிறை முளைக்க வைக்கும் அதிசயம்.

குழந்தைப் பேறு இல்லாதவர்கள் இத்தலத்துக்கு வந்து ஜடாயு தீர்த்தத்தில் நீராடி இரவில் வறுத்த பயிறை மடியில் கட்டிக் கொண்டு சந்நிதியில் படுக்க மறுநாள் காலையில் அப்பயிறு முளைத்திருந்தால் அவர்களுக்கு புத்திர பாக்கியம் உண்டு. மூதாதையருக்குச் செய்ய வேண்டிய கடன் ஏதாவது பாக்கியிருந்தால் அதை இத்தலத்தில் செய்யலாம்.

ராமானுஜரின் குருவான யாதவப்பிரகாசர் இங்குதான் வசித்தார். இவரிடம்தான் ராமானுஜர் அத்வைத பாடங்களைப் பயின்றார். ராமானுஜர் படித்த மண்டபம் இன்றும் உள்ளது. ராமானுஜர் கல்வி கற்றதை விளக்கும் சிற்பமும் இக்கோயிலில் உள்ளது. ராமானுஜர் மட்டுமல்லாமல் எம்பாரும் இங்கே பயின்றிருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

இக்கோயிலில் அதிக அளவுக்கு கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இதன் மூலம் பாண்டிய மன்னர்களும் விஜயநகரப் பேரரசும் இத்தலத்துக்கு ஆற்றிய தொண்டைப் பற்றி அறிந்துகொள்ள முடிகிறது.

கோயிலினுள் வலது பக்கம் சக்கரத்தாழ்வார் தனிசந்நிதியில் சேவை சாதிக்கிறார். மூலவருக்கு எதிரே இன்னொரு கருடன். சம்பிரதாய அமைப்பாக மூலவருக்கு முன்னால் உள்ள மண்டபத்தில் ஹோம குண்டம் உள்ளது. இந்த இடத்தில்தான் பெருமாள் சாட்சியாக அனைத்து ஹோமங்களும் யாகங்களும் நடைபெறும்.

இங்குள்ள கல் குதிரை வாகனம் உண்மையான குதிரையைப் போலவே அசையும் உறுப்புகளைக் கொண்டது. தலை தனியாக மேலும் கீழும் அசைய, வால் அதற்கேற்றாற்போல இங்குமங்கும் அலைய, கால்கள் இயல்பான குதிரைபோல அடியெடுத்து வைக்க, பார்ப்போர் அப்படியே பிரமித்துப் போவது வழக்கம். இதை உருவாக்கிய சிற்பியால் அதற்கு உயிர் மட்டும்தான் கொடுக்க முடியவில்லை.

இதே போன்று இன்னொரு சிலை வடித்துத் தருமாறு வந்த ஏராளமான கோரிக்கைகளை புறக்கணித்தது, இச்சிலையை வடித்த சிற்பியின் தனிச்சிறப்பு. இது ஒன்றுதான். இதுவும் திருப்புட்குழி விஜயராகவப் பெருமாளுக்கு மட்டும்தான் என்று மிகவும் உறுதியாக இருந்தார் அந்தச் சிற்பி.

இந்த நன்றிக் கடனை பெருமாள் ஒவ்வொரு வருடமும் தீர்க்கிறார். பிரம்மோற்சவத்தின் 8-ம் நாள் உற்சவத்தின்போது, அதே ஊரில் சிற்பி வசித்த தெருவுக்குப் போய், அவர் வாழ்ந்த வீட்டின் முன் நின்று, அவர் அமானுஷ்யமாகத் தன்னை தரிசிக்கும் வாய்ப்பைத் தருகிறார்.

தை அமாவாசை தெப்ப உற்சவம், மாசியில் பிரம்மோற்சவம், ஆவணி பவித்ரோற்சவம், நவராத்திரி, திருக்கார்த்திகை தினங்களில் சிறப்பு பூஜைகள், ஆராதனைகள், சுவாமி புறப்பாடு நடைபெறும்.
கருவறை வாசலில் மேலே நிறைய மணிகள் தொங்க விடப்பட்டுள்ளன. பேச்சுக் குறைபாடு உள்ள குழந்தைகளின் பெற்றோர், பெருமாளை நினைத்து மணி கட்டி வேண்டுவர்.

குடும்பப் பிரச்சினை, தாம்பத்ய பிரச்சினை, சொத்து சுகம் சம்பந்தமான பிரச்சினை தீர்வதற்கும்,கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருந்தால் அந்தப் பிரச்சினை சாதகமாக மாறி பாக்கியம் பெறுவதற்கும் இத்தலம் வேண்டிய வாய்ப்பை உருவாக்கும்.

கோவில் நகரமான காஞ்சிபுரம் அடுத்த திருப்புட்குழி கிராமத்தில் உள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றான பிரசித்திபெற்ற ஸ்ரீ மரகதவல்லி சமேத ஶ்ரீ விஜயராகவ பெருமாள் கோவிலில் ஆண்டு தோறும், தை மாதம் அமாவாசையை யொட்டி தெப்பத்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

ஒரே கதையுடன் 2 திவ்ய தேசங்கள்:

ஒவ்வொரு திவ்ய தேசத்திற்கும் தனித்தனி கதை இருந்தாலும், திருப்புட்குழியில் உள்ள விஜயராகவா கோயிலும் அதே கதையைப் பகிர்ந்து கொள்கிறது. ஜடாயு மோக்ஷம் என்பது புள்ள பூதங்குடி திவ்ய தேசம் (கும்பகோணத்திற்கு மேற்கே சுமார் 10 கிமீ தொலைவில்) தொடர்பான கதையாகும். இரண்டு திவ்ய தேசங்கள் ஒரே நிகழ்வை எப்படி இணைக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது.
புள்ளபூதங்குடி ஜடாயு மோக்ஷத்துடன் இணைந்திருக்க வாய்ப்புகள் அதிகம், திருப்புட்குழி அல்ல என்று நம்புவதற்கு பல காரணங்கள் உள்ளன. திருமங்கை ஆழ்வார் புள்ள பூதங்குடியில் இறைவனைப் போற்றிப் போற்றுவதில் குறிப்பாக இராமனை வில்லுடன் (வல்வில் இராமன் என்று அழைக்கப்படுகிறார்) குறிப்பிடுகிறார், திருப்புட்குழி இறைவனைப் போற்றுவதில் திருமங்கை இராமனை நேரடியாகக் குறிப்பிடவில்லை.

மேலும், புள்ளபூதங்குடி தொடர்பான அவரது பல பாசுரங்களில், திருமங்கை ராமாயணத்தைக் குறிப்பிடுகிறார். இராமன் சோழர் வழித்தடத்தில் திருப்புல்லாணிக்குப் பின் இலங்கைக்குச் சென்றான் என்றும் காஞ்சிபுரம் வழியாகச் சென்றிருக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.

13 ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது   , கோயிலில் உள்ள கல்வெட்டுகளில் இருந்து பார்க்கப்படுகிறது.

