Monday, May 19, 2025

சக்கரத்தாழ்வார் பின்புறம் நரசிம்மர் ரகசியம் என்ன?

சக்கரத்தாழ்வார் சிலை பின்புறம் நரசிம்மர் சிலையின் ரகசியம் என்ன?
பெருமாள் கோயில்களில் சக்கரத்தாழ்வாருக்கு எப்போதும் தனி சன்னிதி உண்டு. அவரின் பின்புறத்தில் கண்ணாடி வழியாக பார்க்கும்போது யோக நரசிம்மரும் காட்சி தருவார். அது ஏன் என்று எப்போதாவது நீங்கள் யோசித்ததுண்டா? அதைப் பற்றி இனி அறிவோம்.

யார் இந்த சக்கரத்தாழ்வார்?: பெருமாளின் கைகளில் ஐந்து முக்கியமான ஆயுதங்கள் வைத்திருப்பார். அதில் பாஞ்சஜன்யம் எனப்படும் சங்கும், சுதர்சன சக்கரமும் மிகவும் முக்கியமானவை. பக்தர்கள் கூப்பிட்ட குரலுக்கு பெருமாள் சென்று அவர்களை காப்பாற்றும் முன் அவரது கையில் இருக்கும் சுதர்சன சக்கரம் விரைவாக சென்று அவர்களின் துன்பம் தீர்க்கும் என்பது ஐதீகம். 16 திருக்கரங்களைக் கொண்டவர் சக்கரத்தாழ்வார். பகவான் தனது ராமாவதாரத்தில் அவருடைய உடன் பிறந்த தம்பிகளில் ஒருவன் பரதன். அவரே சக்கரத்தாழ்வாராக அவதாரம் எடுத்திருக்கிறார்.

நரசிம்ம பெருமாள்: திருமாலின் பத்து அவதாரங்களில் தாயின் கருவில் தோன்றாமல் அவசரகதியில் தூணில் இருந்து தோன்றியவர் நரசிம்மர். ‘இந்தத் தூணில் உனது நாராயணன் இருக்கிறாரா?’ என்று இரணியன் கேட்டு அதை பிளப்பதற்கு முன்பு அவசரமாக நரசிம்ம அவதாரம் எடுத்து அதற்குள் சென்றவர் நரசிம்மர். அதனால் நரசிம்ம அவதாரத்தை, ‘அவசர திருக்கோலம்’ என்று அழைப்பார்கள்.

சக்கரத்தாழ்வாரும் நரசிம்மரும் இணைந்து இருப்பது ஏன்?: பக்தர்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி சென்று அவர்களைக் காப்பது சக்கரத்தாழ்வார் வழக்கம். அதுபோல பிரகலாதன் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து அருள்புரிந்த நரசிம்மர், பக்தர்கள் கூப்பிட்ட குரலுக்கும் உடனே ஓடோடி வருவார். மனம் உருகி வேண்டி நிற்கும் பக்தர்களுக்கு நாராயணனின் கையில் இருக்கும் சக்கரம் சுழன்று ஓடோடி பக்தனைக் காப்பது போல அவருக்கு பின்னால் யோக நிலையில் அமர்ந்திருக்கும் நரசிம்மர் உடனடியாக ஓடி வந்து பக்தர்களின் குறை தீர்ப்பார் என்பது ஐதீகம். அதனால்தான் இருவரும் இணைந்து இருக்கிறார்கள்.

சக்கரத்தாழ்வாரை நம்பி வழிபட்டால் சங்கடங்கள் நீங்கி வாழ்வில் சகல நன்மைகளும் உண்டாகும். அதேபோல நாளை என்பது நரசிம்மரிடத்தில் இல்லை. கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து காக்கக்கூடிய தெய்வம் அவர். எனவே, அவர்கள் இருவரையும் ஒருசேர வணங்கி அருள்பெறுவது மிகவும் சிறப்பு.

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Saturday, May 17, 2025

திருவாரூர் தியாகராஜர் கோவிலின் 50 சிறப்புகள்..

திருவாரூர் தியாகராஜர் 
           கோவிலின் சிறப்புகள்
1. சைவ கோவில்களில் மிகப்பெரியது இதுவே. கோவில் ஐந்து வேலி, குளம் ஐந்துவேலி, ஓடை ஐந்துவேலி என்பர்.

2. உலகிலேயே மிகப்பெரிய தேர் திருவாரூர்த் தேர்தான்.

3. திருவாரூர் கோவிலில் சோழப் பேரரசர்கள், நாயக்கமன்னர்கள், மராட்டிய மன்னர்கள் ஆகியோர் திருப்பணி செய்துள்ளனர்.

4. திருவாரூர் கோவில் பழமைச் சிறப்புடையது. தில்லை கோவிலையும் விட பழமையானது.

5. சேக்கிழார் இந்நகரம் தொன்மையானது என்றும், இது திருமகளால் வழிபடப் பெற்றது என்றும், சுந்தரர் பொருட்டுப் பரவையிடம் தூது

நடந்த இறைவனின் தாமரையடிகளின் மணம் தெருவில் வீசுகிறது என்றும் குறிப்பிடுகிறார்.

6. கழற்சிங்க நாயனாரின் பட்டத்தரசி இறைவனுக்குரிய மலரினை எடுத்து முகர்ந்து பார்த்தாள் என்பதற்காகச் செருந்துறை நாயனார் அவள் மூக்கை அரிந்தது இத்தலத்தில்தான்.

7. இவ்வாலயம் தியாகராசர் திருக்கோவில் என்று இன்று அழைக்கப்படுகிறது. இதனுள் தேவாரத் தலங்களான பூங்கோவில், அரநெறி ஆகிய இரண்டும் அமைந்துள்ளன.

8. சப்தவிடங்கத் தலங்களுள் முதலாவது இத்தலமாகும். நாகைக்காரோணம், திருநள்ளாறு, திருமுறைக்காடு, திருக்காறாயில்,திருவாய்மூர், திருக்குவளை என்பன மற்ற சப்தவிடங்கத் தலங்களாகும்.நற்றுணையாவது அண்ணாமலையாரே 🙏

9. திருவாரூர் கோவிலுக்கு கமலாலயம் என்ற திருப்பெயரும் உண்டு. திருமகள் வருணனின் மகளாக பிறந்து திருமாலை மணம்புரிந்து கொள்வதற்காக புற்றிடங்கொண்ட பெருமானை வழிபட்டு வரம் பெற்றாள். அதனால் இத்தலத்துக்கு கமலாலயம் என்னும் பெயர் வந்தது.

10. திருவாரூர் கோவிலில் உள்ள தேவாசிரிய மண்டபம் பெருஞ்சிறப்புக் குரியது. இங்கேதான் பெரிய புராணத்தின் முதல் நூலான திருத்தொண்டத் தொகை பிறப்பதற்கு காரணமான அடியார்கள் எழுந்தருளினார்கள். திருத்தொண்டத் தொகை பிறந்த இடமும் இதுதான்.

11. தேவாரப் பாடல்களை அதிகமாகப் பெற்ற ஆலயங்களுள் இரண்டாவதாக திகழ்வது திருவாரூர். முதலாவதாக திகழ்வது தோணிபுரம். அதற்கு 71 பதிகங்கள் உள்ளன. இதற்கு 34 பதிகங்கள் இருக்கின்றன.

12. பஞ்ச பூதத் தலங்களுள் திருவாரூர் பிருதிவி(மண்)தலமாகத் திகழ்கிறது. காஞ்சீபுரத்தையும் பிருத்திவித் தலமாகச் சொல்வதுண்டு.

13. திருவாரூரில் பிறக்க முக்தி என்பார்கள்.

14. முதலாம் ஆதித்தன் (கி.பி. 871- 907) காலக் கல்வெட்டு முதல் 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த மராத்திய மன்னர் சரபோஜி காலம்
வரையிலான கல்வெட்டுக்கள் கோவிலில் காணப்படுகின்றன.
நற்றுணையாவது அண்ணாமலையாரே 🙏

15. மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்றாலும் சிறந்து விளங்குவது திருவாரூர் ஆகும்.

16. திருவாரூரில்தான் சுந்தரமூர்த்தி சாமிகளின் அருள்வாழ்வு மலர்ந்தது.

17. திருவாரூர் கோவில் கட்டப்பட்ட 
காலம் வரையறுத்துக் கூறப்படவில்லை. தமிழகத்தை ஆண்ட புகழ் பெற்ற மன்னர்களின் கைவண்ணமும் கல்வெட்டுகளும் இத்திருக்கோவிலில் 
இடம் பெற்றுள்ளன.

18. திருஞான சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்க வாசகர் ஆகிய நால்வராலும் பாடப்பெற்றது திருவாரூர். 330 தேவாரப் பாடல்களும், திருவாசப் பாடல்களும் உள்ளன.

19. அருணகிரிநாதர், சங்கீத மும்மூர்த்திகள் தியாகையர், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள், கயிலை ஞானப்பிரகாசர், குருஞான சம்பந்தர், இரட்டைப் புலவர், அந்தகக் கண் வீரராகவ முதலியார், மாமன்னார் சகாஜி, வள்ளலார் ராமலிங்க அடிகளார் முதலானோராலும் திருவாரூர் திருத்தலம் போற்றிப் பாடப் பெற்றுள்ளது.

20. ஸ்ரீ தியாகராஜ சாமி கர்ப்பக்கிரக விமானத்துக்கு தங்கத் தகடு போர்த்தி முதலாம் ராஜேந்திர சோழன் குடமுழுக்கு செய்ததாக இக்கோவிலின் கல்வெட்டு கூறுகிறது.

21. 17-ம் நூற்றாண்டில் தஞ்சையை ஆண்ட மன்னர் சரபோஜி திருவாரூர் தியாகராஜர் மீது தமிழில் பலநூறு கீர்த்தனைகள் பாடியுள்ளார்.

22. இக்கோவில் அம்பிகை ஞானசக்தியாகவும் (கமலாம்பிகை) கிரியா சக்தியாகவும் (நீலோத்பலாம்பாள்) இச்சா சக்தியாகவும் (கொண்டி) வடிவு கொண்டு அருள் புரிகிறாள்.

23. மதுரையில் இறைவன் 64 திருவிளையாடல்கள் புரிந்தது போல் 
இவ்வூர் தியாகராசர் பெருமாள் 364 திருவிளையாடல்கள் புரிந்ததாகப்
புராண வரலாறு கூறுகிறது.

24. தியாகராஜ சாமியை திருமால் தன் மார்பில் வைத்து வழிபட்டாராம். அவரின் மூச்சுக் காற்றாய் விளங்குவதால் தியாகராஜ சாமிக்கு அஜபா நடனமூர்த்தி என்றும் பெயர்.நற்றுணையாவது அண்ணாமலையாரே 🙏

25. சுந்தரமூர்த்தி சாமிகள் இவ்வூர் இறைவன் தியாகராஜாவிடம் தோழமை கொண்டு பழகினார் என்று புராணம் கூறுகிறது. இவர் இழந்த கண்ணில் ஒன்றை மீளா அடிமை உமக்கே என்ற பதிகம் பாடி இக்கோவிலில் பெற்றார்.

26. எங்குமே கண்டறிய முடியாத எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்ட பரம்பொருளை திருவாரூரில் கண்டு கொண்டேன் கண்டவுடன் அவன்
ஒருவனைத் தவிர மற்ற எல்லாவற்றையும் மறந்து விட்டேன் என்றார் அப்பர் பெருமான்.

27. திருவாரூர் தலம் பற்றி செந்தமிழ் இலக்கியங்களில் மட்டுமின்றி வடமொழி, தெலுங்கு, மராத்தி போன்ற பல மொழி இலக்கியங்களிலும் போற்றிச் சிறப்பிக்கப்பட்டுள்ளது.

28. திருவாரூர் எப்போது தோன்றியது என்று கூற முடியாத மிகப்பழமையான புண்ணியத் தலங்களில் ஒன்றாகும்.

29. திருவாரூர் என்றால் அருமையான ஊர், அரிய ஊர் என்று பொருள்.

30. பிரம்மன், விஷ்ணு, பதினோரு ருத்திரர்கள், தேவ தேவியர்கள், இந்திரன் முதலான வானவர்கள், பிற வானலோக வாசிகள் அனைவரும் ஒரே சமயத்தில் ஒன்றாகக் கூடியிருந்து சிவபூஜை செய்து பரம்பொருளை வழிபட்ட அரிய தலம்.

31. கோடி முனிவர்கள் ஒரே சமயத்தில் வழிபட்டுக் கோடி வடிவமாக ஈசன் திருக்காட்சியைப் பெற்ற அருமையான அரிய தலம்.

32. சப்தரிஷிகள் ஒரே சமயத்தில் ஒன்றாக வந்து சிவபூஜை புரிந்ததாலும் திருவாரூர் என்று பெயர் பெற்றது.

33. திருவாரூர் உலகத்திற்கு மூலாதாரமாக விளங்குவதால் மூலாதாரபுரம் என்று பெயர் பெற்றது.

34. பெரிய புராணமும் பரிபாடல் என்ற சங்க இலக்கியமும் தேவர்கள் இத்தலத்தில் ஈசனைப் போற்றிப் புரிந்த பூஜையையும் யாகங்களையும் போற்றுகின்றன.நற்றுணையாவது அண்ணாமலையாரே 🙏

35. திருவாரூர் கோவிலில் யாக சாலை, மகாயாக சாலை, பிள்ளையார் யாக சாலை, முருகன் யாகசாலை எனப் பல பெயர்களில் யாகசாலைகள் உள்ளன.

36. படைக்கும் தெய்வம் பிரம்மன் நாள்தோறும் சிவபூஜை செய்து வாழ்ந்த தலமாதலால் திருவாரூக்கு பிரம்மமேசம் என்று பெயர்பெற்றது.

37. பல்வேறு திருத்தலங்களிலும் கிடைக்காத வரங்கள் திருவாரூரில் ஆரூரராகிய வான்மீக நாதரையும் தியாகராஜரையும் வழிபடுவதால்
கிடைக்கும்.

38. திருவாரூரில் ஆண்டிற்கு ஐம்பத்திரண்டு திருவிழாக்கள் நடைபெற்று திருவிழாவூராக திகழ்ந்ததைக் கோவில் கல்வெட்டு
போற்றுகின்றது.

39. திருவாரூர்ப் பொற்கோவிலைச் சங்கப் புலவர் பரணரின் சிவபெருமான் திருவந்தாதியும் திருநாவுக்கரசர் தேவாரமும் சேக்கிழாரின்

பெரிய புராணமும் போற்றுகின்றன. செம்பொன் தியாகர் என்ற பெயர் தியாகராஜர் திருமேனி தங்கத் திருமேனியாகத் திகழ்ந்ததைத்
தெரிவிக்கின்றது.

40. சோழ மன்னர்கள் தியாகராஜ சுவாமிக்குப் பொற்பல்லக்கு முதலியவற்றைக் காணிக்கையாக அளித்ததையும் கோவிலில் பொன்தகடு
வேய்ந்ததையும் கோவில் கல்வெட்டுகள் கூறுகின்றன. நற்றுணையாவது அண்ணாமலையாரே 🙏

41. பட்டினச்சாமி என்ற தாமரைப் பூ வியாபாரி ஒரு வைகாசித் திருநாளன்று தாமரைப் பூக்களை விற்காமல் அத்தனைப் பூக்களையும் ஆனந்தேஸ்வரருக்கு அளித்தார். இதன் பலனாக அந்த வியாபாரி மறுபிறவியில் பாராளும் மன்னர் ஆனார்.

42. ஆரூர் இறைவனை வழிபட்ட முனிவர்கள், சித்தர்களின் உருவங்கள் பல்வேறு சந்நிதிகளிலும் சந்நிதிச் சுவர்களிலும் பிரகாரங்களிலும்
தூண்களிலும் காணப்படுகின்றன. திருக்குளத்து நாகநாதர் கோவில் கருவறை வாசலிலும் முனிவர் சித்தர் உருவங்கள் உள்ளன. 

43. பிள்ளையில்லாத அம்சன் என்ற அரசன் சித்தீஸ்வரரின் திருவருளால் பிள்ளைப்பேறு பெற்றதோடு பல அரிய சித்திகளும் பெற்று சித்தீசன் என்றே பெயர் கொண்டான்.

44. அரசர்களும் எண்ணற்ற பக்தர்களும் காலந்தோறும் திருவாரூர்ப் பெருமானைப் பூஜித்து வாழ்வும் வளமும் பெற்றுள்ளனர். இவ்வாறு காலந்தோறும் ஆயிரக்கணக் கானவர்களால் பிரதிட்டைசெய்யப்பட்டு பூஜிக்கப்பட்ட லிங்கங்களைக் காட்டும் வகையில் ஆயிரம் சிறுசிறு லிங்கங் களைக் கொண்ட சகஸ்ரலிங்கம் உட்பிரகாரத்தில் உள்ளது.நற்றுணையாவது அண்ணாமலையாரே 🙏

45. அறுபத்து மூவருள் நமிநந்தி அடிகள், செருத்துணை நாயனார், கழற்சிங்கர், விறன்மிண்டர் ஆகியோரின் முக்தித் தலம்.

46. சுந்தரமூர்த்தி நாயனாரின் தாயாரான இசைஞானியார் அவதரித்தத் (கமலாபுரம்) தலம்; இது திருவாரூரிலிருந்து மன்னார்குடி
பாதையில் 7-கி.மீ. தொலைவில் உள்ளது. இத்தலத்தில் சிவன் கோயில் ஏதுமில்லை (2005). திருவாரூர் தெற்குக் கோபுரத்திற்கு வெளியே,bபரவையார் வாழ்ந்த கிழக்கு நோக்கிய மாளிகை வளாகத்தில் இசைஞானியாருக்குத் திருவுருவச் சிலை உள்ளது.

47. திருவாரூர் - கோயில், குளம், வீதி, தேர்த்திருவிழா ஆகியவற்றைப் பற்றிய தேவாரத் திருப்பாடல்களைக் கொண்டத் திருத்தலம்.

48. திருவாரூர்க் கோயில் - தியாகராஜர் திருக்கோயில், திருமூலட்டானம், பூங்கோயில் என்றெல்லாம் சிறப்பிக்கப்படுகிறது.

