Friday, December 6, 2024

குழந்தை பாக்கியம் திருமண பாக்கியம் சத்திய மூர்த்தி பெருமாள் திருக்கோயில் திருமயம்...

அருள்மிகு சத்திய மூர்த்தி பெருமாள் திருக்கோயில், திருமயம்- 622 507 புதுக்கோட்டை மாவட்டம்
முக்கிய ஊர்களிலிருந்து தூரம் : திருச்சியிலிருந்து - 72 கி.மீ.; புதுக்கோட்டையிலிருந்து - 22 கி.மீ.; மதுரையிலிருந்து - 84 கி.மீ. மதுரை - புதுக்கோட்டை நெடுஞ்சாலையிலிருந்து திருமயம்உள்ளது.எனவே.மதுரை,புதுக்கோட்டையிலிருந்து பேருந்து வசதி உண்டு.

கோயில் பெருமைகள்
பல்லவர் காலத்தில் சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக ஒரே சுற்றுச்சுவருடன் இக்கோயிலும் இதற்கு பக்கத்தில் உள்ள பெருமாள் கோயிலும் இருக்கின்றன.இருகோயில்களும் திருமயம் மலைச் சரிவில் ஒரே கல்லில் குடைவரைக் கோயில்களாக விளங்குகிறது.இந்த சத்திய மூர்த்தி பெருமாள் ஆலயத்தை தனியே சுற்றி வரமுடியாது. மூலவர் சந்நிதி குடைவரைக் கோயிலாக அமைந்துள்ளது என்பது மிகவும் சிறப்பு
குழந்தை பாக்கியம் திருமண பாக்கியம் ஆகியவை நிறைவேறுகிறது. உஜ்ஜீவனத்தாயாரை வழிபட்டால் நிச்சயம் குழந்தை பாக்கியம் மற்றும் சகல சௌபாக்கியம் பெறலாம்.மேலும் மனநிலை சரியில்லாதவர்கள் பேய், பிசாசு பிடித்தவர்கள் நரம்பு தளர்ச்சி நோயில் துன்புறுபவர்கள் பலர் இத்தாயாரை வழிபட்டால் தங்கள் பிரச்சினைகள் நீங்கும் என்பது இத்தலத்துக்கு வரும் பக்தர்களின் நம்பிக்கை

இத்தலத்தில் எழுந்தருளியுள்ள பெருமாள் சத்தியமூர்த்தி எனும் திருநாமத்துடன் நின்ற திருக்கோலத்தில் சோமச்சந்திர விமானத்தின் கீழ், ஒரு கரத்தில் பிரயோகச் சக்கரத்துடன் மற்றொரு கரத்தில் சங்குடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். சத்தியமூர்த்தி பெருமாள் பெயரால் இத்தலம் சத்ய சேத்ரம் என்றும் அழைக்கப்படுகிறது.

இத்தலத்திற்கு திருமெய்யம் எனும் பெயர் வரக்காரணமாகிய பெருமாள் திருமெய்யர் எனும் திருநாமத்துடன் மற்றொரு சன்னதியில் பாம்பணை மேல் பள்ளிகொண்டு காட்சி அளிக்கிறார். இத்திருஉருவம் இந்தியாவிலேயே மிகப்பெரியது என்றும் கூறப்படுகிறது.பெருமாளின் பங்கையற் கண்கள் அரைக்கண்ணாக மூடியிருக்க இதழ்களில் மென்நகையுடன் பாம்பணை மேல் பள்ளி கொண்ட நிலையில் வலக்கரம் ஆதிசேசனை அணைத்துக் கொண்டு காட்சி தருகிறார்.சுற்றிலும் தேவர்கள் ரிஷிகள் பெருமாளின் நாபிக் கமலத்திலிருந்து புறப்படும் தாமரை மலரில் பிரம்மாவும் மார்பில் குடியிருக்கும் மகாலட்சுமியும் மாமல்லபுரச் சிற்பங்கள் போல் மலையை குடைந்து பாறைகளில் செதுக்கப்பட்ட இச்சிற்பங்கள் தெய்வீக உணர்வையும் கலையுணர்வையும் ஒருங்கே ஏற்படுத்துகின்றன. 7ம் நூற்றாண்டுக் குடவரைக்கோயில் சத்ய மகரிஷிக்கு பெருமாள் காட்சி தந்த தலம்.

மங்களாசாசனம்: மையார் கடலும் மணிவரையும் மாமுகிலும் கொய்யார் குவளையும் காயாவும் போன்று இருண்ட மெய்யானை மெய்ய மலையானைச் சங்கேந்தும் கையானை கைதொழாக் கையல்ல கண்டோமே. -திருமங்கையாழ்வார்

சிறப்புகள்
வைகாசி பௌர்ணமி தேர் - 10 நாட்கள் - 5 ஆயிரம் பக்தர்கள் கூடுவர். ஆடிபூர திருவிழா - 10 நாள் திருவிழா. கிருஷ்ணஜெயந்தி, வைகுண்ட ஏகாதேசி ஆகிய நாட்களில் கோயிலில் பக்தர்களின் வருகை லட்சக்கணக்கில் இருப்பது சிறப்பு, தமிழ், ஆங்கில வருடபிறப்பு,தீபாவளி, பொங்கல் ஆகிய விசேச நாட்களில் பெருமாளுக்கு சிறப்பு அபிசேக ஆராதனைகள் நடைபெறும்.. 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்.. 

No comments:

Post a Comment

Followers

திருவாரூர் தேருக்கு 10 சக்கரங்கள் இருந்தன என்பது உங்களுக்கு தெரியுமா ?

  திருவாரூரில் தங்க கோவில் பற்றி உங்களுக்கு தெரியுமா ? திருவாரூர் தேருக்கு 10 சக்கரங்கள் இருந்தன என்பது உங்களுக்கு தெரியுமா ? தி...