Saturday, May 4, 2024

ஞாயிற்றுகிழமையில் வந்திருக்கும் பிரதோஷம். ராகுகாலமும் இணைந்திருக்கும் பிரதோஷம்.

 ஞாயிற்றுக்கிழமை பிரதோஷம். மகத்தான பிரதோஷம். ஞாயிற்றுகிழமையில் வந்திருக்கும் பிரதோஷம். ராகுகாலமும் பிரதோஷமும் இணைந்திருக்கும் பிரதோஷம்.
ஓம் நமசிவா
 நீக்கும் ராகுகாலத்தில் பிரதோஷ பூஜையை தரிசியுங்கள். கிரக தோஷங்கள் அனைத்தும் விலகும். தீய சக்திகள் அனைத்தும் அகலும். எதிர்ப்புகள் தலைதெறிக்க ஓடும். இதுவரை இருந்த தடைகள் எல்லாம் நீங்கும். தடைபட்டிருந்த மங்கல காரியங்கள் நடந்தேறும். வாழ்வில் வளத்துடனும் நலத்துடனும் நிம்மதியும் சந்தோஷமுமாக வாழ்வீர்கள் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். வாழ்வில் வளமும் நலமும் பெறுவீர்கள்.
ராகுகாலம் என்பது ஒவ்வொரு நாளும் ஒன்றரை மணி நேரம் இருக்கக்கூடியது. திங்கட்கிழமை காலை 7.30 முதல் 9 மணி வரை ராகுகாலம். செவ்வாய்க்கிழமை மாலை 3 முதல் 4.30 மணி வரை ராகுகாலம். புதன் கிழமை 12 முதல் 1.30 வரை ராகுகாலம்.வியாழக்கிழமை 1.30 முதல் 3 மணி வரை ராகுகாலம். வெள்ளிக்கிழமை காலை 10.30 முதல் 12 மணி வரை ராகுகாலம். சனிக்கிழமை காலை 9 முதல் 10.30 மணி வரை ராகுகாலம்.

பொதுவாகவே, ராகுகாலத்தில் ஆலயத்துக்குச் செல்வதும் சுவாமி வழிபாடு செய்வதும் நவக்கிரகத்தை வலம் வருவதும் விசேஷமானவை. முக்கியமாக துர்கையின் சந்நிதியில் விளக்கேற்றுவதும் எலுமிச்சை தீபமேற்றி வழிபடுவடுவதும் எண்ணற்ற பலன்களைத் தந்தருளும். குறிப்பாக, ராகுகாலத்தில், விளக்கேற்றி வழிபடுவதால் தீயசக்திகள் நம்மை அண்டாது என்பது ஐதீகம்.

சிவ வழிபாடு என்பது மிகுந்த பலன்களையும் பலத்தையும் தந்தருளக்கூடியது. சிவனாரை வழிபடுவதற்கு உரிய நாளாக சிவராத்திரியும் பிரதோஷமும் சொல்லப்படுகிறது. அந்த நாட்களில் பக்தர்கள் விரதம் மேற்கொள்வார்கள். சிவாலயத்துக்குச் செல்வார்கள். நந்திதேவருக்கும் சிவலிங்கத் திருமேனிக்கும் அபிஷேக ஆராதனையை கண்ணார தரிசித்து மனதார பிரார்த்தனை செய்துகொள்வார்கள்.

பிரதோஷ நேரம் என்பது மாலை 4.30 முதல் 6 மணி வரை உள்ள காலம். அதேபோல், ஏழு நாட்களில் ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை ராகுகாலம். ஆக, பிரதோஷத்துடன் ராகுகாலமும் இணைந்து வருவது ஞாயிற்றுக்கிழமையில்தான்!

நாளை டிசம்பர் 10ம் தேதி  ஞாயிற்றுக்கிழமை பிரதோஷம். கார்த்திகை  மாதத்தின் மகத்தான பிரதோஷம். ஞாயிற்றுகிழமையில் வந்திருக்கும் பிரதோஷம். ராகுகாலமும் பிரதோஷமும் இணைந்திருக்கும் பிரதோஷம்.
நம்முடைய 7 தலைமுறையை சேர்ந்த சாபங்கள் பாவங்கள் நீங்குவதற்கும் நமது பெற்றோர்கள் நமது முன்னோர்கள் நமது மூதாதையர்கள் என நமது 267 தம்பதிகள் செய்த பாவத்தை போக்கும் அற்புதமான மந்திரம்.
பாவங்களை போக்கும் அற்புத மந்திரம்
ஓம் ஸ்ரீ சோம நாதீஸ்வராய நமஹா
ஓம் ஸ்ரீ மல்லிகார்ஜுணேஸ்வராய நமஹா
ஓம் ஸ்ரீ மஹா காலேஸ்வராய நமஹா
ஓம் ஸ்ரீ ஓங்காரம் மலேஸ்வராய நமஹா
ஓம் ஸ்ரீ வைத்திய பீம சங்கரேஸ்வராய நமஹா
பிரதோஷ நாட்களிலும் மாதம்தோறும் வரும் சிவராத்திரி நாட்களிலும் மிகவும் பழமையான சிவாலயங்களில் அமர்ந்து இந்த மந்திரத்தை ஒரு முறை சொன்னாலே போதும்.
செய்த அனைத்து பாவங்களும் நீங்க வாய்ப்பு உண்டு , பல அற்புதங்கள் வாழ்வில் நிகழும்.அதிசயங்களும் நடக்கலாம் என்று பெரியோர் சொல்லி வைத்துள்ளனர் , சிவபெருமானை கும்பிட கசக்கின்றதா என்ன ?
அற்புதமான இந்தநாளில், அருகில் உள்ள சிவன் கோயிலுக்குச் செல்லுங்கள். சிவனாருக்கும் நந்திதேவருக்கும் நடைபெறும் அபிஷேக ஆராதனைகளை தரிசியுங்கள். அப்படியே நவக்கிரகத்தை ஒன்பது முறை பிராகார வலம் வந்து சனீஸ்வரருக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுங்கள்.

கிரக தோஷங்கள் அனைத்தும் விலகும். தீய சக்திகள் அனைத்தும் அகலும். எதிர்ப்புகள் தலைதெறிக்க ஓடும். இதுவரை இருந்த தடைகள் எல்லாம் நீங்கும். தடைபட்டிருந்த மங்கல காரியங்கள் நடந்தேறும். வாழ்வில் வளத்துடனும் நலத்துடனும் நிம்மதியும் சந்தோஷமுமாக வாழ்வீர்கள் என்கிறார்கள்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

ஐயப்பனுக்கு திருமணம் நடைபெறும் ஒரே கோவில் இது தான்.

கடவுளின் தேசமான இயற்கை எழில் கொஞ்சும்  கேரள மாநிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஐயப்பனின் அறுபடை வீடுகளில் ஒன்றான , ஐயப்பன் திருமண...