49. சோழர்கள், பாண்டியர்கள், விசயநகர வேந்தர்கள் ஆகியோரின் கல்வெட்டுகள் மொத்தம் 65 உள்ளன.

50 . வாழ்வில் அனைத்து விதமான குற்றங்குறைகளையும் போக்கி வளமான நலமான வாழ்வருளிச் சிறப்புடன் வாழவைக்கும் சிவதலங்களில் இத்தலமும் ஒன்று...

 ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

சற்குணநாதர் கல்யாணேசுவரர் இடும்பாவனம்.


சற்குணநாதர் (சற்குணேசுவரர், கல்யாணேசுவரர், இடும்பானேசுவரர்)
*தாயார்:
மங்களநாயகி (மங்கள வல்லி, கல்யாணேசுவரி)

*தல விருட்சம்:
வில்வம்

*தீர்த்தம்:
பிரம்ம தீர்த்தம். 

*பாடல் பெற்ற தலம்.
தேவாரம் பாடியவர்
திருஞானசம்பந்தர்.             

*வழிபட்டோர்: பிரமன், அகத்தியர், யமன், ராமபிரான்.  

*பிரம்மதேவர் சத்வ குணங்கள் பெற வேண்டி தவம் புரிந்து, சிவபெருமானை இங்கு வழிபட்டு அருள் பெற்றதால் இத்தல இறைவன் சற்குணேசர், சத்குண நாதர் என்று அழைக்கப்படுகிறார்.    

*மகாபாரதக் காலத்தில் வாழ்ந்த இடும்பன் பூசித்துப் பேறுபெற்ற தலமாதலின் இத்தலம் "இடும்பாவனம்" எனப் பெயர் பெற்றது.           

*பஞ்ச பாண்டவர்களுள் ஒருவனான பீமன் "தலைமறைவு" வாழ்க்கை வாழ வேண்டிய கட்டாயம் வந்தபோது இடும்பாவனத்துக்கு வந்து அருகில் உள்ள இடும்பனின் தலைநகரமாகிய குன்றளூரில் இடும்பியைக் கண்டு மணம் புரிந்து பின்னர் பீமன் இடும்பியுடன் பிரம்ம தீர்த்தத்தில் மூழ்கி, சிவபெருமானை வணங்கி அருள் பெற்றதாக வரலாறு.          

*அகத்திய மாமுனிவர் இறைவனின் மணக்கோலம் கண்ட தலங்களுள் ஒன்றாக "இடும்பாவனம்" புகழப்படுகின்ற,து. கருவறையில் இறைவனுக்குப் பின்புறம் இந்த திருமணக்கோலம் உள்ளதை தரிசிக்கலாம்.     

*சாந்த குணத்தை அளிப்பதில் தன்னிகர் அற்ற தலமாக  திருஇடும்பாவனம் விளங்குகிறது. 

*பிரம்மதேவனுக்கு அடிக்கடி கோபம் வந்தது. அவர், சிவபெருமானிடம் வந்து  கோபப்படும் தனது குணத்தை மாற்றி அருளுமாறு வேண்டினார். இறைவனும் அசரீரி வாக்காக, இடும்பாவனம் சென்று தன்னையும், அம்பிகையையும் பூஜித்து பலன் அடையும்படி கட்டளையிட்டார். அதன்படி இடும்பாவனம் வந்த பிரம்மா, வில்வ மரத்தடியில் நீண்ட காலம் தவம் இருந்தார். பிரம்மாவின் தவவலிமை கண்ட சிவபெருமான், அம்பிகை, விநாயகர், முருகனுடன் பிரம்மாவுக்குத் தரிசனம் தந்து, சாத்வீக குணத்தை பிரம்மாவுக்கு தந்தருளிய சிறப்புடைய தலம் இடும்பாவனம்.   

*கோபமுற்று சில செயல்களை செய்துவிட்டு அல்லது பேசிவிட்டு அதனால் ஏற்படும் எதிர்மறை விளைவுகளால் பாதிக்கப்பட்டு அவதிப்படுவர்கள் நம்மில் ஏராளம்.      

*கோபம்  உடலில் பாதிப்புகளை ஏற்படுத்தும். மற்றும் மன அழுத்தத்தை உண்டாக்கும்.
இதற்கு மருந்தாக சாந்த குணத்தை அளிக்கும் தலமாக இடும்பாவனம் விளங்குகிறது.    

*சற்குணேஸ்வரரை வழிபட்டால் மன அமைதியும், அற்புத வரங்களையும் பெறலாம்.
வாழ்வில் ஏற்படக்கூடிய இடர்களை நீக்க வல்லவர் இந்த சற்குணேஸ்வரர். 

“இடுக்கண் பல களைவான் இடம் இடும்பாவனம்” என்று திருஞான சம்பந்தர் தனது  பாடலில் இக்கருத்தினை உறுதிப்படுத்துகின்றார்.                 

*பிதுர்க்கர்மாக்களைச் செய்வதற்கு இத்தலம் மிகவும் விசேஷமானதாகக் கருதப்படுகிறது. சிவராத்திரியன்று உபவாசம் இருந்து இங்குள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராடி சற்குணநாதரை வணங்கினால், முன்னோரது பாவங்கள் நீங்கி அவர்கள் மோட்சம் பெறுவர் என்பது நம்பிக்கை. 

*திருத்துறைப்பூண்டியில் இருந்து  16 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை மற்றும் முத்துப்பேட்டை போன்ற இடங்களில் இருந்து இங்கு வர நேரடிப் பேருந்துகள் உள்ளன.      

                            ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Friday, May 16, 2025

பைரவர் சூலத்துக்குப் பதிலாக கதாயுதத்துடன் காட்சி தருகிறார்.

மூலவர் : #தேசிகநாதர்.
 தாயார் : #ஆவுடைநாயகி
 தல விருட்சம் :  மாமரம்
 தீர்த்தம்: பைரவதீர்த்தம்
 பழமை : 500 வருடங்களுக்குள்
 புராண பெயர் : தேசிகநாதபுரம்
 ஊர் : நகரசூரக்குடி
 மாவட்டம் : சிவகங்கை
     
 #தல_சிறப்பு: பொதுவாக பைரவர், கையில் சூலத்துடன் காட்சி தருவார். ஆனால் இங்குள்ள ஆனந்த பைரவர் சூலத்துக்குப் பதிலாக கதாயுதத்துடன் காட்சி தருவது சிறப்பு. 
     
#திறக்கும்_நேரம்: காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்  
     
பொது தகவல்: கார்த்திகை மாதத்தில் சம்பகசஷ்டி, மார்கழி தேய்பிறை அஷ்டமியில் "பைரவர் ஜென்மாஷ்டமி' விழா நடக்கிறது. சம்பகசஷ்டியின்போது ஆறு நாட்கள் ஹோமம் நடக்கிறது.

நவக்கிரக மண்டபம் உள்ளது. காசி விஸ்வநாதர், விசாலாட்சி, வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர், மகாலட்சுமி, சரஸ்வதி, நால்வர் மற்றும் அறுபத்துமூவர் உள்ளனர். காவல் தெய்வமான முனீஸ்வரர், வட்டமான பீட வடிவில் இருக்கிறார்
நேர்த்திக்கடன்: 
     
பிரார்த்தனை நிறைவேறியவர்கள் சுவாமி, பைரவருக்கு வஸ்திரம் அணிவித்து, விசேஷ வழிபாடு செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகிறார்கள்  
     
#தலபெருமை: இந்த பைரவரே இத்தலத்தின் பிரதான மூர்த்தியாவார். பக்தர்கள் முதலில் பைரவரை வழிபட்ட பின்பே, சிவன், அம்பாளை வணங்குகிறார்கள். இங்கு சிவன், அம்பாளுக்கு செய்யப்படும் கற்பூர ஆரத்தியை பக்தர்கள் கண்ணில் தொட்டு வைக்க அனுமதி கிடையாது. பைரவருக்கு ஆரத்தி எடுத்த கற்பூரத்தட்டையே பக்தர்களுக்கு காட்டுகிறார்கள். பைரவருக்கு முக்கியத்துவம் தரும் வகையில், இவ்வாறு செய்வதாக சொல்கிறார்கள். தேய்பிறை அஷ்டமியில் இங்கு சிறப்பு ஹோமம் நடக்கிறது. ஹோமம் முடிந்ததும் சுவாமிக்கு விசேஷ அபிஷேக, அர்ச்சனை நடந்து அதன்பின் பைரவர் உற்சவர் பிரகார உலா செல்கிறார்.

பஞ்சமூர்த்தியில் ஒருவர்: சிவன் கோயில்களில் விழாக்களின் போது, சுவாமி, அம்பாள், விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் ஆகிய மூர்த்திகளே பஞ்சமூர்த்திகளாக வீதியுலா செல்வர். ஆனால், இக்கோயிலில் நடக்கும் ஆனி உத்திர விழாவில் சண்டிகேஸ்வரருக்கு பதிலாக பைரவர் வீதியுலா செல்வது விசேஷம். பைரவர் தலம் என்பதால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோஷ்டத்திலுள்ள யோக தெட்சிணாமூர்த்தி சிம்ம மண்டபத்தில் காட்சிதருகிறார். இவரது தலையில் கிரீடம் அணிந்துள்ளது வித்தியாசமான அம்சம்.

முதல்பூஜை சூரியனுக்கு: தினமும் இக்கோயிலில் காலை பூஜையில் முதலில் சூரியனுக்கு பூஜை செய்யப்பட்டு, அதன்பின்பே பிற சுவாமிகளுக்கு பூஜை நடக்கிறது. சூரியன் இத்தலத்தில் தவமிருந்தவர் என்பதால், இவ்வாறு செய்வதாக சொல்கிறார்கள். சூரியனால் வழிபட்ட தலம் என்பதாலும், சூரியச்செடிகள் நிறைந்த வனமாக இருந்ததாலும் "சூரியக்குடி' எனப்பட்ட இத்தலம், பிற்காலத்தில் "சூரக்குடி' என மருவியது.

நடராஜர், தெற்கு நோக்கி இருக்கிறார். சுவாமி சன்னதி எதிரிலுள்ள நந்தி, சிம்மங்கள் தாங்கும் மண்டபத்தில் உள்ளது. பைரவர் சன்னதியின் பின்புறம் பிரகாரத்தில் மற்றொரு பைரவர், கையில் கதாயுதத்துடன் காட்சி தருகிறார். 
 
#தல_வரலாறு: 
     
  பார்வதிதேவியின் தந்தை தட்சன், ஒரு யாகம் நடத்தினான். ஆனால், மருமகன் சிவபெருமானை யாகத்திற்கு அழைக்கவில்லை. யாகத்தில் அவிர்பாகம் (பலன்) ஏற்பதற்காக சூரியன் கலந்து கொண்டார். அப்போது சிவன் தன் அம்சமான வீரபத்திரரை அனுப்பி யாகத்தை நிறுத்தச் சொன்னார். வீரபத்திரர், யாகத்தை நிறுத்தியதோடு அதில் கலந்து கொண்ட சூரியன் முதலானவர்களை தண்டித்தார்.

சிவனின் கோபத்திற்கு ஆளான சூரியன், பூலோகம் வந்து இத்தலத்தில் தங்கி விமோசனம் கேட்டு அவரை வழிபட்டார். சிவனும் அவர் மீது கருணை கொண்டு காட்சிதந்து சாப விமோசனம் தந்தார்.இதன் அடிப்படையில் இவ்விடத்தில் சிவனுக்கு கோயில் எழுப்பப்பட்டது.

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

ஆஞ்சநேயரிடம் இருக்கும் 10 வித அதிவீரசக்திகள்...

ஆஞ்சநேயரிடம் இருக்கும் 10 விதமான சக்திகள்
இது தான்
கலியுகத்தில் கண் கண்ட கடவுளாக இருந்து, பக்தர்களை காப்பதற்காக பூமியில் வசித்து வருவதாக சொல்லப்படும் தெய்வம் அனுமான். ராம பக்தியை, ராம நாமத்தின் பெருமையை அனைவரும் அறிய செய்ய வேண்டும் என்பதற்காக நித்யசிரஞ்ஜீவியாக இருந்து பக்தர்களை காக்கக் கூடியவர். ஒரு தெய்வத்தை வணங்கினால் பல தெய்வங்களின் அருளை வழங்கும் ஆற்றல் அனுமானுக்கு மட்டுமே உண்டு. அதனாலேயே அனுமனை வழிபடும் பக்தர்கள் அதிகம். அவரிடம் இருக்கும் முக்கியமான 10 சக்திகள் பற்றி பக்தர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.

அனுமன், ஆஞ்சநேயர், மாருதி, வாயு புத்திரன் என பலவிதமான பெயர்களால் அழைக்கப்பட்ட ராம பக்தன் அனுமன், சிவ பெருமானின் ருத்ர அவதாரமாக கருதப்படுபவர். ராமாயணத்தில் மட்டுமின்றி மகாபாரதத்திலும் மிகவும் முக்கியமான கதாபாத்திரமாக அனுமான் கருதப்படுகிறார். இவரை பற்றி புராணங்களில் பலவிதமான கதைகள் சொல்லப்படுகின்றன.

ஆஞ்சநேயரிடம் இருக்கும் 10 விதமான சக்திகள் இது தான்
கலியுகத்தில் கண் கண்ட கடவுளாக இருந்து, பக்தர்களை காப்பதற்காக பூமியில் வசித்து வருவதாக சொல்லப்படும் தெய்வம் அனுமான். ராம பக்தியை, ராம நாமத்தின் பெருமையை அனைவரும் அறிய செய்ய வேண்டும் என்பதற்காக நித்யசிரஞ்ஜீவியாக இருந்து பக்தர்களை காக்கக் கூடியவர். ஒரு தெய்வத்தை வணங்கினால் பல தெய்வங்களின் அருளை வழங்கும் ஆற்றல் அனுமானுக்கு மட்டுமே உண்டு. அதனாலேயே அனுமனை வழிபடும் பக்தர்கள் அதிகம். அவரிடம் இருக்கும் முக்கியமான 10 சக்திகள் பற்றி பக்தர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.

அனுமன், ஆஞ்சநேயர், மாருதி, வாயு புத்திரன் என பலவிதமான பெயர்களால் அழைக்கப்பட்ட ராம பக்தன் அனுமன், சிவ பெருமானின் ருத்ர அவதாரமாக கருதப்படுபவர். ராமாயணத்தில் மட்டுமின்றி மகாபாரதத்திலும் மிகவும் முக்கியமான கதாபாத்திரமாக அனுமான் கருதப்படுகிறார். இவரை பற்றி புராணங்களில் பலவிதமான கதைகள் சொல்லப்படுகின்றன.

அனுமனின் பெருமைகளை கூறும் மந்திரத்தை அனுமன் சாலிசா என்றும், அனுமனின் வீரம், அழகு, சாகசங்களை, பலம் ஆகியவற்றை கூறுவாத சுந்தர காண்டம் என்றும் சொல்கிறோம். இந்த இரண்டு நூல்களை படித்தாலும் எப்படிப்பட்ட கஷ்டமாக இருந்தாலும் நீங்கி விடும். மிகவும் சக்தி வாய்ந்த இந்த இரண்டையும் படிப்பதால் அனுமானின் பரிபூரணமான அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ராம பக்தன், தைரியம், வீரம், நட்பு உள்ளிட்ட பல விஷயங்களுக்கு எடுத்துக் காட்டாக அனுமனை தான் நான் சொல்லுவதுண்டு. இது தவிர ஆஞ்சநேயருக்கு மிக முக்கியமான 10 சக்திகள் உள்ளன. இந்த 7 சக்திகளால் தான் அனமனை பலத்திற்குரிய தெய்வமாகவும், சிரஞ்னீவி என்றும் அழைக்கிறோம்.

ஆஞ்சநேயரின் 10 சக்திகள் :

1. எந்த ஒரு ஆயுதத்தாலும் தாக்கவோ, மரணத்தை விளைவிக்கவோ முடியாதவர் என விஸ்வகர்மாவால் ஆசீர்வாதிக்கப்பட்டவர் ஹனுமான்.

2. என்றும் மரணம் நெருங்காமல், அழிவில்லாமல் இருக்கக் கூடியவர் என எம தர்ம ராஜாவிடம் இருந்து வாழ்த்து பெற்றவர்.

3. இந்த உலகத்தில் எந்த ஆயுதத்தால் கொல்ல முடியாதவர் என பிரம்ம தேவரிடம் வரம் பெற்றவர்.

4. புயலுக்கு அல்லது வாயு தேவனுக்கு இணையான வேகம் பெற்றவர். அதனாலேயே இவரை மாருததுல்யவேகம் என குறிப்பிடுவதுண்டு.

5. புத்தி கூர்மையில் தலை சிறந்தவர். அதனால் தான் அனுமனை குறிப்பிடும் போது புத்திமதாம்வரிஷ்தம் என குறிப்பிடுகிறார்கள்.

6. அனைத்து புலன்களையும் வென்றவர் அல்லது புலன்கள் அனைத்தையும் தன் வசம் கட்டுப்படுத்தி வைத்திருப்பவர் என்று பொருள்.

7. இரும்பு போன்ற உடலையும், பலம் வாய்ந்த ஆயுதமான கதாயுதத்தை தாங்கி இருப்பவர் என்பதாலேயே இவரை பஜ்ரங்கபலி என்றும் பக்தர்கள் போற்றுகிறார்கள்.

8. நினைத்த நேரத்தில் தன்னுடைய உருவத்தை மாற்றிக் கொள்ளவும், மறைக்கவும் கூடிய ஆற்றல் மிக்கவர்.

9. பிரம்மா, விஷ்ணு, சிவன் மற்றும் துர்க்கையை வழிபட்ட பலனையும், இவர்கள் நான்கு பேரின் குணங்களையும் கொண்டவர் அனுமான்.

10. நரசிம்மன், ஹயக்ரீவர், கருடன், வராகர் ஆகியோரின் பலம், தைரியம், அற்புத சக்திகள்,, எதிரிகளை வெல்லுதல் ஆகியவற்றை பெற்றவர் அனுமன்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

மலையடிப்பட்டி கண்ணிறைந்த பெருமாள் சுக்ரனுக்குரிய பரிகாரத் தலம்.

