Saturday, May 4, 2024

காலாட் படைக்கு தலைமை தாங்கி ஸ்ரீவராகி அன்னை வழிநடத்தினாள்.

தல் கடவுளாகிய மன்மதன் சிவன் மீது ஐந்து மலர்கள் கொண்ட அம்பினை எய்தான். தவம் கலைந்த சிவன் காமனை எரித்து விட்டார். சாம்பலில் இருந்து தோன்றியவன் தான் பண்டாசுரன்.
இவன் சிவனைக் குறித்து தவம் செய்து உடல் வலிமை பெற்றான்.  சிவனின் அருள் பெற்று மூவுலகையும் ஆட்டிப் படைத்தான்.  இவனுடைய வாரிசுகள் தான் சண்டன், முண்டன், விஷங்கன், விசுக்கிரன் என்பவர்களும் மற்றும் பலர் ஆவர்.   வழக்கம்போல் தேவ அசுரப் போர் நடந்தது.  அசுரர்களை அடக்க ஸ்ரீராஜராஜேஸ்வரி  தோன்றினாள். இவள் பாசம், அங்குசம் இவற்றினை மேல் இருகைகளிலும் மலரம்பு, கரும்புவில் இவற்றினை கீழ் இரு கைகளிலும் தாங்கியவண்ணம் தோன்றினாள்.  பண்டாசுரனையும் மற்ற அரக்கர்களையும் கொன்று குவிக்க உறுதி பூண்டாள். ஸ்ரீராஜராஜேஸ்வரி போர் படைகளை தம் உடலில் இருந்து தோன்றுவித்தாள்.

கரும்பு வில்லில் இருந்து சியாமளா தேவி என்ற ராஜமாதங்கியையும், ஐந்து மலர்கள் கொண்ட கணைகளில் இருந்து தண்டநாதா என்ற வராகியையும் தோன்றுவித்தாள்.  அம்பிகையின் பாசத்தில் இருந்து அஸ்வரூடா என்ற குதிரைக்காரியையும், அங்குசத்தில் இருந்து சம்பத்கரி என்ற தேவியையும் தோன்றுவித்தாள். 

இப்போரில் தேர்படை மற்றும் காலாட் படைக்கு தலைமை தாங்கி ஸ்ரீவராகி அன்னை வழிநடத்தினாள். சம்பத்கரி என்னும் தேவதை யானை படைத் தலைவியாக இருந்து போர் புரிந்தாள். குதிரைப் படைக்குத் தலைவியாக குதிரைக்காரி என்று அழைக்கின்ற அஸ்வரூடா என்ற தேவதை போர் புரிந்ததாள்.

சும்மா 20 ஆண்டுகளுக்குள் ஸ்ரீவராகி வழிபாடு வெகுவேகமாக வளர்ந்து வருகிறது.  இது குறித்து மகிழ்ச்சியே. சாதாரண நிலையில் உள்ளவர்களுக்கு சாதாரணமாக ஒருசில செயல்கள் வெற்றிகரமாக நடந்து வருகிறது.  புதிது புதிதாக உபாசகர்கள் எனக் கூறிக் கொண்டு பலர் தோன்றியுள்ளனர். அஸ்வரூடாவை வராகி என்று அழைக்கிறார்கள்.  வராகியை அஸ்வரூடா என்று அழைக்கிறார்கள்.  சில கோயில்களில் அர்ச்சகர்கள் கூட சமஸ்கிருதமும் தெரியாமல் தமிழும் தெரியாமல் வராகியை அஸ்வரூடா என்றே அழைக்கிறார்கள்.  மாரியம்மனை 'மாரியம்மன்' என்றுதான் அழைக்க வேண்டும்.  காளியை ' காளி ' என்றுதான் அழைக்க வேண்டும்.  காளியின் புகைப்படத்தை வைத்துக் கொண்டு அல்லது சிலையை வைத்துக் கொண்டு மாரியம்மன் மந்திரத்தை சொல்வது எதிர் விளைவுகளை உண்டாக்கும்.   

இதுபோன்று வணங்குகின்றவர்களையும் வணங்க வைக்கின்ற குருமார்களையும் விவரம் புரியாமல் இதுபோன்ற கருத்துக்களை  பரப்புகிறவர்களுக்கும் அதிக அளவு துன்பம் ஏற்படும்.   அஸ்வ வாகன வராகியை வணங்கியதால்தான் சோழர்கள் உலகையே ஆண்டார்கள். 

எனவே அஸ்வ வாகன வராகியை வணங்குங்கள் என்று சொல்ல வந்த ஒரு அன்பர் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னால் அஸ்வரூடாவை வணங்குங்கள் என்று கூறிவிட்டார்.   தாம் செய்தது தவறு என பின்னால் உணர்ந்தாலும் அவர் மறைவது வரை அதை திருத்திக் கொள்ளவில்லை. 

பலர் இன்றும் வராகியை வணங்கும் பொழுது அஸ்வரூடா  மந்திரத்தை கூறி வருவதால்தான் பல துன்பங்களுக்கு ஆளாகிறார்கள். அஸ்வ வாகன வராகி வராக முகத்தோடுதான் இருக்கும். 

அஸ்வரூடா குதிரை மீது அமர்ந்து இருந்தாலும் பெண் முகத்தோடுதான் இருப்பாள். 

தெய்வக் குற்றம் செய்து தவறுதலாக வணங்கிய பல தமிழக மந்திரிகள் தங்களது மந்திரி பதவிகளை இழந்து இருக்கிறார்கள்.   இதைப்போல் வணங்கிய சில தமிழக எதிர்க்கட்சி தலைவர்கள் அந்த பதவியையும் இழந்து முகவரி தெரியாமல் போய் கொண்டு இருக்கிறார்கள்.   சிலர் பலகோடி ரூபாய்களை இழந்து சிறை தண்டனை அனுபவிக்கும் அளவுக்கும் ஆளாகி இருக்கிறார்கள்.  சிதம்பரத்திலே சிவகாமி அம்மன் சன்னதியில் கொடிமரத்திற்கு  அருகிலுள்ள மேற்கூரையில் உள்ள புகைப்படதினை இங்கு இணைத்துள்ளேன்.  இதனை அனைவரும் அறிந்து கொள்ளவேண்டும்.  குறிப்பாக வராகியை வணங்குகின்ற இளம் தலைமுறையினர் தவறு செய்யக்கூடாது என்பதற்காக அந்த  புகைப்படத்தை இத்துடன் இணைத்துள்ளேன். 

சுமார்40 ஆண்டுகளுக்கு முன்னால் தில்லைக்காளி உள்பிரகார சுற்றுசுவரில் இந்த அஸ்வரூடாவின் புகைப்படத்தினை அடியேன் பார்த்து இருக்கிறேன்.   என்னோடு அஸ்வரூடாவின் புகைப்படத்தை பார்த்தவர்களும் இப்பொழுது உயிரோடு இருக்கிறார்கள். 

இளம் தலைமுறையினரே ! 
அஸ்வருடா வேறு,  வராகி வேறு என்பதை உணர்ந்து வழிப்பட்டு பல நன்மைகள் பெறுவீர்கள்.
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

ஐயப்பனுக்கு திருமணம் நடைபெறும் ஒரே கோவில் இது தான்.

கடவுளின் தேசமான இயற்கை எழில் கொஞ்சும்  கேரள மாநிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஐயப்பனின் அறுபடை வீடுகளில் ஒன்றான , ஐயப்பன் திருமண...