பாண்டிய மன்னன் சுந்தர பாண்டியன் இந்த கோவிலை புனரமைத்த முந்தைய ஆட்சியாளர்களில் ஒருவர். விஷ்ணு கோவில்களின் மீதுள்ள பற்றுதலுக்கு பெயர் பெற்ற ராயர்கள், இந்த கோவிலை புதுப்பிப்பதில் பங்களித்ததாக கூறப்படுகிறது. கோயில் தற்போது நன்கொடை வாரியத்தின் கீழ் வந்தாலும், அது முற்றிலும் மரகதவல்லி அறக்கட்டளை (MSVRP அறக்கட்டளை) மூலம் நடத்தப்படுகிறது, இது சமீபத்தியநாலாயிர திவ்ய பிரபந்தத்தில் திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருமாலின் 108 வைணவத் திவ்ய தேசங்களில் தொண்டை நாட்டுத் திருப்பதிகளில் ஒன்றான, 

பாண்டிய மன்னன் சுந்தர பாண்டியன் இந்த கோவிலை புனரமைத்த முந்தைய ஆட்சியாளர்களில் ஒருவர். விஷ்ணு கோவில்களின் மீதுள்ள பற்றுதலுக்கு பெயர் பெற்ற ராயர்கள், இந்த கோவிலை புதுப்பிப்பதில் பங்களித்ததாக கூறப்படுகிறது. கோயில் தற்போது நன்கொடை வாரியத்தின் கீழ் வந்தாலும், அது முற்றிலும் மரகதவல்லி அறக்கட்டளை (MSVRP அறக்கட்டளை) மூலம் நடத்தப்படுகிறது, இது சமீபத்திய ஆண்டுகளில்நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருமாலின் 108 வைணவத் திவ்ய தேசங்களில் தொண்டை நாட்டுத் திருப்பதிகளில் ஒன்றான, 

பாண்டிய மன்னன் சுந்தர பாண்டியன் இந்த கோவிலை புனரமைத்த முந்தைய ஆட்சியாளர்களில் ஒருவர். விஷ்ணு கோவில்களின் மீதுள்ள பற்றுதலுக்கு பெயர் பெற்ற ராயர்கள், இந்த கோவிலை புதுப்பிப்பதில் பங்களித்ததாக கூறப்படுகிறது. கோயில் தற்போது நன்கொடை வாரியத்தின் கீழ் வந்தாலும், அது முற்றிலும் மரகதவல்லி அறக்கட்டளை (MSVRP அறக்கட்டளை) மூலம் நடத்தப்படுகிறது, இது சமீபத்திய ஆண்டுகளில் பாராட்டத்தக்க பணியைச் செய்துள்ளது. 

அமைவிடம்: 

காஞ்சிபுரத்தில் இருந்து வேலூர் செல்லும் பாதையில் வட மேற்கில் 10 கிமீ தொலைவில் உள்ள பாலுச்செட்டி சத்திரம் என்னும் ஊரில் இருந்து 1 கிமீ தொலைவில் உள்ளது.

ஓம் நமோ 
நாராயணாய நமஹா 
🙏🏻 🙏 பாராட்டத்தக்க பணியைச் செய்துள்ளது. 

அமைவிடம்: 

காஞ்சிபுரத்தில் இருந்து வேலூர் செல்லும் பாதையில் வட மேற்கில் 10 கிமீ தொலைவில் உள்ள பாலுச்செட்டி சத்திரம் என்னும் ஊரில் இருந்து 1 கிமீ தொலைவில் உள்ளது.

படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் நெல்லிக்குப்பம்... 

Wednesday, May 29, 2024

மதுரை மொட்டைக்கோபுரம் முனீஸ்வரன்

மதுரை: மீனாட்சி அம்மன் 
கோயிலின் ஒவ்வொரு கோபுரத்திற்கும் தனிச்சிறப்பு உண்டு. 
இதில், 152 அடி உயரம் உள்ள வடக்கு கோபுரம் மொட்டை கோபுரம் என்றழைக்கப்படுகிறது என்றால் ஆச்சரியம் தானே. 

மதுரை மொட்டைக்கோபுரம் முனீஸ்வரன் வழிபாடு என்பது மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலின் வடக்கு வாசலில் அமைந்துள்ள மொட்டைக்கோபுரம் முனீஸ்வரன் வழிபாட்டைக் குறிக்கின்றது. 

இதன் பின்னணி இன்னும் சுவராஸ்யம்... 

ஒன்பது நிலைகளை கொண்ட இக்கோபுரத்தை, 1564-72ல், 
கிருஷ்ண வீரப்ப நாயக்கர் கட்டினார். 

ஆனால், என்ன காரணத்தினாலோ, மேற்பூச்சுஇன்றி, முழுமை பெறாமல் நின்று விட்டது. 

பின், 1623ல், இக்கோபுரம் முழுமை பெற்றது. 

நீண்ட நாட்கள் மேற்பூச்சின்றி இருந்ததால், மொட்டைக்கோபுரம் என்றழைக்கப்பட்டது. 

இன்றும், இச்சொல் வழக்கில் உள்ளது. 

கோபுர வாசலில் அமைந்துள்ள முனியாண்டி கோயிலும் 
மொட்டைக் கோபுரம் அடைமொழியுடன் அழைக்கப்படுகிறது. 

வடக்கு கோபுரத்தின் அகலம் 66 அடி. 

404 சுதைகளே உள்ளன. 

மற்ற கோபுரங்களைவிட, சுதைகள் குறைவாக உள்ளதாலும் மொட்டைக்கோபுரம் என்றுஅழைப்பதாக கூறுகின்றனர். 

வடக்கு கோபுரம் எவ்வளவு முயன்றும் கட்ட முடியாமல் தடைப்பட்ட போது, இக்கோபுரத்தைத் திருப்பணி செய்த நாகப்ப செட்டியார் இங்கு முனீ சுவரர் சாந்நித்யம் இருப்பதை அறிந்து முனீஸ்வரருக்கு ஒரு உறுதிமொழி கொடுத்தார். 

இக்கோபுரம் எழும்பும் போது முனீஸ்வரருக்கும் சன்னதி எழுப்பப்படும் எனச் சத்தியம் செய்தபடி இப்போதுள்ள மகா முனீஸ்வரர் ஆலயத்தை வடக்கு வாசலை ஒட்டி எழுப்பினார்.

அமராவதிபுதூர் வயிநாகரம் நாகப்ப செட்டியார் மொட்டை கோபுரமாக இருந்த வடக்கு கோபுரத்தை, தனது செலவில் 152 அடி உயர பிரம்மாண்ட கோபுரமாக 1878 ஆம் ஆண்டில் கட்டி முடித்தார்.

1960-63ல் நடந்த திருப்பணியின் போது, கடைசியாக இக்கோபுரத்தில் தான் திருப்பணி முடிக்கப்பட்டது. 

இக்கோபுர வாசல் வழியாக, இடது புறம் சென்றால், இசைத்தூண்கள் நம்மை வரவேற்கும் என்பதால், வேறு எந்த கோபுரத்திற்கும் இல்லாத பெருமை இக்கோபுரத்திற்கு உண்டு என்றால் அது மிகையில்லை.

மொட்டைக் கோபுரம் என்ற பெயருக் கேற்ப இக்கோபுரத்தில் பிற கோபுரங்களைப் போலச் சுதைச் சிற்பங்கள் கிடையாது. 

மாடம் போன்ற அமைப்பும் தூண்களும் அமைந்துள்ள கோபுரத்தில் வெள்ளி செவ்வாய் மற்றும் விழா நாட்களில் கோபுரத்தின் உச்சியிலிருந்து முனீஸ்வரர் சன்னதி வரை பூ மாலைகள் பூச்சரங்களாய்த் தொங்கி நிற்கும்.

வடக்கு கோபுரம் கட்டப் படுவதற்கு முன்பே முனீஸ்வரன் என்ற நாட்டுப்புற சிறு தெய்வக் கோவில் சிறிய இடத்தில் அமைந்திருந்தது. 

வடக்குக் கோபுரம் கட்டப்படாத நிலையில் அதன் கீழ் இருந்த முனீஸ்வரன் கோவில் மொட்டைக்கோபுரம் முனீஸ்வரன் கோயில் என்று அழைக்கப்பட்டது

தனியார் ஒருவருக்குச் சொந்தமான குலதெய்வக் கோவில் இது. 

யாழ்கீத சுந்தரம் பிள்ளை குடும்பத்தார் இதனை அமைத்தனராம். 