புதுக்கோட்டை கீரனூர் கிள்ளுக்கோட்டை அருகேயுள்ள மலையடிப்பட்டி
கண்ணிறைந்த பெருமாள் கோவில்
நவக்கிரகங்களில் சுக்ரனுக்குரிய பரிகாரத் தலம்.

அனந்த சயன மூர்த்தியாகக் காட்சி அளிக்கிறார்.

திருமயம் குடை வரைக் கோவிலைப் போலவே சிவனுக்கும், விஷ்ணுவுக்கும் இயற்கைச் சூழலில் அருகருகே ஒரே குன்றின் மீது எழுப்பப்பட்டுள்ள குகைக் கோவில்தான் மலையடிப்பட்டி கோவில். 

ஆலயக் கல்வெட்டுகளில் இவ்வூர் 'திருவாலத்தூர் மலை' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இங்கு அனந்த சயன மூர்த்தியாகக் காட்சியளிக்கும் விஷ்ணு வீற்றிருக்கும் ஆலயம், திருப்பதி ஆலயத்திற்கு நிகராக போற்றப்படுகிறது.

இங்குள்ள சிவன் கோவில், திருமால் கோவிலைவிட காலத்தால் முற்பட்டதாக இருக்கிறது. மலையடிப்பட்டி குகைக் கோவில் களுக்கு மிக அருகில் களியாப்பட்டி, விசலூர் போன்ற இடங்களில் வேறு சில பழங்கால குகைக் கோவில்களும் காணப்படுகின்றன.

 இந்தியத் தொல்பொருள் துறையின் பராமரிப்பின் கீழ் இவை அனைத்தும் உள்ளன.

மலையடிப்பட்டி கோவிலில், நந்திவர்ம பல்லவன் காலத்து கல்வெட்டு (கி.பி 775-826) இருக்கிறது. 
அந்தக் கல்வெட்டில் 16-வது நூற்றாண்டில், குறிப்பாக கி.பி. 730-ல் குவாவன் சாத்தன் என்பவரால் மலையைக் குடைந்து சிவனுக்குக் கோவில் எழுப்பட்டதாகவும், அந்த இறைவனுக்கு 'வாகீஸ்வரர்' எனப் பெயரிட்டதாகவும் செய்தி காணப்படுகிறது.

மலையின் கிழக்குப் பகுதியில் மலையைக் குடைந்து முன் மண்டபத்தை அமைத்திருக்கிறார்கள். 

சற்று உள்ளே சதுர வடிவில் கருவறை உருவாகி இருக்கிறது.

 பாறையைக் குடைந்து சிவலிங்கத் திருமேனியை வடித்திருக்கும் விதம் பிரமிப்பூட்டுகிறது.

 சிவலிங்கத்தின் முன் நந்தி சிலை செதுக்கப்பட்டுள்ளது.

வாகீஸ்வரர் கருவறையை அடுத்து அர்த்தமண்டபம் உள்ளது. அந்த மண்டபச் சுவரில் சப்தமாதர்கள், விநாயகர், வீரபத்திரர், சிவன், விஷ்ணு ஆகியோரது சிற்பங்கள் மலையை குடைந்து உருவாக்கப்பட்டுள்ளன.

எருமையின் முகமும், மனித உடலும் கொண்ட மகிஷாசுரனுடன் அன்னை பராசக்தி சிங்கத்தின் மீது அமர்ந்து போரிட்டு வீழ்த்தும் காட்சியும் தத்ரூபமாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

 குகையை ஒட்டியுள்ள முன்மண்டபம், விஜயநகர கால கலைப்பணியை சார்ந்தது.

சிவன் குகையின் மேற்குப் பகுதியில் விஷ்ணு குகை காணப்படுகிறது.

 இந்தக் குகைக் கோவிலில், பள்ளிகொண்ட பெருமாள் அருள்கிறார்.

 சயன கோலத்தில் இருக்கும் இறைவன் 'பள்ளிகொண்ட பெருமாள்' என்றும், 'கண்ணிறைந்த பெருமாள்' என்றும், தாயார் 'கமலவல்லி' என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார்கள்.

விஷ்ணு குகைக் கோவிலானது கருவறையையும், அதற்கு முன்பாக ஒரு மண்டபத்தையும் கொண்டது.

 இங்குள்ள தூண்கள் சிவன் கோவிலின் தூண்களைவிட மிகவும் அழகாக அமைக்கப்பட்டுள்ளன. தூணின் அடிப்பக்கம் சிங்கம் நிமிர்ந்து உட்கார்ந்திருப்பது போன்றும், அதற்கும் மேல் தூண் உயர்ந்திருப்பதையும் காணலாம்.

 இது பல்லவ மாமல்லன் காலத்துக் கலை பாணியைக் கொண்டது என்கின்றனர்.

மண்டபத்தின் சுவற்றில் வலதுபுறம் மகாலட்சுமியுடன் நரசிம்மரும், அமர்ந்த கோலத்தில் வைகுண்டப் பெருமாளும் உள்ளனர். 

இடதுபுறம் ஹயக்ரீவர் மற்றும் பெருமாள், விஷ்ணுவின் நிற்கும் தோரணையும் சித்தரிக்கப்பட்டுள்ளது.

எனவே, ஒரே இடத்தில், ஒரே அறையில் விஷ்ணுவின் நின்ற, இருந்த, கிடந்த (நின்று, உட்கார்ந்து, உறங்கும்) கோலங்களைக் கொண்ட மிகச் சில கோவில்களில் இதுவும் ஒன்றாகும்.

சயன பெருமாளை சுற்றிலும் 5 தலை கொண்ட ஆதிசேஷன், நாரதர், தும்புரு, பிரம்மா, ஜாம்பவான், தேவர்கள் உள்ளனர்.

 துவாரபாலகர்கள் கையில் தாமரையை வைத்திருக்கிறார்கள். தாயாரின் சன்னிதி காலத்தால் மிகவும் பிற்பட்டதாகும்.

மேலும் இந்தக் குகைக் கோவிலில், ஆந்திரா மாநிலம் லேபாட்சியில் உள்ள ஓவியங்களின் சாயலைக் காணமுடியும். 

முன் மண்டபத்திலுள்ள 5 குழிகளில் வலது கையின் ஐந்து விரல்களை வைத்து, இடது முழங்கையை தரையில் ஊன்றி மண்டியிட்டு, ஹரி நேத்திர தூண்கள் இடையே மூன்று வாசல்கள் வழியாக பள்ளி கொண்ட பெருமாளை தரிசிப்பதன் மூலம், ஏழு பிறவிகளில் ஏற்பட்ட பித்ரு சாபம் உள்ளிட்ட தோஷங்கள் அறவே நீங்கும் என்கின்றனர்.

கண்பார்வை தொடர்பான எல்லா நோய்களையும் நீக்கி அருள்கிறார் இத்தல பெருமாள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இந்தக் குடைவரைக் கோவிலின் அருகே இருக்கும் இந்தப் பிரமாண்டப் பாறைகளின் மேல் சமணர் படுகைகள் வரிசையாக அமைக்கப்பட்டிருக்கின்றன.

கி.பி. 7-ம் நூற்றாண்டுக்கு முன்னர் சமண சமயம் வேகமாகப் பரவி செழித்திருக்க வேண்டும் என்பதை இங்குள்ள சமணர் படுகைகள் நமக்கு உணர்த்துகின்றன. அவற்றை சுற்றி சில கல்வெட்டுகளும் உள்ளன.

கண்ணிறைந்த பெருமாள் கோவில் ஓவியங்கள், சிற்பங்கள் மற்றும் கூரை ஓவியங்கள் அனைத்தும் நாயக்கர் காலத்தில் வரையப்பட்டவை.

கோவிலுக்கு எதிரில் சக்தி வாய்ந்த தீர்த்தக்குளம் உள்ளது. இங்கே பக்தர்கள் கால்கள் படாமல் நீரை எடுத்துத் தலையில் தெளித்துக்கொண்டு, பிறகு கோவிலுக்குள் செல்ல வேண்டும்.

இங்குள்ள அழிஞ்சில் மற்றும் வில்வத்துக்கு, அருகில் உள்ள சக்தி தீர்த்தத்தில் இருந்து கால்படாமல் நீர் எடுத்து வந்து ஊற்றி, நம் கைகளால் அரைத்த மஞ்சள் பூசி, குங்குமத்தில் பொட்டிட்டு வணங்கினால் லட்சுமி கடாட்சம் பெருகும். திருமணத் தடை நீங்கும் என்றும் சொல்கிறார்கள்.

பொதுவாக கண் மற்றும் இதயம் தொடர்பான நோய்களுக்காக வேண்டிக்கொண்டு தரிசனம் செய்வதும், வேண்டுதல் நிறை வேறியதும் நேர்த்திக்கடன் செலுத்துவதும் இங்கு மரபாக உள்ளது. முன்னோர்களின் சாபம் நீங்க இப்பெருமாளுக்கு நெய் விளக்கேற்றி வழிபட வேண்டும்.

செவ்வாய், வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளிலும், ஏகாதசி மாதப்பிறப்பு நாட்கள், சிரவணம் ஆகிய நாட்களிலும் தரிசனம் செய்தால் அல்லல் நீங்கி, குபேர சம்பத்து கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இவ்வாலயத்தில் வழிபட தீபாவளி, கார்த்திகை, ஆடி மற்றும் தை மாத வெள்ளிக்கிழமைகள், புரட்டாசி சனிக்கிழமைகள் மிகச்சிறந்த நாட்களாகக் கருதப்படுகின்றன.

காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாமம் என்று தினமும் நான்கு கால பூஜைகள் நடைபெறும் இந்த ஆலயமானது, காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.

அமைவிடம்

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் இருந்து கிள்ளுக்கோட்டை செல்லும் வழியில் சுமார் 17 கி.மீ தொலைவில் உள்ளது மலையடிப்பட்டி. 

திருச்சி To புதுக்கோட்டை வழித்தடத்தில் கீரனூர். அங்கிருந்து பேருந்து வசதிகள் ஆட்டோக்கள் வசதி உள்ளது.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Thursday, May 15, 2025

திருப்பதி ஏழு மலைகள் ஒவ்வொரு மலையின் பெயரிலும் ஆழ்ந்தப் பொருளுண்டு.



திருப்பதி திருமலையில் வாழும் ஸ்ரீனிவாச பெருமாளை அனைவரும் ஏழுமலையான் என அன்போடு அழைப்பர்.
ஸ்ரீனிவாசன், கோவிந்தன், வெங்கடாசலபதி என்று பல பெயர்கள் கொண்ட, ஸ்ரீனிவாச பெருமாளுக்கு ஏழு மலைகள் உள்ளன. ஒவ்வொரு மலையின் பெயரிலும் ஆழ்ந்தப் பொருளுண்டு.

#ஒன்றாம் மலை

‘வேம்” என்றால் பாவம், ‘கட” என்றால் ‘நாசமடைதல்”. பாவங்களைப்போக்கும் மலை என்பதால் இந்த மலைக்கு ‘வேங்கட மலை” என்று பெயர். இம்மலையில் வெங்கடாசலபதியாக (ஸ்ரீனிவாசன்) மகாவிஷ்ணு காட்சி தருகிறார்.

#இரண்டாம் மலை

பெருமாளின் அவதாரத்திற்காக ஆதிசேஷன் மலையாக வந்தார். அவதாரத்திற்காக வந்த  *ஆதிசேஷன் பெயரால் ‘சேஷமலை” என்று அழைக்கப்படுகிறது.

#மூன்றாம் மலை

வேதங்கள் அனைத்தும் இங்கு மலை வடிவில் தங்கி எம்பெருமானை பூஜித்தன. எனவே இது ‘வேத மலை” என்று அழைக்கப்படுகிறது.

#நான்காம் மலை

சுவாமியை வணங்க வந்த கருடாழ்வார் வைகுண்டத்திலிருந்து ஏழுமலையை எடுத்து வந்தார். அதனால் இந்த மலை ‘கருட மலை” எனப் பெயர் பெற்றது.

#ஐந்தாம் மலை

விருஷபன் என்ற அசுரன், சுவாமியை வணங்கி மோட்சம் பெற்றதால் இம்மலைக்கு ‘விருஷப மலை” என பெயர் வந்தது.

#ஆறாம் மலை.

ஆஞ்சநேயரின் தாய் அஞ்சனை தனக்கு குழந்தைப் பாக்கியம் கிடைக்க ஆதிவராகரை வேண்டி தவமிருந்தாள். அதன் பயனாக ஆஞ்சநேயரை பெற்றாள். இவளது பெயரில் ஏற்பட்ட மலை ‘அஞ்சன மலை” எனப்படுகிறது.

#ஏழாம் மலை.
         ஆதிசேஷனுக்கும், வாயு பகவானுக்குமிடையே போட்டி ஏற்பட்டபோது, மகாவிஷ்ணு நடுவராக இருந்தார். இருவரும் பலத்தில் சமமானவர்கள் என்று தீர்ப்பளித்தார். இதனால் வாயுவும் ஆதிசேஷனும் ஆனந்தம் அடைந்தனர். இதன் காரணமாக இந்த மலைக்கு ஆனந்த மலை  என்று பெயர் வந்தது. 

இந்த ஏழுமலைகளின் காரணமாக திருப்பதி  வேங்கடவனுக்கு  ஏழுமலையான் என்று பெயர் வந்தது.

ஏழுமலையானே சரணம் 
அன்னை மகாலட்சுமியே போற்றி.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Wednesday, May 14, 2025

