Monday, May 6, 2024

பச்சையம்மன் தோன்றிய கதை

குலதெய்வ வழிபாடு என்பது அனைவருக்கும் மிகமிக முக்கியமானது. அப்படிப்பட்ட குலதெய்வங்கள் எப்படி தோன்றின? குலதெய்வங்களின் வரலாறு என்ன என்பதை அறிய பலருக்கும் ஆர்வம் இருக்கும். அதன்படி இன்று குலதெய்வங்களில் ஒன்றான பச்சையம்மன் வரலாற்றை தெரிந்து கொள்வோம் வாங்க..

பச்சையம்மன் தோன்றிய கதை :

பிருங்கி முனிவர் சிவபெருமானின் தீவிர பக்தர். இவர் சிவனை தவிர வேறு எந்த தெய்வத்தையும் வணங்கமாட்டார். ஒருமுறை சிவன் பார்வதிதேவி இருவரும் இணைந்து அனைத்து முனிவர்களுக்கும் காட்சியளித்து அருள் செய்து வந்தனர். அப்போது சிவனை தரிசிக்க சென்ற பிருங்கி முனிவர் பார்வதி தேவியை தரிசிக்க மறுத்து, பார்வதி தேவியை அவமதித்தார். இதனால் பார்வதி தேவி சிவனின் உடம்பில் பாதி இடம் வேண்டும் என கேட்டாள். ஆனால் இதற்கு சிவன் ஒப்புக்கொள்ளவில்லை. மேலும் பிருங்கி முனிவர் வண்டு உருவில் சென்று சிவனை மட்டும் வலம் வந்து, ஆசி பெற்று சென்றார்.

பிருங்கி முனிவர் தன்னை வணங்காததாலும், சிவன் தனது உடம்பில் பாதி இடம் கொடுக்காததாலும், கோபமடைந்த பார்வதி தேவி, பிருங்கி முனிவரை சபித்து எலும்புக்கூடாக மாற்றிவிட்டாள். மேலும் சிவனை நோக்கி தவம்புரிந்து அவரின் உடம்பில் பாதியாக வேண்டுமென நினைத்தாள். இதற்காக தவம் செய்ய பூலோகம் சென்றாள் பார்வதி தேவி.

பூலோகத்தில் ஒரு பச்சைப்பசேல் என இருக்கும் வாழைத்தோப்பில், பந்தல் போட்டு லிங்கம் அமைத்து தவம் செய்ய தொடங்கினாள். முதலில் லிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய நீர் தேவை என்பதால், தனது புத்திரர்களான விநாயகரையும், முருகரையும் அழைத்து நீர் கொண்டு வர கூறினாள். அதனால் விநாயகர் மலையின் உச்சியில் தவம் செய்து கொண்டிருந்த ஒரு முனிவரின் கமண்டலத்தில் இருந்து நீரை தட்டி விட்டு, அந்த நீரில் கமண்டல நதியை உருவாக்கி அந்த நீர் பார்வதி தேவியை நோக்கி செல்லுமாறு செய்தார்.

முருகனோ அருகில் உள்ள மலைக்கு சென்று, தனது வேலை மலையில் குத்தி நீர் ஊற்றை உருவாக்கி, அந்த ஊற்று செய்யாறாக மாறி பார்வதி தேவியை நோக்கி செல்லுமாறு செய்தார். தனது புத்திரர்கள் அனுப்பிய நீர் பார்வதி தேவிக்கு கிடைக்கும் முன்னர் அவரே ஒரு நீர் ஊற்றை உருவாக்கினாள். அதன்மூலம் லிங்கத்திற்கு அபிஷேகம் செய்து தவம் மேற்கொண்டு சிவனின் பாதியாக பச்சையம்மன்.

No comments:

Post a Comment

Followers

மனக்குறைகளைத் தீர்க்கும் திருச்செந்தூர் சித்தர் ஜீவசமாதிகள்..

_மனக்குறைகளைத் தீர்க்கும் திருச்செந்தூர் சித்தர் ஜீவசமாதிகள்..._ திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அழகிய முறை...