சைவ பிள்ளை வகுப்பைச சேர்ந்த சுந்தரம் பிள்ளை இன்று உயிருடன் இல்லை. 

இவர் வாரிசுகளான நான்கு மகன்கள் இக்கோவிலை இன்றும் பராமரித்து வருகிறார்கள். 

என்றாலும் முனீஸ்வரன் பல்வேறு சாதியினராலும், பல்வேறு மதத்தவராலும் வழிபடப்படுகிறார்

இக்கோவிலுக்குரிய இடம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலின் வடக்கு வாசலில் மொட்டைக் கோபுரத்தின் அடியில் ஒரு மண்டபமாக இருந்துள்ளது. 

சிறிய கோவிலாக தொடங்கப் பட்ட முனீஸ்வரன் சன்னிதி மரத்தாலான கதவு இருந்ததாக பக்தர்கள் சொல்கிறார்கள். 

அந்நாளில் தரையோடு உள்ள வளையத்தில் சங்கிலியினை இணைத்து பூட்டுவது உண்டாம். 

ஆலய அமைப்பு:

முனீஸ்வரன் சன்னிதியின் முன்புறம் பெரிய கல்லாலான தூண்கள் உள்ளன.

சிறிய பலிபீடமும் ஒரு ஆள் மட்டுமே அமரக்கூடிய இடத்தில் முனியாண்டி சிலையும் அலங்காரத்தோடு அமைந்துள்ளது. 

மதுரையைச் சுற்றியுள்ள முனீஸ்வரர் கோவில்களுக்கெல்லாம் இந்த முனீஸ்வரரே தலைமையாக உள்ளார் என்று நம்புகின்றனர்.

சிலையின் இரு பக்கங்களிலும் கதைகள், அரிவாள்கள் உள்ளன. 

முறுக்கிய மீசையும் வீரத்தை வெளிப்படுத்தும் விழிகளும் கவசங்களோடும் பாதுகைகளோடும் நிற்கும் முனீஸ்வரர் கோவிலை நெருங்கும் போதே பெண்கள் சிலர் குலவையிடு வதையும் சாமியாடுவதையும் காணலாம்.

இக்கோவில் மூலவர் முனீஸ்வரர் வடக்குக் கோபுரத்திலேயும் சிலையாக வடிக்கப்பட்டுள்ளார்.  

இக்கோவில் கட்டப்பட்ட காலந் தொட்டு, யாழ்கீத சுந்தரம் குடும்பத்தினர் தான் பூசனை செய்தல், பூ மாலைகள் அபிஷேகப் பொருட்கள் கொடுத்தல், விழா நடத்துதல் போன்ற வற்றைச் செய்து வருகின்றனர். 

எட்டு தலை முறையாக இவர்கள் குடும்பப் பணி தொடர்கிறது.

மீனாட்சியம்மன் கோவிலில் பணியாற்றும் பட்டர்கள் எனப்படும் அர்ச்சகர்கள் பலருக்கு மகா முனீசுவரரே குல தெய்வமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

பிராமண சமூகத்தினர் பலருக்கு 
சிறு தெய்வங்கள் குல தெய்வமாக உள்ளது ஆய்வுக் குரியது. 

ஆனால் அவர்கள் பெருந்தெய்வக் கோவில் அர்ச்சகர்களாக இருக்கின்றனர்.

இக்கோவிலுக்கு இந்துக்கள் மட்டுமல்லாது, இஸ்லாமியர், கிறிஸ்துவ மதத்தினரும் வருகின்றனர். 

பிறந்த குழந்தைகளை, பிறந்து 31 நாட்கள் கழித்த பின் இக்கோவிலில்  சன்னதி முன் கிடத்தி வணங்குவர். 

இதன் மூலம் இக்குழந்தை நலனை முனீசுவரரே பேணுவார் என்று நம்புகின்றனர். 

நிறைய சுற்றுலாப் பயணிகள் இங்கே வந்து செல்கின்றனர்.

திருவிழாக்கள்.

மாசி மாதம் வரும் வருஷ சிவராத்திரி மிகவும் விமரிசையாக கொண்டாடப் படுகிறது. 

கோவில் பங்காளிகள் மற்றும் உரிமைக்காரர் மூலம் சக்தி கரகம் வைகை ஆற்றிலிருந்து அழைத்து வரப்படுகிறது. 

வழி நெடுக பூசாரி கரகம் பக்தர் வீடுகளின் எதிரே நிற்கும்போது கற்பூரம் காட்டுகிறார்கள். 

பூசாரி சாமியாடுகிறார். சிவராத்திரி அன்று படையல் போடுகிறார்கள். 

ஆடிப்பௌர்ணமி அன்று அழகர் கோயில் பதினெட்டாம் படிக் கருப்பணசாமியின் சந்தனக்குடம் இத்திருக்கோயிலில் இருந்து எடுத்துச் செல்லப்படுகிறது.
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Tuesday, May 28, 2024

திருவாசக த்திற்கு உருகாதார்... திருவாசகம் எனும் தேன்....

_திருவாசகம் எனும் தேன்
எந்த செல்வமும் இறுதியில் கூட வாராது
சிவம் என்ற செல்வத்தை தவிர

இந்த உடலில் உயிர் வந்ததும் மாயையே...
அந்த உடலை விட்டு உயிர் போவதும் மாயையே.....
உடலால் ஏற்பட்ட சொந்தங்களால் புடை சூழ வாழ்வதும் மாயையே...

மனித உருக்கொண்டு பூமியில் ஜனித்த பொழுது வெறும் கையுடன் வந்தோம்... போகும் போது வெறும் கையுடன் தான் போவோம் என்பது வழக்கத்தில் உள்ள கூற்று….. 
ஆனால் ஆன்மா “நிரம்பி வழிய வழிய” பெரும் செல்வம் ஒன்றைக் கொண்டு தான் செல்கின்றார்கள் புண்ணிய ஆத்மாக்கள் . அது என்ன செல்வம் அது?   

ஆதியும் அந்தமும் இல்லா..  என்றும் நிலையான செல்வமாம் அந்த “பேரானந்த சிவம்” என்னும் பெருஞ்ச்செல்வத்தை நிச்சயம் கொண்டு தான் செல்கிறார்கள்.. அது “சிவத்திற்க்கும்” அந்த “புண்ணிய ஆத்மாவுக்கும்” மட்டுமே உள்ள  பேரானந்தபந்தம்.. அது புறக்கண்களுக்கு புலப்படாதது...

யாரெல்லாம் சிவ பெருங்கருணையை உணரப் பெற்றவர்களோ!!! 
யாரெல்லாம் வாழும் காலத்தில் சிவத்தையே உயிர் என நினைத்து வாழ்கின்றார்களோ!!
யாரெல்லாம் ஒவ்வொரு செயலிலும் சிவத்தை உணர முற்ப்பட்டு சித்தமெல்லாம் சிவமென  வாழ்கின்றார்களோ!!  இவர்கள் யாவரும் நிச்சயம்  இந்த பூவுலகப் பணியை முடித்து விட்டு வெறும் கையுடன் செல்வதில்லை என்பது சிவத்திண்ணம்…

மனித உடல் கொடுக்கப்பட்டத்தின் நோக்கம் அந்த இறைவனை நினைத்து… உணர்ந்து … இறைவனோடு ஒன்றாக  கலக்கவே என்று  ஒவ்வொரு ஆன்மாவிற்க்கு இறைவன் தக்க தருணத்தில் உணர்த்துவார் …. அந்த உணர்த்தலை புரிந்து கொண்டு தண்ணீருக்குள் மலர்ந்து  வாழ்ந்தாலும் தண்ணீரில்  ஒட்டாத தன்மையுடையது தாமரை மலர்…. அதனைப் போலவே செல்வக்குவியல் பெற்று வாழ்வோருக்கும், தேவையான செல்வத்துடன் வாழ்வோருக்கும்,  நடுத்தரவர்கமாக வாழ்வோருக்கும், வறுமையில் வாழ்வோருக்கும் இலக்கு ஒன்றாகத்தான் இருக்க வேண்டும் … அது சிவமாக மட்டுமே இருத்தல் வேண்டும் ... 
தங்கள்ளுக்குள் சிவத்தை தேடிக் கொண்டிருக்கும் அத்துனை ஆத்மாக்களுக்கும் இது விளங்கும் ... 