ராஜராஜ சோழனின் வியக்க வைக்கும் தஞ்சை பெரிய கோயில்

ராஜராஜ சோழனிடம் நான் வியந்தது 
1000 வருடங்களுக்கு முன் தென்னிந்தியாவை ஆண்ட மிக பெரிய சாம்ராஜ்யத்தின் அரசன் ஏன் வடஇந்தியாவை நோக்கி படையெடுக்காமல், சிவனுக்கு மிகப்பெரிய ஆலயம் கட்டினான்? என்ற கேள்வி பலருக்கும் எழலாம்.
.
ராஜராஜ சோழனின் ஆட்சி காலம் (985–1014) தான் தமிழ் வரலாற்றின் பொற்காலம்.பொருளாதாரம்,கட்டிடக்
கலை,சிற்பக்கலை,வணிகம்,நாகரிகம்
,விவசாயம்,கலாச்சாரம்,உணவு முறை,போர்ப்படை என்று அனைத்திலும் சோழ தேசம் மற்ற தேசத்தை காட்டிலும் பல மடங்கு முன்னேறி இருந்தது.
.
தென்னிந்தியா முழுவதையும் தன் குடைக்கீழ் கொண்டு வந்த சோழனுக்கு
தன் நாட்டின் வளர்ச்சியையும் நாகரிகத்தையும் காலத்தால் அசைக்க முடியாதபடி வரலாற்றில் பதிவு செய்ய வேண்டும் என்று ஒரு ஆசை.
அந்த ஆசையின் முழு வடிவமே இன்று உலகம் வியக்கும் க்ரானைட் கற்களால் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவில்.இந்த பதிவு கோவில் கட்டப்பட்ட தொழில்நுட்பத்தை பற்றியது அல்ல அதை விட மிக கடினமான மற்ற துறைகளை பற்றியது.
.
தஞ்சை பெரிய கோவில் தன் காலத்தில் இருந்த மற்ற கோவில்களை விட 40 மடங்கு பெரிய கோவில்.கோவில் கட்டுமானத்தில் மரம் இல்லை.
சுடு செங்கல் இல்லை பூராங்கல் இல்லை மொத்தமும் நீலம் ஓடிய,சிவப்பு படர்ந்த உயர்ந்த கிரானைட் கற்கள் மட்டுமே (சிற்பங்கள் மற்றும் மிக நுண்ணிய வேலைப்பாடுகள் உட்பட அனைத்திலும் க்ரானைட் கற்கள்தான்).
.
1,30,000ton இடையுள்ள கற்களை கொண்டு கோவில் எழுப்ப வேண்டும் என்றால் கோவில் அஸ்திவாரம் எந்த அளவுக்கு பலமாக இருக்கவேண்டும்,
அதேபோல் கர்ப்பக்கிரகத்துக்கு மேல் 216 அடி கூர்நுனி வெற்று விமானம் (HollowTower , அதாங்க கர்ப்பக்கிரகத்துல இருந்து பார்த்தா விமானம் உச்சி தெரியும்) .விமானத்தின் உச்சியில் 80ton (ரொம்பலாம் இல்ல just 72574.779kg தாங்க) இடையுள்ள கலசத்தை ஏற்ற வேண்டும்,இது போக விமானத்தின் மேல் 8 நந்தி சிலைகள் வேறு. கட்டிடக்கலையின் உச்சபட்ச அறிவு இல்லாமல் இது சாத்தியம் ஆயிருக்காது.
.
1000 வருடங்களுக்கு முன் தஞ்சை கோவில் கட்டும்பொது அது தான் இந்தியாவின் மிகப்பெரிய விமானம் கொண்ட கோவில். விமானம் முழுக்க கிரனைட் கற்களை சிற்பமாக செதுக்க வேண்டும்,மேற்கூறிய 80ton காலசத்தை வேறு ஏற்ற வேண்டும் என்றால் மிக பெரிய சாரத்தை கோவில் விமானம் சுற்றி கட்ட கட்டிடக்கலை நிபுணர்கள் எவ்வளவு துல்லியமாக ஆராய்ந்து இருப்பார்கள், இது போக எவ்வளவு கயிறு,மரக்கட்டை வேண்டும் என்றும் தீர்மானிக்க வேண்டும் , இவை அனைத்திற்கும் சிறந்த கணித அறிவு நிச்சயம் தேவைபட்டு இருக்கும்.
.
தஞ்சை பெரிய கோவிலை கட்ட 7 வருடம் ஆனது என்று வரலாறு சொல்கிறது.கோவிலை ஒரு லட்சத்திற்குக்கும் மேற்பட்ட கைதிகளின் உதவியுடன் தான் காட்டியுள்ளனர்,கைதிகள் மட்டும் இல்லை மக்களின் உதவியும் கூட.
.
கைதிகளை வைத்து தானே கட்டினார்கள் என்று ஏளனமாக நினைக்க வேண்டாம்,சற்று யோசித்து பாருங்கள்,இன்றைய நிலமையில் டெல்லி நகரில் ஒரு லட்சம் கைதிகளை வைத்து ஒரு கட்டடம் கட்ட வேண்டும் என்றால், நம் மிலிட்டரி எவ்வளவு கட்டுகோப்பாக இருக்க வேண்டும், நம் பாதுகாப்பு எவ்வளவு நேர்த்தியாக இருக்கவேண்டும்.ஒரு நிமிடம் அசந்தாலும் நாட்டின் தலைநகரம் வரைபடத்தில் இருந்து காணாமல் போகிவிடும். எந்த நேரம் வேண்டுமானாலும் கைதிகள் கலவரத்தில் ஈடுபடலாம்,தற்கொலை தாக்குதல் நடத்தலாம். எந்த அளவுக்கு சோழ காவல் படை செயல்பட்டு இருந்தால் 7 வருடமாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பரமஎதிரி நாட்டு கைதிகளை வைத்து தஞ்சை தலைநகரில் வேலை வாங்கி இருப்பார்கள்.
.
7 வருடம் கைதிகளை அடக்கிஒடுக்கி வேலை வாங்குவது சாத்தியம் இல்லை,அதேபோல் மற்ற கட்டிடக்கலை வல்லுனர்களும் மனம்கோணாமல் வேலை செய்ய வேண்டும்,மக்களிடம் இருந்தும் எதிர்ப்பு வராமல் பார்த்து கொள்ளவேண்டும் என்றால் HRM எனப்படும் மனித வள மேலாண்மையை மிக நேர்த்தியாக நடைமுறை படுத்தியிருக்கிறார்கள் என்பதற்கு ஓங்கி உயர்த்து நிற்க்கும் கோவில் தான் சாட்சி.
.
சரி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கைதிகள்,ஆயிரம் ஆயிரம் யானைகள்,குதிரைகள்,1000க்கும் மேற்பட்ட சிற்பிகள்,ஓவியர
்கள்,ஆசாரிகள், கொல்லர்கள், நடனகலைஞர்கள் ,சமையல் வேலையாட்கள்,கற்களை பிளக்கும் வீரர்கள் என ஒரு மாபெரும் படைக்கும் 7 வருடம் உணவு வழங்க வேண்டும் என்றால் தொடர்ச்சியாக 7 வருடம் சோழதேசத்தில் விவசாயம் மற்றும் பொருளாதாரம் தங்குதடை இல்லாமல் இருந்திருக்க வேண்டும். ஒரு முழு படைக்கும் தேவையான மருத்துவ வசதியும் சிறப்பாக இருந்திருக்க வேண்டும்.
.
இது மட்டுமா
.
7 வருடம் கோவில் கேட்ட தேவையான பொருட்செலவை ஈடுகெட்ட தொடர்ச்சியாக போர்களும் நடந்து இருக்கவேண்டும், வெற்றியும் அடைந்து இருக்கவேண்டும் .அதே நேரத்தில் எதிரிநாட்டு படையெடுப்பையும் தடுத்து இருக்க வேண்டும்.
.
ஒரு வேலை ராஜராஜ சோழனோ இல்லை மற்ற முத்த கட்டிடக்கலை நிபுணர்கள் இறந்தாலும் கோவில் வேலை தடை இல்லாமல் தொடர சுமார் 1000 வரைப்படங்களை தயார் செய்து இருக்கிறார்கள்.
.
கிரானைட் கற்களை செதுக்க என்ன வகை உளி, இரும்பு பயன்படுத்த வேண்டும் என்று முன்பே கொல்லர்கள் ஆராய்ச்சி செய்து இருக்கவேண்டும். அதே போல் கற்களை நெம்பிதூக்க உதவும் கம்பிகளை தயார் செய்ய வேண்டும் என்றால் பழுக்கக்காய்ச்ச
ி உரமேற்றும் உத்தியும் தெரிந்திருக்க வேண்டும்.
.
தஞ்சையை சுற்றி 50 கிலோமீட்டருக்கு க்ரானைட் கற்கள் கிடையாது, கோவில் கட்ட தேவையான கற்களை திருச்சிக்கு சற்று தெற்கே 50km தூரத்தில் உள்ள நார்த்தாமலையில் இருந்து கொண்டு வரவேண்டும் என்றால் சோழதேசத்தின் சாலைகள் மற்றும் போக்குவரத்தும் மிக மிக தரமாகவும் சீராகவும் இருந்திருக்க வேண்டும்.
.
இது எல்லாவற்றையும் சமாளித்தலும் மிக பெரிய பூதம் ஒன்று உள்ளதே, அது தான் அரசியல். எந்த ஒரு சாம்ராஜ்யமாக இருந்தாலும் அரசியல் குழப்பம் இருக்காமல் இருக்காது.7 வருடம் அரசியல் குழப்பம் எதுவும் நடக்காமல் மிக நேர்த்தியாக ஆட்சி செய்திருக்க வேண்டும்.சோழ அரசியலில் பெண்களின் பங்கு கவனிக்கத்தக்கது ஆண்மகன்கள் கோவில் வேலையில் மும்முரமாக இருக்க பெண்கள் ( அதிகாரிச்சி ) அரசு இயந்திரத்தை திறன்பட இயக்கியுள்ளனர் என்று வரலாறு சொல்கிறது.
.
1000 வருடம் 6 நிலநடுக்கத்தை கண்டும் அசராமல் நிற்க்கும் தஞ்சை பெரிய கோவில் வெறும் தேவாலயம் இல்லை.
மருத்துவம்,பொருளாதாரம்,
கட்டிடக்கலை,சிற்பக்கலை,வணிகம்,
நாகரிகம்,விவசாயம்,கலாச்சாரம்,உ
ணவு முறை,போர்ப்படை என்று அனைத்திலும் மிக மிக சிறந்து விளங்கிய நம் முன்னோர்கள்
.
தஞ்சை பெரிய கோவில் என்கின்ற மாபெரும் பொக்கிஷத்தை நமக்கு தந்த அருள்மொழிவர்மன் (எ) ராஜராஜ சோழனின் பெருமையை உலகம் முழுக்க பரப்புவோம்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

வைகாசி 1 ஆம் தேதி. விஷ்ணுபதி புண்ணிய காலம், பெருமாள் வழிபாடு



வைகாசி 1, ஆவணி 1, கார்த்திகை 1, மாசி 1, இந்த 4 நாட்களும் விஷ்ணுபதி புண்ணிய கால நாட்களாக நமக்கு சொல்லப்பட்டுள்ளது. 
🪷இந்த நாளில் எவர் ஒருவர் பெருமாள் கோவிலுக்கு சென்று, விஷ்ணு பகவானை
விஷ்ணு பகவானை வழிபாடு செய்கிறீர்களோ!

🪷அவர்களுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்படும் என்பது நம்பிக்கை.

🪷வைகாசி 1 ஆம் தேதி. விஷ்ணுபதி புண்ணிய காலம், பெருமாள் வழிபாடு செய்ய வேண்டிய இந்த நாளில், பெருமாள் கோவிலில் வழிபாட்டை எப்படி மேற்கொள்வது, வாழ்க்கையில் மிகப்பெரிய செல்வந்தர்களாக மாற வேண்டும் என்றால், எந்த மந்திரத்தை சொல்லி, பெருமாளை வழிபாடு செய்வது!!!

🪷இந்த பக்தி பதிவினை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

*🔯வைகாசி 1 விஷ்ணுபதி புண்ணிய கால வழிபாடு*

🪷இந்த நான்கு மாதத்தில், வரக்கூடிய முதல் தேதி விஷ்ணுபதி புண்ணிய காலம். இந்த நாளில் இரவு 1:30 மணியிலிருந்து காலை 10:00 மணி வரை விஷ்ணுபதி புண்ணிய காலமாக நமக்கு சொல்லப்பட்டுள்ளது. 

🪷நம் ஊர்களில் இருக்கும் கோவில்கள், நடு இரவில் இந்த நேரத்தில் திறந்து இருக்காது. 

இருந்தாலும் காலை 10 மணி வரை விஷ்ணுபதி புண்ணிய காலம் இருப்பதால், காலையில் பெருமாள் கோவில் திறந்த உடனேயே, பெருமாளை சென்று தரிசனம் செய்யுங்கள்.

*🪷நாளை காலை 10 மணிக்கு முன்பாக இந்த வழிபாட்டை செய்து முடித்து விட வேண்டும்.*

*🪷பெருமாள் கோவிலுக்கு செல்லும்போது உங்களுடைய கையில் 27 பூக்களை எடுத்துச் செல்லுங்கள்.*

*🪷எந்த வகையான பூக்களாக இருந்தாலும் சரி, பெருமாளை கொடி மரத்தோடு சேர்த்து 27 முறை வலம் வர வேண்டும்.*

*🪷பெருமாளுக்கு தேங்காய், பழம் பூ, துளசிளைகளை வாங்கிக் கொடுத்து உங்கள் குடும்ப உறுப்பினர்களின் பெயரை சொல்லி அர்ச்சனை செய்து கொண்டு, வீடு திரும்ப வேண்டும்.*

🪷இதுதான் பரிகாரம். இப்படி பெருமாளை, 27 முறை பெருமாளை வளம் வரும்போது, உங்களுடைய மனதிற்குள் பெருமாளுக்கு உகந்த மந்திரங்களை சொல்லலாம். 

*🪷கோவிந்தா கோவிந்தா* என்று சொல்லலாம். 

*நாராயணா நாராயணா* என்று சொல்லலாம்.  

*ஓம் நமோ நாராயணாய* மந்திரம் கூட சொல்லலாம். 

அது உங்களுடைய விருப்பம்.
நீங்கள் சீக்கிரம் செல்வந்தர்களாக மாற வேண்டும், வியாபாரத்திலும், செய்யும் வேலையிலும் சீக்கிரம் முன்னேற்றம் அடைய வேண்டும் என்றால், பின் சொல்லக் கூடிய இந்த மந்திரத்தை பெருமாள் கோவிலில் அமர்ந்து விஷ்ணுபதி புண்ணிய கால நேரத்தில் படிக்கவும்.


*🔯பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைய மந்திரம்*

ஸ்ரீதர ஸ்ரீஷ ஸ்ரீநிவாஸ் ஸ்ரீநிதிஹ்
ஸ்ரீ விபாவனஹ் ஸ்ரீதரஹ் ஸ்ரீகரஹ்
ஸ்ரேயஹ் ஸ்ரீமான் லோகத்ரயாஸ்ரயஹ்.

🪷வாழ்க்கையில் எந்த முயற்சிகளை மேற்கொண்டாலும் காரிய தடை வருகிறது. சில விஷயங்களை எல்லாம் மனதில் நினைப்பதோடு சரி, அந்த விஷயங்களை செயல்படுத்தி காட்டவே முடியவில்லை என்பவர்கள் காரிய தடை விலக இந்த ஒரு வரி மந்திரத்தை சொல்லுங்கள்.

*🔯காரிய தடை விலக மந்திரம்*

*ஓம் அனிருத்ரனே நமஹ !*

நீங்கள் என்ன பிராத்தனை செய்தால் வைத்தாலும் சரி, அது அதிவிரைவாக நிறைவேற வேண்டும் என்ற கட்டாயம் இருந்தால் பிரார்த்தனைகள் சீக்கிரம் நிறைவேற 

*“ஓம் சித்தார்த்தையே நமஹ”*

என்ற மந்திரத்தை பெருமாள் கோவிலில் அமர்ந்து சொல்லலாம்.

🪷எங்கள் வீட்டில் நோய் நொடி பிரச்சனை தான். எல்லோரும் மருந்து மாத்திரை சாப்பிடுகிறார்கள். மாதத்தில் பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் மருத்துவ செலவை ஆகிறது என்றால், அந்த பெருமாள் கோவிலில் அமர்ந்து 

“ஓம் அச்சுதாய நமஹ ! 
ஓம் அனந்தாய நமஹ ! 
ஓம் கேசவாய நமஹ !” 

🪷என்ற மந்திரத்தை சொல்லுங்கள். 

இவ்வளவுதான் வழிபாடு. இந்த மந்திரத்தை எல்லாம் உச்சரிக்க முடியாது என்றால் 

"கோவிந்தா கோவிந்தா'' 

நாமத்தை சொல்லியே உங்களுடைய வேண்டுதலை பெருமாளிடம் சொன்னாலும், நிச்சயம் அது பலிக்கும்.

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

பவானி (திரு நணா) சங்கமேஸ்வரர் திருக்கோயில்

*⚜️ பவானி*  (திரு நணா)   *சங்கமேஸ்வரர் திருக்கோயில்*. 
             *வழிபட்டவர்கள்*  :   அரி அயன் சரஸ்வதி காயத்திரி சாவித்திரி பராசக்தி லட்சுமி சப்த மாதர்கள் முருகன் வீரபத்திரர் இராமன் அனுமன் சனி  குபேரன் விசுவா மித்திரர் பராசரர் என தெய்வங்களும் தேவர்களும் முனிவர்களும் விரதிகளும் அடியார்களும் மற்றும் புலி மான் போன்ற விலங்குகளும் மற்றும் பிறவும்.       
          
  பவானி  (திரு நணா)    ஈரோடுக்கு அருகே உள்ளது. *காவிரி பவானி அமுத நதி என்ற மூன்று நதிகள் சங்கமம் ஆகும்*  இடத்தில், கூடும் இடத்தில் லிங்கப் பரம்பொருள் வெளிப்பட்டு இருந்ததால் *பவானி முக் கூடல்*  என்றும் தட்சிணப் பிரயாகை என்றும் பெயர்.      
பரமேஸ்வரனுக்கு சங்கமேஸ்வரர் என்று திருநாமம். 

மூலஸ்தான கோபுரத்திற்கு எதிரே பவானி முக்கூடல் நதி உள்ளது.                          

  🕉️        *தானாகத் தன்னை வெளிப் படுத்திக் காட்சி கொடுத்தால் தவிர யாராலும் தன் விருப்பப்படி பரமன் திருக்காட்சி காண  முடியாத அணுக முடியாத  காரணத்தால் நணா* 
என்று பெயர். 
✡️    *வினை கெடுக்கும் திரு நணாவே*    (சம்பந்தர்) 

என தொழுது வழிபடும் அடியார்களைத் *தீவினை நணுகாத வகை காக்கும்* திருத்தலம் ஆதலாலும் நணா என்று பெயர் பெற்றது. 
        
🔯  *வானோர் ஐய அரனே  பெருமான் அருள் என்று ஆதரிக்க எங்கும் நானா விதத்தால் விரதிகள் நல் நாமமே ஏத்தி வாழ்த்தத் தேனார் மலர் கொண்டு அடியார் அடி வணங்கும் திரு நணாவே*       
       
☸️   *வானவர்கள் ஏத்தி அடி பணியும் திரு நணாவே*      

        🛑  *புலியும் மானும் அல்லாத சாதிகளும் அங்கழல் மேல் கை கூப்ப அடியார் கூடிச் செல்லா வரு நெறிக்கே செல்ல அருள் புரியும் திரு நணாவே*          (சம்பந்தர்)
              
என அரி அயன் சரசுவதி காயத்திரி சாவித்திரி பராசக்தி லட்சுமி சப்த மாதர்கள் முருகன் வீரபத்திரர் இராமன் அனுமன் சனி குபேரன் விசுவா மித்திரர் பராசரர் என தெய்வங்களும் தேவர்களும் முனிவர்களும் விரதிகளும் அடியார்களும் மட்டுமன்றி *அடித்து உண்ணும் புலி கூட அன்போடு மானுடன் வந்து சங்கமேஸ்வரரைப் பூஜித்து வணங்கி நலம் பெற்றது*. 

இவர்கள் உண்டாக்கிய தீர்த்தங்களும் இவர்கள் உருவங்களும் சந்நிதிகளிலும் பிரகாரத்திலும் உள்ளன. 

இராம லிங்கம் சோதிலிங்கம் பஞ்ச பூத லிங்கம் காசி லிங்கம் ஆயிர லிங்கம் காயத்திரி லிங்கம் அமுத லிங்கம்  எனப் பல லிங்கச் சந்நிதிகள் உள்ளன. 

தல மரமான இலந்தை மரத்தடியிலும் சுயம்பு லிங்கப் பரம்பொருள் காட்சி தருகிறது. நடராஜர் சந்நிதி பக்க வாசலுடன் அமைந்துள்ளது.  

☸️       *பொய்யா மறையானும் பூமி அளந்தானும் போற்ற மன்னிச் செய்யார் எரியாம் உருவம் உற வணங்கும் திருநணாவே* (சம்பந்தர்) 
              
 என இரு புறமும் நின்று *அரி அயன் தொழுது போற்ற* அருட்பெருஞ்சோதி லிங்கோற்பவர் கருவறைச் சுவற்றில் உள்ளார்.

  *பிணி போக்கும் மூன்று முகம் மூன்று கரம் மூன்று  பாதம் உடைய   ஜுரஹரேஸ்வரர்* தனிச் சந்நிதியில் நந்தி வாகனத்துடன் உள்ளார். 

சந்நிதி வாசலிலும் இரு புறமும் ஜுரஹரேஸ்வரர்  திருவுருவம் உள்ளது.  

        *பந்தார் விரல் மடவாள் பாகமா*   (சம்பந்தர்) 
      
என சங்கம லிங்கப் பரம்பொருளை வழிபட்ட உமையவளுக்குப் பந்தார் விரல் மங்கை என்ற பெயருடன் தனிச் சந்நிதி.  ஈசனுக்கு இடது புறம் அதே திசையில் கட்டப்பட்டுள்ளது.  

பங்தார் விரல்  மங்கை  என்பது  பந்து விளையாடும்  மண்ணுலகப் பெண்ணைக் குறிக்கும் சொல்.   
மண்ணுலக வாசி பர்வத மகள்  மகள் பார்வதியைக் குறிக்கும் சொல்.  

  எந்த அம்மனும் அல்ல, அம்மன் பெயரும் அல்ல.          
                    
