ஆவணி மாதபிறப்பு என்பது பல ஆழமான லவுகீக மற்றும் ஆன்மீக தாத்பரியங்களை கொண்டது
இம்மாதம் சூரியன் தன் சொந்த வீட்டுக்கு அதாவது சிம்மராசிக்கு வரும் மாதம், அதனால் அது பல வகையில் சிறப்பினை கொண்டது, இம்மாதம் முழுக்க விஷ்ணுவுக்கானது
கேரளாவில் இது வெகு விஷேஷம், இந்திய திருநாட்டில் கேரள மாகாணத்தில் விஷ்ணுவழிபாடு அதிகம், அதனால் தசவதாரங்களின் கோவில்கள் , அங்கு அதிகம், மச்சவதாரம் முதல் கிருஷ்ணர் வரை எல்லா அவதாங்களுக்கும் அங்கு கோவில் உண்டு, இக்காலகட்டத்தில் திருவிழாவும் வழிபாடும் உண்டு
ஆவணிமாதம் என்பது ஆண்டுமுழுக்க பருவகாலத்தினை முன்னறிவிக்கும் மாதம் என்பதால் இது கேரளாவில் புத்தாண்டாக கொண்டாடபடும் மரப் உண்டு
அப்படித்தான் அங்கு திருவோணம் முதல் பல பண்டிகைகள் உண்டு
வாமண அவதாரம் முதல் பல அவதாரங்கம் இம்மாதம் வரும், கோகுலாஷ்டமியும் வரும், விநாயகர் அவதாரமான விநாயக சதுர்த்தியும் அப்படி வருவதே
ஆவணி அவிட்டம் , வரலெட்சுமி விரதம் என பல கொண்டாட்டம் இம்மாதம் வரும், இவ்வருடம் அமாவாசை மாறி வந்ததால் இவை முந்திவிட்டது
அவதாரங்களின் மாதம் இது, விஷ்ணு வழிபாடு இம்மாதத்தில் அதிகம், வாமணன் என்றும் கோகுலாஷ்டமி என்றும் பிரசித்தி
சிம்மமாதம் எனும் இம்மாதத்தில் மிக மிக சூட்சுமமாக சிம்மராசியில் சூரியன் சஞ்சரிக்கும் இம்மாதத்தி நரசிம்ம அவதாரமும் கொண்டாடபடும், நரசிம்ம ஆலயங்களிலெல்லாம் பெரும் வழிபாடுகள் நடத்தபடும்
நரசிம்மம் என்பது மாபெரும் தத்துத்தை உள்ளடக்கியது, சிம்மத்துக்கென சில குறிப்பிட்ட குணங்கள் உண்டு, அறம் உண்டு,
அந்த அறத்துடன் கூடிய வைராக்கியத்தை, பலமிருந்தாலும் அதை கொண்டு எல்லோரையும் மிரட்டி அடக்காமல், வாழ்வை வீணாக்காமல் தன்னை அடக்கி இறைநிலைக்கு உயர்வதை சொல்லும் தத்துவம்
ஆவணியில் இது பிரசித்தி
தமிழகத்தில் மதுரை ஆலவாயன் ஆலயத்தில் ஆவணி மூலதிருவிழா விஷேஷம், அந்த மூல நட்சத்திர நாள் காலையில் வெயில் அதிகமாக இருந்தால் ஆண்டுமுழுக்க வெப்பமென்றும், அந்த காலை குளிர்ச்சியாக இருந்தால் ஆண்டுமுழுவது நல்ல தட்பவெப்பம் நீடிக்கும் என்பதும் கணிப்பு, இது பொய்த்ததில்லை
ஆவணி என்பது வழிபாட்டுக்கும் புதிய தொடக்கத்துக்குமான மாதம் இந்த மாதம் மதத்துக்கும் மக்களுக்கும் தேசத்துக்கும் பெரும் பெரும் பலன்களை கொண்டுவர பிரார்த்திப்போம்
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்
No comments:
Post a Comment