மற்றபடி சிவத்தை  நினைக்கவோ…..உணரவோ.. ஆதாரம் கேட்போரிடமும்.. மற்றும் சிவத்திடம்  நிலையில்லா செல்வதை மட்டுமே  வேண்டுவோருக்கும் சிவம் என்றும் “மறைபொருளாகவே” இருந்து விடுகின்றது.. பாசாங் இல்லாத பக்தியினால் மட்டுமே பரமனை உணரமுடியும்..

சிவப்  பெருக்கருணையை  உணர்ந்து வாழ்வோம்… நிலையான சிவத்தை (சிவத்தாயை) மட்டும் வேண்டும் என்று கேட்போம்… சிவப் பெருவாழ்வு வாழ்வோம் என்றும் !!!

தென்னாடுடைய சிவனே போற்றி! 
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!

அண்ணாமலை எம் அண்ணா போற்றி!
கண்ணாரமுதக் கடலே போற்றி !

சீரார்ப்பெருந்துறை நம் தேவனடி போற்றி !
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி !

பராய்த்துறை மேவிய பரனே போற்றி !
சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி !

ஆரூர் அமர்ந்த அரசே போற்றி !
சீரார் திருவையாறா போற்றி !

ஏகம்பத்துறை எந்தாய் போற்றி !
பாகம் பெணுரு ஆனாய் போற்றி !

தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி !
இன்றெனக்கு ஆரமுதானாய் போற்றி !

குவளைக் கண்ணி கூறன் காண்க அவளுந் தானும் உடனே காண்க 

காவாய் கனகத் திரளே போற்றி !
கயிலை மலையானே போற்றி போற்றி !!

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

நெல்லை நவகைலாய திருக்கோயில்கள்....

நவகைலாய திருக்கோயில்கள்

ஸ்ரீ அகத்திய பெருமானின் முதல் சீடரான உரோமச முனிவர்.. சிவமுக்தி நிலையை அடைய வேண்டி சிவபெருமானை வணங்கினார். 
சிவபெருமான், மாமுனிவர் அகத்தியர் வழியே அவரது சீடருக்கு வழியைக் கூற விரும்பினார்..!!

தனது சீடரிடம் அகத்தியர் கூறுகையில், தாமிரபரணியில் 9 மலர்களை அனுப்புகிறேன். இந்த மலர் ஒவ்வொன்றும் எங்கு நிற்கிறதோ அந்த இடத்தில் சிவலிங்கத்தை வைத்து வழிபடு. நீ வணங்கும் சிவலிங்கம் ஸ்ரீகைலாசநாதர் என்றும், உமையாள் ஸ்ரீ சிவகாமி அம்மை என்றும் விளங்கும். 

அதன்பின்பு தாமிரபரணி சங்கமிக்கும் இடத்தில் நீராடினால் சிவமுக்தி பேறு அடையலாம் என்றார். 

அகத்தியரின் கூற்றுப்படியே அருள்தரும் நவகயிலாய கோயில்கள் தாமிரபரணி நதிக்கரையில் திருநெல்வேலி- தூத்துக்குடி மாவட்டப் பகுதிகளில் சிவபெருமானின் பேரருளால் உருப் பெற்றுள்ளன..!!

பாபநாசம்

முதல் கோயில் பாபநாசமாகும். இங்கு ஸ்ரீபாபநாச நாதர் என்ற ஸ்ரீகைலாசநாதர் - உலகம்மை கோயில் உள்ளது. சூரியபகவான் அம்சம் கொண்டது. திருநெல்வேலியில் இருந்து 45 கி.மீ. தொலைவில் பொதிகை மலையின் அடிவாரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. தாமிரபரணியின் முதல் தடுப்பணை அமைந்துள்ளதால் ஆண்டு முழுவதும் பக்தர்கள் நீராட வசதி பெற்ற திருத்தலம். 

சேரன்மகாதேவி

இரண்டாவதாக சேரன்மகாதேவியில் உள்ள ஸ்ரீஅம்மைநாதர் என்ற கைலாசநாதர் - ஆவுடைநாயகி திருக்கோயில். திருநெல்வேலியில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது. சந்திரபகவான் அம்சம் கொண்ட தலம். 

கோடகநல்லூர்

மூன்றாவதாக கோடகநல்லூரில் உள்ள கைலாசநாதர்- சிவகாமி அம்மை திருக்கோயில். திருநெல்வேலியில் இருந்து சேரன்மகாதேவி செல்லும் சாலையில் நடுக்கல்லூரியில் இருந்து ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது. செவ்வாய் பகவான் அம்சம் கொண்ட தலம். 

குன்னத்தூர்

நான்காவதாக குன்னத்தூரில் உள்ள அருள்மிகு கோதை பரமேஸ்வரன் என்ற கைலாச நாதர்- சிவகாமசுந்தரி திருக்கோயில். திருநெல்வேலியில் இருந்து 7 கி.மீ. தொலைவில் மேலத்திருவேங்கடநாதபுரம் அருகே உள்ளது. இராகுபகவான் அம்சம் கொண்ட தலம். 

முறப்பநாடு
ஐந்தாவதாக தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாட்டில் உள்ள அருள்மிகு கைலாசநாதர் -சிவகாமி அம்மை திருக்கோயில். திருநெல்வேலி- தூத்துக்குடி சாலையில் 17 கி.மீ. தொலைவில் உள்ளது. குருபகவான் அம்சம் கொண்ட தலம். 

ஸ்ரீவைகுண்டம்

ஆறாவதாக ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள அருள்மிகு கைலாசநாதர்- சிவகாமி அம்மை திருக்கோயில். திருநெல்வேலி- திருச்செந்தூர் சாலையில் 30 கி.மீ. தொலைவில் உள்ளது. சனிபகவான் அம்சம் கொண்ட தலம். 

தென்திருப்பேரை

ஏழாவதாக தென்திருப்பேரையில் உள்ள அருள்மிகு கைலாசநாதர்-அழகிய பொன்னம்மை திருக்கோயில்.
திருநெல்வேலி- திருச்செந்தூர் சாலையில் சுமார் 38 கி.மீ. தொலைவில் ஆழ்வார்திருநகரி அருகே அமைந்துள்ளது. புதன்பகவான் அம்சம் கொண்ட தலம். 

ராஜபதி

எட்டாவதாக ராஜபதியில் உள்ள அருள்மிகு கைலாசநாதர்- பொன்னம்மாள் என்ற சிவகாமி அம்மை திருக்கோயில். தென்திருப்பேரையில் இருந்து சுமார் அரை கி.மீ. தொலைவில் உள்ளது. கேது பகவான் அம்சம் கொண்ட தலம். 

சேர்ந்தபூமங்கலம்

ஒன்பதாவதாக சேர்ந்தபூமங்கலத்தில் உள்ள அருள்மிகு கைலாசநாதர்-அழகிய பொன்னம்மாள் என்ற சிவகாமி அம்மை திருக்கோயில். தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் ஆத்தூரில் இருந்து புன்னக்காயல் செல்லும் சாலையில் சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது. சுக்கிரன் பகவான் அம்சம் கொண்ட தலம். 