 🔯     *ஞானத் தாய் உனை* (அப்பர்)

     என  *தாயுமான தட்சிணா  மூர்த்தியையும்  சரஸ்வதியையும் குறிக்கும் வேத மங்கை என்ற பெயரை அஞ்ஞான நிர்வாகம் உமைக்கு ஏற்றிக் கூறுகிறது.*  

சங்கமேஸ்வரரை வழிபட்ட திருமாலுக்கும் லட்சுமிக்கும் ஆதி கேசவப் பெருமாள் சுந்தரவல்லித் தாயார் என்ற பெயரில் பெரிய தனிச் சந்நிதி உள்ளது .

*சுந்தர வல்லி   என்பதுவும் அம்மையான சுந்தரேசர் திருநாமம்*.   

தூணில் மட்டுமே செதுக்கப்பட்டு இருக்கும்  அனுமானுக்குத் தற்காலத்தார் சந்நிதி கட்டியுள்ளனர்.    

பிள்ளையார் முருகன் சந்நிதிகள் ஒன்றை ஒன்று நோக்கியவாறு அமைந்துள்ளன.

சிவப்பிரியா

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Tuesday, May 13, 2025

ஆசியாவிலேயே திருநங்கைகள் திருவிழாவாக கூத்தாண்டவர்.

இந்தியாவின் மிகப்பெரிய “திருநங்கைகள் திருவிழா
ஆசியாவிலேயே திருநங்கைகள் அனைவரும் பங்கேற்கும் ஒரே திருவிழா  தென்னிந்திய மாநிலமான  தமிழ்நாட்டில் நடைபெறுகிறது  .  பங்குனி மற்றும் சித்திரை மாதங்களில் பதினெட்டு நாட்கள் நீடிக்கும்  இந்த தனித்துவமான  கூத்தாண்டவர் திருவிழா , ஏப்ரல் - மே மாதங்களுக்கு இடையில்  ,  ஆடம்பரமாக கொண்டாடப்படுகிறது.  தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் விழுப்புரத்திற்கு அருகிலுள்ள சிறிய கிராமமான கூவாகம் இந்த விழாவின் மையமாகும். இந்த கிராமம் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் மற்றும் விழாவின் பொது பார்வையாளர்களால் நிரம்பி வழிகிறது.

இந்த உலகில் மூன்றாம் பாலினத்தவரான திருநங்கைகள், அவர்களின் உடல் மற்றும் நடத்தையில் உள்ள வேறுபாடு காரணமாக பெரும்பாலான இடங்களில் சமூகத்தால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த திருநங்கைகள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பல்வேறு வேலைகளைச் செய்து தங்கள் வாழ்க்கையை நடத்துவதைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ரயில்களில் பயணம் செய்யும் போதும், உள்ளூர் விழாக்களின் போதும் நீங்கள் அவர்களைப் பார்த்திருக்கலாம். பெரும்பாலான இடங்களில், குறிப்பாக வட இந்தியாவில், சில விழாக்களில் அவர்களுக்கு முதல் மரியாதை வழங்கப்படுகிறது. அத்தகைய திருநங்கைகளின் மூத்த உறுப்பினர்கள் தங்கள் குழுவில் உள்ள இளைஞர்களைக் கவனித்து, மரியாதைக்குரிய வாழ்க்கையை நடத்த வழிகாட்டுகிறார்கள். முந்தைய நாட்களைப் போலல்லாமல், அவர்கள் அரசுத் துறைகளில் கூட வேலை பெறத் தொடங்கியுள்ளனர், மேலும் அவர்களில் சிலர் உலக மன்றங்களில் அங்கீகரிக்கப்பட்ட எழுத்தாளர்கள் மற்றும் பாரம்பரிய நடனக் கலைஞர்களாக மாறிவிட்டனர். பல்வேறு வகையான வாழ்க்கை முறைகளைக் கொண்டிருந்தாலும், அவர்களை ஒன்றிணைக்கும் மையப் புள்ளி  ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும் கூத்தாண்டவர் விழா  .
இந்த விழாவின் பின்னணியில் உள்ள புராணக்கதை மிகவும் சுவாரஸ்யமானது, இது இந்து புராண இதிகாசமான  மகாபாரதத்தில் இருந்து குறிப்பிடப்படுகிறது. குருக்ஷேத்திரப் போரில் வெற்றி பெற ஒரு மனிதனை பலி கொடுப்பது கட்டாயமாகும்  , இதை கிருஷ்ணர் பாண்டவர்களுக்கு அறிவுறுத்தினார். தகுதியான மூன்று நபர்கள் கிருஷ்ணர், அர்ஜுனன் மற்றும் அவரது மகன்  அரவான்  , வேறு யாரும் முன்வந்து முன்வரவில்லை. ஆனால் அரவானைத் தவிர, மற்ற இருவரும் களத்தில் போராளிகள், எனவே அரவான் தன்னைத் தானே முன்வந்து, சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு திருமண உறவின் பேரின்பத்தை அனுபவிக்க விரும்புவதாக தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார். மறுநாள் இறக்கப் போகும் அவரை திருமணம் செய்து கொள்ள எந்தப் பெண்ணும் முன்வராததால். எனவே கிருஷ்ணர் தாமே  மோகினி என்ற பெண்ணின் வடிவத்தை எடுத்து  அரவானை மணந்தார். முடிவு செய்தபடி, அரவான் மறுநாள் கொல்லப்பட்டார், குருக்ஷேத்திரப் போரின் விளைவு அனைவருக்கும் தெரியும். 

புராண விவரங்களைத் தவிர, வரலாற்றிலும், இதுபோன்ற திருநங்கைகளை நாம் சந்தித்திருக்கிறோம்.

கூவாகத்தில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் திருவிழாவிற்கு இந்த புராண சம்பவம் அடிப்படையாக மேற்கோள் காட்டப்படுகிறது  . போரின் போது அரவான் செய்த தியாகத்திற்காக கூத்தாண்டவர்  என்ற பெயரில்  அரவானுக்கு ஒரு பிரத்யேக கோயில் உள்ளது  . நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும், தெற்காசிய நாடுகளிலிருந்தும் கூட திருநங்கைகள் இந்த விழாவில் பங்கேற்க கூவாகத்திற்கு வருகிறார்கள். பங்கேற்பாளர்களையும் பார்வையாளர்களையும் மகிழ்விக்க இந்த காலம் முழுவதும் சுவாரஸ்யமான நிகழ்வுகள் உள்ளன. அழகுப் போட்டிகள், நடன நிகழ்ச்சிகள் மற்றும் பிற வகையான கலாச்சார நிகழ்வுகள் திருநங்கைகளால் எல்லா நாட்களிலும் நடத்தப்படுகின்றன, அங்கு வாழ்க்கையை மிக அழகான முறையில் எடுத்துச் செல்லும் அவர்களின் திறனை நாம் உண்மையிலேயே பாராட்ட வேண்டும்.

கூத்தாண்டவர் திருவிழாவின் கடைசி ஆனால் ஒரே நாள் மிகவும் புனிதமானது  . இந்த நாளில், அனைத்து திருநங்கைகளும் மணப்பெண்கள் போல அலங்கரித்து தங்கள் திருமணத்திற்குத் தயாராகிறார்கள்.   அரவானின் சார்பாக  பூசாரிகள் அவர்களுக்கு மங்கள சூத்திரத்தை கட்டுகிறார்கள். அவர்கள் அனைவரும் அழகான மோகினி  வடிவத்தில்  விஷ்ணுவை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள் , அந்த நாளில் அரவானை மணக்கிறார்கள் என்று கருதப்படுகிறது. திருமண நாளில் எல்லா இடங்களிலும் கொண்டாட்டங்களும் மகிழ்ச்சியான பொழுதுபோக்குகளும் நிலவுகின்றன.  கலாச்சார நிகழ்ச்சிகள்  நடத்தப்படுகின்றன, மேலும் கூவாகம் மற்றும் அருகிலுள்ள பிற கிராமங்கள் மற்றும் நகரங்களைச் சேர்ந்த மக்கள் ஆயிரக்கணக்கான மோகினிகளுடன் அரவானின் திருமணத்தைக் காண ஒன்றுகூடுகிறார்கள்.
மறுநாள் காலை அரவான் சிலையுடன் தொடங்கும் தேர் ஊர்வலம் கிராமங்களைச் சுற்றி வருகிறது. முந்தைய நாள் அரவானை மணந்த அனைத்து அரவாணிகளும், தங்கள் மங்கல சூத்திரத்தைக் கழற்றி, வெள்ளைச் சேலை அணிந்து, தங்கள் வளையல்களை எறிந்து, அரவானின் தியாகத்தைக் குறிக்கும் விதவையை ஏற்றுக்கொள்வது இந்த நாளில் மிகவும் குறிப்பிடத்தக்கது  . அரவானின்  மரணத்திற்கும்  அவரது தியாகத்திற்கும் இரங்கல் தெரிவிக்கும் பெரும் அழுகைகளை நீங்கள் எங்கும் காணலாம். இந்த இரண்டு நாட்கள் நடைபெறும் நிகழ்வுகளுடன் திருவிழா முடிவடைகிறது.

திருவிழாவின் போது கூவாகத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன   , மேலும் தேவையான வசதிகளை அரசாங்கமும் உள்ளூர் அதிகாரிகளும் செய்து தருகிறார்கள். இந்த திருவிழாவின் போது கூவாகத்திற்கு வருகை தருவது உண்மையிலேயே ஒரு தனித்துவமான அனுபவமாகும், இங்கு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் வாழ்க்கையில் திருமணம் செய்து கொள்ளும் ஒரே வாய்ப்பை அனுபவிக்கும் மையப்பகுதியாக உள்ளனர்.
ஆசியாவிற்கே உரிய, மனிதகுலத்திற்கே உரிய, திருநங்கை சமூகத்திற்கே உரிய  கூத்தாண்டவர் விழாவைக் காண வாருங்கள்  .

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் நெல்லிக்குப்பம்.

பூரி ஜெகன்னாதர் கோயிலின் எட்டுஅற்புதங்கள் ...

பூரி_ஜெகன்னாதர் கோயிலின் எட்டுஅற்புதங்கள் ...
1.கோயிலின் கொடி காற்றடிக்கும் திசைக்கு எதிர் திசையில் பறக்கும்.

2.கோயில் இருக்கும் பூரி என்ற ஊரின் எந்த இடத்தில்,எந்த பக்கத்தில் இருந்து பார்த்தாலும் கோயிலின் உச்சியில் இருக்கும் சுதர்சன சக்கரம் நம்மை பார்ப்பது போலவே இருக்கும் .

3.பொதுவாக காலையிலிருந்து மாலை வரையான நேரங்களில் காற்று கடலில் இருந்து நிலத்தை நோக்கியும் மாலை முதல் இரவு முழுவதும் நிலத்திலிருந்து கடலை நோக்கியும் வீசும்,ஆனால்
பூரியில் இதற்க்கு நேர் எதிராக நடக்கும்.

4.இக்கோயிலின் முக்கிய கோபுரத்தின் நிழல் பகலில் எந்த நேரத்திலும் கண்களுக்கு தெரிவதில்லை.

5.இந்த கோயிலின் மேல் விமானங்களோ அல்லது பறவைகளோ மறப்பதில்லை .

6.இந்த கோயிலின் உள்ளே சமைக்கப்படும் உணவின் அளவு வருடத்தின் அனைத்து நாட்களிலும் ஒரே அளவாகவே இருக்கும்.
ஆனால் வருகின்ற பக்தர்கள் எண்ணிக்கை இரண்டு லட்சமானாலும் சரி இருபது லட்சமானாலும் சரி சமைக்கப்பட்ட உணவு பத்தாமல் போனதும் இல்லை.
மீந்து போய் வீணானதும் இல்லை.

7.இந்த கோயிலின் சமையலறையில் ஒன்றன் மேல் ஒன்றாக ஏழு பாத்திரங்கள் அடுக்கப்பட்டு விறகு அடுப்பில் உணவு சமைப்பார்கள் அப்படி சமைக்கும்போது அடியில் உள்ள பானையில் உணவு வேகும் முன் மேலே உச்சியில் உள்ள முதல் பானையில் உணவு வெந்து விடும் அதிசயம்.

8.சிங்கத் துவாராவின் முதல் படியில் கோயிலின் உட்பறமாக காலெடுத்து வைத்து நுழையும் போது கடலில் இருந்து வரும் எந்த விதமான சப்தமும் நமக்கு கேட்காது .

ஆனால் ...
அதே சிங்கத்துவராவின் முதல் படியில் கோயிலின் வெளிப்புறமாக நுழையும் போது கடலில் இருந்து வரும் அனைத்து சப்தமும் நமக்கு கேட்கும் . இதை மாலை நேரங்களில் தெளிவாக உணர முடியும்..

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

Monday, May 12, 2025

சித்ரா பௌர்ணமி வழிபாட்டு முறைகள்

சித்ரா பௌர்ணமி வழிபாட்டு முறைகள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் பற்றிய பதிவுகள் :*
சித்ரா பௌர்ணமி என்பது தமிழ் மாதமான சித்திரையில் வரும் பூர்ணமி (முழு நிலா) நாளில் கொண்டாடப்படும் ஒரு முக்கியமான விழாவாகும். இது தமிழ்நாட்டில் மற்றும் பிற தென்னிந்திய மாநிலங்களில் சிறப்பாக அனுசரிக்கப்படுகிறது.

*புராணக் கதைகள்*

சித்ரா பௌர்ணமி தினம், யமதர்மராஜாவின் உதவியாளரான சித்ரகுப்தரின் பிறந்த நாளாகக் கருதப்படுகிறது. சித்ரகுப்தர், மனிதர்களின் நற்கர்மா மற்றும் துஷ்கர்மாக்களை பதிவு செய்து, அவர்களின் பின் வாழ்க்கையை தீர்மானிப்பவர் என நம்பப்படுகிறது. இந்த நாளில், பக்தர்கள் தங்கள் பாவங்களைப் பற்றி சிந்தித்து, புனித வாழ்க்கைக்காக பிரார்த்தனை செய்கிறார்கள் .

மற்றொரு புராணக் கதையில், தேவர்களின் அரசன் இந்திரன், தனது குரு பிஹஸ்பதியுடன் ஏற்பட்ட முரண்பாட்டைத் தீர்க்க, பூமியில் யாத்திரை மேற்கொள்கிறார். இந்த யாத்திரையின் போது, அவர் ஒரு சிவலிங்கத்தை கண்டுபிடித்து, அதனை வழிபடுகிறார். இது மதுரையில் நடந்ததாக நம்பப்படுகிறது, மேலும் இந்த நிகழ்வு சித்ரா பௌர்ணமி தினத்தில் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது .

*வழிபாட்டு முறை மற்றும் சிறப்பு வழிபாடுகள்*

சித்ரா பௌர்ணமி தினத்தில், பக்தர்கள் புனித நீராடல் செய்து, சித்ரகுப்தர் மற்றும் முருகனை வழிபடுகிறார்கள். இந்த நாளில், பாவங்களைப் பரிகரிக்கவும், நற்கர்மாக்களைப் பெருக்கவும் பிரார்த்தனை செய்யப்படுகிறது. சிலர் உப்பில்லாத உணவை உண்ணும் விரதம் கடைப்பிடிக்கிறார்கள் .

மதுரையின் மீனாட்சி அம்மன் கோவிலில், இந்த நாளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. திருச்சிராப்பள்ளி மலையக்கோட்டையில் உள்ள தாயுமானசுவாமி கோவிலில், சித்ரா பௌர்ணமி தினத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவிழாவில் பங்கேற்கிறார்கள் .

*சிறப்பு உணவுகள் மற்றும் வழக்கங்கள்*

சித்ரா பௌர்ணமி தினத்தில், சில பகுதிகளில் "சித்திரை கஞ்சி" எனப்படும் ஒரு சிறப்பு உணவு தயாரிக்கப்படுகிறது. இது பக்தர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது .

*ஆன்மீக முக்கியத்துவம்*

சித்ரா பௌர்ணமி, தமிழ் புத்தாண்டுக்குப் பிறகு வரும் முதல் பூர்ணமி நாளாகும். இது புதிய தொடக்கங்களை குறிக்கிறது. இந்த நாளில், பக்தர்கள் தங்கள் பாவங்களைப் பரிகரிக்கவும், நற்கர்மாக்களைப் பெருக்கவும் பிரார்த்தனை செய்கிறார்கள் .

*முக்கிய கோவில்கள்*

*சித்ரகுப்தர் கோவில், காஞ்சிபுரம் :*

தென்னிந்தியாவில் சித்ரகுப்தருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரே கோவிலாகும். இங்கு சித்ரா பௌர்ணமி தினத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன . 

*தாயுமானசுவாமி கோவில், திருச்சிராப்பள்ளி :*

சித்ரா பௌர்ணமி தினத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவிழாவில் பங்கேற்கிறார்கள் .

*மீனாட்சி அம்மன் கோவில், மதுரை :* 

இந்த நாளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன .

சித்ரா பௌர்ணமி, ஆன்மீக சிந்தனை, பாவ பரிகாரம் மற்றும் நற்கர்மா வளர்ச்சி ஆகியவற்றை ஊக்குவிக்கும் ஒரு முக்கியமான நாள். இது பக்தர்களுக்கு தங்கள் வாழ்க்கையை சீரமைக்க ஒரு வாய்ப்பாகும்.


ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Sunday, May 11, 2025

அருள்மிகு கஸ்தூரி ரங்கப் பெருமாள் ஈரோடு.