நவகைலாய கோயில்களில் பக்தர்கள் மிகவும் எளிமையாக வழிபட உதவும் வகையில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் திருநெல்வேலி கோட்டம் சார்பில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்புப் பேருந்துகள் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. 

காலையில் புறப்படும் பயணிகள் அனைத்து ஆலயங்களிலும் தரிசனம் செய்துவிட்டு இரவில் திருநெல்வேலியை அடையலாம் 
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

பிள்ளையார் பட்டி கற்பக விநாயகர் திருக்கோயில்...

 கற்பக விநாயகர் திருக்கோயில் வரலாறு பற்றிய பதிவுகள் :*
பிள்ளையார்பட்டி எனப் பெயர் கொண்டு விளங்கும் இவ்வூர் தமிழ்நாடு மாநிலத்தில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது. காரைக்குடியிலிருந்து திருப்பத்தூர் செல்லும் வழியில் குன்றக்குடிக்கு அடுத்து உள்ளது.

இந்த ஊருக்கு பிள்ளையார்பட்டி என்பதே இன்று நாடறிந்த பெயராயினும், 

1. எருகாட்டூர் அல்லது எக்காட்டுர், 
2. மருதங்குடி, 
3. திருவீங்கைகுடி, 
4. திருவீங்கைச்வரம், 
5. இராசநாராயணபுரம் 

என்று வேறு ஐந்து பெயர்கள் உண்டு. மருதங்கூர், தென்மருதூர், கணேசபுரம், கணேசமாநகரம், பிள்ளை நகர் போன்ற பெயர்கள் பிற்காலப் பெயர்கள் பிற்காலப் பாடல்களில் காணப்படுகின்றன.
இரண்டு இராஜகோபுரங்களுடன் கூடிய பெரிய திருக்கோயில். இக்கோயிலில் நான்கு முறையாகத் திருப்பணி நடந்திருப்பதாகத் தெரிகின்றது.

முதன்முதலாக நடந்த திருப்பணி இன்று காணப்பெறும் திருக்கோயிலின் தெற்கு புறத்தில் கீழ்மேலாக நீண்டு கிடக்கும் குன்றில் வடமுகமாக மலையைக் குடைந்து அமைக்கப் பெற்ற குடைவரைக் கோயிலாகும்.

இந்த குடைவரைக் கோயிலுக்குள் நாம் நுழைந்தால் முதலில் உள்ள கிழ்மேல் ஓடிய பகுதி காணப்படும். அதற்கு அடுத்து நான்கு தூண்களுக்கு இடையே தென்வடல் ஓடிய இரட்டைப் பகுதி மண்டபம் காணப்படும். 
அம்மண்டபத்தின் கீழ்புறத்தில் தென்புறம் மலை நெற்றியில் 6 அடி உயரம் உள்ள கம்பீர நிலையில் வடக்கு நோக்கி உள்ளார் கற்பக விநாயகர். இந்த மூர்த்தி தான் பிள்ளையார்பட்டியின் மூலவர் கற்பக விநாயகரான தேசிவிநாயகப் பிள்ளையார்.

அதற்கு மேற்கே அதேமலை நெற்றியில் தெற்கு நோக்கிய சங்கரநாராயணர். உருநாட்டு சண்டீசன் கருடன் இருவரும் இருபுறம் நின்ற கோலத்தில் விளங்குகிறார்கள்.

அந்த மேல்புரத்தில் பத்தியின் நடுவே கிழக்கு பார்த்த திருவாயிலுடன் கூடிய மாதம் குடையப் பெற்றுள்ளது. அதன் நடுவிலே கடைந்த பெரிய மகாலிங்கம் உள்ளது. இந்த மூர்த்திதான் திருவீசர். இவர் திருவீங்கைக்குடி மகாதேவர்.

அங்கிருந்து சிறிது வடக்கே வந்து மேற்கே சென்று தெற்கு புறமாக பார்த்தோமானால் வடக்குப் பார்த்த லிங்கோத்பவர் மூர்த்தியை காணலாம். இந்த அளவில் உள்ள குடைவரைக் கோயில் தான் முதல்திருப்பணி ஆகும்.

*இக்குடைவரைக்  கோயிலுக்குள் உள்ள கல்வெட்டுகள் நமக்கு சொல்லும் செய்திகள்: -*

முதன் முதலில் மருதங்குடி வயல்களை மருதங்குடி ஊராரிடம் பிள்ளையார்பட்டி கோயில் நகரத்தார் விலைக்கு வாங்கியிருக்கிறார்கள் பின்னர் சம்பந்தப்பட்ட அத்தனையூர் நாட்டவரிடமும், கீழ்குண்டாச்சு நாட்டவரிடமும், அவர்களுக்கு உள்ள உரிமையை வாங்கி உள்ளனர். 

அதன் பிறகு அந்நாளில் பாண்டி மண்டலத்தை வென்று ஆட்சி செய்த (பரகேசி மூன்றாம் குலோத்துங்க சோழ தேவரான) கோனேரின்மை கொண்டானிடம் முழு உரிமையும் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

அவன் நகரத்தார்களுக்கு கொடுத்த திருமுகத்திலிருந்து மருதங்குடியில் ராசநாராயணபுரம் என்ற பெயருடன் ஒரு நகரம் அமைத்து அதில் குடியேறி வாழ்ந்துவர அனுமதித்திருக்கிற செய்தி நன்கு புலனாகிறது.

மருதங்குடியான ராசநாராயணபுரம் என்னும் பிள்ளையார்பட்டியும் கீழ்குண்டாற்று நாட்டில் அடங்கியதே, எனவே பிள்ளையார்பட்டியை "கேரள  சிங்கவள நாட்டு கீழ்குண்டாற்று நாட்டில் மருதங்குடியான இராச நாராயணபுரத்து பிள்ளையார்பட்டி" என்றே குறிப்பிட வேண்டும். 

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

அம்பாள்க்கு அபிஷேக நன்மைகள்

அம்பாள்க்கு அபிஷேக நன்மைகள்

அரிசி மாவு - மல நாசம் மலம் என்பது தீவினைகள்
மஞ்சள் பொடி -ராஜ வசியம், அரசாங்க அலுவல்களை விரைவில் சாதகமாக்கிக் கொள்ளலாம்.

பஞ்ச கவ்யம் - ஆத்ம சுத்தி, தெய்வீக சாதனைக்கு உதவுவது.

ரசபஞ்சாம்ருதம் - கார்யஸித்தி, எல்லாக் காரியங்களிலும் வெற்றி

பல(பழ)பஞ்சாமிர்தம் - தனவிருத்தி குறைவற்ற செல்வம் தரும்.

பால் - தீர்க்காயுள், நீண்ட ஆயுள்தரும்.

தயிர் - குழந்தைப்பேறு உண்டாகும்.

நெய் - மோக்ஷம் மோட்சத்தைத் தரும். ஞான விருத்தி, ஞானத்தை அளிப்பது.

தேன் - வாக்ஸித்தி, இனிமையான குரலையும், சங்கீதத்தில் திறமையையும் அளிக்கும்.

கருப்பஞ்சாறு - நித்ய சுகம், அளவற்ற இன்பங்களைக் கொடுக்கும்.

சர்க்கரை - சத்ரு நாசம், எதிரிகளை விரட்டி வெற்றி தரும்.

வாழைப்பழம் - தான்யவிருத்தி, பயிர் விருத்தி அமோக விளைச்சல் செழிப்பு.

பலாப்பழம் - எவரையும் வசப்படுத்தும் வசீகரத் தன்மை.

எலுமிச்சம்பழம் - ம்ருத்யு நிவாரணம், அகால மரணத்தை நிவிருத்தி செய்து வியாதிகளைத் தீர்த்து நலம் தரும்.