*அருள்மிகு கஸ்தூரி ரங்கப் பெருமாள் கோயில்,* 
*ஈரோடு,* 
*காலை 6 – 12, மாலை 4.30 – 9 மணி வரை திறந்திருக்கும்.*

*வைகுண்டத்தின் காவலர்களான ஜெயன், விஜயன் இருவரும் மகாவிஷ்ணுவின் மீது பக்தி கொண்டு, எப்போதும் அவரைப் பிரியாமல் இருந்தனர். ஒரு சமயம் மகாவிஷ்ணுவைப் பார்க்க வந்த ரிஷிகள் சிலர் காவலர்களை கடந்து உள்ளே செல்ல முயன்றனர். அவர்களை உள்ளே அனுமதிக்காததால் சண்டை ஏற்பட்டது. இதையடுத்து வெளியே வந்த பெருமாள், காவலர்களை பூலோகத்தில் பிறக்க சாபமிட்டார். அவர்கள் இரண்யன் – இரண்யாட்சன், ராவணன் – கும்ப கர்ணன், கம்சன் – சிசுபாலன் என பிறந்து மகாவிஷ்ணுவால் வதம் செய்யப்பட்டனர். இப்பிறவிகள் முடிந்த பிறகு மீண்டும் அவர்கள் மகாவிஷ்ணுவிடம் திரும்பி அவருக்கு சேவை செய்ய வேண்டி தாழ்பணிந்து நின்றனர். இவ்வாறு அவர்கள் கருவறைக்குள்ளேயே தாழ்பணிந்து நிற்பதை இந்தக் கோயிலில் காணலாம்.*

 _*கடவுள்களில் சாத்வீகமானவர் யார் என்பதைக் கண்டுபிடிக்க வேண்டிய நிலை தேவர்களுக்கு ஏற்பட்டது. இதற்கான பொறுப்பை அவர்கள் துர்வாச முனிவரிடம் ஒப்படைத்தனர். அவர் கைலாயம் மற்றும் பிரம்ம லோகங்களுக்கு அனுமதியின்றி சென்றபோது தெய்வங்கள் அவரைக் கடிந்து கொண்டனர். ஆனால், வைகுண்டம் சென்று திருமாலின் மார்பில் மிதித்து அவரை துயில் எழுப்பிய போதும் கூட, திருமால் சிரித்துக் கொண்டே அவரை வரவேற்றார். “பக்தனின் பாதம் பட நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்” என்றார். துர்வாசர் மகிழ்ந்தார். ஆனால், திருமாலின் மார்பில் இருந்த லட்சுமி தேவியால், தன் கணவரை மிதித்த துர்வாசரை பிடிக்கவில்லை. துர்வாசரைக் கண்டிக்காத பெருமாளை விட்டு பிரிந்து சென்று விட்டாள். “ரிஷியே! தங்கள் கோபச் செய்கையால் என் மனைவியைப் பிரிந்தேன். இனியாவது சாந்தகுணம் பெறுங்கள். ரிஷிகளுக்கு சாந்த குணமே சிறந்தது” என்றார் பெருமாள். துர்வாசரும் அதை ஏற்றார். அந்த சாந்தகுண துர்வாசரை இத்தலத்தில் காணலாம்.*
*_கருவறையில் கஸ்தூரி ரங்கநாதர் ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் பள்ளி கொண்ட கோலத்தில், வலது கையில் தண்டத்தை பிடித்தபடி இருக்கிறார்._ தலைக்கு மேலே ஆதிசேஷன், ஐந்து தலைகளுடன் குடையாக இருக்கிறார்.*

*சுவாமி சன்னதி விமானம், கோபுரம் போன்ற அமைப்பில் இருக்கிறது. சிவனுக்குரிய வில்வம் இத்தலத்தின் விருட்சம். ஆஞ்சநேயரின் பக்தரான வியாசராஜர் பிரதிஷ்டை செய்த ஆஞ்சநேயர் பிரகாரத்தில் இருக்கிறார். வலது கையை தூக்கியிருக்கும் இவர் லிங்க வடிவ பாறையில் புடைப்புச் சிற்பமாக காட்சி தருகிறார். சுவாமி சன்னதிக்கு வலப்புறம் ஆண்டாள் தனிச்சன்னதியில் இருக்கிறாள். இடதுபுறத்தில் பாமா, ருக்மணியுடன் வேணுகோபாலர், கண்ணன் இருக்கின்றனர். பிரகாரத்தில் உள்ள பெருமாள் பாதத்தை சுற்றி ஆதிசேஷன், ஆஞ்சநேயர், கருடாழ்வார் உள்ளனர். தனிச் சன்னதியில் உள்ள சக்கரத்தாழ்வார் 16 கைகளுடன், தலையில் அக்னி ஜ்வாலை கிரீடத்துடன் உக்ரமாக இருக்கிறார்.*

*சுவாமிக்கு தைலக்காப்பு மட்டுமே சாத்தப்படுகிறது. ஆனியில் தைலக்காப்பின்போது 48 நாட்கள் சுவாமியின் முகம் மற்றும் பாத தரிசனத்தை மட்டுமே காண முடியும். சில ஆண்டுகளுக்கு முன்புவரை கர்ப்பிணிப்பெண்கள், சுகப்பிரசவம் ஆவதற்காக சுவாமிக்கு கஸ்தூரி எனும் மருந்து படைத்து வழிபடும் வழக்கம் இருந்தது. இதன் காரணமாக சுவாமிக்கு, கஸ்தூரி ரங்கநாதர்‘ என்ற பெயர் ஏற்பட்டது. இப்போது இந்த வழக்கம் நின்றுவிட்டது.*

*சுவாமி சன்னதிக்கு பின்புறத்தில் கமலவல்லித்தாயார், தனிச் சன்னதியில் கிழக்கு பார்த்து அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். திருமணமான பெண்கள் இவளுக்கு தாமரை மலர் படைத்து, நெய்விளக்கு ஏற்றி, வளையல் சாத்தி வழிபடுகிறார்கள். இவ்வாறு செய்வதால் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பங்குனி உத்திரத்தன்று சுவாமி, தாயார் சன்னதிக்கு எழுந்தருளி திருக்கல்யாணம் செய்து கொள்கிறார். அன்று ஒருநாள் மட்டும் தாயாருடன், சுவாமியை தரிசனம் செய்ய முடியும்.*

*திருவிழா:*

*புரட்டாசியில் 10 நாள் பிரம்மோற்ஸவம், கிருஷ்ண ஜெயந்தி.*

*பிரார்த்தனை : கோபகுணம் கொண்டவர்கள் கோபம் குறையவும், புத்திர பாக்கியம் கிடைக்கவும் இத்தல பெருமாளிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.*
ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

சித்ரா பௌர்ணமியின் சிறப்புகள்.

சித்ரா பௌர்ணமி பற்றிய பதிவுகள் :
சித்ரா பௌர்ணமி விரதம் என்பது நம் சமயத்தில் ஒரு முக்கியமான பௌர்ணமி விரதமாகும். இது சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி நாளில் அனுசரிக்கப்படுகிறது. 

இந்த நாளில் விசேஷமாக சித்திரகுப்தர், யம தர்மராஜா, மற்றும் முருகப்பெருமான் ஆகியோர்கள் வழிபடுவது சிறப்பு.

*சித்ரா பௌர்ணமி விரதத்தின் சிறப்புகள் :*

*1. சித்ரகுப்தரின் ஜெயந்தி :*

இந்த நாளில் சித்திரகுப்தர், யமனின் கணக்கீட்டு உதவியாளர், அவருடைய ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறார்.

நம்முடைய நல்ல, கெட்ட செயல்கள் அனைத்தையும் பதிவு செய்வதாக நம்பப்படுகிறது.

*2. பாவபுருஷ தணிப்பு :*

இந்த நாளில் வழிபாடு செய்தால், அறியாமல் செய்த கடந்த கால பாவங்கள் தணிக்கப்படும் என்பதாய் நம்பப்படுகிறது.

*3. கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் :*

பெரும்பாலான முருகன் கோயில்களில் சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள், பூஜைகள் நடைபெறும்.

*வழிபாட்டு முறை :*

*1. விரதம் மற்றும் விரதக் கட்டுப்பாடுகள் :*

இந்த நாளில் விரதமாக இருப்பது வழக்கம். சாதாரணமாக எளிய சத்துவ உணவுகள் மட்டும் எடுத்துக்கொள்ளலாம்.

அதிகாலை நேரத்தில் எழுந்து, புனிதமான நீராடல் மேற்கொண்டு, வீட்டிலும் கோவில்களிலும் பூஜை செய்யலாம்.

*2. சித்ரகுப்தர் பூஜை :*

ஒரு குத்துவிளக்கு ஏற்றி வாழையிலையில் அவல், பொரி, வெற்றிலை, பாக்கு மற்றும் பழங்கள், நைவேத்தியம் வைத்து வழிபடலாம்.

"ஓம் யமாய நம:" மற்றும் "ஓம் சித்திரகுப்தாய நம:" மந்திரங்களை ஜபிக்கலாம்.

*3. தான் செய்த பாவங்களை நினைத்து பரிகாரம் கேட்கும் வழிபாடு :*

மனதார பாவங்களை நினைத்து, கடவுளிடம் மன்னிப்புக்கேட்டு ஜபம் செய்வது இன்றைய முக்கிய அம்சமாகும்.

*4. தான தர்மங்கள் :*

இன்று தானம் செய்வது, குறிப்பாக உணவுப் பரிசுகள், புத்தகங்கள், வஸ்திரம் போன்றவை அளிப்பது நன்மை தரும்.


ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Saturday, May 10, 2025

20 வகை பிரதோஷங்கள்

20 வகை பிரதோஷங்கள்
*1. தினசரி பிரதோஷம்.*
*2. பட்சப் பிரதோஷம்.*
*3. மாசப் பிரதோஷம்.*
*4. நட்சத்திரப் பிரதோஷம்.*
*5. பூரண பிரதோஷம் .*
*6. திவ்யப் பிரதோஷம்.*
*7. தீபப் பிரதோஷம்.*
*8. அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம்.*
*9. மகா பிரதோஷம்.*
*10. உத்தம மகா பிரதோஷம்.*
*11. ஏகாட்சர பிரதோஷம்.*
*12. அர்த்தநாரி பிரதோஷம்.*
*13. திரிகரண பிரதோஷம்.*
*14. பிரம்மப் பிரதோஷம்.*
*15. அட்சரப் பிரதோஷம்.*
*16. கந்தப் பிரதோஷம்.*
*17. சட்ஜ பிரபா பிரதோஷம்.*
*18. அஷ்ட திக் பிரதோஷம்.*
*19. நவக்கிரகப் பிரதோஷம்.*
*20. துத்தப் பிரதோஷம்*
*1.தினசரி பிரதோஷம்*

தினமும் பகலும், இரவும் 
சந்திக்கின்ற சந்தியா காலமாகிய மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை உள்ள காலமாகும். இந்த நேரத்தில் ஈசனைத் தரிசனம் செய்வது உத்தமம் ஆகும். நித்தியப் பிரதோஷத்தை யார் ஒருவர் ஐந்து வருடங்கள் முறையாகச் செய்கிறார்களோ அவர்களுக்கு “முக்தி” நிச்சயம் ஆகும் என்கிறது நமது சாஸ்திரம்.
*2. பட்சப் பிரதோஷம்*
அமாவாசைக்குப் பிறகான, சுக்லபட்சம் என்ற வளர் பிறை காலத்தில் 13-வது திதியாக வரும் “திரயோதசி” திதியே பட்சப் பிரதோஷம் ஆகும். இந்தத்திதியின் மாலை நேரத்தில் பட்சிலிங்க வழிபாடு [பறவையோடு உள்ள அது சம்பந்தப்பட்ட லிங்கம் மைலாப்பூர், மயிலாடு துறை போல்] செய்வது உத்தமம் ஆகும்.

*3. மாசப் பிரதோஷம்*
பவுர்ணமிக்குப் பிறகு வரும் கிருஷ்ணபட்சம் என்ற தேய்பிறை காலத்தில், 13-வது திதியாக வரும் “திரயோதசி” திதியே மாதப் பிரதோஷம் ஆகும். இந்த திதியின் மாலை நேரத்தில் “பாணலிங்க” வழிபாடு [பல்வேறு லிங்க வகைகளில் பான லிங்கம் ஒரு வகை] செய்வது உத்தம பலனைத் தரும்.

*4. நட்சத்திரப் பிரதோஷம்*
பிரதோஷ திதியாகிய “திரயோதசி திதி”யில் வரும் நட்சத்திரத்திற்கு உரிய ஈசனை பிரதோஷ நேரத்தில் வழிபடுவது நட்சத்திர பிரதோஷம் ஆகும்.

*5. பூரண பிரதோஷம்*
திரயோதசி திதியும், சதுர்த்தசி திதியும் சேராத திரயோதசி திதி மட்டும் உள்ள பிரதோஷம் பூரண பிரதோஷம் ஆகும். இந்தப் பிரதோஷத்தின் போது “சுயம்பு லிங்கத்தை”த் தரிசனம் செய்வது உத்தம பலனை தரும். பூரண பிரதோஷ வழிபாடு செய்பவர்கள் இரட்டைப் பலனை அடைவார்கள்.

*6. திவ்யப் பிரதோஷம்*
பிரதோஷ தினத்தன்று துவாதசியும், திரயோதசியும் சேர்ந்து வந்தாலோ அல்லது திரயோதசியும், சதுர்த்தசியும் சேர்ந்து வந்தாலோ அது “திவ்யப் பிரதோஷம்” ஆகும். இந்த நாளன்று மரகத லிங்கேஸ்வரருக்கு அபிஷேக ஆராதனை செய்தால் பூர்வஜென்ம வினை முழுவதும் நீங்கும்.

*7. தீபப் பிரதோஷம்*
பிரதோஷ தினமான திரயோதசி திதியில் தீப தானங்கள் செய்வது, ஈசனுடைய ஆலயங்களைத் தீபங்களால் அலங்கரித்து ஈசனை வழிபட சொந்த வீடு அமையும்.

*8. அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம்*
வானத்தில் “வ” வடிவில் தெரியும் நட்சத்திர கூட்டங்களே, “சப்தரிஷி மண்டலம்” ஆகும். இது ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களில் வானில் தெளிவாகத் தெரியும். இந்த மாதங்களில் திரயோதசி திதியில் முறையாக பிரதோஷ வழிபாடு செய்து, சப்தரிஷி மண்டலத்தைத் தரிசித்து வழிபடுவதே அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம் ஆகும். இந்த வழிபாட்டை செய்பவர்களுக்கும் ஈசன் தரம் பார்க்காது அருள் புரிவான். 
*9. மகா பிரதோஷம்*
ஈசன் விஷம் உண்ட நாள் கார்த்திகை மாதம், சனிக்கிழமை, திரயோதசி திதி ஆகும். எனவே சனிக்கிழமையும், திரயோதசி திதியும் சேர்ந்து வருகின்ற பிரதோஷம் “மகா பிரதோஷம்” ஆகும். இந்த மகா பிரதோஷத்து அன்று எமன் வழிபட்ட சுயம்பு லிங்க தரிசனம் செய்வது மிகவும் உத்தமம் ஆகும். குறிப்பாக திருக்கடையூர், சென்னை வேளச்சேரியில் உள்ள, “தண்டீசுவர ஆலயம்”. திருச்சி, மண்ணச்சநல்லூர் அருகே உள்ள “திருப்பைஞ்ஞீலி” சிவ ஆலயம், குடவாசலில் இருந்து நன்னிலம் செல்லும் பாதையில் உள்ள “ஸ்ரீவாஞ்சியம்” சிவ ஆலயம், கும்ப கோணம் முதல் கதிராமங்கலம் சாலையில் உள்ள “திருக்கோடி காவல்” சிவ ஆலயம் ஆகியவை குறிப்பிடத்தக்கனவாகும். மாசி மாதம் வரும் மகா சிவராத்திரிக்கு முன்னால் வரும் பிரதோஷமும், “மகா பிரதோஷம்” எனப்படும்
நற்றுணையாவது அண்ணாமலையாரே. 

*10. உத்தம மகா பிரதோஷம்*
சிவபெருமான் விஷம் அருந்திய தினம் சனிக்கிழமையாகும். அந்தக் கிழமையில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பானதாகும். சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் வளர்பிறையில், சனிக்கிழமையில் திரயோதசி திதியன்று வரும் பிரதோஷம் உத்தம மகா பிரதோஷம் ஆகும். இது மிகவும் சிறப்பும் கீர்த்தியும் பெற்ற தினமாகும். 

*11. ஏகாட்சர பிரதோஷம்* 
வருடத்தில் ஒரு முறை மட்டுமே வரும் மகா பிரதோஷத்தை `ஏகாட்சர பிரதோஷம்’ என்பர். அன்றைக்கு சிவாலயம் சென்று, `ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தை எத்தனை முறை ஓத முடியுமோ, அத்தனை முறை ஓதுங்கள். பின், விநாயகரையும் வழிபட்டு, ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கினால் பல விதமான நன்மைகள் ஏற்படும்.

*12. அர்த்தநாரி பிரதோஷம்* 
வருடத்தில் இரண்டு முறை மகாபிரதோஷம் வந்தால் அதற்கு அர்த்தநாரி பிரதோஷம் என்று பெயர். அந்த நாளில் சிவாலயம் சென்று வழிபட்டால், தடைப்பட்ட திருமணம் நடைபெறும். பிரிந்து வாழும் தம்பதி ஒன்று சேர்வார்கள்.

*13. திரிகரண பிரதோஷம்*
வருடத்துக்கு மூன்று முறை மகாபிரதோஷம் வந்தால் அது திரிகரண பிரதோஷம். இதை முறையாகக் கடைப்பிடித்தால் அஷ்ட லட்சுமிகளின் ஆசியும் அருளும் கிடைக்கும். பிரதோஷ வழிபாடு முடிந்ததும் அஷ்ட லட்சுமிகளுக்கும் பூஜை வழிபாடு செய்வது மிகவும் நல்லது.

*14. பிரம்மப் பிரதோஷம்* 
ஒரு வருடத்தில் நான்கு மகா பிரதோஷம் வந்தால், அது பிரம்மப் பிரதோஷம். இந்தப் பிரதோஷ வழிபாட்டை முறையாகச் செய்தால் முன்ஜென்மப் பாவம் நீங்கி, தோஷம் நீங்கி நன்மைகளை அடையலாம். 

*15. அட்சரப் பிரதோஷம்* 
வருடத்துக்கு ஐந்து முறை மகா பிரதோஷம் வந்தால் அது அட்சரப் பிரதோஷம். தாருகா வனத்து ரிஷிகள். `நான்’ என்ற அகந்தையில் ஈசனை எதிர்த்தனர். ஈசன், பிட்சாடனர் வேடத்தில் வந்து தாருகா வன ரிஷிகளுக்குப் பாடம் புகட்டினார். தவறை உணர்ந்த ரிஷிகள், இந்தப் பிரதோஷ விரதத்தை அனுஷ்டித்து பாவ விமோசனம் பெற்றனர். 

*16. கந்தப் பிரதோஷம்* 
சனிக்கிழமையும், திரயோதசி திதியும், கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் பிரதோஷம் கந்தப் பிரதோஷம். இது முருகப் பெருமான் சூரசம்ஹாரத்துக்கு முன் வழிபட்ட பிரதோஷ வழிபாடு. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் முருகன் அருள் கிட்டும். 

*17. சட்ஜ பிரபா பிரதோஷம்* 
ஒரு வருடத்தில் ஏழு மகா பிரதோஷம் வந்தால் அது, `சட்ஜ பிரபா பிரதோஷம்’. தேவகியும் வசு தேவரும் கம்சனால் சிறையிடப்பட்டனர். ஏழு குழந்தைகளைக் கம்சன் கொன்றான். எனவே, எட்டாவது குழந்தை பிறப்பதற்கு முன்பு ஒரு வருடத்தில் வரும் ஏழு மகா பிரதோஷத்தை முறையாக அவர்கள் அனுஷ்டித்ததால், கிருஷ்ணர் பிறந்தார். நாம் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் முற்பிறவி வினை நீங்கி பிறவிப் பெருங்கடலை எளிதில் கடக்கலாம்.

*18. அஷ்ட திக் பிரதோஷம்* 
ஒரு வருடத்தில் எட்டு மகா பிரதோஷ வழிபாட்டை முறையாகக் கடைப்பிடித்தால், அஷ்ட திக்குப் பாலகர்களும் மகிழ்ந்து நீடித்த செல்வம், புகழ், கீர்த்தி ஆகியவற்றைத் தருவார்கள். 

*19. நவக்கிரகப் பிரதோஷம்* 
ஒரு வருடத்தில் ஒன்பது மகா பிரதோஷம் வந்தால், அது நவக்கிரகப் பிரதோஷம். இது மிகவும் அரிது. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் சிவனின் அருளோடு நவக் கிரகங்களின் அருளும் கிகாஞ்சிபுரம்

*20. துத்தப் பிரதோஷம்*
அரிதிலும் அரிது பத்து மகாபிரதோஷம் ஒரு வருடத்தில் வருவது. அந்தப் பிரதோஷ வழிபாட்டைச் செய்தால் பிறவி குறைபாடுகள் நிவர்த்தி ஆகும்....

Friday, May 9, 2025

சங்கடம் போக்கும் சனி மஹாபிரதோஷம்.

துன்பம்_போக்கும் #சனி_மஹா_பிரதோஷம்.*
சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் சனி மஹா பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது.
ஒரு சனிப்பிரதோஷத்தன்று
சிவாலயம் சென்றால் ஐந்து வருடங்கள் தினமும் சிவாலயம் சென்று வந்த புண்ணியம் கிடைக்கும் என அனுபவம்
மிக்க சிவனடியார்கள் தெரிவிக்கின்றனர்.
சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள் போன்று ஆயிரம் மடங்கு பலன் தரக்கூடியது இந்த சனி பிரதோஷம்.
இன்று ஈஸ்வரனையும்,
சனீஸ்வரனையும் விரதமிருந்து வழிபடுவதால் சனி பிரதோஷத்துக்கு கூடுதல் சிறப்பு உண்டு.
சிவபெருமான் தேவர்களை காப்பாற்ற ஆலகால நஞ்சை உண்ட நாள் சனிக்கிழமை. எனவே, பிரதோஷ நேரம் சனிக்கிழமை அன்று வரும் சனி பிரதோஷம் என சிறப்பு பெறுகிறது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த சனி பிரதோஷத்தன்று . *“#ஓம்_ஆம்_ஹவும்_சவும் ”* என்ற மந்திரத்தை ஒரு சிவாலயத்தில் ஒரு முறை ஜபிப்பதால், நாம் நமது முந்தைய ஏழு பிறவிகள் நமது முன்னோர்கள் ஏழு தலை முறையினர் செய்த பஞ்சமாபாதகங்கள் அவற்றால் ஏற்பட்ட பாவங்கள் அழிந்துவிடும் என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கை.
எனவே, இந்த மந்திரத்தை, குறைந்தது ஒன்பது தடவையும், அதிகபட்சமாக 108 முறையும் ஜபித்து வந்தால் தகுந்த பலன் கிடைக்கும். .
ஆகவே, சனிப்பிரதோஷ தினமான இன்றைய நாளில் சிவனாரை தரிசிக்கிற வாய்ப்பை நழுவ விடாதீர்கள்.
சொல்லப்போனால், ஈசனை வணங்குவதற்காக அப்படியான நாட்களாக இந்த வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளுங்கள்!
சனிப்பிரதோஷ நாளில், அந்த வேளையில் அதாவது மாலையில் சிவாலயம் சென்று, நமசிவாய நாமத்தைச் சொல்லுங்கள். சிந்தையில் தெளிவும் வாழ்வில் நிம்மதியும் நிச்சயம் கிடைக்கும்..
☘️
சித்திரை மாதத்தில் வரும் பிரதோஷ தினத்தில் சிவனுக்கு நீர் மோரும், தயிர் சாதமும் நிவேதனமாக படைத்து பின்னர் சிறு சிறு பிள்ளைகளுக்கு அவற்றை தானம் கொடுப்பதனால் மூலம், பவுத்திரம், எலும்பு தேய்மானம் முதலிய நோய்கள் குணமாகும் என்பது ஐதீகம்.

ராஜராஜன் குருவாக செயல்பட்ட ஸ்ரீ கருவூரார் சித்தர்

ஸ்ரீ கருவூரார் சித்தர் வரலாறு

கருவூரார் கொங்கு மண்டலத்தில் கருவூரில் பிறந்தவர். அதனாலேயே கருவூர்த் தேவர் என அழைக்கப்பட்டார். 

கொங்கு மண்டல சதகம் என்னும் நூலில் கொங்கு நாட்டில் வாழ்ந்த சித்தர்களின் வரிசையில் இவரைப் பற்றிய குறிப்பு இடம்பெறுகிறது. 

தமிழ் இலக்கிய வரலாற்றில் கருவூரான் சித்தர், கருவூரனார் தேவர் என்னும் பெயரில் இருவர் இடம் பெறுகின்றனர். ஒன்பதாம் திருமுறையில் உள்ள திருவிசைப்பா பாடல்களையும், சித்தர் பாடல்களையும் ஒப்ப வைத்து நோக்கினால் இருவரும் ஒருவர் அல்லர், வெவ்வேறானர் என்பதை அறியலாம். நெல்லைத் தலபுராணம், கருவூர்த் தலபுராணங்களில் இவர் பற்றிய செய்திகளை அறியலாம். கருவூர்த் தலபுராணம் இவரை அகத்தியரோடு இணைத்துக் கூறுகிறது. எனினும்     பல அகத்தியர்கள் இருந்ததாக எண்ணப்படுவதால் இவரின் காலத்தை அறிவது கடினமே.     செம்பு, பித்தளை உலோகங்களைக் கொண்டு தொழில் செய்யும் குலத்தைச் சேர்ந்தவர் என்றும், இவரது பெற்றோர் ஊர் ஊராகச் சென்று கோயில்களில் பஞ்சலோகச் சிலைகளை அமைக்கும் தொழிலினை மேற்கொண்டனர் என்றும் ‘அகத்தியர் தமது 12000 என்னும் பெருநூல் காவியம் என்ற நூலில் குறிப்பிடுகின்றார்.
                     