அன்னம் - ராஜகௌரவம், அரசுரிமை, அரசனுக்குச் சமமான போக போக்கியங்கள் தரும்.

இளநீர் - அபமிருத்யு நாசம். சத்புத்திரப்பேறு. கோரோசனை, தீர்க்காயுள், நீண்ட ஆயுள்.

பச்சைக்கற்பூரம் - பயத்திலிருந்து விடுவித்து மன நிம்மதியையும், சந்தோஷத்தையும் தரும்.

கஸ்தூரி - ஜயம் வெற்றி தரும்.

பன்னீர் - சாலோக்யம், தெய்வ உலகில் வாழும் பேறு கிட்டும்.

சந்தனக்குழம்பு - சாயுஜ்யம், சிறந்த ஞானம் பெற்று இறையுணர்வு பெற்று இறைவனோடு ஐக்கியமாகும் நிலை. சாயுஜ்ய நிலையளிக்கும்.

சுத்தமான குளிர்ந்த நீராலும், கங்கை முதலான புண்ணிய நதிகளின் தீர்த்தங்களால் அபிஷேகம் செய்பவர் அன்னையின் அருளுக்குப் பாத்திரமாகி அனைத்து வினைகளும் ஒழிந்து இவ்வுலக நலன்களும் மேலுகப் பேறும் ஒருங்கே பாதுகாக்கும். 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்.. 

Monday, May 27, 2024

மதுரை அருகே உள்ள சித்தர்களின் ஜீவசமாதிகள்

மதுரை அருகே உள்ள சித்தர்களின் ஜீவசமாதிகள்

பகவான் ஸ்ரீ இராமதேவசித்தர் ஜீவசமாதி மதுரை அழகர்கோவில்

நிஜானந்த சுவாமிகள்
மதுரை - ராஜபாளையம் சாலையில் 40.கீ,மீ தூரத்தில் இருக்கும் டி,கல்லுப்பட்டியில் இறங்கி பேரையூரை அடைந்தால் அங்கு இவரது ஜீவசமாதி உள்ளது.

சுந்திர சுவாமிகள்
டி,கல்லுப்பட்டி (௮) பேரையூரில் இருந்து கூவலப்புரம் ( மதுரை மாவட்டம் )வந்தால் இவரது ஜீவசமாதி உள்ளது.

சங்கரானந்த சுவாமிகள்
டி,கல்லுப்பட்டி - விருதுநகர் சாலையில் அரசுப் பேருந்து ஏறி வி,ரெட்டிப்பட்டியில் இறங்கினால் அக்கிராமத்தில் இவரது ஜீவசமாதி உள்ளது,

வெள்ளையா சுவாமிகள் & கருணானந்த சுவாமிகள்
மதுரை வடக்கு வெளி வீதியில் ( 315/94 கதவு இலக்கம் உள்ள ) சிம்மக்கல் பஸ் ஸ்டாப்பில் இவரது ஜீவசமாதி உள்ளது,

பழனி நாச்சிமுத்து சுவாமிகள்
சிவாநாராயண தேசிகர்
மதுரை ஆரப்பாளையம் பஸ் நிலைத்திற்கு அருகில் உள்ள புட்டுத்தோப்பு சிவன் கோயில் எதிர்புறத்தில் இவரது ஜீவசமாதி உள்ளது,

சாது விவேகானந்த முனீஸ்வரர்
இவரது ஜீவசமாதி மதுரை குரு தியேட்டர் எதிரிலுள்ள மேட்டுத் தெரு கடைசியில் உள்ளது.இவரது ஜீவசமாதி இருக்குமிடத்தில் சீமைச் சுவாமி யோகி,பாலயோகி கணேஷ்பாபு ஆகியோரின் ஜீவசமாதிகளும் உள்ளது,

குழந்தை சுவாமிகள்
மதுரை பெரியார் பஸ் நிலையத்திற்கு கிழக்கில் நேதாஜி ரோடில் உச்சினி மாகாளி அம்மன் கோயில் எதிரில் உள்ள ஏழூர் சாலியர் சத்திரத்தில் இவரது ஜீவசமாதி உள்ளது,

தலைவிரிச்சான் சுவாமிகள்
மதுரை தங்கம் தியேட்டர் அருகில் ( காக்கா தோப்பு )தலைவிரிச்சான் சந்தில் இவரது ஜீவசமாதி உள்ளது.

குட்டைய சுவாமிகள்
மதுரை தெற்கு வெளி வீதியில் இவரது ஜீவசமாதி உள்ளது,

விவேகானந்த சரஸ்வதி சுவாமிகள்
மதுரை ஆண்டாள்புரம் - மேம்பாலத்திற்கு அதாவது பெரியார் பஸ் நிலையத்திற்குத் தெற்கே பாலத்தின் கீழ் உள்ள மடத்தில் இவரது ஜீவசமாதி உள்ளது,

சிவானந்த சுவாமிகள்
விவேகானந்த சுவாமிகள் ஜீவசமாதி இருக்கும் மடத்தை ஒட்டி இவரது ஜீவசமாதி உள்ளது,

மூக்கன் சுவாமிகள்
மதுரை - திருப்பரங்குன்றம் சாலையில் தியாகராசர் கல்லூரி வளாகத்தின் கடைசியில் இவரது ஜீவசமாதி உள்ளது.

பிரமானந்த சுவாமிகள்
மதுரை ,அவனியாபுரம் மேம்பாலத்திற்குக் கீழ் இவரது ஜீவசமாதி உள்ளது,

ஓம் சிவப்பிரகாசர் சுவாமிகள்
மதுரை - திருப்பரங்குன்றம் சாலையில் தியாகராசர் கல்லூரிக்குச் செல்லும் பாதையின் ஆரம்பத்தில் இவரது ஜீவசமாதி உள்ளது,
மூட்டை சுவாமிகள்
தியாகராசர் கல்லூரியை அடுத்து இருக்கும் காவல் நிலையத்தைக் கடந்து மாயாண்டி சுவாமிகள் சமாதிக் கோயிலுக்குச் செல்லும் வழியில் இவரது ஜீவசமாதி உள்ளது,

நடன கோபால நாயகி சுவாமிகள்
மதுரை - அழகர்கோயில் சாலையில் காதகிணறு என்னும் கிராமத்தில் ஜீவசமாதி ஆனார்,

கத்திரிக்காய் சித்தர்
மதுரையிலிருந்து19.கி,மீ தூரத்திலுள்ள திருப்புவனத்தில் அரசு மருத்துவமனை எதிர் சாலையின் மேல் இவரது ஜீவசமாதி உள்ளது,

அருளானந்த சித்தர்
மதுரையிலிருந்து 25.கி,மீ,தூரமுள்ள சோழவந்தானின் ஜனகை மாரியம்மன் கோயில் பின்புறமுள்ள ஜின்னி மடத்தில் இவரது ஜீவசமாதி உள்ளது,

ஞானதேசிகர்
சோழவந்தான் ஜின்னி மடத்திற்கு அருகில் உள்ள ஞானியார் மடத்தில் இவரது ஜீவசமாதி உள்ளது,

முனியாண்டி சுவாமிகள்
மதுரை - ராஜபாளையம் சாலையில் 28கி,மீ,தொலைவில் உள்ள டி,குன்னத்தூர் சென்று அங்கிருந்து அரை கி,மீ,தூரமுள்ள கே,ரங்கபாளையம் சென்றால் இவரது ஜீவசமாதி உள்ளது,

கமலானந்தர்
கே,ரங்கபாளையத்தில் வடக்குவாய் செல்லியம்மன் கோயில் அருகில் இவரது ஜீவசமாதி உள்ளது,

மௌனகுரு சுவாமிகள்
தேனியிலிருந்து 15.கி,மீ,தொலைவிலுள்ள பெரியகுளத்தில் வராகநதி பாலத்திலிருந்து அருள் தியேட்டர் செல்லும் வழியில் இவரது ஜீவசமாதி உள்ளது,

பாட்டையா சுவாமிகள்
கருணையானந்த சுவாமிகள்
மதுரை - ஸ்ரீ வில்லிபுத்தூர் சாலையில் டி,கல்லுப்பட்டியி ல் இறங்கி அங்கிருந்து 7.கி,மீ தூரத்தில் உள்ள பேரையூர் வந்து பேரையூரிலிருந்து 2.கி,மீ தொலைவிலுள்ள சாளசந்தை கிராமம் சென்றால் இவரது ஜீவசமாதி உள்ளது,

சடையாண்டி ரெட்டியார் சுவாமிகள்
உசிலம்பட்டியிலிருந்து 36.கி,மீ,தூரத்தில் சாப்டூர் சென்று அங்கிருந்து 4 கி,மீ,வண்டல்பட்டி ஸ்டாப்பில் இறங்கி சிறிது தூரம் சென்றால் விட்டல்பட்டி கிராமத்தில் தெப்பஊரணி அருகில் இவரது ஜீவசமாதி உள்ளது,

தேசிக ஆனந்த சுவாமிகள்
மதுரையிலிருந்து உசிலம்பட்டி வந்து அங்கிருந்து ஏழுமலை செல்லும் சாலையிலுள்ள கோட்டைப்பட்டியில் இவரது ஜீவசமாதி உள்ளது,

இவரது பிரதான சீடர் குருநாத சுவாமியின் உடல் இவரது ஜீவசமாதிக்கு நேர் உள்ளது,

குழந்தையானந்த சுவாமிகள்
இவரது ஜீவசமாதி நான்கு இடங்களில் உள்ளது.
முதன் முதலாக ஜீவசமாதி கொண்டது காசித் தலத்தில்,,இவருடைய ஜீவசமாதி இவருடைய குருநாதர் ஸ்ரீ கணபதி பாபவின் ஜீவசமாதிக்கு அருகில் உள்ளது,
இரண்டாவது,நேபாளத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ பசுபதிநாதர் ஆலயத்தில் உள்ளது,
மூன்றாவது,தமிழகத்தில் தென்காசிக்கு வந்து சன்னதி மடம் தெருவில் உள்ள சங்கரன் பிள்ளை என்பவரது வீட்டிற்குள் ஜீவசமாதி அடைந்தார்,இது நெல்லையப்பர் சமாதி என்று அழைக்கப்படுகிறது,
நான்காவது,மதுரை அரசடிப் பகுதியில் காளவாசல் பஸ் ஸ்டாப்புக்கு அருகில் உள்ளது,

நாகநாத சுவாமிகள்
மதுரை மேலூரிலிருந்துஏரியூர் செல்லும் பாதையில் உள்ள வடவன்பட்டியில் கிழக்கு எல்லையில் சாலைக்கு வடபுறமுள்ள ஊராட்சி மன்றக் கட்டடத்திற்கு நேர் எதிரில் தெற்கே இவரது ஜீவசமாதி உள்ளது,

இடைக்காடர்
இடைக்காட்டூர் மணிகண்டீஸ்வரர் கோயிலில் இவரது ஜீவசமாதி உள்ளது, மதுரை ( மாட்டுத்தாவணி) அல்லது மானாமதுரையிலிருந்து இங்கு வரலாம்,

சத்குரு
உசிலம்பட்டி- தேனி சாலையில் ஆண்டிப்பட்டியை அடுத்த எம்,சுப்பலாபுரம் என்னும் இடத்தில் இவரது ஜீவசமாதி உள்ளது,

சிங்கம்புணரி வாத்தியார் சுவாமிகள்
முத்துவடுக நாத சுவாமிகள்
சிங்கம்புணரி பஸ் நிலையத்தின் அருகில் இவரது உள்ளது,

தங்கவேல் சுவாமிகள்
(மற்றும்)
சுப்பையா சுவாமிகள்
மதுரை ஆரப்பாளையம் பஸ் நீலையத்திற்கு மேற்கே சிறிது தொலைவில் உள்ள வைகை நகர் அருகில் நெ,10.ஆரப்பாளையம் மெயின் ரோடு இந்த ஜீவசமாதிகள் இருக்கும் இடமாகும்,

மாதவ ஆனந்த சுவாமிகள்
இவரது ஜீவசமாதி ,80.டி,மீனாட்சி இல்லம் ,நேர் நகர் ,அழகப்பா நகர்,மதுரை -3.அழகப்பா நகர் ரயில்வே கேட் பஸ் ஸ்டாப்பில் இறங்கி அரை கி,மீ,தூரம் நடந்தால் இவரது ஜீவசமாதி உள்ளது,

ரமணகிரி சுவாமிகள்
மதுரையை அடுத்த வாடிப்பட்டியிலிருந்து 7.கி,மீ.தொலைவிலுள்ள குட்லாம்பட்டியில் இவரது ஜீவசமாதி உள்ளது,

சுந்தரானந்த சுவாமிகள்
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திலேயே ஜீவசமாதி அடைந்திருக்கிறார்,

மாயாண்டி சுவாமிகள்
மதுரை - திருப்பரங்குன்றம் சாலையில் தியாகராசர் இன்ஜினியரிங் காலேஜ் ஸ்டாப்பில் இறங்கி மலையடிவாரம் சென்றால்,இவரது ஜீவசமாதி உள்ளது,

சோமப்ப சுவாமிகள்
மாயாண்டி சுவாமிகள் ஜீவசமாதி இருக்கும் இடத்திலிருந்து மலை மீது இருக்கும் முருகன் கோயிலுக்குச் செல்லும் வழியில் இவரது ஜீவசமாதி உள்ளது,

மச்சமுனி
இவரது ஜீவசமாதி திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் மலை மீது உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தில் இவரது ஜீவசமாதி உள்ளது.
அங்குள்ள சுனையில் இன்றும் மீன் வடிவில் ஐயா வாழ்வதாக நம்பிக்கை உள்ளது.

சட்டை நாதர்
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே திருவேடகம் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது,

முத்தானந்த சுவாமி

 இவரது ஜீவசமாதி தல்லாகுளத்தில் முத்தானந்த சுவாமி மடம் தெருவில் உள்ளது. 
இவரது குருநாதர் சங்கரநாராயணன் சுவாமிகள் மற்றும் குருவின் மகன் தெட்சிணாமூர்த்தி சுவாமிகள் இருவரின் ஜீவசமாதி சங்கரன்கோவில் கரிவலம் அருகில் பனையூரில் உள்ளது.
இவர்களின் வழி சீடர் கணபதி சுவாமிகள்
இவருடைய ஜீவசமாதி குன்றக்குடி பஸ் நிறுத்தத்திற்கு அருகிலுள்ளது.

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

செவ்வாயின் கதிர்வீச்சு பூமியில் வைத்தீஸ்வரன் கோவில் மற்றும் பழனி தலத்தில் மட்டுமே அதிகமாக விழுகிறது....

_சித்தர்கள் பூமியான பழனியின் ஆச்சரியம் 
அப்படிப்பட்ட அற்புதச்சிலையை பிரதிஷ்டை செய்ததோடு மட்டுமல்லாமல் அதை செயல்பட வைக்க குரு பெருமான் தன ஜீவ மற்றும் ஆத்ம சக்தியை அதற்குள் பிரதிஷ்டை செய்தார்.