தஞ்சையில் சோழ மன்னன் பெரிய ஆலயம் ஒன்றினை உருவாக்க எண்ணினான். பல அழகிய வேலைப்பாடுகள் கொண்ட சிலைகள், தூண்கள் உருவாக்கிய சிற்பிகளால் சிவலிங்கத்தை உருவாக்க முடியாமல் போனது. இதனை அறிந்த போகர், காகத்தின் காலில் ஓலை கட்டியனுப்பிக் கருவூராரைத் தஞ்சைக்கு வரவழைத்தார். கருவூரார் வந்து சிவலிங்கத்தை நிறுத்தச் செய்தார் என, கொங்கணவர் வாத காவியம் இந்நிகழ்ச்சியைக் குறிப்பிடுகின்றது. தஞ்சை ஆலயத்தில் கருவூரார்சிலை இன்றும் உள்ளது. கருவூரார் வாத இலக்கியம், வைத்தியம் 500, யோக ஞானம் 500, பல திரட்டு, குருநூல் சூத்திரம், பூரண ஞானம், பூஜா விதி, கற்ப விதி, மெய்ச் சுருக்கம் போன்றவை இவர் இயற்றிய நூல்களாம். இவர் திருக்காளத்தியில் சமாதியடைந்து அருள்புரிந்து வருவதாகக் கூறுவர்.
                 கருவூர்த்தேவர் கொங்குநாட்டில் உள்ள கருவூரில் பிறந்தவர். இவர் பிறந்த ஊரோடு இணைத்து இவரது திருப்பெயர் கருவூர்த் தேவர் என வழங்கப்படுகிறது. இவரது இயற்பெயர் இன்னதென்று அறியமுடியவில்லை. இவர் அந்தணர் குலத்தில் தோன்றியவர். வேதாகமக்கலைகள் பலவற்றையும் கற்றுத் தெளிந்தவர். மிகப்பெரிய யோகசித்தர். போக முனிவரிடம் உபதேசம் பெற்று ஞானநூல்கள் பல வற்றையும் ஆராய்ந்து சிவயோகமுதிர்வு பெற்று காயகல்பம் உண்டவர். சித்திகள் பலவும் கைவரப்பெற்றவர். உலக வாழ்வில் புளியம்பழமும் ஓடும்போல ஒட்டியும் ஒட்டாமலும் விளங்கியவர். இவர் செய்த அற்புதங்கள் பலவாகும். இவரது செயல்கள் இவரைப் பித்தர் என்று கருதும்படி செய்தன. கருவூர்த்தேவர் கொங்குநாடு, வடநாடு, தொண்டைநாடு, நடுநாடு முதலிய இடங்களில் உள்ள தலங்களைத் தரிசித்துக் கொண்டு, தென்பாண்டிநாட்டுத் திருப்புடைமருதூர் சென்று, இறைவனிடம் திருவடிதீட்சை பெற்றார். இவர் திருநெல்வேலியடைந்து நெல்லை யப்பர் சந்நிதியில் நின்று `நெல்லையப்பா` என்றழைக்க, அப்பொழுது பெருமான் இவரது பெருமையைப் பலரும் அறியும் பொருட்டு வாளா இருக்க ``இங்குக் கடவுள் இல்லைபோலும்`` என்று இவர் சினந்து கூற அவ்வாலயம் பாழாகியது என்றும், பின்னர் அவ்வூர் மக்கள் நெல்லையப்பரை வேண்ட அப்பெருமான் கருவூர்த்தேவரை நெல்லை யம்பதிக்கு அழைத்து வந்து காட்சியளிக்க, மீண்டும் அவ்வாலயம் செழித்தது என்றும் கூறுவர். கருவூர்த்தேவர் நெல்லையில் இருந்து திருக்குற்றாலம் சென்று அங்குச் சிலநாள் தங்கியிருந்து, பொதிய மலையை அடைந்து அகத்தியரைத் தரிசித்து அருள்பெற்றார்.
                                    தஞ்சையில் முதலாம் இராஜராஜசோழன் (கி.பி. 985-1014) தனது இருபதாம் ஆண்டு ஆட்சிக்காலத்தில் கட்டத் தொடங்கிய இராசராசேச்சுரத்துப் பெருவுடையார்க்கு அஷ்டபந்தன மருந்து சார்த்தினன்.அம்மருந்து பலமுறை சார்த்தியும் இறுகாமல் இளகிக் கொண்டிருந்தது. அது கண்ட அரசன் வருந்தி இருந்தனன். அதனை அறிந்த போகமுனிவர் பொதியமலையில் இருந்த கருவூர்த்தேவரைத் தஞ்சைக்கு வருமாறு அழைப்பித்தார். கருவூர்த் தேவரும் குரு ஆணைப்படி தஞ்சை வந்து, பெருமான் அருளால் அஷ்டபந்தன மருந்தை இறுகும்படி செய்தருளினார். தஞ்சையினின்றும் திருவரங்கம் சென்று பின்னர்த் தம் கருவூரை வந்தடைந்தார். கருவூரில் உள்ள வைதிகப்பிராமணர் பலர் கருவூர்த் தேவரை வைதிக ஒழுக்கம் தவறியவர் என்றும், வாம பூசைக் காரர் என்றும் பழிச்சொல்சாற்றி தொல்லைகள் பல தந்தனர். கருவூர்த் தேவர் அவர்களுக்குப் பயந்தவர் போல நடித்து, ஆனிலை ஆலயத்தை அடைந்து, பெருமானைத் தழுவிக்கொண்டார் என்பது புராண வரலாறு. கருவூர்த் தேவரின் திருவுருவச்சிலை கருவூர்ப் பசுபதீசுவரர் கோயிலிலும், தஞ்சைப் பெரிய கோயிலிலும் விளங்குகிறது. இவர், கோயில், திருக்களந்தை ஆதித்தேச்சரம், திருக்கீழ்க் கோட்டூர் மணியம்பலம், திருமுகத்தலை, திரைலோக்கிய சுந்தரம், கங்கை கொண்ட சோழேச்சரம், திருப்பூவணம், திருச்சாட்டியக்குடி, தஞ்சை, திருவிடைமருதூர் என்ற பத்து சிவத்தலங்கட்கு ஒவ்வொரு பதிகங்கள் வீதம் பத்துத் திருவிசைப்பாத் திருப்பதிகங்கள் பாடியுள்ளார்.
 கருவூர்த்தேவர் அருளிய திருவிசைப்பா : மூலமாய் முடிவாய் முடிவிலா முதலாய் முகத்தலை அகத்தமர்ந்து இனிய பாலுமாய் அமுதாம் பன்னக ஆபரணன் பனிமலர்த் திருவடி இணைமேல் ஆலை அம் பாகின் அனைய சொற் கருவூர் அமுதுறழ் தீந்தமிழ் மாலை சீலமாப் பாடும் அடியவர் எல்லாம் சிவபதம் குறுகி நின்றாரே. கருவூரார் என்று அழைக்கப்படும் கருவூர்த்தேவர் ஒரு சமயம் நெல்வேலிக்குச் சென்று  இருந்தார்.நெல்லையப்பரைத் தரிசிக்கும் ஆசையில் கோவிலுக்குச் சென்றார். அப்போது  நிவேதன காலம், இறைவனை "நெல்லையப்பா" என்று மூன்று முறை அழைத்தும் இறைவனின் தரிசனம்  கிடைக்கவில்லை. "அட, இங்கே நெல்லையப்பன் இல்லையாப்பா?" என்று இவர் நகைவுடன்  கூறவும், கோவிலைச் சுற்றி ஏருக்கும், வேண்டாத புல் பூண்டுகளும் முளைத்துக் கோவிலை  மறைத்து நின்றன. அங்கிருந்து திரும்பியும் பாராமல் நடந்தார் சித்தர், சித்தனின் கோவம் சிவனையும்  நடுங்க வைத்தது. கருவூரார் மானூரை அடையும்போது நெல்லையப்பர் வழிமறித்தார். "அப்பனே  இத்தனை கோவம் ஆகாது உனக்கு நீ என்னைக் காண வந்த போது நைவேத்திய நேரம். நான்  உன்னுடைய குரலுக்கு செவிசாய்த்தும் பதில் சொல்ல முடியாமல் போயிற்று" என்று  பக்குவமாய் சொன்னார். "சரி, போனது போகட்டும், திரும்பிவா திருநெல்வேலிக்கு" என்று  இதமாக அழைத்தார். கருவூரார் சமாதானமாகி நெல்லை நோக்கி நடக்கலானார். அவர் எடுத்துவைத்த ஒவ்வொரு  அடிக்கும் ஒரு பொற்காசு என்று கணக்கிட்டு வழங்கினார் இறைவன்.
                                            கருவூரார் போகரின் சீடராவார். கருவூரைச் சேர்ந்தவர் என்பதால் கருவூரார் என்ற பெயர்  இவருக்கு வந்தது. சைவ சமயத்தைக் கடைபிடித்த இவர் ஞான நூல்களை ஆராய்ந்தவர்.சிவ யோக சித்தி அடைந்தவர்.                இவரது காலம் கி.பி. 11 -ம் நூற்றாண்டு.     கார்த்திகை திங்கள் மிருகசீரிடம் அன்று பூச நாளில் ஆரம்பித்து வேப்பமரக் கொழுந்தைக் கிள்ளி இருபத்தேழு நாட்கள் சாப்பிட்டால்.., பாம்பு கடித்தாலும் விஷம் ஏறாது.     ஒரு மாதம் சாப்பிட்டால் குஷ்ட நோய் விலகும். கொழுந்தை நிழலில் உலர்த்திப் பொடி செய்து மூன்று விரல்களால் எடுக்கும் அளவு பொடியை தேனில் குழைத்துத் சாப்பிட்டு வந்தால் நரை,திரை, மாறும் என்கிற வேம்பின் மகத்துவதை முதன் முதலாகச் சொன்னவர் இவர்,   வாத காவியம், வைத்தியம், யோக ஞானம், பல திரட்டு, குருநூல் சூத்திரம், பூரண ஞானம், மெய்ச் சுருக்கம், சிவஞான போதம், கற்பவிதி, மூப்பு சூத்திரம்,  பூஜா விதி போன்ற பல தமிழ் நூல்களை நமக்கு வழங்கியுள்ளார்.    முனிவர்களால் ஞானப் பாலூட்டப்பட்டு வளர்ந்தவர் கருவூரார்.தேவதச்சன் விஸ்வகர்மாவின் மகனான மயன் குலத்தில் பிறந்தவர்.கருவூராரின் தாய்-தந்தை ஊர் ஊராகச் சென்று ஆங்காங்குள்ள கோயில்களில் விக்கிரங்கள் செய்து கொடுத்து  வாழ்க்கை நடத்தி வந்தனர்.     அதில் கிடைத்த வருவாய் கொண்டு அவர்கள் முனிவர்களுக்கும்,சித்தர்களுக்கும் வேண்டிய பொருட்களை கொடுப்பது வழக்கம்.       சிறு வயதிலேயே மானுட வாழ்வின் நிலையாமையை உணர்ந்தவர்.வசியம், மோகனம்,  தம்பனம்,  உச்சாடனம் ஆகர்ஷணம், வித்து வேஷணம், பேதனம், மாரணம் எனும்  அட்டகர்ம மந்திரங்கள் கருவூராருக்கு அத்துப்படியாகியது. தாமரைக்காய் மாலையணிந்து, புலித்தோலால் செய்யப்பட்ட ஆசனத்தினை ஆலமரப்பலகை மீது விரித்து தென் மேற்குச் திசையில் அமர்ந்து ‘நவசிவாயம்’ எனும் தம்பனத்துக்குரிய மந்திரம் அந்த வயதிலேயே அவருக்கு வசியமானது.        அறிந்த மந்திரம் யாவற்றையும் ஏழை, எளிய மக்கள் குறை தீர்க்கவே கையாண்டு வந்தார். சிவாலயங்களில் சிவலிங்கத்தை  தங்கத்தால் உருவாக்குவதும் பாசுரம் பாடி  பக்தி நெறி வளர்ப்பதுமாக ஊரெங்கும் அலைந்து திரிந்தார். சாதி,குலம், நீத்துச் சிவத்தல  யாத்திரை செய்து திருவிசைப்பா பதிகங்கள் பாடி வந்தார்.சாதி சம்பிரதாயாங்களை புறக்கணித்தார்.
                                            ஒருநாள் கருவூரார் முன் ஒரு காகம் தன் காலில் கவ்வியிருந்த ஒரு ஓலையை வைத்தது.  ஆச்சரியத்துடன் அந்த ஓலையை வாசித்தார். ‘ நீர் உடனே தஞ்சை வந்து  சேரும்’  என்ற வாசகம் இருந்தது.  அந்த  ஓலை  தன்  குருவான போகரிடமிருந்து வந்திருந்தது. தஞ்சையை ஆண்ட இராஜராஜ சோழ மன்னனுக்கு ஒரு சங்கடம் ஏற்பட்டிருந்தது. அதனைப் போக்கவே அவரை அழைந்திருந்தார்.     தஞ்சையில்   இராஜராஜ சோழ மன்னன் கட்டிய பிரம்மாண்டமான சிவாலயம் கட்டியிருந்தான்.சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்ய அஷ்டபந்தனம் பலமுறை அவிழ்ந்து இளகி பந்தனம் ஆகாமல் போயிற்று. கோயிலுக்குள் நுழைந்த கருவூரார்  சிவலிங்கத்தின் அருகில் சென்று பார்த்த போது அங்கே அஷ்டபந்தனம் செய்ய விடாமல் ஒரு பிரம்ம ராட்க்ஷ்ஸி தடுத்துக்கொண்டு நிற்பதைக் கண்டதும் மந்திர உச்சாடனம் செய்து அதன்மீது காறி உமிழ்ந்தார்.கருவூராரின்  வாய் எச்சில்பட்டு தீப்பொசுங்கி   பிரம்ம ராட்க்ஷ்ஸி கருகியது.  அதன்  பிறகு  அவரே  அஷ்ட பந்தனம் செய்து சிவலிங்கப் பிரதிஷ்டையும் அபிஷேகமும் செய்து வைத்தார்.     சிவபெருமானின் ஐந்து முகமாகிய ஈசானம், தத்புருஷம், அகோரம்,வாமதேவம்,  சத்தியோசதம் அண்டரண்ட மந்திரம் உபதேசித்து நிறைவு செய்தார். அண்டரண்ட மந்திரம் இயற்கை சீற்றங்களில் இருந்து காப்பாற்றும்.
                                             பிறகு, கருவூரார் அங்கிருந்து புறப்பட்டு திருவரங்கத்திற்குச் சென்றார். அவ்வூரில் ஒரு தாசி இவரின் தேகப் பொலிவையும், தேஜஸையும் கண்டு கவர்ச்சியுற்று இவரை தம் இல்லம் அழைத்து பெரிதும் உபசரித்தார். அவ்வூரில் ஒரு தாசி இவரின் தேகப் பொலிவையும், தேஜஸையும் கண்டு கவர்ச்சியுற்று இவரை தம் இல்லம் அழைத்து பெரிதும் உபசரித்தார். ’சித்தர் பெருமானே! இத்தகைய மோகன சிறையை நான் இதுவரை கண்டதில்லை. இதன் மர்மம் என்ன? நான் அறியாலமா’’? ’என் நெற்றியில் உள்ள மோகன மூலிகைத் திலகம்தான் உன்னை வயப்படுத்தி உள்ளது. மோகன மூலிகையை ‘ஐயும் கிலியும் சவ்வும்’ என்ற மந்திரத்தை தினமும் நன்கு உச்சரித்து  திலகமாய் இட்டுக்கொண்டால் மோகனம் சாத்தியமாகும்’  என்றார். இதனை கேட்டு தாசி வியப்பால் விதிர்த்து , விக்கித்து போனாள்.அதனால் களைப்பும் அடைந்தாள். அவளின் களைப்பு நீங்க, அருகிலிருந்த தென்னை மரத்தினைப் பார்த்து,      ‘’பிறங்பிறங் ஷங்ரங்சிங் சிவாய நம’’ என்று கருவூரார் மந்திரம் ஓத நிமிர்ந்து நின்ற தென்னை மரம் இளநீர் பறிக்க கைகெட்டும்  அளவுக்கு வளைந்து நின்றது. தாசி கோமளவல்லியின் புருவம் வில்லென வளைந்து நெளிந்தது. ‘தங்களைத் தொட்டது என் பூர்வபுண்ணியம்.இந்த இரவு விடியாது இப்படியே இருக்க  வேண்டும்’  என வேண்டினாள். ‘மற்றவர்களுக்கு விடியாமல் உனக்கு மட்டும் விடியல் காண்பாய்.இந்த நள்ளிரவில் உனக்கு மட்டும் ஒளிரும் சூரியனை காண்பாய்’ என்று கூறி ,... அதோ பார்! ’சூரியனின் இரதம் வருகிறது சூரிய மண்டலத்தை கண் கூசாது பார்’ எனக் கூறியபடி,  ‘இரக்ஷ இரக்ஷ ஸ்ரீம் சிவாய நமோ’ எனும் மந்திரத்தை கருவூரார் உச்சரித்தார். மறுநாள், கோமளவல்லியிடம் விடைபெற எழுந்தார். கருவூராரை பிரிய மனமின்றி வருந்திய நின்ற தாசியிடம் ‘நீ எப்போது நினைத்தாலும் நான் வருவேன், என வாக்குறுதி தந்தார். அரங்நாதப் பெருமானை தரிசித்து, பெருமாள் தனக்களித்த இரத்தினப் பதக்கத்தை அன்பளிப்பாய் கோமளவல்லிக்கே அன்புப் பரிசாக அளித்துவிட்டு அவ்விடம் அகன்றார். தாசி கோமளவல்லி ஒருநாள் அந்த இரத்தினப் பதக்கத்தைப் போட்டுக்கொண்டு வெளியே வர, கோயில் அதிகாரிகள் அவளைக் கைதி செய்தார்கள். அதிகாரி ‘இந்தப் பதக்கம் உனக்கு எப்படி கிடைத்தது’ என வினவ, ’எனக்கு ஒரு சித்தர் கொடுத்தார்’ என்றாள். ’பெண்ணே, நீ சொல்வது பொய். இது பெருமாளுடைய  இரத்தினப் பதக்கம். யாரும் அறியா வண்ணம் நீ திருடியுள்ளாய்’ என்று திருட்டுப் பட்டம் சுமத்தினார்கள். ‘சித்தர் பெருமானே! இதுவென்ன சோதனை..’ என்று நினைக்க மாத்திரத்திலேயே கருவூரார் அங்கு  வந்தார்.  கருவூராரிடம்  அதிகாரிகள்   ‘ உனக்கு இந்த இரத்தினப் பதக்கம் எப்படி கிடைத்தது’ என்று கோயில் அதிகாரி, ‘அதோ அந்தப் பெருமாளிடமே கேட்டுக் கொள்ளுங்கள்’ என்று கூறி ஆகாயத்தை காட்ட பெருமாள் தரிசனம் தந்து ‘ நாமே அந்த இரத்தினப் பதக்கத்தை  அவருக்கு தந்தோம்’ எனக் கூறி மறைந்தார்.
                                          பல புண்ணியத் தலங்கள் வணங்கி சென்று கஜேந்திர மோட்சம் என்னும் தலத்தை அடைந்து அங்கு  இருந்த முன்றீசர் காளியை  அழைக்க  அவர்  தரிசனம் தந்து   ‘என்ன வேண்டும்’ என்று கேட்க,  ’மது வேண்டும்’?’ என்று  கேட்கவே  காளி  மதுக்குடமளித்தாள். மீண்டும் காளியிடம், ‘மீனும் வேண்டும்’ என்று கேட்டார். காளி தமது கோட்ட வாசிகளிடம் மீன் கேட்க அவர்கள் எங்கு தேடியும் மீன் அகப்படவில்லை. கருவூரார்  அருகிலிருந்த வன்னி மரத்தை நோக்கவே,  அம்மரம் மீன் மாரி பொழிந்தது. பிறகு அவ்வூரைவிட்டு அகன்று விஷ்ணு ஆலயத்தை அடைந்து அங்குள்ள பெருமாளைக் கூவி அழைத்தார். பெருமாள் வராமல் இருக்கவே அக்கோயில் பூஜைகள் இல்லாமல் இருக்கக் கடவது என்று சாபமிட்டு சென்று, திருக்குற்றாலத்தை அடைந்து சிவதரிசனம் செய்து திவிசைப்பார் பாடிப் பொதிகையில் எழுந்தருவிருந்தார். , திருக்குற்றாலத்தை அடைந்து சிவதரிசனம் செய்து திவிசைப்பா பாடிப் பொதிகையில் எழுந்தருவிருந்தார். ஒருமுறை இவர் நெல்வேலியப்பரின் சந்நிதானத்து முன்னின்று நிவேதனை காலமென்று அறியாது, ‘நெல்லைப்பா!,நெல்லைப்பா!,நெல்லைப்பா! என்று மூன்ரு முறை  கூவி அழைத்தார். மறுமொழி பெறாத்தால் கடவுள் அங்கு இல்லை என்று நீங்கி செல்ல அந்த ஆலயத்தில் எருக்கு முளைத்து புதராய் மண்டிற்று.. நெல்லைப்பப் பெருமாள் ஓடிவந்து கருவூரார்யை மானூரில் சந்தித்துத் தரிசனம் தந்து அடுக்கொரு பொன்னும் கொடுத்து இவரை நெல்வேலிக்கு அழைத்து வந்து காட்சியளித்தார். அதனால் முன் முளைத்த எருக்கு முதலிய  புல் பூண்டுகள் ஒழிந்து பழைய பிரகாசம் உண்டாயிற்று.
                                         சிறந்த சிவ பக்தனாக இருந்த சோழ மன்னனுக்கு அப்போது ஒரு சங்கடம் ஏற்ப்படிருந்தது . அந்தச் சோழ மன்னன் கனவில் ஒருநாள் நடராஜ தரிசனம் கிடைத்தது. அந்த நாளிலிருந்து கனவில் தரிசனம் கண்ட நடராஜரைப் போன்றதொரு சிலையைப் பொன்னால் செய்து தர வேண்டும் என்று சிற்பிகைளை வரவழைத்து ஒரு தூலம் பொன்னை நிறுத்திக் கொடுத்தான். ஏனோ தெரியவில்லை சிலை செய்யும் பணியில் சிக்கல் ஒன்று முளைத்துக் கொண்டே இருந்தது.பொன் வார்ப்பு நிலைத்து நிற்காது இருந்தது. அதனை கண்ட சிற்பி மனம் நொந்து போய் இறைவனை வேண்டி நின்றனர். ”நீங்கள் என்ன செய்வீர்களோ தெரியாது நான் சொன்ன கெடு தேதிக்குள் நடராஜர் சிலை தயாரித்திருக்க வேண்டும். இல்லை யெனில் எல்லோரையும் கழுவில் ஏற்றிவிடுவேன்’’ என்று மன்னன் ஏற்கனவே கட்டளையிட்டிருந்தான். அதன் காரண்மாகவே சிற்பிகள் மனம் நடுங்கி புலம்பிக் கொண்டிருந்த போது அங்கே கருவூர் சித்தர் வந்து சேர்ந்தார். ”ஏன் இப்படி நெஞ்சம் பதைபதை நிற்கிறீகள்? உங்கள் கலக்கத்தை நான் போக்குகிறேன். நீங்கள் எல்லோரும் சற்று வெளியே சென்று இருங்கள்.நான் சிலையை வார்த்துத் தருகிறேன்.” என்று கருவூரார் சொன்னதும் யாவரும் வெளியே சென்றனர். கருவூரார் பொன்னை உருக்கி அதில் ஒரு துளி செந்தூரத்தைப் போட்டார். அதன் பிறகு அதனை அச்சில் வார்த்தார். அச்சிலிருந்து வார்த்து எடுக்கப்பட்ட நடராஜர் சிலையைக் கண்டு எல்லோரும்  வியப்பெய்தினர். சோழ மன்னன் செய்தியறிந்து ஓடோடி வந்து பார்த்தான்.தான் கனவில் கண்ட நடராஜர் தரிசனத்தை அந்தச் சிலையின் ஒளியிலும் வார்ப்பிலும் கண்டு திகைத்துப் போனவன் முகம் கருத்துப் போனது. ”நான் பத்தைரை மாற்றுத் தங்கம் அல்லவா கொடுத்திருந்தேன்.நீங்கள் அதனை திருடி எடுத்துக் கொண்டு செம்பால் சிலை செய்து விட்டிருக்கிறீகள்....,  அப்படிதானே?” என்று   சிற்பிகளை சினம் கொண்டு பார்த்த போது அவர்கள் பயந்து நடுநடுங்கிப் போனார்கள். ”அரசே!   இந்த சிலையைச் செய்தது நாங்கள் இல்லை.இந்த கருவூரார்தான் செய்தார்” என்று அவரை சுட்டிக்காட்டினர். ‘அப்படியானால் அந்தக் கருவூராரை சிறையில் தள்ளுங்கள்’என்று சோழ மன்னன் ஆணையிட்டு சிறையில் தள்ளினான். திருமூலர் சோழ மன்னன் செய்த அபாண்ட செயலினை கேள்வியுற்று அங்கு வந்து சேர்ந்தார். ” கருவூரார் பெருஞ்சித்தர்.  உனக்கு தங்கத்தின் மீதுள்ள ஆசையால் அவர் மீது வீண்பழி சுமத்தி  விட்டாய்.  நீ  கொடுத்த எடைக்குச் சமமாக வெள்ளியைக்  கொண்டு வந்து உருக்கு’ என்று திருமூலர் கூறியதும் மன்னன் அவ்வாறே செய்தான். அப்போது உருக்கிய வெள்ளி மீது ஒரு  துளி  செந்தூரத்தை தூவ பத்திரை மாத்து தங்கமாக மாறியது.      அப்போது உருக்கிய வெள்ளி மீது ஒரு துளி  செந்தூரத்தை தூவ பத்திரை மாத்து      தங்கமாக மாறியது.  ‘’மன்னா நீ ஆசை என்ற பெரிய மாயையில் வாழ்கிறாய். ஆசை போய்விட்டால் உண்மையான பரவெளியை உணர்ந்து கொள்வாய்.செல்வம் யோகியை வசப்படுத்த முடியாமையால் யோகிக்கு செல்வம் வசப்படுகிறது” என்று திருமூலர் உபசேதம் செய்தார்.    
                                    இதனால் கருவூரார் புகழ் பரவ பவர அவர் மீது பொறாமையும், பகைமையும் கொண்டோரின் எண்ணிகையும் ஏராளம் முளைத்தது. வேதியர்கள் அவர் மீது எண்ணற்ற   குற்றச்சாட்டுகளையும்   புகார்களையும்   மன்னனிடம் தொடர்ந்து உரைத்தனர்.  மன்னன் அறிவான்  மகான்  அவரென்று.  எனவே புகார் பலன் தரவில்லை. மன்னன்  அவரைத்  தண்டிக்க  எண்ணாததைப் புரிந்து கொண்ட வேதியர்கள்  ஒருநாள்  கருவூராரை  கொல்வதற்கு   ஆயுதங்களுடன் துரத்த, அவரோ ஓடிச்சென்று சிவலிங்கத்தைத் தழுவிக்கொள்ள சிவபெருமானுடன் ஜோதியில் கலந்தார். இவரின் கதையை அபிதான சிந்தாமணி நூலில் காணப்படுகிறது.     இவர் பூஜை விதிமுறைகளையும் ஆதி பராசக்தி வாலை பெண்ணாக முன் வைத்து அவளது மாயை முதலான கூறுகளைப் பல வடிவங்களாக்கி, அவளைச் சிறுபிள்ளைக் கன்னியாகவும், சித்தர்களின் மனவடக்கத்தையும் சோதிக்கும் சிவகாமி ரூபியாகவும் விளையாட்டு வம்பியாகவும் சித்தரித்துக் காட்டி பூஜை செய்யும் விதியை பாடலாக பாடியுள்ளார்.  இவர் போகரிஷியின் மாணவர் என்றும் சொல்வர். பல வைத்திய நூல்களும் எழுதியுள்ளார்....

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

Followers

சக்கரத்தாழ்வார் பின்புறம் நரசிம்மர் ரகசியம் என்ன?

சக்கரத்தாழ்வார் சிலை பின்புறம் நரசிம்மர் சிலையின் ரகசியம் என்ன? பெருமாள் கோயில்களில் சக்கரத்தாழ்வாருக்கு எப்போதும் தனி சன்னிதி உ...