ஒரு நாள் இரண்டு நாள் அல்ல *200 வருடங்கள் அந்த மாபெரும் தவத்தை* செய்து நிறைவேற்றினார். ஒரு துளியும் அளவு தப்பாத துல்லியம் என்பது  அந்த சிலையின் நிர்மாணத்தில் இருந்தது. பதினெட்டு சித்தர்களின் திறன்களும் அதில் அடங்கி இருந்தது. இந்த உலகின் பெரும்பகுதி அழிவு என்பது இந்த சிலையினால் காப்பாற்றும் அளவிற்கு அந்த சிலையானது அமைக்கப்பட்டது.

இந்த சிலை என்ன செய்யும்

நாம் சூப்பர் மார்க்கெட் போன்ற பகுதிகளுக்கு சென்றோமேயானால் கவனித்திருப்போம் ஒரு பொருளை வாங்கியவுடன் அதை பணம் செலுத்தும் இடத்திற்கு கொண்டு  சென்று அதை காட்டினால் அதில் உள்ள மின்னணு குறியீட்டை அந்த சிஸ்டம் படித்து பார்த்த உடனே அது தொடர்பான அனைத்துவிதமான தகவல்களையும் வெளியே கொண்டு வந்துவிடும்.அந்த நுணுக்கம் தான் இந்த சிலையிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த சிலையின் முன்பாக யார் சென்றாலும் அது உடனே அவர்களின் எண்ணஅலைகளை படித்துவிடும். அதை அப்படியே திருப்பி பல மடங்காக தந்துவிடும். அதை தவிர அதற்கு வேறு எதுவும் தெரியாது. *நாம் அந்த சிலையின் முன்பாக சென்று கடந்து விட்ட அந்த நொடியே நாம் மாறியிருப்போம். அந்த மாற்றத்தை மட்டும் நாம் புரிந்திருக்கவே மாட்டோம்.*

இன்னும் சொல்வதானால் அதை நாம் தான் புரிந்துகொள்ளாமல் அதை பயன்படுத்த தெரியாமல் விழிப்புணர்வுத்தன்மை இல்லாத காரணத்தால் வாழ்வில் உடல் மற்றும் மனநோயால் அவதிப்பட்டு வருகிறோம். *செவ்வாயின் கதிரை உள்வாங்கும் மைக்ரோ ரிஸீவரான இந்த சிலை மட்டும் இந்த பூமியில் நிறுவப்படவில்லை எனில் நாமெல்லாம் இப்படி பேசிக்கொண்டிருக்க இந்த பூமி இருந்திருக்காது.* இந்த அளவுக்கு உலகம் குறித்து சிந்தனை செய்த குழந்தை உள்ளம் கொண்ட ஒருவரை இந்த பூமியில் இருந்தால் காட்டுங்களேன்.

உலகமெங்கும் தன்னுடைய ஆன்மீக ஆய்வுகள் அனைத்திலும்  வெற்றி கண்ட நம் போகர் பெருமான்மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணி *பூமி மற்றும் ரத்தம் சம்பந்தபட்ட கிரகமான செவ்வாயின் கதிர்வீச்சு இந்த பூமிக்கு சீராக கிடைத்தால் இந்த பூமிக்கு சுபிட்சம் கிடைக்கும்* என்று எண்ணினார் என்றும் அதன் விளைவாகத்தான் தண்டாயுதபாணி சிலை நிர்மாணம் என்று சொன்னோம். ஏனெனில் இந்த பூமியில் நடக்கும் இயற்கை மாற்றங்கள், போர் மற்றும் உடல் ஆரோக்கியம் என்பது செவ்வாயின் கதிர்வீச்சை பொறுத்தே தான் அமைகிறது .ஏனெனில் செவ்வாய் தான் அதற்கு அதிகாரி போல். அதனால் தான் அதனை சீர் செய்வதன் மூலம் பூமிக்கு நன்மைகள் செய்ய முடியும் என எண்ணினார்.

உலகம் எங்கும் சுற்றி ஆய்வு செய்து பார்த்ததில் செவ்வாயின் கதிர்வீச்சு பூமியில் வைத்தீஸ்வரன் கோவில் மற்றும் பழனி தலத்தில் மட்டுமே அதிகமாக விழுகிறது என்பதை கண்டறிந்தார். இந்த இரண்டு தலத்திலும் பழனி மலையின் மேல் பகுதியில் மட்டும் சுமார் 95  சதவீதற்கும் மேலாக விழுவதை கண்டுணர்ந்தார். அதன் பின்னர் தான் அணைத்து சித்தர் பெருமக்களையும் கூட்டி செவ்வாயின் கதிர்வீச்சை செம்மை படுத்த என்ன செய்யலாம் என ஆலோசனை செய்தார்.

அந்த ஆராய்ச்சியின் முடிவில் தான் இந்த யோசனை அவர்களுக்கு உதித்தது. பாஷாணங்கள் மொத்தம் 64 . இதில் இயற்கையாக 32 ம் செயற்கையாக 32 பூமியில் கிடைக்கிறது.  அதில் அவர்கள் எடுத்ததோ வெறும் ஒன்பதை மட்டுமே. அந்த ஒன்பதிலும் 4448 மூலிகைகளின் சாரம் அடங்கியுள்ளது. 81 வகை உபரேஷன்களின் தன்மை அதில் அடங்கி உள்ளது.

இந்த ஒன்பது வகையான பாஷாணங்கள் தனித்தன்மைகள் ஆராயப்பட்டன. ஒவ்வொரு பாசனத்தில் அளவுகள் தீர்மானிக்கப்பட்டன. செய்யப்போகும் முறைகள் தீர்மானிக்கப்பட்டன. இத்தனைவிதமான மாபெரும் ஆய்வுகளுக்கு பின்னரே அந்த சிலை நிர்மாணம் செய்யப்பட்டது.

ஒன்பது பாஷாணங்களும் அதன் விகிதாச்சாரப்படி கலக்கும்போது அது செவ்வாயின் கதிர்வீச்சை அப்படியே உள்வாங்கும் திறனை பெரும்  அளவிற்கு செய்யப்பட்டது.  சிலை மொத்தம் மூன்று அடுக்குகளை கொண்டு செய்யப்பட்டுள்ளது. *மேலடுக்கு செவ்வாயின் கதிர்வீச்சை ஈர்க்கும் விதமாகவும் அதன் அடுத்த அடுக்கு அதை கடத்தி உள்ளே கொண்டு செல்லும் விதமாகவும் உள் அடுக்கானது அதை சேமிக்கும் விதமாகவும்* உருவாக்கினார்கள். மேலும் அதிசயமாக அது கதிர்வீச்சின் தன்மையை சீர்படுத்தி வெளியற்றவும் செய்தது. 

இதன் அடிப்படை தத்துவம் எளிதாக சொல்வதானால் செல்போன் டவர். அது எவ்வாறு வெளியில் இருந்து அலைகளை பெற்று நமக்கு கிடைக்க செய்கிறதோ அந்த சூத்திரம் தான்.

*தான் கற்றுணர்ந்த வித்தைகளை மொத்தம் தன் குருவிற்கு பெருமை சேர்க்கும் விவிதமாஓமமாக இந்த சிலை செய்வதற்காக போகர் பயன்படுத்தினார் என்று சொன்னாலும் மிகை ஆகாது.*
சிலை செய்து முடித்தபின்னர் தன்னுடைய ஜீவசக்தியை கொண்டு பிராண பிரதிஷ்டையும் செய்தார். தற்போது அந்த சிலை நூறு சதவீதம் செவ்வாயின் கதிர்வீச்சை உள்வாங்கும் receiver ஆகவே மாறிவிட்டது. 
ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

Followers

மனிதனை மாமனிதனாக்குகிறது தியானம்

தூங்காமல் தூங்கி சுகம் பெறுதல் ஞான வழி என்ற தியானம் “தூங்கிக்கண்டார் சிவலோகமும் தம்உள்ளே தூங்கிக்கண்டார் சிவயோகமும் தம் உள்ளே ...